Jump to content

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது!


Recommended Posts

விடுதலைப் புலிகள் அமைப்பு கறுப்புப் பட்டியலிருந்து நீக்கம்!!

 
விடுதலைப் புலிகள் அமைப்பு கறுப்புப் பட்டியலிருந்து நீக்கம்!! கோப்புப் படம்
 

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

2014ஆம் ஆண்டு ஐரோப்பிய பொது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்து ஐரோப்பிய நீதிமன்ற ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதேவேளை, ஹமாஸ் இயக்கத்தின் பெயர் அந்த பட்டியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://uthayandaily.com/story/14056.html

Link to comment
Share on other sites

கறுப்பு பட்டியலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது
 

image_fd65b07aaf.jpgஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இந்த அமைப்பு 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர் எந்தவொரு பாரதூரமான தாக்குதல்களை நடாத்தியதாக பதிவுகள் எதுவும் இல்லாதமையினால் அப்பட்டியலிருந்து நீக்கியதாக, அந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால், 2003ஆம் ஆண்டு இப் பட்டியலில் இணைக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் பெயர் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கறுப்பு-பட்டியலிருந்து-தமிழீழ-விடுதலைப்-புலிகள்-அமைப்பு-நீக்கப்பட்டுள்ளது/175-201343

Link to comment
Share on other sites

தாமதமான நீதி என்றாலும் ஆறுதலான செய்தி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது.

பிழையான ஆக்கள்.... திரும்பவும் உண்டியல் குலுக்காமல் இருந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் குழுவினர் (தலைமைச் செயலகம், அனைத்துலகச் செயலகம்) விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான பிரதிநிதிகளாக  மேற்கு நாடுகளில் உள்ளனர்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

எந்தக் குழுவினர் (தலைமைச் செயலகம், அனைத்துலகச் செயலகம்) விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான பிரதிநிதிகளாக  மேற்கு நாடுகளில் உள்ளனர்? 

இனித்தானே எல்லாம். ??‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து எந்தப் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து எந்தப் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பில் நெதர்லாந்து வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது ’2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தவில்லை, வன்முறையற்ற வழிகளில்தான் போராட விரும்புகின்றனர்’ என்று வாதிடப்பட்டது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. 2009க்கு பிறகு எந்த வன்முறை செயலிலும் ஈடுபடாததால் தடை நீக்கப்படுவதாகவும், இந்த அமைப்புக்கு தாக்குதல் நடத்தும் திறன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் அளிக்கவில்லை எனக்கூறி தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=187125&category=TamilNews&language=tamil

 
Link to comment
Share on other sites

புலிகள் இயக்கத்தை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் ஆணை

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத தடுப்பு பட்டியலில் இருந்து, இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்பினை நீக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம்படத்தின் காப்புரிமைAFP

2009-ஆம் ஆண்டு விடுதலை புலிகள் இயக்கம் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த அமைப்பின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் சமர்பிக்கவில்லை என்றும் ஐரோப்பிய நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மற்றோரு தீர்ப்பில், இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற பாலஸ்தீன அமைப்பின் கோரிக்கையினை நீதிமன்றம் நிராகரித்தது.

http://www.bbc.com/tamil/global-40733446

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நவீனன் said:

2009-ஆம் ஆண்டு விடுதலை புலிகள் இயக்கம் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த அமைப்பின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் சமர்பிக்கவில்லை என்றும் ஐரோப்பிய நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தடை நீக்கம் மகிழ்ச்சியளிக்கின்றது. 
இனி  கிந்தியும் சிங்களமும் என்ன புரளியை கிளப்புவார்கள் என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு இது ஒரு பெரிய பின்னடைவு என்பதால் தனது எதிர்ப்பை ஐரோப்பி யூனியனுக்கு சமர்ப்பிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vanangaamudi said:

இலங்கை அரசுக்கு இது ஒரு பெரிய பின்னடைவு என்பதால் தனது எதிர்ப்பை ஐரோப்பி யூனியனுக்கு சமர்ப்பிக்கும்.

இலங்கை அரசுக்கு மட்டுமில்லை....இந்தியாவுக்குமே இது இறுக்கங்களையும் பாரிய அரசியல் தாக்கங்களையும் ஏற்படுத்தும். முக்கியமாக தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒருபக்கம் இனிப்பும் மறுபக்கம் கசப்புமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

42 minutes ago, குமாரசாமி said:

தடை நீக்கம் மகிழ்ச்சியளிக்கின்றது. 
இனி  கிந்தியும் சிங்களமும் என்ன புரளியை கிளப்புவார்கள் என்று பார்ப்போம்.

