Jump to content

ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate


Recommended Posts

காதலை மிஸ் செய்கிறாரா காயத்ரி?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 54) #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்

Bigg_Boss_Baner_11586_10497.jpg


‘ஒரு நாள் வீட்ல இருந்து கிளம்பி மறுபடியும் வீடு போய்ச் சேர்றதுக்குள்ளே உசுரு போயி உசுரு வருது’ என்பார் வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில். அதைப் போலவே  பிக் பாஸ் வீட்டு நிகழ்வுகளைப் பற்றி என்னதான் எழுதுவது என்று இப்போதெல்லாம் தினமும் தோன்றுகிறது. அந்தளவிற்கு சுவாரசியமற்றதாக சமீபத்தில் மாறிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ். 

சிம்பு பாடலான ‘லவ் பண்லாமா, வேண்டாமா’ போல ‘சாப்பிடலாமா, வேண்டாமா’ என்றொரு பஞ்சாயத்தை வைத்து இன்றைய நாளை நீண்ட நேரம் ஓட்டினார்கள். “நீங்க சாப்பிடுங்க..” “இல்ல.. எங்களுக்கு வேணாம்’' என்கிற வசனங்களையே எவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருப்பது?

சிக்கன் உள்ளிட்ட விதம் விதமான உணவுகளை ஒதுக்கி வைத்து விட்டு வெட்டி வீம்புடன் இவர்கள் செய்து கொண்டிருந்த பஞ்சாயத்துக் காட்சிகளை, காய்ந்த ரொட்டியும் நேற்றைய சாம்பாரையும் வைத்து உண்டு கொண்டே பார்த்தேன். என்ன கொடுமை!

திரைத்துறையில் இருந்து இன்னொரு ‘பிரபலத்தை’ நிகழ்ச்சியில் இன்று இறக்கியிருக்கிறார்கள். பிரபலம் என்கிற சொல்லுக்கு பிக் பாஸ் அகராதியில் என்ன பொருள் என்று தெரியவில்லை. புது வரவான காஜலின் தோரணைகளைப் பார்த்தால் காயத்ரிக்கு சரியான போட்டியாக இருப்பார் என்று தோன்றுகிறது. ஆனால் இது தொடர்பான சண்டைக்காட்சிகள் சாத்தியமாக வேண்டுனெ்றால், காயத்ரி இந்த வாரம் வெளியேறாமல் இருக்க வேண்டும். 

மற்றபடி வேறேன்ன! பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக ஆண்களுக்குள் சண்டை நிகழ்ந்தை வேண்டுமானால் இன்றைய நாளின் முக்கிய விஷயமாக சொல்லலாம். ஆனால் இதற்கும் பின்னால் ஒரு பெண்தான் இருந்தார் என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை. காயத்ரி கூட்டணியுடன் ரைசா மறுபடியும் இணைந்து கொண்டார். பழைய ரைசாவிற்கான தோரணைகள் மறுபடியும் அவரிடம் தென்படுகின்றன. இவர்கள் இணைந்து சிநேகனை குறிவைக்கிறார்கள் போல. 

வையாபுரி எந்த அணியில் இருக்கிறார் என்றே புரியவில்லை. . திடீரென்று எவரையோ நோக்கி கத்துகிறார். சிலரிடம் சமாதானமாகப் பேசுகிறார். 

சற்று விரிவாகப் பார்ப்போம். 

**

1_10203.jpg

53-ம் நாளின் தொடர்ச்சியாக ஒரு துண்டுக்காட்சியைக் காட்டினார்கள். புது வரவான ஹரீஷை அமர்த்தி வைத்துக் கொண்டு காயத்ரி கேள்விக்கணைகளால் துளைத்தார். ‘தன்னைப் பற்றியும் சக்தியைப் பற்றியும் வெளியில் என்ன பேசிக் கொள்கிறார்கள்’ என்பதை அறிய பயங்கர ஆர்வமாக இருக்கிறார். ஹரீஷ் குத்துமதிப்பாக சில விஷயங்களைச் சொல்லிச் சமாளித்தார். 

collage_10205.jpg

4_10355.jpg

முதன்முறையாக பிக்பாஸ் வீட்டில் ஓர் ஆண் இத்தனை நேர்த்தியாக நடனமாடியது குறிப்பிடத்தக்க மாற்றம். ‘என் உச்சி மண்டைல சுர்ருங்குது’ பாடலுக்கு காலையில் ஹரீஷ் நன்றாகவே ஆடினார். தனக்கு நடனமாடுவது பிடிக்காது என்று சொன்ன வையாபுரி கூட தன்னிச்சையாக ஆடியது வேடிக்கை. புது போட்டியாளரான ஹரீஷின் இந்த நடவடிக்கைளை ஆரவ் எரிச்சலாக பார்த்துக் கொண்டிருந்தது போல் பட்டது. ‘அக்கா’ காயத்ரி அழைத்தவுடன் அங்கு சென்று தஞ்சம் அடைந்தார். ஆரவ்வின் மண்டையில் சுர்ரென்று எரிச்சல் தோன்றியிருக்க வேண்டும்.

5_10387.jpg

பிந்து மற்றும் ரைசா செய்யும் ராகிங்கை, ஹரீஷ் திறமையாகவே எதிர்கொள்கிறார். ‘இன்னிக்கு நீங்கதான் சமைக்கணும்’ என்று இருவரும் ஹரீஷிடம் மல்லுக்கட்ட சாமர்த்தியமாக நழுவினார். ‘நேற்று நடந்த task-ஐ நெனச்சு தூங்கலையா? என்றார் ரைசா. “ஏங்க.. அதை நினைச்சு நான் ஏன் தூங்காம இருக்கணும். ஏமாந்தது நீங்கதானே?'' என்று சரியான பதிலடி கொடுத்தார் ஹரீஷ். அதுவரை தங்களிடம் வழியும் ஆண் போட்டியாளர்களை மட்டுமே பார்த்தி்ருந்த பெண் மயில்கள் ‘யார்ரா.. இவன்?’ என்று எரிச்சலுடன் அங்கிருந்து அகன்றார்கள். ஹரிஷ், கண்ணா..ஆண்களின் மானத்தைக் காப்பாற்றுகிறாயடா. வெல்டன்.

6_10279.jpg

சுஜாவை காயத்ரி குழு ராகிங் செய்து கொண்டிருந்தது. (இன்னுமா இந்த ராகிங் முடியலை). ‘ஓவியாவோட மைக்’ வெச்சிருப்பதால நீ ஓவியா மாதிரிதான் நடந்துக்கணும். ஓவியா சண்டையே போட மாட்டாங்க. நாங்கதான் காரணமேயில்லாம சண்டை போடுவோம்” என்றெல்லாம் காயத்ரி சொல்லிக் கொண்டிருந்தார். (காயத்ரி மேடம், கிண்டல் செய்யறதா நெனச்சுக்கிட்டு நீங்க உண்மையை கொட்டிக்கிட்டிருக்கீங்க”)

7_10074.jpg

‘ஓவியா மாதிரி நான் ஏன் இருக்கணும்? நான் நானா இருப்பேன். ஓவியாவின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது’ என்று சுஜா அழுத்தம் திருத்தமாக சொன்னது சிறப்பு. வெளியில் சிரித்துக் கொண்டே இதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் காயத்ரிக்கு  உள்ளூற நிச்சயம் எரிச்சல் தோன்றியிருக்க வேண்டும். 

உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் சரி, வெளியே இருந்து வரும் புதிய நபர்களும் சரி, ஓவியாவின் பெயரை சர்வஜாக்கிரதையாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பெயர் தொடர்பாக சிறிய அளவிலான எதிர்மறைக் கருத்தைச் சொன்னால் கூட பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்வோம் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. 

‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்று ஆரவ்விடம் ஜாலியாக பேசிக்காட்டினார் சுஜா. ‘நான் இந்த கேம்லயே இல்லைங்க’ என்று விரக்தியாகப் பேசினார் ஆரவ். (விரக்திக்கு ஹரீஷ்தான் காரணமா)

8_10000.jpg

காயத்ரி, ரைசா, ஆரவ் என்று மூவர் கூட்டணி சிநேகனைப் பற்றி உற்சாகமாக புறம் பேசிக் கொண்டிருந்தது. காயத்ரியுடன் இணைந்த பழக்க தோஷமோ என்னமோ, ஆரவ் பேசிய உரையாடலில் ஓரிடத்தை அமைதியாக்கி எடிட் செய்தார்கள். எதிரணியில் இருந்த ரைசா இப்போது காயத்ரி குழுவில் நன்றாக ஐக்கியமாகி விட்டார். ‘both are sailing in the same boat’ என்பது போல நாமினேஷன் வரிசையில் காயத்ரியுடன்  இணைந்து நிற்பது காரணமா, அல்லது எப்படியும் காயத்ரி இந்த வாரம்  உறுதியாக வெளியேறி விடுவார் என்கிற நம்பிக்கை காரணமா?

**

‘அரிசி புடைத்தல்’ என்றொரு task. 

10_10177.jpg

ஓ… இந்த நெல்லுக்குள்ள இருந்துதான் அரிசி –ன்ற மேட்டர் வெளியே வருதா? என்று சிலர் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் எல்லாம் கிடைக்கும் என்கிற மேட்டிமைத்தனம் உள்ளவர்களுக்கு சில பொருட்கள் எப்படி உற்பத்தியாகின்றன என்று கூட தெரியாமல் இருந்திருக்கலாம். 

‘புதிய பணிகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இது போன்ற taskகளை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கமல் சொன்னதை மறந்து விட்டு, வழக்கம் போல் வையாபுரி தன் எரிச்சலை காட்டிக் கொண்டிருந்தார். உடலுழைப்பு சம்பந்தமான task என்றால் இவருக்குப் பிடிப்பதில்லை போல. வயதானவர் என்பதால் அவருக்கு முடியாமல் இருக்கலாம். ஆனால் இப்படிக் கத்திக் கூப்பாடு போட்டு மற்றவர்களை discourage செய்வது தவிர்க்கப்பட வேண்டும். இன்றைய task பிடிக்கவில்லை என்பதால் அதன் விளைவாக தனது அணிக்கு பரிசான கிடைத்த உணவையும் தொட மறுத்தார்.

**

9_10459.jpg

‘அரிசி புடைத்தல்’ போட்டியில் சிநேகன் அணி வெற்றி பெற்றதால் அவர்களுக்கு விதம் விதமான உணவுகள் பரிசாக வழங்கப்பட்டது. எல்லோரும் அதைப் பகிர்ந்து சாப்பிடலாம் என்கிற நாகரிகத்துடன் காயத்ரியை அழைத்தார் சிநேகன். ‘இல்ல.. நாங்க.. லஞ்ச் செய்யத் துவங்கிட்டோம். அது வேஸ்ட்டா போயிடும்’ என்று மறுத்தார் காயத்ரி. 

பிறகு துவங்கியது அந்த நீண்ட பஞ்சாயத்து. கணேஷ் சொன்னது போல எதிரணிக்கு கிடைத்த பரிசாக இருந்தாலும் உணவு போன்ற விஷயங்களை பகிர்ந்து உண்பதுதான் அடிப்படையான நாகரிகமும் கலாசாரமும். வெட்டி வீம்பிற்காக உணவை மறுப்பதும் அது பாழாகும்படி போக விடுவதும் உணவிற்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதி. 

நம்முடைய வீடுகளில் அல்லது விழாக்களில் கூட இதைப் பார்த்திருக்கலாம். உற்சாகமாக இணைந்து விதம்விதமான உணவுகளை தயார் செய்வார்கள். அப்போது எவரோ ஒருவர் கிளப்பிய ஓர் அற்ப விவகாரம் அப்படியே பற்றிக் கொண்டு தீயாக பரவும். காரசாரமான விவாதங்கள், பரஸ்பர வசைகள் ஆகியவைகளைத் தொடர்ந்து ‘உணவைச் சாப்பிட மாட்டோம்’ என்று மறுப்பார்கள். சுவையான உணவுகள் அப்படியே ஆறிப் போய் கிடக்கும். இதில் என்னவொரு கூடுதல் கொடுமையென்றால், இந்தப் பஞ்சாயத்திற்கு தொடர்பேயில்லாத அப்பாவிகள் கூட பசியுடன் மனதில் எச்சில் ஊற அந்த உணவுகளை பார்த்தும் பார்க்காமலிருப்பது போல பாவனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். 

**

11_10187.jpg

காயத்ரியின் பிடிவாதத்தாலும் வீம்பினாலும் அவரது அணியில் உள்ளவர்கள் சுவையான உணவுகளை சாப்பிட முடியாமல் போயிற்று. ‘எனக்கு அழைப்பு வந்திருந்தால் சாப்பிட்டிருப்பேன்’ என்றார் ரைசா. ‘நான் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன். பிறகு இந்த பஞ்சாயத்து காரணமாக எடுப்பதை தவிர்த்தேன்’ என்றார் பிந்து. காயத்ரி பேரவையின் தளபதியான ஆரவ், முதலிலேயே உறுதியாக மறுத்து விட்டார். 

சிநேகன் மீதுள்ள கருத்து வேறுபாடுகளை, கோப தாபங்களை உணவின் மீது காட்டுவது அநியாயம். ‘மானம் ரோஷம் இருக்கறவன் இதைச் சாப்பிடுவானா” என்று வெட்டி வீறாப்பாக கத்திக் கொண்டிருந்த வையாபுரி, பசியுடன் காயத்ரி செய்யப் போகும் சாம்பார் சாதத்திற்காக பரிதாபத்துடன் காத்திருந்தார். தேவையா இது?

collage2_10018.jpg

காயத்ரி கூட்டணியின் இந்த புறக்கணிப்பை தாங்க முடியாத சிநேகன், ‘இனி இந்த வீட்டில் எனக்கு நானே சமைச்சுக்கறேன்’ என்று ஆரவ்விடம் கூற, ‘எதுக்கு என் கிட்ட கத்தறீங்க” என்று அவர் பதிலுக்கு கத்த, இந்த உணவுப்பஞ்சாயத்தின் சூடு இன்னமும் கூடியது. எதுவும் தெரியாத அப்பாவி போல அமர்ந்திருந்தார் காயத்ரி. 

‘திரும்பத் திரும்ப பேசற நீ’ காமெடியாக இந்த சாம்பார் சாத பஞ்சாயத்து நீண்ட நேரமாக ஓடியது. சாப்பாடு மூலம் கிடைத்த சக்தியெல்லாம் இதிலேயே செலவாகியிருக்கும். 

வெற்றி பெற்ற அணிக்கு மட்டும் சுவையான உணவுகளை பரிசளிப்பதின் மூலம் நிச்சயம் கலகம் உருவாகும் என்று கணக்குப் போட்ட பிக் பாஸின் ஆசையை போட்டியாளர்கள் திறம்பட நிறைவேற்றி வைத்தார்கள்.

**

15_10536.jpg

‘இந்தச் சண்டையில் யார் பக்கம் தப்பு –ன்னு நெனக்கறீங்க? என்று ஹரீஷின் வாயைக் கிளறினார் காயத்ரி. இதன் மூலம் அவர் எந்த தரப்பின் பக்கம் இருக்கிறார் என்று அறிந்து கொள்வது காயத்ரியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். தான் புதுசு என்பதாலோ என்னமோ, கணேஷைப் போலவே.. ‘அவன் உயரமாவும் இருப்பான், குள்ளமாவும் இருப்பான். கருப்பாவும் இருப்பான், வெள்ளையாவும் இருப்பான்’ என்று சாமர்த்தியாக சாட்சியம் கூறினார் ஹரீஷ். 

பெண்கள் சண்டையாக இருந்தால் ஒரு வாரத்திற்கும் மேல் ஓடியிருக்கும். ஆண்கள் இந்த விஷயத்தில் சுத்த வேஸ்ட். ஆரவ்வை அழைத்த சிநேகன் ‘தம்பின்ற உரிமைலதான் உங்க கிட்ட சத்தம் போட்டேன்’ என்று பாசமழை பொழிய ‘அதனால என்ன ப்ரோ’ என்று இறங்கி வந்தார் ஆரவ். 

collage3_10064.jpg

ஆனால் இன்னொரு புறம் காயத்ரியிடம் சென்று ‘எங்கிட்ட ஸாரி கேட்டாரு. நான் பதிலுக்கு ஸாரி சொல்லலை. அடிங் மவனே.. இந்த டகால்ட்டி வேலையெல்லாம் யாரு கிட்ட’ என்றும் ஆரவ் புறம் பேசத் தவறவில்லை. கூடாநட்பு. காயத்ரி சகவாசம். 

இந்த ரணகளத்தின் இடையே கிளுகிளுப்பாக ‘நான் எப்போது நடிக்கத் துவங்கணும்?’ என்று அப்பாவியாக கேட்டுக் கொண்டிருந்தார் சுஜா.  பிக் பாஸ் வீட்டின் விதிகளின் படி சில சண்டைகளை நாமாகப் போட வேண்டும் என்று பிந்து சொல்லியிருந்ததால் ‘நான் எப்ப சண்டை போடணும்?’ என்று வெள்ளந்தியாக கேட்டுக் கொண்டிருந்தார். 

**

புதுவரவான காஜல் தடபுடலான தோரணைகளுடன் வீட்டிக்குள் நுழைந்தார். புஸ்வாணங்கள் வெடிக்க அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் வந்து இறங்கினார். பிந்துவிற்கு பல்லக்கு. காஜலுக்கு ஆட்டோ. நபர்களின் அந்தஸ்திற்கு ஏற்ப பிக்பாஸ் ஏதோவொரு ப்ரோட்டாகாலை கறாராக பின்பற்றுகிறார் போலிருக்கிறது. 

18_10295.jpg

‘அடப்பாவிகளா.. ஆம்பளைங்கன்னா.. சுவரேறி குதிக்கச் சொல்றாங்க.. ஒரு ஓலைப்பட்டாசு கூட வெடிக்கலை. பொம்பளைங்கன்னா.. என்னா ஏற்பாடு’ என்று ஹரீஷ் மனதிற்குள் வெம்பியிருக்க வேண்டும். 

சரளமான ஆங்கில உச்சரிப்புடன் எல்லோரிடமும் அறிமுகம் செய்து கொண்டார் காஜல். இவர் வந்தவுடனே காயத்ரி இவரை வெறுக்கத் துவங்கி விட்டார் என்று தெரிகிறது. ‘மாஸ்டர்.. கீஸ்டர்ன்றா.. யாருன்னே தெரியாது’ என்று கழிவறைக்கு சென்று கொண்டிருந்த ரைசாவிடம் சொன்னவர், சட்டென்று காமிராவை நோக்கி ‘இந்த வாட்டி என்னை அனுப்பிடுச்சுங்க.. இல்லாட்டி அழுதுடுவேன்’ என்று விளையாட்டுத்தனமாக பேசிய போது, அதுவரை அப்படியொரு காயத்ரியைப் பார்த்திராத நாம், பூச்சாண்டியைப் பார்த்த கைக்குழந்தை போலவே அலற வேண்டியிருந்தது. 

**

‘நீங்க flirt செஞ்சிக்கிட்டிந்த பொண்ணு. திடீர்னு ‘லவ் யூ’ சொன்னா ஏத்துக்குவீங்களா? – இப்படியொரு taskஆம். ‘உங்க மனசுல எது இருக்கோ, அதைக் கேளுங்க’ன்னு  சொல்லி அனுப்பிச்சாங்க.. எனக்கு இதைத்தான் கேட்கத் தோன்றியது’ என்றார் காஜல். 

இது கனகச்சிதமாக ஆரவ்விற்கு வைக்கப்பட்ட செக் மேட். பாவம், மனிதர் தர்மசங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தார். 

21_10521.jpg

‘ஏன் லவ் –னு சொன்னவுடனே பயந்துட்டீங்களா?’ என்று ஆர்வ்விடம் நேரடியாகவே கேட்டார் காஜல். தனது கேள்விகளை பட்டவர்த்தனமாக கேட்கும் காஜலிடம் அதற்கான தெளிவு இல்லை. என்று தோன்றுகிறது. வழவழவென்று மாறி மாறிச் செல்லும் துண்டு துண்டான வார்த்தைகளால் குழப்புகிறார். காஜல் தந்த சாக்லெட்டை சம்பிரதாயத்திற்கு நன்றி சொல்லி வாங்கிய ஆரவ் வெறுப்புடன் பக்கத்தில் வைத்தார். 

‘சக்தியோட சேர்த்து என்னையும் அனுப்பியிருக்கலாம். இனி இங்கே என்னால் தங்க முடியாது. மத்தவங்க லவ் ஸ்டோரிய கேட்கறதுக்கு பதில் ‘என் லவ் ஸ்டோரியைப் பார்க்கப் போகலாம்’ என்றெல்லாம் காயத்ரி புலம்பிக் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது... இத்தனை வாரங்களாக பிக் பாஸ் வீட்டுக்குள்ளே நிலவும் சண்டைகளுக்கு வியூகம் வகுத்துக் கொண்டிருந்த காயத்ரி, சில நாட்களாக வீட்டுக்கு வெளியே செல்வதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதுவும் காதல் பற்றியெல்லாம் பேசுவதைப் பார்த்தால், தன் காதலை மிஸ் செய்கிறாரோ காயத்ரி என்றே தோன்றுகிறது.

22_10129.jpg

அசரிரீக்குரல் சொன்னது போல, புதிய வரவுகள் காரணமாக ஏற்கெனவே இருக்கும் போட்டியாளர்கள் விரக்தியடைகிறார்கள் என்று தெரிகிறது. தாங்கள் இத்தனை நாள் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகி விடுமோ என்று சலிப்படைகிறார்கள். 

என்ன செய்ய, ஓர் ஓட்டப்பந்தயத்தில் இவர்தான் உறுதியாக வெற்றி பெறுவார் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் போது, இறுதிச்சுற்றில் எங்கிருந்தோ மின்னல் போல வேறொருவர் வந்து வெற்றிக் கோட்டை தாண்டிச் சென்று பரிசு பெறலாம். விளையாட்டிலுள்ள எதிர்பாராத தன்மைதான் இதன் சுவாரஸ்யமே.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/99591-bigg-boss-tamil-updates-day-54-is-gayathri-missing-love-what-happened-in-bigg-boss-house.html

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

ஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தில் ஆரவ் மட்டும்தான் தவறிழைத்தாரா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 55) #BiggBossTamilUpdate

‘ஆண்டவரின்’ தீர்ப்பு நாள் ‘கேள்வி – பதில்’ நாளாக அமைந்துவிட்டது. கேள்விகள்.. கேள்விகள்.. பதில்கள்.. பதில்கள்…

kamal



பங்கேற்பாளர்களிடம் கேள்விகள் அனுப்பலாம் என சமீபத்தில் விஜய் டிவி அழைப்பு விடுத்தது. அவற்றில் என்னென்ன கேள்விகள் வந்ததோ தெரியாது. ஆனால் அந்தக் கேள்விகள் பிக்பாஸ் பார்வையாளர்களின் மனதில் நீண்ட நாட்களாக உழன்று கொண்டேயிருந்த கேள்விகள். அது சார்ந்த கோப, தாபங்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வெடித்துக் கொண்டேயிருந்தன; பதில் கிடைக்காமல் அலைந்து கொண்டேயிருந்தன. 

அவற்றை சிறப்பாக தொகுத்து வரிசைப்படுத்தியது நன்று. 

நேற்றைய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சுமார் 75 சதவீதம் இந்தக் கட்டுரைத் தொடரில் ஏற்கெனவே கேட்கப்பட்டிருந்ததை நண்பர்கள் கவனித்திருக்கக்கூடும். மகிழ்ச்சி! 

சரி. கேள்விகள் கேட்கப்பட்டு விட்டன. திருப்தியான பதில்கள் நமக்கு கிடைத்தனவா? நிச்சயம் இல்லை. என்னளவில் இல்லவே இல்லை. ஏனெனில் தேர்வு நடத்தும் பொறுப்பை பள்ளிப்பிள்ளைகளிடம் தந்து விட்டு வாத்தியார் மரத்தடியில் ஒய்வெடுக்கச் சென்று விட்டதால் ஏற்பட்ட விபத்து இது. பிள்ளைகள் சீரியஸான கேள்விகளை தங்களுக்குள் சிரித்துக் கொண்டே கேட்டு பரஸ்பரம் விளையாடிக் கொண்டது போல் ஆகி விட்டது. 

சில கோபங்களால்தான் சில கேள்விகள் உருவாகின்றன. அவற்றிற்கு நியாயமான பதில்கள் கிடைக்காவிட்டால் அவை நிச்சயம் தணியாது. மாறாக, தக்க பதில்கள் கிடைக்காத நெருடலில் கோபம் இன்னமும் உயரவே செய்யும். நேற்றைய நிகழ்ச்சியிலும் அப்படித்தான் நடந்தது. 

Raisa gayathri


சில பிரிவினருக்கு தங்கள் மனதிலுள்ள கேள்விகளை கேட்டு விட்டாலே போதும், அது சார்ந்த கொதிப்புகள் அடங்கி விடும். பதில் வருவதைப் பற்றி அத்தனை கவலைப்பட மாட்டார்கள் கடந்த கால தவறுகளுக்கு தக்க பதில்தராத அரசியல்வாதிகளையே மறுபடியும் தேர்ந்தெடுக்கும் தவற்றினைச் செய்வோமா?

**

‘உங்களுக்கு தரப்பட்ட பணியை ஒழுங்காகச் செய்யவில்லை. ஒழுங்கீனங்கள் நிறைந்திருந்தன’ என்பதுதானே கமலின் கோபம்? எனில் ஒரு நெறியாளராக அவரே முன்நின்று இந்தக் கேள்விகளை போட்டியாளர்களின் முன்னால் தன்னுடைய பிரத்யேகமான பாணியில் கறாராக வைத்திருக்க வேண்டும்.. அப்போது ஒருவேளை முறையான பதில்கள் கிடைத்திருக்கலாம். 

போட்டியாளர்களிடம் மட்டுமல்ல கமல் முன்னால் வைக்கப்பட வேண்டிய கேள்விகளும் இருக்கின்றன. ‘எதற்கு வம்பு’ என்று கேள்விகளை புதுப்போட்டியாளர்களை வைத்து கேட்டு விட்டாரா? இதன் மூலம் சிலருக்கு அதிகச் சங்கடத்தை தர வேண்டாம் என்கிற மறைமுக சலுகையா? ‘கேள்விகள் கேட்கப்பட்டாயிற்று. யார் கேட்டால் என்ன?’ என்கிற சம்பிரதாயமா?

கமலின் கோபமும் ஒதுங்கலும் நிஜமா? திட்டமிட்ட நாடகமா?

 

aarav


**

‘பேய் task-ல் சிநேகன் சொன்ன ‘நீதி’யின் படி பேய் இல்லை என்றாகி விடாது. அகப்பேய் என்றொன்று இருக்கிறது. அதுதான் உள்ளேயுள்ள போட்டியாளர்களிடமும் சரி, வெளியே உள்ள பார்வையாளர்களிடமும் சரி, குத்தாட்டம் போடுகிறது என்பது போல கமல் குறிப்பிட்டது மிகவும் உண்மை. பேய் என்பது உண்மையாகவே இருந்தால் கூட அவற்றின் அட்டகாசங்களை எளிதில் சமாளித்து விடலாம். ஆனால் அகப்பேய்களின் அட்டகாசங்கள் மிக மிக ஆபத்தானவை. ‘மனச்சாட்சி’ ‘சுயபரிசீலனை’ ‘நேர்மை’ போன்ற தாயத்துக்களையும் மந்திரங்களையும் வைத்துதான் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் முற்றிலுமாகவும் ஒழித்து விட முடியாது. ஒழித்து விட்டால் வாழ்வில் சுவாரசியமே இருக்காது என்பதும் வேடிக்கையான உண்மைதான். 

இந்த பிக்-பாஸ் நிகழ்ச்சியில் ஒருவரின் தனிப்பட்ட விஷயம் கொத்து பரோட்டாவாக அதிகம் கூறுபோடப்பட்டது எவருடையதென்றால் அது ஆரவ்வின் காதல் விவகாரமாகத்தான் இருக்க முடியும். அந்தளவிற்கு வீட்டின் உள்ளே இருப்பவர்களும் சரி, வெளியே இருப்பவர்களும் சரி.. சும்மா.. பிரித்து மேய்ந்து கொண்டேயிருக்கிறார்கள். ஓவியாவின் மீதுள்ள பிரியங்கள் எல்லாம் ஆரவ்விற்கு எதிரான வெறுப்பாக சென்று முடிகின்றன. ஒருவகையில் அவரைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. 

Aarav



சம்பந்தப்பட்ட இரு தனிநபர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய (வயதின் முதிர்ச்சியின்மையால் அவர்களுக்கே கூட தெரியுமா என தெரியாது) ஒரு விஷயத்தை ‘கண்ணால் பார்த்தவர்களும்’ ‘காதால் கேட்டவர்களும்’ ‘தீர விசாரித்தவர்களும்’ அப்படியே நம்புவதும் அப்படி நம்புவதை சரி என நினைத்துக் கொள்வதும், அப்படி சரி என நினைத்துக் கொள்வதை வைத்துக் கொண்டு தீர்ப்பு சொல்வதும், அவமானப்படுத்துவதும் நிச்சயம் நியாயமில்லை. சந்தேகத்திற்கான பலன் ஆரவ்விற்கும் நிச்சயம் தரப்பட்டாக வேண்டும். 

**

கேள்வி –பதில் பகுதிக்குள் செல்வதற்குள் வீட்டினுள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம். 

புது வரவான காஜல், தனக்கு தரப்பட்ட task-ல் ஆரவ் விவகாரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு அது சார்ந்து பல கேள்விகளை வீசினார். இதர போட்டியாளர்கள் ஆளாளுக்கு ஒன்று சொல்ல, ஆரவ்வும் மென்று முழுங்கி சில பதில்களைச் சொன்னார். எனவே மறுநாள் காலையிலும் அது சார்ந்த உரையாடல்கள் தொடர்ந்தன. 

‘கமிட்டட்’ –ன்ற விஷயத்தை அவன் நம்மகிட்ட சொல்லவேயில்லையே’ என்று ஆரவ்வும் வையாபுரியும் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் வருவது போல ‘நாம் மொதல்ல இருந்து வருவமா?’ என்று நமக்கு கேட்கத் தோன்றியது. இந்த விவகாரத்தில் அத்தனை குழப்பம். 

இதே விவகாரத்தைப் பற்றி வெளியில் ஆரவ் உள்ளிட்ட இதர நபர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘சிநேகனுக்கு ‘கமிட்டட்’ விஷயம் தெரியும். தெரியாத மாதிரியே நேத்து பேசினாரு’ என்று ஆரவ் சொல்ல.. ‘ஙொய்யால.. அங்கயே சொல்ல வேண்டியதுதானே’ என்று படு சரளமாக ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் காஜல். 

Kajal



‘யக்கோவ்’ என்று அன்னியோன்யமாக அழைக்கத் தூண்டுமளவிற்கு இருக்கிறது காஜலின் உடல்மொழியும் தோரணையும். ஆனால் நேர்காணல்களில் தென்படும் கமலின் குழறல்களை விட அதிகமாக இருக்கிறது இவரின் குழறல். வெறும் நீர்தான் அருந்துகிறாரோ என்று கூட சமயங்களில் சந்தேகம் வந்து விடுகிறது. ஆனால் துணிச்சலாக பட்டென்று தேங்காய் உடைத்து விடுவதில் ‘மன்னி’யாக இருக்கிறார். காயத்ரியே இவர் எதிரில் பம்மி அமர்ந்திருப்பது கண்கொள்ளா காட்சியாகத் தெரிகிறது. 

‘அதோட வாய்ஸே பயமாக இருக்கே’ என்ற வையாபுரியுடம் ‘ஆமாம். அஞ்சு ஆம்பளைக்கு சமம்’ என்றார் சிநேகன் பெருமையாக. எனில் காஜலுக்கு ஆறுதல் சொல்ல சிநேகன் முனைவாரா, மாட்டாரா?

பெண்கள் எண்ணிக்கையை விட ஆண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான் ‘நானும் ரைசாவும்’ நாமினேட் ஆனோம் என்பது காயத்ரியின் தர்க்கம். ஆண்கள் தங்களுக்குள்தான் ஆதரவு தந்து கொள்வார்களாம். 

இனக்கவர்ச்சி, எதிர்துருவ ஈர்ப்பு என்பது போன்று காலம் காலமாக சொல்லப்பட்ட பல விஷயங்களை காயத்ரியின் இந்த தர்க்கம் அடித்து நொறுக்குகிறது. எனில் இதுவரை பல வாரங்களில் காயத்ரி நாமினேஷன் பட்டியலில் ஒருமுறை கூட வராததிற்கான காரணம் என்ன? 

தன் மீதுள்ள தவறுகளை ஒளிப்பதற்காக மனம் என்னென்ன மாய விளையாட்டுக்களையெல்லாம் நிகழ்த்துகிறது!

Aarav harish



இனிமேல் சண்டை நிகழ்ந்தால் எவர் எவரிடமில்லாம் வரும் என்பதை போட்டியாளர்கள் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்தார்கள். விளையாட்டு வினையாகலாம். 

**

‘காயத்ரி மாஸ்டரை எனக்கு நல்லாத் தெரியும். அவங்க குடும்பத்தையும். ஆரவ் .. பிரண்டுதானே.. அதனாலதான் இவன் கிட்ட சத்தம் போட்டேன்’ என்று ஏதோவொரு தர்க்கத்தில் பொருந்துகிற அல்லது பொருந்தாத காரணத்தைச் சொல்லி சிநேகன் கலங்க முற்பட, பக்கத்திலிருந்த கணேஷ் ப்ரோ உடனடியாக வந்து கட்டியணைத்து ஆறுதல் சொன்னார். சில பின்னடைவுகள் இருந்தாலும் இந்த விளையாட்டின் கடினமான போட்டியாளர் கணேஷ் என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தளவிற்கான சகிப்புத்தன்மை. 

 



பிக்பாஸிடம்  உணவுக்கான ஆர்டர் கொடுத்தால் வந்து சேரும் என்று நம்புவது சுஜாவின் சிறுபிள்ளைத்தனம். அவருடைய சமீபத்திய வீடியோ நேர்காணலை பார்த்ததின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொடர்ந்து கவனிக்கிறார் என்பது தெரிய வருகிறது. எனில் ஒருமுறை கூட போட்டியாளர்கள் அவ்வாறு ஆர்டர் செய்யவில்லை என்பதை அவர் கவனித்திருப்பார். மட்டுமல்லாமல் கேட்கும் உணவுகள் வரும் என்றால் எதற்கு சமையல், லக்ஸரி பட்ஜெட்டிற்காக ஏன் இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்கிற கேள்விகளாவது எழுந்திருக்க வேண்டும்!

தமிழ் சினிமாவின் கதாநாயகிகளைப் போல தன்னை ‘லூசுப் பெண்ணாக’ ஏன் சுஜா சித்தரித்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை. புது வரவு என்பதால் மற்றவர்களின் விளையாட்டிற்கு பாவனையாக ஒத்துழைக்கிறாரா, உண்மையிலேயே இவர் இத்தனை வெள்ளந்தியா?

kajal


சுஜாவிடம் ஒருவேளை இருக்கக்கூடிய வெள்ளந்திதனத்தை மற்றவர்கள் பயன்படுத்துவது ஒருபக்கம் இருக்கட்டும். ‘பேய் task-ல் பிந்துவிற்கு இழைக்கப்படுவது அநீதி’ என்று மனச்சாட்சியுடன் பேசிய ரைசாவும் பாதிக்கப்பட்ட பிந்துவும் கூட இந்த விளையாட்டில் பங்கு பெற்றது முறையல்ல. உணவு வரும் போல என்று உண்மையாகவே சுஜா நினைத்துக் கொண்டு ஏமாந்தால் அது சரியா. எதில் எதில் விளையாட வேண்டும் என்கிற விவஸ்தை இல்லையா,?

பிந்துவின் சுயசரிதையை வையாபுரி துவக்கி வைக்க அதை மேலும் வர்ணித்து பிக்பாஸ் வீட்டை பாடல் இடம் பெற்ற ஸ்தலமாக்கினார் சிநேகன். பொழுது போகவில்லையென்றால் எதையாவது பேச வேண்டியதுதான். அதற்காக இப்படியா? … பிந்து பிந்து … என்று பிந்து அப்பள விளம்பரமாக சிநேகன் கூவுவது ஓவர்தான். மனுஷன் என்ன பிளான்ல இருக்காரோ.

அகப்பேய் வெளியே வரும். வேப்பிலையோடு ரெடியா இருங்க’ என்ற சூசகமான தகவலைச் சொன்னார் கமல்.

**

‘இதுவொரு ரியாலிட்டி ஷோ. ஒரு விஷயத்தை ஒத்துக்கிட்டு உள்ளே வந்திருக்கீங்க. திடீர்னு சில விஷயங்களுக்கு முரண்டு பிடிச்சா எப்படி? சிறுபிள்ளைத்தனமா இருக்கு. வெளியே போய் உங்க தொழில்லயும் இப்படித்தான் இருப்பீங்களா, நீங்கள்லாம் குழந்தைங்களா.. கொஞ்சி, கெஞ்சில்லாம் சொல்லிப் பார்த்துட்டேன். ‘ என்றெல்லாம் லெஃப்ட் ரைட்டாக வாங்கினார் கமல். 

ஆனால் அந்தந்த பிரச்னைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக கேட்காமல் பொத்தாம் பொதுவாகச் சொன்னதன் மூலம் அவர்களே யூகித்துக் கொள்ளட்டும் என்று கமல் விட்டுச் சென்றது பொருத்தமாகப் படவில்லை. 

‘எதுக்குன்னு ஸாரி சொல்லணும்’ என்று ரைசா குழம்பியது சரி. கமல் கேள்விகளை முன்வைத்த போது மாறிக் கொண்டேயிருந்த இவரின் முகபாவங்கள் ஒரு அழகான கொலாஜ் சித்திரம். (ரணகளத்துக்கு நடுவுல இந்தக் கிளுகிளுப்பு தேவையா)

பழைய போட்டியாளர்களுக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் நிச்சயம் தேவைதான். அந்தளவிற்கு சில சமயங்களில் சிறுபிள்ளைத்தனமாக முரண்டு பிடிக்கிறார்கள். 

vaiyapuri



குறிப்பாக உடலுழைப்பு சம்பந்தப்பட்ட taskகளுக்கு வையாபுரி காட்டும் அடமும் கோபமும் மிகையானது. வயதானவர் என்பதால் அவரால் செய்ய முடியாது என்று சொல்வது அவரளவில் சரி. ஆனால் அதையே உரக்க கத்தி மற்றவர்களின் மனநிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவது முறையல்ல.

மைக்கை மூடி விட்டு ரகசியம் பேசியது காயத்ரி. ஒருமுறை அவ்வாறு செய்தார் என நினைவு. இந்தக் கேள்வியை கமல் நேரடியாக அவரிடம் கேட்டிருக்கலாம். கேட்டிருக்க வேண்டும். காயத்ரிக்கு சலுகை காட்டப்படுகிறதோ என்கிற நெருடல் ஓய்ந்தபாடில்லை.

raisa gayathri



ரைசா தூக்கம் விவகாரத்தில் கேள்வி எழுப்பப்படுவது முறையா எனத் தெரியவில்லை. ‘என்னுடைய தூக்கம் இரவில் பாழாகிறது. அதனால் பகலில் தூங்க அனுமதி வேண்டும். என்று ரைசா வேண்டியும் அதைப் பொருட்படுத்தாத பிக்பாஸ் அன்று இரவும் அது போன்ற சத்தங்களுக்கு அனுமதி தந்து விட்டு. பிறகு ரைசாவின் பிடிவாதம் குறித்து சீற்றம் கொள்வது அப்பட்டமான முதலாளித்துவதனம்.

சரி. இப்படி தனித்தனியாக சில பிரச்னைகளைப் பார்ப்பதை விட ஒட்டுமொத்தமாகவே பார்ப்போம். 

மனிதர்களின் சில அடிப்படையான சுதந்திரங்களைப் பறித்து விட்டு அவர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்தால் அது சார்ந்த உளைச்சலில் என்னென்னவெல்லாம் நிகழுமோ அவையெல்லாம்தான் இங்கு நிகழ்கின்றன. அதுதானே பிக்பாஸின் திட்டமும் வணிகமும்? இது விளையாட்டுதான் என்றாலும் மனித உணர்வுகளின் மீது ஆடப்படும் சூதாட்டம். இதில் அவர்கள் இயந்திரங்கள் போல சொன்ன பணிகளையெல்லாம் தலைமேல் வைத்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகையல்லவா?

மனிதர்களை பலவீனங்களோடும் படைத்தது கடவுள் என்பது உண்மையானால், அவரே ஒரு நாள் நேரில் வந்து ‘ஏம்ப்பா இப்படியெல்லாம் அடிச்சுக்கறீங்க?’ என்று கேட்டால் நமக்கு எப்படியிருக்கும்?  பிரச்னைகளின் சூத்ரதாரியே அவை குறித்து குறுக்குவிசாரணை நிகழ்த்துவது முரண்நகை மட்டுமல்ல அநீதியும் ஆகும்..
பலத்திற்கும் பலவீனங்களுக்குமான போராட்டங்களுக்கு அழிவேயில்லை. பலவீனங்களை முற்றிலுமாக ஒழித்தால் மனிதன் கடவுளுக்குச் சமமாகி விடுவான். 

**

கமல் கோபமாக (?!) வெளியேறிச் சென்றதும் முதலில் பதறிப் போனவர் வையாபுரி. (கமல் படங்களில் வையாபுரி அதிகம் நடித்திருக்கிறார்) அந்தப் பதட்டத்தை உடனே வழிமொழிந்தவர் சிநேகன். மற்றவர்களின் பாவங்களுக்காக சிலுவையைச் சுமந்த இவரின் பாவமன்னிப்பு உண்மையிலேயே ஆத்மார்த்தமானதாகத் தெரிந்தது. அதில் போலித்தனம் தெரியவில்லை. 

பழைய போட்டியாளர்களின் பிழைகளுக்காக புதிய போட்டியாளர்களிடமும் பேசாமல் இருப்பது முறையல்ல என்றுணர்ந்த கமலின் ஞானம் காரணமாக அவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தரப்பட்டது. 

suja


தன்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார் சுஜா. இனியாவது அவரது கலைப்பயணம் மேலுயரட்டும். ‘இதுவரை வெளியில் இருந்து பார்த்ததற்கும் உள்ளே சென்று பார்த்ததற்கும் வித்தியாசமாகத் தெரிந்த நபர் யார்?’ என்கிற கேள்விக்கு ‘சிநேகன்’ என்று பதில் அளித்தார். ‘விஷூவலா பார்க்கும் போது அவருடைய ஆறுதல் நடவடிக்கைகள் சந்தேகமாகத் தெரிந்தன. ஆனால் உள்ளே வந்து பார்க்கும் போது அவர் உண்மையாகவே ஆறுதல் சொல்கிறவராகத் தெரிகிறார்’

நம்முடைய காட்சிப்பிழைகளுக்கும் சுஜாவின் இந்த பதில் உதவக்கூடும். சிநேகனை பலமுறை அப்படித்தான் நாமும் சந்தேகப்பட்டிருக்கிறோம். சுஜாவின் பதிலைத் தாண்டியும் ‘தடவியல் நிபுணர்’ என்று சிநேகனை கமல் வர்ணித்தது ஒருவகையில் ரசிக்கத்தக்க குறும்பு  என்று தோன்றினாலும் மறுபுறம் அது முறையல்லவே என்கிற நெருடலும் தோன்றிற்று.

‘இந்த வீட்டிற்கு எவர் மறுபடியும் வந்தால் சந்தோஷமடைவீர்கள்? என்ற கேள்விக்கு தயக்கமே இல்லாமல் ‘ஓவியா’ என்றார். முன்னணி நடிகரின் பெயரை உச்சரித்துமே அவரின் ரசிகர்கள் என்றல்லாது பொதுவாகவே எழும் பலத்த கைத்தட்டல்களைப் போலவே அம்மணிக்கு ‘தானா சேர்ந்த கூட்டத்தின்’ அன்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது. 

**

அடுத்து ஹரீஷ். ‘சில போட்டியாளர்கள் காமிராவைப் பார்த்து ‘எப்படியாவது இங்க இருந்து போயிடணும்’னு சொல்றாங்க’ உண்மையாகவே போகணும்னு விரும்பறாங்களா?’ 

ஹரிஷ் இந்தக் கேள்வியை சிநேகனிடம் கேட்டாராம். ‘இருந்து பாருங்கள். புரியும்’ என்று சிநேகன் பதிலளித்தாராம். ஹரீஷ் தன்னுடைய போட்டியாளராக ஆரவ்வை கருதுகிறார். (ஆனால் ஆரவ் அவ்வாறு கருதவில்லை என்கிறார்)
‘இங்க அவருக்கு நல்ல நேம் இருக்கு” என்றதும் சபையினரின் கேலியான கூக்குரல் கேட்டது. “ஆண்களிடமா, பெண்களிடமா” என்றொரு நையாண்டியை வீசினார் கமல். 

 

snegan



மறுபடியும் அதேதான். ‘ஓவியா’ என்ற பெயரைச் சொன்னதும் விசில் ஒலிகள். 

**
காஜலை எதிர்கொள்வது கமலிற்கே சவாலாக இருந்திருக்க வேண்டும். அந்தளவிற்கு அநாயாசமாக பேசினார் காஜல். இதர நடிகர்கள் போல் கடவுளைப் பார்த்தது போல் எல்லாம் இவர் பம்மவில்லை. 

‘வெளியில் இருந்து வந்திருக்கும் என்னிடம் வாயைப் பிடுங்குகிறார்கள். அது தவறு என்று அவர்களுக்குத் தெரிகிறது. அவர்களின் ஆர்வம்தான் காரணம். ஆனால் உளறி விடுவதற்கு அவர்கள் காரணம் அல்ல. என் மீதுதான் தவறு’ என்று நேர்மையாக தன் கேள்வியை எதிர்கொண்டார் காஜல். 

“உள்ளிருக்கும் நபர்களில் காயத்ரியும் ரைசாவும் மட்டுமே சட்டென்று மனம்திறந்து உண்மையைப் பேசுகிறார்கள். மற்றவர்கள் நடிப்பது போலத்தான் தெரிகிறது. சிலருக்கு என்னைக் கண்டால் பிடிக்கவில்லை என்று தெரிகிறது” என்று காஜல் சொன்ன பதில் நம்மில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். உள்ளே சென்றவரின் அனுபவம் உண்மையாக இருக்கக்கூடும். 

வெளியே இருந்து கொண்டு நாம் வெறுப்பவர்கள், அத்தனை கீழ்மையானவர்களாக இல்லாமலிருக்க வாய்ப்புண்டு. போலவே நல்லவர்களாக நாம் நம்புவர்களும். எல்லாமே காட்சிப்பிழைகளின் மாயத் தோற்றங்கள். 

**

kamal



கேள்வி பதில் session துவங்கியது. முன்னர் குறிப்பிட்டது போல இதை கமல் நேரடியாக நிகழ்த்தியிருந்தால் சுவாரசியம் கூடியிருக்கும். உண்மைகள் வந்திருக்கலாம். மக்களின் கேள்விகள் புது வரவுகளின் மூலம் வெளியானதால் தீவிரத்தன்மையுடன் அமையவில்லை. 

எனவே அவரவர்களுக்கான தற்காப்பு ஆட்டங்களுடன் சுயநியாயங்களுடன் மழுப்பலாகவும் தெளிவற்றும் பதில்கள் வெளிப்பட்டன. அவற்றில் நேர்மையும் உண்மையும் எங்காவது இருந்திருக்கலாம். ஒவ்வொருவரின் பதில்களின் உள்ள நம்பகத்தன்மையை சோதிக்க, அவர்களுக்கே அதைக் காட்ட ‘குறும்படம்’ அல்ல, இதுவரையான எபிஸோட்களையே மொத்தமாக போட்டுக் காட்டினால்தான் முடியும். 

அந்தளவிற்கு சில பிழைகளை செய்தவர்களாலேயே உணர முடியவில்லை. உணர்ந்தாலும் அதை மறைப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். ‘நான் எப்ப ‘கட்டிப்பிடி பாட்டு பாடினேன்’’ என்று வையாபுரி குழம்பியதும் ‘பார்த்தவர்களின் பார்வை அப்படியிருந்திருக்கலாம்’ என்று சமாளித்ததும் ஒரு உதாரணம். 

(இதைக் கேட்டதும் சுஜாவின் எதிர்வினையைப் பார்க்க பாவமாக இருந்தது. வையாபுரியை ஒரு தந்தையாக நினைத்து பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் எத்தனை பாடங்கள் நமக்கு கிடைக்கின்றன)

சபையின் எதிர்வினை பதிலளிப்பவர்களுக்கும் கேட்கும் படியான ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். அந்த சத்தங்களே பதிலளிப்பவர்களுக்கு பல விஷயங்களை உணர்த்தியிருக்கக்கூடும். 

‘கட்டிப்பிடி வைத்தியம் தொடர்பாக சிநேகனிடம் வைக்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் நியாயமாகப் பட்டது. பெண்களுக்கு இது சார்ந்த பிரத்யேகமான எச்சரிக்கையுணர்வு உண்டு. அவர்களால் அந்தத் தொடுதலின் வித்தியாசங்களை நுட்பமாக உணர முடியும். இதுவரையில் சிநேகன் குறித்து எந்தப் பெண்ணும் புகார் சொல்லவில்லை என்கிற அளவில் சிநேகன் உண்மையாகவே ஆறுதல் அளிப்பவராகத்தான் தோன்றுகிறது. எனவே இந்த நோக்கில் அவரைக் கொச்சைப்படுத்துவது முறையல்ல.
‘கமல் உங்களைத் திருத்த முற்படுவது பிடிக்கவில்லையா?’ என்ற காயத்ரியிடம் கேட்கப்பட்டது. ‘என்னைக் கேள்வி கேட்கும் உரிமை என் அம்மாவிற்கு மட்டுமே உண்டு’ என்று முன்பு சொன்ன காயத்ரி. ‘கமல் சொன்னா.. நிச்சயம் 100 சதவீதம் கேட்பேன். அஞ்சு வயது குழந்தை மாதிரி நான். மெல்லமாத்தான் மண்டைல ஏறும். மரமண்டை’ என்றார். இந்த சுயவாக்குமூலத்தை முன்பே தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

**

இந்தக் கேள்விகளை எதிர்கொண்டது நாமாக இருந்திருந்தால் கூட ஏறத்தாழ இப்படித்தான் எதிர்வினையாற்றிருப்போம். மற்றவர்கள் தங்களின் பிழைகளை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், எத்தனை முறை நாமும் அப்படிச் செய்திருப்போம் என்று சுயபரிசீலனையுடன் யோசித்தால் இது புரியும். 

இருந்தாலும் இந்தக் கலந்துரையாடலில் எனக்கு தென்பட்ட ஒரே ஆதங்கம், இந்தச் சமயத்திலாவது இவர்கள் தங்களின் பிழைகளை நேர்மையாக ஒப்புக் கொண்டிருந்தால் அவர்களின் மதிப்பு இன்னமும் உயர்ந்திருக்கும். 

ஜெயகாந்தனின் மேற்கோளை கமல் ஏற்கெனவே குறிப்பிட்டது போல…

‘சில நேரங்களில்…. சில மனிதர்கள். சில தவறுகள் செய்யத்தான் செய்கிறார்கள். மனிதர்கள்தானே…. தவறுகள் குற்றங்கள் அல்ல… ‘

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/99700-are-we-blaming-aarav-alone-for-those-love-episodes-happenings-of-bigg-boss-day-55.html

Link to comment
Share on other sites

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் காயத்ரி ரகுராம்

 

 
gayathri

பிக் பாஸ் ப்ரோமோவை காயத்ரி ரகுராம் ரீ-ட்வீட் செய்த போது

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி ரகுராம் வெளியேறி இருப்பது உறுதியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதே வேளையில் புதிதாக சிலரும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

ஸ்ரீ, ஜூலி, ஷக்தி உள்ளிட்ட பலர் வெளியேற்றப்பட்ட வேளையில் இந்த வாரம் யார் வெளியேற்றம் என்பதற்கு ரைசா மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதில் யார் வெளியேற்றம் என்பதற்கான நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 20) ஒளிபரப்பாக இருக்கிறது.

இதற்காக விஜய் தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கங்களில் ப்ரோமோ வெளியிடப்பட்டது. இதில் இன்று வெளியேற்றப்படுவது யார் என்ற அட்டையை ரசிகர்களிடம் காட்டுவது போலவும், அவர்கள் கூச்சலிடுவது போலவும் காட்டப்பட்டது. ஆனால் யார் என்பது வெளியிடப்படவில்லை. இந்த ப்ரோமோ வீடியோவை காயத்ரி ரகுராம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ரீ-ட்வீட் செய்து தான் வெளியேறிவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், சில மணி நேரங்களில் தான் ரீ-ட்வீட் செய்ததை நீக்கிவிட்டார். ஏனென்றால் அவர் ரீ-ட்வீட் செய்ததைத் தொடர்ந்து பலரும் அவருடைய ட்விட்டர் கணக்கை மேற்கோளிட்டு கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளார்கள்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் முடியும் வரை அந்நிகழ்ச்சி பற்றிய எந்த கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19529094.ece

Link to comment
Share on other sites

வெளியேற்ற பட்ட காயத்ரி... பிக் பாஸ் ரசிகர்கள் சரமாரி கேள்வி!

 
 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் காயத்ரியாகதான் இருக்கும். அந்தளவுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் சமுக வளைதளங்களில் அவரை திட்டி தீர்த்திருந்தனர். அதேபோல, இன்று நடந்த பிக் பாஸ் இன்ராக்‌ஷன் சேஷனிலும் அது பிரதிபலித்து. 

biggboss14_10533_22350.jpg


இன்று காயத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான நிகழ்வு இன்று நடந்தது.  ரசிகர்களின் கரகோஷத்துடன் காயத்ரி வெளியேறுகிறார் என்று கமல் இன்று அறிவித்தார். வீட்டில் இருப்பவர்களிடம் விடை பெற்று கொண்டு கமலின் கேள்விகளுக்காக வந்தார். ரசிகர்களும் கமலின் கேள்விகளுக்காக காத்து இருந்தனர். ஆனால் ஒரு மாறுதலுக்காக, இந்த முறை கேள்வி கேட்டது பிக் பாஸ் ரசிகர்கள் தான். ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களின் கேள்விகளை அந்த நிகழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் கேள்விகளாக கேட்டனர். 
ஓவியா, பரணிக்கு ஆதரவாக பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டார்கள்.  ரசிகர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லி கொண்டு இருந்தார் காயத்ரி. ஓவியாவை மிஸ் செய்தீர்களா என்றா கேள்விக்கு ஒட்டு மொத்த வீடே ஓவியாவை மிஸ் செய்தது என்று பதில் சொன்னார்

Vikatan

Link to comment
Share on other sites

நமக்குள் இருக்கும் காயத்ரித்தனங்களைப் புரிய வைத்த காயத்ரிக்கு நன்றி! (56-ம் நாள்) பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss Tamil


பிக் பாஸ் பார்வையாளர்களின் பெரும்பான்மையான கோபத்தையும் எரிச்சலையும் சம்பாதித்திருந்த காயத்ரியின் வெளியேற்றம் எப்போது நிகழும் என்கிற ஆவல் பலருக்கும் இருந்தது. எதிர்பார்த்தபடியே அது நிகழ்ந்தது. காயத்ரியும் அதை உள்ளூற எதிர்பார்த்திருந்தார். அதற்கான ஒப்பனையில் அவர் தயாராக வந்திருப்பதை வைத்து இதை கணிக்க முடிந்தது. 

சனிக்கிழமை நிகழ்ந்த கேள்வி –பதில்கள் பகுதி கமலின் தலையீடு அல்லாமல் போட்டியாளர்களின் இடையில் நிகழ்ந்து சுருதி இறங்கிப் போயிற்று என்பதால், அதை ஈடு செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த வெளியேற்றத்தின் போதாவது கமலே நேரடியாக கேள்விகளை முன்வைக்கக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இந்த முறையும் பந்துகளை சபையின் பக்கமாக தள்ளி விட்டு கமல் பின்னால் நின்று கொண்டது சிறிது ஏமாற்றம்தான்.

