Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 51
 
நாம் தமிழர்க்கு 4வது இடம்??
 
இங்கே வெற்றி தோல்வி
எத்தனையாவது இடம்?
என்பவற்றைவிட
தேர்தலின் போது அவர்கள் காட்டிய
நேர்மை
ஒழுக்கம்
பொதுமக்களுக்கு இடைஞ்சல் தராமை
தாமாகவே ஒன்றிணைந்தது
தத்தமது செலவில் ஒன்று கூடியது
மற்றவர்களுக்கு முன்னுதாரணமான நடத்தைகள் தான் பேசப்படுகிறது
போற்றப்படுகிறது
இது இனி
நாம் தமிழரை மேலும் மேலும் தானாகவே வளர்க்கும்

 

 

Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 52
 
சுமந்திரன் - கஜேந்திரகுமார் நேருக்கு நேர்
 
 
நேற்றைய இந்த நேருக்கு நேர் பேட்டியை பலரும் இருவருக்கு இடையிலான போட்டியாக பார்க்கின்றனர். அல்லது இருவருக்கும் இடையிலான சட்ட மற்றும் அறிவுசார்ந்த பலப்பரீட்சையாக பேசி எழுதி மகிழ்கின்றனர்.
 
பொன்னம்பலத்தாரின் பேரனா? அல்லது அரச சட்டத்தரணியா? என்பது எமக்கெதற்கு???
 
உண்மையில் இந்த பேட்டி தமிழர்களுக்கு ஏதாவது நன்மை தருமா? அல்லது இப்பேட்டியினூடாக தமிழினம் எதையாவது கிரகித்து அடுத்த அடுத்த கட்டங்களுக்கு நகருமா என்பது தான் ஆரோக்கியமான தேடுதலாக இருக்கும் இருக்கணும்.
 
--------------------------------------------------------------------------------------
 
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறார்
 
சுயநிர்ணயம் என்ற பேச்சே இல்லை
 
சமஸ்டி ஆட்சி இல்லை
 
வடகிழக்கு இணைப்பு இல்லை
 
பிரிக்கப்படமுடியாத தேசம் என்பது மட்டும் மிக மிக உரத்து
 
இறுக்கமாக சொல்லப்பட்டு சிங்கள மக்களின் சந்தேகங்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டிருக்கு
 
எதற்காக தீர்வு?
 
தமிழரது கோரிக்கைகள்
 
அவர்களது தியாகங்கள்
 
மறைக்கப்பட்டு
 
அதற்காக தீர்வை தருவதைவிடுத்து
 
மீண்டும் மீண்டும்
 
சிங்கள மக்களின் சந்தேகங்களுக்கு உறுதிமொழி வழங்குவதற்கு எதற்கு தீர்வு??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 53
 
ரஜனியும் நானும்...
(ரஜனியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசப்படுவதால்)
 
சிறு வயதிலிருந்து என்னை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரிந்த ஒருவிடயம் நான் ரஜனியின் பரம ரசிகன் என்பது.
 
ஒரு காலத்தில் அவரைப்போல் பேசுவது
அவரைப்போல் நடப்பது
அவரைப்போல் தலையை கோதிவிடுவது
அவரைப்போல் முறைப்பது
ரஜனியின் படத்தை முதல் காட்சியே பார்ப்பது
அதேபோல் கமலின் படத்தை அவரது ரசிகர்களை நக்கலடிப்பதற்பதற்காகவே முதல்க்காட்சியே பார்ப்பது என
நானும் நண்பர்களும் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
 
இந்த ரசிப்பு பிரான்சுக்கு வந்த பின்னரும் இருந்தது
 
ஒருமுறை
ஒவ்வொரு வருடப்பிறப்புக்கு முன்பே தலைவர் படம் போட்ட கலண்டர் வீட்டில் தொங்கவிடப்பட்டிருக்கும்
வருடப்பிறப்பு அன்று லா சப்பல் கடையிலிருந்து ரஜனியின் படம் போட்ட கலண்டர் ஒன்றை எடுத்து வந்திருந்தேன்.
அதை எடுத்த மகன் (3 வயதிருக்கும்)
ரஜனியின் படம் போட்ட கலண்டரை
தலைவரது படம் முற்றாக மறைந்து போகுமாறு தலைவர் படத்துக்கு மேல் கொழுவினான்.
 