இவர்களின் பருப்பு இனி வேகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nunavilan said:

இவர்களின் பருப்பு  இனி வேகாது.

இந்தியா எனும் வேலியை ஐரோப்பிய ஒன்றியம் தாண்டாது. இருந்தாலும் பெரிய பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதால் சில நன்மைகள் இருக்கும் என நம்புகின்றேன்.
 டொனிபிளேயர்தான் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்ய பரிந்துரை செய்தவர் என்பதை எந்த ஈழத்தமிழனும் மறக்க மாட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையை இந்திய அரசும் உடனடியாக விலக்க முன்வரவேண்டும்: பழ.நெடுமாறன்

Bildergebnis für பழ.நெடுமாறன்

சென்னை:  விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியதை தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள  அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டதை  வரவேற்கிறேன். இலங்கை அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் என பொய்யான பழியைச் சுமத்தி, வற்புறுத்தியதன் விளைவாகத்தான் ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தடையை விதித்தது.

இப்போது இந்த தடை நீக்கப்பட்டதின் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல அது ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்கப்பட்டுவிட்டது. எனவே, உலக நாடுகள் குறிப்பாக இந்திய அரசு விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையை உடனடியாக விலக்க முன்வரவேண்டும் என வற்புறுத்துகிறேன்.

இந்த தடை நீக்கப்படுவதின் மூலம் இலங்கையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகித் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையும் விடிவும் பிறக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.  

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியிருக்கிப்பதால், உரிமைகள் கிடைக்க இலங்கை அரசுக்கு முன்வர வேண்டும்-மு.க.ஸ்டாலின்

 

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியிருப்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது உலகத் தமிழர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருப்பது மட்டுமின்றி, இந்த தடை நீக்கம் ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்றே கருதுகிறேன்.
 
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை தொடர்ந்து முடக்கி வரும் இலங்கை அரசு இந்த தடை நீக்கத்தின் நோக்கத்தை உணர்ந்து ஈழத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு, சிங்களர்களுக்கு இணையாக சம உரிமை மற்றும் கண்ணியத்துடன் தமிழர்கள் வாழ்வதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும். போரின் போது காணாமல் போன தமிழர்களை அடையாளம் காணுவது, தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இலங்கை ராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றி அந்த நிலங்களை தமிழர்களிடம் திருப்பி ஒப்படைப்பது, மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது, இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பது, ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை வழங்குவது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இலங்கை அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
 
ஐரோப்பிய யூனியனே தடையை நீக்கியிருக்கின்ற நிலையில் ஈழத் தமிழர்களுக்கான உரிமைகள் கிடைப்பதற்கு மத்திய அரசு உரிய அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய யூனியன் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் நல்லெண்ணத்தை முன்னெடுத்துச் சென்று ஈழத் தமிழர்கள் வாழ்வை சூழ்ந்துள்ள காரிருளை நீக்க மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலகமெங்கும் உள்ள  தமிழர்கள் மத்தியில் நியாயமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் விரும்பும் நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
Link to comment
Share on other sites

EU நீதிமன்றின் தீர்ப்பு, பயங்கரவாத அமைப்பு தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் பொறிமுறைமையில் எவ்வித தலையீடும் செய்யாது – EU

eu.png

புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளனர் – ஐரோப்பிய ஒன்றியம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் உள்ளடக்குவது குறித்த முறைமை பற்றிய சட்ட ரீதியான தீர்ப்பே, நீதிமன்றம் வழங்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், பயங்கரவாத அமைப்பு ஒன்று தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் பொறிமுறைமையில் இந்த தீர்ப்பு எவ்வித தலையீடும் செய்யாது என குறிப்பிட்டுள்ளது.

2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்கான மதிப்பீட்டின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. எனினும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு இந்த நீதிமன்ற தீர்ப்பு எந்த வகையிலும் தாக்கத்தை செலுத்தாது என குறிப்பிட்டுள்ளது.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கருதப்படும் என தெரிவித்துள்ளது. தற்போது நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களினால் கிரமமாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. மிகவும் நிதானமாக இந்த தீர்ப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகவே தொடர்ந்தும் கருதுவதாக ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/34375

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நவீனன் said:

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்னுமொருக்கால் பள்ளிக்கூடம் போய் தமிழ் படிக்கோணும் போலை கிடக்கு :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

 

பிழையான ஆக்கள்.... திரும்பவும் உண்டியல் குலுக்காமல் இருந்தால் நல்லது.

