Jump to content

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்


Recommended Posts

  • Replies 58
  • Created
  • Last Reply

நல்லூர் மகோற்சவத்தை முன்னிட்டு நியூஸ்பெஸ்ட் கொண்டுவரும், நல்லையான் சந்நிதி விசேட தொகுப்பு - 01

 

Link to comment
Share on other sites

‘நல்லைக் குமரன்’ வெள்ளிவிழா மலர் வெளியீட்டு விழா

 
 
‘நல்லைக் குமரன்’ வெள்ளிவிழா மலர் வெளியீட்டு விழா
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ்.மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவினால் ‘நல்லைக் குமரன்’ வெள்ளிவிழா மலர் வெளியீட்டு விழா நல்லூரில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வு நல்லூர் நாவலர் கலாச்சார மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

மாநகர சபையின் ஆணையாளரும், சைவ சமய விவகாரக் குழுவின் தலைவருமான பொ. வாகீசன் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

மலரை மலரின் பதிப்பாசிரியரும், பத்திரிகை ஆசிரியருமான ந.விஜயசுந்தரம் வெளியிட்டு வைக்க தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் நிர்வாகச் செயலாளர் மலரின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

http://newuthayan.com/story/19671.html

Link to comment
Share on other sites

நல்லூர்த் திருவிழாவில் நாடகத் திருவிழா

 
நல்லூர்த் திருவிழாவில் நாடகத் திருவிழா
 

பக்­தர்­க­ளின் அரோ­கரா முழக்கம், கற்­பூ­ர­தீ­பத்­தின் கரும்­பு­கை­, தேங்­காய்ச்­சி­த­றல்­கள், வியா­பா­ரி­க­ளின் கூவி­ய­ழைக்­கும் குரல் கள், வண்­ண­வண்ண உடை­க­ளில் உலா­வ­ரு­கின்ற குழந்­தை­கள் என நல்­லூ­ரின் விழாக்­கோ­லம் ஒரு­பக்­கம் நிகழ்ந்­து­கொண்­டி­ ருக்­க வாத்­தி­யக்­க­ரு­வி­க­ளின் ஓசை, ­ வேட­உ­டை­கள், வண்­ண­வி­ளக்­கு­கள், ரசி­கர்­கள், ஆற்­று­கை­யா­ளர்­கள் என ஒரே மேடை­யில் குழந்­தை­கள் பெரி­ய­வர்­கள் என மற்­றொரு பக்­கம் குதூ­க­லித் துக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

ஐந்து வரு­டங்­க­ளாக தொடர்ந்து இயங்­கிக்­கொண்­டி­ருக்­கும் நல்­லூர் நாட­கத் திரு­விழா இந்த வரு­ட­மும் திரு­வி­ழாக்­கோ­லம் கொண்டு களை­கட்டி வரு­கின்­றது. நல்­லூர்த் திரு­வி­ழாவை பக்­தர்­கள் எப்­ப­டிக்­கொண்­டா­டு­கி­றார்­களோ அப்­ப­டித்­தான் நல்­லூர் நாட­கத் தி­ரு­வி­ழா­வை­யும் நாட­கத்­தின்­பால் ஈர்ப்புக்­கொண்ட ரசி­கர்­க­ளும், பெற்­றோர்­க­ளும், குழந்­தைக­ளும் ஒரு திரு­வி­ழா­ வைப் போல கொண்­டாடி வரு­ கின்­ற­னர். வரு­டா­வ­ரு­டம் நல்­லூர் திரு­விழா நடை­பெ­று­கின்ற அதே காலத்­தில் நல்­லூர் குறுக்­கு ­வீ­தி­யில் அமைந்­தி­ருக்­கின்ற செயல் திறன் அரங்க இயக்­க­தத்­தின் திறந்­த­வெளி பஞ்­ச­பூத அரங்­கில் தொடர்ந்து பத்து நாள்கள் பல்வேறு ­வ­கை­யான நாட­கங்­கள் மேடை­யேற்­றப்­பட்டு வரு­வது வழமை. அந்த அடிப்­ப­டை­யில் இந்­த­வ­ரு­ட­மும் கடந்த 09.08. 2017 அன்று தொடக்­கம் 18.08.2017 வரை­யான பத்து நாள்க­ளும் பல்­வே­று­வ­கை­யான நாட­கங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

