Sign in to follow this  
விசுகு

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

Recommended Posts

பட்டது + படிச்சது + பிடித்தது - 105
 
அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களது தற்போதைய நிலை சார்ந்து...
 
கலைஞர் கருணாநிதி அவர்கள்
எழுத்தாளர் கலைஞர் என்பதைவிட
அரசியல் சாணக்கியர் என்பதே அவரது பெயராகும்.
அந்த சாணக்கியர் தனது சாணக்கிய அரசியலிலிருந்து சறுக்கியது
2009 இல் ஈழத்தமிழரை காப்பாற்ற தவறிய போது தான்.
தமிழ் தமிழ் என பேசி எழுதி வந்த அவரிடம் தமிழீழம் பெற்றுத்தராவிட்டாலும்
தமிழ் மக்கள் அழிவை தடுப்பார் என்ற நம்பிக்கை கடைசி நிமிடம்வரை ஈழத்தவரிடமிருந்தது.
அதைச்செய்யத்தவறியது மட்டுமன்றி அதற்கு நாடகங்கள் போட்டுத்துணைபோன அன்றே
அவரும் அவரது கட்சியும் சாணக்கியமும் தூள் தூளாகிவிட்டது.
தான் மேடைகளில் பேசி உணர்ச்சியேற்றிய அதே தமிழ்
தனக்கெதிராக தமிழ்த்தேசியம் என வெடித்துக்கிளம்பும் என கருணாநிதி
ஒருபோதுமே எதிர்பார்த்திருக்கவேமாட்டார்.
 
இன்று தோல்விகளை சந்தித்து
கூனி குறுகி கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவரை
சிலர் வைகின்றனர்.
அவரது மரணத்தை வரவேற்கின்றனர்.
மரணத்தை வரவேற்பதும் அவருக்கு இந்த வயதில் ஒருவித விடுதலையே.
உண்மையில் என்னைப்பொறுத்தவரை அவர் இன்னும் வாழணும் கூனி குறுகணும்.
தன் கண் முன்னே துரோகத்துக்கான தண்டனையை அனுபவிக்கணும்.
 
அவரது பேச்சில் இன்றும் மயங்கி கிடக்கும் அவரது கட்சியின் கோடானுகோடி தமிழர்கள் மன்னிப்பார்களாக...

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 106
 
 
கருணாநிதி அவர்கள்
ஏன் ஈழத்தமிழர்களாலும் அவர்கள் பால் அன்புகொண்ட தமிழர்களாலும்
ஏன் இந்தளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்??
அல்லது அவரது இறப்புக்கூட எதற்காக வரவேற்கப்படுகிறது?
இந்தப்படம் ஒன்றே போதுமானது
 
37896607_651986355180919_727322681166266

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 107
 
புலிகள் சார்ந்து என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் 3
 
1 - விடுதலைப்புலிகளை ஏன் விமர்சிப்பதே இல்லை?
 
2 - சொத்துக்கள் மற்றும் சேர்க்கப்பட்ட பணம் எங்கே??
 
3 - விடுதலைப்புலிகளுடன் உங்களின் தொடர்பு எப்படிப்பட்டது ?
 
 
ஒன்றுக்கான பதில்:
 
விடுதலைப்புலிகளின் குறிக்கோள் மீது தான் விமர்சனம் வைக்கமுடியும்
அவர்கள் அதை ஒரு போதும் மாற்றிக்கொண்டதில்லை
எதற்காகவும் எந்தநிலையிலும் உயிர் போகினும் அதை விட்டுக்கொடுத்ததில்லை.
எனவே பாதைகள் மீது விமர்சனம் வைக்கமுடியாது.
 
தமிழ்மக்கள் மீது அளவுக்கதிகமான சுமைகளை சுமத்தியது
ஆட்சேர்ப்பு வரி போன்றவற்றை சிலர் குறிப்பிடுவார்கள்
தமிழ் மக்கள் தாய்ப்பசு என்றால் புலிகள் அதன் கன்று.
தாயிலிருந்து பால் வராவிட்டால் நாலு இடி இடிக்கும் கன்று.
அது தாய்க்கு வலிக்குமா என்ன? அப்படித்தான் பார்க்கவேண்டும்.
உண்மையில் இந்த வலியை நாம் தாங்கி பெருசு படுத்தாமல் இருந்திருந்தால்
இன்று சொர்க்க பூமியில் வாழ்வோம்.
 