அப்பொழுது தான் உறைத்தது தவறானவர்களை
பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்கின்றேன் என்று.
தலைவர் பற்றியும் ரஜினி பற்றியும் மகனுக்கு சிறு விளக்கம் கொடுத்துவிட்டு
ரஜினியின் கலண்டரை அகற்றிவிட்டேன்.
 
அன்றிலிருந்து நான் எவருடைய ரசிகனுமில்லை.
எந்த நடிகர் நடிகைகளின் படங்களையும் (Photo) வீட்டுக்கு கொண்டுவருவதில்லை.
தலைவர் படம் மட்டுமே வீட்டில் ஒவ்வொரு அறையிலும் உண்டு.
 
இன்றும் மக்கள் ரஜனி உட்பட எல்லோரது படங்களையும் பார்க்கிறார்கள்
தலைவரை தேடுகிறார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 54
 
 
புலம் பெயர்ந்த
தாயக விடுதலைக்காக புலத்தில் உழைத்த
எம் போன்றோரின் தாயக வருகை
 
 
2009க்கு பின்னர் ஏன் தாயகத்துக்கு வருவதில்லை என
அநேகமான உறவுகள் கேட்பதுண்டு (இங்கும் தாயகத்திலிருந்தும்)
 
எனது பதில்
எம்மவர்களை நினைத்துத்தான் வருவதில்லை என்பதாக இருக்கும்.
 
இதோ உங்களுக்கு ஒரு சாட்சி.
 
 
 
நாங்க எல்லா பின்புலங்களுடனும் தான் இறங்கியிருக்கிறம்
 
பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் அமுலில் தான் இருக்கு
 
செஞ்சு காட்டுறம்
 
-கூட்டமைப்பு வேட்பாளர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 55
 
உள்ளுராட்சித்தேர்தல் களம்
 
தாயகத்தில் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாகவும் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள்
அவர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வாக்குறுதிகள்
ஆரவாரங்கள்
அடிபிடிகள்
காலை வாருதல்
முகநூல் உட்பட விளம்பரங்களை பார்க்கின்றபோது
எல்லாவற்றையும் சரியாகக்கணித்த தலைவர்
தமிழர்களின் போராட்டம் இதுக்குத்தான் என்பதை மட்டும் கணிக்கத்தவறிவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது...☹️☹️☹️
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 56
 
 
தைப்பொங்கல்
 
அநேகமான இடங்களில் தைப்பொங்கல் தமிழர் திருநாள்
அது இந்துக்களின் விழா அன்று என்பது போன்ற விவாதங்களும் கண்டனங்களும் போய்க்கொண்டிருக்கின்றன.
 
நான் அறிந்தவரை
நான் படித்தவரை
அது இந்துக்களின் திருவிழா தான்.
 
அதை அவ்வாறே ஏற்றுக்கொள்வதில் அல்லது
இதனடிப்படையில் தொழுவதில் என்ன சிக்கல் உள்ளது என புரியவில்லை.
 
தமிழர்களில் பல மதங்களுமுண்டு.
அவரவர் தத்தமது விழாக்களை பண்டிகைகளை தொழுதல்களை
தத்தம் முறைப்படி செய்து வருகிறார்கள்.
எவரும் எவரது மதங்களையும் மாற்றும்படி அல்லது மருகும்படி கோருவதில்லை.
 
உதாரணத்துக்கு நத்தார் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
அதேபோல் வெசாக் தினமும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
 
ஆனால் பொங்கல் எப்படி இவ்வாறு பந்தாடப்படுகிறது என புரியவில்லை.
அது தமிழரின் திருநாள் என்றால்
அது பற்றி பெரியவர்களுடன்
அதிலும் இந்துப்பெரியவர்களுடன் மாநாடுகளை நடாத்தி முடிவுகளை எடுப்பதே சரியானது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 56
 
 
தைப்பொங்கல்
 
அநேகமான இடங்களில் தைப்பொங்கல் தமிழர் திருநாள்
அது இந்துக்களின் விழா அன்று என்பது போன்ற விவாதங்களும் கண்டனங்களும் போய்க்கொண்டிருக்கின்றன.
 