சிறு­வர் நாட­கங்­கள் சமூ­க­நா­ட­கங்­கள், பாரம்­ப­ரி­யக்­கூத்து நாட­கங்­கள், வேட­முக நாட­கங்­கள், நகைச்­சுவை நாட­கங்­கள் என மேடை­யேற்­றப்­பட்டு வரு­கின்­றன. இரவு 7.15 மணி­தொ­டக்­கம் 09.30 வரை இடம்­பெற்று வரும் இந்த நா­ட­கத்தி ருவி­ழா­வில் ஆல­யப்­பக்­தர் கூட்­டம்­போல் நாட­கப்­பக்­தர் கூட்­டம் அலை­மோ­து­கின்­ற­தைக் காண­லாம்.

நாட­கங்­க­ளும் அவை பேசும்
கதை­க­ளும் : பஞ்­ச­வர்ண நரி­யார்

குழந்தை ம.சண்­மு­க­லிங்கத்தின் எழுத்­து­ரு­வில் உரு­வான பஞ்­ச­வர்ண நரி­யார் சிறு­வர் நாட­கம் கடந்த 30 வரு­டங்­க­ளை­யும் தாண்டி அதே பொலி­வு­டன் இன்­றும் சிறு­வர்­க­ளைக் கொள்­ளை­கொண்டு மகிழ்­வித்­துக்­கொண்­டி­ருக்­கும் ஓர் நாட­க­மாக பஞ்­ச­பூத அரங்­கில் மேடை­யேறி வரு­வது குறிப்­பி­டத்­தக்க ஒன்று. காட்­டி­லி­ருந்து வழி­மாறி நாட்­டுக்­குத் தப்­பி­வ­ரும் நரி ஒன்று வண்­ணம் மாறி மீண்­டும் காட்­டுக்­குச் சென்று தந்­தி­ரத்­தால் மற்ற மிரு­கங்­களை ஏமாற்றி அவற்­றுக்­குத் தலை­வ­னாகி மீண்­டும் தன் சாயம் வெளுத்­த­வு­டன் என்­ன­வா­கி­றார் என்­ப­தைக்­கூ­றும் தந்­தி­ரக் கதையை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட ‘பஞ்­ச­வர்ண நரி­யார்’ நாட­கம் பெருத்த வர­வேற்­பு­டன் மேடை­யேறி வரு­கி­றது.

 

20729460_10155600697826730_2643087904446

ஏகாந்­தம்

போரின் சுழ­லுக்­குள் அகப்­பட்டு ஒவ்­வொரு விதத்­தி­லும் பாதிக்­கப்­பட்ட எமது வாழ்க்கை முறை­யில் கண்­டு­கொள்­ளப்­ப­டாத வலி­யின் ஒரு­ ­பக்­கத்­தைக் கூறு­கின்­றது ஏகாந்­தம் நாட­கம். போர்ச் சூழ்­நி­லை­யில் பல்­வேறு கார­ணங்­க­ளால் தமது பெற்­றோரை விட்டு தம்மை பாது­காத்­துக்­கொள்ள புலம் பெ­யர்ந்து சென்­ற­வர்­கள் தாம் குடி­யே­றிய நாடு­க­ளின் வாழ்க்கை முறைக்­குள் அகப்­பட்டு விடு­ப­ட­மு­டி­யாத ஓர்இ றுக்­கத்­துக்­குள் தள்­ளப்­பட இன்று தனி­மையில் விடப்­பட்ட அவர்­க­ளின் பெற்­றோர்­க­ளின் மன உணர்­வு­களை பேசு­கின்­றது ஏகாந்­தம்.

அரங்­கி­ய­லில் ஓர் முயற்­சி­யாக வேட­மு­கத்­தை­யும் நிழல்­பா­வை­யை­யும் இணைத்து கதை­சொல்­லப்­ப­டு­வது இந்த நாட­கத்­தின் மேலு­மொரு சிறப்­பெ­ன­லாம்.

