Jump to content

'ஒய்யாலே கவுத்துப்புட்டாளே...' - சிம்பு சிச்சுவேஷன் ஸாங்


Recommended Posts

இதற்கு முன்பும் பல பாடல்கள் பாடியிருக்கிறார் சிம்பு. ஆனால் இப்போது பாடியிருப்பது அசலான சிச்சுவேஷன் பாடல்.

பரதன் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் 'நீ நான் நிலா.' படத்தை சிவக்குமார் என்பவர் இயக்குகிறார். இரண்டு ஹீரோக்கள். இருவருமே புதுமுகங்கள். ஒருவர் பரதன், இன்னொருவர் ரவி.

இரண்டு ஹீரோக்களுக்கும் சேர்த்து ஒரு ஹீரோயின். தமிழ் நாட்டில் யாரும் அகப்படாமல் குஜராத் சென்று நாயகியை அழைத்து வந்திருக்கிறார்கள். இவர் ஒரு மாடல். பெயர் மேக்னா. தமிழுக்கு இவர் புதுசு.

இந்தப் படத்தில் கலகலப்பான பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதனை சிம்பு பாடினால் நல்லாயிருக்குமே என இயக்குனருக்கு ஓர் எண்ணம். சிம்புவிடம் கேட்டதும் மறுக்காமல் ஒப்புக் கொண்டார்.

உயிருக்குயிராக காதலித்தேன்... ஆனால் கவிழ்த்து விட்டாள் என நயன்தாரா மீது சிம்பு புகார் படிக்கும் நேரத்தில் 'நீ நான் நிலா' வுக்காக இவர் பாடிய பாடலின் முதல்வரி இப்படி ஆரம்பிக்கிறது; 'ஒய்யாலே கவுத்துப்புட்டாளே....'

சிம்பு பாடலை பாட உடனே ஒப்புக் கொண்டது நிஜ சிச்சுவேஷனுக்கு பாடல் வரிகள் பொருந்திப் போனது ஒரு காரணமா?

இந்தப் பாடலை பிலிம்சிட்டியில் அரங்கம் அமைத்து எடுத்திருக்கிறார்கள்.

:huh::huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.