2009க்கு பின்னர் தலைவர் ஒரு விடயத்தை தெளிவாக அறிவித்தார்.
இனி உங்களது முடிவுகளை நீங்களே எடுங்கள் என்று. அன்றிலிருந்து புலிகள் இல்லை.
இப்போது இருப்பவர்களுக்கு 3 நேரம் பசிக்கும் வயிறும் இருக்கிறது.
அதையும் தலைவர் தீர்க்கதரிசனமாக எப்பொழுதோ சொல்லிவிட்டார்
எனக்குப்பின் இயக்கத்தை உங்களுக்கேற்றாப்போல் பிரித்து பிரித்து விற்றுக்கொள்ளுங்கள் என்று.
அது தான் தற்பொழுது நடக்கிறது.
  • Thanks 1
  • Confused 1

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 108
 
புலிகள் சார்ந்து என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் 3
 
1 - விடுதலைப்புலிகளை ஏன் விமர்சிப்பதே இல்லை?
 
2 - சொத்துக்கள் மற்றும் சேர்க்கப்பட்ட பணம் எங்கே??
 
3 - விடுதலைப்புலிகளுடன் உங்களின் தொடர்பு எப்படிப்பட்டது ?
 
இரண்டுக்கான பதில்:
 
விடுதலைப்புலிகளின் வலையமைப்பை
முழுமையாக அறிந்தவர் தலைவரைத்தவிர எவருமில்லை.
இன்றுவரை இன்ரபோல் போன்ற அமைப்புக்களாலேயே
இதனை முழுமையாக அறியமுடியவில்லை.
 
தலைவர் ஒரு சுழற்சி முறை வைத்திருந்தார்.
அதன்படி பணத்தை எந்த அலுவலகத்திலும் அமைப்பிலும் இருக்க விடமாட்டார்.
உதாரணமாக 1 லட்சம் ஈரோக்கள் அலுவலகத்தில் சேர்ந்தால்
50 லட்சம் ஈரோக்களைக்கேட்பார். (தேவையும் அப்படித்தானிருந்தது)
அங்க இங்க மாறி கடனெடுத்து அனுப்பி அந்தக்கடன் முடியமுதல்
அடுத்த தொகையை கேட்பார்.
எனவே அலுவலகங்களிலோ இங்குள்ள பிரதிநிதிகளிடமோ பணம் தங்க இடமில்லை.
 
ஆனால் எங்களால் ஒரு காலத்தில் பிரமிப்பாகவும் பெருமையாகவும் பேசப்பட்ட
தலைவரின் வலையமைப்பே இன்று எமக்கு தலையிடியாக வந்துள்ளது.
அதன் அடி நுணி அறிந்தவர் யாருமில்லை?????
 
ஆனாலும் தலைவரின் வளர்ப்பில் என்றும் நம்பிக்கையுண்டு.
அந்த நம்பிக்கை வீண் போகாது என்று இன்றும் நம்புகின்றேன்.
 
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 109
 
கலைஞர் கருணாநிதி அவர்கள் காலமானார் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
 
தமிழகத்தை பொறுத்தவரை வரலாற்றில்
மறுக்கப்படமுடியாத தலைவராகவும்
ஈழத்தமிழினத்தைப்பொறுத்தவரை மன்னிக்கப்பட முடியாத துரோகத்தை செய்தவராகவும் செல்கின்றார்.
 
எவருடைய மரணமும் வருந்தத்தக்கதே.
செல்லுங்கள் கலைஞரே.
இனி ஒருமுறை எம் தமிழர் வாழ்வில் மீள வராதீர்கள்.

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 110
 
விதி வலிமையானது
 
விதி மதியைவிட வலிமையானது என்பார்கள் எம்முன்னோர். .
எனக்கு இதில் நம்பிக்கை இருந்ததில்லை.
 
ஆனால் சில அனுபவங்களும் செயல்களும் அதை எம் வாழ்வில் உறுதிப்படுத்தியே செல்கின்றன
 
கலைஞர் அவர்கள் தலைவருடைய தாயார் என்ற ஒரு காரணத்துக்காக
தனது ஆட்சியில் அவருக்கு மருத்துவம் செய்ய மறுத்தார். அலைக்கழித்தார்.
 