அவை ரெடியண்ணா...

சம்பந்து ...சுமந்து ஊரிலை  நிக்கினமோ குமாரசாமியர்....உங்கை பரிசுப் பக்கம் போனால் அரசு டான்ஸ் ரீச்சரை பாராட்டி செர்ட்டிபிகட்  கொடுத்ததை பேஸ் புக்கிலை படமும் போட்டிருக்கிறா....அவவிடம் சொல்லி ஒரு பாராட்டு நடனமும் ..செய்துவிடுங்கோ...உங்கை யூரோப்பிலை சனம் என்னண்ணா செய்யுது..மெல்ல மெல்ல மாறினால் ...அய்ரோப்பிய் ஒன்றியமும் ..என்ன செய்யும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு தள்ளிபோக இங்காலை காயை அரக்கினம் போல் உள்ளது சிங்களத்தின் பாசையிலே தடை எடுக்கவில்லை ஆனால் எடுத்தாயிற்று கொடி ஏற்றுவதில் இனி இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை கொடி பிடிக்க கூடாது என்பவர்களின் வாயில் மண் போட்டுவிட்டுது இந்த நாசாம போன ஐரோப்பியயூனியன் .நம்மவர்களே கொடியை புடுங்கி எறியும்போது துடித்துபோய் நின்ரம் இனி கை வைக்கட்டும் சட்ட ரீதியாய் பதில் சொல்ல வேண்டி வரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குச்சொழுங்கையில் ஒரு குண்டு வெடிச்சா கூட.. முன் பக்கச் செய்தி போடும் பிபிசி போன்ற சர்வதேச பொறுப்புள்ள.. புறுபுறுப்பு ஊடகங்கள்.. இப்படியான செய்திகளை போடுவதே இல்லை. 

இந்தச் செய்தியின் தீர்ப்பின் உண்மைப் பிரதியும்.. அதன் உண்மை வடிவமும் தெரியாமல்.. இதில் கருத்துச் சொல்வது உசிதமல்ல. எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.

விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது அமெரிக்க - ஹிந்திய ஏகாதபத்தியங்களின் ஒருதலைப்பட்சமான பாசிச முடிவு. அதன் தொடர்ச்சி தான்  மற்றவர்களின் தடை.

இந்தத் தடை ஒரு இனப்படுகொலைக்கு முன்னோடி. அந்த இனப்படுகொலைக்கு பதில் சொல்லாமல்.. நீதி வழங்காமல்.. தடைபோட்டவர்களை.. தப்பிக்க வைக்க முடியாது. :rolleyes:

European Court upholds 2014 decision to de-proscribe LTTE

[TamilNet, Wednesday, 26 July 2017, 14:33 GMT]
The Appeal Court of the European Court of Justice on Wednesday maintained the decision already made by the General Court in October 2014 of annulling the restrictive measures that had been taken against the Liberation Tigers of Tamil Eelam in 2006. The case, initiated by Tamil activists from Europe and USA, on behalf of the LTTE, was originally filed in April 2011 with additions later. The case was won by the LTTE on procedural grounds in 2014. The Council of the European Union was the defendant, supported by the Netherlands, the UK and the European Commission. The UK was particularly instrumental in defending continued proscription. Lathan Suntharalingam, one of the initiators of the legal move against EU ban on LTTE on Wednesday told TamilNet that the next step was to challenge the initial 2006-decision to ban the LTTE. 

The decision of the ECJ comes after addressing the appeal from the Council regarding Hamas and the LTTE.

LTTE was represented by the lawyers V. Koppe, A. M. van Eik and T. Buruma.

In two judgments delivered in 2014, the General Court annulled the restrictive measures concerning Hamas and the LTTE.

While justifying the annulment of restrictions on the LTTE, the ECJ on Wednesday reverted its 2014 ruling on Hamas.
 



Hamas has been on the list of proscribed movements in the EU since 2001 while the LTTE was included in 2006 when it was engaged in a peace process facilitated (and mediated) by Norway. The so-called ‘Co-Chair countries of Tokyo Donor Conference’ were steering the process even disregarding the advice from the Sri Lanka Monitoring Mission (SLMM) against imposing the ban in 2006.