Bigg Boss

இதர போட்டியாளர்களிடம் நிகழ்த்தப்படாத மாற்றம் இது. ஜூலியிடம் அவரது தவறுகளை கமலே நேரடியாக உணர்த்தி பிறகு ‘என் தங்கையை வெளியே அனுப்புகிறேன்’ என்று மக்களின் கோபத்தையும் சமன் செய்தது சரியானது. சக்தி உள்ளிட்ட மற்றவர்களுக்கும் கூட இப்படியே நிகழ்ந்தது. ஓவியாவின் வழக்கைப் பொறுத்தவரை அவருடைய எதிர்மறை அம்சங்களை சுட்டிக்காட்டும் சூழல் அப்போது இல்லை. அவரது மனநிலை சமநிலையாக இல்லாமல் இருந்தது. எனவே அதுவொரு விதிவிலக்கு. 

ஆனால் காயத்ரி தொடர்பான பகுதியை மட்டும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ கூட்டத்திடம் ஒப்படைத்து விட்டது ஒருவகையில் நெருடல். ‘மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு’ என்று கமல் நினைத்திருக்கலாம். ஆனால் கமல் கடவுள் மறுப்புக் கொள்கையை உடையவர். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வார். மகேசனின் மீது நம்பிக்கையிருக்காது. 

காயத்ரியின் வெளியேற்றம் நிகழ்ந்து முடிந்து விட்ட இந்த நிலையிலும் கூட அவருக்காக சில சலுகைகள் காட்டப்பட்டனவா என்று தொடர்கிற நெருடலை கடைசி நாளிலாவது தீர்த்து வைத்திருக்கலாம். 

தன் உரையாடலின்போது இது தொடர்பாக கமல் விளக்கம் அளித்திருந்த போதிலும் ஏன் அவரே கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும் என ஏன் வற்புறுத்துகிறேன்? கமலின் கிடுக்கிப்பிடிகளால் காயத்ரி கூனிக்குறுகி அமரும் காட்சியைக் கண்டு ரசிக்கும் குரூரமான ஆசையினால் அல்ல.
கூட்டத்தின் கேள்விகளை விதம்விதமாக சமாளித்த காயத்ரி, சமாளிக்க முடியாத இடங்களில் மன்னிப்பு கேட்ட காயத்ரி, கமல் கேட்கும் போது மட்டும் உடனடியாக நிபந்தனையின்றி சரணடைந்து விடுகிறார். 

Bigg Boss

‘தலைவாரும் போதெல்லாம் உங்களுக்கு நீங்கள் சொன்ன கெட்ட வார்த்தை நினைவிற்கு வர வேண்டும்’ என்று நுட்பமாக காயத்ரியின் கெட்ட வார்த்தை வழக்கத்தை சுட்டிக் காட்டிய போது ‘சார் …இனிமே தலையே வார மாட்டேன்’ என்றார். 

சில பூட்டுக்கள் சில சாவிகளின் மூலம்தான் சட்டென்று திறக்கும். கமலின் நுட்பமான குறுக்கு விசாரணையை ரசிக்கும் அதே சமயத்தில், எதிர் தரப்பினரும் தம்முடைய தவறுகளை உணர்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பதற்காகவே இந்தக் கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்துகிறேன். 

**

தம் கடந்தகால பிழைகளை எவராவது சுட்டிக்காட்டி, நாமும் அதை அந்தரங்கமாக உணர்ந்திருக்கும் பட்சத்தில் உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி மனதார மன்னிப்பு கேட்டு விடுவதே அறம். சம்பிரதாயத்திற்காக மன்னிப்பு கேட்பதோ அல்லது தாம் செய்தது சரி என்று அதை நியாயப்படுத்துவதோ முறையாகாது. 

காயத்ரி எல்லா விதங்களிலும் பதிலளித்தார். ஆனால் மக்களை எதிர்கொள்வதற்கான பதற்றமும் அச்சமும் அவர் முகத்தில் வெளிப்படையாக தென்பட்டது. என்றாலும் அந்தச் சூழலை அவர் திறமையாக கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மனது பலகீனமாக இருப்பவர்கள் என்றால் எல்லாவற்றிற்கும் மன்னிப்பு என்று முதலிலேயே சாஷ்டாங்கமாக விழுந்திருப்பார்கள் அல்லது அழுதிருப்பார்கள். அதன் மூலம் கிடைக்கும் அனுதாபத்தின் மூலம் தன் தவறுகளை மூட முடியுமா எனவும் சிலர் பார்ப்பார்கள். (வையாபுரி செய்த தவறை சுஜா சுட்டிக் காட்டியதும் வையாபுரியும் இதுபோல்தான் செய்தார்).

இந்த வகையில் காயத்ரி தைரியமானவர்தான். தன்னம்பிக்கையுள்ளவர்தான். 

**

சிலபல விமர்சனங்கள் இருந்தாலும் சமநிலையுடைய ஒரு நெறியாளராக கமல் தன் பணியைத் திறம்பட செய்தார் என்றே சொல்வேன். மக்களின் ஆவேசத்தை தானும் கையில் எடுத்துக் கொண்டு அப்படியே பிரதிபலிக்கக்கூடாது. . அதே சமயத்தில் போட்டியாளருக்கு சார்பாக விழாதவாறும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கயிறு மேல் நடக்கும் இந்த வித்தையை கமல் நன்றாகவே நடத்திக் காட்டினார். கேள்விகள் மக்களிடமிருந்து வந்தாலும் அதை சிறப்பாகவே வழிநடத்தியது நன்று. அவர் நினைத்தது போல் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாதது குறித்து நாம் பெருமைப்படலாம். 

Bigg Boss

மீண்டும் மீண்டும் அதேதான். தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. சிநேகன் இந்த நிகழ்ச்சியில் முன்பு சொல்லியதைப் போல ‘மன்னிக்க முடியாத குற்றம் என்ற ஒன்று இந்த உலகத்தில் கிடையவே கிடையாது. தம்மீது வீசப்பட்ட கேள்விகளுக்கு காயத்ரி நிறைய சமாதானங்கள் சொன்னாலும், அவரளவில் அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும் என்றாலும், எல்லாவற்றிற்கும் பொதுவாக ‘மன்னிச்சுடுங்க’ என்றார். நாம் அதைச் செய்வதே உத்தமம்.

நம்முள் இருக்கும் காயத்ரித்தனங்களை நமக்கே அறிமுகப்படுத்திய காயத்ரிக்கு ஒருவகையில் நாம் நன்றிதான் சொல்ல வேண்டும். 
நிகழ்ச்சியின் சில போட்டியாளர்களை திட்டித்தீர்த்து விட்டு ‘அப்பாடா’ என்று செளகரியமாக சாய்ந்து அமர்ந்து விடுவதில் இல்லை விஷயம். இந்த விளையாட்டின் மூலம் நமக்குள்ளான சுயபரிசீலனைகள் எந்த அளவிற்கு உசுப்பப்பட்டன, அவற்றில் எத்தனை சதவீதம் நாம் மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்பதில்தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது. 

கமல், கேள்விகளை தாம் முன்வைக்காமல் மக்களிடம் விட்டு விட்டதற்கான காரணத்தை ஒரு தருணத்தில் உணர முடிந்தது.

“நாம ரெண்டு பேரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்’ என்பதால் உங்களிடம் கனிவு காட்டினேன் என்கிறார்கள். இதுதான் நிஜமான கெட்ட வார்த்தை. இப்படிச் செய்யாதீங்க. நான் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கேன். வேற எதுல வேணா கிண்டல் பண்ணுங்க. சாதிதான் ஆபத்தான கெட்ட வார்த்தை.’ என்று அவர் பேசியபோது ஆத்மார்த்தமான ரெளத்ரத்துடன்தான் அதைச் சொல்கிறார் என்பதை உணர முடிகிறது.

“இப்படிச் சொல்றதுக்கு உங்களுக்கு வெட்கமாயில்லையா?” என்று சமூகத்தை நோக்கி கேட்பதற்கு ஒரு நெஞ்சுரம் வேண்டும். உள்ளே உண்மையிருந்தால்தான் இப்படி கேட்க முடியும். வெல்டன் கமல்.

இந்த விஷயம் காயத்ரிக்கு நிச்சயமாகப் புரியவில்லை என்பது அவருடைய முகபாவங்களில் தெரிகிறது. கமல் சொன்னது போல ‘புரியாமலே இருக்கட்டும்’.

**
துறை சார்ந்த ஒரு பணியாக இருக்கட்டும், விளையாட்டுப் போட்டியாக இருக்கட்டும், ஒருவர் ஒய்வு பெற்று வெளியேறும்போது அல்லது தோல்வியடைந்து வெளியேற்றப்படும் போது சம்பந்தப்பட்டவர்களின் மீதுள்ள எதிர்மறையான அம்சங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நேர்மறையான விஷயங்களையும் கொண்டு சமநிலையாக பார்க்க வேண்டும். இதுவே அடிப்படையான நாகரிகமும் அறமும். 

Bigg Boss

இந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் காயத்ரியின் பங்களிப்பை நிறை குறைகளுடன் பார்க்கலாம். 

காயத்ரியின் சமையல் திறமை அவருக்கு ஒரு பெரிய நேர்மறையான அம்சமாக அமைந்திருக்கிறது. வீட்டில் நிகழும் பெரும்பான்மையான சர்ச்சைகளில் ஒதுங்கி நிற்காமல் உடனே வந்து பேசியது, கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஓவியாவின் நெருக்கடியான சூழலில் அவருக்கு ஆறுதலாக இருந்தது போன்றவையெல்லாம் நேர்மறையான அம்சங்கள். 

புறம் பேசுவது, குழு மனப்பான்மையை உருவாக்கி வளர்ப்பது, உயர்வு மனப்பான்மையுடன் இருப்பது, அடிமைகளின் இருப்பில் மகிழ்ச்சியடைவது, சட்டென்று கோபமடைவது, தகாத வார்த்தைகளை இறைப்பது, கோபம் தணிந்த பிறகும் அதற்காக வருத்தம் அடையாமல் இருப்பது போன்றவை எதிர்மறையான அம்சங்களாக இருந்தன. 

குணச்சித்திரங்களின் கலவை நாயகியாக காயத்ரி இருந்தாலேயே இந்த விளையாட்டு இத்தனை நாள் சுவாரசியமாகவும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்போடும் நகர்ந்தது. அதற்காகவாவது காயத்ரிக்கு நன்றி. 

Bigg Boss

பார்வையாளர்களின் முன்னிலையில் காயத்ரிக்கு சிந்திப்பதற்கான, உணர்வதற்கான சாவகாசமான நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தின் கேள்விகள் நிலைக்கண்ணாடியைப் போன்றவை. அதை நிதானமாக பார்த்து விட்டு தம் ஒப்பனையில் உள்ள பிசிறுகளை இனியாவது காயத்ரி திருத்திக் கொள்ள வேண்டும். அது அவருடைய நலனுக்காகவே. நமக்காக அல்ல. 

காயத்ரியிடம் கேட்கப்பட வேண்டிய பெரும்பான்மையான கேள்விகள் பார்வையாளர்களின் மூலம் கேட்கப்பட்டு விட்டன. ‘சேரி பிஹேவியர்’ என்பது போன்ற சில சர்ச்சைகள் விடப்பட்டது குறித்து சிலருக்கு வருத்தங்கள் இருக்கலாம். அதற்கும் காயத்ரி ஏதாவது சமாதான வார்த்தைகளோ, மழுப்பல்களோதான் சொல்லியிருப்பார். 

ஒருவர் நிரந்தரமான மனமாற்றத்தை நோக்கி நகர்வதே முக்கியம். அப்போதைக்கான மன்னிப்பை, சம்பிரதாயத்தை அவரிடம் வலியுறுத்துவதில் என்ன உபயோகமிருக்கிறது?

காயத்ரியின் இடத்தை தன்னிச்சையாக எடுத்துக் கொண்டிருக்கிற காஜல், காயத்ரிக்கே நல்ல பெயர் வாங்கிக் கொடுத்து விடுவார் போலிருக்கிறது. பார்ப்போம். கமல் குறிப்பிட்ட அதே அளவுகோலைத்தான் காஜலுக்கும் பின்பற்ற வேண்டும். விமர்சனங்கள் நிச்சயம் தேவை. ஆனால் அவை தரத்துடன் அமைய வேண்டும். 

**
மக்களின் வில்லங்கமான கேள்விகள், போட்டியாளர்களுக்குள்ளாக நிகழ்த்தப்பட்ட விதம் சர்ச்சையைக் கிளப்பும் என எதிர்பார்த்தோம். அப்படியே ஆயிற்று. 

‘Attitude’-ன்னா என்ன? என்று அப்பாவியாகக் கேட்கிறார் ரைசா. உண்மையிலேயே இந்தச் சொல் அதன் பொருள் புரியாமல் பிக்-பாஸ் வீட்டில் அதிக புழக்கத்தில் இருப்பதாக தெரிகிறது. ‘Attitude காண்பிக்கறே’ என்பதற்கு நேரடிப் பொருளே கிடையாது. ‘உன் அணுகுமுறை சரி, அல்லது தவறு’ என்பது போல்தான் அமைய வேண்டுமே தவிர பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக உபயோகிக்கக்கூடாது. 

தம்முடைய வருகை நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே ‘வையாபுரி’ அப்படியொரு விவகாரமான பாட்டைப் பாடினார் என்பதை கேள்வி-பதில் சமயத்தில் அறிந்த சுஜா உளைச்சலுக்கு உள்ளானார் என்பது அப்போதே அவருடைய முகபாவத்தில் இருந்து தெரிந்தது. தன் தந்தையைப் போன்ற வயதில் உள்ளவர் இப்படி நடந்து கொண்டாரே என்று சுஜா கோபப்படுவதிலும் ஆதங்கப்படுவதிலும் நிச்சயம் நியாயமுள்ளது. போலவே ‘பெண்களை’ அது.. இது.. என்று அழைப்பதும் தன்னிச்சையான ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. 

Bigg Boss

இவையெல்லாம் நம்மையும் அறியாமல் நாம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பிழைகள். இவை சுட்டிக்காட்டப்படும் போது உணர்வதும் சரிசெய்து கொள்வதுமே நாகரிகம். இதுதான் என் மொழி, இத்தனை என் இத்தனை வருட இயல்பு என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவது முறையானதல்ல. தம் கிண்டலுக்கு உடன்படுகிறவர்களிடம் விளையாட்டு வைத்துக் கொள்ளலாம். ஆட்சேபம் தெரிவிக்கிறவர்களிடம் மன்னிப்பு கேட்பதே சரி. 

வையாபுரி இதை நேரடியாக, ஆத்மார்த்தமான மன்னிப்புடன் நேர்மையாக எதிர்கொண்டிருக்கலாம். ஆனால் அழுது சீன் போட்டது எரிச்சல். மன்னிக்கவும் வையாபுரி. முன்னர் அழுத்தமான குரலின் மூலம் ஓவியாவின் பக்கம் நீங்கள் நின்ற போது உங்கள் மீது உயர்ந்த மதிப்பு இப்போது பரமபத பாம்பு போல மறுபடியும் சறுக்கி விட்டது. 

சுஜா தன் மனக்குமுறலை கொட்டும் போது சப்பைக்கட்டு கட்ட வந்த சிநேகனையும் இன்னபிறரையும் ஒதுக்கி விட்டு வையாபுரியிடம் நேரடியாக சுஜா பேசியது சிறப்பு. ஓவியாவை தன்னுடைய முன்னுதாரணமாக சுஜா கொண்டிருக்கலாம் என்பது என் யூகம்.

**

இதைப் போலவே தம் மீது நிகழ்த்தப்பட்ட ‘ராகிங்’ குறித்தும் பிந்துவிடம் நேரடியாக பேசியது சிறப்பு. முதலில் சில சமாதானங்களைச் சொல்ல முற்பட்ட பிந்து, சுஜா அதனால் வருத்தம் அடைந்திருக்கிறார் என்பதை உணர்ந்தவுடன் மன்னிப்பு கேட்டு விட்டார். நல்லது. 

Bigg Boss

இந்த உரையாடலிலும் கணேஷ் தானொரு கனவான் என்பதை நிரூபித்தார். (அவங்களுக்குப் பிடிக்கலைன்னா ஸாரி சொல்றதுதான் சரி)

சரத்பாபு போன்ற நடிகர்களை ஏன் ஹீரோக்களாக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று எனக்கிருக்கிற நீண்டகால கேள்வியைப் போலவே கணேஷின் பெரும்பான்மையான நல்லியல்புகளைத் தாண்டி ஏன் அவரைத் தந்திரக்காரராக சிலர் பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை. மற்றவர்களை விட இந்த விளையாட்டை இதுவரை சரியாக ஆடுகிறவர் கணேஷ் மட்டுமே.

அடுத்து ரைசாவிடமும் ‘ராகிங்’ குறித்த ஆதங்கத்தை தெரிவிக்க முற்பட்டார் சுஜா. ஆனால் இவர்களின் உரையாடல்களை ஏற்கெனவே கவனித்து விட்டு, சுஜாவின் அழைப்பையும் கவனிக்காமல் கடந்து சென்ற ரைசா, சுஜாவுடன் உரையாடலை நிகழ்த்த விரும்பவில்லை. குற்றமுள்ள நெஞ்சு. ‘இப்படில்லாம் செஞ்சாதான் ஃபேமெண்ட் அதிகம் கிடைக்கும்’ என்று ஒருவரை சீண்டுவதெல்லாம் குரூரமான விளையாட்டு. ஒருவரின் தன்மானத்தை நேரடியாக பாதிக்கும் விஷயம். ஆர்த்தி ஜூலிக்கு முன்பு செய்ததும் இதுவே. 

சுஜாவின் கோபத்தில், கேள்வியில் உள்ள சுயமரியாதையுணர்வை ரைசா புரிந்து கொண்டது போல் தெரியவில்லை. ‘எனக்கு அது ஜோக். உங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் இல்லை’ என்றார் திமிரான தோரணையுடன். ரைசா… இதுதான் ‘Attitude’. புரிகிறதா?

நாம் நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு செய்யும் விஷயம், எதிர் தரப்பை ஆழமான புண்படுத்தியிருக்கிறது என்று அறிய நேர்ந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்பதுதான் அடிப்படையான நாகரிகம். 

‘நீ எக்கேடும் கெட்டு போ.. என் ஜாலிதான் முக்கியம்’ என்று நினைக்கும் மனோபாவமும் அணுகுமுறையும் இழிவானது. 

இந்த உரையாடலை அடுத்த ஆபாச நகர்வுக்கு எடுத்துச் சென்றவர் காஜல். ‘பதில் சொல்லியே ஆகணும்’னு என் கிட்டல்லாம் வந்து நின்னா முடிஞ்சது கதை’ என்று ரவுடி தோரணையில் ராவடி செய்தது அராஜகம். ஏற்கெனவே குறிப்பிட்டது போல காயத்ரியை விடவும் அதிக சர்ச்சைகளை உருவாக்கப் போகிறவர் இவராகத்தான் இருப்பார். இதை ரைசா உள்ளிட்ட இதர போட்டியாளர்கள் விரைவில் உணர்வார்கள். பிக்பாஸின் நோக்கமும் அதுவே.

ஒருவர் வெளிப்படையாக இருப்பதற்கும் அநாகரிகமாக நடந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்று நமக்கான குடிமைச்சமூகம் அமைவதற்கு முன்னால் எத்தனையோ கற்காலத்தனங்களை கைவிட வேண்டியிருந்தது. இன்னமும் அந்தக் காட்டுமிராண்டித்தனங்களை விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் நாம் நாகரிக உலகத்திற்குள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. 

**

இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன்.


பழைய போட்டியாளர்களின் தவறுகளை, புதியவர்களின் முன், அவர்களே ஒருவருக்கொருவர் இணைந்து மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். புதியவர்களிடம் ஏதேதோ சமாதானம் சொல்கிறார்கள். இதுவும் தவறான அணுகுமுறை. ஒருவர் தன்னுடைய நெருக்கமான நண்பர் என்பதற்காக அவர் என்ன அநீதியைச் செய்தாலும் அதற்கு உடன்படுவது, நட்பிற்காக அந்தச் சிறுமைகளை மற்றவர்களிடம் மழுப்புவது போன்றவை சரியானதல்ல. 

இது நட்பிற்கான உதவியல்ல. மாறாக நண்பனை இன்னமும் கீழே தள்ளும் நடவடிக்கையே. தம் நட்பிடம் இது குறித்து தனிமையிலாவது எச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். போலவே இது குறித்த பஞ்சாயத்தில் நீதியின் பக்கம் நிற்பதே சிறந்த மனோபாவம். 

ஒருவருடன் அதிக காலம் இணைந்து வாழ்வதால் அது சார்ந்து ஏற்படும் பிரியம் வேறு. சரியான சமயத்தில் நீதியின் பக்கம் நிற்பது வேறு. 

**

Bigg Boss

அகம் தொலைக்காட்சிக்குள் நுழைந்த கமல், வையாபுரியின் பிசிறுகளை தனது பிரத்யேகமான நகைச்சுவையின் மூலம் இடித்துரைத்தது ரகளை. புண்படுத்தாத நகைச்சுவைக்குத்தான் மதிப்பு அதிகம் என்பதை வையாபுரி உணர்வார் என நம்புவோம். 

வேறென்ன, இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு வார இறுதியிலும் பாடங்களைக் கற்பதாக கூறுகிறார் கமல். குழந்தைக்கும் ஞானிக்கும் இடையிலான அவரின் தத்தளிப்பின் சிதறல்கள் நமக்குள்ளும் உண்டு. 

எனவே நாமும் இதிலிருந்து பாடங்களைக் கற்க முயல்வோம். ‘வெளியேறும் போதுதான் இந்த விளையாட்டின் அடிப்படை காயத்ரிக்குப் புரிந்திருக்கிறது. உங்களுக்கும் புரிந்திருக்கிறதா? என்கிற கமலின் கேள்வி நமக்குள் எதிரொலித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இருக்குமா?

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/99745-gayathri-went-out-of-biggboss-house---happenings-of-bigg-boss-day-56.html

Link to comment
Share on other sites

‘விவேகம்’ அஜித் சுஜா... ‘சின்னத்தம்பி’ கவுண்டமணி காஜல்..! (57-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் நாள். எனவே அது சார்ந்த பதற்றங்களும் காய் நகர்த்தல்களும் போட்டியாளர்களுக்குள் நடப்பது வழக்கம்தான். காயத்ரி வெளியேற்றம் உள்ளிட்ட கடந்த வார சர்ச்சைகளின் கொதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை. புது வரவுகளுக்கும் பழைய செலவுகளுக்கும் உள்ள மோதல் வேறு தனி டிராக்கில் போய்க் கொண்டிருக்கிறது. 

இப்படியொரு அசந்தர்ப்பமான சூழலில் பொழுது விடிந்த போது ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ பாட்டு ஒலித்தது. காலையில் ஒலிக்கும் இந்தப் பாட்டை எப்படி புரிந்து கொள்வது? பிக்பாஸ் வீட்டில் இரண்டு கழிவறைகள்தான் உள்ளன. அங்கு மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலுமே காலை நேரத்தில் இங்கு இடம்பிடிக்க எல்லோருக்கும் அவசரம்தான். 

Bigg Boss

பிந்து – சுஜா – ஹரீஷ் .. என்று மூவர் கூட்டணி நடனமாடியது. நடனத்தில் ஆர்வமுள்ள ஹரீஷிடம் க்ரேஸ்னஸ் தெரிந்தது. சுஜா தேவலை. ஆனால் ‘குத்தி’ ஆடியதில் அட்டகாசமாக வென்றது பிந்து. 

அந்தப் பாடலை எழுதியவர் சிநேகன் என்பதால் அவருக்கான பிரத்யேக கையசைப்பை தந்தார் காஜல். காஜலுக்கு ஸ்பெஷல் க்வாலிட்டி மைக் ஏதாவது தந்தால் நல்லது. அவர் சொல்வதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது. பாடலின் இறுதியில் செமயாக ஒரு விசில் அடித்தார். 

வையாபுரியின் சில ஒழுங்கீனங்கள் மீதான ஐயங்களை வெளிப்படுத்தினார் ரைசா. போகிற போக்கில் வையாபுரி சொல்லும் கமெண்ட்டுகள் விளையாட்டா, வினையா என்பதை ரைசாவால் பிரித்தறிய முடியவில்லை. இருக்கலாம். வையாபுரியின் வயதைக் குறித்து கமல் சொன்ன கமெண்ட் சரி.

Bigg Boss

நாற்பதுகளில் உள்ளவர்களின் குணாதிசயங்கள் பிரத்யேகமானவை. தங்கள் வயதுக்கான சலுகையை அதிகம் எதிர்பார்ப்பார்கள். வயதை சாதகமாகக் கொண்டு இளம்பெண்களை கிண்டலடிப்பார்கள். ‘வயதானவர்தானே’ என்று விடப்படுவதை அனுமதியாக புரிந்து கொள்வார்கள். எவராவது சரியாக திருப்பிக் கேட்டால் ‘நான் உங்க அப்பா மாதிரி, அண்ணன் மாதிரி’ என்று அப்படியே பம்மி  விடுவார்கள். 

ஓர் அந்நிய இளைஞனின் பக்கத்தில் அமர்ந்து கூட ஒரு பெண்ணால் நிம்மதியாக பிரயாணம் செய்ய முடியும். ஆனால் வயதான கேஸ்களை நம்ப முடியாது’ என்று பொதுவாக சொல்லப்படுவதில் பெரும்பாலும் உண்மையிருக்கிறது. தன் வயதுக்கேற்ற நேர்மையுடனும் முதிர்ச்சியுடனும் நடந்து கொள்பவர்கள் குறைந்த சதவீதமே. 

ரைசாவைப் பற்றி சிநேகனும், சிநேகனைப் பற்றி ரைசாவும் பரஸ்பரம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். விடலை வயதுள்ள ஒருவன் கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு கணத்தில்தான் வாலிபப்பருவத்தில் சென்று விழுகிறான். அந்த தருணத்தில்தான் தன்னை பொறுப்பானவனாக உணர்கிறான். கண்ணுக்குத் தெரியாமல் இந்த மாற்றம் நிகழ்வதைப் போலவே ஒரு நெருக்கமான நட்பும் எப்போது பகையாகிறது என்பதை கண்டுபிடிக்கவே முடிவதில்லை. 

வையாபுரி மறுபடியும் தன் அனத்தலை துவங்கி விட்டார். மைண்ட் வாய்ஸில் பேசுவதாக நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார். கமல் சொல்றதைக் கேட்டிருக்கணும். வேலை செய்ய சோம்பேறித்தனம் படக்கூடாது என்பதெல்லாம் அவருடைய புலம்பல்.

**
சுஜா அறையைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டில் அப்படியொரு காட்சியை இதுவரை பார்த்த நினைவில்லை. ‘முடியலைன்னா விட்டுடுங்க’ என்றார் பிந்து அனுதாபத்துடன். ‘பரவாயில்லை. முடிச்சிடறேன்’ என்றார் சுஜா. (பிறகு பிக்பாஸிடம் பேசும் போது, ‘ஒரு வேலையை துவங்கி விட்டால் செய்து விட்டுத்தான் முடிப்பேன்’ என்றார்). விவேகம் டிரைய்லரைப் பார்த்திருப்பாரோ.. Never Ever Give up. 

Bigg Boss

“முதுகு வலிக்குதுன்னா.. விட்டுடுங்கன்னு எத்தனையோ தடவை சொல்றேன். கேட்கலைன்னா என்ன பண்ண முடியும்?” என்றார் ரைசா. வையாபுரியைப் போலவே பணி செய்பவர்களை கெடுப்பவர்கள்தான் ஒரு குழுவின் பின்னடைவிற்கு அதிகம் காரணமாக இருப்பார்கள். இது போன்று உடலுழைப்பு சார்ந்த பல பணிகளை நாம் இன்று கை விட்டு விட்டதால்தான் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம். 

பிந்துவின் உத்தரவின் பேரில் வையாபுரி காமிராவின் முன்பு வந்து சில மசாலா பொருள்களை ‘ஆர்டர்’ செய்தார். ஒரு பார்பி பொம்மை பஞ்ச் டயலாக் பேச முயன்றால் எப்படி ரணகளமாக இருக்குமோ அப்படியொரு தோரணையுடன் பின்னணியில் தீவிரமாகப் பேச முயன்றார் பிந்து. ஆனால் முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஆட்டோ மாதிரி அவருடைய தமிழ் தட்டுத் தடுமாறியது. அந்தத் தமிழும் அழகுதான் என்போர் சான்றோர். 

உண்ணாவிரதத்துக்கு தமிழில் என்ன? Hunger strike என்றதை வையாபுரி, ஹாங்கர் ஸ்ட்ரைக் என்றார். இரண்டு பேருமே ஹாங்கரில் மாட்டி வைக்கக்கூடிய எடையுடன்தான் இருக்கிறார்கள். சிறந்த நகைச்சுவைக் கூட்டணி. இது போன்ற நகைச்சுவையைத்தான் வையாபுரியிடமிருந்து எதிர்பார்ப்பது. 


**Bigg Boss

காஜல் – பிந்து – சுஜா என்று மூவர் குழு பேசிக் கொண்டிருந்தது. வெளியில் இருந்து இந்த நிகழ்ச்சியைப் பார்த்தற்கும் உள்ளே வந்த பிறகான அனுபவத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதைப் பற்றி. குறிப்பாக காயத்ரி எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி.

காஜலும் காயத்ரியும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவர்கள். எனவே அவர்களின் அலைவரிசை ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமில்லை. பிக்பாஸின் பெரும்பாலான பார்வையாளர்களுக்கு காயத்ரியின் சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் பிடிக்காமல் போன போது, காஜல் போன்றவர்களுக்கு மட்டும் காயத்ரியைப் பிடித்து விடுகிறது. 

‘சின்னதம்பி’ நகைச்சுவையின் கவுண்டமணி மாதிரி ‘வில்லன்’ வரும் காட்சியில் கைத்தட்டும் அபூர்வமானவர்கள். ‘அவன் வரும் போதுதான் கதைல ஒரு கசமுசால்லாம் நடக்குது’ என்று அதற்கொரு தர்க்கம் சொல்கிறார்கள். 

யதார்த்தத்தில் ஹீரோ வில்லன் என்கிற துல்லியமான பாகுபாடு எல்லாம் இல்லை என்றாலும் தீமையான குணங்களை அதிகம் வெளிப்படுத்துகிறவர்களைக் கண்டு மனம் கூசுவதின் மூலம்தான் நல்லியல்புகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட முடியும். ஆனால் வில்லன்கள்தான் இப்போது ஹீரோக்கள். ஒருவகையில் அறநோக்கில் நம்முடைய கலாசார வீழ்ச்சியைத்தான் இது காட்டுகிறது. இந்த வகையில் நமக்கு ஒரு எம்.ஜி.ஆர். எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். அதாவது திரையில் சித்தரிக்கப்படும் ‘எம்.ஜி.ஆர்’தனங்கள். 

Bigg Boss

“யாராவது சீண்டினாத்தான் காயத்ரி கோபப்படுவாங்க.. அவங்களை மொக்கை பண்ணினா டென்ஷன் ஆயிடுவாங்க. ரைசா சிரிச்ச மாதிரி. மாஸ்டருக்குண்டான மரியாதையை அவர் எதிர்பார்க்கத்தானே செய்வார், இல்லையா?” என்று காயத்ரி பேரவையின் அடுத்த தளபதியாக மாறிக் கொண்டிருக்கிறார் காஜல். 

தங்களின் அந்தஸ்துகளை வெளியில் வைத்து விட்டு சமநோக்கிலான தகுதியுடன் இருப்பதுதான் இந்த விளையாட்டின் அடிப்படை என்பது போட்டியாளர்களுக்கு பல நேரங்களில் மறந்து விடுகிறது. ஒரு பாவனைக்காக கூட தங்களின் அந்தஸ்துகளை கீழே வைக்க முடியவில்லையென்றால், அந்த போலி கீரீடம்தான் எத்தனை சுமையானது!

விடைபெறும் போது தன்னிடம் காயத்ரி பேசியது குறித்து சுஜாவிற்கு வருத்தம். ‘55 நாள் இருந்துட்டேன். இது ‘என்’ ஃபேமிலி. கெஞ்சிக் கேட்டுக்கறேன். டிரிக்கர் பண்ணி எதையும் கெடுத்துடாதீங்க’ என்று சொல்லி விட்டுச் சென்றார் காயத்ரி. 

நல்ல உபதேசம்தான். ஆனால் இதை தாம் சொல்வதற்கான அருகதை எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதை காயத்ரி சற்று சிந்தித்துப் பார்த்திருக்கலாம். மட்டுமல்லாமல் நியாயமான விஷயத்திற்காகத்தான் சுஜா வாதாடினார். மேலே நின்று கொண்டு உபதேசம் செய்வதுதான் எளிமையானது. பின்பற்றுவதுதான் கடினம். பிரிவுபச்சாரம் நடக்கும் சமயத்தில் தன்மீது விழும் அனுதாப வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் அதிகமாக நடந்து கொள்வார்கள். காயத்ரி செய்ததும் அதுதான். 

**

இந்த வார நாமினேஷன் பட்டியல் மிகவும் சுருங்கி விட்டதைப் பற்றி சிநேகனும் ஹரீஷூம் பேசிக் கொண்டார்கள். ‘என்ன காரணம்தான் சொல்லுவது’ என்று சிநேகன் அலுத்துக் கொண்டார். சங்கடமான விஷயம்தான். 

புது வரவுகளுக்குள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி நடந்தது. மறுபடியும் அதேதான். உடல்பலத்தை வைத்து தலைவரை தேர்ந்தெடுப்பது முறையானதல்ல. பெண்கள் தோற்றுப் போகும் வாய்ப்பு அதிகம். 

போட்டியில் வென்று தலைவரானார் ஹரீஷ். ‘வந்தவுடனேயே தலைவரா” என்று விளையாட்டும் ஆதங்கமுமாக கிண்டலடித்தார் பிந்து. வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கும் சூழலில் இதெல்லாம் சாதாரணமப்பா…

போட்டியில் வென்று வந்தாலும் தலைவருக்கான தோரணையும்  அணுகுமுறையும் ஹரீஷிடம் இருப்பது போல் படுகிறது. முதிர்ச்சியாகவே இதுவரை நடந்து கொள்கிறார். 

Bigg Boss

**

புது வரவான சுஜாவால் இனி அதிக பிரச்சினைகள் வரக்கூடும் என்று கணிக்கிறார் சிநேகன். ‘ஓவியா மாதிரி நடிக்க டிரை பண்றா. அது ரத்தத்துலயே இருக்கணும். நடிச்சால்லாம் வராது’ என்கிற சிநேகனின் அவதானிப்பு சரிதான் என்று தோன்றுகிறது. சுஜா மட்டுமல்ல, இதர பெண் போட்டியாளர்கள் கூட சமயங்களில் இப்படி நகலெடுக்க முயல்கிறார்கள்.

தலைவி பொறுப்பை சோகத்துடன் ஒப்படைத்தார் பிந்து. விளையாட்டான அழுகை. ஜூலியின் சாயலையும் பிந்துவிடம் அவ்வப்போது காண முடிகிறது. மிக ஆச்சர்யகரமாக கணேஷ் கூட நகைச்சுவை செய்ய முயன்றார். பிக்பாஸில் இன்னும் என்னென்ன விபரீதங்கள் காத்துக் கொண்டிருக்கிறதோ?

கணேஷின் ‘லவ்’ ஸ்டோரி பற்றிய உரையாடலும் ஆச்சரியகரமாக ஓடியது. இதுவரை யோகா நிலையில் மட்டுமே கணேஷை அதிகம் பார்த்திருக்கிறோம். அவர் சாவகாசமாக அமர்ந்து பேசும் காட்சிகள் அதிகம் இல்லை. இப்போதுதான் பார்க்கிறோம். விளையாட்டின் முக்கியமான போட்டியாளர்கள் இப்போது விலகி விட்டதால், எதையாவது இட்டு நிரப்புவதற்காக கணேஷின் ஃபுட்டேஜ்களை இணைக்கிறார்களா, என்னவோ. சினிமா இடைவேளையில் போடப்படும் பாடல்களைப் போல. 

மனிதர் வெட்கப்பட்டுக் கொண்டே தன் ஃபிளாஷ்பேக்கை சொன்னது அத்தனை அழகு. 

Bigg Boss

**

நாமினேஷன் படலம் துவங்கியது. பட்டியல் சுருங்கியிருந்தாலும் இந்த முறைதான் காரணங்கள் துல்லியமாக வெளிப்பட்டன என்று நினைக்கிறேன். 

வயதான காரணத்தினால் வையாபுரி பணிகளைச் செய்யாமலிருப்பது பற்றி எவருக்கும் புகாரில்லை. ஆனால் தம்முடைய புலம்பலின் மூலம் மற்றவர்களின் பணிகளையும் பாதிக்கிறார் என்பது சரியான புகாரே. ‘ஆதிக்க மனோபாவத்துடன் செயல்படுகிறார்’ என்பது சிநேகனின் மீதுள்ள புகார். (ரைசா – ஆரவ் சொன்னது) 

இருக்கலாம். ‘இவங்களை சமாளிக்கிறது எனக்கு ரொம்ப ஈசி’ என்று பிற்பாடு சிநேகன் சொன்னார். காயத்ரி இல்லாததால் வந்த துணிச்சலும் நம்பிக்கையும். ஆச்சரியகரமாக கணேஷின் மீதும் எதிர்மறைப் புள்ளிகள் விழுந்தன. என்றாலும் அவர் தப்பித்தார்.

‘ரைசா என்னை ராகிங் செய்தது கூட பரவாயில்லை. ஆனால் அதற்காக மன்னிப்பு கேட்கக் கூட தயாரில்லை என்பதுதான் அதிக வேதனையைத் தருகிறது’ என்கிற சுஜாவின் காரணம் சுயமரியாதை நோக்கில் நியாயமானதாகப் படுகிறது. 

ஆக.. இறுதியில் ரைசா, சிநேகன், வையாபுரி ஆகியோர்கள் இறுதியாக நாமினேஷனுக்கு வந்திருக்கிறார்கள். இதில் வாக்காளப் பெருமக்கள் எவரைத் தேர்ந்தெடுத்து வெளியே அனுப்ப முடிவு செய்யப் போகிறார்கள் என்பதை யூகிப்பது சிரமமாக இல்லை. ‘க்ளூ’ பாணியில் சொன்னால் அவரது பெயர் ‘ரை’யில் துவங்கி ‘சா’ –வில் முடியும். இடையில் எந்த வார்த்தையும் வராது. 

*

‘வெற்றி நிச்சயம்’ என்றொரு task. “இந்த விளையாட்டில் தாம் உறுதியாக வெல்வதற்கான காரணங்களை நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும்”

Bigg  Boss

‘என் வீட்டையே நான்தான் வழிநடத்துகிறேன். எனவே இங்கும் நான்தான் வெல்வேன்’ என்கிற சுஜாவின் முழக்கம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உணர்வுவயப்படுகிறவர்கள் இதில் வெல்வது சிரமமானது என்று தோன்றுகிறது. 

இந்த வரிசையில் ஹரீஷ் முன்வைத்த காரணங்கள்தான் அழுத்தமாக இருந்தன. உறுதியும் நம்பிக்கையும் அவரது தோரணையில் தென்பட்டது. 

‘இந்தப் போட்டிக்குப் பிறகு வெளியில் சென்று அதிகம் ஜொலிக்கப் போகிறவர் எவர்?’ என்றொரு task. இந்த நோக்கில் தங்க கோப்பை உள்ளிட்டு எல்லா கோப்பைகளையும் ஓவியா ஏற்கெனவே வென்று விட்ட பிறகு இது போன்ற கேள்விகள் எதற்கு பிக்பாஸ்? 

என்றாலும் இப்போது உள்ளவர்களில் எவர் அதிகம் ஜொலிக்கப் போகிறார் என்பதை யூகிப்பது சிரமம்தான். அவரவர்களுக்கான சம்பிரதாயமான காரணங்களைச் சொன்னார்கள். போட்டியாளர்களுக்குள் கருத்துவேறுபாடுகளும் முட்டல்களும் ஏற்பட்டால்தானே அது வருங்காலச் சண்டைகளுக்கு உரமாகும்! பிக்பாஸ் திருவிளையாடல்கள். 

**

‘எப்படிம்மா இருக்கே சுஜா?’ என்று விசாரிக்கத் துவங்கிய பிக்பாஸ் பிறகு அதற்காக நொந்து போயிருப்பார் என்று தோன்றுகிறது. அந்தளவிற்கு தன் கதையை இழுத்துச் சொன்னார் சுஜா. நீளமாக அமைந்து விட்டாலும் அவர் சொன்னதில் நிறைய பரிதாபமும் முக்கியமான விஷயங்களும் இருந்தன. 

ஏற்கெனவே குறிப்பிட்டபடி திரையுலகில் நட்சத்திரமாக ஜொலிக்க முயன்று சினிமாவின் பரமபத ஆட்ட விதிகளின் படி சற்று ஏறி நிறைய சறுக்கி கீழே விழும் பல்லாயிரக்கணக்கானவர்களின் ஏக்கமே சுஜாவின் பெருமூச்சிலும் விழுகிறது. நாயகியாக ஆக முயன்று சந்தர்ப்பவசத்தால் பாடலுக்கு ஆடும் நடிகையாகி அதுவே தொடர்ந்து ஒரு கணத்தில் அதிலிருந்து பிடிவாதமாக தன்னை நிறுத்திக் கொண்டு  தம்முடைய ‘நடிப்பு’ வெளிப்படும் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் சுஜாவின் நிலைமை பரிதாபம். (‘கிடாரி’ திரைப்படத்தில் இவரது நடிப்பு நன்றாக அமைந்திருந்தது)

Bigg Boss

 

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சுஜாவின் துயரத்தைப் போக்குவார்கள் என நம்புவோம். 

‘ஐட்டம் டான்சர்’ –ன்றது சொல்றது தப்பு. பொருள்களைத்தானே ‘ஐட்டம்’னு சொல்லுவாங்க.. வீட்டுக்கு வர்ற விருந்தினரை ‘Guest’ன்னு சொல்லுவீங்களா.. ஐட்டம் ‘னு சொல்லுவீங்களா என்று அவர் கேட்பது மிக முக்கியமான விஷயம். சுயமரியாதை சார்ந்தது. 

மேற்கத்திய நாடுகளில் நீலப்படங்களில் நடிக்கிறவர்களுக்கு கூட சமூக அந்தஸ்தும் மதிப்பும் உள்ளது. தாங்கள் செய்வதை ஒரு தொழிலாகவே அவர்களும் பார்க்கிறார்கள். சமூகமும். ஆனால் பாலியல் ரீதியிலான மனப்புழுக்கம் அதிகமுள்ள இந்தியா போன்ற தேசங்களில் ‘பாடல்களுக்கு நடனமாடும் நடிகைகளை ஒருபுறம் ஆவலாக வெறித்துப் பார்த்து விட்டு பின்பு அவர்களை கீழ்தரமாகவும் கொச்சையாகவும் நினைக்கவோ கிண்டலடிக்கவோ ஆண்கள் தயங்குவதில்லை. அவர்களுக்கான சமூக மதிப்பும் இல்லை. இது சார்ந்த விரக்தியினால் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் குற்றவுணர்வுடனும் வருத்தத்துடனும் ஒதுங்கி வாழ நேர்கிறது. 

‘எதையும் சீக்கிரம் நம்பிடுவேன். அதுதான் என் பலவீனம்’ என்றார் சுஜா. ‘எனக்கு அழ வெச்சுதான் பழக்கம்’ என்று முதலில் கெத்து காட்டியவர் இப்போது அழுது கொண்டேயிருப்பது சோகம். உணர்வுவயப்படுதலை கைவிட்டு நம்பிக்கையுடன் இயங்கினால் வெற்றியாளர் வரிசையில் சுஜா இணையக்கூடும். தன் துக்கத்தின் வெம்மை இன்னமும் தணியாமல் கலங்கிக் கொண்டே தனிமையில் சுஜா உணவு அருந்திய காட்சியும், அவருக்காக வைக்கப்பட்ட அண்மைக் கோணங்களும் துயரச்சாயல் கொண்டது. 

இந்த வீட்டில் உண்மையாக இருப்பவராக வையாபுரியைப் பார்க்கிறேன்’ என்றார் ஹரீஷ். இருக்கலாம். வையாபுரிக்கு அந்த வீட்டில் நீடிப்பது நிச்சயம் பிடிக்கவில்லை. எப்போது வெளியே போகலாம் என்று தவிக்கிறார். ஆனால் வீட்டிலிருந்து வந்த குறிப்பு காரணமாக எப்படியாவது தாக்குப்பிடித்து விட முடியுமா என்றும் பார்க்கிறார். இது சார்ந்த தத்தளிப்பு அவரிடம் நிறையத் தெரிகிறது. பினாத்திக் கொண்டேயிருக்கிறார். ஆனால் இந்த உணர்வுகள் சார்ந்து உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறார். மறைத்துக் கொள்ளவில்லை. நகைச்சுவையுணர்வு உள்ளவர்களுக்கு உள்ள பிரச்னையிது. சிரிப்புக்கு மறுபுறம் அதிகம் உணர்வுவயப்படுகிறவர்களாக இருப்பார்கள். 

 

**

என் வாழ்க்கையை பெரும்பாலும் தனிமையிலேயே கழித்திருப்பதால் தனிமை எப்போதும் எனக்கு சுமையாக இருந்ததில்லை. கடைசியாக எப்போது அழுதேன் என்பதே நினைவில் இல்லை. நண்பரின் மரணத்திற்காக சில ஆண்டுகள் முன்பு அழுதேன். இந்த வீட்டுக்கு வந்த பிறகு அழுததே இல்லை என்பது ஆச்சரியமாயிருக்கிறது என்ற  ஆரவ், ‘சக்தியின் பிரிவின் போது தன்னிச்சையாக அழுதேன்’ என்றார். 

Bigg Boss

ஓவியாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட ஆரவ்விடமிருந்து வெளிவரவில்லை. போலித்தனமாக அவர் சொல்லாதது குறித்து மகிழ்ச்சி. என்றாலும் பரவாயில்லை ஆரவ். ஓவியா உளைச்சலில் இருந்த போது நீங்கள் ஒருவர் கலங்கவில்லையென்றாலும் பரவாயில்லை. 

அப்போது ஓவியாவிற்காக மனம் கலங்கி கோடிக்கணக்கானவர்கள் துயரப்பட்டார்கள்; பிரார்த்தனை செய்தார்கள் என்பதை வெளியே வந்த பிறகு அறிந்து கொள்வீர்கள். 

‘நாளை’ என்ற பகுதி காட்டப்படவில்லை. பிக்பாஸு சஸ்பென்ஸ் வெக்கிறாராம்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/99898-what-happened-during-the-57th-day-of-biggboss-house.html

Link to comment
Share on other sites

ஓவியா ஆவாரா சுஜா... காயத்ரியை மிஞ்சுவாரா காஜல்..!? (58-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

சுஜா காலையில் போட்ட கோலத்தை பிறகு எழுந்து வந்து பார்த்த பிந்து பாராட்டியது நல்ல விஷயம். 

‘விக்ரம் வேதா’வில் இருந்து ‘யாஞ்சி. யாஞ்சி...’ பாடல் ஒலிபரப்பானது. உள்ளிருந்து வரும் இயல்பான உணர்வுடன் நடனமாடினால், நடனம் தெரியவில்லையென்றால் கூட அது நன்றாக அமையும். பிந்து அதை சிறப்பாக கையாள்கிறார். ‘யாராவது மூவ்மெண்ட் சொல்லிக் கொடுத்தால்தான் ஆடுவேன்’ என்ற சுஜா இன்னமும் சரியாக தயாராகவில்லை. 

Bigg Boss

‘ஆர்த்தி இருக்கும்போது ஜோக் அடிச்சிட்டே இருப்பாங்க. சிரிச்சிட்டே இருப்பேன்’ என்றார் ரைசா. அப்படியா? அப்போதெல்லாம் ‘ட்ரூ’ என்று சொன்னதைத் தவிர ரைசா வேறெதுவும் சொன்ன நினைவில்லையே?

தரைத் துடைப்பானை கையில் பிழியாமல் விசையை திருப்புவதின் மூலம் பிழியக்கூடிய மாடல் இங்கு கிடையாதா? வெறும் ரூ.350/-தானே? என்று பிக்பாஸை tease செய்தார் காஜல். ‘இல்லை அந்த மாடல் லக்ஸரி பட்ஜெட்டில் வந்து விடும். நூறு ரூபாய் மாடல்தான் இங்குள்ளது’ பிக்பாஸின் மானத்தை கூடுதலாக வாங்கினார் ஆரவ். ‘Self discipline’  கத்துக்கத்தான் இங்க வந்திருக்கோம். சொகுசா இருக்கறதுக்கு இல்ல’ என்றது ஆரவ்வின் கிண்டல். 
**
‘பொதுமக்கள் ஒப்புக் கொண்ட ஒருவரை நாமும் நகலெடுத்தால் வெற்றியை அடைய முடியும் என்று சிலர் நம்புகிறார்கள்’ என்றார் காஜல். வந்ததில் இருந்தே அவருக்கு சுஜாவுடன் இணக்கமில்லை என்பது தெரிகிறது. எனவே அது சார்ந்த புகைச்சல் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ‘ஓவியா மாதிரி காமிராவை பார்த்து பேசிட்டிருக்கா’ என்பது சுஜாவைப் பற்றிய காஜலின் விமர்சனம். நல்ல விஷயங்களுக்காக முன்னோடிகளை பின்பற்றுவதில் பிழையில்லை. கூடவே தமது சுயத்தை இழந்து விடக்கூடாது என்பது முக்கியமானது. சுஜா இதைப் புரிந்து கொள்வார் என நம்புவோம். 

Bigg Boss

‘என்னைப் பார்த்தால் யோகம் வரும்’ என்ற வாசகத்துடன் கழுதையின் புகைப்படத்தை சில கடைகளில் மாட்டியிருப்பார்கள். அது அதிர்ஷ்டமாம். பல்வேறு விதமான மூடநம்பிக்கைகளில் அதுவொன்று. ஆரவ் அது போல ஒரு விதத்தில் மாட்டிக் கொண்டார். ‘இதை அழுத்தினால் அலாரம் நிற்கும்’ என்று போட்டிருந்த போர்டை சிறுவனுக்கான உற்சாகத்துடன் அழுத்த அடுத்த வார வெளியேற்றத்தில் போய் சிக்கிக் கொண்டார். அவர் வேறொருவரை நாமினேட் செய்வதின் மூலம் அந்தச் சிக்கலை அடுத்தவருக்கு மாற்றி விடலாம். 

வடிவேலு நடித்த  நகைச்சுவைக்காட்சியில் ஒரு மொட்டைத் தலையில் கையை வைத்து மாட்டிக் கொள்வார். கையை எடுத்தால் மொட்டையர் குரல்வளையை கடித்து விடுவார். வேறொருவரை அந்த தலையில் கைவைக்க வைத்தால்தான் வடிவேலு தப்பிக்க முடியும். 

இந்தக் காட்சியை பிக்பாஸ் நேற்றுதான் பார்த்திருப்பார் போல. அதிலிருந்துதான் இந்த கொலைவெறி task-க்கான யோசனை அவருக்கு வந்திருக்கும் போல. 

ஆரவ் மூவரை தேர்ந்தெடுப்பார். நடக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டியில் அவர்கள் கலந்து கொள்வார்கள். தோற்பவர் வெளியேற்றத்திற்கு தகுதியாவார். காஜல், சுஜா, பிந்து .. என்று மூவரை தேர்ந்தெடுத்தார் ஆரவ். 

 

Bigg Boss

போட்டி விதிகளை சரியாக அறிந்து கொள்ளாமல் காஜலுக்கு டிப்ஸ் கொடுத்து இயந்திரக் குரல் எச்சரிக்கை செய்ய, பல்பு வாங்கினார் ரைசா. காஜல் மற்றும் ரைசாவின் கூட்டணி அழுத்தமாகிக் கொண்டு வருகிறது. காஜலின் அராஜகத்தால் எப்போது பிட்டுக் கொள்ளுமோ?

பரப்பரப்பான (?!) அந்தப் போட்டி துவங்கியது. நீச்சல் குளத்தில் வளையம் தேடும் போட்டி. தேடல் இருந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும் என்பது பிக்பாஸின் தத்துவம் போல. மயிரிழையில் சுஜா தோற்றுப் போனார். (அய்யோ.. இதை எழுதும் போது தன்னிச்சையாக காயத்ரி நினைவு வருகிறதே).

ஆரவ்வின் தண்டனை இப்போது சுஜாவின் தலையில் வந்து விடிந்தது. மொட்டையனின் தலையில் கைவைக்க இப்போது வேறு யாரையாவது சுஜா தேடியாக வேண்டும். 
**
சிநேகனின் ஆருயிர் நண்பராக வையாபுரி மாறி விட்டார். எனவே சிநேகன் வையாபுரியிடம் தன் பிரச்சினை ஒன்று பற்றி பகிர்ந்தார். 
தன்னுடைய கட்டிப்பிடி வைத்தியம் தொடர்பான கிண்டல்கள் வெளியில் பரவியிருப்பதை யூகித்துவிட்ட சிநேகன், இப்போது தன் இமேஜ் குறித்து வருந்துகிறார். இங்கு தான் எப்படி சித்தரிக்கப்படுகிறோம் என்பது குறித்தான கவலை அவருக்கு இருக்கிறது. ‘எல்லா விமர்சனத்தையும் பார்த்து விட்டோம், இதையும் பார்த்து விடுவோம்’ என்று தனக்குத் தானே ஆறுதலும் கூறிக் கொண்டார். 

அவருக்கு ஆறுதல் சொன்ன வையாபுரி பகிர்ந்து கொண்ட விஷயம் நிச்சயம் பரிதாபகரமானது. ‘நான் நூறு நாள் படங்கள்ல நடிச்சு பல வருஷமாச்சு. ஓடற படங்களைத்தான் மக்கள் பார்க்கறாங்க… அதுல வர்றவங்களைத்தான் ஞாபகம் வெச்சிப்பாங்க.. மத்தவங்களை மறந்துடுவாங்க. வெளிய போகும் போது நம்மளை யாரும் விசாரிக்கலைன்னா கவலையா இருக்கு. இந்த நிகழ்ச்சியின் மூலம் அந்தப் பிரச்சினை இருக்காது’ன்னு நெனக்கறேன்.’ 

Bigg Boss

என்ன செய்தாவது மஞ்சள் விளக்கின் அடியிலேயே இருக்க வேண்டிய கட்டாயமும் அதை இழக்கும் போது ஏற்படும் சோகமும் விரக்தியும் வையாபுரியின் குரலில் தென்பட்டது. பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக நடிகர்களுக்கான பிரத்யேக சோகமிது. 

பிந்துவின் டிரஸ் சென்ஸை பாராட்டிய வையாபுரி, அவர் தன்னிச்சையாக தான் அணிந்திருந்த செருப்பை சரி செய்யும் போது, ‘டிரஸ்ஸை பத்தி சொல்லும் போது செருப்பைக் கழட்டினா பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க’ என்று சொல்லி சிரிக்க வைத்தார். வையாபுரி மற்றும் பிந்துவின் கூட்டணி நகைச்சுவையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. 

**

Bigg Boss

‘இனிமேல் புறம் பேசக்கூடாது’ என்கிற ஞானத்தை வந்தடைந்திருக்கிறார் ரைசா. இரண்டு பேர் உட்கார்ந்தால் மூன்றாவது நபரைப் பற்றி பேசிப் பேசி அவருக்கே அலுப்பாக இருக்கிறது என்கிற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார். ‘ரைசா, புறம் பேசாமலிருப்பது பிக்பாஸ் விதிமுறைகளின் படி தவறு’ என்று இயந்திரக்குரல் எச்சரித்திருக்கலாம்.