ஈழத்தமிழினத்தின் அழிவில்
நாடகமாடி வேசம் போட்டு நரித்தனம் செய்து
எமது மக்களின் ரத்தத்தை வைத்து மத்தியில் பேரம் பேசி சலுகைகளைப்பெற்றார்.
 
இதனால் ஈழத்தவர்கள் அவரது மறைவை கவலையோடு பார்க்கவில்லை
ஆனால் கொண்டாடமுயலவில்லை
 
ஆனால் விதி தலைவரது தாயாரின் பிறந்தநாளில்
கலைஞரை பறித்து இத்தினத்தை கொண்டாட அனுமதிக்கிறது.
இந்தப்பிறந்தநாளை ஈழத்தமிழர் கொண்டாடும் ஒவ்வொரு வருடமும்
கலைஞரும் ......????

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 111
 
விடுமுறையில் கற்றவை
 
பொதுவாக ஆவணி மாதத்தில் எங்காவது தங்கி
அவ்விடத்தை பற்றி நேரடியாக பார்த்து கேட்டு அறிவது எனது வழமை.
இம்முறை பிரான்சின் மலையும் அது சார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலப்பகுதியான LA SAVOIE வில்.
 
இதன் வரலாறு எமது தாயகத்துக்கும் ஊருக்கும் பயனுள்ளதாக அமையுமென்பதால்...
 
இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான காலப்பகுதியில்
இவ்விடத்தை விட்டு மக்கள் தொடர்ச்சியாக வெளியேறியபடி இருந்தனர்.
ஒரு காலப்பகுதியில் மக்களே இல்லாதநிலை ஏற்பட்டது. காரணங்கள்
 
வருடத்தில் அரைவாசிப்பகுதி கடும் குளிர்
மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்மை
போக்குவரத்து சுகாதார வசதியின்மை
வேலை வாய்ப்பின்மை
கடும் குளிர் காலப்பகுதியில் தண்ணீர் இன்மை
 
இந்தநிலையில் தான் அரசு 1960 இல்
அவசரமாக அம்மக்களின் இடப்பெயர்ச்சியை தடுக்க ஆலோசனைகளையும் திட்டங்களையும் கோரியது.
அவ்வாறான கோரிக்கைக்கு கிடைத்த திட்டம் தான்
பனிச்சறுக்கல்களுக்கான இடமாக இருப்பதால் அதை சுற்றுலா திடலாக அறிவித்து
அது சார்ந்த தொழில்துறைகள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க ஊக்குவித்தலாகும்.
 
1960 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது
1980களில் பாரீய வளர்ச்சி கண்டு இன்று பனிச்சறுக்கல் காலப்பகுதியில்
இவ்விடத்தில் பல மாதங்களுக்கு முன்பே இடங்களை பதிவு செய்தால் தான்
இடம் கிடைக்குமளவுக்கு வளர்ந்து அங்குள்ள மக்களுக்கும் அரசுக்கும்
பெரும் சுற்றுலா வருமானத்தை தரும் துறையாக வளர்ந்து
அந்த மண்ணையும் மக்களையும் வளம் படைத்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
 
இதைக்காணும் போது எனது ஊரின் இன்றைய நிலையே கண் முன் நின்றது.
அதுவும் மாறும் என்ற நம்பிக்கை வருகிறது.
 
எமதூர் மக்கள் புலமெங்கும்
அரசுகளுக்கு பெருவாரியான வரிகளையும் நன்கொடைகளையும்
கொடுப்பவர்களாக இன்று வளர்ந்துள்ளமையை காண்கின்றோம்.
எனவே இவர்களை எமதூர் சார்ந்து திருப்பும் போது
எமது மண்ணும் ஒருநாள் வளம் படைத்த மக்களையும் மண்ணையும் கொண்டதாக வரும்.
கனவு காண்போம்.

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 112
 
அதிக பேச்சு அல்லது அதிக விளம்பரம்
 
ஒரு விடயத்தை பற்றிய அதிக பேச்சு அல்லது அதிக விளம்பரம்
அந்த விடயத்தின் உண்மைத்தன்மைக்கு மேலாக ஊதிப்பெருதாக்கி
எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்கச்செய்து
எதை சாதித்தபோதும் அதைவிட அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி
அந்த விடயத்தை சிறுமைப்படுத்தி விடும்.
அது சினிமாவாக இருந்தாலும் சரி பொது அமைப்புக்களாக இருந்தாலும் சரி.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this