நான் அறிந்தவரை
நான் படித்தவரை
அது இந்துக்களின் திருவிழா தான்.
 
அதை அவ்வாறே ஏற்றுக்கொள்வதில் அல்லது
இதனடிப்படையில் தொழுவதில் என்ன சிக்கல் உள்ளது என புரியவில்லை.
 
தமிழர்களில் பல மதங்களுமுண்டு.
அவரவர் தத்தமது விழாக்களை பண்டிகைகளை தொழுதல்களை
தத்தம் முறைப்படி செய்து வருகிறார்கள்.
எவரும் எவரது மதங்களையும் மாற்றும்படி அல்லது மருகும்படி கோருவதில்லை.
 
உதாரணத்துக்கு நத்தார் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
அதேபோல் வெசாக் தினமும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
 
ஆனால் பொங்கல் எப்படி இவ்வாறு பந்தாடப்படுகிறது என புரியவில்லை.
அது தமிழரின் திருநாள் என்றால்
அது பற்றி பெரியவர்களுடன்
அதிலும் இந்துப்பெரியவர்களுடன் மாநாடுகளை நடாத்தி முடிவுகளை எடுப்பதே சரியானது.

உந்த பிரச்சனையை கிளப்பி விட்டது சைவத்திலிருந்து மதம் மாறிய அல்லேலூயாகாரர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 57
 
நெடுக சீரியசாக இருக்கப்படாது காண்.
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மனுசனையா நீங்கள், இவ்வளவு வேலைப்பளுவுக்கிடையிலும் எங்கிருந்து இறக்குகின்றிர்கள் இவைகளை....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 58
 
பெற்றவர்கள் எம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்
 
வளர்ந்து திருமணமாகி வாழும் அநேகமான பிள்ளைகளுக்கு
தம்மிடம் பெற்றோர் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவதில்லை.
அவர்கள் எதனால் நிம்மதியாக சந்தோசமாக இருப்பார்கள் என்பதும் புரிவதில்லை.
 
தாம் சொத்து பணம் சேர்த்து
பெற்றோரையும் அதன் மூலம் கவனித்துக்கொண்டால்
அவர்கள் சந்தோசமடைவார்கள் என நினைக்கிறார்கள்.
 
உண்மையில் பெற்றோர்களது சந்தோசம் நிம்மதி என்பது
அவர்களது பிள்ளைகளின் அமைதியான
நிம்மதியான
சந்தோசமான வாழ்க்கையை பார்க்கும் போது மட்டுமே உண்டு.
 
அதை தொலைத்துவிட்டு எதை செய்தும் பலனில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

என்ன மனுசனையா நீங்கள், இவ்வளவு வேலைப்பளுவுக்கிடையிலும் எங்கிருந்து இறக்குகின்றிர்கள் இவைகளை....!  tw_blush:

ஏதாவது  கண்ணில்  பட்டால்

எனது  உறவுகளுக்கு பகிரத்தான்  அண்ணா..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 59
 
எமது உடம்பு
 
எம்மில் அநேகர்
அழகாக முகமிருத்தல்
மெலிதான உடம்பிருத்தல்
வெள்ளையாக இருத்தல்
போன்றவைகளே தமக்கிருக்கும் பாக்கியம் என கருதுகிறார்கள்
 
உண்மையில்
இலகுவான சுவாசம்
சீரான ரத்த ஓட்டம்
ஒழுங்காக கழிவு வெறியேறுதல்
என்பவை கிடைக்கப்பெற்றவர்களே பாக்கியசாலிகள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 60
 
இந்திய உயர் விருதுகள்
 
இசையானிக்கு உயர் விருது கிடைத்திருக்கிறது.
பெருமை கொள்வதைவிட வலி தான் அதிகமாகிறது.
 
தத்தமது கட்சிக்காரன்
தமக்கெதிராக செயற்படாதவன்
இன்னார் ஆட்சிக்கு வந்தால்
இன்னார் இன்னாருக்கு விருது...
 
இதெப்படி திறமைக்கு
மக்கள் விருப்பத்துக்கு கிடைத்த தகுதியாகும்???
 
அவருக்கு இசையானி பெருமையே போதும்
இசையானி
மோடிக்கு நன்றி சொல்வது இசையானியையும் விருதையும் கேலி செய்வதாகும்.
 