போலவே இன்னொரு ஞானமும் ரைசாவிற்கு வந்திருக்கிறது. மக்களுக்குப் பிடிக்கவில்லையெனில் ஒரே வார நாமினேஷிலேயே வெளியே போகும் ஆபத்து உண்டு. நமீதா, காயத்ரி போன்றோர்களுக்கு அப்படித்தான் ஆயிற்று. ஆனால் ஓவியா தொடர்ந்து நாமினேட் ஆகியும் வெளியில் செல்லவில்லை என்கிற விஷயத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார். தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வாக்கை ரைசா எப்படியோ மோப்பம் பிடித்து விட்டார் போலிருக்கிறது. 

‘நமீதா மேடத்திற்கு’ டீ போடுகிறேன் பேர்வழி என்று முன்னர் கஞ்சா கருப்பு செய்த நகைச்சுவைகளை ஜாலியாக பேசிக் காட்டினார் வையாபுரி. பிக் பாஸ் வீட்டின் சிரிப்பொலிகளுக்கு வையாபுரியே காரணமாக இருக்கிறார். 

‘சுஜாவைப் பார்த்தால் ஜூலி நினைப்பு வருகிறது’ என்கிறார் ரைசா. ‘அது fake. இது பொய்’ என்பது காஜலின் வர்ணனை. ‘முடியலைன்னா செய்யற வேலையை நிறுத்திடுங்க’ என்று சொன்னேன். ஆனா பிடிவாதமா செய்யறாங்க’ என்கிறார் ரைசா. மேயற மாட்டை ஏதோ மாடு கெடுக்கிற கதை என்பது இதுதான். 

Bigg Boss

எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்த சுஜாவைப் பற்றி. செளகரியமாக போர்த்திப் படுத்துக் கொண்டு மற்றவர்கள் பேசிக்  கொண்டிருந்தார்கள். 

Buddy’ என்கிற வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டுமென்று வையாபுரிக்கு டியூஷன் எடுத்துக் கொண்டிருந்தார் பிந்து. வையாபுரிக்கு அந்த வார்த்தையை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை. மெளனராகம் திரைப்படத்தில் சீக்கியர் ஒருவருக்கு ரேவதி தமிழ் சொல்லித் தந்த காட்சிதான் நினைவிற்கு வந்தது. ‘போடா டேய்”

**
‘கண்டுகொண்டேன்’ என்றொரு task-ஆம். போட்டியாளர்களின் டீஷாட் மற்றும் ஷூக்களை கலைத்துப் போட்டு விடுவார்களாம். கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவரவர்களின் உடமைகளை கண்டுபிடிக்க வேண்டுமாம். ரைசா மாத்திரம் கடைசி வரையில் அம்போவென்று தேடிக் கொண்டிருந்தார். ‘இந்த மாதிரி ஐடியாங்களுக்கு ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ”

 

Bigg Boss

பிக்பாஸ் வீட்டில் இன்னொரு கவிஞரும் உருவாகிக் கொண்டிருக்கிறார். சுஜாதான் அது. ‘பூச்சிகள் சுதந்திரமாக உலாவுகின்றன. மனிதர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்பது அவருடைய கவிதையின் மையப்புள்ளி. இதை சீனியர் கவிஞரான சிநேகனிடம் சொல்லி சான்றிதழ் வாங்கினார். தமிழ் நாட்டில் கவிதை எழுதாதவர்களின் நிலைமைதான் பாவம். மற்றவர்களுடையதை வாசிக்க வேண்டிய பரிதாபத்தில் இருக்க வேண்டும்.

வாக்குமூல அறைக்கு அழைக்கப்பட்டார் சுஜா. அவருடைய தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியை வேறொருவருக்கு மாற்ற ஒரு வாய்ப்பு. இரவு முழுவதும் அவருடன் விழித்திருக்க ஒரு பலியாட்டை சம்மதிக்க வைக்க வேண்டும்.

முதலில் இதற்கு விழித்த சுஜாவின் கண்களில் பிறகு உற்சாகமான மின்னல் தோன்றியது. யார் அந்த பலியாடு என்பதான உத்தேசம் அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஆம். சீனியர் கவிஞர் சிநேகன்தான் அது. உற்சாகமாக ஓடிச் சென்ற சுஜா, சிநேகனிடம் நைச்சியமாக கெஞ்ச சிநேகனும் ஒப்புக் கொண்டார். பெண் என்றால் பேயே இரங்கும் போது, தேவதைகளின் காப்பாளர் சிநேகன் இரங்காமலா இருப்பார்?. ஆனால், இன்னொருவருக்கு உதவி செய்ய இரவு முழுவதும் விழிக்கத் தயாராக இருந்த சிநேகனின் நல்லியல்பை பாராட்டியே ஆக வேண்டும். 

சிநேகன் ஒப்புக் கொண்டவுடன் குத்தாட்டம் போட்ட சுஜாவைப் பார்த்து ‘என்ன சுஜா’ என்று கணேஷ் விசாரிக்க, அது அப்போதைக்கு ரகசியம் என்பதால் அவர் வெவ்வே காட்ட, ‘சரி.எதுவோ.. நீ சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்’ என்றார் கணேஷ்.

‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தில் நாயகிக்கு உதவும் கமலைப் பார்த்து ரஜினி சிகரெட் வாயில் தொங்க… தெனாவெட்டாக ‘ஜென்டில்மேன்’ என்பார். அதே தொனியில் கணேஷை சொல்லத் தோன்றுகிறது. 

**

இரவு முழுவதும் விழித்திருக்கும் task-ன் முதல் பாகம் மட்டுமே வெளியானது. பிறகே அதன் இரண்டாவது பகுதியின் ரகசியம் வெளிப்பட்டது. விழித்திருப்பவர்கள் பந்துகளை எறிந்து பரஸ்பரம் பிடித்து கூடையை நிரப்ப வேண்டும். இரவு முழுவதும் விழித்திருந்து இதைச் செய்ய வேண்டுமாம். இதைவிட குரூரமான, பைத்தியக்காரத்தனமான task இருக்க முடியாது. 
சரி, பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறித்தானே ஆக வேண்டும்?

Bigg Boss

சுஜா – சிநேகன் கூட்டணியின் இந்த விளையாட்டிற்கு தங்களால் ஆன பங்கைத் தருவதாக சிலர் ஒப்புக் கொண்டனர். காஜல் மட்டும் ‘என்னைக் கூப்பிடாதீங்க. நான் வர மாட்டேன்’ என்று சுஜாவின் மீதுள்ள எரிச்சலை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டார். 

வீட்டில் உள்ள ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்வதற்காக எந்த அளவிற்கு தயாராக இருக்கிறார் என்கிற சகிப்புத்தன்மையையும் உதவி செய்யும் மனப்பான்மையையும் சோதிப்பதற்கான விளையாட்டு இது. ஆனால் காஜல் தன்னுடைய அராஜகமான பதிலின் மூலம் துவக்கத்திலேயே சறுக்குகிறார். ஆனால் ரைசா, ஆரவ் என்றால் உதவுவாராம். என்ன மனிதர்களோ!

சுஜாவை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவதான தோரணையில் ஐடியாக்கள், அந்த விளையாட்டின் டைனமிக்ஸ், டயட் கண்ட்ரோல் என்று பல விஷயங்களை ஒரு கோச் போல சொல்லிக் கொண்டிருந்தார் கணேஷ். 

விளையாட்டிற்கு முன்பு வார்ம் –அப்பாக சிநேகன் வையாபுரியுடன் கிசுகிசுப்பாக ரகசியம் பேசிக் கொண்டிருந்தார். 

பந்தை எறிந்து விளையாடும் போட்டி துவங்கியது. நள்ளிரவுக்கும் மேல் நீண்டு கொண்டிருந்த அந்தப் போட்டியில் சோர்வடையத் துவங்கிய இருவரையும் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. மற்றவர்கள் உறங்கி விட, கணேஷூம் ஆரவ்வும் உதவ வந்தனர்.

பந்துகளை எறிவதற்குப் பதில், பிக்பாஸை வசைச் சொற்களால் அர்சிக்க வேண்டும் என்று போட்டி வைத்திருந்தால், அனைவருமே ஆர்வமாக முன்வந்து பங்கேற்பார்களோ எனத் தோன்றுகிறது!

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/100053-will-suja-conquer-oviyas-placeor-kajal-will-overtake-gayathri-what-happened-during-the-58th-day-of-bigg-boss-house.html

Link to comment
Share on other sites

மீண்டும் கலகலக்கும் ஆரவ்... தடம் மாறும் தடவியல் சிநேகன்! (59-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

பிக்பாஸ் தந்த கொலைவெறி task-ஐ விடியற்காலை வரையிலும் சுஜா செய்து கொண்டிருந்தார். சிநேகனுக்கு ஓய்வு தந்து விட்டு கணேஷ் வந்து உதவினார். சுஜாவைப் பார்க்க உண்மையிலேயே பாவமாக இருந்தது. கின்னஸ் சாதனையில்கூட பல மணி நேர முயற்சிகளின் போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இடையில் சில நிமிடங்கள் ஒய்வு எடுத்துக் கொள்ளலாம் என்கிற விதியிருக்கிறது. பிக்பாஸ் அதைக் கூட அனுமதிக்கவில்லை போலிருக்கிறது. 

இத்தனை மனித உழைப்பை ஆக்கப்பூர்வமான விஷயத்திற்கு பயன்படுத்தியிருக்கலாமே என்று தோன்றியது. ஆனால் மனித சக்தியைப் போன்ற ஆச்சர்யமான விஷயமே இல்லை. ‘இதைச் செய்யவே முடியாது. மிகக் கடினமான பணி’ என்று நாமே அவநம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை நெருக்கடியான சூழலில் வேறு வழியில்லாமல் செய்து முடித்தே விடுவோம். ‘நாமா செய்தோம்’ என்று நமக்கே பிறகு ஆச்சர்யமாக இருக்கும். 

Bigg Boss

வேறு வழியில்லை. இப்படி நினைத்துக் கொண்டுதான் சுஜா தன்னைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் சும்மா சொல்லக் கூடாது. சுஜா தன்னுடைய மனஉறுதியை கைவிடாமல் இருந்தார். Sportsmanship…. மன்னிக்க.. sportswomanship. அவரிடம் நிறைய இருக்கிறது. ‘இது ஒரு கேம். எப்படியாவது முடித்து விட வேண்டும்’ என்கிற பிடிவாத உற்சாகத்துடன் இருக்கிறார். 

ஆனால் அப்போது எழுந்து வந்த காஜல் அந்த உற்சாகத்தைக் கலைத்துக் கொண்டிருந்தார். ‘கேமா இருந்தா கூட நான் இதைச் செய்ய மாட்டேன். என்னால இன்னொருத்தர் தூக்கம் கெடும்-னா நான் ஒத்துக்க மாட்டேன். இது எண்டர்டெயிண்ட்மெண்ட், இல்ல… பனிஷ்மெண்ட்’

‘இந்த விளையாட்டில் வெற்றியடைய வேண்டுமென்றே நோக்கோடு செயல்படுங்கள்’ என்று கமல் புதிய போட்டியாளர்களிடம் சொல்லி அனுப்பியதற்கு மாறாக ‘இதுல வின் பண்ணணும்னுலாம் எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்ல’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார் காஜல்.

விடியற்காலையை கடந்த பின்னரும் போட்டியை நிறுத்துவதற்கான எவ்வித சமிக்ஞையும் வரவில்லை. ‘பிக்பாஸ்… நீங்க சொன்னது இந்திய நேரத்தோட காலையா.. இல்ல..  வேற நாட்டோட நேரமா?” என்று எரியும் நெருப்பில் காமெடி பெட்ரோல் ஊற்றினார் கணேஷ்.

சரியாக காலை 08.00 மணிக்கு பிக்பாஸ் திருப்பள்ளியெழுச்சிப் பாடலின் போது போட்டியை நிறுத்துவதான ஒலி எழுப்பப்பட்டது. விடியற்காலை பாடலாக ‘தூங்காதே… தம்பி .. தூங்காதே.. பாடல் ஒலித்தது. (என்னா வில்லத்தனம்). காலையில் ஒலிக்கும் பாடலாக பழைய திரையிசைப்பாடல் ஒலிப்பது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள், நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்’ என்ற வரி ஒலிக்கும் போது ரைசாவிற்கு க்ளோசப் போட்ட அந்த கேமிரா மகராசன் பயங்கர குறும்புக்காரனா இருக்கணும். 

Bigg Boss

சுஜா ‘சிவராத்திரி’ போட்டியில் டரியலுடன் வெற்றி பெற்றதால் நாமினேஷன் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார். பதிலாக அவர் வேறு மூன்று பலியாடுகளை தேர்ந்தெடுத்தார், பிந்து, காஜல், ஹரிஷ். ‘வெச்சு செஞ்சிட்டாளே’ என்று முணுமுணுத்தார் காஜல்.

“அது ஏன் task-ற்கு என்னையே செலக்ட் பண்றீங்க?’ என்று அலுத்துக் கொண்டார் காஜல்…  ‘ஆ….. ங்’ என்று அம்மணி இழுத்து இழுத்து பேசும் மாடுலேஷனுக்கு நான் ரசிகனாகிக் கொண்டிருக்கிறேன். இட்லி கடை அக்காவிடம் பேசுவது மாதிரியே இருக்கிறது. 

ஆரவ் சொல்வது போல இந்த task-க்கிற்கு பழைய போட்டியாளர்களிடமிருந்து எவரையாது சுஜா தேர்ந்தெடுத்திருக்கலாம். எதற்கு வம்பு என்று விட்டு விட்டார் போல. ‘அவளுக்கு என்னைப் பிடிக்காதுன்னு தெரியும்’ என்றார் காஜல். இங்கு வந்ததில் இருந்து இதே முன்தீர்மானத்தில் இருக்கிறார். இங்கு வந்த பிறகு அதனால் உருவாகும் கசப்புகளின் மூலம் ஒருவரின் மீது அபிப்ராயம் ஏற்படுவது வேறு. வந்ததில் இருந்தே முத்திரை குத்தி விடுவது வேறு. 

காஜல் நெகட்டிவ் பப்ளிசிட்டி உத்தியை பயன்படுத்துகிறார் என்பது சிநேகனின் கணிப்பு. 

**

‘யாரை நம்பி நான் பொறந்தேன். போங்கடா. போங்க’ பாடலை தெலுங்கு ரீமிக்ஸ் செய்வதாக நினைத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தார் வையாபுரி. இனி டப்பிங் படங்களுக்கான பாடலை இவரே எழுதலாம் போல. பிந்து பூண்டு சம்பந்தமான பொருள்களை வேண்டி பெற்றுக் கொண்டதால், பூண்டினால் ஏற்படக்கூடிய விபரீதங்களை வையாபுரி நகைச்சுவையாக சொல்லிக் கொண்டிருந்தார். 

Bigg Boss

பிக்பாஸ் அனுபவம் காசு தந்தால் கூட கிடைக்காது. வாழ்நாள் முழுவதும் பயன்படக்கூடிய அனுபவமாக இருக்கும் என்கிற புல்லரிப்புடன் ஆரவ்வும் ரைசாவும் காஜலிடம் கூறிக் கொண்டிருந்தனர். 

ஒரு  நகைச்சுவைத் துணுக்கு நினைவிற்கு வருகிறது. 

வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒருவன் ஜோசியக்காரனிடம் சென்றானாம் ‘உங்களுக்கு சனி திசை.. மொதல்ல ஒரு.. ஆறுமாசத்துக்கு கஷ்டமாத்தான் இருக்கும்’ என்று ஜோசியர் சொல்ல.. ‘அதற்குப் பிறகு..’ என்று வந்தவன் ஆவலுடன் கேட்க.. ஜோசியர் சாந்த பாவத்துடன் ‘அப்படியே பழகிடும்’ என்றாராம். ஆரவ் – ரைசா தத்துவமும் இந்த நோக்கில் இருப்பதாகப் படுகிறது. என்றாலும் இந்த அனுபவங்களை அவர்கள் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்வது மகிழ்ச்சி. 
**
‘விடாதே இழு’ என்றொரு task. சிவராத்திரி போட்டியில் வெற்றி பெற்ற சுஜா தேர்ந்தெடுத்த மூவரும் சுஜாவை ஒரு டயரின் மீது அமர வைத்து இழுக்க வேண்டும். எவர் குறைந்த நேரத்தில் அதிக தூரம் இழுக்கிறாரோ.. அவரே வெற்றியாளர். தோற்றவர் இன்று இரவிற்கான task-ல் போய் சிக்கிக் கொள்வார். 

Bigg Boss

‘ஏதாவது அடிபட்டா என்ன பண்றது’ என்று அப்போதே கேட்டு விட்டார் காஜல். ஒருமுடிவோடுதான் கேட்டார் என்பது பிறகு தெரிந்தது. 

பூண்டு நிறைய சாப்பிட்டிருந்தும், ஃபார்பி டால் பிந்துவின் உடலில் சக்தியில்லை. இழுக்க முடியாமல் சிரமப்பட்டார். நேரம் முடிந்து போனது. அடுத்து இழுக்க வந்த காஜல் எளிதாகவே சுஜாவை நகர்த்திக் கொண்டு சென்றார். ஆனால் இடையில் வலியால் கத்திய சுஜாவை அவர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இழுக்க முயல, டயரில் மாட்டிக் கொண்ட சுஜாவின் விரல்கள் வலியால் நடுங்கின. 

காஜல் இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்றுதான் தெரிகிறது. தாம் இரவு task-ல் சென்று சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான் காஜலின் மனதில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். எனவேதான் சுஜாவின் ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாது இழுத்திருக்க வேண்டும் என்றே நம்புவோம். மிகுந்த பதற்றத்துடன் பல முறை மன்னிப்பு கேட்டார் காஜல். ஒரு ஸ்போர்ட்ஸ் வுமனின் பெருந்தன்மையோடு ‘பரவாயில்லை காஜல். இது கேம்.. நீங்க என்ன செய்வீங்க?’ என்று பயங்கரமான வலியின் இடையிலும் அதை சர்ச்சையாக்காமல் சுஜா கடந்தது சிறப்பு. 

அடுத்த வந்த ஹரீஷ் மிக எளிதாகவே இழுத்துச் சென்று போட்டியில் வென்றார். மீண்டும் மீண்டும் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. உடல்பலத்தின் மூலமான போட்டி என்றால் ஆண்கள் வெல்லவே அதிக வாய்ப்பிருக்கிறது. காஜல் இழுத்த போது விபத்தின் காரணமாக இடையில் தடைப்பட்டதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கலாம். 

பாவம், பிந்து. இந்தப் போட்டியில் தோற்றதின் மூலமாக அன்றைய சிவராத்திரி போட்டியின் பலியாடாக தேர்வானார். ‘மவனே.. இன்னிக்கு யாராவது தூங்கினீங்கன்னா அவ்வளவுதான். எல்லோரும் எனக்காக உதவணும்’ என்றார் பிந்து. 

Bigg Boss


**
ரைசா பகலில் தூங்கி விடக்கூடாதே என்கிற பதற்றத்தில் இதர அனைவரும் தூங்கவில்லை. ‘கிட்டப் போய் அட்வைஸ் செஞ்சா என்னைத் திட்டிடுவா’ என்றார் காஜல். 

‘எப்பதான் எனக்கு ஹேர்கட் பண்ணப்போறே?’ என்று காமிராவிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ஆரவ். ‘திரும்பிக்கோ.. இல்லைன்னா.. மூஞ்சில ஸ்பிரே அடிச்சுடுவேன்’ – ஓவியாவின் இந்த புகழ்பெற்ற டயலாக்கை ஆரவ்வை வைத்து சொல்லச் சொன்னார் காஜல். வெளியில் பார்த்து வந்ததால் அவருக்குத் தெரியும் விஷயம் ஆரவ்வுக்குத் தெரியாது போலிருக்கிறது. தெரிந்திருந்தால் சொல்லத் தயங்கியிருப்பாரோ என்னமோ. காஜலின் வற்புறுத்தல் காரணமாக சொன்னார். என்ன இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தானே?

ரைசா ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்த ஒரு திடகாத்திரன் மூன்று வரிசை முட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு சென்றார். வையாபுரியின் தொல்லை தாங்காமல் கணேஷ்தான் மாறுவேடத்தில் வந்து எடுத்துக் கொண்டு சென்றாரோ என்று முதலில் தோன்றியது. அப்படியில்லையாம். பகலில் தூங்கக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ரைசா தூங்கிக் கொண்டிருந்ததால் இது பிக்பாஸ் அனுப்பிய ஆள் செய்த திருவிளையாடலாம். 

Bigg Boss

‘வட போச்சே’ என்பது போல் ‘முட்டை போச்சே’ என்று பிந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க, ‘போனாப் போகட்டும்.. என்ன இப்ப..’ என்று தத்துவம் பேசிய வையாபுரி ஊர் முழுக்க இந்தச் செய்தியை பிந்துவை விட அதிகக் கவலையுடன் பரப்பிக் கொண்டிருந்தார். ‘திருடனைப் பிடிக்க பிந்து போச்சு’ என்று வையாபுரி சொன்னதைக் கேட்டு திருவாளர். திருடனே பலமாக சிரித்திருப்பார். 

‘யார்ரா.. அவன்’ என்று கெத்தாக கிளம்பிய ஆரவ், அது பிக்பாஸ் ஆள் செய்தது என்றதும். ‘அப்ப.. செஞ்சது கரெக்ட்தான்’ என்று அப்படியே பம்மியது ரகளையான காமெடி. ‘அதெல்லாம் அழுகின முட்டை. மாத்தித் தர்றதுக்காக எடுத்திட்டு போயிருக்காங்க’ என்று ஜாலியாக சமாதானம் சொன்ன வையாபுரி ‘இருக்கிற முட்டையையாவது ஆம்லேட் போட்டுத் திங்கலாம். அதுவும் போயிடப் போகுது’ என்று கலாட்டா செய்து கொண்டிருந்தார். 

‘வொர்க்அவுட்’ செய்து கொண்டிருந்த ஆரவ்வைக் காட்டி ‘மிஸ்டர். திருடர்.. அவர் மஸில்ஸை பாருங்க. அடுத்த தடவ வந்தீங்கன்னா செத்தீங்க.. அதுக்குத்தான் இவர் உடற்பயிற்சி செஞ்சிட்டிருக்கார்’ என்று ஏதோ சாலையில் கம்பி மீது நடக்கும் வித்தைக்காரரைப் போல.. ‘பாருங்க.. சார்… வயித்துப்பொழப்புக்காக… வித்தைக் காட்டறோம்’ ரேஞ்சுக்கு காமெடி செய்து கொண்டிருந்தார் ரைசா. 

‘அய்யோ.. பிக்பாஸ். அதெல்லாம் இல்ல’ என்று கைப்புள்ள ரேஞ்சுக்கு விளையாட்டாக பம்மினார் ஆரவ். 
**
ரைசா தூங்கியதற்காக அதிகாரபூர்வமான குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. முட்டை போனது ரைசா தூங்கியதால்தான். தவறு செய்தது மட்டுமல்லாமல் அதைப் பற்றி கவலைப்படாமல் எள்ளி நகையாடியது செக்ஷன் 320-ன் படி அதிபயங்கர குற்றம்’ என்று சரமாரியாக ரைசா மீது குற்றம் சாட்டப்பட்டது. “தூக்கம் வந்துச்சு தூங்கினேன்.. என்னங்கய்யா .. இப்ப” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டு அலட்சியமாக இந்தக் குற்றச்சாட்டை கடந்து சென்றார் ரைசா. 

குற்றப்பத்திரிகையின் இரண்டாவது ஷரத்துதான் ரைசாவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது போல. அதை நினைவுப்படுத்திக் கொண்டு உளைச்சலுக்கு ஆளானார். ‘சிரிச்சாக் கூட தப்பா… அடப் போங்கய்யா.. வேணுமின்னா என்னை எலிமினேட் செஞ்சுக்கங்க’ என்று வெறுப்பாக கூறினார். 

Bigg Boss

‘இனிமே பிக்பாஸ் வீட்ல யாரும் ஜோக்கடிக்காதீங்க.. ஜோக்கடிச்சா தப்பாம்’ என்று மேலதிகமாக நொந்து போனார் ரைசா. ‘ஒரு ஸாரி சொல்றதுக்கு என்ன கேடு?’ என்று வேறுபக்கம் முணுமுணுத்துக் கொண்டிருந்தார் சிநேகன். 

பேய் task-ன் போது இரவில் தூக்கம் பாதிக்கப்பட்டதால் ரைசா பகலில் தூங்கியது அத்தனை பெரிய குற்றமில்லை என்று இந்தத் தொடரில் முன்னர் எழுதியிருந்தோம். ஆனால் இம்முறை அவ்வாறான பிரச்சினைகள் ஏதுமில்லை என்பதால் ரைசாவின் பிடிவாதம் இப்போது அபத்தமாகத் தெரிகிறது. 

தாம் செய்த தவறால் மற்றவர்களின் உணவுப்பொருள்கள் பறிபோனது குறித்த வருத்தமோ குற்றவுணர்ச்சியோ அல்லாமல் அதையும் விளையாட்டாக அணுகியது ரைசா செய்த கூடுதலான தவறு. ஆனால் இதை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் ‘இனிமே ஜோக் அடிக்காதீங்க’ என்று இதை திரிப்பது வேடிக்கை. முன்பு இதே மாதிரியான தவறைத்தான் வையாபுரியும் செய்தார். 

மனித மனங்களில் உறைந்துள்ள தற்காப்பு நடவடிக்கைகள் அவர்களை இம்மாதிரிதான் யோசிக்கத் தூண்டும். ஆனால் தாம் சொல்லுவது சரியான காரணமா என்பதை சற்று நிதானமாக உட்கார்ந்து யோசித்தால் கூட தம் தவறுகளை உணர முடியும். 

‘எனக்கு வீட்டுக்குப் போகணும்’ என்று சிணுங்கிய ரைசாவை, ‘அட்வைஸ் பண்ணா கோச்சிப்பியா?’ என்று முன்ஜாக்கிரைதையாக கேட்டுக் கொண்டார் காஜல். ‘எதுவாக இருந்தாலும் கோபத்துல முடிவு செய்யாதே. ரெண்டு மணி நேரம் கழிச்சு முடிவு பண்ணு’ என்று அவர் செய்த உபதேசம் சரியானது. 
**
வையாபுரிக்கு ‘buddy’ என்கிற சொல்லைக் கற்றுத்தரும் பிந்துவின் விளையாட்டு ட்யூஷன் இன்றும் தொடர்ந்தது. ‘ப்ளடி’ என்றலெ்லாம் அதை குதறிக் கொண்டிருந்தார் வையாபூரி. ஆனால் சந்தடி சாக்கில் ‘ஊர்ல என்னை யதார்த்தமான நடிகன்’னு சொல்லிக்கிட்டிருக்காங்க’ என்றொரு பிட்டைப் போட்டது ஓவர். ‘Whatsup man’ என்று பிந்து கேட்டதற்கு ‘fine di’ என்று catwalk-ல் வையாபுரி சொன்னது ஜாலியான கலாட்டா. பிந்துவும் வையாபுரியும் கவுண்டமணி – செந்தில் போல மாறிக் கொண்டிருப்பது நல்ல விஷயம்.
**

Bigg Boss

‘உறியடி’ taskல் ஆரவ் பிரமாதமாக அடித்து வெற்றி பெற்றார். கணேஷ் முதலில் தடுமாறினாலும் பின்னர் அடித்து விட்டார். ஆனால் கணேஷ் அணி வெற்றி பெற்றதாக சிநேகன் அறிவித்ததில் ஆரவ்விற்கு சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. இது குறித்து விசாரணை அறிக்கை கோரலாமா, வேண்டாமா என்று ஹரிஷீடம் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். 

பானையில் இருந்து விழுந்த சாக்லேட்டுக்களை கோயில் தேங்காய் போல உற்சாகமாக பொறுக்கிக் கொண்டிருந்தார்கள் போட்டியாளர்கள். பாவம். 

‘நாளைக்கு எந்த task-க்காவது என்னைக் கூப்பிட்டீங்கன்னா டென்ஷன் ஆயிடுவேன்’ என்று அதிரிபுதிரியாக பேசிக் கொண்டிருந்தார் காஜல். அவருடைய மாடுலேஷனை கிண்டல் செய்து கொண்டிருந்தார் ஆரவ். ‘நீங்க வெளிய இப்படிப் பேசும்போது டெரரா பார்ப்பாங்களா.. சிரிச்சுடுவாங்களா.. ஏன்னா எனக்கு சிரிப்பு வருது’ என்றது நகைச்சுவை. 

Bigg Boss

ஒரு வாக்கியத்தின் இறுதியில் ‘ஆ… ங்…’ என்று காஜல் இழுத்ததை ஆர்வ்வும் செய்து காட்டியது சிறப்பு. ‘அதென்ன பிரேக்கா.. கடைசில.. ஆ… ங்’   காஜலின் மாடுலேஷன் இப்படியென்றால் ரைசாவின் மாடுலேஷன்களை வைத்து பிஎச்டியே செய்யலாம் போல. 

‘சமயங்களில் தாம் விளையாட்டின் இடையில் இருக்கிறோம் என்பதே மறந்து போகிறது. இங்கு நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்று தோன்றி விடுகிறது’ என்பது போல் ஆர்வ்வும் ரைசாவும் பேசிக் கொண்டிருந்தது மனப்பிராந்தியின் காட்சிப்பிழைகள். 

‘எவராவது துயரத்தில் இருந்தால் என்னால் அனுதாபம் காட்டாமல் இருக்க முடியாது. அது என் பழக்கம். ஆனால் இந்த வீட்டில் இனி அதைச் செய்ய வேண்டுமா என்று யோசனையாக இருக்கிறது’ என்றார் ஆரவ். இதே விஷயத்தை வீட்டின் இன்னொரு மூலையில் வேறு மாதிரியாக சொல்லிக் கொண்டிருந்தார் சிநேகன். ‘ரைசாவின் அழுகையைப் பார்த்தால் அருகில் சென்று ஆறுதல் சொல்ல வேண்டுமென்றுதான் தோன்றுகிறது. ஆனால் எதற்கு வம்பு என்று விட்டு விட்டேன்’ என்கிறார் சிநேகன். (வட போச்சே). 

Bigg Boss

**
பிந்துவுக்கான இரவு task அறிவிக்கப்பட்டது. தையல்மிஷின் ஒன்றை அவர் தொடர்ந்து மிதித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நிறுத்தினால் வீட்டின் உள்ளே விளக்குகள் எரிந்து சைரன் ஒலியெழும் என்கிற கொடூரமான ஐடியாவையெல்லாம் யார் தருகிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த மகராசனை பீஹார் சிறைச்சாலையின் சிறப்பு ஆலோசகராக அனுப்பி வைக்கலாம். இப்படி இரவு முழுவதும் தையல் மிஷினை மிதித்து வீணாகும் மனித ஆற்றலை உபயோகமான ஒன்றாக மாற்றலாம். மிஷினை தொடர்ந்து மிதிப்பதின் மூலம் மின்னாற்றல் சேமிப்பது போல.

இரவு நேரத்தில் ஆரவ் வந்து உதவினார். ‘கொஞ்ச நேரம் நிறுத்திப் பார்க்கலாமா. உள்ளே லைட் எரிஞ்சு.. சத்தம் வருதான்னு பார்க்கலாம்’ என்றார் ஆரவ். அவரின் உள்ளேயிருக்கும் உற்சாகமான சிறுவனொருவன் அவ்வப்போது எழுந்து கொள்வது ஜாலியானதாக இருக்கிறது. 

‘கண்டுகொண்டேன்’ போட்டியின் போது தன்னுடைய கண்கள் சரியாக கட்டப்படாமல் இருந்ததை உபயோகித்து ஏமாற்றியதை பிந்து நேர்மையாக ஒப்புக் கொண்டார். என்னவொரு உயர்ந்த உள்ளம்! பூண்டு செய்யும் மகிமை போலிருக்கிறது. 

Bigg Boss

ஓவியா-காதல் விசாரணைகளால் நொந்து போயிருந்த ஆரவ் இரண்டு நாட்களாக இயல்புக்குத் திரும்புவது போலத் தெரிகிறது. ஆனால், கமலின் 'தடவியல் நிபுணர்' சுட்டிக் காட்டலுக்குப் பின் தன் பாணி ஆறுதல் தேறுதல்களிலிருந்து  சினேகன் ஒதுங்கியிருக்கிறாரோ எனத் தோன்றுகிறது!

 

ஓவியாவின் நடவடிக்கைகளை சுஜா அப்படியே நகலெடுப்பதின் அபத்தத்தைப் பற்றி ஆரவ்வும் வையாபுரியும் புறம் பேசிக் கொண்டிருக்கும் உரையாடலோடு இந்த நாளின் நிகழ்ச்சி மங்கலகரமாக நிறைவுற்றது.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/100193-aarav-back-to-originality-as-snehan-loses-it---what-happened-during-the-59th-day-of-bigg-boss-house.html

Link to comment
Share on other sites

ஓவியாவை 'இமிடேட்' செய்யும் சுஜா வரூணி: 'பிக் பாஸ்' ரசிகர்களிடையே வரவேற்பா? எதிர்ப்பா?

 

 
sujaoviya

சுஜா வரூணி மற்றும் ஓவியா | கோப்புப் படம்

ஓவியாவை அப்படியே இமிடேட் செய்து 'பிக் பாஸ்' வீட்டிற்குள் சுஜா வரூணி செய்து வருவதாக ஓவியா ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வெளியேறியவுடன், புதிதாக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பட்டவர் சுஜா வரூணி. பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியா இருக்கும் போதே, தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு ஆதரவாக ட்வீட்களை வெளியிட்டு வந்தவர் சுஜா வரூணி என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சுஜா வரூணி வந்ததிலிருந்தே தொடர்ச்சியாக ஓவியாவைப் போலவே பேசுவது, செய்கைகள் என மொத்தமாக இமிடேட் செய்து வருகிறார். இதனை பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பலருமே, ஓவியாவைப் போல இமிடேட் செய்தால் அவராக ஆக முடியாது என்று தெரிவித்தார்கள்.

சமூகவலைத்தளத்தில் பிக் பாஸ் ரசிகர்களிடமும் சுஜாவின் செயல்பாடுகள் பெரும் எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது. இன்றைய (ஆகஸ்ட் 24) ப்ரோமோ வீடியோவில் ஓவியாவைப் போலவே பிக் பாஸிடம் சுஜா வரூணி பேசும் "இங்கு யாருக்குமே என்னை பிடிக்கவில்லை. தனிமையாக உணர்கிறேன்" என்ற வீடியோவைக் குறிப்பிட்டு, இப்படியெல்லாம் பேசினால் நீங்கள் ஓவியாவா? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

மேலும், சுஜாவுக்கு ஆதரவாக சிலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அவருடைய பேச்சு வழக்கமே அப்படித்தான். அவரும் திரையுலகில் மிகவும் கடினப்பட்டு, தன்னுடைய இடத்தை பதிவு செய்து வருகிறார் என்றும் கூறிவருகிறார்கள்.

தொடர்ச்சியாக சுஜா வரூணி மற்றும் காஜல் இருவரின் செயல்பாடுகளே, பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சமூகவலைத்தளங்களில் பேச்சுப் பொருளாகி வருகிறது. மேலும், பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓவியா வெளியேறியிலிருந்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மிகவும் போரடிக்கிறது. சில நாட்கள் பார்த்ததுக் கூட இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

TRP -யில் விஜய் தொலைக்காட்சி தங்களுடைய ஏற்றத்தை தக்க வைத்துக் கொள்ள, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வரும் வாரத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரவும் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19553970.ece?homepage=true

Link to comment
Share on other sites

ப்ளீஸ் பிக்பாஸ்.... முடியலை.... வலிக்குது! (60-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்..

biggboss9812_15183.jpg


பிக்பாஸ் வீட்டில் இன்று 60-ம்நாள். ஹீரோயின் ஓவியா, காமெடியன் ஜூலி, டெரரான வில்லத்தனத்திற்கு காயத்ரி என்று முக்கிய கதாபாத்திரங்கள் இல்லை என்பதால் சுவாரஸ்யம் பெருமளவு போய் விட்டது. காயத்ரிக்கு மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்த்த காஜல், பில்டிங் ஸ்ட்ராங், ஃபேஸ்மெண்ட் வீக் என்கிற காமெடியாக பார்ப்பதற்கும் பேசுவதற்கும்தான் அதிரடியாக இருக்கிறாரே, ஒழிய உள்ளுக்குள் பயங்கரமான ‘கைப்புள்ள’யாக இருக்கிறார். 

எனவே வேடிக்கை, விளையாட்டுமாகவே நேரத்தைக் கழிக்க வேண்டிய நெருக்கடி பிக் –பாஸிற்கு. எனவே விதம்விதமான விளையாட்டுக்கள் இன்று நடத்தப்பட்டன. அதில் போதுமான அளவிற்கு மோதல் ஏதும் ஏற்படவில்லையென்றாலும் சுவாரசியமாகவே நேரம் கழிந்தது.. குறிப்பாக ‘யார் கொலையாளி’ taskதான் அதிக சுவாரசியம். 

Doll biggboss


அதற்கு முன்னால் –

பிந்து தனது சிவராத்திரி போட்டி சவாலை மற்றவர்கள் உதவியுடன் செய்து முடித்து விட்டார். சுஜாவிற்கு குறைந்த நபர்களே உதவிக்கு வந்தனர். ஆனால் பிக் பாஸ் வீட்டின் பியூட்டியான பிந்துவிற்கு நிறைய பேர் உதவ முன் வந்தனர். எனவே அம்மணிக்கு இரட்டை மகிழ்ச்சி. ‘பாசக்காரப் பய புள்ளைங்களா இருக்காங்க’ என்று பிற்பாடு பிக் –பாஸிடம் நெகிழ்ந்து பேசினார். ‘தாம்தக்க தீம்தக்க . தையத்தக்க கூத்து’ என்கிற காலைப் பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடினார். 

“ஆச்சுவலி.. சுஜா செஞ்ச task கஷ்டம். கைக்கும் மூளைக்கும் தொடர்ந்து வேலை தந்துகிட்டே இருக்கணும். பிந்து செஞ்சது ஈஸி. நாம பாட்டுக்கு தையல் மெஷினை மிதிச்சிக்கிட்டே பாடவும் செய்யலாம், பேசலாம்’ என்பது ஆர்வ்வின் கண்டுபிடிப்பு. ரைசாவிடம் இதைச் சொல்லிக் கொண்டிருந்தார். ரைசா பதிலுக்கு வேறென்னதான் சொல்லியிருப்பார்? அதேதான். ‘ட்ரூ.’

kajal



‘இன்னிக்கு task-க்கிற்கு பிந்து என்னை நிச்சயம் செலக்ட் பண்ணுவாங்க. நான் தோத்துடுவேன். Night task-க்கிற்கு செலக்ட் ஆவேன். பேசாம என்னை எலிமினேட் பண்ணிடுங்களேன்’ என்பது ரைசாவின் புலம்பல். தன்னை பிக்பாஸ் கேள்வி கேட்டது குறித்து அம்மணி இன்னமும் கோபத்துடன் இருக்கிறார் போல.

**

நேற்றைய இரவு நடந்த task-ல் பிந்து வெற்றி பெற்றதாக அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிக் பாஸ், அடுத்த சவாலிற்கு மூன்று நபர்களை தேர்வு செய்யச் சொன்னார். பிந்து தேர்வு செய்த மூன்று பலியாடுகள் – ஆரவ், கணேஷ், சிநேகன். ரைசா பயந்தது போல அவர் தேர்ந்தெடுக்கப்படாதது அவருடைய அதிர்ஷ்டம். 

AArav Raisa


போட்டியாளர்கள் மூன்று பேருமே ஆண்கள் என்பதால் அதற்கேற்ப, உடல்பலம் சார்ந்து கடினமான போட்டியை பிக்பாஸ் வைப்பார் என்று மூவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ‘கண்டிப்பா சிநெகன் தோத்துடுவார்’ என்பது காஜலின் ஆருடம். ‘உடல் பலம் தொடர்பாக இல்லாமல் வேறு வகையாக இருக்கலாம்’ என்பது சுஜாவின் கணிப்பு.

‘ஓவியாவை அப்பட்டமாக அப்படியே நகலெடுக்கிறார்’ என்பது சுஜாவைப் பற்றிய வையாபுரி, ஆரவ், ரைசாவின் புகார். ‘எரிச்சலா வருது’ என்று பேசிக் கொண்டிருந்தார். ஆம். குழந்தை போலவே சுஜா சிணுங்குவதும் பாவனை செய்வதும் நெருடலாகத்தான் இருக்கிறது. அவர் இயல்புத்தன்மையுடன் நடந்து கொள்ளலாம். 

அடுத்து வரும் task-க்கிற்கு எவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தாம் தந்த ஆலோசனைகளையும் மீறி பிந்து குழம்பி விட்டார் என்பது வையாபுரியின் வருத்தம். சோம்பேறியாக உலவிக் கொண்டிருக்கும் ரைசாவை task-னுள் கொண்டு வந்திருக்கலாம் என்பது அவரது ஆதங்கம்.

**

‘முடிந்தால் கட்டி முடி’ என்றொரு task. இரண்டு அணிகளாக பிரிந்து கொள்ள வேண்டும். காகிதக் கோப்பைகளால் ஒருவர் கோபுரம் கட்ட வேண்டும். எவரும் அதைக் கலைக்காதவாறு மற்றவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.  எதிர் அணியினர் பந்துகளை எறிந்து அந்தக் கோபுரத்தை கலைக்க வேண்டும். 

முன்னொரு காலத்தில் ‘Seven Stones’ என்றொரு விளையாட்டை சிறுவர்களாகிய நாங்கள் விளையாடியிருக்கிறோம். இப்போதைய தலைமுறை அதை அறியுமா என தெரியவில்லை. இந்த task-ம் அதைப் போன்றே அமைந்திருந்தது. 

Seven stones Bigg Boss


சுஜா காகிதக் கோப்பைகளை அடுக்க, சிநேகன், பிந்து, வையாபுரி போன்றோர் எதிரணி கலைக்காதவாறு பார்த்துக் கொண்டனர். என்றாலும் இந்தப் போராட்டத்தை அவர்களால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. 

அடுத்த முறை கோப்பைகளை அடுக்கும் பணி ரைசாவிற்கு தரப்பட்டது. முதலில் தடுமாறிய ரைசா, கணிசமான அளவில் அடுக்கிய பிறகு ஓர் உபாயம் செய்தார். கோப்பைகளை காக்கும் பணியில் தானும் ஈடுபட்டார். அது நல்ல விளைவைத் தந்தது. எனவே ஆரவ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இரண்டாவதாக விளையாடுவதில் இப்படியொரு செளகரியம் இருக்கிறது. முன்னோர்கள் செய்கிற தவறுகளை தாம் எளிதில் கண்டுகொள்ளலாம். 

**

அடுத்த task ‘அடித்துப் பிடித்து எடுத்து முடி’ 

ஆரவ், கணேஷ், சிநேகன் கலந்து கொண்டார்கள். ஆண்கள் தொடர்பான போட்டி என்பதால் உடல் பலத்தைக் கொண்டு போட்டி அமைக்கப்பட்டது சிறப்பு. 

Sand task



தமிழ் நண்டுகள் மாதிரி மூன்று நபர்களும் கயிற்றால் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் சகதியில் இறங்கி அங்கு இருக்கும் பந்துகளை தனித்தனியாக சேகரிக்க வேண்டும். கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பதால் ஒருவரையொருவர் இழுத்து மீறி, எவர் அதிக பந்துகளை சேகரிக்கிறாரோ அவரே வெற்றியாளர்.

‘முட்டை’நாயகர் கணேஷ் தன் உடல்பலத்தின் மூலம் இதில் வென்றிருப்பார் என்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. மற்றவர்களை விட உயரமாகவும் பலமாகவும் இருந்ததால் அவருக்கு இது சாத்தியமாகியிருந்திருக்கும். 

இந்த task-ல் தாம் ஏமாற்றப்பட்டோமோ என்று ஆரவ்விற்கு ஆதங்கம். கணேஷ் ஆவேசமாக செயல்பட்டது குறித்து வருத்தமும். ஆனால் ‘task-ன்னா அப்படித்தான் இருக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு உத்தி வெச்சிருப்பாங்க. நீங்கதான் பார்த்து விளையாடணும்’ என்பது ரைசாவின் பதில். ‘பன்னிக்குட்டிங்கள்லாம் பஞ்ச் டயலாக் பேசுதே’ என்று எரிச்சலானார் ஆரவ்.

**

அடுத்து அறிவிக்கப்பட்ட task – எவர் கொலையாளி என்பது. 

இதுவும் முன்னர் விளையாடப்பட்டுக் கொண்டிருந்த சிறுவர்களின் விளையாட்டே. ‘திருடன்  -போலீஸ்’. பெருநகரத்துச் சிறுவர்கள் வீடியோ கேம்களிலும் தொலைக்காட்சிகளிலும் மூழ்கி விட்டதால் இந்த விளையாட்டு சமகால இளம் தலைமுறை அறியுமா எனத் தெரியவில்லை. சிறுநகரங்களில், கிராமங்களில் இந்த விளையாட்டு உயிர்ப்புடன் இருக்கும் என நம்புகிறேன். 

பிக் பாஸ் வீட்டில் இரண்டு கொலையாளிகள் இருப்பார்கள். மற்றவர்கள் ‘அந்தக் கொலையாளிகள்’ எவரென்று கண்டுபிடிக்க வேண்டும். 

Raisa Bigg Boss



இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை அழைத்து அவரவர்களின் கதாபாத்திரங்களை விளக்கிச் சொன்னார் பிக் –பாஸ். 

காஜல் உயர் காவல் அதிகாரியாம் (வெளங்கிடும்). வையாபுரி ஏட்டு (பரவாயில்லை) இருவரும் ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொள்வதற்கான code word ‘hi buddy பரம்மானந்தம்’. வையாபுரியின் டியூஷன் வார்த்தையையே எடுத்து விளையாட்டில் சேர்த்தது சுவாரசியம். 

காவல் அதிகாரிகள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட வார்த்தைகளை உரையாடலின் இடையில் கசிய விட்டு பிறகு கண்டுகொண்டது நகைச்சுவை. 

அடுத்து ஆரவ்வை அழைத்தார் பிக்பாஸ். கொலையாளிகளில் ஆரவ்வும் ஒருவராம். இதற்காக அவருக்கு சீக்ரெட் வாக்கி –டாக்கியெல்லாம் கொடுக்கப்பட்டது. எப்படி கொலை செய்வது என்பதையெல்லாம் பிக்-பாஸ் பிறகு சொல்வாராம். மட்டுமல்லாமல் ஒரு டம்மி நோட்டின் பாதியை சங்கேத அடையாளமாக வைத்திருக்க வேண்டும். (பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு முந்தைய நோட்டு போல)

ஏதோ ஆஸ்கர் விருது வாங்கிய பெருமையுடன் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார் ஆரவ். இவர் மட்டுமல்ல மற்ற அனைவருமே தங்களின் பாத்திரங்கள் வெளியே அறியப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மிகையாக சிரித்துக் கொண்டே வந்தது காமெடியாக இருந்தது. 

Suja ganesh



**

அடுத்ததாக சுஜாவை அழைத்தார் பிக்-பாஸ். அவரிடம் ஏதாவது ஒரு பணியைத்தர உத்தேசித்திருந்தாரோ என்னமோ! அதற்கு முன்னால் சம்பிரதாயத்திற்காக ‘எப்படியிருக்கீங்க சுஜா?” என்று பிக் பாஸ் விசாரிக்க,  இந்திய விருது திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் இயங்குவது போல பல நிமிடங்களுக்கு மெளனமாக எங்கெங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுஜா. 

இங்க யாரும் என்னிடம் சரியா பேசமாட்டேறங்காங்க..அவாய்ட் பண்றாங்க. நானாத்தான் போய் பேச வேண்டியிருக்கு’ என்றவர்..’கணேஷ் buddy நல்லாப் பேசறார்.. பிந்துவும் பேசறாங்க.. சிநேகனும் பரவாயில்லை’ என்று அடுக்கிக் கொண்டே போனார். ‘பின்னே என்னதாம்மா உன் பிரச்சினை’ என்று கேட்கத் தோன்றியது. 

**

ஆஃபிசர் காஜலும் ஏட்டு வையாபுரியும் வீட்டுக்குள் எல்லோரையும் சந்தேகித்துக் கொண்டிருந்தனர். பிந்துவையும் விட்டு வைக்கவில்லை. ‘எங்கே வெச்சிருக்க கத்தியை’ என்று வையாபுரி விளையாட்டாக மிரட்டும் போது, பிந்து, தெய்வ மகள் ‘விக்ரம்’ மாதிரியே அப்பாவியாக  விழித்துக் கொண்டிருந்தார். ‘நிலா… நிலா..”

 

Vaiyapuri



அடுத்த கொலையாளி –ஹரீஷ்ஷாம். தன்னிடம் மிகப் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதான தீவிரமான பாவனையுடன் வெளியே வந்தார் ஹரீஷ். உண்மையாகவே எவரையாவது போட்டுத் தள்ளி விடுவாரோ, என்னவோ. ஆனால் மிளகாய் பொடிக்கு அப்படி பயப்படுகிறார். 

கயிறுகள் இழுத்து பந்து சேகரிக்கும் போட்டியில் தன் உடல்வலிமையைப் பயன்படுத்தி கணேஷ் வென்று விட்டார் என்பது சிநேகனின் ஆதங்கம். 

வாக்கி டாக்கி மூலம் பிக்பாஸ் ஆரவ்விற்கு உத்தரவு தந்தார். கணேஷைக் கொல்வதற்கு ஒரு முழு முட்டையை கணேஷிற்கு ஊட்டி விட வேண்டுமாம்… என்னய்யா இது…‘சின்னப்புள்ளத்தனமா இருக்கு’ பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து கணேஷ் அதைத்தானே செஞ்சிட்டிருக்கார். இதெல்லாம் கொலை –ன்னா கொலைக்கே அவமானம். ‘ஆரவ்.. இன்னும் நெறைய கொலை பண்ணுங்க ஆரவ்’ என்று கணேஷே இதற்குப் பிறகு ஆர்வ்வை துரத்த ஆரம்பித்து விடலாம். 

ரூபாய் நோட்டு வைத்துள்ள ஆசாமியை கண்டுபிடிக்க ஆரவ்வும் ஹரிஷூம் பரஸ்பரம் சிரமப்பட்டது நகைச்சுவை கலாட்டா.

இந்தக் கொலையாளி task-க்கிற்காக ஓவர் ஆக்ட் செய்வது சுஜாதான். அதிகம் பயப்படுவது போல நடிக்கிறார். எதையோ மறைத்துக் கொண்டு தன்னைத் துரத்தியவர்களை போக்கு காட்டிய வையாபுரி வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு விளையாடியது சுவாரஸ்யம். 

ஆனால் கொலையாளிகளில் ஒருவர் ஆரவ் என்பதை சுஜாவும், காஜலும் சரியாகவே கணித்து விட்டனர். இன்னமும் அதிக பயிற்சி வேண்டுமோ, ஆரவ்.

Raisa

 



**

ஆரவ் விளையாட்டாக காஜலைப் பிடித்து கொலை செய்வது போல நடிக்க, சிநேகனும் அதில் இணைந்து கொள்ள காஜல் சற்று பயந்தே போனார். ஆனால் கூடவே கொலையாளிகளை தாம் கண்டுபிடித்து விட்டோம் என்கிற பெருமையும் கூட.

ஆனால் விளையாட்டிற்குள் செய்யப்பட்ட இன்னொரு விளையாட்டு இது என்று அவரை நம்ப வைக்க ஆரவ்வும் சிநேகனும் சிரமப்பட வேண்டியிருந்தது. இருவரும் அவரை அழுத்திப்பிடித்த போது உண்மையாகவே வலி ஏற்பட்டது என்பதற்காக ஸ்மோக்கிங் ரூமில் சென்று கலங்கிய காஜலை. வழக்கம் போல் சிநேகன் சென்று ஆறுதல் கூறினார். காஜல் கலங்குவார் என்பதெல்லாம் எதிர்பாராத ஆச்சரியம். 

கொலையாளிகள் எவர் என்பது தெரிந்து விட்டது. முதல் டார்கெட்டாக கணேஷை எப்படி கொலை (?!) செய்ய வேண்டும் என்பதும் தெரிந்து விட்டது. மற்றவர்கள் எல்லோரும் எப்படியெல்லாம் கொலை செய்யப்படப் போகிறார்கள் என்பதும் அதற்குள் அவர்கள் கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவார்களா என்பதும் இன்றைக்கு தெரிந்து விடும். 

ஆனால் இதில் ஒரு முக்கியமான பிரச்சினையிருக்கிறது. இதை அறிந்து கொள்வது வரை இன்று நாம் கொல்லப்படாமல் உயிரோடு இருந்தாக வேண்டும்.

முடியலை. பிக்பாஸ்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/100325-biggboss-please-leave-us-happenings-of-bigg-boss-day-60.html

Link to comment
Share on other sites

ரைசாவை கொல்றது ஆரவ்வுக்கு அவ்ளோ ஈஸியா? (61-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

திருப்பள்ளியெழுச்சிப் பாடலாக ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தில் இருந்து ஓர் அட்டகாசமான துள்ளலிசைப்பாடல் ஒலிபரப்பானது. ‘டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும்டும்..’ நேற்று task அதிகமாக இருந்ததால் வீட்டு உறுப்பினர்கள் சோர்வாக இருக்கிறார்களோ, என்னமோ எவரும் இன்று நடனமாடவில்லை. பாடலின் இறுதியில் ஆ…ங்.. என்கிறதொரு இழுவையொலி வடசென்னையின் பிரத்யேக வழக்குமொழியில் ஒலிக்கும். காஜல் அக்கா இந்த ஒலியைக் கேட்டு மகிழ்ந்திருக்ககூடும், தான் சொல்லுவதைப் போலவே ஒரு குரல் வருகிறதே என. 

Bigg Boss

கொலையாளிகளான ஆரவ்வும், ஹரிஷ்ஷும் தாங்கள் செய்யவிருக்கும் சதியைப் பற்றிய ஆலோசனையை நடத்தினார்கள்.

பிக்பாஸ் வீட்டில் விநாயக சதுர்த்தி கொண்டாடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பார்வையாளர்களுக்காக விநாகயரின் பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாடி விடுகிறார்கள் போலிருக்கிறது. 

Bigg Boss

கணேஷை முட்டை சாப்பிட வைப்பதைப் பற்றி கொலையாளிகள்  ஏதோ உலகசதியை செய்யப் போவது மாதிரி ஆலோசித்துக் கொண்டனர். ‘வாழைப்பழம் வேண்டாம் என்று சொல்கிற குரங்கு உலகத்தில் உண்டா?’ என்கிற பழமொழி போல, கணேஷ் என்ன முட்டை வேண்டாம் என்றா சொல்லப்போகிறார்? இந்த விஷயத்தில்,  தான்  பிரியாணி ஆவதற்காக ஆடே முன்வந்து சந்தோஷமாக மசாலா அரைத்து தரும். 

‘சம்பவம் நடக்கப் போவுது” என்று காமிரா முன் ஒப்புதல் வாக்குமூலம் தந்து விட்டு சென்றார் ஹரீஷ். நேர்மையான கொலையாளி போலிருக்கிறது. 

காலை உணவு சாப்பிடும்போது சமைக்கப்பட்ட முட்டையை இயல்பாக கணேஷிடம் பகிர்ந்து கொண்டார் ஆரவ். ‘ஆப்பரேஷன் சக்ஸஸ்’ என்று சந்தோஷமாக ரிப்போர்ட் செய்யச் சென்றிருந்த ஆரவ்வுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ‘கணேஷிற்கு முட்டையை அன்புடன் ஊட்டி விட்டால்தான்  இந்த ஆப்பரேஷன் வெற்றி’ என்ற நிபந்தனையை கறாராக வைத்தார் பிக்பாஸ். பரிமாறப்படும் உணவில் உப்பு, காரம் இருக்கிறதோ, இல்லையோ.. அன்பு இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் நிபந்தனை விதிப்பதில் தவறொன்றும் இல்லையே!

எப்படியோ கணேஷிற்கு கூடுதல் முட்டை கிடைக்கப் போகிறது. கணேஷ் அண்ணாச்சி.. ஹாப்பி..