கூடி விளை­யாடு பாப்பா

இது­வும் குழந்­தை­க­ளுக்­காக பெரி­ய­வர்­க­ளால் ஆற்­றுகை செய்­யப்­ப­டு­கின்ற ஓர் சிறு­வர் நாட­கம். மழைக்­காக வீட்­டின்
கூ­ரை­யொன்­றில் ஒதுங்­கி­யி­ருக்­கும் சேவ­லொன்றை தன்­னு­டைய இரை­யாக்­கிக் கொள்ள துடிக்­கும் நரி ஒன்­றிற்கு ஏற்­ப­டு­கின்ற விப­ரீ­தத்தை மிக அழ­காக குழந்­தை­கள் மொழி­யில் பேசு­கின்ற இந்த நா­ட­க­மும் சிறு­வர் மத்­தி­யில் மிகுந்த வர­வேற்­பைப்­பெற்று மேடை­யேறி வரு­கின்­றது.

சிங்­கப்­பூர் டொக்­டர்

பேரா­சி­ரி­யர் நந்­தி­யின் எழுத்­து­ரு­வில் உரு­வான ‘சிங்­கப்­பூர் டொக்­டர்’ நகைச்­சுவை நாட­கம் நீண்ட வரு­டங்­க­ளுக்­குப் பின்­னர் மீண்­டும் மேடை­யே­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. சிங்­கப்­பூர் மருத்துவமனை யில் தாதி­ய­ராக வேலை­செய்த இரு­வர் தாய்­நாட்­டுக்­குத் திரும்பி வந்து தம்மை மருத்துவர்களாகச் சித்­த­ரித்து மற்­ற­வர்­களை நம்­ப­வைத்து ஏமாற்றி கடை­யி­சி­யில் என்­ன­வா­கி­றார்­கள் என்­பதை நகைச்­சு­வை­யாக பேசும் இந்த நா­ட­கம் பார்­வை­யா­ளர் மத்­தி­யில் மிகுந்த வர­வேற்­பைப்­பெற்று மேடை­யேறி வரு­கின்­றது.

பொம்­ம­லாட்­டம்

எம்­மி­ட­மி­ருந்து தொலைந்து போன பொம்­ம­லாட்­டக் கலை­யை­யும் நிழல்­பா­வைக் கூத்­தை­யும் ஒன்­றி­ணைத்து ஓர் புதிய வகை ஆற்­றுகை வடி­வில் உரு­வாகி மேடை­யேற்­றப்­பட்­டு­வ­ரும் பொம்­ம­லாட்­டம் நாட­கம் சிறு­வர்­க­ளைக் கொள்­ளை­கொண்ட ஓர் ஆற்­றுகை வடி­வ­மாக காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. ‘பாட்டி’ எனும் பொம்­ம­லாட்ட நாட­கத்­தில் வடை­சுட்டு பிழைப்பை நடத்­தும் பாட்டி தன்­னு­டைய பேரக் கு­ழந்­தை­க­ளைக் காண ஊருக்­குச் செல்­லும் போது இடை­யில் காட்டு வழி­யில் எதிர்ப்­ப­டும் மிரு­கங்­க­ளிட­மி­ருந்து எப்­படி தந்­தி­ர­மாக தப்­பிக்­கின்­றாììர் என்­பதை மிகச் சுவா­ரஸ்­ய­மாக பேசும் இந்த நாட­கம் சிறு­வர்­க­ளுக்கு ஓர் புதிய அனுப­வத்தைக் கொடுத்­தி­ருந்­தமை சிறப்பு.

ஒரு மோட்­டார் சைக்­கி­ளும் ஒன்­பது பேரும் சிறு­வர்­க­ளுக்­காக சிறு­வர்­கள் ஆற்­று­கை­யில் உரு­வான ‘பசு­வும் புலி­யும்’ நாட­கம் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் கவர்ந்­தி­ருந்­தமை குறிப்­பிட்­டுச்­சொல்­ல­வேண்­டிய ஒன்று.