The EU decision to ban the LTTE encouraged the SL State to wage a genocidal war and finally the mass slaughter against the nation of Eezham Tamils in 2009.

The Hamas and the LTTE “did not challenge the Council measures by which they were initially listed, they did contest their subsequent retention on the list before the General Court,” the ECJ noted in its ruling on Wednesday.

Commenting on the next step of legal activism, Tamil activist Lathan Suntharalingam lamented inaction by the dormant Tamil diaspora in the UK that has failed to challenge the proscription of the LTTE in Britain.

The UK has been long blighting the cause of Eezham Tamils.

The UK’s permanent representative at the United Nations in 2009, Sir John Sawyers, who was at that time the permanent representative to the UN (and later the chief of MI6 until 2014), stopped any Security Council discussion about the crisis in Sri Lanka in February 2009.

On 5th February 2009, when the war was heading towards genocidal end, answering media on UK’s stand at the UN Security Council, John Sawer said: “The Tamil Tigers are a proscribed organisation and the government of Sri Lanka has long been blighted by the activities of the Tamil Tigers. We want these to be brought to an end.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் தெளிவாக விளங்குது 
இருக்கு ஆனால் இல்லை 
நீதிமன்றம் மனித உரிமை கவுன்சில் போல தீர்ப்பு தீர்ப்பாக நிறைவேற்ற வேண்டியதுதான் 

ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பு கவுன்சில் போல இங்கே விடயம் வந்தால் தான் காரியம் ஆகும் 
உந்த நீதி மன்றிட்க்கும் செய்க்  அல் குசைத் தான் தலைமை நீதிபதியோ தெரியாது 

Link to comment
Share on other sites

நாமல் கடும் கண்டனம்
 

image_3fbabdf955.jpgதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கப் பட்டியலிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அதியுயர் நீதிமன்றம் நீக்கியமையை, ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான நாமல் ராஜபக்ஷ, கடுமையாக கண்டித்துள்ளார். 

தன்னுடைய டுவிட்டர் கணக்கில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள அவர், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அவர்கள், நேரடியாக நிதியுதவியளிப்பர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/நாமல்-கடும்-கண்டனம்/175-201373

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட வன்மம் எல்லாம் சொறீலங்காவுக்க மட்டும் தான் செல்லுபடியாகும். அதை விட்டு வெளில வந்திட்டால்.. அங்கெல்லாம்.. ஓரளவுக்கு நீதியை நிலைநாட்ட வசதி இருக்கப்பு. வெளிநாட்டுக்கு வந்தால்.. தண்ணி அடிக்கிறதிலும் குட்டிகளோடு கும்மாளம் அடிப்பதிலும் நேரம் கழிக்கும் நாமலுக்கு உலக விடயங்களில் அனுபவம் பூச்சியம். 

ஏதோ.. உலக அரங்கில் நிலவிய.. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அப்போதைய சுழல் காற்றில்.. சிக்கிக் கொண்டு.. சிறகான தமிழரை கொன்று புதைச்சு கொண்ட வெற்றி கன நாளைக்கு நிற்காது கண்டியளோ. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையை இந்திய அரசும் உடனடியாக விலக்க முன்வரவேண்டும்: பழ.நெடுமாறன்

Bildergebnis für பழ.நெடுமாறன்

சென்னை:  விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியதை தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள  அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டதை  வரவேற்கிறேன். இலங்கை அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் என பொய்யான பழியைச் சுமத்தி, வற்புறுத்தியதன் விளைவாகத்தான் ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தடையை விதித்தது.

இப்போது இந்த தடை நீக்கப்பட்டதின் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல அது ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்கப்பட்டுவிட்டது. எனவே, உலக நாடுகள் குறிப்பாக இந்திய அரசு விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையை உடனடியாக விலக்க முன்வரவேண்டும் என வற்புறுத்துகிறேன்.

இந்த தடை நீக்கப்படுவதின் மூலம் இலங்கையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகித் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையும் விடிவும் பிறக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.  

http://www.dinamani.com

 

10 hours ago, நவீனன் said:

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகவே தொடர்ந்தும் கருதுவதாக ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழ நெடுமாறன் ஐயாவுக்கும் அறிக்கை வாசிக்கத் தெரியாதோ.....  ? அல்லது குமாரசாமி ஐயா சொன்னதுபோல் நாங்கள் இன்னுமொருக்கால் பள்ளிக்கூடம் போய் தமிழ் படிக்கோணும் போலை கிடக்கு :grin: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣
    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.