‘சீஸ் பெப்பர்’ எல்லாம் போட்டு அவிக்க வைக்கப்பட்ட முட்டையை ஹரீஷ் கணேஷிற்கு திடீரென்று ஊட்ட ஆடு சந்தோஷமாக முன் வந்து பலியானது. ஆப்பரேஷன் சக்ஸஸ். ‘கொஞ்சம் உப்பு அதிகமாக இருந்தது’ என்று வெள்ளந்தியாக சொன்ன கணேஷைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது. 

Bigg Boss

‘இது விளையாட்டு’ என்று முன்கூட்டியே அறிவதால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உற்சாகமாகத்தான் இருக்கும். ஆனால் எதுவுமே தெரியாமல் விளையாட்டின்  உள்ளே அப்பாவிகளாக இருப்பவர்களின் பாடுதான் சிரமம். 

விநாயக சதுர்த்தி கொண்டாட்டம் அன்று முட்டை சாப்பிடக்கூடாதே என்று கணேஷ் சற்று யோசித்திருந்தால் கூட தப்பித்திருக்கலாம். முட்டை அசைவமல்ல என்று அவர் நினைத்திருக்கக்கூடும் அல்லது இது செயற்கையாக, முன்கூட்டி கொண்டாடப்படுகிற பண்டிகைதானே என்று ஒருவேளை நினைத்திருக்கலாம். 

**

‘இந்த வீட்டில் அசம்பாவிதம் நடந்து விட்டது. கணேஷ் கொலைசெய்யப்பட்டு விட்டார்’ என்ற அறிவிப்பு வந்தவுடன் கணேஷே ஒரு நிமிடம் ஜெர்க் ஆகி விட்டார். முதுகில் ஏதாவது இங்க் தெளித்து விட்டு சிறுபிள்ளைத்தனமாக அதைக் கொலை என்று நினைக்கிறார்களா என்று தன் சட்டையின் பின்னால் தேட ஆரம்பித்தார். 

“நீங்கள் இப்போது ஆவியாகி விட்டீர்கள். இனி வீட்டினுள் இருக்க முடியாது. வெளியே மரத்தடியில்தான் படுக்க வேண்டும்’ என்றது அசரிரீக்குரல். ஆவி என்ற வார்த்தையைக்  கேட்டவுடன் சுஜா குழந்தை மாதிரி பயந்து சிணுங்கியதைக் கண்டவுடன் முதலில் அவரைக் கொலை செய்திருக்கலாமே என்று கொலைவெறியாக வந்தது. 

‘வெளியே இருப்பது சரி. சாப்பாடுல்லாம் கொடுப்பீங்க இல்லையா?’ என்று மிகத் தெளிவாகக் கேட்டு வைத்துக் கொண்டார் கணேஷ். ‘மத்த விஷயங்கள்லாம் எப்படி, மரத்தடியிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதுதானா?’ என்று எனக்குள் எழுந்த சந்தேகம் கணேஷிற்கும் வந்தது. ‘பாத்ரூம்லாம் யூஸ் பண்ணலாம் இல்லையா?’ என்ற சந்தேகத்தையும் தெளிவுப்படுத்திக் கொண்டார். 

என்னதான் இது விளையாட்டு என்றாலும், கணேஷ் இதை இயல்பாக ஏற்றுக் கொண்டாலும் சென்ட்டிமென்ட் காரணமாக அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இது நெருடலாக இருக்கக்கூடும்.. கணேஷ் நொந்து போய் மரத்தடிக்கு கிளம்பினார். பிற்பாடு விஷயம் தெரியும் போது ‘ஒரு முட்டை சாப்பிட்டது அத்தனை பெரிய குத்தமாய்யா?’ என்று நினைக்கப் போகிறார்.

Bigg Boss

என்னமோ மலைப்பிரசேதத்திற்கு கிளம்புவது போல தலையணை, போர்வை என்று என்னென்னமோ  செளகரிய சாதனங்களை எடுத்துக் கொண்டு கணேஷ் கிளம்ப, ‘கணேஷ். ஆவிகள் தலையணை உபயோகிப்பதில்லை’ என்று அசரிரிக்குரல் எச்சரித்தது. மரத்தடிக்கு போய் செட்டில் ஆன கணேஷ், மரத்தில் கட்டப்பட்டிருந்த பொம்மைகளிடம் ‘hi buddies, am your new neighbour’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது நல்ல நகைச்சுவை. 

‘வசதி வாய்ப்பெல்லாம் எப்படி?” என்று அவரை வெறுப்பேற்றுவதற்காக வந்த ஆரவ் சாப்பிடுவதற்காக எதையோ கொடுத்தார். ‘கொழுக்கட்டை ஏதாவது வேண்டுமா?’ என்று ஆரவ் கேட்க, ‘அதைச் சாப்பிட்டுத்தான் செத்தேன்’ என்றார் கணேஷ். வையாபுரி சொல்வது போல,  கணேஷ் மீது ரோடுரோலரை ஏத்தினால் கூட ‘இந்தப்பக்கம் முதுகுல லெப்ட்ல சரியா ஏத்தலை பாருங்க’ என்கிற அளவிற்கு பொறுமைசாலியாக இருக்கிறார்.

‘ஆவி பேய் எல்லாம் பொய். நம்பாதீர்கள்’ என்று பேய் task மூலம் நீதியெல்லாம் சொன்ன பிக் –பாஸே, ஆவி உண்மை என்பது போல task வைப்பது நியாயமா? 

**

அடுத்து ரைசாவை கொலை செய்ய வேண்டும் என்கிற டார்க்கெட் ஆரவ்விற்கு தரப்பட்டது. என்ன செய்ய வேண்டுமாம்? 

ரைசாவை ‘மூன்று முறை ‘அடப்போங்கய்யா’ என்று சொல்ல வைக்க வேண்டுமாம். ‘அடப் போங்கய்யா’, கணேஷை முட்டை தின்ன வைப்பதை விடவும் இது எளிதானது. ‘ரைசா… பகலில் நீங்கள் கட்டிலில் அமரவே கூடாது என்கிறார் பிக்பாஸ்’ என்று சொன்னாலே போதும். ரைசா டென்ஷன் ஆகி வடஇந்தியர்கள் தமிழ் பேசும் பாணியில் ‘அரே பாபா.. என்னய்யா.. இது stupid ஆ இருக்கு.. அடப்போங்கய்யா’ என்று சொல்லி விடுவார்.

Bigg Boss

‘இதை ஒரு game மாதிரி விளையாடி சொல்ல வைத்து விடலாம்’ என்று ஆரவ்வும் கூட்டாளி ஹரிஷூம் பேசிக் கொண்டனர். 

சுஜாதான் கொலையாளிகளில் ஒருவர் என்று பல்வேறு விதமாக பேசி ரைசாவை நம்ப வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் ஆரவ். ‘வாலி’ சிம்ரன் போல ரைசாவும் ஆரவ் சொன்னதையெல்லாம் அப்படியே வெள்ளந்தியாக நம்பிக் கொண்டிருந்தார். ‘ஆமாம். அவங்கதான் அதிகம் பயப்படற மாதிரி நடிக்கறாங்க’

வையாபுரியும் காஜல்லும் காவல்துறை அதிகாரிகள் என்கிற விஷயம் பொதுவில் அறிவிக்கப்பட்டது. இனி அவர்கள் வெளிப்படையாகவே விசாரணை செய்யலாம். ‘hi buddy பரம்மானந்தம்தான்’ எங்க பேரு என்றார் வையாபுரி. கோட்வேர்டை பெயராக மாற்றி விட்டார். ‘அதுக்காகத்தான் நாங்க ரகசியமா விசாரணை செய்து கொண்டிருந்தோம்’ என்று காஜல் சொல்ல.. ‘கருமம்.. அதுதான் விசாரணையா, சாவடிச்சீங்களே’ என்று கிண்டலடித்தார் ஆரவ்.

சிநேகன்தான் கொலையாளிகளுள் ஒருவர் என்று சுஜாவும் பிந்துவும் தீவிரமாக நம்பிக் கொண்டிருந்தனர். எனவே பிந்து போலீஸ் ஆபிசர் வையாபுரியின் உதவியுடன் சிநேகனை ஜாலியாக மிரட்டிக் கொண்டிருந்தார். கொம்பை வைத்துக் கொண்டு ‘ஒழுங்கா உண்மையை சொல்லணும்’ என்று அவர் செல்லமாக மிரட்டுகிற அழகிற்காகவே எந்தக் குற்றத்தை வேண்டுமானாலும் ஒப்புக் கொள்ளலாம் போல.

**


வையாபுரியும் காஜல்லும்  போலீஸ் யூனிபார்மில் வந்தனர். 

‘எரிமலை எப்படிப் பொறுக்கும்?’ என்று டைமிங்காக பாடிய ஆரவ், ‘உங்க செக்யூரிட்டியை சும்மா இருக்கச் சொல்லுங்க’ என்று பிற்பாடு காஜலை கலாய்த்தார். 

வையாபுரி தன்னுடைய கறாரான விசாரணையைத் துவங்கினார். ஒவ்வொருவராக விசாரித்தார். ‘உங்க buddy எப்படி பாடியானாரு?” என்று சுஜாவை கேள்விக்கணைகளால் துளைத்தார். ‘நீ போய் தண்ணி எடுத்துட்டு வா” என்று காஜலிடம் அவர் ஜபர்தஸ்துடன் சொல்ல சிணுங்கிக் கொண்டே சென்றார் காஜல். வையாபுரியின் அலட்டலைப் பார்த்து பிந்துவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. 

Bigg Boss

பிக்பாஸ் தந்த பாத்திரங்களின் படி காஜல்தான் உயர்அதிகாரி. வையாபுரி ஏட்டு. காஜல் அதை மறந்து விட்டாரோ, என்னமோ தேமே என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். ஒருவேளை, உயர்அதிகாரிகள் என்றாலே அப்படித்தான் இருப்பார்களோ. ‘தசாவதாரம்’ பல்ராம்நாயுடு மாதிரி வையாபுரியின் விசாரணை கறாராக இருந்தது. ஒருவரையொருவர் ஜாலியாக போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மரத்தடியில் உலாவிக் கொண்டிருந்த ‘ஆவி’யிடம் காஃபி சாப்பிடுகிறீர்களா?’ என்று அன்பாக விசாரித்தார் சுஜா. ஆனால் இதை ஜாக்கிரதையான தூரத்தில் நின்றுதான் கேட்டார். ‘பக்கத்தில் வா’ என்று கூப்பிட்டது ஆவி. 

வெவ்வேறு விதமான தொனிகளில் சில வார்த்தைகளை சொல்ல முடியுமா என்கிற விளையாட்டின் மூலம் தங்களின் டார்க்கெட்டடான ரைசாவை’ அடப் போங்கய்யா’ என்று சொல்ல வைக்க முயன்றார்கள் ஆரவ்வும் ஹரிஷூம். நினைத்த படி ஆப்பரேஷன் எளிதாகவே முடிந்தது. 

‘என் buddyஐ கொன்னவனை நான் சும்மா விடமாட்டேன்’ என்று சிநேகனிடம் சபதம் எடுத்துக் கொண்டிருந்தார் சுஜா. கணேஷ் மேல் எம்பூட்டு பாசம்! சிநேகன்தான் கொலையாளி என்று அவர் தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கிறார். ‘நான் தொட்டாலே அது கொலைதான்’ என்று ‘செத்து செத்து விளையாடும் காமெடியாக சுஜாவை நம்ப வைத்து விட்டார் சிநேகன். 

‘நீங்க எப்படி செத்தீங்க buddy’ என்று ஆவியிடம் சென்று விசாரித்தார் சுஜா. ஆவியும் தீவிரமாக அதைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தது. ‘எனக்கு ஆரவ் மேலதான் சந்தேகம்’ என்று சுஜா சரியாகவே கணித்தார். அதற்குப் பிறகுதான் ஆவிக்குள்ளும் பல்பு எரிந்தது. ‘ஆமாம். நான் கேட்காமயே .. முட்டை எடுத்து வந்து ஊட்டினாங்க.. சாப்பிடற பொருள்னா நான்தான் ஈசியா மயங்கிடுவேன், இல்லையா?’ என்று சுயவாக்குமூலம் தந்தார். 

**

அடுத்த task மல்யுத்தம். ‘ஆவியும் கலந்துக்கலாமா?’ என்று அனுமதி வாங்கிக் கொண்டு போட்டியில் கலந்து கொள்ளத் தயாரானார் கணேஷ். உடல் பலம் சம்பந்தமான போட்டி என்பதால் வையாபுரிக்கு முதலிலேயே விதிவிலக்கு தந்து விட்டனர். இல்லையென்றால் காமிராவைப் பார்த்து ஆவேசமாக புலம்புவார். எதற்கு வம்பு!

Bigg Boss

ஒரு சதுரத்திற்குள் போட்டி நடக்கும். எவர் முதலில் இன்னொருவரை கட்டத்திற்கு வெளியே தள்ளுகிறாரோ அவரே வெற்றியாளர். முட்டை தின்ற உற்சாகத்தில் ஆரவ்வை எளிதாக வெளியே தள்ளினார் கணேஷ்.  காஜலை சுஜா ஆவேசமாக வெளியே தள்ள ‘நீயா பேய்க்குப் பயப்படற ஆளு?” என்று ஜாலியாக கிண்டலடித்தார் கணேஷ். 

இப்படியாக போட்டியாளர்கள் கடுமையான விளையாட்டிற்குப் பிறகு மூச்சு வாங்க  அமர்ந்திருக்கும் போது ஓர் அறிவிப்பின் மூலம் பிக்பாஸ் வைத்தார் ஒரு டிவிஸ்ட். ‘பயிற்சி நேரம் முடிந்தது’ போட்டியாளர்கள் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர். ‘அப்ப.. இவ்ளோ நேரம் மல்லுக்கட்டியது போட்டி இல்லையா, பயிற்சியா?’

புரொஃபஷனலாக மல்யுத்தம் செய்பவர்கள் உள்ளே வந்தனர். மைக்கேல் மதன காமராஜனில் வரும் ‘பீம்பாய்.. பீம்பாய்’ போலவே ஆங்குதோங்காக நுழையும் ஒரு பிரம்மாண்ட உருவத்தை திகிலுடன் போட்டியாளர்கள் பார்த்தனர்.

தொழில்முறையாக விளையாடுபவர்களுடன் போட்டியிடுவது சிரமமானது என்றாலும் பிக்பாஸ் ஆள்கள் நன்றாகவே சமாளித்தனர். இதில் கணேஷ் கையாண்ட உத்தி உண்மையாகவே திறமையானது. நிற்கும் நிலையிலேயே தாக்குப்பிடித்தால் எதிராளி எளிதில்  தம்மை வெளியில் தள்ளி விடுவார் என்பதை சரியாக யூகித்த கணேஷ். ஏறத்தாழ எதிராளியின் மீது சாய்ந்தாற் போல தன் எடை முழுவதையும் அவர் மீது வைக்க அவரை வெளியில் தள்ளுவது சிரமமாகவே இருந்தது. எனவே களத்தில் அதிக நேரம் கணேஷால் தாக்குப் பிடிக்க முடிந்தது. 

 

வெங்கலக் கிண்ணியை கைப்பற்றுவதில் ஆவேசமாக இருந்தார் சுஜா. மற்றவர்கள் எச்சரித்தும் தன் முதுகு வலியை பொருட்படுத்தாமல் வெற்றி நிச்சயம் என்கிற குறிக்கோளுடன் ஆவேசமாக தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். பிறகு பிக்பாஸே தலையிட்டு அவரை வெளியேற்ற வேண்டியிருந்தது. 

Bigg Boss

போட்டியில் வென்ற கணேஷிற்கும் சுஜாவிற்கும் ‘பரிசு’ ஒன்று அளிக்கப்பட்டது. மிக ஆவலாக அந்தப் பாக்கெட்டை பிரித்துப் பார்த்தார் கணேஷ். ‘முட்டை’. அடப்பாவிகளா! ஒரு மனுஷனை வெறுப்பேற்றுவதற்கும் அளவு இல்லையா?! என்றாலும் அந்தப் பரிசை ஆறுதலாக வைத்துக் கொண்டார் கணேஷ். ‘எங்க போனாலும் இந்த முட்டை கணேஷை துரத்திக் கொண்டே வருகிறதே!

மல்யுத்தம் முடிந்து கொலையாளி task மறுபடியும் துவங்கியதால் ஆவி சோகத்துடன் வீட்டை விட்டு வெளியேறியது. 

**

மல்யுத்த போட்டியின் போது ஆரவ்விற்கு உடல் வலி ஏற்பட்டது போல. ‘உங்களுக்காக மருத்துவர் வருவார்’ என்று பிக்பாஸ் அறிவிக்க, நேரம் காலம் தெரியாமல் ஆரவ்வுடன் விளையாடினார் காஜல். ‘நீதானே கொலைகாரன்’ என்று மறுபடி மறுபடி கூற ‘நான் செம காண்டுல இருக்கேன்’ என்று எரிச்சலானார் ஆரவ். முகம் சுருங்கிப் போனார் காஜல். நாம் நெனச்சபடி அவ்ள ஒண்ணும் இவர் டெடரரா இல்லையே.. இவர் இப்படி இருந்தா எப்படி நம்ம பொழப்பு போகும்!

பின்பு சாவகாசமான நிலையில் அமர்ந்திருந்த ஆரவ், காஜலை அழைத்து சமாதானம் பேசப் போக ‘நீங்களா நினைச்சா பேசுவீங்க.. அப்புறம் கோவிச்சுப்பீங்களா.. அடிபட்ட பிறகும் அவ்ள நேரம் ஜாலியா பேசிட்டு திடீர்னு கோவிச்சுக்கிட்டா எப்படி..! என்றெல்லாம் காஜல் பதிலுக்கு எகிற.. ‘கோவிச்சுக்காதீங்க.. டான்.. அப்ப வலி இருந்தது. ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன்’ என்று சமாதானப்படுத்தினார் ஆரவ்.

ஒருவர் வலியைச் சமாளித்துக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்ப முயலும் போது கிண்டலடிக்கக்கூடாது என்பதற்கான பாடம் நமக்கு கிடைக்கிறது. 

அடுத்த அசம்பாவிதம் நிகழ்ந்த அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்டார். ஆம். ரைசா கொலை செய்யப்பட்டு விட்டார். ‘அடப் பாவிகளா. இது எப்ப’ என்பது போல் விழிகளை உயர்த்தினார் ரைசா. 

ஆவி வேடத்தில் ரைசா மரத்தடிக்கு செல்ல ‘இங்க crowd அதிகமாயிடும் போலயே.. ரெண்டு பேருக்குத்தான் இடம் இருக்கு’ என்றெல்லாம் புலம்பியது மூத்த ஆவி கணேஷ்.

Bigg Boss

‘அவங்களைப் பார்த்தா பாவமா இருக்கு. நாமதான் கொலையாளி-ன்ற விஷயத்தை அப்புறம் சொல்வாங்க..  அப்ப நாம் செத்தோம்’ என்று பேசிக் கொண்டனர் ஆரவ்வும் ஹரிஷூம். என்றாலும் தாம் விளையாடுவது விளையாட்டுதானே என்கிற ஆறுதலும் அவர்களுக்கு இருக்கிறது. முன்பு சக்தி வைரம் திருடும் விளையாட்டை சென்ட்டிமென்ட் ஆக அழுது சீன் போட்டு அபத்தமாக்கியது போல அல்லாமல்  இவர்கள் ஜாலியாக தொடர்வது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தோற்றவர்களை வெளியே மரத்தடியில் படுக்கச் சொல்வதெல்லாம் ஓவர்தான். 

தாங்கள் எப்படி கொலைசெய்யப்பட்டிருப்போம் என்று இரண்டு ஆவிகளும் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். ‘வீட்ல யாரும் கொலையாளிங்க இருப்பது போலவே தெரியவில்லையே’ இதற்காக விதம்விதமான காரணங்களை நினைத்து குழம்பினார்கள். 

பிக்பாஸ் ஆரவ்வை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் முதலில் மிஸ்டு கால் தருவாராம். அடக்கண்றாவியே! அத்தனை லோ –பட்ஜெட்டிலா இந்த விளையாட்டு நடக்கிறது? இந்த மிஸ்டு கால் கலாசாரத்தை கண்டுபிடித்ததே இந்தியர்கள்தானாம். இதனால் தொலைபேசி துறையில் ஏற்பட்ட கோடிக்கணக்கான இழப்பைப் பற்றி வாசித்த ஒரு தகவல் நினைவிருக்கிறது. ஆனால் நிலைமை இப்போது மிகவும் மாறி விட்டது. மணிக்கணக்காக பேசிக் கொண்டிருக்கும்படி நம்மை மாற்றி விட்டார்கள். 

இரண்டு கொலைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. அடுத்து எவர் கொலைசெய்யப்படுவார்? கொலையாளிகள் தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக செய்வார்களா? என்றெல்லாம் அசரிரீக்குரல் கவலைப்பட்டது. 

மரத்தடியில் கூட்டம் அதிகமானால் நான் வயலண்ட் ஆகி விடுவேன் என்று ரைசா ஆவி வேறு ஏற்கெனவே எச்சரித்திருக்கிறது. என்னெ்னன ஆகுமோ? செத்து செத்து ஆடும் இந்த  விளையாட்டை சுருக்கமாக முடித்துக் ‘கொல்லலாம்’ பிக்பாஸ்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/100369-is-it-that-easy-for-aarav-to-kill-raiza-happenings-of-bigg-boss-day-61.html

Link to comment
Share on other sites

கடைசியா கமலையும் ஜட்ஜ் ஆக்கிட்டீங்களேய்யா..! (61-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்

Bigg_Boss_Baner_11586_11296.jpg

பஞ்சாயத்து நாளான இன்று ‘நாட்டாமை’ கமலுக்கு என்னதான் வேலையிருக்கப் போகிறது, அவர் வந்து என்னதான் செய்யப் போகிறாரோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு பெரும்பாலும் கேலியும் விளையாட்டுமாகத்தான் இருந்தது. பஞ்சாயத்து பேசுமளவிற்கு பிராது எதுவும் இல்லை. 

இதையேதான் கமலும் சரியாகச் சொன்னார். “வீடு சந்தோஷமா இருக்கு. அப்படி இருந்தா நமக்கு சந்தோஷமா இருக்காதில்லையா? வெள்ளிக்கிழமை ஏதாவது நடக்குதான்னு பார்ப்போம்’ ம்ஹூம் எதுவும் நடக்கவில்லை. 

கமல் செய்ய என்னதான் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் எப்படியோ சமாளித்து விட்டார் என்றுதான் தோன்றுகிறது.  ஆனால் கமல் தொடர்பான முந்தைய எபிஸோடுகளில் இருந்த பரபரப்பும் ஆக்ஷனும் இன்றைய நாளில் இல்லை. 

பழைய பஞ்சாயத்துக்களை தூசு தட்டி, போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை சாய்வு நாற்காலியில் செளகரியமாக அமர்ந்து வேடிக்கை பார்க்க மட்டுமே செய்தார் கமல். அவ்வப்போது .. “ஆங்… அப்படியே லெப்ட்ல குத்து. ரைட்ல அடி’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை வேறு எதுவும் சுவாரசியமாக இல்லை. 

அதற்கு முன்னால் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி கமல் பேசினார்.

6_11471.jpg

‘அந்தரங்கம் என்பது தனிநபர் உரிமை’ என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பற்றிய தனது தனிப்பட்ட வழிமொழிதலுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கும் ஏதேனும் முரண் இருக்கிறதா’ என்பது தொடர்பான விளக்கத்தை அவர் அளித்தார். 

‘ஒரு சினிமா படப்பிடிப்பு என்பது நடிகர் உள்ளிட்ட அனைவரின் சம்மதத்தோடு நிகழ்வது. ஆனால் நான் வீட்டில் உட்கார்ந்து காது குடையறதை படமெடுத்து வெளியிட எவருக்கும் உரிமை கிடையாது. அதைப் போலவே இங்கிருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் நடவடிக்கைகளை படமெடுப்பதற்கான சம்மதத்தை எழுத்துபூர்வமாக தந்திருக்கின்றனர். எனவே இது அந்தரங்கத்தை மீறுவதாகாது. அந்தப் புரிதலோடுதான் இந்த நிகழ்ச்சியை தொகுத்தளிக்க சம்மதம் தெரிவித்தேன்’ என்பது கமல் அளித்த விளக்கத்தின் சாரம். 

சட்டபூர்வமாக கமல் அளித்த விளக்கம் சரியானது. ஆனால் தார்மீகமாக அது சரியா? படப்பிடிப்புக் காட்சிகளின் மூலம் உருவாகும் சினிமா என்பது ஒரு புனைவு என்பது அதில் இயங்குபவர்கள் உள்ளிட்டு பார்ப்பவர்கள் அனைவருக்குமே தெரியும். அதில் நிகழ்வது எல்லாமே நடிப்பு என்பது பார்வையாளர்களின் ஆழ்மனதிலும் இருக்கும். ஆனால் பாருங்கள், இதில் கூட வில்லன்களின் செயல்களை உண்மை என்று நினைத்துக் கொண்டு பயங்கரமாக திட்டும் வெள்ளந்தி மனிதர்கள் இன்னமும் கூட இருக்கிறார்கள். நிலைமை அப்படி இருக்கிறது.

ஆனால் சினிமாவிற்கும் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோவிற்கும் அடிப்படையிலேயே வித்தியாசமிருக்கிறது. இதில் நடிப்பவர்கள் அனைவரும் தங்களின் உண்மையான பிம்பங்களோடும் அடையாளங்களோடும் இயங்குகிறார்கள். அவர்களுக்கு கற்பனை பாத்திரங்கள் ஏதும் தரப்படுவதில்லை. இதில் நிகழும் சாதக பாதகங்கள் நிகழ்ச்சியின் வெளியே அவர்களின் நிஜமான வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய சாத்தியமுண்டு. 

உதாரணத்திற்கு ஆரவ்வின் முத்த சமாச்சாரம் பற்றி பார்ப்போம்.  இந்த விவரங்களின் பின்னணி நமக்கு முழுமையாகத் தெரியாத நிலையில் மேலோட்டமாக பார்த்து விட்டு அவரை லவ்வர் பாய், மோசக்காரன் என்று ஒருவர் நினைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.  சாட்சியத்திற்கு சமூகவலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களைக் கவனியுங்கள். 

இதைப் போலவே ஜூலி துரோகி, காயத்ரி வில்லி, சிநேகன் பெண்களை கட்டிப்பிடிக்கும் வாய்ப்புகளை வீணாக்காத தடவியல் நிபுணர், கணேஷ் சாப்பாட்டு ராமன் என்பது போல அவர்களின் மீதான பிம்பங்கள் அழுத்தமாக விழ வாய்ப்புண்டு. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சமூக வெளியில் இது சார்ந்த பிம்ப சேதங்களை அவர்கள் பல ஆண்டுகள் சங்கடத்துடன் எதிர்கொள்ள நேரிடலாம். 

போட்டியாளர்கள் புகைப்பது உள்ளிட்ட பல காட்சிளை அவர்களின் பிம்பம் அதிகம் சேதம் ஆகக்கூடாது என்கிற சுயப்பொறுப்போடு பிக்பாஸ் டீம்  தணிக்கை செய்திருக்கலாம். ஆனால் அவற்றை மீறியும் இந்த விபத்து நிகழ்வதுதான் ரியாலிட்டி ஷோக்களின் தன்மை. ஆக.. கமல் அளித்த விளக்கம் சரிதானா என்பது விவாதத்திற்கு உரியது. 

**

‘வெள்ளிக்கிழமையாவது’ ஏதாவது சண்டை நிகழுமா என்று பார்ப்போம் என்று அதற்கான காட்சிகளை காட்டத் துவங்கினார் கமல்.

‘இருமுகன்’ திரைப்படத்திலிருந்து ‘ஹெலனா’ என்கிற அட்டகாசமான துள்ளலிசைப் பாடல் ஒலித்தது. நடன விஷயத்தில் பழைய விறுவிறுப்பு எதையும் காணோம். பிந்து கூட மந்தமாகி விட்டார்.

சுஜா தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை காஜல் கிண்டலடித்தார். இதை சிநேகன் விளையாட்டாக ஆட்சேபித்ததற்கு, ‘இங்க எல்லோரையும் பிடிச்சிருக்கு. அவளை மட்டும்தான் பிடிக்காது’ என்று வெளிப்படையாகச் சொன்னார். காஜல் வந்ததில் இருந்தே சுஜாவை பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தபின் அவர்களுக்குள் கசப்பு ஏற்படுமாறு எந்தவொரு சம்பவமும் நிகழ்ந்தததாக தெரியவில்லை. 

ஒன்று, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே அவர்களுக்குள் தொழில் சார்ந்து ஏதேனும் கசப்புகள் இருந்திருக்க வேண்டும். கஞ்சா கருப்பிற்கும் பரணிக்கும் இருந்த சச்சரவைப் போல. அல்லது ஏதோவொரு முன்தீர்மான வெறுப்பின் காரணமாகத்தான் காஜல் இப்படி நடந்து கொள்கிறார் போல. அப்படித்தான் என்றால் அது முறையல்ல. 

போட்டியாளர்கள் இப்படியே ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தால் நம்முடைய பிழைப்பு என்னாவது என்று தீவிரமாக யோசித்த பிக்பாஸ் அதற்காக ஒரு விஷயத்தைச் செய்தார்.

புகார் பெட்டி ஒன்றை ஏற்பாடு செய்து, போட்டியாளர்கள் தனிமையில் மற்றவர்களின் மீதுள்ள குறைகளை, ஆதங்கங்களை வெளிப்படையாக கடிதம் வழியாக எழுதலாம். அவற்றில் புகார் அளிப்பவரின் பெயர் இல்லாமல் அநாமதேய புகாராக இருக்கட்டும் என்றார். என்றாலும் யார், யார் எதை எழுதியிருப்பார் என்று பார்வையாளர்களாகிய நம்மாலேயே யூகிக்க முடிகிற போது அவர்களால் முடியாதா?

எனவே நிச்சயம் அவர்களுக்குள் சண்டை நிகழும் என்கிற பிக்பாஸின் கணக்கு வீண் போகாது என்றே தோன்றுகிறது. 

**

‘யார் கொலையாளி’ task தொடர்கிறது. இதுவரையான task-களில் இதுதான் மிக சுவாரசியமாகவும் ஜாலியாகவும் இருக்கிறது. ஆரவ்வும் ஹரிஷூம் திறமையாக தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். காமெடிக்கு பல்ராம்நாயுடுவான வையாபுரி கலக்குகிறார். 

வையாபுரி தன் விசாரணையை கணேஷிடம் தொடர்ந்தார். கணேஷ் அப்படியொன்றும் மொக்கையான ஆசாமி இல்லை. புத்திக்கூர்மை உள்ளவர்தான் போலிருக்கிறது. “கொலை நடந்த பிறகு அது பற்றிய கவலையே இல்லாமல் ஆரவ்வும் ஹரிஷூம் தூங்கினார்கள், எப்போதும் ஒன்றாகவே ரகசியம் பேசிக் கொண்டு சுற்றுகிறார்கள். கேட்காமலேயே எனக்கு முட்டை செய்து வம்பாக கொடுத்தார்கள்’ என்றெல்லாம் தன் சரியாக யூகங்களை முன்வைத்து கொலையாளிகளை ஏறத்தாழ நெருங்கி விட்டார்.

ரைசாவிற்கு சுஜாவின் மீது சந்தேகம். பிந்துவின் மீதும். ஆனால் கணேஷின் யூகங்களைக் கேட்டவுடன் மனம் மாறி விட்டார். எனவே ஆரவ் –ஹரீஷ் கூட்டணியை அழைத்து ‘ஏன் எப்பவும் ஒண்ணாவே சுத்தறீங்க?’ என்று நேரடியாக கேட்டார். ‘என் ஸ்வப்னா.. புத்திசாலி.. அவளை யாரும் ஏமாத்த முடியாது’ என்று தூள் திரைப்பட ‘விவேக்’ நகைச்சுவையைக் காட்சியைக் கேட்ட மாதிரி, ரைசாவின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து சந்தோஷமாக இருந்தது. 

இருவரும் ஆடு திருடிய கள்ளர்கள் மாதிரி விழித்தார்கள். ‘அப்பவே நெனச்சேன். ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா கண்டுபிடிச்சுடுவாங்கன்னு’ என்று ஹரீஷ் ரகசியமாக பதறினார். “ஏன் கொன்னுட்டீங்க ஹரீஷ்’ என்று கவலையாக ரைசா கேட்க ‘பிடிக்கலை’ என்று தெனாவெட்டாக பதில் சொன்னார் ஹரீஷ். ஜாலியான பதில்.

**

அடுத்து காஜலைக் கொல்ல வேண்டும் என்று நம்பியார் பிக்பாஸ் ரகசிய உத்தரவு தர, ‘ஓகே பாஸ். கனகச்சிதமா காரியத்தை முடிச்சுடறேன்’ என்று அடியாள் அசோகன் மாதிரியே கண்ணைச் சிமிட்டிக் கொண்டு தேர்ந்த விசுவாசியாக பதில் அளித்தார் ஆரவ். 

காஜல் தானாக முன்வந்து ஆரவ்வை அல்லது அவரது கூட்டாளியை கட்டிப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் கொலை நிகழ்ந்ததாக கருதப்படும். இது கட்டிப்பிடி வைத்தியம் தொடர்பானது என்பதால் ஹரீஷிற்கு வாய்ப்பளிக்காமல் தாமே முன்வந்து இந்த வழக்கை எடுத்துக் கொள்வதாக தீர்மானித்தார் ஆரவ். என்னவொரு தியாகவுள்ளம்!  ‘என் கிட்டதான் அவங்க நல்லா பேசுவாங்க’ என்று அவர் சுட்டிக் காட்டிய காரணமும் ஏற்கும்படிதான் இருந்தது. 

ஆனால், ‘காஜல் தானாக முன்வந்து ஆரவ்வை எப்படி கட்டிப்பிடிப்பார்? விவகாரமான task ஆக இருக்கிறதே, இது சாத்தியமா?’ என்றெல்லாம் நாம் குழம்பிக் கொண்டிருக்கும் போது மிக எளிதாக இந்தக் காரியத்தை முடித்து விட்டார் ஆரவ். ‘பெண்களை கவர்வது எப்படி?’ என்று மனிதர் ஒரு புத்தகமே எழுதுமளவிற்கு விற்பன்னர் போல.

‘இந்த வழக்கு தொடர்பாக எத்தனை விவரங்கள் தந்தேன். ஒரு hug உண்டா, handshake உண்டா?’ என்றெல்லாம் ஆரவ் சிணுங்க, ‘அதற்கென்னடா.. வாடா.. வாடா’ என்று பலியாடு காஜல் முன்வந்து கட்டிப்பிடிக்க வெற்றிகரமாக நிகழ்ந்தது கொலை. 

ஆனால் காஜல் தானொரு மொக்கையான போலீஸ் ஆஃபிசர் என்பதை மறுபடியும் நிரூபித்தார். வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களையெல்லாம் ஆரவ்விடம் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழக காவல்துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது காஜல். 

காரியம் வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தில் ‘எனக்கு வையாபுரி மேலதான் சந்தேகமா இருக்கு’ என்று தர்க்கத்தில் அடங்காத ஒரு விஷயத்தை டிப்ஸாக தந்து விட்டுச் சென்றார் ஆரவ்.

**

அடுத்த கொலை டார்கெட் ‘பிந்து’ அவர் போலீஸ் தொப்பியை அணிந்து கொண்டு ஆரவ்வை நோக்கி ‘hi buddy’ என்று சொல்ல வேண்டும். ‘இதை எப்படிச் செய்வது?’ என்று ஐடியா மன்னன் ஆரவ்வே குழம்பி விட்டார். ஆனால் பிறகு இதையும் எளிதாகவே சாதித்தார்.

பெயர்களை மாற்றிப் போட்டு விளையாடுவது போல விளையாடி, வையாபுரி போல பிந்துவை நடிக்கச் செய்து எளிதாக அந்த வாசகங்களை சொல்ல வைத்து விட்டார் ஆரவ்.

வாலி திரைப்படத்தில் அஜித், சிம்ரனை விதம்விதமான பொய்களைச் சொல்லி ஏமாற்றுவதெல்லாம் நடைமுறையில் சாத்தியம்தானா என்கிற மெல்லிய சந்தேகம் எனக்கிருந்தது. அவை மட்டுமல்ல, அதற்கு மேலான விஷயங்களும் சாத்தியமே என்பதை பிந்து நிரூபித்து விட்டார். அத்தனை எளிதாக ஏமாந்து விட்டார் பாவம்.

‘இந்த வீட்டில் மேலும் இரண்டு அசம்பாவிதங்கள் நடந்து விட்டன. காஜலும் பிந்துவும் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆவியாகி விட்டதால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்’ என்ற அறிவிப்பு வெளியானது. 

காஜல் உடனே கண்டுபிடித்து விட்டார். ‘அடப்பாவி.. ஆரவ்.. இதுக்குத்தான் hug செய்யச் சொன்னியா?’ ஆனால் பிந்து தாம் எப்போது கொலையானோம் என்று குழம்பிக் கொண்டேயிருந்தார்.

நடந்து முடிந்த கொலைகள் விஷயமாக வையாபுரியை விசாரிக்கச் சொன்னார் பிக்பாஸ். பல்ராம் நாயுடுவின் சேட்டைகள் தொடர்ந்தன. இந்த தீவிர விசாரணையில் அவர் அணிந்திருந்த பேண்ட்டே கழன்று போகத் துவங்கியது. அத்தனை தீவிரம். ‘மாமா.. டவுசர் கழண்டுச்சே…’ பாடலை உண்மையாக்கினார் வையாபுரி.

ஆரவ்தான் கொலையாளி என்று பெரும்பாலானோர் நம்பிய நிலையில் ஹரீஷ் அப்பாவியாகவே பார்க்கப்பட்டார். ‘வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டாண்டா’ என்கிற பொன்மொழியை மக்கள் உண்மையாகவே நம்புகிறார்கள் போலிருக்கிறது. 

ஆரவ் கூடவே சுற்றுவதால்தான் ஹரீஷ் மீது மெல்லிய சந்தேகம் எழுந்ததே தவிர, கொலைக்கு உடந்தையாக இருப்பார் என்றெல்லாம் எவரும் நம்பவில்லை. போதாக்குறைக்கு வையாபுரியின் விசாரணையின் போது ‘குழந்தை’ மாதிரி முகத்தை வைத்துக் கொண்டார் ஹரீஷ். ‘உலக நடிப்புடா சாமி’

**

5_11272.jpg

ஆரவ்விற்கு பிக்பாஸிடமிருந்து போன் வந்தது. அப்போதே பெரும்பாலானோர் யூகித்து ஆரவ்வை கொலைவெறியுடன் பார்த்தனர். ‘நாம நம்ம கடமையைத்தானே செய்தோம்.. பாஸ்… ஓக்கே.. ஓக்கே…’ என்று திருடன் வடிவேலு மாதிரியே கெத்தாக பேசி உரையாடலை முடித்தார் ஆரவ். தன்னுடைய கூட்டாளி ஹரீஷ் என்று அவர் அறிவித்ததும் ஆச்சரியத்தில் மற்றவர்கள் வாய் பிளந்தனர். 

தாம் இத்தனை கேவலமாக ஏமாற்றப்பட்டதை பிந்துவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திகைப்பும் ஆச்சரியமுமாக அமர்ந்திருந்தார். ‘போனை திருப்பிக் கொடுத்திடுங்க, ஆரவ்’ என்று பிக்பாஸ் கேட்டவுடன் ‘ஒரு போன் மட்டும் பண்ணிக்கட்டுமா’ என்று ஜாலியாக விளையாடினார் ஆரவ். கள்ளப்பயல்.

**

collage_11565.jpg

அநாமதேயக் கடிதங்களின் மீதான விசாரணைக்காக ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ‘எங்க வீட்லயே எத்தனையோ வக்கீல்கள் இருக்காங்க. எங்க அப்பாவும் வக்கீல்தான். நான்தான் தப்பிப்பிழைச்சு சினிமாவிற்கு வந்துட்டேன். டாக்டர் பட்டம் வாங்கிடறது கூட ஈசி. ஜட்ஜ் பட்டம் வாங்க முடியாது. பிக்பாஸ் கோர்ட்ல எனக்கு ஜட்ஜ் வேலை தந்திருக்காங்க’ என்று நீதிபதியாக அமர்ந்தார் கமல். பேச்சின் இடையே அரசியல் நையாண்டியின் வாசனையும் பலமாக அடித்தது. 

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் உண்மையாக விவாதியுங்கள். தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவும் முன்வைக்கவுமான பயிற்சி இது. Fighting spiritதான் இதில் முக்கியம். பூசி மெழுகாதீங்க’ என்று போதுமான முன்தயாரிப்பை தந்தார் கமல்.

open a Pandora's box என்பார்கள். அப்படித்தான் ஆயிற்று. பழைய குப்பைகள் கிளறப்பட்டன. நாற்றம் பலமாக அடிக்கத் துவங்கிற்று. ஒவ்வொருவரின் மீதான ஆதங்கம், குறை, கோபம் போன்றவை வெளிப்படையாக வந்து கொட்டத் துவங்கின. இப்படி வெளிப்படும் கோபம் வருங்கால சண்டைகளுக்கு உரமாகும் என்பது பிக்பாஸின் கணக்கு. 

காஜல் கூண்டில் நிற்க வழக்கறிஞராக விசாரணையைத் துவங்கினார் சிநேகன். ‘வீட்டு வேலைகளில் முழு ஈடுபாட்டோடு செய்யவில்லை என்று புகார் வந்திருக்கிறதே?’ என்று முதல் குற்றச்சாட்டைத் துவக்கினார் சிநேகன். ‘அப்படியெல்லாம் இல்லை. சரியாகவே செய்கிறேன்’ என்று மறுத்தார் காஜல்.

சிநேகன் இந்த சமயத்தில் ஒரு தவறு செய்தார். அவை அநாமதேயக் கடிதங்கள் என்கிற ரகசியம் காப்பாற்றப்படும் நிலையில்தான் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் ‘இந்தக் கடிதத்தை எழுதியவர் சாட்சி சொல்ல வரலாம்’ என்று கூறி விட்டார். பின்பு கமல் திருத்தினாலும் சுஜாதான் அந்தக் கடிதத்தை எழுதியது என்பது அவர் சாட்சிக்கு வந்தவுடன் வெளிப்படையாகத் தெரிந்தது. 

ஏற்கெனவே இரண்டு பேருக்கும் ஆகாது. எனவே உரையாடல் சூடாக தொடர்ந்தது. காஜல் வீட்டுப் பணிகளை சரியாக செய்வதில்லை என்பதற்கான உதாரணம் ஒன்றை சுஜா சொல்ல, காஜல் கண்கலங்கத் துவங்கி விட்டார். 

நாம் கவனித்தவரை, பிக்பாஸ் விளையாட்டை காஜல் ஈடுபாட்டுடன் விளையாடுவதில்லை. சில Task-களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக சொல்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் கடந்த வார தொகுப்புகளை மற்றவர்களிடம் சொல்கிறார். சுஜா மீது பிரத்யேக வெறுப்புடன் இருக்கிறார் என்று பலவற்றைச் சொல்லலாம். 

1_11404.jpg

பதிலுக்கு காஜல் விசாரணையில் இறங்கினார். ஓவியா மாதிரி நகலெடுப்பது, வலி என்று புலம்பி விட்டு விளையாட்டின் போது ஆக்ரோஷமாக ஈடுபடுவது, பேய் பார்த்து பயப்படுவது போல நடிப்பது போன்ற குற்றச்சாட்டுக்களை சுஜா உண்மையாகவே எதிர்கொண்டார். தகுந்த பதில்களும் தந்தார். 

**
கணேஷ் கூண்டில் நிற்க, வையாபுரி வக்கீலாக மாறி உணவுப் பிரச்னையை கையில் எடுத்தார். பாவம் கணேஷ். 

ஆனால் நடைமுறையில் கவனித்தால் வீட்டு ஆண்களிடம் பொதுவாக இந்தப் பிரச்னை உண்டு. மனைவி உள்ளிட்ட இதர நபர்களுக்கு போதுமான தொடுவுணவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் எல்லாவற்றையும் தின்று தீர்த்து ‘ஏவ்’ என்று கைகழுவச் சென்று விடுவார்கள். எல்லோருக்கும் இருக்கிறதா என்று விசாரிப்பதும் உறுதிப்படுத்திக் கொள்வதும் நல்ல வழக்கம். 

கயிறுகள் கட்டப்பட்டு பந்து சேகரிக்கும் போட்டியில் கணேஷ் துரோகம் செய்து விட்டார் என்பது ஆரவ், சிநேகனின் குற்றச்சாட்டு. இதற்கு கணேஷ் சரியாக பதிலளித்தார். 

வையாபுரி விவாதத்தை தொகுத்தளிக்கும் போது கணேஷை அதிகம் விட்டுத்தராமல் பேச, ‘வையாபுரி தலைமையில் கணேஷிற்கு நடந்த பாராட்டு விழா இத்துடன் முடிந்தது’ என்று சூசகமாக கிண்டலடித்தார் கமல்.

‘கட்டிப்பிடி பாடலை ஏன் பாடீனீர்கள்? என்கிற சுஜாவின் கேள்வியை இம்முறையும் வையாபுரி நியாயமாக எதிர்கொள்ளவில்லை. எதையோ சத்தமாக பேசி சமாளித்தார். அநியாயம். 

‘உங்களுடைய உடல் பலவீனம் காரணமாக உடலுழைப்பு தொடர்பான taskகளை நீங்கள் செய்ய மறுப்பது சரி. மற்றவர்களையும் discourage செய்கிறீர்களே?’ என்கிற கேள்வியையும் வையாபுரி சரியாக எதிர்கொள்ளவில்லை. தான் பிக்பாஸ் போட்டிக்கு வந்த கதையை மட்டும் சற்று உருக்கமாகச் சொன்னார். பிந்துவிற்கு மட்டும் பிரத்யேகமாக அதிக உதவிகள் செய்கிறீர்களே? என்கிற கேள்விக்கும் எதையோ பதில் சொன்னார். 

மற்றபடி வக்கீல் வண்டு முருகனின் இதர சில்லறை பஞ்சாயத்துக்கள். வழவழா பதில்கள். 

**

ஆரவ்வின் மருத்துவ முத்தம் விவகாரத்தை மீண்டும் மீண்டும் கிளறிக் கொண்டிருப்பது நியாயமே அல்ல. அதிலும் இன்னொரு தரப்பான ஓவியா போட்டியை விட்டு விலகி விட்ட நிலையில் ஆரவ்வை மட்டும் இப்படி  நிற்க வைத்து கேள்விகள் கேட்பது முறையானதல்ல. 

எந்தவொரு இடத்திலும் ஓவியாவை தான் காதலிப்பதாக சொல்லவில்லை என்று அடித்துச் சொல்கிறார் ஆரவ். என்றாலும் ஏதோவொரு வகையில் ஓவியா பிரச்னைக்கு தான் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் ஒப்புக் கொள்கிறார். இந்த நிலையில் இதை மேலும் கிளறுவது நியாயமாகப் படவில்லை. 

இந்த நோக்கில்தான் ஒரு தனிநபரின் அந்தரங்கம் மிகையாக கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்ட காரணத்திற்காகவே அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் harass செய்ய முடியாது என்பதை பிக்பாஸ் டீம் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களின் வணிகத்தை பரபரப்பாக்கும் என்பதால்தான் உற்சாகமாகச் செய்கிறார்கள். சமீபத்தில் நிகழ்ச்சியில் தொய்வு ஏற்படுவதால் வேறுவழியின்றி இந்தப் பழைய விஷயத்தை தூசு தட்டி எடுத்திருக்கிறார்களோ என்னமோ. 

சிறந்த வழக்கறிஞராக வையாபுரியும், கேள்விகளை சிறப்பாக எதிர்கொண்டவராக கணேஷூம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பார்வையாளர்களின் பங்களிப்பும் இதில் இருந்தது. பச்சை மற்றும் சிவப்பு அட்டையை ஒருமாதிரி தோராயமாக காட்டினார்கள். ஆனால் என்னளவில் இரண்டு விஷயங்களிலும் சிநேகன்தான் சிறப்பாக செயல்பட்டார் என்று சொல்ல முடியும்.

4_11090.jpg

 

ஆண்டவர் இன்று ஏதோ குறும்படம் காட்டப் போகிறாராம். அது ஆரவ் தொடர்பானதாக இருக்குமா? வேறென்ன, அதற்காகவாவது இன்று இரவு 08.30 மணிக்கு குத்த வைத்து உட்கார்ந்து விட வேண்டியதுதான். அப்படியே ரைசாவின் வெளியேற்றமும் நிகழும் என யூகம். பார்ப்போம்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/100445-bigg-boss-tamil-updates-day-62--at-last-kamal-becomes-judge.html

Link to comment
Share on other sites

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்லப்போகும் ஓவியா ; மகிழ்ச்சியில் இரசிகர்கள்.!

 
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்லப்போகும் ஓவியா ; மகிழ்ச்சியில் இரசிகர்கள்.!

தனியார் தொலைக்காட்சியொன்று நடத்திவரக்கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான, சுதந்திரமான மனிதம் நிறைந்த குழந்தைத்தனமான செயல்பாடுகளால் அதிகப்படியான இரசிகர்களைப் பெற்றவர் நடிகை ஓவியா. ஓவியாவின் உண்மையான செயற்பாடுகளால் திரைத்துறையிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிகப்படியான ஆதரவையும் பெற்றவர். கடந்த சில வாரங்களுக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகும் ஓவியாவுக்கு ரசிர்கர்களின் ஆதரவு குறையவில்லை. நிகழ்ச்சியும் முன் போல பார்வையாளர்களை பெறவில்லை.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ப்ரோமோவில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜூலி, பரணி, சக்தி, ஆர்த்தி உள்ளிட்ட அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவுள்ளதாக காட்டப்படுகிறது.

இறுதியாக, ஓவியா வரவுள்ளாரா என ரசிகர்கள் ஆவலுடன் ஓவியாவின் பெயரை ஆரவாரமாக உச்சரிக்கையில், சஸ்பென்ஸ் வைத்து முடிகிறது அந்த ப்ரோமோ.

ஒருவேளை, ஓவியாவின் வருகை நிகழ்ந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சி மீண்டும் சூடு பிடிக்க கூடும்.

https://news.ibctamil.com/ta/cinema/thalaivi-oviya-will-enter-bigg-boss-house-today

 

Link to comment
Share on other sites

ஆரவ்வுக்கு பதிலடியாக கமல் வெளியிடவுள்ள குறும்படம்: மீண்டும் புத்துணர்ச்சி பெறுமா பிக்பாஸ்?

 

 
bigboss

ஆரவ்வின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக மீண்டும் குறும்படம் ஒன்றை வெளியிடவுள்ளார் கமல். இதனால் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி புத்துணர்ச்சி பெரும் சூழல் உருவாகியுள்ளது.

ஓவியா, ஷக்தி, காயத்ரி ஆகியோர் வெளியானதிலிருந்தே, 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தன்னுடைய சுவாரஸ்யத்தை இழந்து வருகிறது. பிந்து மாதவி, சுஜா வாரூணி, ஹரிஷ், காஜல் ஆகியோர் புதிதாக 'பிக் பாஸ்' வீட்டிற்குள் அனுப்பப்பட்டாலும் மக்களிடையே யாருமே எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை.

கடந்த வாரம் 'பிக் பாஸ்' போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட 'கொலையாளி' பணி மட்டுமே கொஞ்சம் மக்களிடையே சுவாரஸ்யத்தை உண்டாக்கியது. ஆனால், பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை.

வாரத்தின் இறுதி நாட்களில் கமல், 'பிக் பாஸ்' போட்டியாளர்களோடு பேசி வருகிறார். இதில் நேற்றைய (ஆகஸ்ட் 26) நிகழ்வில் போட்டியாளர்களுடன் கமல் பெரிதாகப் பேசவில்லை. அவர்களுக்கென்று ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி, அவர்களைப் பேசவிட்டு தான் நீதிபதியாக அமர்ந்து கொண்டார். இந்த வாரம் 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து ரைசா வெளியேறுவார் என்று தெரிகிறது

மேலும், சினேகனுக்கு, ஆரவ்விற்கு சில நாட்களுக்கு முன்பு நடந்த சண்டையில், ஆரவ் சினேகனிடன் தான் மன்னிப்புக் கேட்டதாக தெரிவிக்கிறார். ஆனால், கமலோ கேட்கவில்லை என்று தெரிவிக்கிறார். இது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில், ஆரவ்விற்கு ஒரு குறும்படம் காட்டுவதாக கமல் தெரிவித்துள்ளார்.

 

ஓவியா - ஜூலி இருவருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், குறும்படமொன்றை வெளியிட்டு ஓவியாவின் பக்கம் தான் நியாயம் என்று கமல் நிரூபித்தார். அந்த வகையில் மீண்டும் குறும்பட யுத்தியை கையில் எடுத்திருப்பதால் மீண்டும் சுவராஸ்யமாகி இருக்கிறது 'பிக் பாஸ் நிகழ்ச்சி'. இந்த நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 27) ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும், இன்று 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜூலி, சக்தி, பரணி ஆகியோர் கமலுடன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கலந்துரையாடவுள்ளார்கள். மேலும், இன்னொருவரும் கலந்து கொண்டுள்ளார். இன்னும் வேறு யாராவது இருக்கீங்களா என்று கேட்க, 'ஓவியா' என்று பார்வையாளர்கள் கத்துவது போன்று இன்றைய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஓவியா கலந்து கொண்டாரா, என்ன பேசினார், ஆரவ்வின் குற்றச்சாட்டு என்னவானது, ரைசா வெளியேற்றப்படுவாரா உள்ளிட்ட சுவாரஸ்யங்களுடன் இந்த வாரம் முடியப் போகிறது. வரும் வாரத்திலிருந்து இந்த சுவாரஸ்யம் தொடருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19570755.ece

Link to comment
Share on other sites

“இது எளிய பிழை... அயோக்கியத்தன அரசியல்வாதிகளை ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்?!” - 'ஆங்ரி பாஸ்' கமல் - (63-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

கமலின் தலைமையில் நீதிமன்றக் காட்சிகள் முடிந்த பிறகு பிக்பாஸ் வீட்டில் என்ன நிகழ்ந்தது என்று காட்டப்பட்டது. 

ஆரவ் இரண்டு விஷயங்களுக்காக மிக கோபமாக இருக்கிறார். ஓவியா விஷயம் மற்றும் சிநேகனிடம் மன்னிப்பு கேட்ட விஷயம். அவருடைய பிம்பம் தொடர்ந்து தவறாக சித்தரிக்கப்படுகிறதோ என்கிற கவலையும் பதற்றமும் அவரைத் தொற்றிக் கொண்டிருக்கிறது. 

Bigg Boss

நேற்றைய கட்டுரையில் சொல்லப்பட்டதுபோல ஓவியா விஷயத்தில் ஆரவ்வை மறுபடி மறுபடி பஞ்சாயத்திற்கு இழுப்பது அதீதமானது. எனவே அதற்காக ஆரவ் கோபப்படுவது நியாயமே. இதில் இன்னொருவரும் (ஓவியா) சம்பந்தப்பட்டிருப்பதால் இதை கிளறிக் கொண்டேயிருப்பது இருவரையுமே பாதிக்கும். பிக்பாஸிற்கும் நமக்கும் மெல்ல அவல் வேண்டுமென்பதற்காக ஒருவரை தொடர்ந்து உளைச்சலாக்குவது அநீதி.

இது பற்றி புலம்பிக் கொண்டிருந்த ஆரவ்வை கணேஷ் ஆற்றுப்படுத்தினார். என்றாலும் ஆரவ்வின் கோபம் அடங்கவில்லை. ‘என்னை தொடர்ந்து அவமானப்படுத்துவது முறையல்ல, இங்கிருந்து வெளியேறவும் தயாராக இருக்கிறேன்’ என்று பிக்பாஸிடம் நேரடியாக கோபப்பட்டார். கொலையாளி task-ல் பிக்பாஸிற்கு மிக விசுவாசியாக இரண்டு நாட்கள் சிரமப்பட்டிருந்தும் இப்படி நடக்கிறதே என்று அவர் ஆதங்கப்பட்டிருக்கலாம். 