தே.தேவா­னந்தின் எழுத்­து­ரு­வி­லும் நெறி­யாள்­கை­யி­லும் உரு­வான இந்­நா­ட­கம் சிறு­வர்­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கு­ இடை­யி­லான நெருக்­கத்­தை­யும் உணர்­வு­க­ளை­யும் மிக அழ­கா­கப் பேசி­யி­ருந்­தது. இன்­றைய அவ­சர உலக ஓட்­டத்­தில் எந்­திர கதி­யில் அனை­வ­ரும் ஓடிக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

பெற்­றோர் குழந்­தை­க­ளைப் படிப்­பிப்­ப­தில் மாத்­தி­ரமே கவ­ன­மா­யி­ருப்­ப­தும் அவர்­க­ளின் சின்ன உல­ கைப் புரிந்து கொள்­ளா­மை­யை­ யும் அவர்­கள் தமக்­கான உலகை தொலைக்­காட்சி தொடர்­க­ளில் தோன்­றும் சாகச கதா­பாத்­தி­ரங்­க­ளோடு உரு­வாக்­கிக் கொள்­வ­தை­யும் அதி­லி­ருக்­கும் ஆபத்­துக்­க­ளை­யும் மிக பொறுப்­பு­ணர்­வோடு பெற்­றோ­ரி­டம் கொண்டு சேர்த்­த­தில் இந்த நாட­கம் கவ­னம் பெற்­றமை சிறப்பு.

 

2-2.jpg

அரிச்­சந்­திர மயான காண்­டம்

இவை­க­ளுக்கு மத்­தி­யில் பாரம்­ப­ரி­யக் கலை­யான கூத்­து­நா­ட­க­ மான அரிச்­சந்­திர மயான காண்­டம் இசை நாட­கத்­தினை நாட்­டார் வழக்­கி­யற் கழ­கம் வழங்­கி­யி­ருந்­தது. இன்று அரு­கிப்­போ­யும் அடுத்த தலை­மு­றை­யி­னரிடம் சென்று சேரா­ம­லும் போய்க்­கொண்­­டி­ருக்­கும் கூத்­திசை நாட­ கக் கலையை இன்­று­வ­ரை­யி­லும் தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­கின்ற நாட்­டார் வழக்­கி­யற் கழ­கத்­தின் மயா­ன காண்­டம் கூத்­திசை நாட­கம் சிறு­வர் முதல் பெரி­ய­வர் வரை­யில் அனை­வ­ரை­யும் கவர்­த­ிருந்­தமை கவனிக்­கப்­ப­ட­ வேண்­டிய ஒன்றாகக் காணப்­பட்­டது.

 

20708403_10155604642166730_2397214652369

இது கூத்­தல்ல நிஜம்

போரின் பின்­னர் சிதைந்து போன பல குடும்­பங்­க­ளை­யும். அவர்­களை நோக்கி படை­யெ­டுத்து வரும் நிறு­வ­னங்­க­ளை­யும் பெண்­க­ளுக்­கெ­தி­ராக முன்­னெ­டுத்து வரும் வன் மு­றை­க­ளை­யும் கூத்­து­டன் இணைத்து சமூக நாட­க­மாக கொடுத்­தி­ருந்­தமை சிறப்­பான ஒன்று.

இவ்­வாறு பல்­வே­று­பட்ட பல நாட­கங்­களை திறந்­த­வெளி பஞ்­ச­பூத அரங்­கி­னில் தொடர்ந்து நிகழ்த்­தி­வ­ரும் செயல் திறன் அரங்க இயக்­கத்­தின் ஐந்­தா­வது நல்­லூர் நாட­கத் திரு­விழா இது என்­பது குறிப் பிடத்­தக்­கது. நிகழ்­வின் மூன்­றாம் நாள் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­ கொண்ட பேரா­சி­ரி­யர் மௌன­குரு தனது உரை­யில் ‘‘வித்­தி­யா­னந்­தன் கா.சிவத்­தம்­பி­ சண்­மு­க­லிங்­கம் நான் என பல­ரும் பெரும் பிர­யத் த­னங்­க­ளோடு அரங்­கி­ய­லில் மாற்­றங்­களைக் கொண்­டு­வரப் பாடு­பட்­டோம்.

