Jump to content

சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்

Recommended Posts

சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்

சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்
 
சந்திரனில் பாறைகளுக்கு அடியில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் எதிர்காலத்தில் சந்திரனில் தங்கியிருந்து ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரனில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன, அப்பலோ விண்கலம் மூலம் அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மண் மாதிரிகள், பாறைகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முந்தைய ஆய்வுகளில் சந்திரனில் மிகவும் உள்ளடங்கிய பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறப்பட்டது.

2008 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் சந்திரனில் உள்ள எரிமலையில் இருந்து வெளியான கண்ணாடி துகள்களில் தண்ணீர் பிரமங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து தண்ணீர் உள்ளதா? என்பதை முழுமையாக கண்டறிய தொடர்ந்து ஆய்வுகள் நடைப் பெற்றன.

அதில் சந்திரனில் பாறைகளுக்கு அடியில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/07/சந்திரனில்-மிகப்பெரிய-ஏர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமில தண்ணியை காசாக்கி முடிஞ்சுது. எனி சந்திரனில இருக்கும் ஏரிகளை கணக்குப் பார்க்கத் தொடங்கியாச்சு. 

அதுசரி.. 1960 ஆம் ஆண்டுகளிலேயே சில பேர் சந்திரனுக்குப் போய் வந்தவை.. 50 வருசமா உதை தெரியாமலோ இருந்தவை...???!

நாசா.. விண்வெளி விசயத்தில் நல்லா அவிக்குது.... போல...???! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2017 at 11:06 AM, nedukkalapoovan said:

பூமில தண்ணியை காசாக்கி முடிஞ்சுது. எனி சந்திரனில இருக்கும் ஏரிகளை கணக்குப் பார்க்கத் தொடங்கியாச்சு. 

அதுசரி.. 1960 ஆம் ஆண்டுகளிலேயே சில பேர் சந்திரனுக்குப் போய் வந்தவை.. 50 வருசமா உதை தெரியாமலோ இருந்தவை...???!

நாசா.. விண்வெளி விசயத்தில் நல்லா அவிக்குது.... போல...???! :rolleyes:

4 ஏக்கர் நிலம் தந்தால் உழவி பயிராவது செய்யலாம் அங்க தருவாங்களா நெடுக்கர் :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்  நம்ம பக்கத்து வீட்டுக்காறனின்  பெயர் என்னப்பா....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனி ஒருவன் said:

4 ஏக்கர் நிலம் தந்தால் உழவி பயிராவது செய்யலாம் அங்க தருவாங்களா நெடுக்கர் :104_point_left:

4 ஏக்கர் என்ன......முழுச்சந்திரனே உங்களுக்குத்தான்....போய் அசத்துங்க போடியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

4 ஏக்கர் என்ன......முழுச்சந்திரனே உங்களுக்குத்தான்....போய் அசத்துங்க போடியார்.

போகேக்க விண்கலம் இடையில நிண்டால் என்ன செய்யுற சாமியார் இப்ப உள்ள வாகனத்தை நம்ப ஏலாமல் கிடக்கு  சந்திரனுக்கு போனால் அங்கே ஊர்வசி ரம்பாக்கள் இருப்பாங்களோ இருந்தால் றிட்டன் வாரல்ல அங்கே செட்டிலாவுற ஐடியா இருக்கு என்ன மாதிரியாம் சொல்லுங்கோவன் :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனி ஒருவன் said:

போகேக்க விண்கலம் இடையில நிண்டால் என்ன செய்யுற சாமியார் இப்ப உள்ள வாகனத்தை நம்ப ஏலாமல் கிடக்கு  சந்திரனுக்கு போனால் அங்கே ஊர்வசி ரம்பாக்கள் இருப்பாங்களோ இருந்தால் றிட்டன் வாரல்ல அங்கே செட்டிலாவுற ஐடியா இருக்கு என்ன மாதிரியாம் சொல்லுங்கோவன் :10_wink:

ஊர்வசி.. கிழவி ஆகிட்டுது. ரம்பா  ஆன்ரி ஆகிட்டுது. இரண்டும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆகவே.. வேற வழியைப் பார்க்கிறது நல்லம். கதிர்காமத்துக்குப் போற வழில ஒரு ஏக்கரைப் பார்த்திருக்கலாம்.. கூடவே.. ஒரு குட்டியையும் கூட்டி வைச்சு குடித்தனம் நடத்தி இருக்கலாம். கதிர்காமக் கந்தனும்.. அப்படித்தானே.. போன இடத்தில் வள்ளியை மடக்கினவர். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

ஊர்வசி.. கிழவி ஆகிட்டுது. ரம்பா  ஆன்ரி ஆகிட்டுது. இரண்டும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆகவே.. வேற வழியைப் பார்க்கிறது நல்லம். கதிர்காமத்துக்குப் போற வழில ஒரு ஏக்கரைப் பார்த்திருக்கலாம்.. கூடவே.. ஒரு குட்டியையும் கூட்டி வைச்சு குடித்தனம் நடத்தி இருக்கலாம். கதிர்காமக் கந்தனும்.. அப்படித்தானே.. போன இடத்தில் வள்ளியை மடக்கினவர். tw_blush::rolleyes:

சும்மா ஊர்வசி ரம்பா  கிளவி யாவதும் ஆன்டியாவது வழமைதானே  புதுசா இருக்கிற கீர்த்தி சுரேஷ் மாதிரி இருந்தால் இந்தப்பக்கமும்  தலைவச்சு படுக்க மாட்டன் அங்கேதான்  புள்டைம்  நிற்பன் 

கதிர்காம நடுக்காடு தாங்காது அப்பு  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.