அடுத்த விஷயம் சிநேகனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு காயத்ரி மற்றும் ரைசாவிடம் தான் மன்னிப்பு கேட்கவில்லை என்று சொன்னது. இது ஒளிபரப்பாகும் போதே பலரும் கவனித்த விஷயம்தான். ஆரவ் இதுபற்றி தொடர்ந்து புகார் சொல்லிக் கொண்டிருந்ததால் ‘குறும்படம்’ மூலம் அவருடைய பிழையை நிரூபித்தார் கமல். 

இந்த விஷயத்தில் ஆரவ் மனதறிந்து பொய் சொன்னார் என்று சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். இது எல்லோருக்குமே நடக்கும். நாம் ஒருவர் மீது கோபமாக இருக்கும் போது அவர் சமாதானத்திற்கு அழைக்கும் போது நாகரிகத்திற்காகவும் சம்பிரதாயத்திற்காகவும் அவரது மன்னிப்பை ஏற்போம். ஆனால் மனதிற்குள் அந்த மன்னிப்பு உண்மையாக நிகழாது. 

Bigg Boss

எனவே, இந்தச் சம்பவத்தை மற்றவர்களிடம் பகிரும்போது தம்மை உயர்வாகவும் எதிர்தரப்பை ‘பணிந்து விட்டார்’ என்பது போலவும் சொல்லிக் கொள்வோம். தாம் சொன்ன மன்னிப்பு உண்மையானதல்ல என்பதால் மனதில் அது பதிந்திருக்காது. மட்டுமல்ல, பெண்களின் முன்னால் பேசும் போது ஆண்களின் தோரணையே வேறு விதமாக மாறி விடும். பெண்களின் எதிரில் அவமானப்பட ஆண்கள் விரும்புவதில்லை. காயத்ரி மற்றும் ரைசா எதிரில் தாம் பதிலுக்கு மன்னிப்பு கேட்ட விஷயத்தை ஆரவ் மறைக்க நினைத்திருக்கலாம். 

இது சிறிய விஷயம்தான். முதலில் இதற்கு விளக்கமளிக்க நினைத்தார் ஆரவ். ஓவியா விஷயத்தில் சிநேகன் தன்னைக் குறித்து விதம் விதமாக சொல்லிக் கொண்டிருக்கும் கோபம் ஆரவ்விற்கு இருக்கிறது. எனவேதான் மனதார பதில் மன்னிப்பை ஆரவ்வால் சொல்ல முடியவில்லை என்று யூகிக்கிறேன்.

ஆனால் ஆரவ் அளிக்க முற்பட்ட விளக்கத்தை கமல் ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட விஷயம் தெளிவுப்படுத்தப்பட்ட விட்டது என்றதோடு இந்தப் பஞ்சாயத்தை முடிக்க நினைத்தார். இல்லையெனில் அது சங்கிலித் தொடராக வெவ்வேறு புகார்களுக்கு இட்டுச் செல்லும். 

தன்னைப் பற்றி ஒருமையில் ஆரவ் சரமாரியாக திட்டிக் கொண்டிருந்ததை சிநேகன் சற்று திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அதனால்தான் ஆரவ் மறுபடியும் வந்து மன்னிப்பு கேட்ட போதும் சலனமின்றி இருந்தார் போல. 

**

கமலின் நுழைவிற்கு முன்னால் காட்டப்பட்ட காட்சிகளில் சுஜா ஒருபுறம் தனிமையில் புலம்பிக் கொண்டிருந்தார். ‘என் வலியைப் பற்றி எவரிடமும் தெரிவிக்கவில்லை. பின்பு ஏன் நான் நடிக்கிறேன்’ என்று சொல்கிறார்கள் என்பது அவருடைய ஆதங்கம். இன்னொரு புறம் ‘அவர் நடிக்கிறாரோ’ என்கிற சந்தேகம் காஜலுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ‘அவளைப் பார்த்தா  கோவமாவும் இருக்கு, பாவமாவும் இருக்கு. அவளோட சொந்த விஷயங்களைக் கிளறிட்டோமோன்னு’ என்று வருந்துகிறார். 

Bigg Boss

கமல் நுழைந்ததும் நட்பின் உன்னதங்களைப் பற்றி அற்புதமாக பேசினார். சசிகுமார் திரைப்படங்களில் கூட நட்பைப் பற்றி இத்தனை பேசியிருக்க மாட்டார்கள். ‘குடும்பம், அரசு என்று அனைத்து நிறுவனங்களிலும் இருப்பது துரோகம். அவற்றை இணைக்கும் பசையாக இருப்பது நட்பு. ரத்த உறவுகள் பொதுவாக சொத்து உறவுகளாக இருக்கின்றன. சுத்த உறவென்பது நட்புதான் என்று அடுக்கு மொழியில் கலக்கினார். 

‘நேத்து கோர்ட்ல நிறைய விஷயம் பேசினோம். இது விஷயமா சொல்ல ஏதாவது இருக்கா? அதாவது appeal செய்ய விரும்பறீங்களா? என்றார் கமல். முன்பு கோபமாக கத்திக் கொண்டிருந்த ஆரவ், உடனடியாக எதிர்வினை செய்வார் என்று பார்த்தால்  என்ன காரணத்தினாலோ அமைதியாக இருந்தார்.

ஆச்சர்யகரமாக சுஜா ‘முறையீட்டு’ மனுவை முதலில் கொடுத்தார். ‘நான் ஓவியாவை நகல் எடுக்கறேன்னு சொல்லிட்டே இருக்காங்க. நான் நானாத்தான் இருக்கேன். என் நண்பர்களுக்குத் தெரியும். யாரும் இங்க என் கிட்ட சரியா பேசமாட்றாங்க. கண்ணாடி பார்த்து பேசறது எப்பவுமே என் பழக்கம்’ என்றார். 

‘கண்ணாடி உங்கள் பிம்பத்தை மட்டுமே காட்டும். நண்பர்கள், எதிரிகளை கண்ணாடிகளாக வைத்துக் கொள்ளுங்கள்’  என்று சுஜாவின் பிரச்சினையை சரியாக சுட்டிக் காட்டினார் கமல்.

சுஜா தந்த துணிச்சலில், அதுவரை சொல்லலாமா வேண்டாமா என்று துடித்துக் கொண்டிருந்த ஆரவ் கைதூக்கினார். கமல் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ‘சொல்லுங்க. ஆரவ். உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்’

“ஓவியாவிற்கு இயன்ற அளவிற்கு ஆதரவா இருந்திருக்கேன். கடைசி சமயங்கள்ல ஏற்பட்ட சில குழப்பங்களால விலகி நிற்க வேண்டியதா இருந்தது. அவங்க வெளிய போறதுக்கு ஒருவகையில் நானும் காரணமோ என்கிற குற்றவுணர்ச்சி இருக்கு. அடுத்த விஷயம். சிநேகன் கிட்ட மன்னிப்பு கேட்டேன். ஆனால் இந்தப் பக்கம் வந்து நான் கேட்கலைன்னு சொல்லலை.’ என்றார் பிடிவாதமாக.

Bigg Boss

குறும்படம் காண்பிக்கப்பட்டது. ஏற்கெனவே குறிப்பிட்ட படி இது நினைவுப்பிசகு. காட்சிப்பிழை மாதிரி நினைவுப்பிழை. மனம் நிகழ்த்தும் விளையாட்டு. எனவே இந்த சந்தேகத்தின் பலனை ஆரவ்விற்குத் தரலாம்.

**

வெறும் கசப்புகளையே தர விரும்பாமல் இனிப்பையும் ஊட்ட விரும்பினார் கமல். ‘யார் கொலையாளி’ task-ல் ஆரவ், ஹரீஷ், வையாபுரி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டு தெரிவித்தார். பார்வையாளர்களையும் கைத்தட்டி ஊக்குவிக்கச் சொன்னார். ‘கைத்தட்டல்தான் ஒரு கலைஞனுக்கு அதிக சந்தோஷத்தை தரும்’ என்று அவர் சொன்னது பரிசுத்தமான உண்மை. 

 

வெளியேற்றப் படலம் இம்முறை வித்தியாசமாக நிகழ்ந்தது. பட்டியலில் இருந்தவர்களை தயாராக இருக்கச் சொல்லி விட்டு ரைசாவை மட்டும் வாக்குமூல அறைக்கு அழைத்தார். நுட்பக் கோளாறு காரணமாக கமல் பேசுவது ரைசாவிற்கு கேட்காததால் அதைப் பற்றி அவர் சைகையில் சொல்ல பதிலுக்கு கமலும் அப்படியே சைகையில் குறும்பு செய்தது ஜாலி கலாட்டா.

‘வெளியே வாம்மா மின்னல்’ என்று அழைக்கும் போதுதான்தான் வெளியேற்றப்பட்ட விஷயம் ரைசாவிற்கு உறைத்தது. இதர போட்டியாளர்களிடம் அவர் நேரடியாக விடைபெற முடியாதது ஒரு துரதிர்ஷ்டம்தான். 

ரைசா வந்து அமர்ந்ததும் ‘அந்த நாற்காலியை எடுத்துட்டு வாங்கப்பா’ என்றார் கமல். வேறு எவரோ வந்து அமரப் போகிறார்கள் என்று பார்த்தால் படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு நாய் பொம்மையை ICU-ல் இருந்து தூக்கி வந்தார்கள். இந்தக் குறும்பு எவருடைய யோசனை என்று தெரியவில்லை. ரகளையான கலாட்டா. ரைசா ரசித்து சிரித்தார்.

‘உங்களுக்காக குரைச்சு குரைச்சு.. இந்த நாய் படுத்த படுக்கையா ஆயிடுச்சு” என்று ரைசா பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருந்ததை கிண்டலாக இடித்துரைத்தார் கமல்.

Bigg Boss

‘பிக்பாஸ் வீட்டில் இருந்ததின் மூலம் கற்றுக்கொண்ட அனுபவம் என்ன?’ என்ற கேள்விக்கு ரைசா அளித்த பதில் முக்கியமானது. ‘வெளியே இருந்த போது நிறைய பொருட்களை வீணாக்குவேன். ஆனால் வீட்டின் உள்ளே, இருக்கிற பொருட்களை வைத்துத்தான் சமாளிக்க வேண்டும் என்கிற நெருக்கடியினால் சிக்கனமாகவும் கவனமாகவும் பொருட்களை கையாள்வேன்’ என்பதில் நமக்கு பாடம் உள்ளது. 

‘இந்த வீட்டில் அதிகார தலைமையாக யார் இருக்கிறார்கள்?’ என்கிற கேள்விக்கு ‘சிநேகன்’ என்று பதிலளித்தார். அதற்கு முன்னால் ‘சக்தி’. இந்தப் போட்டியில் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ள போட்டியாளராக கணேஷை யூகித்தது ரைசாவின் சரியான தேர்வு. ‘ஜூலி முன்னே fake-ஆ இருந்தாங்க. இப்ப சுஜா’.  ஒப்பனையில் அதிக நேரத்தை செலவிடும் ரைசாவின் பழக்கத்தை சுட்டிக்காட்டிய கமல் ‘இயல்பான அழகுதான் உண்மையான அழகு’ என்றார். 

‘உள்ளே போன பொண்ணுக்கு என்ன ஆச்சோ?’ என்று இதர போட்டியாளர்கள் உண்மையாகவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ‘கட்டி வெச்சு உதைக்கறாங்களோ’ என்று அந்த நிலையிலும் தன் குறும்பை வெளிப்படுத்தினார் வையாபுரி.

அவர்களுக்கு வியப்பளிக்கும் வகையில் ரைசாவின் வெளியேற்ற அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது. அனைவரும் முதலில் திகைப்படைந்தார்கள். பிறகு நெகிழ்வுடன் விடைதந்தார்கள். ‘என்னை prank செஞ்சதுக்கு இப்பவாவது வருந்தறீங்களா?’ என்று தம் கணக்கை முடித்துக் கொண்டார் சுஜா. ‘என்னாலதான் நீ வெளில போற’ என்று காஜல் சம்பந்தமில்லாமல் கலங்கினார்.

‘நாயகன்’ திரைப்படத்தில் கமல் சரண்யாவை திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சியில் இருக்கும் போது கூட இருக்கும் ஜனகராஜூம் தொடர்பில்லாமல் கமலின் தோளில் சாய்ந்து நெகிழ்வார். ‘என்னடா’ என்கிற மாதிரி கமல் பார்ப்பார். அவ்வாறே ரைசாவும் உணர்ந்தார் போலிருக்கிறது. ‘இவங்க வேற டிராக்ல போயிட்டிருக்காங்க’ என்றவர் ‘ஃபீல் பண்ணாதீங்க. It’s a game. ரொம்ப சீரியஸா இருக்காங்க. ஜாலியா விளையாடுங்க’ என்று உபதேசம் தந்தார்.

ரைசா பற்றிய குறும்படம் காண்பிக்கப்பட்டது. உண்மையிலேயே அதைப் பார்த்து நெகிழ்ந்து போனார் ரைசா. பார்வையாளர்களும் ரைசாவின் பிரிவை அழுத்தமாக உணரும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது அந்தக் காணொளி. குறிப்பாக ரைசா தலைவியாக இருந்த சமயத்தில் ‘பகல்ல தூங்கக்கூடாது’ என்று மற்றவர்களை எழுப்பிய காட்சி காண்பிக்கப்பட்ட உடனேயே ‘ரைசா’ விதம் விதமாக தூங்கும் காட்சிகளை சேர்த்தது பயங்கர குறும்பு. விழுந்து விழுந்து சிரித்தார் ரைசா. 

**

ரைசாவின் வெளியேற்றப் படலத்தையொட்டி அவருடைய இதுவரையான சித்திரத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போது அவர் யாரென்றெ பலருக்குத் தெரியவில்லை. அவர் பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்திருந்த விஷயமெல்லாம் பிறகுதான் தோண்டி பார்க்கப்பட்டது. ‘வேலையில்லா பட்டதாரி 2’ல் அவர் தோன்றிய முதல் காட்சியில் ‘ரைசா’ என்று பார்வையாளர்கள் கத்தி மகிழ்ந்தார்கள். 

Bigg Boss

ஆக… மாடல் என்கிற பொதுவான அடையாளத்தைத்தாண்டி ரைசா விரும்பிய படி அவருக்கான தனி அடையாளத்தை பெற்று விட்டார். பிக்பாஸ் வீட்டின் ஆரம்பக் காலக்கட்டத்தில் ரைசா பெரும்பாலும் தலையாட்டி பொம்மையாகவே இருந்தார். எவர் தரப்பிற்கும் ஆதரவாக இல்லாமல் பாதுகாப்பாக இந்த விளையாட்டை விளையாடினார். அதனாலேயே வெளியேற்றப்படும் பட்டியலில் அதிகம் இடம்பிடிக்காமல் இருந்தார். 

பிறகு நடந்து மாற்றங்களினால் சர்ச்சைகள் அவரை மெல்ல உள்ளிழுத்துக் கொண்டது. குறிப்பாக ஓவியாவின் வெளியேற்றம் அவரை மிகவும் பாதித்தது. இனிமேலும் தலையாட்டி பொம்மையாக இல்லாமல் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டும் என்கிற மாற்றத்திற்கு வந்தார். இதனால் காயத்ரியுடன் மோதல் ஏற்பட்டது. தலைவி பொறுப்பை அவர் ஏற்றிருந்ததும் ஒரு காரணம். தலைவியாக இருந்த சமயத்தில் பொறுப்பாக செயல்பட்டார். 

தலைவி பதவி போனதும் மறுபடியும் சோம்பலுக்குள் விழுந்தார். காயத்ரி உடனான சர்ச்சைகள் அவரை பாதித்தன. பிறகு சிநேகனுடன் கருத்து வேறுபாடு. பல சமயங்களில் பிக்பாஸூடன் சண்டை போட்டார். குறிப்பாக பகல் நேரங்களில் தூங்குவதற்காக.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரைசா ஒரு முக்கியமான போட்டியாளராக இதுவரை இருந்திருக்கிறார். ஹரீஷ் குறிப்பிட்டதுபடி ரைசாவின் அந்த பிரத்யேகமான தோரணைகளை நாம் இனி காண முடியாது என்பது சோகம்தான். துவக்கத்தில் எரிச்சலையூட்டிய அந்த தோரணைகள் பிறகு பிடித்துப் போக ஆரம்பித்து விட்டது. ‘அடப்போங்கய்யா’.

Good bye ரைசா.

**

அடுத்து ஒரு கலந்துரையாடல். இனிய ஆச்சர்யம் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற தாரக மந்திரத்தை நிரூபித்து விட்டார் பிக்பாஸ்.

Bigg Boss

ஜூலி, ஆரத்தி, சக்தி, காயத்ரி, பரணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். பரணிக்கு பிரத்யேகமான வரவேற்பை தந்தனர் பார்வையாளர்கள். ‘உங்க மூலமா உலக வெளிச்சம் என் மேலயும் பட்டு விட்டது சார்’ என்று கமலை நோக்கி நெகிழந்தார் பரணி.

‘விருமாண்டி கமலாக உள்ளே வந்த நான் பாபநாசம் கமல் போல என்னை உணர்ந்து வெளியே சென்றேன்’ என்று கமல் நடித்த சினிமா பாத்திரங்களையே மேற்கோள் காட்டி நெகிழ்ந்தார் சக்தி. ‘இனிமே கோபத்தைக் குறைச்சுப்பேன்”

புற்றுநோய் மையத்திற்காக தன் தலைமுடியை ஆரத்தி தியாகம் செய்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ‘தலைமுடிதான் அழகு என நினைக்காமல் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியே வாருங்கள்’ என்ற ஆரத்தியின் முன்னுதாரணச் செயல் சிறப்பு. “நான் வீட்டுக்குப் போனவுடனே அப்பாதான் அழுதார். ‘நான் ஏதாவது தப்பா பேசிட்டனான்னு கேட்டேன். ‘நீ சொன்ன விஷயங்கள் தப்பில்லம்மா. ஆனா சொன்ன விதம்தான் தப்பு’ என்று சுட்டிக்காட்டினார். இனி என்னை மாற்றிக் கொள்ள முயல்வேன்’ என்றார் ஆரத்தி. தலைக்கனம் இருக்கக்கூடாது என்பதற்காக முடியை இழந்து விட்டேன் என்று தன் மொட்டைத்தலையை காட்டினார். 

Bigg Boss

முகம் தெரியாது என்கிற செளகரியத்தில் சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக திட்டுகிறவர்களை கமல் கண்டித்தார். ‘விமர்சனங்கள் தேவை. ஆனால் அவற்றில் தரம் குறையக்கூடாது’ என்பதை மீண்டும் நினைவுப்படுத்தினார். 

காயத்ரியிடம் அதிக மாற்றம் இருப்பது போல் தெரியவில்லை. ‘இனிமெல் என்னை எவராவது தூண்டினால், கோபப்படுத்தினால் எதிர்வினையாற்றாமல் புன்னகைக்க முயல்வேன்’ என்று அவர் சொன்னது சம்பிதாயமாகத் தெரிந்தது. இந்த நிகழ்ச்சியினால் உண்மையிலேயே அவர் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டிருந்தால் மகிழ்ச்சி. 

‘எங்க வீட்டுப் பிள்ளையா நெனச்சுதாம்மா உன்னை அனுப்பினோம். இப்படி பொய் சொல்லிட்டியே’ என்று மக்கள் நினைத்தார்கள் – தாம் செய்த தவறுகளைப் பற்றி ஜூலி சொன்ன விதம் இவ்வாறு இருந்தது. 

பரணிக்கும் ஓவியாவிற்கும் தான் இழைத்த சறுக்கல்களைப் பற்றி மனப்பூர்வமான முறையில் மன்னிப்பு தெரிவித்தார் ஜூலி. ஓவியாவிடமும் தொலைபேசியில் மன்னிப்பு கேட்டிருந்ததாக சொல்லியது சிறப்பு. 

“இவர்கள் சாதாரணமானவர்கள். இவர்கள் செய்தது சாதாரணமான எளிய பிழைகள். இவர்களை இப்படி போட்டு வாங்குகிறீர்கள். இதைவிடவும் பெரிய அயோக்கியத்தனங்கள் செய்யும் அரசியல்வாதிகளை விட்டு வைத்திருக்கிறீர்களே” என்று கமல் வெடித்தார். நியாயமான கோபம். 

‘இந்தக் கோபங்களை அப்படியே பாதுகாப்பாக வைத்திருங்கள். அதைச் சரியான முறையில் உபயோகிக்க வேண்டிய காலம் ஒன்று வரும். மேடை கிடைத்து விட்டது என்பதற்காக அறிவுரை சொல்லவில்லை. ஆம். இது அறிவுரைதான். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். மன்னியுங்கள். அவசியமான இடத்தில் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள்’ என்று கமல் பொங்கியது நியாயமானதொன்று. 

Bigg Boss

**
மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் மறுபடி யார் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வீர்கள்? என்ற கேள்விக்கு காயத்ரி உடனேயே மறுத்து விட்டார். ‘சில பேரை trigger பண்றதுக்கு வேணா போவேன்’ என்று சக்தி குழப்பமாக பதிலளித்தார்.  பரணியின் சில தனிப்பட்ட பிரச்சினைகளால் இப்போது அவர் செல்ல முடியாத சூழலில் இருக்கிறார். அது சரியான பிறகு வருவதற்கு தயாராக இருக்கிறார். 

‘இது நாங்க உருவாக்கின வீடு. இப்ப யார் யாரோ கிரகப்பிரவேசம் நடத்திட்டிருக்காங்க. மேல இருந்து வந்து குதிக்கறாங்க’ அதனால வாய்ப்பு கிடைத்தால் நான் செல்வேன்’ என்றார் ஆரத்தி. ஆரத்தியின் தலைக்கனம் அப்படியொன்றும் குறைந்தது போல் தெரியவில்லை. 

‘மக்கள் விருப்பப்பட்டு அனுப்பினால் தாம் செல்லத் தயார்’ என்றார் ஜூலி.

வெளியேறிய போட்டியாளர்கள் சிலர் மறுபடியும் உள்ளே சென்றால் அந்தக் கலவையின் வெளிப்பாடு சுவாரசியமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. ஆரத்தியும் ஜூலியும் மாறியிருக்கிறார்களா, அப்படியேதான் இருக்கிறார்களா என்று தெரிந்து விடும். இந்த இருவரும்தான் மறுபடியும் செல்வார்கள் என்று தெரிகிறது. 

அந்தக் கலந்துரையாடலில் ஓவியா இல்லாத குறையைப் போக்க, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு சமூகத்திற்கு ஓவியா அளித்த செல்ஃபி வீடியோவை சுருக்கி ஒளிபரப்பினார்கள்.

‘நான் ரொம்ப நல்லா இருக்கேன். திரும்பவும் பிக்பாஸ் போட்டியாளராக வர மாட்டேன். நிறைய பட வாய்ப்புகள் வந்திருக்கு’ போன்ற விஷயங்களோடு வீடியோவை நிறுத்திக் கொண்டார்கள். ‘இந்த நிகழ்ச்சியை ஏணியாக பயன்படுத்திக் கொண்டார் ஓவியா. ஏணியிலேயே தொடர்ந்து நிற்க முடியாது. அவர் மேலும் உயர வாழ்த்துகள்’ என்றார் கமல்.

‘பிக்பாஸால் ஓவியாவிற்கு அல்ல, ஓவியாவினால்தான் பிக்பாஸிற்கு புகழ்’ என்கிற மீம் நினைவிற்கு வந்தது. ஆனால் அதை ஏற்க பிக்பாஸ் தரப்பு தயாராக இல்லை போலிருக்கிறது.

அந்த வீடியோவை பலரும் பார்த்திருப்பார்கள்தான் என்றாலும் இணைய வசதி இல்லாதவர்களுக்காக அதை முழுமையாக ஒளிபரப்பியிருக்கலாம். ‘எனக்காக எவரையும் திட்டாதீர்கள். ஒருவகையில் அவர்களும் பாவம்தான்.’என்பது உள்ளிட்டு ஆரத்தியைப் போன்று ஓவியாவும் புற்றுநோய் நோயாளிகளுக்காக தன் தலைமுடியை தியாகம் செய்த பகுதியையும் இணைத்து ஒளிபரப்பியிருக்கலாம். 

 

எவர் புதிய போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டில் தங்களின் மீள்வருகையை நிகழ்த்தப் போகிறார்கள் என்பது இன்று தெரிந்து விடும்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/100487-bigg-boss-tamil-updates-day-63---kamal-haasan-gets-angry-against-politicians.html

Link to comment
Share on other sites

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஜூலி, ஆர்த்தி ; வெடிக்கப்போகும் கலவரம்.!

 
மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஜூலி, ஆர்த்தி ; வெடிக்கப்போகும் கலவரம்.!

தனியார் தொலைக்காட்சியொன்று நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக பல திருப்பங்கள் அரங்கேறிவருகின்றன. நிகழ்ச்சியின் துவக்கத்தில் காயத்ரி, ஜல்லிக்கட்டு புரட்சியின் காரணமாக அடையாளம் காணப்பட்ட ஜூலி, நமீதா உள்ளிட்டோரின் அதிரடி செய்கைகளாலும், தனது குழந்தைத்தனமான செயல்பாடுகளால் திரைத்துறை மட்டுமல்லாது பொதுமக்களின் உள்ளதை கொள்ளைகொண்ட தலைவி ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பிறகு பிக் நிகழ்ச்சி சுவாரசியம் இழக்க துவங்கியது.

இந்நிலையில், எதையேனும் செய்து நிகழ்ச்சியின் டிஆர்பியினை அதிகரிக்க வேண்டுமென்ற அழுத்தத்தில் உள்ள அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஆர்த்தியையும், ஜூலியையும் களமிறக்குகின்றனர்.

ஏற்கனவே நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள சுஜா, காஜல் உள்ளிட்டோர் பிறரிடம் சண்டை வாங்குவதையே குறிக்கோளாக வைத்துள்ளனர். இந்த நிலையில் ஆர்த்தியும், ஜூலியும் களமிறக்கப்படுவது நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தவேயன்றி காரணங்கள் வேறில்லை.

https://news.ibctamil.com/ta/cinema/harathi-and-juli-will-enter-bigg-boss-house-today

Link to comment
Share on other sites

ஜுலி vs சுஜா... அதுக்கு சரிப்பட்டு வராத பிந்து! (64-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

நாம் யூகித்தபடியே ஆரத்தியும் ஜூலியும் வீட்டுக்குள் வந்தனர். அதுவரை மெத்தனமாக இருந்த வீடு சட்டென்று கலகலப்பாக மாறியது.  எதிர்பார்த்ததுதான். ஆனால் முன்பு இருந்த இணக்கமும் பாசமும் இல்லாமல் ஏதோ ஒன்று உடைந்து விட்டது போலிருக்கிறது. அது சார்ந்த விலகல் பூடகமாக தெரிகிறது. இது இயல்புதான். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’

பழைய தமிழ் திரைப்படங்களைக் கவனித்தால் ஆனந்தமாக இருக்கும் ஒரு குடும்பத்தில் அவர்களுக்குள் நிகழும் உறவுச்சிக்கல்களை கதற கதற விவரிப்பார்கள். கிளைமாக்ஸ் நெருங்கும் போது அனைத்துச் சிக்கல்களும் சரியாகி அந்தக் குடும்பம் பழையபடி ஒன்றுபட்டு நிற்பதுடன் ‘சுபம்’ போட்டு விடுவார்கள். ஆனால் இந்த செயற்கைத்தன்மையை உடைத்துக் கொண்டு ஒரு திரைப்படம் உருவானது. ‘சம்சாரம் அது மின்சாரம்’.

உறவுகளுக்குள் உருவான சிக்கல்களினால் ஏற்படும் பிரிவு கண்ணாடிப் பாத்திரம் உடைந்ததைப் போன்றது. மீண்டும் அதை ஒட்டினால் செயற்கையாகவே இருக்கும். எனவே அதற்கான விலகலுடன் அந்த உறவுகளைப் பேண முயன்றால் நீண்ட காலத்திற்கு தாக்குப் பிடிக்க முடியும். மறுபடியும் நெருங்கி மறுபடியும் உடைந்தால் அது இன்னமும் ஆபாசமாக இருக்கும் என்கிற யதார்த்தத்தை அருமையாக விளக்கிய திரைப்படம். 

Bigg Boss

பிக் பாஸ் வீடும் அப்படித்தான் இருக்கிறது. விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் வரும் போது முன்பிருந்த உண்மை இல்லை. திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் சென்று திரும்பிய தங்கையை ஒரு விலகலுடன் கவனிப்பது போன்ற ‘அண்ணன்தனமான’ சோகத்துடன் இருந்தார் சிநேகன். 

அதற்கு முன் - 

63-ம் நாளின் தொடர்ச்சியான நிகழ்வுகள் காட்டப்பட்டன. ரைசாவின் வெளியேற்றத்திற்கு, தானே காரணம் என்று கலங்குகிறார் காஜல். ரைசா இதை தெளிவுப்படுத்தியும் கூட அவர் ஏன் குற்றவுணர்வு அடைகிறார் என்று தெரியவில்லை. ரைசாவின் வெளியேற்றத்திற்கு ‘ஒத்துழையாமை இயக்கமே’ பிரதானமான காரணம். ‘என்னால்தான் அவ வெளியே போனா. இங்கு இருந்திருந்தா ஜெயிச்சிருப்பா’ என்றெல்லாம் காஜல் புலம்பியதின் காரணம் தெரியவில்லை. நாமறியாத காட்சிகளில் ஏதேனும் இருக்கிறதோ, என்னமோ.

ஆரவ் தன்னைப் பற்றி ஏகவசனத்தில் பேசியது பற்றி சிநேகன் வருத்தத்திலும் திகைப்பிலும் இருக்கிறார். ஆனால் சிநேகன் ஒன்றை யோசிக்கலாம். ஆரவ் பொதுவாக எவரையும் அப்படி மரியாதைக்குறைவாக பேசும் நபர் கிடையாது. ஏதோ ஒரு வருத்தத்தில் அல்லது கோபத்தில் பேசியிருக்கலாம் என்று எடுத்துக் கொண்டு சிநேகன் எளிதாக கடக்கலாம். ஆனால் சிநேகனால் அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதுவே பெண் போட்டியாளராக இருந்தால் அவர் மன்னித்திருப்பாரோ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. 

64-ம் நாள் காலை. ‘ரம்’ திரைப்படத்தில் இருந்து Hola amigo என்கிற எவருக்கும் புரியாத பாடல் ஒன்று ஒலிபரப்பானது. 

காலையில் எழுந்ததுமே சுஜா வையாபுரியிடம் சென்று மன்னிப்பு கேட்டார். அவர் அப்படி கேட்பதற்கான அவசியமே இல்லை. மாறாக வையாபுரிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். விளையாட்டு என்றாலும் பெரிய மனிதராக நடந்து கொள்ளாமல் ‘ஆபாசமான பாடலை’ பாடியது அவர் செய்தது தவறு. இனி வரும் காலத்தை இணக்கமுடன் கழிக்கலாம் என்பது சுஜாவின் யோசனையாக இருக்க வேண்டும். ‘பெருந்தன்மையுடன்’ சுஜாவை மன்னித்தார் வையாபுரி. 

 

பிந்து வந்து ஒரு மாதமாகிறதாம். ‘எல்லோரும் என்னை வாழ்த்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அம்மணி இன்னமும் கூட ‘விருந்தினர்’ நிலையை விட்டுத் தாண்டி வந்தது போல் தெரியவில்லை. 

**

நாமினேஷன் படலம் துவங்கியது. முன்பாவது போட்டியாளர்களின் கட்அவுட்டிற்கு வண்ணம் அடிப்பதாக இருந்தது. இம்முறை போட்டியாளர்களின் முகத்திலேயே வண்ணப்பொடி பூச சொன்னது ஓவர். பிக்பாஸின் சேட்டை அதிகமாகிக் கொண்டே போகிறது. 

காஜலை அதிகம் பேர் நாமினேட் செய்தது ஆச்சரியம்தான். ‘அவர் இந்த விளையாட்டை சீரியஸாக எடுத்துக் கொள்வில்லை. taskகளை அரைமனதுடன் செய்கிறார். வெளித்தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார். விளையாட்டுத்தனமாகவே இருக்கிறார்’ என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. உண்மைதான். சிங்கம் மாதிரி கர்ஜிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது பூனை மாதிரி கூட காஜல் முனகவில்லை. பொசுக்கென்று அழுது விடுகிறார். 

Bigg Boss

சிநேகன் மன்னிப்பு விவகாரத்தில், குறும்படத்தின் மூலம் ஆரவ்வின் பொய் அம்பலமானதால் ஆரவ்வும் நிறைய நாமினேஷன் வாங்கினார். அது அத்தனை பெரிய குற்றமாகத் தெரியவில்லை. காயத்ரியின் சகவாசத்தால் ஆரவ் தவறிழைத்திருக்கலாம். மட்டுமல்லாமல், சிநேகன் புறம்பேசுவதை விட ஆரவ்வின் பங்கு குறைவுதான். என்றாலும் நாமினேஷன் முடிந்ததும் மனப்பூர்வமாக அனைவரிடமும் ஆரவ் மன்னிப்பு கேட்டது சிறப்பு. 

ஒரு task-ல் தோற்றதால் வெளியேற்றத்திற்கு சிநேகன் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே அவரை எவரும் நாமினேஷன் செய்யவில்லை. இதைத் தவிர கணேஷையும் எவரும் நாமினேஷன் செய்யவில்லை என்பதைக் கவனிக்கலாம். Slow, steady and win the race பார்முலாவை மனிதர் சிறப்பாக கையாள்கிறார். 

ஆக.. இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்கள் காஜல், ஆரவ் மற்றும் சிநேகன். 

மக்கள் எவரை வெளியேற்றுவார்கள், காப்பாற்றுவார்கள் என்று தெரியவில்லை. எனக்கென்னமோ ஆரவ்விற்கு ஒரு கண்டம் இருப்பது போல் தோன்றுகிறது. ‘எவரையாது காப்பாற்றலாம்’ என்கிற வாய்ப்பை அடுத்த வாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதாக சொல்லி விட்டார் கணேஷ். 

Bigg  Boss

**

வாக்குமூல அறையிலிருந்து அசரீக்குரலாக ஒவ்வொருவரையும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார் ஆரத்தி. இவரின் குரலை கணேஷ் உடனே கண்டுபிடித்து விட்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரத்தியும் ஜூலியும் ஒரு வாரத்திற்கு தங்கப் போகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் இன்று ஒரு நாளைக்கு மட்டும்தான் இருப்பேன் என்று ஜூலி சொன்னதின் காரணம் தெரியவில்லை. பிக்பாஸ் அப்படிச் சொல்லச் சொல்லியிருந்தாரா? அல்லது ஜூலியின் குறும்பா?

ஆரத்தி உள்ளே வருவார் என்று எதிர்பார்ததற்கு மாறாக ஜூலி உள்ளே நுழைந்தார். பழைய, வெள்ளந்தியான ஜூலி இது இல்லை என்பதை மட்டும் உடனடியாக உணர முடிந்தது. அம்மணிக்கு பளபளப்பு கூடியிருக்கிறது. ஆனால் அதே பழைய ‘கலகல’. ஜூலியைப் பார்த்ததும் சுஜா திகைத்து நின்று விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு அரைமனதாக கைகொடுத்தார்.

பிக்பாஸ் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக, ஒரு பார்வையாளராக சுஜா தந்திருந்த வீடியோ நேர்காணல் ஒன்றுள்ளது. அதில் ஜூலியின் பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை. அத்தனை அருவருப்பாக இருக்கிறது. அந்த கேரக்ட்டரை அத்தனை வெறுக்கிறேன்’ என்றெல்லாம் சுஜா சொல்லியிருந்தார். பிறகு தானும் பிக்பாஸில் கலந்து கொண்டு ஜூலியை நேருக்கு நேராக சந்திப்போம் என்றெல்லாம் சுஜா கற்பனை கூட செய்திருக்க மாட்டார். விதி வலியது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ‘நான் அந்த வீடியோவைப் பார்த்தேன்’ என்று ஜூலியும் சுஜாவிடம் நேரடியாக சொன்னதுதான். 

Bigg Boss

சிநேகன் பழைய சிரிப்புடன் ஜூலியை கட்டியணைத்து வரவேற்க முயன்றார். ஆனால் ஜூலி சம்பிரதாயத்திற்கு சிரித்து விட்டு சட்டென்று விலகிப் போனது போல் தெரிந்தது. அது சிநேகனை காயப்படுத்தியிருக்க வேண்டும். அதற்குப் பின்னான தருணங்களில் அமைதியாக இருந்தார். ஆரத்தி பாடி கிண்டலடித்தபடி ‘பாலூட்டி வளர்த்த கிளி’ பறந்து போயிற்றே என்ற சோகத்துடன் சிநேகன் இருந்தது போல் பட்டது. 

‘இங்கு நூறு நாள் இருப்பது வாழ்க்கை அல்ல, வெளியே நீண்ட காலம் வாழப்போவதுதான் வாழ்க்கை’ என்று சிநேகன் சொன்ன வசனத்தை பசுமையாக நினைவில் வைத்திருப்பதாக நினைவுகூர்ந்தார் ஜூலி.

**

வெளியில் நடந்த நிகழ்வுகளை ஜூலியின் வாயிலிருந்து போட்டியாளர்கள் பிடுங்க முயற்சித்தார்கள். ‘அடிச்சுக்கூட கேப்பாங்க. சொல்லிடாதீங்க’ என்று பிக்பாஸ் சொல்லியிருக்கிறார்’ என்று சமாளித்தார் ஜூலி. ‘ஒருநாள்தான் தங்கப் போகிறேன். Re-entry கேட்டேன். முடியாதுன்னுட்டாங்க’ என்று அவர் சொல்லியது எத்தனை தூரம் உண்மையோ தெரியவில்லை. 

ஆரத்தியின் வருகை நிகழ்ந்தது. கலகலப்பின் எடை கூடியது. சளசளவென்று உற்சாகமான உரையாடல்கள். ‘எங்க அப்பா கிட்ட இருந்து சொத்தை பிரிச்சுட்டு போலாம்னு வந்தோம். அவரு புதுசா வந்திருக்கிற பொண்ணுங்களுக்கு குடுத்துடுவாரோன்னு பயமா இருந்தது’ என்று ஜாலியான உதாரணத்தைச் சொன்னார் ஆரத்தி. 

சிநேகன் அமைதியாக இருப்பது குறித்து அனைவருக்கும் ஆச்சரியம். ‘இல்லம்மா தங்கச்சி…. ‘ என்று மனதிற்குள் அழும் டி,ஆர் போன்று கலங்கலாக அமர்ந்திருந்தார் சிநேகன்.

“இந்த வீடு எனக்கு நிறைய அனுபவங்களைத் தந்திருக்கு. நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். நானும் தப்பு பண்ணியிருக்கேன். பாசம் காண்பிச்சு ஏமாத்திட்டாங்க’. இனிமே அண்ணனாக இருந்தாலும் சரின்னா சரி, தப்புன்னா தப்பு’-ன்னு சொல்லுவேன். என்றெல்லாம் காஜலிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலி. அவர் குறிப்பிட்டது எவரை, சிநேகனையா, காயத்ரியையா?
 
புது போட்டியாளர்களை வரவழைத்ததும் வெளியேறினவர்களை மீண்டும் உள்ளே கொண்டு வந்ததும் வையாபுரிக்குப் பிடிக்கவில்லை போல. தங்களின் இத்தனை நாட்களின் சிரமமும் வீணாகி விடுமோ என்று கத்திக் கொண்டிருந்தார். இதர பழைய போட்டியாளர்களின் மனநிலையும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். 

Bigg Boss

‘ஜூலியைப் பார்த்த போது மகிழ்ச்சியுடன் வரவேற்க நினைத்தாலும் அவர் செய்த பழைய சம்பவங்களின் வலி சார்ந்த தழும்பு இன்னமும் மறையவில்லை’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் சுஜா. பிக்பாஸ் பார்வையாளர்கள் பலருக்குமே ஜூலியின் மறுவருகை பிடிக்கவில்லை என்பது போல் தெரிகிறது. சமூகவலைத்தளங்களில் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிநேகன் முன்பு சொன்னதுதான். ‘மன்னிக்க முடியாத குற்றம் என்பது இந்த உலகத்தில் கிடையாது’ 

Bigg Boss

**

‘Truth or dare’ என்றோரு task ஜாலியாக நடந்தேறியது. ‘மறுபடியும் ஏன் வந்தீங்க?’ என்ற கேள்விக்கு ‘பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக மாற்றத்தை நிகழ்த்தப் போகிறது. அந்த வரலாற்று தருணத்தில் இணையவே வந்திருக்கிறேன்’ என்றெல்லாம் ஆரத்தி தந்த பில்டப்பைப் பார்த்து பிக்பாஸிற்கே ஆனந்த மயக்கம் வந்திருக்க வேண்டும். 

தன் லவ் ப்ரபோஸலை, விளையாட்டு போல சீரியஸாகவே பிந்துவிடம் ஹரீஷ் சொன்னது போல் இருந்தது. குரலில் அத்தனை ஏக்கம். தன்னை மிகவும் பாதித்த விஷயமாக ‘ஓவியா வெளியேற்றத்தைப்’ பற்றி ஆரவ் சொன்னது சிறப்பு. மனிதர் இதுவரை வெளிப்படையாக இந்த விஷயத்தைச் சொன்னதில்லை என்று நினைக்கிறேன். அல்லது ஓவியா சார்ந்த சர்ச்சைகளிலிருந்து வெளிவருவதற்காக இப்போது அப்படிச் சொல்கிறாரா என்பதும் தெரியவில்லை.

ஆரத்தியை தொடர்ந்து திட்ட வேண்டும் என்கிற சவாலை செய்யத் திணறினார் பிந்து. சுந்தரத் தெலுங்கு வாசனையுடன் மழலை மொழியில் அம்மணி எத்தனை திட்டினாலும் எவருக்குமே கோபம் வராது போலிருக்கிறது. ‘நீங்க இதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க பிந்து’.

Bigg Boss

வையாபுரியும் கணேஷூம் விரகதாபத்துடன் ஆடிய டூயட் ‘கட்டிப் பிடி, கட்டிப் பிடிடா’வை விட மோசமாக இருந்தது. 

**

 

ஏற்கெனவே நுழைந்த புதிய வரவுகளைத் தாண்டி, பழைய முகங்களும் மீண்டும் நுழைந்திருப்பதை ஆரம்ப நிலையில் இருந்து தாக்குப் பிடிக்கும் போட்டியாளர்கள் அத்தனை விரும்பவில்லை என்று தெரிகிறது. தங்களின் இத்தனை கால உழைப்பும் சிரமமும் வீணாகி விடும் என்று நினைக்கிறார்கள். ஒருவகையில் அது சரிதான். ஆனால் இந்தப் போட்டியின் அம்சங்களில் அதுவும் ஒன்று எனும் போது என்ன செய்ய முடியும். இதையும் தாண்டி வருவதுதான் அவர்களுக்குள்ள சவால். சமாளித்துதான் ஆக வேண்டும்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/100625-bigg-boss-tamil-updates-day---64---julie-harathi-returns-house-mates-fear.html

Link to comment
Share on other sites

ஆண்டான் vs அடிமை பழக்கத்தை ஊக்குவிக்கும் பிக்பாஸுக்கு கண்டனங்கள்! (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

பிக்பாஸ் வீட்டில் இன்று கடுமையான ஆட்சேபத்திற்கு உரிய சில விஷயங்கள் நடந்தேறின. Task ஒன்றில் தோற்ற அணி, ஜெயித்த அணிக்கு அடிமை என்பது போன்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.  வென்ற அணிக்கே வீட்டை உபயோகிக்கும் உரிமையுள்ளது என அறிவிக்கப்பட்டு தோற்ற அணியின் உறுப்பினர்கள், தரையில்தான் அமர வேண்டும், படுக்கையறை, சமையல் அறை போன்றவற்றை அனுமதிக்குப் பின்தான் பயன்படுத்த வேண்டும், கழிவறைக்குச் சென்றால் பாட்டுபாடிக் கொண்டே செல்ல வேண்டும், கலை நிகழ்ச்சிகள் மூலம் வென்ற அணியை குஷிப்படுத்த வேண்டும் என்பது போன்று பல கொடூரமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

மனித சமத்துவத்தைப் பற்றி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். மதம், சாதி, வர்க்கம், பால் என்று பலவிதங்களில் பாரபட்சங்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சில சமூகங்கள் உயர்வுமனப்பான்மையினால் எளிய சமூகத்தினரை வதைக்கும் விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் கிராமங்களின் தெருக்களில் செருப்பை காலில் அணியாமல் கையில் தூக்கி நடந்து செல்லும் சாதியக் கொடுமைகள் இன்னமும் கூட நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 

தொடர்ந்த போராட்டங்கள், பரப்புரைகளுக்கு பின்னரும் நிலைமையில் சொல்லிக் கொள்ளுமளவு முன்னேற்றம் இல்லை. இத்தகைய சூழலில் விளையாட்டுக்காக கூட ஆண்டைxஅடிமையின் கூறுகளை பயன்படுத்துவது கடுமையான ஆட்சேபத்திற்கு உரியது. 

Bigg Boss

இன்னொன்று, ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைக் குறிப்பிட்டு, தோற்ற அவர்கள் வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் அடிமைப்பட்டிருப்பது மாதிரி சித்தரிப்பதும் கண்டனத்திற்கு உரியது. விளையாட்டு என்கிற பெயரில் இம்மாதிரியான ஆபத்தான விஷயங்கள் நியாயப்படுத்தக்கூடாது. இறுதி நாட்கள் நெருங்க நெருங்க போட்டிகள் கடுமையாகும் என்பதை புரிந்து கொள்ள முயன்றாலும், அதிலுள்ள அரசியல்சரியை (Political correctness) கறாராக பிக்பாஸ் டீம் கடைப்பிடிப்பது முறையாக இருக்கும். பின்பு கமலின் மூலமாக வருத்தப்படுவதில் நியாயம் ஏதுமில்லை. 

**

65-ம் நாள் காலை.

‘வாடி என் தமிழ்செல்வி’ என்கிற ரகளையான பாடல் காலையில் ஒலித்தது. தன்னை வரவேற்கும் பாடல் என்று நினைத்துக் கொண்டு ஜூலி குத்தாட்டம் போட்டார். ஹரீஷ் மெல்லிய அசைவுகளால் கவர்ந்தார்.

புது வரவுகள், வெளியே சென்றவர்களின் மீள் வருகை ஆகிய விஷயங்கள் தங்களை சோர்வுறச் செய்வதாக சிநேகனும் ஆரவ்வும் பேசிக் கொண்டார்கள். துவக்க நிலையில் இருந்து நீடிப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால் சிநேகன், ஆரவ், கணேஷ் மற்றும் வையாபுரி. அவர்களின் இந்த அலுப்பு நியாயமானதுதான். 

Bigg Boss

இதைப் போலவே, தாங்கள் வாக்களித்து வெளியேற்றியவர்கள் மீண்டும் உள்ளே வருவது பார்வையாளர்களுக்கும் கூட சலிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தக்கூடும்.  ஆனால் பிக்பாஸ் விளையாட்டின் அடிப்படையான வடிவமைப்பை பார்த்தால் இது போன்ற தவிர்க்க முடியாத விஷயங்கள் அவற்றில் இருப்பதை புரிந்து கொள்ள முடியும். 

வையாபுரி மறுபடியும் அனத்த துவங்கி விட்டார், பாவம். ‘வேற எந்த விஷயத்தையும் நான் மிஸ் பண்ணலை. என் குடும்பத்தைத்தான் மிஸ் பண்றேன். உலகமே ஒரு நாடக மேடை, அனைவரும் நடிகர்கள் –ன்றது உண்மையாப் போச்சு. நடிக்கத் தெரியாத என்னைக் கூப்பிட்டு வந்திட்டாங்களே’ என்றெல்லாம் தனிமையில் அவரது புலம்பல் நீண்டது. குடும்பத்தின் அருமையை பிரிவில்தான் உணர முடியும் என்பதற்கு வையாபுரியின் இந்தக் கதறல் சரியான உதாரணம்.

ஜூலி, ஆரத்தி குழு ‘பாட்டுக்குப்பாட்டு’ போட்டி நிகழ்த்தியது. (ஓவியாவை தூங்க விடாமல் செய்ய வேண்டும் என்கிற வன்மத்தில் முன்னர் நிகழ்த்திய அந்தாக்ஷரி இரவின் கொடுமை நினைவில் வந்து போனது). “இப்பத்தான் வீடு கலகலன்னு இருக்கு. நன்றி பிக்பாஸ்” என்று நெகிழ்ந்து போனார் கணேஷ். 

 

“எனக்கு வெளில நல்ல பேர் இல்ல. என்னை திருத்திக்க தயாரா இருக்கேன். விமர்சனங்களை ஏத்துக்க ரெடியாக இருக்கேன்’ என்றெல்லாம் 'திருந்திய உள்ளமாக’ பேசிக் கொண்டிருந்தார் ஜூலி. “நேத்திக்கு நீ வரும் போதே கவனிச்சேன். உன் கிட்ட மெச்சூரிட்டி வந்திருக்கு” என்றார் கணேஷ்.

“இந்த வீட்டில் பழைய உற்சாகமும் துள்ளலும் இல்லை’ என்கிற ஜூலியின் கண்டுபிடிப்பு உண்மையே. “நீங்கள்ளலாம் வெளிய வாங்க. மக்கள் நிறைய பரிசுகள் தரக் காத்திருக்கிறார்கள். எங்களுக்கும் நெறய கிடைச்சது. கமல் கொஞ்சமா தந்தாரு. மக்கள் நெறய தந்தாங்க’ என்றெல்லாம் ஜூலியும் ஆரத்தியும் சூசகமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவை உண்மையான பரிசுகளா அல்லது விமர்சனங்களும் வசைகளுமா என்று ஆரவ் உள்ளிட்ட இதர உறுப்பினர்கள் குழம்பினார்கள்.

**

Luxury budget –க்கான task தரப்பட்டது. இதற்காக வீட்டின் உறுப்பினர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒன்று மதுரை குடும்பம் எனவும் இன்னொன்று NRI குடும்பம் எனவும் ஆனது. 

Bigg Boss

கூடைப்பந்து போட்டியின் எளிய வடிவம். கூடை உயரத்தில் இருப்பதற்கு மாறாக தரையில் இருக்கும். இரண்டு நபர்கள் பந்தை கூடையில் போட முயல்வார்கள். எதிரணியில் உள்ள இரண்டு நபர்கள் அதைத் தடுக்க முயற்சி செய்வார்கள்.

ஆரவ்வும் பிந்துவும் சிறப்பாக விளையாடி உற்சாகமாக பல பாயிண்ட்டுகளை எடுத்தார்கள். விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படாததால் கோபமடைந்த ஹரீஷ் ‘விளையாட மாட்டேன்’ என்று மறுத்து பிறகு சமாதானம் அடைந்தார்.

NRI அணியில் ஆரவ் + பிந்து கூட்டணி சிறப்பாக பந்துகளைப் போட்டது போலவே அதே அணியில் உள்ள கணேஷ் சிறந்த தடுப்பாளராக இருந்தார். அவரது உயரமும் பலமும் இதற்கு அனுகூலமாக இருந்தது. 

இந்தப் போட்டியில் NRI அணி வென்றதால் வீட்டை ஆளும் உரிமை அவர்களுக்கே. தோற்ற மதுரை அணி எல்லாவற்றிற்கும் அனுமதி பெற்றும், எதிரணி சொல்லும் task-ஐ முடித்த பிறகுதான் வீட்டைப் பயன்படுத்த வேண்டும். கட்டுரையின் துவக்கப்பகுதியில் குறிப்பிட்டது போல் இம்மாதிரியான பாரபட்சங்கள் விளையாட்டாக இருந்தாலும் முறையானதல்ல. 

Bigg Boss

போட்டியில் அடிபட்டிருந்த சிநேகனை ‘எங்க அண்ணன் எல்லாத்தையும் அடிபட்டு அடிபட்டுதான் கத்துக்குவாரு’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலி. சிநேகனிடம் அதிக சலனமில்லை. “ஆமாம். தங்கச்சி.. அடிபட்டுதான் கத்துக்கறேன்” என்று டி.ஆர்தனமான சிலேடையில் அவர் மனதிற்குள் புலம்பியிருக்கக்கூடும்.

வீட்டைப் பயன்படுத்த அனுமதி கேட்கும் task-ல் வையாபுரிக்கு மட்டும் வயதைக் கருதி விலக்கு அளிக்கப்பட்டது. நல்ல விஷயம். இல்லையென்றால் அவர் காமிராவை நோக்கி அழத் துவங்குவார் அல்லது கத்துவார். 

**

“எல்லாவற்றிற்கும் task-ஆ.. என்ன பைத்தியக்காரத்தனம் . நாம் என்ன அடிமைகளா ஒண்ணுக்கு போறதுன்னா கூட அனுமதி கேட்கணுமா. நான் செய்ய மாட்டேன். என்று சிநேகன் எரிச்சல்பட்டது நியாயமே. விதிமுறைகள் அத்தனை அபத்தமாக இருந்தன. சுயமரியாதையுள்ள எவரும் இதைக் கண்டு கோபப்படுவது சரியே. ‘ அண்ணா… இதெல்லாம் fun தானே” என்றார் ஜூலி. கணேஷ் சொன்ன பக்குவம் இதுதான் போல. 

தோற்ற அணிக்கு என்னென்ன task-களை தரலாம் என்று NRI அணி பேசிக் கொண்டதை சுஜா ஒட்டுக் கேட்டார். பிக்பாஸின் விதிமுறைகள் கடுமையானதாக இருந்தாலும் நபர்களுக்கேற்றவாறு அதை எளிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று NRI அணி பேசியது நன்று. என்ன இருந்தாலும் இத்தனை நாட்கள் பழகிய நண்பர்களை அடிமைகளாக நடத்தக்கூடாது என்கிற அவர்களின் மனச்சாட்சி பாராட்டுக்குரியது. அது மட்டுமல்ல, கத்தி எப்போது வேண்டுமானாலும் திரும்பும் என்கிற ஜாக்கிரதையுணர்வும் அவர்களிடம் இருந்திருக்கக்கூடும். 

Bigg Boss

‘அவங்க என்ன பேசிக்கறாங்க?’ என்று ஒட்டுக்கேட்ட சுஜாவிடம் ஆவலாக கேட்டார் ஹரீஷ். ‘நீச்சல் குளத்தில் அப்பப்ப குதிக்கணுமாம்’ என்று அறிந்தவுடன் ‘என்னால் முடியாது’ என்று மறுத்தார். 

ஆடம்பரமான உடையில் வந்த ஆரவ், ஹரிஷீடம் கலாய்த்துக் கொண்டிருந்தது ஜாலியான கலாட்டா. சிநேகனும் ஹரிஷூம் மதுரையின் வட்டார வழக்கை இயன்ற வரை சிறப்பாகவே பேசினர். ‘நாட்டாமை’ தோற்றத்தில் வந்து அமர்ந்தார் வையாபுரி. மலேரியா வந்த விஜயகுமார் போல கால்வாசி நாட்டாமையாக இருந்தார். பலவீனமான நாட்டாமை. பெரிய மீசை மட்டுமே அவரைக் காப்பாற்றியது. ‘Who is this man?” என்று அவரையும் கலாய்த்தார் ஆரவ். 

NRI கோலத்தில் ஆரத்தி, பிந்து போன்றவர்களின் உடைகள் காமெடியாக இருந்தன. காஜல் இன்னமும் ஒப்பனையைக் கூட்டியிருக்கலாம். NRI களையின்றி உள்ளூர் ஆசாமியாகவே இருந்தார். 

‘இது விளையாட்டு என்கிற நோக்கில் நடத்தப்படுவது. எவரையும் புண்படுத்தும் நோக்கமில்லை’ என்கிற ஜாக்கிரதையான ஒரு disclaimer-ஐ முன்மொழிந்தார் வையாபுரி. பிக்பாஸ் சொல்லித் தந்தது போல. 