அவை இப்­போது ஆறு­த­ளிக்­கக்­கூ­டிய ஓர் நிலைக்கு வந்­து­விட்­டதை காண்­கை­யில் பேரா­னந்­தம் கொள்­கி­றேன். உண்­மை­யில் நாங்­கள் அரங்­கின் மூலம் பல வியத்­தகு மாற்­றங்­களை நிகழ்த்­த­ லாம் ஆனால் நாம் முயல்­வ­ தில்லை. குழந்­தை­களை மகிழ்­வித்­தல் என்­பது ஒரு கடி­ன­மான கலை அதனை மிக எளி­தாக செய்­கின்­றது இந்த செயல்­தி­றன் அரங்க இயக்­கம். அடுத்த தடவை நானும் இந்த சிறு­வர்­க­ளுக்­காக எதை­யா­வது செய்ய வேண்­டும் அதனை செய்ய இந்த அரங்கு என்­னைத் தூண்­டு­ கின்­றது. உண்­மை ­யி­லேயே இது செயல் திற­னான ஓர் அரங்­கு­தான்’’ என பாராட்­டி­னார்.

வெறு ம் கோவில் திருவி­ழா­வோடு மாத்­தி­ரம் இந்தக் காலத்தை நிறுத்­திக்­கொள்­ளாது கிடைத்த மணித்­து­ளி­களை பொக்­கி­ச­மான மணித்து­ளி­க­ளாக மாற்­றி­வ­ரும் இந்த நல்­லூர் நாட­கத் திரு­விழா அனை­வ­
ரும் கொண் டாடப்ப­ட­வேண்­டிய ஒன்றே.

http://newuthayan.com/story/19775.html

Link to comment
Share on other sites

 

நியூஸ்பெஸ்ட் வழங்கும் நல்லையான் சந்நிதி விசேட தொகுப்பு - 03

 

நல்லூர் கந்தசுவாமி கோவில்
20ம் திருவிழா(மாலை) கைலாசவாகனம் – 16.08.2017

Link to comment
Share on other sites

மாங்கனி உற்சவம் காணும் நல்லைக் கந்தன்

 
மாங்கனி உற்சவம் காணும் நல்லைக் கந்தன்
 

பழனி என்­பது முரு­க­னுக்­கு­ரிய ஆல­யங்­க­ளுள் முதன்­மை­யும் சிறப்­பும் வாய்ந்­தது. “பழநி” என்­பது பொதினி என்­றும் சங்க காலச் சொல்­லின் பால் இருந்து தோன்­றி­யது என­வும் ஆராய்­சி­யா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.புராண நூல்­க­ளில் இதற்கு வேறு வகை­யான விளக்­கங்­கள் கூறப்­பெற்­றுள்­ளது.

மூலா­தா­ரம், சுவா­திட்­டா­னம், மணி­பூ­ர­கம், அநா­க­தம். விசுத்தி. ஆஞ்ஞை என்­னும் ஆறு ஆதா­ரங்­க­ளைக் குறிப்­ப­தா­கக் கூறப்­ப­டும் முரு­க­னின் ஆறு­படை வீடு­க­ளுள் பழனி மூன்­றா­வ­தா­கக் திகழ்­கின்­றது. இத­னைத் திரு­வா­வி­னன்­குடி என்­றும் குறிப்­பி­டு­வர்.

நூல் விளக்­கம்

ஆவி­யர் குடி­யில் தோன்­றிய வையா­விக் கோப்­பெ­ரும்­பே­கன் என்­னும் சங்­ங­கால வள்­ளல் வாழ்ந்த இட­மா­த­லால் இதற்கு “ஆவி­நன்­குடி” எனப்­பெ­யர் அமைந்­தது. திரு­ம­கள், காம­தேனு, சூரி­யன், நில­ம­கன், அக்­கினி என்­போர் வழி­பட்டு அருள் பெற்ற தல­மா­த­லால் இதற்­குத் திரு­வா­வி­னன்­குடி எனப் பெயர் வழங்­க­லா­யிற்று என்­பது இதற்­குப் புராண நூல்­கள் தரும் விளக்­கம் ஆகும்.