ஜூலி பாடிக் கொண்டே கழிவறைக்குச் சென்றார். அவர் task-ஐ சரியாகச் செய்கிறாரா என்பதை பின்னாலேயே வந்து கண்காணித்த ஆரத்தியின் செய்கை முகம் சுளிக்க வைத்தது. வீட்டிற்கு வந்த முதல் நாள் ஜூலி கழிவறையின் அருகில் பாடிக் கொண்டிருந்தார். அந்த ராசியோ என்னமோ, இப்போதும் கழிவறைக்கு கட்டாயமாகப் பாடிச் செல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பிக்பாஸிற்கே ஜூலியைப் பார்த்ததும்தான் அந்த யோசனை ஏற்பட்டிருக்க வேண்டும் போல. கழிவறையில் தாழ்ப்பாள் சரியில்லாத வீடுகளில்தான் இம்மாதிரியான உபாயங்களைக் கடைப்பிடிப்பார்கள். பிக்பாஸ் வீட்டு நிலைமையும் அப்படியா என்ன?

Bigg Boss

ஸ்மோக்கிங் ரூம் செல்வதற்காக ஹரீஷை உப்பு மூட்டை தூக்க முயன்றார் பிந்து. ஹரஷிற்கு ஆசை ஒருபுறம், இன்னொரு புறம் பிரச்சினையாகி விடுமோ என்கிற பயம். (ஏற்கெனவே லவ் ப்ரபோஸலை விளையாட்டு என்கிற பெயரில் பலமாகவே ஹரீஷ் நிகழ்த்தியிருந்தார்). ஆனால் பிந்து பிடிவாதமாக வலியுறுத்தவே, பிந்துவின் முதுகில் வேதாளம் போல ஏறிக்கொண்டார். முதல் முறையில் தடுமாறிய பிந்து, இரண்டாம் முறையில் எப்படியோ கொண்டு போய் ஹரீஷை கரை சேர்த்தது சுவாரசியம். 

பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களே இல்லை போலிருக்கிறது. 

**

‘எங்களை ஏதாவது பாட்டுப்பாடி குஷிப்படுத்துங்கள்’ என்றார் ‘முதலாளியம்மா’ ஆரத்தி. NRI அணியில் மற்றவர்கள் அடக்கி வாசிக்கும் போது இவர் மட்டுமே ஓவராக நடந்து கொள்கிறார். 

bigg Boss

‘இருவிழி உனது, இமைகளும் உனது’ என்கிற பாடலை அற்புதமாகப் பாடினார் ஹரீஷ். ஜூலியும் சுஜாவும் இணைந்து நடனமாடினர். ‘எனக்கு ஆட வராது’ என்று சொன்ன சுஜா, இசையைக் கேட்டதும் பிரபுதேவா மாதிரி உற்சாகமாக ஆடியது சுவாரசியம். பிறகு சிநேகனையும் இந்த ஆட்டத்தில் இழுத்துப் போட்டனர். அதுவரை ஒதுங்கியிருந்த சிநேகன், வேறு வழியின்றி நடனம் என்கிற பெயரில் எதையோ ஆடினார். காயத்ரியிடம் சரியாக கற்கவில்லை போலிருக்கிறது. 

‘இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்ட இந்த பிரிவினை task அளவில் நின்று விடுமா, மனதிற்குள் சென்று விடுமா’ என்று அசரிரீக்குரல் கவலைப்பட்டது. இரண்டாவது விஷயம் நடக்க வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம்? பின் ஏன் இந்த போலியான கவலை பிக்பாஸ்? 

 

‘நாளை’ என்று காட்டப்படும் பகுதியில் ஜுலியின் மனதிற்குள் ஏதோ சென்று வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறாரே, திருப்திதானே பிக்பாஸ்?

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/100746-is-the-bigg-boss-tamil-show-encourages-slavery-bigg-boss-tamil-updates-day---65.html

Link to comment
Share on other sites

ஜுலி, ஆர்த்தி பேக் டூ ஃபார்ம்... பாவம் ஆரவ்! (66-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss


‘ஐ’ திரைப்படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாசமான துள்ளலிசைப்பாடல் ஒலித்தது. ‘லேடியோ’. 

காலையில் எழுந்தவுடனேயே தன் அலப்பறையை ஆரம்பித்தார் ஆரத்தி. ‘வேலை செய்யப் போற மதுரை டீமிற்கு எதுக்கு இவ்ள மேக்கப். எனக்கு பசிக்குது. டிபன் செய்யுங்க’ என்று உத்தரவுகள் அதிகாரத்துடன் காற்றில் பறந்தன. ஏதோ பிறந்ததில் இருந்தே NRI என்பது போல ஆரத்தியின் அதிகார தர்பார் கொடி கட்டிப் பறக்கிறது.  

ஜூலி மதுரை பாணியில் ஒரு பாட்டு பாட, ஆரவ்வும் பிந்துவும் நடனமாடினர். ‘நாம் ஆட வைக்க வேண்டிய அணி. நாம் ஆடக்கூடாது’ என்று NRI ஜபர்தஸ்தை நிலைநிறுத்த முயன்றார் ஆரத்தி. என்றாலும் அவர்களின் நடனத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. 

Bigg Boss

ஆரத்தி, trigger ஆரத்தியாக மாறி ஓவியா விஷயம் தொடர்பாக ஆரவ்வை கேள்விக் கணைகளால் துளைத்தார். “நீங்க ஜெயிச்சு வரும் போது ஓவியா வெளில இருந்தா என்ன பண்ணுவீங்க? அவங்க ப்ரபோஸ் செஞ்சா உங்க ரியாக்ஷன் என்ன? அவங்களை மிஸ் பண்றீங்களா? ஏன் அவங்களை கல்யாணம் பண்ணிக்ககூடாது என்றெல்லாம் ஆரவ்வை சங்கடத்தில் ஆழ்த்தினார். விவஸ்தையற்ற கேள்விகள். இந்த நோக்கத்தில்தான் ஆரத்தியை பிக்பாஸ் உள்ளே விட்டிருக்கிறார் போலிருக்கிறது. 

ஆரத்தியின் அதிகப்பிரசங்கித்தனத்தை சாமர்த்தியமாக சமாளித்து வெளியேறினார் ஆரவ். ஓவியாவுக்கு ஆதரவாகப் பேசினால் மக்களின் அபிமானத்தைப் பெற முடியும் என்பதுதான் ஆரத்தியின் கணக்காக இருக்குமே தவிர, ஓவியாவின் மீதுள்ள உண்மையான அன்பாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஆரத்தி வெளியேறாமல் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து இருந்திருந்தால் காயத்ரி குழுவுடன் இணைந்து ஓவியாவை நிச்சயம் நோகடித்திருப்பார் என்று உறுதியாக தோன்றுகிறது. 

ஆரவ்வை சங்கடப்படுத்தி முடிந்ததும் அடுத்து ஜூலிக்கு நகர்ந்தார் ஆரத்தி. “ஆரவ்வைப் பார்த்தா ஒரு மாதிரி இருக்கு” என்று ஜூலி காயத்ரியை தனிமையில் அழைத்து முன்பு சொல்லியிருந்தார். அதை விவஸ்தையே இல்லாமல் காயத்ரி பொதுவில் சொல்லி ஜூலியை கிண்டலடித்தார்.

Bigg Boss

இப்போது ஆரத்தியும் அதே விஷயத்தை செய்கிறார். முன்பு நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி “ஆரவ்வைப் பார்த்தா இப்பவும் ஒரு மாதிரி இருக்கா?” என்று ஆரத்தி கேட்டதற்கு ஜூலி மட்டுமல்லாமல் ஆரவ்வும் சங்கடமடைந்தார். “ஏன் இப்ப பழைய விஷயங்களை கிளர்றீங்க?” என்று கோபமடைந்தார். “ஆரவ்வை முதல்ல இருந்தே ‘அண்ணா’ ன்னுதான் கூப்பிடறேன். அவர் கண்களை பார்த்தா, சிகரெட் பிடிக்கற ஸ்டைலைப் பார்த்தா எங்க அப்பா ஞாபகம் வருது’ன்னு சொன்னேன்” என்று ஜூலி விளக்கமளித்தாலும் ஆரத்தி அந்த பஞ்சாயத்தை முடிப்பதாக தெரியவில்லை. ஒருவரை வெறுப்பேற்றுவதில் ஆரத்தி கில்லாடியாக இருக்கிறார்.

இதற்காக 12.07.2017 அன்று நடந்த நிகழ்வை தேடிப் பார்த்தேன். ‘படையப்பா’ ரஜினி மாதிரி உடையணிந்த தினம் அன்று. தனக்கான பாடல் வந்ததும் அதற்கு ஆடி முடித்து விட்டு காயத்ரியை தனிமையில் அழைத்த ஜூலி, ‘என்னமோ தெரியலைக்கா.. ஆரவ்வை பார்த்துக்கிட்டே இருக்கணும் மாதிரி இருக்கு. என்னன்னு சொல்லத் தெரியலை’ என்றுதான் மறுபடியும் மறுபடியும் சொல்கிறார். இதை நமீதாவிடம் சொல்லிச் சிரித்த காயத்ரி, வீடெங்கும் பரப்பி விட சக்தியும் ஆரவ்வை வைத்துக் கொண்டே கிண்டலடிக்கிறார். சுற்றி அமர்ந்திருந்த சிநேகன் உள்ளிட்டோர் சிரித்து மகிழ்கின்றனர். 

பொதுப்பார்வைக்கு ஜூலி ஆரவ்வின் மீது இனக்கவர்ச்சி கொண்டிருப்பது போலத்தான் ஜூலியின் அந்த உடல்மொழியை வைத்து இந்த நிகழ்வை புரிந்து கொள்ள முடியும். ஆனால் ‘அவர் எனது தந்தையை நினைவுப்படுத்தினார்’ என்று சம்பந்தப்பட்டவரே விளக்கம் அளிக்கும் போது அதை ஏற்றுக் கொள்வதே முறை. ‘அப்பாவை போய் யாராவது குறுகுறுன்னு பார்ப்பாங்களா?’ என்றெல்லாம் நோண்டிக் கொண்டிருப்பது ஆபாசமானது. இதைத்தான் ஆரத்தி செய்து கொண்டிருக்கிறார். மேலும், ஒருவருக்கு சங்கடமளிக்கும் பழைய விஷயங்களை அவரிடமே கிளறிக் கொண்டிருப்பதும் நாகரிகம் ஆகாது. 

Bigg Boss

கோபத்துடன் தனிமையில் சென்று அமர்ந்து விட்ட ஜூலியிடம் விடாப்பிடியாக சென்று பேசிக் கொண்டிருந்தார் ஆரத்தி. “ஜூலி இப்படிக் கிடையாதே” என்று ஆரத்தி கேட்ட போது ‘இப்படி கேட்காம விட்டு விட்டுதான் நிறைய விஷயங்கள் தப்பாயிடுச்சு’ என்றார் ஜூலி. “லவ்வா இருந்ததுன்னா சொல்லப் போறேன். நான் ஏன் பொய் சொல்லணும்?” என்று அவர் கேட்பது ஒருவகையில் நியாயமானது. 

**

வீட்டை விட்டு வெளியே சென்ற பிந்துவிற்கு குடைபிடிக்கிறேன் பேர்வழி என்று ஹரீஷ் காமெடி செய்து கொண்டிருந்தார். 

‘இந்த வீட்டில் பிடிக்காத யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை கட்டிப்பிடித்து விட்டு பின்பு ‘ஏன் அவரை பிடிக்காது?’ என்று விளக்க வேண்டும்’ என்கிற task-ஐ சுஜாவிடம் தந்தார் ஆரத்தி. “ஜூலியை எனக்குப் பிடிக்காது” என்று சொன்ன சுஜா, ‘அதற்கான காரணங்கள் நிறைய இருக்கு. நான் வெளில இருந்து வீடியோல பார்த்த ஜூலியே காரணம். இப்ப நேரா அவங்களை புரிஞ்சுக்க இன்னமும் டைம் வேணும். அதுக்கு முன்னாடி அவங்க கிட்ட நெறய பேச வேண்டியிருக்கு” என்றார். ‘தாராளமா பேசலாம்’ என்று அதற்கு பதிலளித்தார் ஜூலி.

ஏதோ ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று விரும்பிய ஜூலிக்கு, டைனிங் டேபிள் பகுதியை நொண்டியடித்துக் கொண்டே சுற்றி வர வேண்டும் என்று task தந்தார் ஆரத்தி. மேட்டிமைத்தனமான தோரணையுடன் ஆரத்தி சொல்லும் task-கள் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றன. பிக்பாஸ் தந்த ‘முதலாளித்துவ’ வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொள்பவர் ஆரத்தி மட்டுமே. ‘நீ சொல்றது சரிம்மா. ஆனால் சொன்ன விதம்தான் தப்பு” என்கிற அவருடைய தந்தையின் அபிப்ராயத்தை ஆரத்தி நினைவில் வைத்துக் கொண்டிருப்பது போல தெரியவில்லை. 

Bigg Boss

**

NRI குடும்பம் செய்த அலப்பறைகளுக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்ததின் மூலம் ஒரு மகத்தான டிவிஸ்ட் வைத்தார் பிக்பாஸ். இனி மேல் வீட்டை ஆளும் அனைத்து உரிமைகளும் மதுரை குடும்பத்திற்கு மாற்றப்படுகின்றன.. முன்பு சொல்லப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் இனி NRI குடும்பத்தினர் செய்ய வேண்டும். 

நேற்றைய கட்டுரையிலேயே கூட இதைப் பற்றி சொல்லியிருந்தேன். கத்தி எப்போது வேண்டுமானாலும் திரும்பக்கூடும் என்று. எனவேதான் NRI குடும்பம் தங்களின் அதிகாரங்களை மிதமிஞ்சி பயன்படுத்தாமல் சற்று கனிவாக பயன்படுத்திக் கொண்டிருந்தது. ஆரத்தி மட்டுமே விதிவிலக்கு. 

இந்த திடீர் மாற்றத்தைக் கண்ட NRI குடும்பம் உள்ளூற திகைப்படைந்தாலும் அதிகம் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இத்தனை சீக்கிரம் நிலைமை தலைகீழாகும் என அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இது போன்ற பூர்ஷூவாத்தனமான நடவடிக்கைகளை எவர் செய்தாலும் அது பிழையே. 

சோபாவில் அமரப் போன பிந்துவை தரையில் அமரச் செய்தனர். நேற்று தோற்ற அணியில் இருந்த போது ‘உடம்பு சரியில்லை’ என்று அமைதியாக படுத்துக் கொண்ட வையாபுரி, இன்று நிலைமை தலைகீழானவுடன் ‘நாட்டாமை’ கெத்துடன் வந்து அமர்ந்து கொண்டார். 


பிந்துவிடம் அவரது திருமண விவரங்களைப் பற்றி விசாரித்து ‘எங்க பையனைக் கட்டிக்கறியா?’ என்று ஹரீஷை அழைக்க அதற்காகவே காத்திருந்தது போல பின்னால் வந்து நின்றார் ஹரீஷ். ‘மதுரையைப் பற்றி ஏதாவது பாட்டு பாடு’ என்கிற நாட்டாமையின் கட்டளைக்கு ‘மதுரைக்குப் போகாதடி’ என்று முரணாக பாடி வைத்தார் பிந்து. எவரும் இதைக் கவனிக்கவில்லை.

Bigg Boss 

இதற்கிடையில் பழிக்குப்பழியாக ஜூலி தந்த ஒரு task-க்கிற்காக, மற்றவர்கள் வேண்டாமென்று சொல்லியும் பிடிவாதமாக நீச்சல் குளத்தில் சென்று குதித்தார் ஆரத்தி. ‘என்ன task வேண்டுமானாலும் கொடுங்கள்’ என்பது ஆரத்தியின் பந்தா. பிந்துவிற்கு சாதாரண தமிழே தகராறு. அவரைப் போய் மதுரை வழக்கில் பேசச் சொன்னால் என்னவெல்லாம் விபத்து நிகழுமோ அதெல்லாம் நிகழ்ந்தது. 

‘கல்யாணத்தைப் பற்றி சிநேகன் ஒரு பாட்டு எழுதியிருக்காரு. அது என்னன்னு பாடு’ என்ற நாட்டாமையின் கட்டளைக்கு ‘கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா’ பாடலை எல்கேஜி மழலையில் பாடினார் பிந்து. சிநேகன் கமுக்கமாகச் சிரித்துக் கொண்டார். அந்தப் பாடலை எழுதி விட்டு பல்வேறு விதமான சர்ச்சைகளில், எதிர்ப்புகளில் மாட்டி விழித்ததின் பாடு அவருக்கு மட்டும்தானே தெரியும்!

**

மதுரை குடும்பம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அதன் உறுப்பினர்கள் ஆர்வமாக வாசித்துக் கொண்டிருந்தனர். முன்பிருந்த அதே மாதிரியான கொடூர விதிகள். நேற்று உடம்பு சரியில்லை என்று ஒதுங்கியிருந்த ‘நாட்டாமை’ வையாபுரி ‘நாட்டுக்கோழி குழம்பு’ , பீடாவெல்லாம் கேட்டு ஜாலியாக அலப்பறை செய்து கொண்டிருந்தார். சுஜாவிற்கு மசாஜ் செய்ய வேண்டிய ஜாலியான ‘task’ கணேஷிற்கு. மனிதர் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தார். 

“நாங்க நேத்து உங்களுக்கு ஈசியா task கொடுத்திட்டிருந்தோம். நீங்க என்னடான்னா கிரவுண்டை சுத்தி வா –ன்னு உயிரை எடுக்கறீங்க. மூஞ்சிலேயே குத்துவோம்’னு சொல்லு’ என்றெல்லாம் ஜூலியிடம் ராவடி செய்து கொண்டிருந்தார் காஜல். அம்மணி இப்போதுதான் ‘காயத்ரி’ பாணிக்கு வந்து கொண்டிருக்கிறார். பிக்பாஸ் மனதிற்குள் ‘அப்பாடா, மகராசி ஃபார்முக்கு வராப்பா’ என்று நிம்மதியுடன் கூடிய மகிழ்ச்சியை அடைந்திருக்க வேண்டும். 

மதுரை கலாசாரப்படி சொம்பில்தான் தண்ணீர் வேண்டும் என்று சுஜா பிடிவாதம் பிடிக்க, கழுவப்படாத சொம்பில் நீர் எடுத்துக் கொண்டு வந்து குடித்தேயாக வேண்டும் என்று ஆரவ் துரத்த, சுஜா பயந்து ஓடியது ஜாலியான கலாட்டா. 

Bigg Boss

‘சுஜா, ஜூலியை பிடிக்கவில்லை என்று நேரடியாக சொன்னது தவறு. ஜூலியின் மனது என்ன பாடு பட்டிருக்கும்?’ என்பது ஆரத்தியின் ஆதங்கம். சாத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதான். சற்று முன்னால்தான் ஜூலியின் மூக்கில் குத்தி ரத்தம் வரவழைத்து விட்டு, அதையே இன்னொருவர் செய்யும் போது தக்காளிசட்னி தத்துவத்தை ஆரத்தி பொழிவது கொடூர நகைச்சுவை. “நானும் ஆரம்பத்துல அவளை fake fake’ன்னு சொல்லியிருக்கேன். அது என் தப்புதான்.” என்று இதற்கிடையிலும் வாக்குமூலம் தந்ததற்கு ஆரத்தியை பாராட்ட நினைத்தாலும் இப்பவும் அதே போல் நடந்து கொண்டிருப்பதற்காக கண்டிக்கவும் வேண்டியிருக்கிறது. 

“துவக்கத்திலிருந்து இருப்பவர்களில் வையாபுரியும் கணேஷூம் மாறவில்லை. அப்படியே இருக்கிறார்கள். கலகலப்பாக இருந்த சிநேகன் முற்றிலும் மாறி அமைதியாகி விட்டார். ஆரவ் ஜாக்கிரதையாக மாறி விட்டார்’ என்றெல்லாம் தன் அவதானிப்புகளை பிந்துவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆரத்தி.

ஆரத்தி கழிவறைக்குச் செல்லும் போது பாடுகிறாரா என்று கண்காணிக்க பின்னாலேயே சென்றார் சுஜா. ஆனால் முன்பு ஆரத்தி சென்றது போல ரகசியமாக செல்லாமல், ஆரத்தி அறிவது போல சுஜா சென்றது நல்ல வித்தியாசம். பிந்துவையும் பாட்டுப்பாடிக் கொண்டே வெளியே செல்ல சுஜா வற்புறுத்த, பாடுகிறேன் பேர்வழி என்று ஜாலியாக ஆலாபனை செய்து சமாளித்துக் கொண்டே வெளியேறினார் பிந்து. 

மதுரை குடும்பத்தை கலை நிகழ்ச்சியின் மூலம் குஷிப்படுத்த, ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ பாடலை அற்புதமாகப் பாடினார் ஆரவ். ஹரிஷீற்கு நல்ல போட்டி. ‘Where is the party?’ பாடலுக்கு NRI குடும்பம் ஆட, மதுரை குடும்பமும் தன்னிச்சையாக இணைந்து கொண்டது நல்ல விஷயம். இசைக்கு உள்ள மகத்துவம்.

சமையல் அறைக்கு செல்வதற்கு முன் அனுமதி கேட்டிருக்க வேண்டும் என்ற ஜூலியின் ஆட்சேபத்திற்கு, ‘நீங்களும் கொட்டிக்கறதுக்காகத்தான் சமைக்கறோம். அதுக்கெல்லாம் அனுமதி கேட்க முடியாது.. பே…” என்று காட்டமாக பதிலளித்தார் காஜல். உடனே தேர்ந்த வழக்கறிஞர் போல் சட்டப்புத்தகத்தை எடுத்து வந்து விதிகளை கறாராக சுட்டிக் காட்டினார் ஜூலி. முன்பு இவர் வீட்டில் இருந்த போது, ‘மற்ற உறுப்பினர்கள் இணைந்து கோரிக்கை விடுத்தால் ஒரு உறுப்பினரை (ஓவியா) வெளியேற்ற முடியும் என்று விதி இருக்கிறது. நான் பார்த்தேன்’ என்று குருட்டாம் போக்கில் சொன்னதும் இதே சட்ட மேதைதான். 

இரவு 09.00 மணிக்கே உறங்கிய பிந்துவை நாய் குரைத்து எழுப்பியது. பகலில் தூங்கக்கூடாது என்பதுதானே பிக்பாஸ் வீட்டின் சட்டம்? Task தந்த வெறுப்பினால் நாயின் குரைப்பையும் பொருட்படுத்தாது காஜல் இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்கினார். நாய் குரைத்ததைக் கேட்டு ‘குழந்தை’ சுஜா வழக்கம் போல் பயந்து நடுங்கிப் போனார். 

**

Bigg Boss

‘Seven Stones’ என்ற விளையாட்டு Task தரப்பட்டது. இந்த விளையாட்டைப் பற்றி முன்பே இந்தத் தொடரில் குறிப்பிட்டிருந்தேன். பிக்பாஸ் காதிற்கு விழுந்து விட்டது போல. சுவாரசியமான விளையாட்டு இது. கணேஷ் திறமையாக விளையாடியதால் NRI அணி வெற்றி பெற்றது. ஆனால் அவரவர்களின் இஷ்டத்திற்கு இதன் விதிமுறைகளை போட்டுக் குழப்பினார்கள். 

பந்து எறியப்படும் போது ஒரு முறை பிட்ச் ஆகி எதிர் தரப்பு பிடித்து விட்டால் பந்து எறிபவருக்கு அடுத்த வாய்ப்பு கிடையாது. அவர் ‘அவுட்’ ஆகி விடுவார். எதிராளி பிடிக்காதவாறு பந்தை எறிய வேண்டும். பந்தை எறிவதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. குளத்தின் நீர்ப்பரப்பின் மேலே கல்லை எறிந்து நீர் வட்டங்களை வரவழைப்போம் இல்லையா, அதைப் போல பந்தை குறுக்கு வாக்கில் வேகமாக எறிந்தால் கற்களும் கலையும், பந்தும் தொலை தூரத்திற்கு சென்று விடும். எதிர்தரப்பு பந்தை தேடி எடுத்து வருவதற்குள் கற்களை அடுக்கி விடலாம். 

இதைப் போலவே கற்களை அடுக்குவதை ஒருவர் மட்டுமே செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் வீட்டில் சொல்லப்பட்டதும் தவறு. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து அடுக்கலாம். இதைப் போலவே பிக்பாஸ் வீட்டில் உபயோகித்த கற்கள் என்பது ஒழுங்கான வடிவமைப்பில் உள்ள மரத்துண்டுகள். அவற்றை அடுக்குவது எளிது. ஆனால் நாங்கள் விளையாடும் போது மைதானத்தில் கிடைக்கும் கரடுமுரடான, ஒழுங்கற்ற வடிவில் உள்ள கற்களை வைத்துதான் விளையாட முடியும். எதிரணயில் தாக்கப்பட்டு விடுவோமோ என்கிற பதட்டத்திற்கு இடையில் இவற்றை அடுக்குவது சிரமமானது. 

எனவே பிக்பாஸ் வீட்டில் விளையாடப்பட்டது ‘ஏழு கற்கள்’ அல்ல. மூன்றரை கற்கள் மட்டுமே. அழுகிணி ஆட்டம்.

**

‘உங்க கிட்ட நெறைய பேச வேண்டும்’ என்று ஜூலியிடம் சொல்லியிருந்த சுஜா, இரவு நேரத்தில் ஜூலியை அமர்த்திக் கொண்டு கேள்விக்கணைகளால் துளைத்தார். ‘ஓவியா விஷயத்தில் ஏன் பொய் சொல்லி துரோகம் செஞ்சீங்க?’ என்பது அவர் கேட்ட கேள்விகளின் சாரம். “நான் செஞ்சது தப்புதான். ஆனால் அந்தச் சமயத்தில் எனக்கு குழப்பமாக இருந்தது. வழக்கமாக நான் மசாலா போட்டு விஷயங்களை மிகையாக்குபவள்தான். ஆனால் இந்த விஷயத்தில் உண்மையாகவே எனக்கு குழப்பம்’ என்று ஜூலி விளக்கம் அளித்தாலும் சுஜா சமாதானம் அடைவது போல தெரியவில்லை. 

Bigg Boss

இந்தக் களங்கம் ஜூலியின் மீதிருந்து மறைய இன்னமும் நீண்ட காலம் ஆகும் போலிருக்கிறது. அத்தனை அழுத்தமான துரோகம் அது. ஆனால் ஜூலி மனதார மன்னிப்பு கேட்டு விட்ட பிறகு இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் கிளறிக் கொண்டேயிருப்பது முறையல்ல. ஜூலியை ‘அன்புத் தங்கையாக’ நினைத்து விட்டு விடலாம். பாவம், சின்ன பெண்தானே. முதிர்ச்சியில்லை என்று நினைத்துக் கொள்ளலாம். நம்முள்ளும் பல ஜூலிக்கள் தலைவிரித்து ஆடுவதையும் நினைவில் கொள்ளலாம். 

“இப்பவாவது மாறிட்டீங்களா, அதே மாதிரிதான் இருக்கீங்களா..’என்பது விடாக்கண்டர் சுஜாவின் கேள்வி. ‘அது என் கேரக்ட்டர். ஏன் மாத்திக்கணும். தவறுகள் செய்யும் விஷயத்தில் மட்டும் கவனமாக இருப்பேன்’ என்பது ஜூலியின் சமாதானம். 

 

ஆரத்தியையும் ஜூலியையும் மறுபடியும் வீட்டுக்குள் அழைத்து வந்த பிக்பாஸின் நோக்கம் இப்போது கச்சிதமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அவர்களால் சில பரபரப்பான ஃபுட்டேஜ்கள் கிடைக்கின்றன. ‘இன்றைய நாளை எப்படியோ ஓட்டி விட்டோம். நாளை என்ன செய்வதோ?’ என்கிற கவலையில் மூழ்கியிருப்பார் பிக்பாஸ். கட்டுரையை எழுதும் நானும் அதே மனநிலையில்தான் இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஜுலி மாறியிருக்கிறாரா.... காஜல் காயத்ரி ஆகிறாரா? (67-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

மதுரை குடும்பத்திடம் அதிகாரம் கைமாறி விட்டதைக் குறிக்கும் வகையிலும் அதைக் கொண்டாடும் வகையிலும் ‘மதுர.. குலுங்க.. குலுங்க..’ என்ற பாடலை ஒலிக்க விட்டார் பிக்பாஸ். “கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி” என்ற பாடலை NRI குடும்பம் சோகத்துடன் பாட வேண்டிய வேளையிது. என்றாலும் பாடலுக்கு, மதுரை குடும்பத்தோடு NRI குடும்பமும் இணைந்து குத்தாட்டம் போட்டது சிறப்பு.  அதிகாரம் வந்த மகிழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக சிநேகன் வந்து நடனமாடியது ஆச்சரியம். 

வையாபுரி கணேஷ்



‘மறுபடியும் தங்களுக்கு அதிகாரம் திரும்பக்கிடைத்தால் மதுரை குடும்பத்தை வெச்சு செஞ்சிடலாம்’ என்கிற கற்பனையில் இருக்கிறார் காஜல். ‘ஒரு அரைமணி நேரம் கூட கிடைத்தால் போதும், அதற்குள் பழிவாங்கி விடலாம்’ என்கிற கொலைவெறியில் இருக்கிறார். குறிப்பாக சுஜா மற்றும் ஜூலியை பிரத்யேகமாக பழிவாங்கும் நோக்கில் இருக்கிறார். அவர்கள்தான் தங்களுக்கு கடுமையான taskகளை தந்தனர் என்கிற கடுப்பில் இருக்கிறார் காஜல்.

நாட்டாமை வையாபுரி தலைமையில் பிந்துவிற்கும் ஹரீஷிற்கும் உண்மையாகவே திருமணம் நடந்து விடும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. இரு வீட்டாரும் திருமணப் பேச்சில் மும்முரமாக இறங்கியிருக்கின்றனர். மணப்பெண்ணும் இதற்கு சம்மதித்து விட்டதால் வேறு வழியில்லாமல் NRI குடும்பம் இதற்கு ஒத்துழைக்க வேண்டிய நிலைமை. என்னவொன்று, பெண்ணுக்கு வெட்கம் என்பதே வரவில்லை. அதையும் சொல்லித் தர வேண்டிய நிலைமை. ஆனால் மணப்பெண் பிந்து பயங்கர உஷார். அதிகாரம் இப்போது மதுரை குடும்பத்திடம் இருப்பதால் அங்கு அணி மாறி ஷோபாவிலும் சென்று கெத்தாக உட்கார்ந்து கொண்டார். ஜெயிக்கும் அணியில் தாவி தாம் அரசியலில் இருக்க வேண்டிய ஆசாமி என்பதை நிரூபித்தார் பிந்து. 

இந்த திருமணத்தையொட்டி இரு குடும்பமும் ஜாலியான உரையாடல்களை மேற்கொண்டது. வையாபுரி உண்மையாகவே பழத்தட்டையெல்லாம் கொண்டு வர ஹரீஷூம்  பாவனையாக தாலி கட்ட தொன்னூறு சதவீத திருமணம் முடிந்து போனது. மீதம் என்னெ்னன எல்லாம் ஆகுமோ? தாமதமாக வந்த ஆரவ், ‘இந்தக் கல்யாணம் செல்லாது” என்று அலப்பறை செய்தார். 

ஜூலி



Task தரப்படாமல் எப்படி சமையலறைக்குள் செல்லலாம் என்கிற நேற்றைய பஞ்சாயத்து மறுபடியும் வந்தது. நேற்றைய தினத்தைப் போலவே காஜல் இன்றும் கோபித்துக் கொண்டார். ‘உங்களுக்கு வடிச்சுக்கொட்டத்தானே வேலை செய்யறோம். அதுக்கும் task-ஆ..? முடியாது போய்யா..” என்றார் ஹரிஷிடம். “நீங்க கொடுத்த எல்லா task-ஐயும் நான் செஞ்சேன்” என்றார் ஹரீஷ் பரிதாபமாக. 

வேப்பங்குச்சியால் பல் விளக்குவது எப்படி என்று வெளிநாட்டு மாப்பிள்ளை கணேஷிற்கு ‘டெமோ’ காட்டினார் வையாபுரி. இதற்காக வையாபுரியின் பற்களை குளோசப்பில் காட்டி நம்மை மிரள வைத்தார்கள். “வெளியே போகணும். எனவே ஆரவ் குடை பிடிக்கணும்”: என்று பிடிவாதம் பிடித்தார் சுஜா. அதை தவிர்க்க விரும்பிய ஆரவ், பிறகு தனக்கு மட்டும் குடை பிடித்துக் கொண்டு சாமர்த்தியமாக சுற்றி வந்தார். ‘ஒரு பெண்ணிற்கு போய் குடை பிடிப்பதா?’ என்கிற அகங்காரம் உள்ளுற அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஹரீஷ் பரவாயில்லை. 

“கேள்வி – பதில் விளையாட்டின் மூலம் சிநேகனின் வாயில் இருந்து ஏதாவது பிடுங்க முடியுமா என்று பார்க்கிறார் சுஜா. ‘நமது நிருபர்’ வேலையை பிந்து கை விட்டு விட்ட பிறகு இவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். ‘இந்த வீட்ல எல்லாம் சரியா இருக்கா?” என்கிற கேள்விக்கு ‘வீடுதான் சரியா இருக்கு. மனுசங்க..’ என்று தத்துவார்த்தமாக பதிலளித்தார் சிநேகன். இது நமக்கு உடனே புரியாது. நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் புரியும். ‘எம்.ஏ. பிலாஃசபி… எம்.ஏ. பிலாஃசபி…’

“ஜூலி திரும்ப வந்திருக்காங்களே, அவங்களைப் பற்றி?” என்று தனது பிரியமான தோழியைப் பற்றி அடுத்த கேள்வியாக கேட்டு சிநேகனின் பதிலை எதிர்பார்த்தார் சுஜா. “போன ஜூலி திரும்பி வரவில்லை’ என்பது சிநேகனின் அடுத்த தத்துவ பெளன்சர். மறுபடியும் அதேதான். எம்.ஏ. பிலாஃசபி.

“காதல்-ன்றது ஒரு பூ மாதிரி. ஒரு முறைதான் மலரும்’ என்கிற விக்ரமன் படங்களின் ‘லாலாலா’ வசனங்கள் போல காதலின் மகத்துவத்தைப் பற்றி வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தார் சிநேகன். டி.ஆர். மனநிலையிலிருந்து ஜெமினிகணேசன் மனநிலைக்கு எப்போது மாறினார் என தெரியவில்லை. 

‘காதலின் அருமை காமுகனுக்குப் புரியாது” என்றெல்லாம் அவர் இடித்துரைத்தது யாரை? (ஆரவ்வையா?) “தோற்ற காதல்தான் சொர்க்கத்தில் சென்று சேரும்’ என்றெல்லாம் பினாத்திக் கொண்டிருந்த சிநேகனின் தாடிக்குப் பின்னால் பெரும் சோகமும் நிறைய துர்தேவதைகளும் இருக்கும் போலிருக்கிறது. 

**

ஆரத்தி



லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் முதல் பகுதியாக ஓர் அபாயகரமான விளையாட்டு நிகழ்த்தப்பட்டது. மதுரை குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்ட பிந்து ‘வடை – பாயசம்’ சமைக்க வேண்டும். இதை தனியாகத்தான் அவர் செய்ய வேண்டும். வேறு எவரும் உதவக்கூடாது. சுஜாவும் ஜூலியும் இந்த அணுகுண்டு சோதனையை உஷாராக கண்காணிப்பார்கள். 

‘சமையல் தெரியுமா?’ என்று முன்னர் வையாபுரி ஒருமுறை விசாரித்த போது ‘First class-ஆ தெரியும்” என்றெல்லாம் கெத்து காட்டிய பிந்து, இப்போது எல்கேஜி குழந்தை மாதிரி மலங்க மலங்க விழித்தார். கூண்டில் மாட்டிக் கொண்ட சுண்டெலி மாதிரி என்னெ்னமோ செய்தார். ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டை பிரித்து ‘அது என்ன வஸ்து?’ என்று முகர்ந்து பார்த்து கண்டுபிடித்தார். சுவை (?!) சரியாக வந்திருக்கிறதா என்பதற்காக நாக்கால் நக்கி, முகர்ந்து என்று என்னென்னவோ செய்தார். உவ்வேக்…  நைசாக உதவ வந்த ஆரவ்வின் சதியை சுஜா வெற்றிகரமாக முறியடித்தார். 

பல்வேறு கிண்டல்களுக்குப் பின்னர், பிந்துவின் விடாமுயற்சிக்குப் பின்னர் சேமியா உப்புமா மாதிரியான ஒரு திடதிரவமும், வடை மாதிரியான ஒரு வஸ்துவும் தட்டில் வந்து அமர்ந்தன. புது மாப்பிள்ளை வடையை சுவைத்து விட்டு வழிந்து கொண்டே ‘நல்லாயிருக்கு’ என அங்கீகரித்தார். ‘ஆனா வடைல மஞ்சள்தூள் போட்டீங்களா?’ என கேட்க ‘மஞ்சள்’ னா என்னது என பிந்து கேட்டது ‘அதான் தெரியுமே’ முத்துலட்சுமி வகை காமெடி. 

வையாபுரியும் இந்த உணவை அங்கீகரித்தார். “வடை நல்லாயிருக்கு. சேமியா பாயசத்திற்குப் பதிலா சேமியா கிச்சடி’ வந்திருக்கிறது என்பது மாமனாரின் அபிப்ராயம். ‘அடுப்பைக் கூட பத்த வைக்கத் தெரியுமா என்று பார்த்தால் குடும்பத்தையே பத்த வெச்சிடுவா போலிருக்கிறது” என்று மருமகளின் புகழை பாடித் தீர்த்தார். 

“ரெண்டு நாளா ஓபி அடிச்சிட்டே இருக்கே. இன்னிக்காவது போய் பாத்திரம் கழுவு” என்று காஜல் ஆரவ்விடம் அலப்பறையை துவக்கினார். ‘அவர் பாத்திரம் வெளக்கினாரே:” என்று ஆரவ்விற்கு ஜூலி ஆதரவு தர முயல ‘மகராசி உன் திருவாயை கொஞ்சம் மூடு. இல்லைன்னா நீ போய் வேலை செய். என்னை வேலை செய்யலைன்னு சொல்லிட்டே இருந்தீங்க இல்லையா?’ என்றெல்லாம் காஜல் சிடுசிடுப்பைக் காட்ட ஜூலியின் முகம் பரிதாபகரமாகத் தொங்கியது. ‘இதென்னடா வம்பா போச்சு” என்று ஆரவ்வும் ஹரிஷூம் நைசாக நடையைக் கட்டினார்கள். ‘நான் அனத்தற வரைக்கும் இருங்கடா” என்ற காஜலின் வேண்டுகோளை அவர்கள் காதில் விழாதது போல நழுவி தப்பினார்கள். 

**
சிதைந்து போன தன்னுடைய பிம்பம் குறித்து ஜூலி புலம்பியதைப் பார்க்க பரிதாபகரமாக இருந்தது. ‘வெளியே போன பிறகு எப்படி இருந்தது” என்று ‘முன்னாள் நிருபர்’ பிந்து கேட்க, ‘சமூக வலைத்தளங்கள்ல உள்ள கருத்துக்களை படிக்க முடியலை. அத்தனை மோசமா இருந்துச்சு. மக்கள் என்னை ஏத்துக்கற மூடில் இல்லை. என்னை தீவிரவாதி மாதிரி பார்க்கறாங்க. ‘நீ செத்துப் போயிருப்பன்னு நெனச்சோம்’ என்றலெ்லாம் கமென்ட் வருது. ‘நீ ஒரு பொய்க்காரி-ன்னு திரும்பத் திரும்ப சொல்றாங்க’

ஜூலி



“ஓவியா விஷயத்துல நான் செஞ்சது தப்புதான். ஆனா நான் மாறவே மாட்டேன்னு எப்படி நெனக்கலாம். என் அடிப்படையான காரெக்ட்டரை மாத்த முடியாது. ஆனால அதில் இருக்கிற தவறான பழக்கங்களை நிச்சயம் மாத்திப்பேன். சரி.. எவ்ள நாள்தான் அடிப்பீங்க.. திட்டுவீங்க.. என் பலவீனத்தை பலமா மாத்திப்பேன்”

என்றெல்லாம் ஜூலியின் புலம்பல் நீண்ட நேரத்திற்கு சென்றது. கமல் சொன்னது போல கோபத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் பிசகி விட்டு, முதிர்ச்சியின்மை காரணமாக சறுக்கிய ஓர் இளம் பெண்ணை, அவர் மன்னிப்பு கேட்ட பிறகும் மக்கள் இத்தனை வசை பாடுவது முறையாகத் தெரியவில்லை. தமிழக மக்கள் ஒருத்தர் மீது அன்பு வெச்சிட்டாங்கன்னா அத்தனை சீக்கிரம் விட்டுத் தர மாட்டாங்க’ன்றது நல்ல விஷயம்தான். ஆனால் வெறுப்பையும் அதே பிடிவாதத்துடன் பின்பற்றத் தேவையில்லை. 

“காஜலை சும்மா trigger பண்ணி விட்டா போதும். ஒருமணி நேரத்திற்கு புலம்பிட்டு இருப்பாங்க.. எண்டர்டெயின்மெண்ட்டா இருக்கும். ஜாலியா பொழுது போகும்’ என்றொரு டெரரான ஐடியாவை தந்தார் ஆரவ். அதன் படியே காஜலை அழைத்து ‘இந்த ரூமையெல்லாம் பெருக்கிட்டியாமா” என்று திரியைக் கிள்ள சரவெடியாக வெடித்தார் காஜல். ‘இப்பத்தான் சமையல் வேலையெல்லாம் செஞ்சுட்டு வந்து படுத்தேன். பெருக்க வேற செய்யணுமா? பிச்சிப்புடுவேன். நான்சென்ஸ்’ என்றெல்லாம் காஜல் பொங்க, ஆரவ் கூட்டணி சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தது. 

**

“ரைசா என்னை நாமினேட் செஞ்ச போதெல்லாம் நான் எலிமினேட் ஆகலை. ரெண்டு பேரும் நல்லா பழகி, அவ என்னை நாமினேஷன் செய்யாத வாரத்துலதான் நான் எலிமினேட் ஆனேன்’ என்றொரு புதிய கண்டுபிடிப்பை காஜலிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலி.

“இப்ப வந்திருக்கிறது வேற ஜூலி-ன்னு சிநேகன் ஆதங்கப்படறாரே?” என்று கேட்டு ஜூலியின் வாயைப் பிடுங்க முயன்றார் காஜல். “அவரு மேல எப்பவும் பாசம் மரியாதைல்லாம் இருக்கு. ஆனா பழைய ஜூலி எப்படி திரும்ப வர முடியும். அவ வர மாட்டா. எல்லோரையும் முழுசா நம்பிட்டேன். எந்த இடத்துல எது பேசணும், எது பேசக் கூடாதுன்னு இப்ப தெரிஞ்சிட்டு. ஆயிரம் நல்லது செஞ்சாலும் ஒரு கெட்டதுனால எல்லாமே மாறிடுது. இனிமே யாரைப் பத்தியும் புறம் பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்’ என்றலெ்லாம் ஜூலியின் சுயபரிசீலனை தீர்மானங்கள் வெளிவந்தன, ஏதோவொரு மாற்றம் அவரிடம் தெரியத்தான் செய்கிறது. 

தனது தோழியான காயத்ரியின் சார்பில் பேசினார் ‘ஜூனியர் காயத்ரி’ காஜல். ‘அவங்க ஒரு முறை கெட்ட வார்த்தை பேசினாலும்.. இந்த சிநேகன் என்ன பண்றாரு. திரும்பத் திரும்ப அதை சொல்லி என்னமோ அவங்க நெறய முறை பேசின மாதிரி மக்கள் கிட்ட establish செஞ்சிடறாரு” என்று காயத்ரி பக்கம் நியாயம் பேசினார் காஜல்.  கற்றோரை கற்றோரே காமுறுவர் என்பது இதுதான் போலிருக்கிறது. 

**
‘தட்டறோம் தூக்கறோம்’ என்கிற task-ல் கிரிக்கெட் மாதிரியான ஒரு போட்டி நிகழ்த்தப்பட்டது. மஞ்சள் மற்றும் பச்சை அணியாக பிரிக்கப்பட்டது. போட்டி நடைபெறுமிடத்தில் உணவுப்பொருட்களின் பெயர் தாங்கிய அட்டைகள் இருக்கும். அடிக்கும் பந்து அந்த அட்டையில் பட்டால் அதிலுள்ள பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும். (விளம்பரங்களை எப்படியெல்லாம் நாசூக்கா சோக்கறாங்க).

ஆரவ்



ஆரவ்வும் ஹரிஷூம் சிறப்பாக விளையாடி பொருட்களை தேர்ந்தெடுத்து சேர்த்தனர். ஒரு கிலோ மட்டன் உள்ளிட்ட நிறைய பொருட்கள் வரும் வாய்ப்பு கிடைத்தது. ‘நாட்டுக்கோழி’யையும் சேர்த்து வையாபுரியின் நீண்ட நாள் ஏக்கத்தையும் போக்கியிருக்கலாம். பெளலிங் மாதிரியான ஒரு விஷயத்தை சிநேகன் செய்தார். அது என்னவென்று கிரிக்கெட் கமிட்டியிடம்தான் விசாரிக்க வேண்டும். 

ஹரீஷ் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கூட ஒருமாதிரியாக சகித்துக் கொள்ளலாம். ஆனால் சிறந்த பெளலராக வையாபுரியை கணேஷ் எப்படி முன்மொழிந்தார் என்பது புரியவேயில்லை. கணேஷிற்கு கிரிக்கெட்டின் மீது அப்படியென்ன கோபம்? விளையாட்டு என்றாலே அதில் ஃபிக்ஸிங் போன்ற முறைகேடுகள் வந்துவிடும் போலிருக்கிறது. 

‘அய்யா.. பிக்பாஸ்.. பரிசா வந்திருக்கிற பொருட்களையெல்லாம் நாங்க சேர்ந்து சாப்பிடறோம். ஜெயிச்சவங்கதான் சாப்பிடணும்னு சொல்லி குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க. உங்க ஃபுட்டேஜ் போதைக்காக நாங்க ஊறுகாயா ஆக முடியாது’ என்றெல்லாம் கோரிக்கை வைத்து முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக முன்ஜாமீன் மனுவை போட்டு வைத்தார் வையாபுரி. நாட்டாமை, நாட்டாமைதான். 

‘நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வீடு குதூகலமாக இருக்கிறது. இந்தக் குதூகலம் நீடிக்குமா?’ என்ற அசரிரீயின் குரலில் ‘நீடித்து விடுமோ’ என்கிற பதட்டம் தெரிந்தது. குதூகலம் நீடித்தால் நம்முடைய குதூகலம் போய் விடுமே. பார்த்து ஏதாவது செய்யுங்க முதலாளி..

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/100973-has-julie-changed-is-kajal-the-new-gayathri-bigg-boss-tamil-updates-day-67.html

Link to comment
Share on other sites

சொந்த செலவுல ஏன் சூனியம் வைச்சுக்குறீங்க பிக்பாஸ்? (68-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்

Bigg_Boss_Baner_11586_09378.jpg

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் இருந்து ‘என் வீட்டுல நான் இருந்தேனே’ பாடல் ஒலிபரப்பானது. இப்போதெல்லாம் நடனமாடும் கூட்டம் அதிகமாகிறது. கணேஷ் கூட நடனமாடத் துவங்கி விட்டார். 

பரணி மற்றும் ஓவியாவின் வெளியேற்றத்திற்கு தானும் ஒரு வகையில் காரணமாக இருந்து விட்டோம். இல்லாவிடில் அவர்கள் போட்டியில் வென்றிருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஓவியா இனிமையானவள்’ என்றெல்லாம் ஹரிஷூடம் புலம்பிக் கொண்டிருநதார். ஜூலி. கட் செய்தால் அந்தப் பக்கம் ஆரத்தியின் புறம் பேசுதல் இவ்வாறு இருந்தது. ‘பாம்பு சட்டையை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பாம்பு, பாம்புதானே?’ என்றார். ஜூலி குறித்தான கமெண்ட் என்பது எளிதில் புரிந்தாலும் இது ஆரத்திக்கேதான் பொருத்தமானது. 

6_09437.jpg

ஏற்கெனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி ஒருவரை வெறுப்பேற்றுவதில், நோண்டிக் கொண்டேயிருப்பதில் ஆரத்தி திறமைசாலியாக இருக்கிறார். மற்றவர்களின் மனம் புண்படாதவாறு பேசும் இயல்புள்ளவர்கள், இது போன்றவர்களை எதிர்கொள்வது சிரமம். அவர்கள் சொல்வதை சகித்துக் கொள்ளவும் முடியாது, அதற்காக அவர்கள் அளவிற்கு இறங்கியும் சண்டை போட முடியாது. தரமசங்கடமான நிலைமை. மனஉளைச்சல் அதிகம் நேரும். சமூகவலைத்தளங்களில் கூட இம்மாதிரியான ஆசாமிகளை பலமுறை எதிர்கொண்டுள்ளேன். 

இதற்கிடையில் தொடர்பேயில்லாமல் பருத்திவீரன் டயலாக்கை ஜூலியுடன் ஆவேசமாக பேசிப் பழகிக் கொண்டிருந்தார் கணேஷ். முன்பு ஒரு சவாலிற்காக கற்றுக் கொண்டதை இப்போது மறுபடியும் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. 

**

பிக்பாஸ் வீட்டில் இன்று இரண்டு சர்ச்சைகள் நிகழ்ந்தேறின. ஒன்று, பிந்து, ஹரீஷ் மீது காதல்வயப்பட்டது போல் நடித்த விவகாரம். இன்னொன்று ஆரத்தி, ஜூலி மீது பிறாண்டிக் கொண்டேயிருந்தது. முதல் சர்ச்சையில் உண்மையும் பொய்யும் கலந்திருந்தது. இரண்டாவதில் பொய்யும் உண்மையும். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பிந்து –ஹரீஷ் திருமணப் பேச்சுகள் ஓரளவிற்கு மேல் எல்லை தாண்டி சென்று கொண்டிருந்தன. அது task-ன் பகுதி இல்லையென்றாலும் நகைச்சுவைக்காக அப்படியே இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். பிந்து இதைக் குறித்து ஏன் எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை ஹரீஷ் மீது அவருக்கு உண்மையாகவே ஏதாவது சாஃப்ட் கார்னர் இருந்து அது சார்ந்த குஷியில் இந்த விளையாட்டுக்களை உள்ளுற ரசித்துக் கொண்டு அனுமதித்துக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றியது. 

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பே பிக்பாஸ் அவருக்கு ஒரு ரகசிய சவால் கொடுத்திருந்த விஷயம் இன்றுதான் (பார்வையாளர்களுக்கு மட்டும்) அறிவிக்கப்பட்டது. அதன்படி பிந்து ஹரீஷ் மீது காதல் வயப்பட்டிருப்பது போல நடிக்க வேண்டும். மற்றவர்கள் இவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் வேடிக்கையாக மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று மற்றவர்கள் மீது கோபப்பட்டு எகிறி விழ வேண்டும். 

2_09255.jpg

பிந்துவிற்கு எந்த இடத்தில் தன்னுடைய ரகசிய சவாலைத் துவங்க வேண்டும் என்பதில் குழப்பமும் தயக்கமும் இருந்தது போல. எனவே தாமதமாக இன்று துவங்கினார். எல்கேஜி ரைம்ஸ் சொல்வது போல ஒவ்வொரு விஷயத்தையும் மழலைத் தமிழில் சொல்வதால் அவர் சொல்வது எதுவுமே சீரியஸாகத் தெரிவதில்லை. மட்டுமல்லாமல் அம்மணிக்கு கோபப்படுவது போல் நடிக்கவும் தெரியவில்லை என்பதால் அவர் செய்வதெல்லாம் காமெடியாகவே தெரிகிறது. பிக்பாஸ் இந்த சவாலிற்கு பிந்துவை தேர்ந்தெடுத்தது பெரிய தோல்வி. 

மற்றவர்கள் எவருமே பிந்துவின் இந்த ‘கோபத்தை’ சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆரத்தி முதலிலேயே கண்டுபிடித்து விட்டார். இது நிச்சயம் பிக்பாஸ் தந்த சவால்தான் என்று. வையாபுரிக்கும் பிந்து மீது அசாத்தியமான நம்பிக்கை. ‘அவ அப்படிலாம் செய்யமாட்டா. எனக்கு நல்லாத் தெரியும்’ என்று உறுதியாக கூறிக் கொண்டிருந்தார். 

எனவே மற்றவர்களை நம்ப வைக்க தன் நடிப்பில் கூடுதலாக மசாலா சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் பிந்துவிற்கு. எனவே தொடர்ந்து கோபமாக இருப்பது போலவும் மூட்அவுட் போனது போலவும் நடித்துக் கொண்டிருந்தார். எளிதில் சிரித்து விடும் இயல்புள்ள அவருக்கு இது உண்மையிலேயே சவாலாகத்தான் இருந்திருக்க வேண்டும். எனவேதான் வாக்குமூல அறைக்குச் சென்ற பிந்து, ‘இந்த சவாலினால் வீட்டில் குழப்பம் ஏற்படுகிறது. தொடர்வதா, வேண்டாமா” என்று மனச்சாட்சி உறுத்தலுடன் கேட்டார். 

1_09522.jpg

ஆரத்திக்கும் ஜூலிக்கும் மட்டும் இந்த ரகசிய சவாலைப் பற்றிக் கூறி அவர்களின் உதவியை நாடுமாறு பிக்பாஸ் பரிந்துரைத்தார். இரண்டு பேரும் தேர்ந்த கோள் மூட்டிகள். எனவே தங்கள் பணியைத் திறம்பட செய்ய முயன்றார்கள். 

பிந்துவின் தொடர்ந்த பிடிவாதத்தைக் கண்ட மற்ற போட்டியாளர்களுக்கு இப்போது மெல்ல சந்தேகம் உருவாகியது. ‘ஒருவேளை பிந்து உண்மையாகவே ஹரிஷ் மீது காதல் வயப்பட்டிருக்கிறாரோ. இன்னொரு ஓவியா விவகாரம் போல இதுவும் ஆகி விடக்கூடாதே’ என்று நினைத்தனர். இது சார்ந்து அதிகம் பதட்டப்பட்டவர் வையாபுரி. பிந்துவையும் ஹரீஷையும் நோட்டமிட்டுக் கொண்டே இருந்தார். “அதெல்லாம் வேண்டாம்மா. விட்டுடு’ என்று பொறுப்புள்ள தந்தையாகவே மாறி விட்டார். இந்த நோக்கில் அவரது அக்கறை சீரியஸ் காமெடியாக மாறி விட்டது. 

ஹரீஷின் நிலைமைதான் அதிக தர்மசங்கடம். என்னடா, விளையாட்டு வினையாகி விட்டதே’ என்று நெளிந்து கொண்டேயிருந்தார். ஆனால் உள்ளுக்குள் அவருக்கு மிதப்பாகவே இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ‘அடடே! பம்பர் லாட்டரி அடிச்சதே என்று. அல்லது உண்மையாகவே அவருக்கு பிந்து மீது எவ்வித அபிப்ராயமும் ஏற்படாமலும் இருந்திருக்கலாம். ‘என்னங்க.. நம்ம சும்மாதான் விளையாடினோம்…’ என்பதை விதம் விதமாக சொல்லிக் கொண்டிருந்தார். 

5_09090.jpg

‘இது taskதானே?’ என்று மற்றவர்கள் வற்புறுத்திக் கேட்கும் சமயங்களில் தன் கோபத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாத பிந்து ‘ஆமாம்… இது taskதான் போங்க..’ என்று சமாளித்தார். ‘மவளே.. இது மட்டும் task-ன்னு தெரிஞ்சது. கொண்டே புடுவேன்…’ என்று சிநேகன் கொந்தளித்தார். ‘அவ விளையாடுறான்னு நெனக்கறேன். உண்மையா இல்லையான்று டெஸ்ட் பண்ண ஒரு உம்மா கேளு” என்று ஹரிஷீற்கு டெடரான ஐடியா கொடுத்தார் சிநேகன். தமிழ் சினிமாவின் அபத்தமான காட்சிகளை கவிஞர்களே அதிகம் நம்புகிறார்கள் போலிருக்கிறது. ஹரிஷூம் அந்த யோசனையைப் பின்பற்ற. ‘கேமரால்லாம் இருக்கு’ என்று வெட்கப்பட்டது பிந்து மயில். ‘முத்தம் கொடுத்தாதான் காதலா’ என்றொரு உருப்படியான தர்க்கத்தையும் வைத்தார். 

**

ஓர் எழுத்தாளன் கதை எழுதிக் கொண்டிருக்கும் போது அவன் கற்பனையாக எழுதிக் கொண்டிருக்கும் புனைவில் உருவாகும் சம்பவங்கள் நிஜமாகவே அவனைச் சுற்றி நடப்பது போல் அமையும் சினிமாக்களை நாம் பார்த்திருக்கிறோம். (சமீபத்திய தமிழ் சினிமா உதாரணம்: ‘உரு’) இதைப் போலவே பிக்பாஸ் வீட்டில் தன்னிச்சையாக நிகழும் சம்பவங்களையே சவால்களாக பிக்பாஸ் தந்து கொண்டிருப்பதை நாம் கவனிக்க முடியும். உதாரணத்திற்கு ‘hi buddy’ என்று பிந்துவும் வையாபுரியும் விளையாடிக் கொண்டிருந்ததை ‘யார் கொலையாளி’ சவாலில் அப்படியே இணைத்து விட்டார் பிக்பாஸ்.  

இதைப் போலவே ஆரவ் –ஓவியாவிற்கு இடையில் நிகழ்ந்த காதல் விவகாரத்தை அப்படியே ஹரிஷ்-பிந்து சவாலில் இணைத்து விட்டார் என்பது என் யூகம். இந்த விளையாட்டு ஒருவகையில் சொந்த செலவில் சூனியம் வைக்கும் ஆபத்தைக் கொண்டது. 

ஏன் என்று சொல்கிறேன். 

பிக்பாஸ் என்பது முன்கூட்டியே செயற்கையாக உருவாக்கப்பட்ட சம்பவங்களின் தொகுப்பு, அதாவது scripted என்பது பலரின் அனுமானம். எனவே இந்த நிகழ்ச்சியை சிலர் புறக்கணிக்கிறார்கள். சிலர் அதை அறிந்திருந்தாலும் கூட ஆர்வம் காரணமாக தொடர்ந்து பார்க்கிறார்கள். இன்னமும் சில சதவீத நபர்கள் இவற்றை உண்மை என்றே கருதிக் கொண்டு பார்க்கிறார்கள்.

ஆனால் என்னுடைய புரிதலில் பிக்பாஸில் என்ன நிகழ்கிறது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். சர்ச்சைகள் உருவாகும் சூழல்களின் உள்ளே போட்டியாளர்கள் உந்தித் தள்ளப்படுகிறார்கள். அதற்கான பின்னணிகள் மட்டும் பிக்பாஸ் டீமால் மிக கவனமாக திட்டமிடப்படுகிறது. அந்த சர்ச்சைகளின் படுகுழிகளில் விழுந்து விடாமல் ஜாக்கிரதையாகவும் சகிப்புத்தன்மையுடனும் விளையாடும் போட்டியாளர்கள் வெற்றியை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது. கணேஷ் சிறந்த உதாரணம். ஆனால் சகிப்புத்தன்மை குறைவாக உள்ளவர்கள், எளிதில் உணர்வு வயப்பட்டு விடுபவர்கள் இந்த குழிகளில் எளிதில் விழுந்து விடுவார்கள். இது சார்ந்து நடக்கும் அவர்களுக்குள் நிகழும் உணர்ச்சி மோதல்கள், கோப தாபங்கள் ஏறத்தாழ உண்மையானது. அவர்களின் உடல்மொழியைக் கவனித்தாலே தெரியும். அது போல் நடிப்பது சிரமமானது. கமல் குறிப்பிட்டது போல தன்னிச்சையாக நிகழும் இது போன்ற சம்பவங்களை ‘திரைக்கதையாக’ எழுதுவது அதிசிரமமானது. பிக்பாஸ்ஸின் பிரம்மாண்டமான வெற்றி, இது போன்ற தருணங்களின் மீதான நம்பகத்தன்மையில்தான் அமைகிறது. 

7_09354.jpg

இந்த நம்பகத்தன்மையை சிதைக்கும் வேலையை பிக்பாஸே செய்கிறாரோ என்பதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். பிந்து –ஹரீஷ் விவகாரம் task என நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. பிந்து தாமதப்படுத்தியதால்தான் வேறு வழியின்றி அது பார்வையாளர்களுக்குச் சொல்லப்பட்டது என நினைக்கிறேன். ஆனால் பார்வையாளர்களின் மனதில் இனி என்னவெல்லாம் நிகழக்கூடும்? ஏற்கெனவே இது scripted programme என்கிற சந்தேகம் உள்ளவர்களுக்கு இனி எல்லாமே சந்தேகமாகத் தோன்றும். இந்த வகையில் ஜூலிக்கும் ஆரத்திக்கும் இடையிலான பிறாண்டல்கள் கூட ‘எழுதப்பட்ட திரைக்கதைதானோ’ என்று தோன்றி விடும் ஆபத்தும் உள்ளது. இனி வரும் சவால்களில் இது போன்ற taskகளை பிக்பாஸ் தவிர்க்கலாம் என்பது என் அபிப்ராயம்.  

**

இதையும் இந்தக் கட்டுரையில் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இந்த நிகழ்ச்சி ‘மனித உணர்வுகளின் மீது ஆடப்படும் சூதாட்டம்’ என்று. ஓரெல்லை வரைக்கும்தான் இது சுவாரசியம். எல்லையைத் தாண்டினால் ஆபத்தாக போகவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை ஹரீஷிற்கு பிந்து மீது உண்மையாகவே ஏதாவது விருப்பம் இருந்து, பிந்துவும் இப்போது வற்புறுத்துவதால் அவர் குஷியாகி கற்பனையில் மிதக்கிறார் என வைத்துக் கொள்வோம். அது task என்பதை பின்னர் உணரும் போது உண்மையாகவே அவர் ரகசியமாக வருந்த வாய்ப்புள்ளது. மனம் உடைவதற்கான சந்தர்ப்பமுள்ளது. நல்லவேளையாக எல்லாமே task என்பதை ஹரீஷூம் ஏற்றுக் கொண்டதால் ஆபத்தில்லாமல் சுபமாக முடிந்தது. இல்லாவிட்டால்?

இந்தக் குறிப்பிட்ட task அந்தரங்கமான உணர்வுகளின் மீதான ஆபத்தான விளையாட்டு என்றாலும் இன்னொரு வகையில் சுவாரசியமாகத்தான் இருந்தது. இப்படிச் சொல்வது குரூரத்தனமானதுதான். குரூரத்தனங்களும் இணைந்துதானே நம் வாழ்க்கை!

பிந்துவால் தம் நடிப்பை திறம்பட கையாள முடியவில்லையென்றாலும் பிறரை குழப்புவதில் எப்படியோ வெற்றி பெற்று விட்டார். குறிப்பாக வையாபுரியின் மிகையான பதட்டம் நம்மை சிரிக்க வைத்தது. ஆனால் அவருடைய நோக்கில் பிந்துவின் மீது உண்மையாகவே கவலைப்படுகிறார் என்பது புரிகிறது. வையாபுரியிடம் இருந்த ‘தந்தை’ விழித்துக் கொண்டு விட்டார். 

ஒருநிலைக்குப் பிறகுதான் இதுவொரு task என்கிற விஷயம் ஹரீஷிற்கு அறிவிக்கப்பட்டது. (பாவம், மனிதர் மனதில் என்ன நினைத்தாரோ) இப்போது அந்த விஷயம் பிந்துவிற்குத் தெரியாது. எனவேதான் ஹரீஷ் குளத்தில் தள்ளிவிடும் போது உண்மையாகவே பயந்து போனார் பிந்து. ஹரிஷூம் உடனே மன்னிப்பு கேட்டார். இவர்கள் இணைந்து விளையாடியது இப்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் பிந்துவின் குணாதிசயம் அறிந்த அனைவருக்குமே இதுவொரு task என்கிற சந்தேகம் இருந்ததால் பெரிதான ஆச்சரியம் ஒன்றும் ஏற்படவில்லை. 

கத்தி மீது நடப்பது போன்று ஜாக்கிரதையாக விளையாட வேண்டிய விளையாட்டு இது. நல்லவேளையாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இது சவாலாக அவர்களுக்கு தரப்பட்டாலும் அதை எவ்வாறு, எப்போது நிகழ்த்துவது என்பது சார்ந்த மனத்தத்தளிப்புகள் அவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். அது சார்ந்த கற்பனைகளை, ஒத்திகைகளை அவர்கள் மனதிற்குள் பலமுறை நிகழ்த்தி பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். அதே சமயத்தில் இது மற்றவர்களுக்கு தெரிந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்லுளி மங்கன்கள் மட்டுமே இது போன்ற விளையாட்டுக்களை திறம்பட செய்ய முடியும். எளிதில் சிரித்து விடுபவர்கள், உணர்வுவயப்படுபவர்கள் கையாள்வது சிரமம். 

**

collage_09315.jpg

இன்னொரு விவகாரம் ஜூலி – ஆரத்தி தொடர்பானது. இது task ஆக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களின் முகபாவங்களில் இது சார்ந்த உண்மையான கோபங்கள் வெளிப்பட்டன. பெயிண்ட் செய்யும் சவாலின் முடிவை அறிவிப்பதில் துவங்கியது இந்த சர்ச்சை. ஏற்கெனவே ஆரத்திக்கும் ஜூலிக்கும் ஏழாம் பொருத்தம் வேறு. 

இறுதி வடிவம் நீல நிற அணியால் திறமையாக முடிக்கப்பட்டது. நேரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் நீல நிற அணி திறமையாக கையாண்டது, எனவே வெங்கலக் கிண்ணி அவர்களுக்குத்தான் என்பது ஜூலியின் வாதம். ஆனால் முதல் கட்டத்தில் சிவப்பு நிற அணிதானே தன் பணியை வேகமாக செய்து முடித்தது, அந்த உழைப்பை கணக்கில் கொள்ள வேண்டாமா என்பது ஆரத்தியின் அடம். எனவே ஒவ்வொருவரும் அவர்களின் முடிவில் பிடிவாதமாக இருந்தார்கள்.

முடிவை அறிவிக்கும் பணியை பிக்பாஸிடம் விட்டு விடலாம் என்று பார்த்தால் ‘இல்லை. நீங்களேதான் முடிவை அறிவிக்க வேண்டும்’ என்று அறிவித்து விட்டார். பின்னே.. அவருடைய நாரதர் பிழைப்பை அவர் பார்க்க வேண்டாமா?

ஒரு பாமரனாக, வீடியோவில் பார்த்தவரை நீல அணியின் பெயிண்ட்டிங் சிறப்பாக அமைந்தது என்றுதான் நான் நினைக்கிறேன். எனவே ஜூலியின் தீர்ப்பு சரியானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் ஜூலியின் மீது நிரந்தர கடுப்பில் இருக்கும் ஆரத்தியால் அந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேண்டுமென்றே மறுத்தார். “வேணுமின்னா கேக்கை எடுத்துக்கோங்க’ என்றெல்லாம் சொல்லி எதிர் தரப்பினரை அவமானப்படுத்தினார். 

இது மட்டுமல்லாமல் ஜூலியை தொடர்ந்து அழைத்து நக்கலாக பேசி ஜூலியை மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார். ஜூலி எப்படியோ சமாளித்தாலும் ஆரத்தி விடுவதாக இல்லை. ஒருவகையில் ஆரத்தி வெளிப்படையாகத்தானே நடந்து கொள்கிறார்? என்று கூட பார்வையாளர்களின் சில சதவீதத்திற்கு தோன்றலாம். தவறில்லை. ஆனால் தான் வெளிப்படையாக இருப்பது இன்னொருவரின் மனதை ஆழமாக புண்படுத்துகிறது என்றால் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வதும் திருத்திக் கொள்வதும்தான் சரியானது. ஆரத்தியால் இன்னமும் இதை உணரவே முடியவில்லை. பார்வையாளகளின் வெறுப்பையும் எரிச்சலையும் அதிகம் சம்பாதிக்கும் ஆரத்தி, நாமினேஷனில் வந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார், வெளியேற்றப்பட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. 

இன்னொரு பக்கம் ஜூலியின் நிலைமை பரிதாபகரமாக இருக்கிறது. முன்பாவது காயத்ரி போன்ற பலசாலிகளின் ஆதரவு இருந்தது. இப்போது நிலைமையை தனியாக சமாளிக்க வேண்டிய சூழல். ஏற்கெனவே பாழ்பட்டிருக்கும் தன்னுடைய பிம்பம், ஆரத்தியுடன் சண்டை போடுவதால் இன்னமும் பாழாகுமோ என்கிற கவலையில் இருக்கிறார். எனவேதான் ஆரத்தியைத் தவிர்த்து விட்டு, பின்பு ஆரவ்விடம் சொல்லி அழுகிறார். 

இந்த விஷயத்தை தனியாக அழைத்து பேசியாவது தீர்வு காணலாம் என்று வந்த ஜூலியை தன்னுடைய திமிர்தனத்தினால் அலட்சியப்படுத்தி விட்டு சென்றார் ஆரத்தி. திருந்தாத உள்ளங்கள். 

**

3_09390.jpg

வேறென்ன நடந்தது?

‘காஜல் உண்மையாகவே கோபக்காரி. அவளால நிறைய சண்டை வரும்னு நெனச்சேன். ஆனால் வில்லன் காமெடியன் ஆனது மாதிரி ஆயிடுச்சு. இப்ப பாருங்க.. வீட்டை ஆளலாம் –னு வந்துட்டு காய்கறி வெட்டிக்கிட்டிருக்கா’ என்றெல்லாம் காஜலை தங்களின் அறையில் அமர்ந்து கிண்டலடித்துக் கொண்டிருந்தார் சிநேகன். ‘இந்த ஆரவ் பய வேற அவளை நோண்டி காமெடி பீஸாவே மாத்திட்டான்’ என்று ஒத்து ஊதினார் வையாபுரி. உண்மைதான். காயத்ரிக்கு மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்த்த காஜல் பெரும்பாலான சமயங்களில் காமெடியாக மாறி விடுகிறார். என்றாவது ஒரு நாள் இவரின் அதிதீவிர சாகசக்காட்சி வெளிவரும் என்று நினைக்கிறேன். 

பெயிண்ட்டிங் சவாலிற்கான பெல் அடித்ததும், திருப்பதி கோயில் வரிசையில் கேட்டை திறந்தது போல அடித்துப் பிடித்து ஓடினார்கள் போட்டியாளர்கள். ‘ஏ பார்த்துப்பா.. கீழ விழுந்துடாம..’ என்று பெரியவருக்கான பொறுப்புடன் எச்சரித்துக் கொண்டிருந்தார் வையாபுரி. இந்த task-க்காக இத்தனை பதட்டப்படணுமா’ என்கிற உணர்வை அவர் பெரும்பாலான சமயங்களில் வெளிப்படுத்துகிறார். 

தங்கள் அணிக்கு வெண்கலக்கிண்ணியும் சாக்லேட்டும் கிடைக்காதது குறித்து சிநேகனுக்கு கோபம். கேக்கை சாப்பிட மாட்டேன் என்று வீம்பாக மறுத்து விட்டார். வையாபுரியும். எத்தனை வயதானாலும் மனிதர்களுக்குள் இருக்கும் சிறுபிள்ளைத்தனங்கள் வெளியே எட்டிப் பார்த்து விடுகின்றன. 

இன்றைய நாளில்,பிந்து –ஹரீஷ் பகுதி ஒரு மாதிரி குழப்பமாகவும், எரிச்சலூட்டும் வகையில் நீளமாகவும் இன்னொரு புறம் சுவாரசியமாகவும் சென்றது. ஜூலி –ஆரத்தி பகுதி, ஆரத்தியின் மீது எரிச்சல் உருவாகும் வகையில் சென்றது. 

எப்படியோ, இன்றைய கல்லாவை வெற்றிகரமாக கட்டிவிட்டார் பிக்பாஸ். போகப் போக என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ? 

‘ஆண்டவர்’ வரும் நாள் இன்று. வழக்கமான அரசியல் கோபங்களோடு புதுப்புது விளையாட்டுக்களை விளையாடி எப்படியோ ஒப்பேற்றி விடுவார். குறும்படமோ பஞ்சாயத்தோ இந்த வாரம் அதிகம் இருக்காது. ஆரத்திக்கு உபதேசம் செய்யக்கூடும். ஜூலியின் அழுகையை எதிர்பார்க்கலாம். 

நாமினேஷன் பட்டியலில் காஜல், ஆரவ், சிநேகன் ஆகியோர் இருக்கிறார்கள். காஜல், சிநேகன் மீது பார்வையாளர்களின் அதிருப்தி அத்தனை இல்லையென்று கணிக்கிறேன். எனவே ஆரவ் மீது கத்தி பாயலாம். ஆனால் அவர் முக்கியமான போட்டியாளர் என்பதால் வெளியேற்றம் இல்லாமலும் போகக்கூடும். 

 

தீர்ப்பு எப்படி என்று வரும் சனி –ஞாயிறில் பார்ப்போம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

மிஸ்டர் கமல்... இன்னும் நிறைய அனுபவங்களை ஷேர் பண்ணுங்க ப்ளீஸ்! (69-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

‘சமீபத்திய துயர நிகழ்வான அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தன் உரையை கமல் துவங்கியது அவசியமானது. சமூகக் கோபமும் நுண்ணுணர்வும் இல்லாமல் தன்னைச் சுற்றி எது நடக்கிறது என்பதே அறியாமல் சுயநலத்துடன் கேளிக்கைகளில் மூழ்கியிருப்பவர்களுக்கு மத்தியில் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியின் இடையிலும் சமூகவுணர்வையும் அக்கறையையும் வெளிப்படுத்திய கமலின் உணர்வுபூர்வமான வெளிப்பாட்டிற்கு நன்றி. 

அனிதா

‘கேளிக்கைக்கு முன்னால் சில கேள்விகள். அனிதாவின் மரணம். இது போன்றவை இனி நிகழக்கூடாது. என்ன செய்ய வேண்டும். வருந்துவதற்கு மனம் இருப்பது மட்டும் போதாது. இனி நடக்காமல் இருப்பதற்கு மூளையும் வேண்டும். இதற்கு மருந்தென்ன? இதற்கான ஆற்றல் உள்ளவர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்போம். இல்லையெனில் வெட்கி தலை சாய்க்க நேரிடும்’ என்பதாக அவரது உரை நெகிழ்ச்சியுடன் அமைந்தது. 

**

வழக்கமாக வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகளை கமல்தான் நமக்கு காட்டுவார். ஆனால் இம்முறை ஒரு வித்தியாசம். கமலுக்கே ஏதோவோரு ஆப்பை பிக்பாஸ் தயாரித்து வைத்திருக்கிறார் போலிருக்கிறது. எனவே பிக்பாஸ் பணித்தனின் காரணமாக கமல் விலக, நாமே நேரடியாக வெள்ளி நிகழ்வுகளை பார்க்க நேர்ந்தது. பிறகுதான் அதற்கான காரணம் புரிந்தது. கமலை ஏமாற்றி சில சொற்களை அவர் வாயிலிருந்து பிடுங்குவதற்கான task போட்டியாளர்களுக்கு தரப்பட்டிருந்தது. 

Bigg Boss

‘எங்கேயும் காதல்’ திரைப்படத்திலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘நங்காய்.. நிலாவின் தங்காய்..’ என்கிற அட்டகாசமான துள்ளலிசைப்பாடல் ஒலிபரப்பானது. மைக்கேல் ஜாக்சனின் பாணியை ஹாரிஸ் நகலெடுத்து விட்டார் என்கிற புகார் அப்போது இருந்தது. எனில் ஹாரிஸ் இத்தனை வெளிப்படையாகவா நகலெடுப்பார்? MJ-விற்கான tribute ஆக ஹாரிஸ் இதை இசைத்திருக்கலாம் என்பது என் யூகம்.

இந்தப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடுவதை ஜூலி துவங்க, பிறகு மற்றவர்களும் வந்து இணைந்து கொண்டனர். 

‘வெளியே போன பிறகு ஜூலிக்கு நிறைய சேனல் வாய்ப்பு வருதுன்னு சொல்றா’ என்றார் வையாபுரி. தனக்கும் அது போல் கிடைக்கும் என்பது அவரது எதிர்பார்ப்பா அல்லது ஜூலி சொல்வதால் இதை நம்பலாமா என்று அவர் அறிய விரும்புகிறாரா என்று தெரியவில்லை. ‘வாய்ப்புகளை தக்க வெச்சுக்கணும். எப்படியும் இந்த வீட்ல 100 நாட்கள் இருந்துடணும்னு முடிவு பண்ணியிருக்கேன்’ என்றார் சிநேகன். வையாபுரியும் அவரை வழிமொழிந்தார். ‘மாற்றம் என்பதே மாறாதது’ என்கிற நிதர்சனம் ஒருபுறம் இருந்தாலும் இவர்களின் நம்பிக்கையும் இன்னொரு புறம் மகிழ வைக்கிறது. நிஜமாகட்டும். 

மல்யுத்த போட்டியில் ரைசாவும் பிந்துவும் எப்படி சண்டையிடுவது மாதிரி பாவனை செய்தனர் என்பதை சிநேகனும் ஆரவ்வும் நடித்துக் காட்டினர். பிந்து அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார். 

இதைப் பார்த்தவுடன் பிக்பாஸின் தலையில் ஏதோ பல்பு எரிந்திருக்க வேண்டும். இதே பாணியில் ஒரு task தந்து விட்டார். ‘ஞாபகம் வருதே’ என்பது அந்த சவால். பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த சில பழைய தருணங்களை போட்டியாளர்கள் நடித்துக் காண்பிக்க வேண்டும். எந்த தருணங்கள் என்பதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

 

கஞ்சா கருப்பு, பரணியை கோபத்துடன் அடிக்கப் பாய்ந்த சம்பவத்தை ஹரிஷ், வையாபுரி உள்ளிட்ட குழு நடித்துக் காண்பித்தது. கஞ்சா கருப்பாக ஹரிஷூம் பரணியாக வையாபுரியும் நடித்துக் காண்பித்தனர். ஹரிஷீன் முயற்சி சிறப்புதான் என்றாலும் கஞ்சா கருப்புவாக வையாபுரி நடித்திருநதால் நன்றாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன். ஒத்திகையின் போது அவர் சிறப்பாக செய்தார். சக்தியாக நடித்த சுஜா, பேண்ட்டை மேலே ஏற்றிக் கொண்ட பாவனையை செய்து சக்தியை சரியாக நினைவுப்படுத்தியது சிறப்பு. 

**

ஓவியாவின் ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க.. ஒகே..’ என்கிற வரலாற்றுத் தருணத்தை நடித்துக் காட்டினர்.  ஓவியாவை சுஜா அத்தனை சிறப்பாக நகலெடுக்கவில்லை. ஆனால் அவரது முயற்சி பாராட்டத்தக்கது. கஞ்சா கருப்புவாக நடிக்க கணேஷ் திணறினார். 

மறுபடியும் ஓவியா சம்பந்தப்பட்ட காட்சி. அவர் மனஉளைச்சலில் இருந்த போது எதிர்பட்ட ஜூலியை போடி … என்று கத்தியதும் ‘கொஞ்ச நேரம் உன்னைக் கொல்லட்டா’ ஜூலி… என்று பாடிய காட்சிகளும் நடித்துக் காண்பிக்கப்பட்டன. ஜூலியாக ஆரத்தி நடித்தார். 

தன்னைப் போல் ஆரத்தி நடித்ததே ஜூலியின் கோபத்திற்கும் வருத்தத்திற்கும் காரணமாக இருந்திருக்க வேண்டும். வேறு எவராவது நடித்திருந்தால் கூட அமைதியாக இருந்திருப்பார் போல. ‘என்னை வைத்து காமெடி செய்கிறீர்களா?” என்று கோபித்துக் கொண்டார். இதற்கான ஒத்திகை நடக்கும் போது அவர் அங்கேதானே இருந்திருப்பார்? அப்போதே தன் ஆட்சேபத்தை தெரிவித்திருக்கலாமே? ஒருவேளை அப்போது ஜூலியாக வேறு எவராவது நடித்திருந்தார்களோ, என்னமோ. 

Bigg Boss

ஓவியா தன்னை நோக்கி பாடியதும்,  ஜூலியாக நடித்த ஆரத்தி, கணேஷ் மற்றும் ஹரிஷூடம் சென்றார். கணேஷை நோக்கி ‘அண்ணா.. அண்ணா..’ என்று புகார் சொல்ல ஆரம்பிக்க.. நாணிக் கோணி ‘நான் காயத்ரி’ என்று கணேஷ் பாவனை செய்தது ரகளையான நகைச்சுவை. பிறகு, ‘என்ன சக்தி.. இப்படி நடக்குது. நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்’ என்று காயத்ரியைப் போலவே பேசிக் காட்டிய பாவனையும் அற்புதம். 

‘அப்புறம் வேணா அழுதுக்கோ.. இப்ப டீமோடவெற்றியைக் கெடுக்காதே’ என்பது காஜலின் ஆட்சேபம். “சிநேகன் மாதிரி கூடத்தான் நான் பேசிக் காட்டினேன். எவரும் கோபித்துக் கொள்ளவில்லையே” என்பது ஆரத்தியின் புகார். ஜூலி கழிவறைப் பக்கம் சென்று கண்கலங்க அந்தக் காட்சி முடிந்தது. 

Hygiene  பற்றி நமீதா வகுப்பெடுத்த வரலாற்றுச் சம்பவம் மீண்டும் நினைவுகூரப்பட்டது. ‘எப்படி துடைக்கணும், கழுவணும்” என்கிற சங்கடமான விஷயங்களையெல்லாம் நமீதாவின் ‘மச்சான் தமிழ்’ குரலில் ஆரத்தி செய்து காண்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் சிநேகன் ஏதோவொரு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சங்கட்டடமாக இருக்காது? ‘தலைவி.. தலைவி’.. என்று பின்னால் ஓடிய வையாபுரியின் நகைச்சுவை அருமை. 

Bigg Boss

அடுத்து ஓவியா ஜூலியை கார்ப்பெட்டில் இழுத்த துன்பியல் சம்பவத்தின் நினைவுகூரல். இம்முறை ஜூலியின் கோபம் அதிகமாயிற்று. கலங்கலான கண்களுடன் வெளியில் சென்று அமர்ந்து கொண்டார். எல்லோரும் காட்சியை நிறுத்தி விட்டு ஜூலியைச் சமாதானப்படுத்த விரைந்தனர். ஆனால் சென்றது என்னமோ காஜல் மட்டுமே. வடசென்னை வழக்கில் ‘அய்யே… வா….’ என்றார் காஜல். ‘நான் சீரியஸா அவஸ்தைப்பட்டதை வெச்சு காமெடி செய்யறதை நான் ஒத்துக்க மாட்டேன். நான் வரலை’ என்று ஜூலி பிடிவாதம் பிடிக்க.. ‘உன்னால நாங்க எப்பவும் தோத்துப் போகணுமா… சிநேகனை கூடத்தான் கிண்டல் பண்ணாங்க’ என்ற காஜலுக்கு.. ‘அவர் வெளியில் சென்று பார்க்கலை. நான் பார்த்தேன்’ என்ற முக்கியமான காரணத்தை முன்வைத்தார் ஜூலி. என்றாலும் காஜலின் வற்புறுத்தல் காரணமாக உள்ளே சென்றார். 

டைனிங் டேபிள் காட்சியில் ஓவியாவாக சுஜா சிறப்பாக நடிக்க முடியவில்லை. ஆனால் கார்ப்பெட் இழுக்கும் விவகாரத்தில் ஒவியாவாக நடித்த காஜலின் நடிப்பு சிறப்பு. அவர் தாட்பூட்னெ்று நடந்து சென்றதும் ஆவேசத்துடன் கார்ப்பெட்டை இழுத்ததும்.. அச்சு அசல் ஓவியாவேதான். 

இந்தக்காட்சியில் இன்னொரு விவகாரமும் நடந்தது. ஒரிஜனில் காட்சியில் ஜூலியை படுக்கையறை வரை சக்தி தூக்கிச் சென்றார். அதே போல் சக்தியாக மாறி ‘பிந்து’வை தூக்கிச் செல்லும் வாய்ப்பை பயன்படுத்த சிநேகன் ஆவலாக முன்வந்தார். ஆனால் வளைந்து நெளிந்த பிந்து, பாதியிலேயே இறங்கி விட்டார். சிநேகனின் ‘டாக்டர்’ புகழ் பிக்பாஸ் வீட்டிலேயே கொடிகட்டிப் பறக்கிறது போல. 

Bigg Boss

**

‘நான் எல்லோர் கிட்டயும் பேசணும்” என்று தன் மனக்குறையைக் கொட்ட முயன்றார் ஜூலி. அவரின் இந்த வருத்தம் நியாயமானதே. இது போன்ற சம்பவங்களால்தான் அவரின் பிம்பம் வெளியில் சிதைந்திருக்கிறது. அது குறித்தான கவலையும் பதற்றமும் ஜூலிக்கு ஏற்கெனவே இருக்கிறது. இந்த நிலையில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அவர் முன்னரே நடைபெறுவது நிச்சயம் உளைச்சலைத் தரும் விஷயம்தான். ஆனால் ஒத்திகையின் போதே தன்னுடைய ஆட்சேபத்தை ஜூலி கறாராக தெரிவித்திருக்கலாம். ஆனால் ஆரத்தி தன்னுடைய விஷமத்தின் மூலம் தடுத்து விட்டாரோ, என்னமோ. 

‘பஞ்சாயத்தெல்லாம் கூட்டாதே. உன்னைத்தான் மறுபடியும் மொக்கை பண்ணுவாங்க” என்று சரியான உபதேசம் செய்தார் காஜல். ஆரத்தி இந்த வாய்ப்பை நிச்சயம் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்பது காஜலின் அனுமானமாக இருக்கலாம். ‘நான் மட்டும்தான் கிடைச்சனா’ என்று எரிச்சலுடன் விலகிச் சென்றார் ஜூலி. பாவம். 

இந்த சவாலில் ஒன்று கவனித்தால், சங்கடமான, சர்ச்சையான விஷயங்களையே நடிப்பதற்கு தேர்ந்தெடுத்திருப்பதை கவனிக்கலாம். அவைதான் போட்டியாளர்களின் மனதிலும், ஏன் பார்வையாளர்களான நம்முடைய மனதிலும் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. மகிழ்ச்சிகரமான தருணங்களை விடவும் கசப்பான விஷயங்களையே நாம் அதிகம் நினைவு வைத்திருக்கிறோம் என்கிற நடைமுறை இதிலிருந்து நிரூபணமாகிறது. இது மாற்றப்பட வேண்டிய ஒன்று.

இது குறித்து சுகபோதானந்தா ஒரு முறை அருமையான உதாரணம் சொன்னார். ‘உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரு திரைப்படத்தின் வீடியோ ஒன்று உங்களிடம் இருக்கிறது. அதை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்க்க நீங்கள் விரும்புவீர்களா? இல்லை அல்லவா? எனில் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த துயரமான விஷயங்களை மட்டும் ஏன் உங்கள் மனதில் மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறீர்கள்? என்று அவர் சொன்னது அற்புதமான விஷயம். துயரமான தருணங்களை விட்டு விட்டு வடிகட்டிய மகிழ்ச்சிகரமான விஷயங்களை நம் மனதில் பதிய வைக்க முயற்சிப்போம். தீதும் நன்றும் பிறர் தர வாரா. 

Bigg Boss

**

‘வார்த்தையைப் பிடுங்கும்’ சவால் அடுத்து தரப்பட்டது. இதை கமலிடம் செய்ய வேண்டும் என்பதுதான் பெரிய சவால். இதனால்தான் வெள்ளி நிகழ்ச்சிகளை கமல் பார்க்கவிடாமல் பிக்பாஸ் தடுத்தார் போலிருக்கிறது. இருப்பதிலேயே சுவாரசியமான சவாலாக இது அமைந்தது. 

‘குறும்படம்’ ‘ஆக்ஷன் கட்’ ஆகிய வார்த்தைகளை கமலை சொல்ல வைக்க வேண்டும் மற்றும் ‘மாருகோ.. மாருகோ. (சதிலீலாவதி) பாடலைப் பாட வைக்க வேண்டும். திருப்பதிக்கே லட்டு மாதிரி.. கமல் சாருக்கே prank-ஆ என்று போட்டியாளர் மலைத்துப் போயினர். என்றாலும் இதை எப்படி செய்ய வைப்பது என்பது குறித்தான ஆலோசனைகள் ஜரூராக நடந்தன. 

‘தான் தனியாக சென்று மன்னிப்பு கேட்டும், ஆரத்தி நக்கலாக எழுந்து சென்றார்’ என்பது ஜூலியின் வருத்தம். ஹரீஷ், ஆரவ் காஜல் உள்ளிட்டவர்களிடம் தன் பாவமான நிலையைப் பகிர்ந்து கொண்டார் ஜூலி. ‘ஆண்டவர்’ ஆரத்தியை சூசகமாவாவது கண்டிப்பாரா அல்லது காற்றில் பறக்க விட்டு விடுவாரா என்று தெரியவில்லை. 

**

கமல் மறுபடியும் திரைக்குள் வந்தார். ‘இதுவரை பொதுவாக வீட்டின் உறுப்பினர்களிடம் குற்றம் கடிதல், வெளியேற்றம் போன்ற விஷயங்களைப் பற்றி மட்டுமே உரையாடியுள்ளேன். ஒரு மாற்றத்திற்காக இந்த முறை சந்தோஷமாக அவர்களுடன் விளையாடவுள்ளேன்’ என்றார். 

இத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள், அந்த வீட்டின் உள்ளரங்க அமைப்புகளை எத்தனை தூரம் கவனித்திருக்கிறார்கள், நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் சவால். இந்தப் போட்டியில் சிநேகன் நிறைய ஆச்சரியப்படுத்தினார். ஒற்றைப் படுக்கைகள் எட்டு, டைனிங் டேபிள் சேர்கள் 13 என்று பொதுவாக மற்றவர்கள் கவனிக்கத் தவறுகிற விஷயங்களையெல்லாம் கவனித்தது மட்டுமல்லாமல் அதை நினைவில் கொண்டு டக்டக்கென்று பதிலளித்து கமலை கவர்ந்தார். “நீங்கள் கவிஞரா, கணியரா’ என்று சிநேகனின் நினைவாற்றலை கமல் பாராட்டினார்.

Bigg Boss

‘இங்கு எத்தனை கண்கள் உள்ளன?’ என்கிற கேள்வியை ஆரவ்வால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. காமிராக்கள் என நினைத்து விட்டார். அங்குள்ள நபர்களின் கண்களைத்தான் கேள்வி குறிக்கிறது என்கிற எளிய விஷயத்தை சரியாகப் புரிந்து கொண்ட ஹரீஷ் சரியாக பதிலளித்தார். 

‘ஒருவர் மற்றொருவரை எத்தனை தூரம் புரிந்து கொண்டிருக்கிறார்கள்’ என்பது அடுத்த சவால். இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டவர்கள் ‘குசுகுசு’வென்று பேசிக் கொண்டிருந்ததை கவனித்த கமல், எதிர்க்கட்சின்னு நம்பி உட்கார வெச்சா.. கூட்டணி அமைச்சு பேசிட்டிருக்கீங்க..’ என்று சமகால சமயோசிதமாக சொன்ன அரசியல் நையாண்டி சூப்பர். 

பிந்துவின் தந்தை பெயர் முடியும் விஷயத்தை ‘ரெட்டி’ என்பதற்குப் பதிலாக ‘ரொட்டி’ என எழுதி பின்பு திருத்தி தமிழின் மானத்தை வாங்கினார் வையாபுரி. கமலுடன் வையாபுரி இணைந்து நடித்த திரைப்படங்களைப் பற்றிய விஷயத்தில் ‘பிந்து’விற்கு உதவும் விதமாக அவற்றின் வரிசையை வாய் விட்டே சொன்னார் வையாபுரி. மகள் மீது அம்பூட்டு பாசம் போல. ‘இதற்கு சிலேட்டை அவங்க கிட்டயே கொடுத்துடலாம்’ என்று சரியாக கிண்டலடித்தார் கமல். 

Bihgg Boss

சிநேகன் எழுதியதைப் பார்த்து காப்பியடிக்க முயன்றார் ஜூலி. ‘சிநேகன் அனுயாவுடன் இணைந்து டூயட் பாடிய, தமிழகத்திற்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் இந்தச் சவாலின் மூலம் வெளியே வந்தன. ஹரீஷ் நடித்த முதல் திரைப்படத்தைப் பற்றி ஆரவ்விற்கு தெரியவில்லை. யார் மறந்தாலும் எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்தின் தலைப்பை மறக்க மாட்டார். ‘சிந்து சமவெளி’ 

கணேஷிற்கு பிடித்த இசையமைப்பாளர் யார், இளையராஜாவா, ஏ.ஆர்.ரகுமானா? என்றொரு கேள்வி. சமகாலத்திற்கும் சற்று மூத்த தலைமுறைக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் பிடிக்கும் என்பது வெளிப்படையான விஷயம். ‘என்னை இங்க காமெடி பீஸா பார்க்கிறாங்க சார்” என்கிற காஜலின் ஜாலியான புகாரிற்கு அனைவரும் சிரித்தனர். 

**

அடுத்த டிவிஸ்ட் இன்னமும் சுவாரசியம். போட்டியாளர்களுக்கு ஒரு சவால் தந்ததைப் போலவே, கமலுக்கும் ஒரு சவாலை பிக்பாஸ் தந்திருக்கிறார். (ஆண்டவரிடமே திருவிளையாடலா) அதன்படி போட்டியாளர்களின் வாயிலிருந்து மூன்று விஷயங்களை சொல்ல வைக்க வேண்டும். 

‘Fake அல்லது trigger’, மக்கள் பிரதிநிதி ஆகிய சொற்களை போட்டியாளர்களைச் சொல்ல வைக்க வேண்டும். ‘அண்ணாத்த ஆடுறார்..’ பாடலைப் பாட வைக்க வேண்டும். இருமுனை கத்தி போல சுவாரஸ்யமான விஷயம். ஒருவரையொருவர் மாட்டி வைக்க முயல்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத நகைச்சுவை இதில் ஒளிந்திருந்தது. 

‘ஆக்ஷன் கட்’ என்கிற வார்த்தையை சொல்ல வைக்கும் முயற்சியைத் துவங்கினார் வையாபுரி. பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரின் இயக்கத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்’ என்பது வையாபுரியின் கோரிக்கை. இந்த அனுபவங்களுக்கு இடையில் ‘ஆக்ஷன்- கட்’ என்கிற வார்த்தைகள் எங்காவது வந்து விடும் என்பது வையாபுரியின் நம்பிக்கை. ஆனால் அவருக்கு கிடைத்தது பெரிய பல்புதான். கமலின் நீண்ட உரையாடலில் எங்குமே அந்த வார்த்தைகள் சிக்கவில்லை. 

வையாபுரி கேள்வி கேட்டதுதான் தாமதம், ஒரு நீண்ட உபன்யாசத்தையே நிகழ்த்தி விட்டார் கமல். ஆனால் அற்புதமான அனுபவப் பகிரல்கள். கமல் என்கிற கலைஞனின் பெரிய கிராஃ.பின் வரிசையில் அவர் பகிர்ந்தது சில துளிகள் மட்டுமே. ஆனால் அதுவே கமலின் கலைப்பயணத்தின் பிரம்மாண்டமான விஸ்தீரணத்தை யூகிக்க வைத்தது. 

Bigg Boss

 

கமல் பகிர்ந்த அனுபவங்களைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம். அந்த அளவிற்கு முக்கியமானது. நாகேஷ் என்கிற இன்னொரு கலைஞனின் மீதுள்ள பயங்கரமான வயிற்றெரிச்சலைப் பற்றி எத்தனையோ முறை கமல் சொல்லி விட்டாலும் கேட்க சலிக்கவேயில்லை. செல்லமான பொறாமை இது. பாலச்சந்தர் தன்னை வார்த்தெடுத்தது பற்றி கமல் சொல்லியது நெகிழ்ச்சி. 

தான் பகிர்ந்து கொண்ட திரைக்கதைகளைப் பற்றி தானே மறந்து போய் பதறிய பாரதிராஜாவின் வெள்ளந்திதனத்தை கமல் நினைவுகூர்ந்தது நல்ல நகைச்சுவை. ‘பதினாறு வயதினிலே’ உருவாக்கத்தின் போதே ‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைக்கதையை பாரதிராஜா உருவாக்கி வைத்திருந்தார் என்பது ஆச்சரியமான விஷயம். கிராமம் சார்ந்த படங்களாக உருவாக்கி விட்டு அதன் பாதுகாப்பான பயணத்தில் தொடர்ந்து செல்லாமல் சட்டென்று திசைமாறி நகரம் சார்ந்த ஒரு கிரைம் திரில்லரை பாரதிராஜா உருவாக்கியதெல்லாம் ஒரு காவிய தன்னம்பிக்கை. 

பாலுமகேந்திரா எனும் காமிரா மேதையை தன் நண்பனாக பெற்றது பாக்கியம் எனப் புகழ்ந்த கமல், இவர்களால்தான் நான் இயக்குநர் ஆனேன் என அவர்களைப் பெருமைப் படுத்தியது சிறப்பு. கமல் பேச கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் தோன்றியது. 

**

ஒன்று கவனித்தீர்களா என தெரியவில்லை. பொதுவாக கமல் தன்னுடைய நேர்காணல்களில் வாக்கியங்களை தெளிவின்றி பேசுவார். பல வார்த்தைகள் அப்படியே விழுங்கப்பட்டு விடும். பார்வையாளர்களுக்கு ஓர் இடையூறாகவே இந்த விஷயம் தோன்றும். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம் திருத்தமாக சுருதி பிசகாமல் கமல் சொல்கிறார். இது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு. 

 

வையாபுரியின் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சிநேகனின் முயற்சி அபாரமாக வெற்றியடைந்தது. ‘மூன்று இயக்குநர்களில் யார் உங்களுடைய நடிப்பில் மயங்கி ‘start cut’ சொல்ல முடியாமல் நின்றவர்’ என்று சரியான திசைக்கு சவாலை நகர்த்திச் சென்றார் சிநேகன். 

‘அது நாலாவதா ஓர் இயக்குநர். ஆர்.சி. சக்தி. என்னுடைய சிறுவயதிலேயே என்னை எழுத்தாளனாக அங்கீகரித்த நண்பர், நான் கூட அதைச் செய்ய மாட்டேன் என்று புகழ்ந்த கமல், படப்பிடிப்பின் போது சக்தி எப்படி உணர்ச்சிகரமாக அழத் துவங்கி விடுவார் என்பதை அபாரமாக நடித்துக் காண்பித்தார். இந்த உணர்ச்சிகரமான உரையாடலின் இடையே ‘ஆக்ஷன்.. கட்’ என்ற வார்த்தைகள் பொருத்தமாக வந்து விழ, போட்டியாளர்கள் உற்சாகமாக கூவினார்கள். ஆனால் அந்த விஷயத்தை கவனிக்கத் தவறிய கமல், பாராட்டாக எடுத்துக் கொண்டு மேலும் பேசத் துவங்கினார். 

‘மாருகோ.. மாருகோ.. பாடலை சாமர்த்தியமாக பாட வைத்தவர் ஆரத்தி. மனோரமா துவங்கி கோவை சரளாவிற்கு வந்து. சதிலீலாவதி படத்தைத் தொட்டு குறிப்பிட்ட பாடலின் வரிகள் நினைவிற்கு வராதது போல் திறமையாக நடித்தார். சக போட்டியாளர்களும் இதற்கு ஒத்துழைத்தார்கள். ஆச்சரியகரமாக கமலுக்கும் பாடலின் துவக்க வரிகள் நினைவிற்கு வராமல் இடைப்பட்ட வரிகளையே பாடினார். பிறகு அழுத்தி சுட்டிக் காட்டிய பிறகுதான் துவக்க வரிகள் வெளியே வந்து விழுந்தன. போட்டியாளர்களின் சந்தோஷக் கூச்சல் நிகழ்ந்தது. 

அடுத்த சவாலையும் வெற்றிகரமாக நிகழ்த்தியவர் சிநேகன். குறும்படம் என்கிற வார்த்தையை சொல்ல வைத்து விட்டார். அதற்கு சீரியஸாக பதிலளித்த கமல், இடையில் பதில் அல்வாவை சாமர்த்தியமாக சிநேகனுக்கு தந்தார். ‘என்னுடைய பொஷிஷன் என்னன்னு சொல்லுங்க’ என்று எடுத்துக் கொடுக்க வகையாக சிக்கினார் சிநேகன். ‘மக்கள் பிரதிநிதி’ என்று சிநேகன் சொன்னவுடன், இம்முறை கமல் நின்றிருந்த அரங்கத்தின் சபையிடமிருந்து உற்சாகக்கூச்சல் எழுந்தது. போட்டியாளர்கள் அதைக் கண்டு உஷாராகியிருக்கலாம். அவர்கள் கவனிக்கவில்லை. 

Bigg Boss

மூன்று வார்த்தைகளையும் கமலை சொல்ல வைத்து விட்டதால் அதற்கு மேல் சஸ்பென்ஸ் தாங்காத போட்டியாளர்கள் சாஷ்டாங்கமாக கமலின் காலில் விழுந்தனர். ஹெலிகாப்டரைக் கண்ட அமைச்சர்கள் மாதிரி இத்தனை பணிவு தேவையில்லை. என்ன இருந்தாலும் இதுவொரு விளையாட்டுதானே.

சவால் முடிந்ததால் இந்த விஷயத்தை கமலிடம் உற்சாகமாக சொல்லத் துவங்கிய ஜூலியை சுஜா எதற்காகவோ தடுத்தார். ‘குறும்படம்’ என்கிற வார்த்தையை கமல் இன்னமும் சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டாரோ, என்னமோ. 

போட்டியாளர்களின் உற்சாகம் கமலுக்குப் புரியவில்லை. ஆனால் எதையோ யூகித்துக் கொண்டவர், தன்னுடைய சவாலை முடிப்பதற்கான விஷயங்களைத் தொடர்ந்தார். 

“நான் என்ன நெனச்சேன்னா.. என்னை டான்ஸ் கீன்ஸ் ஆடச் சொல்லிடுவீங்களோன்னு பயந்தேன்’ என்று சாமர்த்தியமாக விஷயத்திற்குள் வந்தவர், ‘இப்பத்தான் கால் உடைஞ்சு சரியாயிருக்கு’ என்றார். காயத்ரியுடன் அவர் நடனமாடியது போட்டியாளர்களுக்குத் தெரியாது என்பதால் சரளமாக புளுகினார் ‘ஆண்டவர்’. தன்னுடைய சைகைகளின் மூலம் பாடல் வரி தெரியாதது போல தடுமாறி ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலை போட்டியாளர்களின் வாயால் பாட வைத்து விட்டார். பழிக்குப் பழி, புளிக்குப் புளி. ஆரத்திதான் இதற்குப் பலியானார். சபையோரின் உற்சாகக் குரல்கள் கமலுக்கு ஆதரவாக ஒலித்தன. ‘அங்கேயும் ஏதோ நடக்குது போல’ என்று இந்த சந்தேகத்தை சரியாக மோப்பம் பிடித்தவர் பிந்து. 

இன்னமும் ஒரு வார்த்தையை போட்டியாளர்களை சொல்ல வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கமல், அவர்களை சற்று அமர்த்தி விட்டு, சக்தி இருந்தா இதை செய்ய வைச்சிருப்பாரு’ என்று போட்டு வாங்க, trigger என்றார் முந்திரிக்கொட்டை ஆரத்தி. அங்கேயும் ஏதோ நடக்கிறது என்கிற சந்தேகம் வந்தவுடனேயே வார்த்தைகளை கவனமாக உச்சரிக்க வேண்டாமா? இந்த முறையும் சபையோரின் உற்சாகக்கூச்சல் ஒலிக்கவே, ‘நீங்க ஜெயிச்சிட்டீங்க சார்’ என்றார் காஜல். 

Bigg Boss

எப்படியோ, இரு தரப்பும் பல்பு வாங்கித் தந்து கொண்ட கதையை உற்சாகமாக விளக்கிக் கொண்டனர். இரு தரப்பிற்குமே அவரவர்களின் சவால்கள் பற்றிய தகவல் தெரியாது என்பது போல்தான் அவர்களின் முகபாவங்கள் அமைந்திருந்தன. ஆனால் கமலுக்கு ஒருவேளை முன்கூட்டியே தெரியுமோ என்கிற மெல்லிய சந்தேகம் எனக்குள் எழுந்தது. பிரமையாகவும் இருக்கலாம். 

பக்ரீத்தை முன்னிட்டு பிரியாணி அனுப்புவதாக கமல் சொன்னவுடன் போட்டியாளர்கள் உற்சாகக் கூச்சல் எழுப்பினார்கள். 

விடைபெறுவதற்கு முன் அனிதாவின் மரணத்தைப் பற்றி சூசகமாக நினைவுப்படுத்திய கமல் அதற்காக நாம் சிரிக்காமல் இருக்க முடியுமா?’ என்கிற நடைமுறை நியாயத்தைச் சொன்னதின் மூலம் விளையாட்டையும் நியாயப்படுத்தினார். என்ன செய்ய, அதுவும் நியாயம்தான். துயரம் ஒருபுறம் இருந்தாலும்  நாமும் சாப்பிடாமல், தூங்காமலா இருக்கிறோம்?

ஞாயிறு அன்று வெளியேற்றப்படலம் இருக்கிறது. திகைப்பூட்டும் பின்னணி இசையுடன் அது சார்ந்த முன்னோட்டக்காட்சிகளைக் காட்டினார்கள். முன்பே குறிப்பிட்டது போல ஆரவ்விற்கு ஒரு கண்டம் இருக்கலாம். அல்லது எவருமே வெளியேறாமல் போகலாம். ஆரத்திக்கு ஒரு மெல்லிய கண்டனத்தையாவது ஆண்டவர் தருவார் என எதிர்பார்க்கிறேன். என்ன செய்யவிருக்கிறாரோ?

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/101196-mrkamal-please-share-more-experiences-regarding-social-issues---bigg-boss-tamil-updates-day-69.html

Link to comment
Share on other sites

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஆரவ் கொச்சி செல்ல காரணம் என்ன..?

 

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஆரவ் கொச்சி செல்ல காரணம் என்ன..?

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு, பெரிதாக மக்கள் இந்த நிகழ்ச்சி பார்ப்பதை குறைத்துவிட்டனர். ஓவியாவை தொடர்ந்து காயத்ரி, ஜூலி, ரைசா மற்றும் ஷக்தி என சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஆரவ் வெளியேறியுள்ளார். இவர் வெளியேறியதை தொடர்ந்து இவருக்காக கொச்சிக்கு பிலைட் டிக்கெட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் எதற்காக..? என்ற கேள்வி வந்துள்ள நிலையில் மக்கள் ஓவியாவை பார்ப்பதற்கு என்று கூறுகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஆரவ் கொச்சி செல்ல காரணம் என்ன..?

ஆரவ்வின் அம்மா ஆரவ் சம்மதித்தால் ஓவியாவை ஆரவ்விற்கு திருமணம் செய்து வைப்பதாக கூறினார். இதற்காகவா ஆரவ் கொச்சி செல்கிறார்..? தெரியவில்லை என்ன நடக்க போகிறது என்று பார்போம். எது எப்படியோ ஆரவ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகிறார்.

https://news.ibctamil.com/ta/celeberities/Aarav-got-elimination-and-went-to-see-oviya#at_pco=smlwn-1.0&at_si=59ac5b32a2fa4fca&at_ab=per-2&at_pos=0&at_tot=1

Link to comment
Share on other sites

சீக்கிரமே சீரியல்ல நடிப்பாங்க ஜுலி! (70-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss


சுற்றி வளைக்காமல் ‘வெளியேற்றப்படலம்’ தொடர்பான விஷயத்திற்கு நேரடியாக வந்தார் கமல். “காஜல், ஆரவ், சிநேகன் என மூவரில் யார் போனா மிஸ் பண்ண மாட்டீங்க?” என்றொரு வில்லங்கமான கேள்வியை இதர போட்டியாளர்களிடம் கேட்டார். ‘போன வாரமா இருந்தா ‘காஜல்’னு சொல்லியிருப்பேன். இப்ப நாங்க பழகிட்டோம்’ என்றார் சுஜா. 

“காலம் சற்று தள்ளிப் போனால் ஒருவரைப் பற்றிய கருத்து மாறுது, பார்த்தீங்களா! என்றார் கமல். மற்றவர்கள் நேரடியாக பதில் சொல்லாமல் ஒருமாதிரியாக மழுப்பினார்கள். “வீட்ல சண்டை நடக்கலைன்னா.. நமக்கு போரடிக்குது, இல்லையா?” என்றார் கமல், காமிராவைப் பார்த்து. ஆம், ஆண்டவரே. 

BIgg Boss

“சரி. கேள்வியை மாத்திக்கறேன். யாரை மிஸ் பண்ணுவீங்க? என்றார். “ஆரவ் மற்றும் சிநேகனை மிஸ் பண்ணுவேன். காஜல் கூட பழக்கமில்லாததால் அவங்களை அந்தளவிற்கு மிஸ் செய்ய மாட்டேன்’ என்றார் ஹரீஷ். “யார் போனாலும் மிஸ் பண்ணுவேன்’ என்று மையமாகச் சொன்னார் ஜூலி. 

‘சரி. நாரதர் வேலை போதும்’ என்று கமல் தற்செயலாகச் சொல்ல, அது ஜூலியைக் குறிப்பதாக நினைத்துக் கொண்டு சபையோர் உற்சாகமாக கூவ, பதறிப் போன கமல், ‘அய்யோ.. ஜூலி.. நான் என்னைத்தான் சொல்லிக்கிட்டேன். சிரிங்க” என்றவுடன் வரவழைத்துக் கொண்ட ஒரு சிரிப்பை வெளியே தள்ளினார் ஜூலி. 

“சிநேகனை ரொம்ப மிஸ் பண்ணுவேன். சகோதரன் மாதிரி பழகிட்டோம். நெறைய பேசியிருக்கோம்’ என்றார் வையாபுரி. “ஆரவ் வெளியேற்றப்படணும்னு விரும்புவேன். ஏன்னா அவருக்காக வெளியே ஒரு soul காத்திட்டிருக்கு” என்று தேவையில்லாத வேலையைப் பார்த்தார் ஆர்த்தி. (ஆரவ் உங்களுக்கு சரியான ஜோடியில்லை என்று ஓவியாவைப் பார்த்து முன்பு சொன்ன சபை, இப்போது ஏன் ஆர்த்தியின் அந்த உளறலுக்கு கைத்தட்டினார்கள் என்று தெரியவில்லை.)

‘எதையோ’ உளறியதற்காக ஜூலி மற்றும் ஆர்த்தியை மெலிதாக கண்டித்தார் கமல். பிறகு சஸ்பென்ஸை சற்று உடைக்க விரும்பிய அவர், சிநேகனைப் பார்த்து போலியான கவலையுடன் துவங்கி ‘நீங்க safe’ என்றார். சிநேகனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. 