கந்­த­சு­வாமி எனும் திரு­வு­ரு­வம்

திரு ஆவி­னன்­குடி என்­னும் பண்­டைப் பெய­ரு­டைய பழனி என்­னும் பழம் பெரும் பதி­யில் எழுந்­த­ருளி விளங்­கும் பர­ம­னா­கிய ஆண்­ட­வ­னுக்கே பழனி ஆண்­ட­வர் என்று பெயர். அன்­பர்­கள் நினைத்து வழி­ப­டும் திரு­வு­ரு­ வங்­களை மேற்­கொண்டு அருள்­பு­ரி­யும் இயல்­பி­ன­னா­கிய முரு­கப் பெரு­மா­னுக்­குச் சிற்­ப­நூல்­க­ளில் பல­வ­கை­யான அழ­கிய திரு­வு­ரு­வங்­கள் கூறப்­பெற்­றுள்­ளன.

இந்­தத் திரு­வு­ரு­வங்­க­ளுள் கந்­த­சு­வாமி என்று ஒரு திரு­வு­ரு­வம் உண்டு. அதன்­வழி ஒரு முக­மும் இரண்டு கைக­ளும் உடை­ய­வ­ராய் வலக்­கை­யில் தண்­டா­யு­தம் ஏந்தி, இடக்­கையை இடுப்­பில் வைத்­துக் கொண்டு கோவ­ணம் உடுத்­திய நிலை­யில் செந்­தா­மரை மலர் போன்ற நிறத்­து­டன் நின்ற திருக்­கோ­லத்­தில் காட்சி கொடுத்து அடி­ய­வர்­க­ளுக்கு அருள்­வார்.

கந்­த­சு­வாமி எனப்­ப­டும் திரு­வு­ரு­வம் என்று நூல்­கள் குறிப்­பி­டும் இவரே பழ­னி­யாண்­ட­வர் என வழங்­கப்­ப­டு­ப­வர். கையில் ஞான­மா­கிய தண்­டா­யு­தம் ஏந்­தி­யி­ருத்­தல் பற்­றி­ய­தாய் இவ­ருக்கு ஞான தண்­டா­யுதபாணி என­ ஒரு சிறப்­புப் பெய­ரும் உண்டு. தண்­டா­யு­த­பா­ணி­யா­கிய கந்­த­சு­வா­மியை அடி­ய­வர்­கள் பழ­னி­யாண்­ட­வர் என்ற சிறப்­புப் பெயர்­கொண்டே போற்­றித் துதித்து வரு­கின்­ற­னர்.

பழ­னி­யாண்­ட­வர் திரு­வு­ரு­வம்

தன்­ன­லம் நீத்து மன்­பதை நலம் குறித்­துப் பற்­றற்ற தன்­மை­யு­டன் மனி­தன் வையத்­துள் வாழ்­வாங்கு வாழ்­தல் வேண்­டும் என்­னும் உய­ரிய உண்­மை­யையே பழ­னி­யாண்­ட­வர் திரு­வு­ரு­வம் நமக்­குப் பண்­புற விளக்கிக்­கொண்­ டுள்­ளது.

முரு­கப் பெரு­மான் குழந்­தை­க­ளுக்­குக் குழந்தை வேல­னா­க­வும், இளை­ஞர்­க­ளுக்­குப் பால சுப்­பி­ர­ம­ணி­ய­னாக­வும், கலை­ஞர்­க­ளுக்­குச் சண்­மு­க­நா­த­னா­க­வும், வீரர்­க­ளுக்­குத் தேவ­சே­னா­தி­ப­தி­யா­க­வும், மந்­திர உப­தே­சம் பெற விரும்பி மாண­வ­நி­லை­யில் வழி­ப­டும் அன்­பர்­க­ளுக்­குச் சுவா­மி­நா­த­னாக­வும், பற்­றற்ற தூய ஞானத்­து­ற­வற நிலை­யி­ன­ருக்­குப் பழ­னி­யாண்­ட­வ­ரா­க­வும்,பிற­வா­றும் விளங்கி அவ­ர­வர்க்கு உரிய நிலை­யில் பல்­வேறு வகை­யில் அரு­ளும் வண்­ணம் அறிந்து புரிந்து காத்து வரு­கின்­றான்.

இத்­த­கைய துறவு நெறிச் சிறப்பு,தவ வாழ்க்­கை­யின் மேன்மை ஆகி­ய­வற்­றைக் குன்­றின் மேலிட்ட விளக்­கென உல­குக்­கெல்­லாம் உணர்த்தி நிற்­கும் சிறப்­பு­டை­யதே பழனி ஆண்­ட­வர் திரு­வு­ரு­வம் என­லாம்.