**

Bigg Boss

ஜூலி மற்றும் ஆர்த்தி வாக்குமூல அறைக்கு அழைக்கப்பட்டார்கள். “வெளியே இருந்து உள்ளே போன அனுபவம் எப்படி இருந்தது?” என்று கேட்டார் கமல். “நான் முன்பு பார்த்த முகங்கள் இப்போது இல்லை. வீடு அமைதியாக இருக்கிறது” என்றார் ஆர்த்தி. “சிலரிடம் எனக்கு கேள்விகள் இருந்தன. அவற்றைக் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டேன்” என்றார் ஜூலி. “யாரிடம் வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?” என்கிற கேள்விக்கு “சிநேகன் பயங்கர அமைதியாகி விட்டார். ஆரவ், ரொம்பவும் ஜாக்கிரதையாகி விட்டார். யோசித்து யோசித்தான் பேசுகிறார். புது வரவுகளுக்கு இங்குள்ள நடப்பு ஏற்கெனவே தெரியும் என்பதால் அதற்கேற்ப விளையாடுகின்றனர்” என்றார் ஆர்த்தி. ஆர்த்தி அப்படிச் சொன்ன பிறகு அதற்கு முரணாகத்தானே ஜூலியால் சொல்ல முடியும்? எனவே ‘எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை” என்று ஆர்த்தியை ஜூலி வெறுப்பேற்ற முயன்றார் என்பது என் யூகம். 

இருவரும் தற்காலிமாகத்தான் தங்க வந்திருக்கின்றனர் என்று சொன்னாலும் அவர்களை அத்தனை சீக்கிரம் பிக் பாஸ், விட்டு விடமாட்டார் என நான் உறுதியாக நம்பினேன். ஏனெனில் அவர்களின் வருகைக்குப் பிறகுதான் அமைதியாக இருந்த வீட்டின் கதையில் நிறைய ‘கசமுசாக்கள்’ உருவாகின. நான் யூகித்த படியே, ‘நீங்கள் மறுபடியும் உள்ளே செல்லுங்கள். ஆனால் நீங்களும் வெளியேறுவது போல நடித்து இதர போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி தாருங்கள்’ என்றார் கமல்.  ஆரத்தியின் தலைக்கனம் குறித்து மெல்லிய கண்டனத்தைக் கூட கமல் தரவில்லை என்பதில் எனக்கு சற்று ஏமாற்றம். 

**

அதிகம் சஸ்பென்ஸ் வைக்காமல் யார் வெளியேற்றப்பட போகிறார்கள் என்பதை அறிவித்தார் கமல். ‘காஜல்’ 

Bigg Boss

என்னால் அதை நம்பவே முடியவில்லை. ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் காஜல் இப்போதுதான் வீட்டுக்குள் வந்தார். அவர் மீது பெரிதாக எந்தவொரு சர்ச்சையும் இல்லை. அவருக்கு எதிராக மக்கள் வாக்களித்திருப்பார்களா என ஆச்சர்யமாக இருக்கிறது. துவக்க நிலையில் இருந்தே ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டிருந்த சுஜாவும் காஜலும் நண்பர்களாகி விட்டிருந்த சூழலில் காஜலின் வெளியேற்றம் நிகழ்ந்தது துரதிர்ஷ்டம். 

காஜலின் ரிப்போர்ட் கார்டை சுருக்கமாகப் பார்ப்போம். காயத்ரியின் வெளியேற்றம் நிகழும் என்று உறுதியாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளே வந்தார் காஜல். காயத்ரிக்கு மாற்றாக இருப்பார் என்று நினைத்திருந்தபோது எவ்விதமான சர்ச்சையையும் உருவாக்காமல் அமைதியாகவே இருந்தார். ‘இனம் இனத்தோடு சேரும்’ என்கி தர்க்கப்படி காயத்ரியிடம் சகஜமாக இருந்தார். சுஜாவிடம் மட்டுமே முரண் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. முன்தீர்மான வெறுப்புடன் சுஜாவை வெறுத்தது மட்டுமே நெருடல். ரைசாவுடன் அதிகம் பழகினார். ரைசாவின் வெளியேற்றம் நிகழ்ந்த போது தன்னிச்சையாக அழுதார். 

காஜல் உள்ளே நுழைந்ததில் இருந்தே வெற்றியடைவது குறித்து எந்த நம்பிக்கையும் வைக்கவில்லை. தன்னால் வெற்றியடைய முடியாது என்கிற அவநம்பிக்கையை தொடர்ந்து சொன்னார். taskகளில் பங்கு பெறுவதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. சலிப்பாகவே பங்கு பெற்றார். பிக் பாஸ் விதிகளை மீறி வெளியில் நடந்த விஷயங்களை இதர போட்டியாளர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். 

வடசென்னை வழக்கு மொழியில் அவர் பேசியது துவக்கத்தில் வித்தியாசமாக தெரிந்தாலும் போகப் போக அதுவே அவரது தனித்த அடையாளமாக மாறியது. முகத்திற்கு எதிரே எதையும் சொல்லி விடுவதில் துணிச்சல் கொண்டவராக இருந்தார். ஆரவ்வும் சிநேகனும் விளையாட்டாக பிடித்த போது ஏற்பட்ட வலியின் சோகத்தை தனிமையில் சென்று தீர்த்துக் கொண்டார். அவர் யூகித்தது போலவே ‘டான்’ போல தோற்றம் கொண்ட அவரை ஆரவ் உள்ளிட்டவர்கள் இணைந்து காமெடி பீஸாகவே மாற்றி விட்டனர். பழைய உதாரணமாக இருந்தாலும் இதைத்தான் சொல்ல வேண்டும். வெளியில் இருந்து பார்ப்பதற்கு கரடுமுரடாக தெரிந்தாலும் உள்ளே இனிப்பாக இருக்கும் பலாப்பழம் போன்றவராக இருந்தார் காஜல். 

Bigg Boss

**
காஜல் அனைவரிடமும் கட்டிப்பிடித்து விடைபெற்றார். பிரியாவிடை செய்தியில் ‘DON’ என்று எழுதுமாறு ஆரவ்வும பிந்துவும் வற்புறுத்தியதை, தனக்கு விருப்பமில்லா விட்டாலும் அவர்களின் கோரிக்கைக்காக நிறைவேற்றினார். “நான் உங்க கிட்ட ஏதாவது ஓவராக பேசியிருந்தா மன்னிச்சுக்கங்க” என்றார் ஆரவ். வெளியேறுவதற்கான கதவு ‘சட்டென்று’ திறந்ததும் உண்மையிலேயே பயந்து விட்டார் காமெடி டான். 

கூடவே வெளியேறுவது போல் நடித்த ஆர்த்தியும் ஜூலியும் சட்டென்று நின்று விட்டனர். ரொம்பவும் மொக்கையான விளையாட்டு. ஜூலியை விடவும் ஆர்த்தி போகக்கூடாது என்று பலர் விரும்பியதாகத் தெரிகிறது. “ஆர்த்தி போகாதீங்க” என்று கதறிக் கொண்டிருந்தார் சுஜா. அந்த வாயாடியை அரவணைத்துச் சென்றால் தனக்கு பாதுகாப்பு என்று முதலில் இருந்தே சுஜா நினைத்து விட்டார் போல. 

‘சில காரணங்களுக்காக காஜலுடன் தான் அதிகம் பேசவில்லை’ என்பதற்காக சிநேகன் காமிராவின் முன் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். காஜலிடம் வாயைக் கொடுத்து எதற்கு வம்பு என அவர் அமைதியாக இருந்திருக்கலாம். 

Bigg Boss

**

வெளியே வந்த காஜலுடன் கமல் உரையாடல் நிகழ்ந்தது. “முதல் நாள்ல இருந்தே ஜெயிக்கமாட்டேன்’ன்ற மாதிரியே நடந்துக்கிட்டீங்களே” ஏன்? என்று கேட்டார் கமல். ‘இல்ல சார் ஒரு வாய்ப்பிற்காகத்தான் வந்தேன். ஆனால் ஜெயிக்கமாட்டேன்னு தெரியும்’ என்பதையே இங்கும் சொன்னார் காஜல். “உள்ள யாரும் உண்மையா இல்ல. எல்லோரும் நடிக்கறாங்க. நாமினேஷன் பயத்துலயே எல்லோரும் இருக்கறாங்க. எனக்கு உண்மையாவே கோவம் வரலை’

“சிநேகன் நாமினேட் பண்ணதைப் பத்தி ஜூலி எதுவுமே கேட்கலை. நானா இருந்தா மூஞ்சுக்கு நேரா கேட்டுடுவேன். ஆர்த்தி கூட ஆரவ் வெளியேற்றப்பட்டால் அவருக்காக வெளியே ஒரு ஜீவன் காத்திருக்குன்னு ஓவியா பேரைச் சொல்லி கைத்தட்டல் வாங்கிட்டாங்க. என்னாலும் அப்படிச் செய்ய முடியும். ஆனா நான் அப்படிச் செய்ய மாட்டேன்.” என்றெல்லாம் அவருடைய பதில் நீண்டது. 

சபையோரைக் காட்டி ‘இவங்களும் எடுப்பார் கைபிள்ளைதான். ஒருத்தரை பிடிச்சுப் போச்சுன்னா அவங்க செய்யற எல்லாப்பிழைகளையும் மறந்துடுவாங்க. மன்னிச்சுடுவாங்களான்னு தெரியாது. ஆனா மறந்துடுவாங்க. என் பிழைகளையும் அப்படி மறந்துட்டாங்க”. என்று  தன்னைப் பற்றிக் கூறுவது போல அரசியல் நையாண்டியையும் இணைத்து ரைட் இண்டிகேட்டர் போட்டு லெப்ட்ல கைகாட்டி வண்டியை நேராக எடுத்துச் சென்றார் கமல். 

‘என் கிட்ட குறை இருந்தாலும் சொல்லுங்க. அதை அப்படியே திருத்தி மாத்திப்பேன்’ என்று கமல் ஜாலியாக சொன்னதற்கு ‘உங்களை எனக்கு பிடிக்கும் சார்’ என்று ஜகா வாங்கி விட்டார் காஜல். 

Bigg Boss

“வெளியே இருந்து பார்த்துட்டு பிறகு உள்ளே போன பிறகு வேற மாதிரி தெரிஞ்சது யார்?” என்ற கேள்விக்கு ‘சுஜாதான். ஓவியா மாதிரி நடிக்கறாங்களோன்னு முதல்ல நெனச்சேன். வீடு சுத்தம் செய்யற விஷயத்துல அவங்க உண்மையாகவே கடுமையாக உழைக்கறாங்க. அவங்க கிட்ட winning spirt இருக்கு. எனக்கு உடம்பு சரியல்லாத போது எனக்கு உதவி செஞ்சாங்க” என்றார் காஜல். 

“ஒரு மனிதன் வாய்ப்பு கிடைத்தால் நல்லவனாகத்தான் இருப்பான். எந்தக் கொடூரமான மனிதனாக இருந்தாலும் அவனுக்குள்ள வேற மாதிரியான கனிவான இடம் இருக்கு. சரியான உதாரணம் ஹிட்லர். அவரோட காதல் எபிஸோடை படிச்சா கண்ணீர் வந்துடும். நம்முடைய கோபம் அழிக்கும் கோபமாக இருக்கக்கூடாது” என்ற கமல் “போட்டோல முதல்ல உங்களைப் பார்க்கும் போது சண்டைக்கோழியா இருப்பீங்கன்னு நெனச்சேன். ஆனா இல்லையா?” என்றார்.

“வெளிய இருந்து பார்க்கும்போது உள்ள நெறய சண்டை இருக்கற மாதிரி இருந்துச்சு. ஆனா உள்ளே போனா யாரும் சண்டையே போட மாட்றாங்க சார். எல்லோரும் நாமினேஷன் பயத்துல இருக்காங்க. அதுக்காக நடிக்கறாங்க” என்றார் காஜல்.

குட்மார்னிங் சொல்லும் சம்பிரதாயத்தை கிண்டலடிக்கும் அனுபவங்களைப் பகிர்ந்தார் கமல் (சமூக வலைத்தளங்களில் ‘குட்மார்னிங்’ ஸ்டேட்டஸ் மட்டுமே போடுபவர்கள் கவனிக்க வேண்டியது). என்னோட வாத்தியார் ஒருத்தர் இருந்தார். ‘குட்மார்னிங்’ சொன்னா ‘அதை நீ யாரு முடிவு பண்ண’ன்னு கோச்சுக்குவாரு. நான் முடிவு பண்ணியே நடக்கலை’ன்னுவாரு.’ என்ற கமல் “குட்மார்னிங் தினமும் சொல்ற விஷயம்னாலும் யாரும் அதற்கு எரிஞ்சு விழறதில்ல.”

மருமகள் –மாமியார், ‘அப்பா –மகன்’ ஆகிய உறவுகளுக்கிடையில் உள்ள போலித்தனங்களையும் சுட்டிக் காட்டினார் கமல். ‘நடிப்பு –ன்றது நடைமுறையில் எல்லா விஷயங்களிலும் இருக்கிறது”.

Bigg Boss

சுஜா – காஜல் உறவைப் பற்றி விசாரித்தார் கமல். ‘ஆமாம் சார். முதல்ல அவங்க கூட செட் ஆகவே ஆகாதுன்னு நெனச்சேன். ஆனா எல்லா வேலையும் அவங்கதான் செய்யறாங்க. ஹரிஷூம் பிந்துவும்தான் வேலை செய்யறதேயில்லை. சுஜா எனக்கு உடம்பு சரியில்லாத நைட்ல சுடுதண்ணி கொடுத்தாங்க. அதனாலதான் அவங்களை மறுநாள் நாமினேஷன் பண்ணலை.”

‘ஒரு இடத்துல நீங்க நடிக்காத மாதிரி தோணுச்சு. ரைசா எவிக்ஷன் போது” என்றார் கமல். “ஆமாம் சார். என் கிட்ட பேசியதால்தான் அவங்க வெளியேறினாங்கன்னு தோணுது. ஆடியன்ஸ்ஸூக்கு பிடிக்காது” என்ற காஜலை இடைமறித்து ‘ஓ.. ஆடியன்ஸ் நெனக்கற விஷயம் கூட உங்களுக்குத் தெரியுமா? அப்ப நான் உங்க கிட்ட டியூஷன் எடுத்துக்கணும்” என்று கிண்டலடித்தார் கமல். 

“சிநேகனை உங்களுக்கு முன்னாடியே தெரியும் போலிருக்கு. ஆனா அது குறித்தான அறிகுறி எதுவுமே இல்லையே’ என்று அடுத்த தூண்டிலைப் போட்டார் கமல். ‘ஆரவ் விஷயத்துல சிநேகன், வையாபுரி இரண்டு பேரும் மாத்தி சொன்னாங்க. நுழையும் போதே அதைக் கேட்டுட்டேன். அதனால அவங்களுக்கு என் மேல கோபம்’

Bigg Boss

‘இந்த நாமினேஷன் விஷயத்தை உள்ள இருக்கறவங்க அவ்ள சீரியஸாவா எடுத்துக்கறாங்க? நான் போகணும்’னு அடம்பிடிக்கறாங்களோ” என்று பார்வையாளர்களின் மனதில் பெரும்பாலும் இருக்கக்கூடிய கேள்வியை கேட்டார் கமல். 

“அதெல்லாம் நடிப்பு சார். நான் கூட சொன்னேன். ஓவியா பத்தி ஏதாவது தப்பா சொல்லுங்க. அவங்க ரசிகர்கள் வாக்கின் மூலம் உங்களை வெளியேத்திடுவாங்கன்னு சொல்லியிருக்கேன். யாரும் பண்ணலை’ என்றார் காஜல். காஜலின் இந்தக் கணிப்பு சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. 

**

நீட் தேர்வு போல ஒற்றை வார்த்தைகளில் பதிலளிக்கும் நிகழ்வு நடந்தது. 

‘இந்த விளையாட்டை உண்மையாகவே விளையாடினேன்” ‘நரித்தந்திரம் மிகுந்தவர் சிநேகன்’ “கணேஷ் நடுநிலைமையாக ஜாக்கிரதையாக விளையாடுகிறார்”, “எனக்குப் பிடித்த போட்டியாளர் சுஜா” :”வையாபுரி task செய்யாமலிருப்பது தப்பு”, “நான் task செய்யமாட்டேன்னு சீன்தான் போட்டேன். ஆனா செஞ்சேன்”, “உண்மையான நட்பு ரைசா மற்றும் காயத்ரி கிட்ட இருந்தது”, “ஆர்த்தி ஜுலி இடையே சண்டை ‘லைட்டா’ இருக்கு” (என்னாது.. லைட்டாவா? – கமல்) 

காஜல் பற்றிய குறும்படம் காட்டப்பட்டது. ஓரிடத்தில் ரைசாவும் ஆரவ்வும் ‘அவங்க தன்னை டெரர்னு நெனச்சுப்பாங்க.. ஆனா காமெடி பீஸூ’ என்று பேசிக் கொண்டதைப் பார்த்து ஜெர்க் ஆன காஜல்.. ‘அடியே ரைசா…”என்று ஜாலியாக கோபித்துக் கொண்டார். 

போய்ட்டு வாங்க காஜல் அக்கா. 

**
அடுத்து ஒரு புதிய விருந்தாளி. ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ கதையாக சக்தி வந்தார். “என் குடும்பத்தை நிறைய மிஸ் பண்றேன். திரும்ப வரமாட்டேன்’ என்றெல்லாம் முன்பு சொன்னவர், கடந்த சந்திப்பின் போது ‘சிலரை டிரிக்கர் பண்ண வேண்டியிருக்கு. அதனால போவேன்’ என்று அப்போது சொன்னபடியே வந்து விட்டார். 

“நான் மறுபடியும் உள்ளே போவேன்னு நெனக்கல. இங்க இருந்த போது home sickness இருந்தது. சரி, அடுத்த வேலைகளைப் பார்க்கலாம்னு நெனச்சேன். ஆனால் வெளியே போய் விட்ட பிறகு இங்கு என்ன நடக்கிறதோ என்கிற பதற்றத்துடன் தினசரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். வெளியே வந்த பிறகு பிக் பாஸ் குடும்பத்தை பிரியற உணர்வு வந்துடுச்சு. அது மட்டுமில்லாமல் சிலரை டிரிக்கர் பண்ணணும். இதுவரைக்கும் ஷத்திரியனா இருந்துட்டேன். ஆனால் உள்ள சாணக்கியனா இருந்தாத்தான் பிழைக்க முடியும்னு தோணுது. அப்படி சிலர் இருக்காங்க” என்றெல்லாம் நீட்டி முழக்கினார். 

‘என்னை ஹீரோவா மக்கள் ஏத்துக்கிட்டாங்க. (இந்தச் சம்பவம் எப்ப நடந்தது?) ஆனா உள்ளே போய் வில்லனாகிட்டேன்” என்ற சக்தி, “ஒரு வாரம் இருக்கப் போறேன்’ என்று சொன்னதுதான் ஆறுதலான ஒன்றாக இருந்தது. பழைய முகங்களை திரும்ப அழைத்து வருவதை விட புதிய முகங்களை அறிமுகப்படுத்தினால் அது சுவாரசியமானதாக இருக்கும். 

முகமூடி அணிந்த ஆசாமிகள் சூழ சக்தி உள்ளே செல்லவிருப்பதை கமல் சூசகமாக குறிப்பிட விரும்பினாரோ என்னமோ, “சில முகமூடிகளைக் கழற்றி அசல் முகங்களை பார்க்கணுமா?’ என்று சம்பந்தமில்லாமல் கூறினார். 

Bigg Boss

“வெளியே போனப்புறம் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது என்ன தோணுச்சு” என்ற கேள்விக்கு ‘சுயநலம் அதிகமா இருக்கற மாதிரி தெரியுது. வையாபுரி புலம்பிட்டே இருக்காரு. சிநேகன் புறம்பேசிட்டே இருக்காரு. இரண்டு பேரையும் சந்திக்கணும்” என்றார் சக்தி.

சிநேகன் விஷயத்தில் சக்தியின் கோபம் அபத்தமானது. கமல் தன்னை அரசியலுக்கு வரச் சொன்னது சீரியஸா, கிண்டலா என்ற சந்தேகம் வந்த போது சிநேகனிடம் அது பற்றி கேட்டதாகவும் ‘அவர் காமெடியா சொல்லியிருப்பாரு” என்ற சிநேகன் மற்றவர்களிடம் ‘அவர் நக்கல் செஞ்சிருக்காரு. அது புரியாம இவர் இருக்காரு’ என்று புறம் பேசியதால் சிநேகன் மீது சக்தி கோபமாக இருக்கிறாராம். 

கடவுளே! சிநேகன் புரிந்து கொண்டதுதான் சரி. வைரம் திருடும் போட்டியின் போது “நான் தலைவனாவும் இருந்துக்கிட்டு திருடனாவும் இருக்க முடியல” என்ற சக்தியிடம் ‘அப்ப உங்களைப் போல ஆட்கள்தான் அரசியலுக்கு வரணும்’ என்று கமல் சொன்னது அரசியல் நையாண்டி. இது பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சக்திக்கு புரிந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் வெளியில் வந்தபிறகு வீடியோக்களை நிதானமாகப் பார்த்தால் புரிந்திருக்குமே. அல்லது மற்றவர்கள் எவராவது அவருக்கு இதை உணர்த்தியிருக்கலாமே. இந்த எளிய கிண்டல் கூட புரியாமல் ‘ஷத்திரியன், சாணக்கியன்னு’ பஞ்ச் டயலாக்லாம் வேற. 

“சரி உள்ள போங்க’ enjoy the game’ என்று அனுப்பி வைத்தார் கமல். 

 

முகமூடி அணிந்த சில திடகாத்திரன்கள் உள்ளே நுழைந்து எதைஎதையோ தேடினார்கள். போட்டியாளர்களுக்கு சற்று திகைப்பாகத்தான் இருந்தது. பிறகு ஆரவ்வை கைது செய்து அழைத்துச் சென்றார்கள். ‘எனக்கெதுக்கு இத்தனை ஆளுங்க.. ஒருத்தர் போதுமே” என்று ‘கைப்புள்ள’ வடிவேலுவாக கதறினார் ஆரவ். 

Bigg Boss

பிறகு, பைக்கில் உள்ளே வந்தார் சக்தி. அவரைப் பார்த்ததும் ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் ரித்திகா சிங் மாதிரி தாவிப் பாய்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டார் சிநேகன். பிறகு ஓவென்று ஒரே அழுகை. (அடப்பாவி.. சிநேகன்.. சக்தி உங்களுக்கு ஆப்பு வெக்கத்தாம்யா வந்திருக்காரு). சிநேகனுக்கே யாராவது கட்டிப்பிடி வைத்தியம் செய்ய வேண்டும் போல ஒரே அழுகை. 

இதற்கிடையில் இன்னொரு புறம் வேறு காமெடியும் நடந்தது. ஆரவ்வை கைது செய்து அழைத்துச் சென்றது குறித்து ஜூலி மிகையாக பதறினார். பழைய திரைப்படங்களில் கண்ணாம்பா புலம்பித் தீர்ப்பது போல கணீர் குரலில் ‘செல்வமே .. என்னை விட்டு எங்கேயடா போனாய். கண்ணே.. எப்படியெல்லாம் தவிக்கிறாயோ’ என்ற ரேஞ்சுக்கு ஓவராக சீன் போட்ட ஜூலியை எரிச்சலுடன் சுஜா அடக்கியது சரி. பொதுவாகவே ஜூலியின் உரையாடல் சத்தமாக இருக்கிறது. Task வந்து விட்டால் சாமி வந்தது போல கத்தித் தீர்க்கிறார். 

அது பொய்யாகவோ அல்லது உண்மையாகவோ, ஆரவ் குறித்து மற்றவர்கள் பதறும் போது எவ்வித பதட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தவர் வையாபுரி. இது பிக்பாஸின் விளையாட்டு என்று நம்மால் எளிதாக யூகிக்கும் போது வீட்டில் இருந்தவர்களின் பதற்றம் போலித்தனமாகத் தெரிந்தது. 

ஜூலி excite ஆனதிற்கு சுஜா கோபித்துக் கொண்டார். எனவே இது குறித்தான பஞ்சாயத்து இருவருக்குள்ளும் நடந்தது. உப்பு பெறாத விஷயம். ‘என்னால் என் உணர்ச்சிகளை அப்படித்தான் வெளிப்படுத்த முடியும்’ என்று ஜூலி நியாயப்படுத்துவது பொருத்தமாகத் தெரியவில்லை. காஜல் வெளியேற்றத்தின் போது ஜூலி எதையோ சொல்ல முயல, ‘Shut up ஜூலி’ என்று அதட்டிய ஆர்த்தியிடம் இது போல எந்தப் பஞ்சாயத்தையும் ஜூலியால் நிகழத்த முடியாது. சுஜா சுட்டிக்காட்டும் பிழையை எவ்வித நிபந்தனையும் இன்றி ஜூலி ஏற்றுக் கொள்வதே முறை. வழக்கத்திற்கு மாறான வேறு சுஜாவை இப்போது பார்க்க முடிந்தது. 

**
‘நெஜம்மாவே நம்மை வீட்டுக்கு அனுப்பிடுவாங்களோ’ என்று மிரண்டு போயிருந்த ஆரவ்வை கமல் சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பினார். உண்மையில் இது மொக்கையான விளையாட்டு. இது prank என்று பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியும் என்று நினைக்கிறேன். என்னால் எளிதில் யூகிக்க முடிந்தது. 

ஆரவ் உள்ளே நுழைந்த போது மறுபடியும் பரவசமடைந்தார் ஜூலி. என்றாலும் சுஜாவிற்காக பயந்தோ என்னமோ, தனியாகச் சென்று ஆரவ்வை அனுப்பியதற்காக கண்ணீர்மல்க நன்றி சொன்னார். (“நீ சீக்கிரம் வெளியே போய் சீரியல்ல நடி தாயி. நல்ல எதிர்காலம் இருக்கு”)

Bigg Boss

**

‘சக்தி உள்ளே புரட்சி செய்து கொண்டிருக்கிறார்’ என்று சம்பந்தமேயில்லாமல் தன் நிறைவு உரையைத் துவங்கிய கமல், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக காட்டமாக பேசினார். ‘இது குறித்தான தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும். என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டு நிற்காமல் கை கோர்த்துக் கொண்டு நடக்க வேண்டும். இதற்கான தீர்வு என்ன என்று என்னிடம் கேட்காதீர்கள். அறிவாளிகள், கல்வியாளர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அது. 

பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று இளம்தலைமுறை வேடிக்கை பார்க்காதீர்கள். பொறுப்பை இப்போதே கையில் எடுத்துக் கொண்டு பெரியவர்கள் ஆகுங்கள். அடுத்த வருடத்திற்குள் இதற்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டேயாக வேண்டும். இதுக்காக நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க. செய்யறேன். இதுவொரு சுதந்திரப் போராட்டமா? ஆம். போராட்டம்தான். நம் இனத்திற்கு துரோகம் செய்கிறவர்களை இனியும் சகிக்க முடியாது. நம் கனவுகளை கலைக்கும் சுயநலவாதிகளுக்கு புத்தி சொல்வோம், கேட்க வில்லையெனில் நகர்த்தி வைப்போம்’ என்ற ஆவேசத்துடன் தன் உரையை நிறைவு செய்தார் கமல். 

சில மரணங்கள், தற்கொலைகள் தனிப்பட்ட நபர்களின் பிரச்னைகள் மட்டும் அல்ல. அரசுகளின், அதிகார வர்க்கத்தின் கள்ள மெளனங்களை, மெத்தனங்களை, மனச்சாட்சியை நோக்கி பலமாக அடிக்கப்படும் சுத்தியல் ஒலிகள் அவை. ஓர் அரசியல் அறைகூவல். 

பொதுநலப் பிரச்சினைகளுக்காக போராடும் பல தனிநபர்கள், தங்களின் குரல் அதிகாரத்தின் காதுகளில் விழாமலே போன உளைச்சல்களுக்காக, தன் மரணத்தின் மீதாவது அந்த உறக்கமும் மெளனமும் கலையுமா என்கிற நோக்கில் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனிதாவின் மரணமும் அத்தகையதே. 

 

நீண்ட கால மருத்துவக் கனவுடன் நன்றாகப் படிப்பதை தவிர வேறு எந்த தவறையும் செய்யாத அந்த அப்பாவிப் பெண்ணின் மரணம், அதிகாரத்தின் கள்ள மெளனத்தையும் அரசியல் ஆதாய பேரங்களையும் கலைத்து புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தட்டும். அந்த தியாக விடியலின் வெளிச்சத்தில் எளிய சமூகம் நடைபோடுவதற்கான பாதை அமையட்டும். 

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/101243-very-soon-julie-will-act-in-television-series---bigg-boss-tamil-updates-day-70.html

Link to comment
Share on other sites

அலோ பிக்பாஸு... இதெல்லாம் நியாயமா பாஸு?! (71-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்

Bigg_Boss_Baner_11586_09007.jpg


நீண்ட நாட்களுக்குப் பிறகு பிக்பாஸ் வீட்டில் இன்று அனல் பறந்தது. சில பரபரப்பான நிகழ்வுகள். சில நேரடி மோதல்கள், அழுகாச்சி, சிரிப்பாச்சி நாடகங்கள் நிறைந்திருந்தன. சண்டைச் சேவல்களை இறக்கி நேருக்கு நேராக சண்டையிட வைப்பதைப் போன்ற உத்தியை பிக்பாஸ் திறமையாக வடிவமைத்திருந்தார். பார்வையாளர்கள் பழைய உற்சாகத்தைப் பெற்றிருப்பார்கள் என யூகிக்கிறேன்.

2_09227.jpg

சக்தி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததாலோ என்னமோ, ‘சிவனும் ‘சக்தி’யும் சேர்ந்தா மாஸூடா’ பாடலை பிக்பாஸ் காலையில் ஒலிக்க விட்டார். சக்தியுடன் காயத்ரியும் இணைந்து வந்திருந்தால் இந்தப் பாடல் இன்னமும் பொருத்தமாக இருந்திருக்கும். பொதுவாக காலை எழுந்தவுடன் கேமிராவைப் பார்த்து சோம்பல்தனத்துடன் முகத்தை மூடிக் கொள்ளும் சக்தி, இன்று வெளியே வந்து மற்றவர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனம் ஆடினார். 

‘ஜூலி என்ன சொல்றாங்க?” என்று சிநேகனிடம் விசாரித்தார் சக்தி. “ஜூலி கிட்ட நிறைய மாற்றம் இருக்கு. ஆரவ் போன போது ஒரே அழுகை. கலாட்டா. அதற்கப்புறம் சைலண்ட். சத்தமே காணோம். ஆனா ஆரவ் திரும்பி வந்த பிறகு ஷாக் ஆயிட்டா… ஆனால் ஆரத்தி மாறவேயில்லை’ என்றார் சிநேகன். 

**

பிக்பாஸ் ஸ்பான்சர்களின் பிராண்டுகளை நிகழ்ச்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சாமர்த்தியமாக நுழைக்கிறார்கள். அந்த வகையில் ஆயுர்வேத மருந்தின் பிராண்டு உள்ளே வந்தது. ஆயுர்வேதத்தின் மகிமையைப் பற்றி சிறிது நேரம் உபன்யாசம் செய்தார் சிநேகன். 

என்னவென்று பார்த்தால், இந்த வாரம் வீட்டின் தலைவரை ‘ஞானத்தைப்’ பயன்படுத்தி தேர்ந்தெடுக்க வேண்டுமாம். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது இதுதான். ஞானம்.. ஞானம்.. யானை.. யானை…

ஆனால் இதில் ஆறுதலான விஷயம் எதுவேன்று பார்த்தால், கடந்த வாரங்களில் உடல்பலத்தைக் கொண்டே தலைவர் போட்டி நடத்தப்பட்டது. இதனால் ஆண்கள் அதிகம் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. இதைப் பற்றி மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டிருந்தேன். இம்முறை ஜனநாயக முறைப்படி தேர்தல் வழியாக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது சிறப்பு. என்றாலும் அதிலும் சில குளறுபடிகள் இருந்தன. அரசியல்ல.. இதெல்லாம் சாதாரணமப்பா..

4_09137.jpg

வீட்டிலுள்ள அனைத்துப் போட்டியாளர்களும் இணைந்து மூன்று நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மூன்று நபர்களும் தலைவர் நிலைக்கு போட்டியிடுவார்கள். அவர்கள் வீட்டின் உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து ‘நான் எப்படி சிறந்த தலைவன் ஆக இருப்பேன்?’ என்று விவரித்து வாக்கு சேகரிக்க வேண்டும். வீட்டில் உள்ளோர் கூடி சிநேகன் மற்றும் கணேஷை தேர்ந்தெடுத்தனர். வையாபுரி, ஆர்த்தியை பரிந்துரைத்தார். ஆனால் வையாபுரி இதுவரை தலைவராக இருந்ததில்லை என்பதால் அவரை நிற்குமாறு மற்றவர்கள் வலியுறுத்தினர். அப்போதே தேர்தலின் முடிவை ஒருவாறு யூகிக்க முடிந்தது. 

“என்னதிது.. அவங்களே பேசி… முடிவு எடுத்திட்டாங்க. இதுவரை தலைவராக இல்லாத புது போட்டியாளர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கலாம்” என்று ஆரத்தி பிற்பாடு ஆதங்கப்பட்டார். இந்த ஆட்சேபத்தை அவர் சபையிலேயே தெரிவித்திருக்கலாம். இந்த விஷயத்தை அவர் மறுபடி மறுபடி சொல்வதின் மூலம், தான் தலைவராக விரும்பி பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டாரா? அல்லது சுஜாவை தலைவராக்கி அதன் மூலம் பிந்துவிற்கு செக் மேட் வைக்க நினைத்தாரா என்பது தெரியவில்லை. அல்லது உண்மையிலேயே கூட புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்தாரோ, என்னமோ. 

எனவே சிநேகன், கணேஷ், வையாபுரி ஆகியோர் தலைவர் தேர்தலில் நின்றனர். கணேஷ் என்ன சொல்லி வாக்கு கேட்பார் என்று நினைத்துப் பார்க்கவே சிப்பு சிப்பாக வந்தது. 

**

5_09226.jpg

ஆரத்தியிடம் முதல் வாக்கை கேட்கத் துவங்கினார் சிநேகன். ‘இனி மேல் போலியா இருக்கத் தேவையிருக்காது. பிரச்னை பண்றவங்ககிட்ட. ஒதுங்கியிருக்க மாட்டேன்”. வையாபுரி செய்ததுதான் காமெடி. சுயேச்சை வேட்பாளர் போல ஒவ்வொருவரையும் இழுத்து ‘உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கே போட வேண்டும். இனிமே அழ மாட்டேன். taskகளை ஒழுங்கா செய்வேன்’ என்று விளையாட்டும் சீரியஸூம் கலந்து வாக்கு கேட்டார். வயதில் மூத்தவர் என்பதால் மற்றவர்கள் அவரிடம் இணக்கமாகவே பேசினர். குறிப்பாக ஆரவ் “உங்களுக்குத்தாண்ணே.. என் வாக்கு” என்று வெளிப்படையாக சொல்லி விட்டார். 

6_09381.jpg

“நீங்க என்ன செய்வீங்க. புது மாற்றம் இருக்குமா? என்று தீவிரமான முகபாவத்துடன் சிநேகனிடம் கேட்டார் சுஜா. “எல்லோரையும் வேலை செய்ய வைப்பேன்’ என்று நம்பிக்கையளித்தார் சிநேகன். “நீங்க வீட்டை சுத்தமா வெச்சிருக்கிறது எனக்குப் பிடிச்சிருக்கு” என்று சுஜாவிற்கு ஐஸ் வைக்கவும் தயங்கவில்லை. 

9_09039.jpg

பிந்து புத்திசாலி. மூன்று வேட்பாளர்களையும் ஒன்றாக அழைத்து ‘நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்கணும்னு சொல்லுங்க” என்று கேட்டார். ‘நிற்க வைத்து கேள்வி கேட்பது’ என்பது இதுதான் போலிருக்கிறது. “அவங்களுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது’ –ன்னு சொல்லுங்க” என்று தோசையை திருப்பி போட்டது போல கேள்வியை மாற்றிக் கேட்டார் பிந்து. “எனக்கு வாக்களியுங்கள்னுதான் நான் கேட்பேன். மற்றவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது’ன்னு நான் சொல்ல மாட்டேன்’ என்ற வையாபுரியின் விளக்கம் நியாயமானது. 

7_09204.jpg

கணேஷின் வாக்கு சேகரிப்பு காமெடியாக அமைந்தது. பலமான ஆளுங்கட்சி இருக்கும் நேரத்தில் இடைத்தேர்தல் நடந்து அதன் வெற்றி உறுதியாக முன்பே தெரிந்துவிட்ட நிலையில் பலியாடாக சம்பிரதாயத்திற்கு நிற்க வைக்கப்படும் எதிர்க்கட்சி வேட்பாளர் போல பரிதாபமாக இருந்தார். ‘ப்ரோ.. பெரிசா சொல்றதுக்கு எதுவுமில்ல. I believe in actions. இனிமே போட்டிகள் கடுமையா இருக்கும். இதுவரைக்கும் அமைதியா ஒரு மாதிரி ஒதுங்கியிருந்தேன். இனிமே என்னோட ஆக்ஷன் பக்கத்தைப் பார்க்கலாம்:” என்று நீட்டி முழக்கிக் கொண்டே போக, பருத்திவீரன் சிறுவன் மாதிரி “யே.. சூப்பர்பா.. இதுவரைக்கும் நீ இப்படி பேசி நான் பார்த்ததேயில்லை’ என்று சக்தி மனதில் நினைத்துக் கொண்டாரோ, என்னவோ, இரண்டே சொற்களில் கணேஷின் ஆர்வத்தின் நெருப்பில் நீரை ஊற்றினார். ‘சுருக்கமா சொல்லுங்க கணேஷ்”.

சிநேகன் ஜூலியிடம் வாக்கு கேட்க சென்ற நேரம் கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும். தொண்டைத் தண்ணீர் அனைத்தையும் இழக்க வேண்டியிருந்தது. ‘மாட்னார்ரா.. அண்ணன்’ என்று நினைத்துக் கொண்ட ஜூலி ‘வாடி மாப்ளே’’ என்கிற தோரணையில் பழைய கணக்குகளுக்கான பதில்களையெல்லாம் கதறக் கதற கேள்விகளாக கேட்டுப் பெற்றுக் கொண்டார். 

“ஓவியாவை விட உன் மேல பாசம் குறைவா வெச்சேன்-னு புகார் சொன்னேன். அவளை மிரட்ட முடியாது. ஆனா உன்னை உரிமையா மிரட்ட முடியும். உன்னை நாமினேஷன் செஞ்சது கூட சில விஷயங்களை நீ மாத்திக்கணும்தான். உன்னைப் பத்தி எங்கேயும் நான் புறம் பேசினதில்ல” என்று சமாளித்தார் சிநேகன்.

8_09330.jpg

“இல்லைண்ணே.. கமல் சார் குறும்படம் போட்டுக் காண்பிச்சப்ப அதிர்ச்சியா இருந்துச்சு. இந்த வீட்ல முதன் முதலா என்னை ‘போலி’-ன்னு சொன்னது நீங்கதான். எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொன்ன உண்மையை ‘பொய் சொல்றா’ –ன்னு அந்தப் பக்கம் போய் சொல்றீங்க. எனக்கு உண்மையிலேயே சமைக்கத் தெரியாது.’ என்றெல்லாம் ஜூலி அடுக்க “நம்ம ஊரு பொண்ணுக்கு எப்படி சமைக்கத் தெரியாம இருக்கும்னு முதல்ல நெனச்சேன். அப்புறம் நீ பூண்டு உரிச்ச லட்சணத்தைப் பார்த்தப்புறம்தான் புரிஞ்சுக்கிட்டேன். உன் மேல எனக்கு கோபம்தான் இருந்தது. எந்தநாளும் வெறுப்பு வரலை” என்று பல்வேறு விதமாக விளக்கமளித்த சிநேகன் ‘எப்பா.. போதும் முடியல.. ரீல் அந்து போச்சு” என்று மனதிற்குள் நினைத்திருப்பார். 

இதர போட்டியாளர்கள் தங்களின் பழைய கோப தாபங்களைக் கொட்டும் ஒரு வாய்ப்பாக இந்த தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டனர். தலைவராக நிற்கிறவர்கள் வேட்பாளர்களுக்கே உரித்தான குழைவுடன் அவர்களின் கோபங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது இயல்புதான். ஆனால் இது ஒரு விளையாட்டு என்கிற அடிப்படையில்,  புறம்பேசுதலும் புகார் சொல்லுதலும் இந்த விளையாட்டின் மனஅழுத்தத்தில் உருவாகும் ஒருபகுதி என்கிற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டால் பழைய குப்பைகளை கிளற வேண்டிய அவசியமே இருந்திருக்காது. 

**

தேர்தல் நடந்தது. பச்சை மற்றும் சிவப்பு நிற பேட்ஜ்கள் இருந்தன. ஒவ்வொரு வேட்பாளருக்கும் தகுந்த காரணங்களைச் சொல்லி அதைக் குத்த வேண்டும். நேர்மறையான காரணத்திற்கு பச்சை நிறமும் எதிர்மறையான காரணத்திற்கு சிவப்பு நிறமும். பச்சை நிறத்தை அதிகம் பெறுகிறவர்கள் தலைவர் ஆவார்கள். 

ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான காரணங்களைச் சொல்லி பேட்ஜ்களை குத்தினார்கள். ஆரத்தி பேட்ஜை குத்தும் போது ‘பார்த்து.. கோபத்துல ஊசி உடம்புக்குள்ள போயிடப் போவுது’ என்று கிண்டலடித்தார் சிநேகன். சக்தி சிநேகனுக்கு வாக்களிக்கும் போது ‘ஷத்திரியன் சாணக்கியன்’ டயலாக்கை நூறாவது முறையாக சொல்லி உயிரை வாங்கினார். ‘அண்ணனுக்கு இருக்கிற ஒரே தங்கச்சி நான்’ என்று மிகையான பாசத்துடன் சிநேகனுக்கு ஜூலி பேட்ஜ் குத்தும் போது ‘யப்பா ஒலக நடிப்புடா சாமி’ என்கிற தோரணையில் முடியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டார் சுஜா. 

10_09095.jpg

இறுதியில் அதிக பச்சையைப் பெற்ற வையாபுரி தலைவராக ஆனார். போட்டியாளர்களின் மனதில் இருந்த கோப தாபங்கள், சிவப்பு நிறத்தில் வெளியானது. “இனிமே யாரைப் பத்தியும் புறம் பேச மாட்டேன். சுணங்காமல் சவால் விளையாட்டுக்களை செய்வேன்’ என்பது புது தலைவரின் உறுதிமொழி. 

**

ஆரத்தி, ஜூலி, சக்தி ஆகியோர் தற்காலிகமாக வந்திருப்பதால் பிக்பாஸ் போட்டியின் இறுதி நிலையில் பங்கு பெற மாட்டார்கள்’ என்று வந்த அசரிரீக்குரல் சென்னை மழை போல அதிகம் மகிழ வைத்தது. 

நாமினேஷன் படலத்தின் மூலம் அடுத்த ஏழரையைக் கூட்ட முடிவு செய்தார் பிக்பாஸ். “அழற ஆம்பளையை நம்பக்கூடாது. அவர் கிட்ட இப்ப நிறைய வித்தியாசம் இருக்கு” என்று விநோதமான காரணத்தைச் சொல்லி சிநேகனை நாமினேட் செய்தார் ஆரத்தி. கூடவே சுஜாவையும். “குழந்தை மாதிரி நடிக்கறாங்க”.

11_09493.jpg

‘சுயநலத்துடன் ஒதுங்கியிருக்கிறார், சவால் விளையாட்டுக்களில் ஆவேசமாக ஆதிக்கம் செலுத்துகிறார்’ என்றலெ்லாம் கணேஷ் ப்ரோவின் மீது புகார்கள் விழுந்தன. “கணேஷ் மற்றும் ஆரவ் எனக்கு கடுமையான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று கருதுவதால் அவர்களை நாமினேட் செய்கிறேன்” என்கிற சிநேகனின் நேர்மை பாராட்டத்தக்கது. ஜூலி, ஆரவ்வை நாமினேட் செய்ததுதான் ஆச்சரியம். ஆரவ் கைது செய்யப்பட்ட போது ‘கொல்றாங்க.. கொல்றாங்க.. என்று பதறிய ஜூலியா இது? கூடவே பாசமிகு அண்ணன் சிநேகனுக்கும் ஜூலி வைத்த ஆப்பு சிறப்பு. 

இறுதியாக, சிநேகன், சுஜா, ஹரீஷ் மற்றும் கணேஷ் ஆகியோர் நாமினேஷனிற்குள் வந்தனர். ‘ஒருவரை காப்பாற்றும் வாய்ப்பு கணேஷிற்கு இருந்தது. இரண்டு வாரங்களாக அவர் அதைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தார். இந்த வாரம் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்பதால்  நாமினேஷன் ஆபத்திலிருந்து சிநேகனைக் காப்பாற்றினார். சிறப்பான முடிவு. புறம் பேசுதல் உள்ளிட்ட சில எதிர்மறை காரணங்கள் சிநேகனிடம் இருந்தாலும் ஒரு மூத்த அண்ணனாக வீட்டின் அனைத்துக் காரியங்களையும் ஒருங்கிணைக்கும் சிநேகனின் உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டியது. 

12_09060.jpg

இப்போது சிநேகன் தனக்கு நீங்கிய ஆபத்தை வேறொருவரின் தலையில் வைக்க வேண்டும். சிநேகன் பிந்துவை தேர்ந்தெடுத்தார். ஆக.. இறுதி  நாமினேஷனில் சிநேகன் காப்பாற்றப்பட்டு ‘ரொட்டியின்’ வாரிசான பிந்து வந்து இணைந்தார். 

**

13_09501.jpg

விருது வழங்கும் விழாவின் மூலம் அடுத்த ஏழரைக்குத் தயாரானார் பிக்பாஸ். சக்தி, ஜூலி, ஆரத்தி ஆகியோர்தான் இந்த விருதிற்கான நடுவர்களாம். ஆஸ்கர் விருதிற்கு செல்வது போல மிகையான ஒப்பனையுடன் வந்திருந்தார் ஜூலி. 

‘மந்தம்’ என்கிற விருதை பிந்துவிற்கு தருவதன் மூலம் விருதுவிழா மங்கலகரமாகத் துவங்கியது. ‘மந்த பிந்து’ என்கிற ரைமிங்தான் காரணம் போல. ‘நாடகக்காரி’ என்கிற விருதை சுஜாவிற்கு ஜூலியை வழங்க வைத்ததின் மூலம் தானொரு சிறந்த நாரதர் என்பதை பிக்பாஸ் நிரூபித்து விட்டார். ‘என்னை விடவும் பெரிய நாடகக்காரியிடம் இதை வாங்குவதில் எனக்குப் பெருமைதான்’ என்று ஒரு வெட்டு வெட்டி விட்டுச் சென்றார் சுஜா. ‘ஓகே.. நன்றி’ என்று விருதுவிழாவின் சம்பிரதாய புன்னகையை பதிலாக தந்தார் ஜூலி. 

15_09357.jpg

ஹரீஷிற்கு ‘ஒப்புக்கு சப்பாணி’ விருது வழங்கப்பட்டது. ‘போலி’ என்கிற விருதிற்குப் பதிலாக நாடகக்காரி என்கிற வார்த்தையை தேர்ந்தெடுத்தோம்” என்று வழவழவென்று விளக்கமளித்தார் சக்தி. ‘ஒண்ணு தல..ன்னு சொல்லு.. இல்ல. தளபதி சொல்லுன்னு.. அது என்ன தல தளபதி.. கமல் மாதிரியே.. புரியாம பேசக்கூடாது” என்கிற ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ டயலாக்கை சக்தியை நோக்கி சொல்லத் தோன்றியது. 

வையாபுரிக்கு ‘அழுமூஞ்சி’ என்கிற விருது கிடைத்தது. ‘இனிமே அழமாட்டேன்’ என்று சிரித்துக் கொண்டே விருதைப் பெற்றார் வையாபுரி. சிநேகனுக்கு ‘தந்திரக்காரன்’ விருது. ‘நான் வாழ்க்கையில் எத்தனையோ அவமானங்களைப் பார்த்திருக்கேன். விமர்சனங்களால்தான் வளர்ந்தேன். ‘எத்தனை பேரு செத்தாலும் பரவாயில்ல. நான் முன்னேறணும்னு கல்மனசா நெனச்சதாலதான் 3500 பாட்டுக்கு மேல எழுத முடிஞ்சது. அப்புறம் யோசிச்சப்புறம்தான் அது முறையல்ல என்று தோன்றியது. இந்த விருதை அவமானமாகக் கருதவில்லை. விமர்சனமாக எடுத்துக் கொள்கிறேன்’ என்றெல்லாம் தந்திரமாக விளக்கமளித்தார் சிநேகன். 

‘இந்த மாதிரி தலைப்புகளுடன் விருது வழங்குவதற்காக நான் எவரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை’ என்கிற தலைக்கன உரையுடன் விருது வழங்க வந்தார் ‘Horrorத்தி’ 

கணேஷிற்கு ‘சுயநலவாதி’ விருது கிடைத்தது. ஏதோ உலக சாதனை படைத்தது போன்ற சிரிப்புடன் அதை வாங்கிச் சென்றார் கணேஷ். ஒரு மனுஷனுக்கு பொறுமை இருக்கலாம், பொறுமையே ஒரு மனுஷனா மாறினா, அது கணேஷ்தான். ‘ஆரவ்’விற்கு ‘முட்டாள்’ பட்டம் கிடைத்தது. சரிதான். யாரோ வந்து கைது செஞ்சிக்கிட்டு போனா.. ‘யார்ப்பா நீங்க.. வாரண்ட் இருக்கா?’ என்றலெ்லாம் கேட்காமல் ஏதோ சாக்லெட்டுக்கு ஆசைப்பட்டு பூச்சாண்டியின் பின்னால் சென்ற குழந்தை மாதிரி முகமூடிகளுடன் சென்ற ‘முட்டாள்தனத்திற்கு’ இந்த விருது பொருத்தம்தான். 

இந்த விருதுகளின் அடையாங்களைக் கவனித்தால் போட்டியாளர்களின் அகங்காரங்களைத் தூண்டுவதாகவும் அவர்களை அவமதிக்கும் வகையிலும் அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். இது பிக்பாஸின் திருவிளையாடல். இப்படி விருதுகளின் பெயர்களை அமைப்பதின் மூலம் நிச்சயம் மோதல் உருவாகும் என்பது அவரின் கணக்கு. 

**

‘நாடகக்காரி’ என்கிற விருது கிடைத்திருப்பதால் சுஜா அப்செட். ‘அப்படின்னா actress –ன்னுதானே அர்த்தம். அப்புறம் என்ன அதில் பெருமைதானே?” என்று அந்த விஷயத்தை பாசிட்டிவ்வாக மாற்ற முயன்ற ஆரத்தியின் சாமர்த்தியம் பாராட்டத்தக்கது. “நீங்க ஓவியா மாதிரி இருந்தீங்களா இல்லையா, உங்க இண்டர்வியூ வீடியோல்லாம் பார்த்தேன். நல்லா தைரியமாத்தான் பேசினீங்க.. அப்புறம் இங்க வந்தப்புறம் ஏன் குழந்தை மாதிரி நடிச்சீங்க?’ என்றெல்லாம் ஆரத்தி கேள்வி கேட்க.. “ஏங்க.. இண்டர்வியூல கெத்தாதான் இருக்க முடியும். ஆனா நான் வீட்ல எப்படி இருப்பேன்னு யாருக்கும் தெரியாதுல்ல… டைனிங் டேபிள்ல இதைப் பத்தி எல்லோர்கிட்டயும் பேசறேன்’ என்றார் சுஜா.

16_09188.jpg

சொல்லியபடியே உணவருந்தும் போது அனைவரிடமும் உருக்கமாக பேசினார். ‘ஓவியா மாதிரில்லாம் நான் நடிக்கலை. ஒரேயொரு சூரியன் மாதிரி ஒரேயொரு ஓவியாதான் இருக்க முடியும். நான் நானாத்தான் இருக்கேன். வீட்ல இருக்கற மாதிரிதான் இங்க இருக்கேன். கடுமையா வேலை செய்யறேன். ஏன்னா இதையும் என் வீடாத்தான் நெனக்கறேன். நான் நடிக்கிறேன்னு நெனக்கறவங்க என் கிட்ட வராதீங்க. விலகி நில்லுங்க. பொதுமக்களுக்கு இதைப் பத்தி பேச உரிமை இருக்கு. (பொண்ணு பொழச்சுக்கும்) ஆனா பக்கத்துல இருக்கறவங்க.. இப்படிப் பேசறதுதான் அதிகமாக வலிக்குது” என்றெல்லாம் பொங்கினார். 

அவர் குறிப்பாக சொன்னது ஜூலிக்கு என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ‘சரிம்மா.. இனிமே உன்னை அப்படி நினைக்க மாட்டோம். பேச மாட்டோம்’ என்று புதிய தலைவர் வையாபுரி வாக்களிக்களித்தார். “ஓவியா தன்னைப் பத்தி எப்பவுமே justify செய்ய மாட்டாங்க. நீங்க செய்யறீங்க.. ஓகே… நீங்க போலி இல்லை’ என்ற ஆரத்தியின் உரையின் மூலம் நிலைமை கட்டுக்குள் வந்தது. ‘என்னை ஏன் ‘ஒப்புக்கு சப்பாணின்னு’ சொன்னீங்க.. டீடெயில்ஸ் ப்ளீஸ்’ என்று அடுத்த ஏழரையைக் கூட்டினார் ஹரீஷ். 

இன்னொரு பக்கம் ‘தன்னை அரசியலுக்கு கமல் வரச் சொன்ன விவகாரத்தை’ மாற்றி கிண்டலடித்தது தொடர்பாக சிநேகனிடம் பஞ்சாயத்து வைத்தார் சக்தி. “நான் தந்திரம்லாம் பண்ணலை. அப்படில்லாம் செஞ்சிருந்தா மக்கள் எப்பவோ என்னைத் தூக்கிப் போட்டிருப்பாங்க.. நான் ஏதாவது பிழை செஞ்சிருப்பேன். ஆனா திட்டம் போட்டு எதையும் பண்ணலை. உங்களைப் பத்தியும் நல்லவிதமா சொல்லியிருக்கேன்’ என்று விளக்கம் அளித்தார் சிநேகன்.

17_09489.jpg

“சரி மனசுல எதையும் வெச்சுக்காதீங்க” என்ற சக்தி, பிறகு அதை ஏதோ சீக்ரெட் டாஸ்க் போல ‘அவரை கொஞ்ச கொஞ்சமாத்தான் டிரிக்கர் பண்ணப் போறேன். மொத்தமா செய்ய எனக்கே சங்கட்டடமாக இருக்கு” என்று கேமிராவை நோக்கி சொன்னார். 

“ஏண்ணே.. லேட்டா சாப்பிட வந்திருக்கீங்க?” என்று பாசமிகு அண்ணனை விசாரித்தார் ஜூலி. ஒருபக்கம் சிநேகனை நாமினேட் செய்து வந்து விட்டு இப்படி அன்பாக விசாரிக்கவும் ஒரு திறமை வேண்டும். ‘நான் தந்திரக்காரன் இல்லையா, அப்படித்தான்’ என்றார் சிநேகன் விரக்தியாக. 

தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஆழமான வலியை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது. அதுதானே பிக்பாஸின் திட்டமும். 

18_09051.jpg

“உன்னை ஒரு வார்த்தைல திட்டலாமா?” என்று சுஜாவிடம் பீடிகை போட்ட சிநேகன், ‘நீ பைத்தியக்காரி மாதிரி விமர்சனங்களுக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சா அதற்கு முடிவே கிடையாது. உன்னைப் பத்தி உனக்குத்தான் அதிகம் தெரியும். விமர்சனங்களுக்கு பயந்தா உலகம் உன்னைத் துரத்திட்டே இருக்கும். அதையெல்லாம் கண்டுக்காம நம்ம வழியிலே போயிட்டே இருக்கணும்’ என்றெல்லாம் உபதேசம் செய்தார். சரியான உபதேசம்தான். 

19_09234.jpg

 

‘சில போட்டியாளர்களின் மறுவருகை வீட்டிற்குள் கலகலப்பை ஏற்படுத்துமா, கலகத்தையா’ என்று அசரிரீக்குரல் கவலைப்பட்டது. விடை என்னவென்று தெரிந்து கொண்டே பாவனையாக கேள்வி கேட்பது நியாயமா பாஸூ?

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/101332-bigg-boss-tamil-updates-day-71-mrbigg-boss-is-this-a-justified-act-boss.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.