எளி­மை­யோடு தித்­திக்­கும் அருள்

DSC01721.jpg

பழனி ஆண்­ட­வர் காட்­சிக்கு எளி­ய­வர். கரு­ணைக்கு இனி­ய­வர். குணம் என்­னும் குன்­றேறி நிற்­ப­வர். குழந்தை உள்­ளம் படைத்­த­வர். எளி­தா­க­வும், விரை­வா­க­வும் அருளை இனிது வழங்­கும் இயல்­பி­னர். அத­னா­லேயே அந்­தப் பெரு­மானை அடி­ய­வர் உல­கம் போற்­றித் துதித்து வழி­பட்டு மகிழ்ந்து வரு­கி­றது.

கலி­யு­கத்­துக்கு கண்­கண்ட தெய்­வம் என விளங்கி வரும் பழனி ஆண்­ட­வ­ரின் பெருமை எம்­மி­யல்­பால் பகர்­தற்கு எளி­யதோ..? ஞான தண்­டா­யுத பாணி­யாக விளங்­கும் அருள்­மிகு பழ­னி­யாண்­ட­வர் பெரு­மானை நாம் அன்­பு­டன் பணிந்து,வழி­பட்டு நலன்­கள் எல்­லாம் எய்தி உய்­வோ­மாக.

காப்பு

அட­லரு ணைத்­தி­ருக் கோப வட­வரு கிற்­சென்று கண்­டு­கொண் டேன்­வரு வார்­த­லை­யிற் தடப டெனப்­படு குட்­டு­டன் சர்க்­கரை மொக்­கி­ய­கைக் கட­தட கும்­பக் களிற்­றுக் கிளைய களிற்­றி­னையே.

நூல்

பேற்­றைத் தவஞ்­சற்று மில்­லாத என்­னைப்­ர­பஞ்­ச­மென்­னுஞ்
சேற்­றைக் கழிய வழி­விட்­டவா. செஞ் சடா­ட­வி­மேல் ஆற்­
றைப் பணியை யித­ழி­யைத் தும்­பையை அம்ப
கீற்­றைப்ப

அழித்­துப் பிறக்­க­வொட்டா அயில் வேலன் கவி­யை­யன்­பால்
எழுத்­துப் பிழை­ய­றக் கற்­கின்றி லீரெரி மூண்­ட­தென்ன
விழித்­துப் ப கழுத்­திற் சுருக்­கிட் டிழுக்­கு­மன் றோகவி கற்­கின்­றதே…..!

சூலம் பிடித்­தெம பாசஞ் சுழற்­றித் தொடர்ந்­து­வ­ருங்
காலன் தனக்­கொரு காலு­மஞ் சேன்­க­டல் மீதெ­ழுந்த
ஆலங் குடித்த பெரு­மான் குமா­ரன் அறு­மு­க­வன்
வேலுந் திருக்­கையு முண்டே நமக்­கொரு மெய்த்­து­ணையே…!

http://newuthayan.com/story/20452.html

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தன் ஆலய சப்பைரதத் திருவிழா அழகிய காட்சி

 
நல்லூர் கந்தன் ஆலய சப்பைரதத் திருவிழா அழகிய காட்சி
 
நல்லூர் கந்தன் ஆலய சப்பைரதத் திருவிழா அழகிய காட்சி

20914649_513456378994701_699818489526888

20842289_10155001937883380_8636874712577

20915175_10155001938058380_5967988027360

http://newuthayan.com/

Link to comment
Share on other sites

நல்லூரில் இலட்சக்கணக்கில் திரண்டனர் பக்தர்கள்

 
நல்லூரில் இலட்சக்கணக்கில் திரண்டனர் பக்தர்கள்
 

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

24ஆம் நாளான இன்றைய தினம் தேர்த்திருவிழாவைக் காண நாடெங்கிலுமிருந்து பெருந்திரளான பக்தர்கள் அலையென திரண்டு வந்துள்ளனர்.

20882288_1546184445438165_8586096099951420900956_1420407617994942_6934272286372520901295_1420407754661595_6121854996302320915522_1546184498771493_88274530759768

http://newuthayan.com/story/20920.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.