இந்திய வல்லரசுக்கனவுக்கு முன்னர்
இது போன்ற அரசியல் கேலிக்கூத்துக்களிலிருந்து வெளியில் வரணும்
 
அது இந்த யென்மத்தில் நடக்காது
வல்லரசுக்கனவும் தான்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 61
 
தாயகத்தின் இன்றைய அரசியல்வாதிகளின் பாதை
 
குடை பிடித்தல்
காலில் விழுதல்
பாதுகாப்பு கெடுபிடி செய்தல்
அதையும் தாண்டி
வாகனங்களில் பொய் சொல்லி மக்களை அழைத்து வந்து கூட்டம் முடிய நடுவீதியில் விடுதல்..
 
எங்கே போகின்றோம்???
நாம் கனவு கண்ட தேசம் என்ன???
எதை நோக்கிப்போகின்றோம்?
மக்களை எந்தவழிக்கு பழக்குகின்றோம்??
தமிழக அரசியல்???
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 62
 
உள்ளுராட்சி தேர்தல் - தாயகம்
 
தாயக தேர்தல் சார்ந்து தெரிவுகளை செய்வதற்கு
அந்த மக்களுக்கே உரிமையுண்டு.
அது அவர்களின் கைகளில்.
 
தாயக விடுதலை சார்ந்து உழைத்தவன்
அந்த உணர்வுடன் வாழ்பவன் என்ற ரீதியில்
தனியே கூட்டமைப்பை மட்டும் தொடர்ந்து பலப்படுத்துவது
சிங்களத்துக்கு இன்னும் சில காலத்துக்கு தமிழரை ஏமாற்றுவதற்கு
இடமளித்தாகிவிடும் என்ற பயமுண்டு.
 
எனவே இன்னுமொன்றை பலப்படுத்தி
சிங்களத்துக்கு ஒரு செய்தியை
தாயக மக்கள் சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குண்டு
 
இதுவரை நடந்த தேர்தல்களில்
தாயக மக்கள் சரியாகவே காய் நகர்த்தியுள்ளனர்.
இதையும் பார்க்கலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 63

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளும் எம்மவரும்...

கொஞ்ச இளசுகள் வென்றிருக்கு. கிளம்பிட்டனம் சில அதி அக்கறையாளர்கள்.
என்னைவிட கூட்டமைப்பு மீது அக்கறை கொண்டவர் எவருமில்லை.

ஆனால் தவறுகளை திருத்தணும். பார்க்கலாம் எனும் நிலையில் தமிழினம் இருக்க காலம் இடம் தராது.

புலிக்களைவு செய்தமை
இளைஞர்களை உள்வாங்க மறுத்தமை
ஒரு சிலரின் ஐனநாயகமற்ற தனி முடிவுகளுக்குள் தமிழினத்தின் தலைவிதியை ஒப்படைத்தமை

தாயக மக்களின் பயத்தையும் தீர்ப்பையும் 
புரிந்து கொண்டு கூட்டமைப்பு தனது தவறுகளை திருத்தி
அடுத்த தலைமுறையின் வரவை உள்வாங்கி
செயற்படணும். அதுவே எம் இனத்துக்கு இன்று தேவை. அதையே தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.
தாயக மக்கள் எப்பொழுதும் தெளிவாகவே வாக்களித்துள்ளனர். இம்முறையும் அப்படியே.

அப்புறம் மகிந்த சிங்களப்பகுதிகளில் வந்தது
எப்ப அவர் வராமலிருந்தார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

 

ஆனால் தவறுகளை திருத்தணும். பார்க்கலாம் எனும் நிலையில் தமிழினம் இருக்க காலம்

ஈ பி டி பி உடன் பேச்சுவார்த்தை நடக்குதாமே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்களது எண்ணங்களை  புரிந்து  கொள்ளாமல்

எதிரிக்கு  எதிரி  நண்பன்  என்ற  ரீதியில்

பேயுடனும்   கூட்டுச்சேரும்  தவறான  பாதை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 64
 
யாழ் மாநகரசபைக்கு
ஈபிடிபியுடன் கூட்டமைப்பு சமரசத்துக்கு வந்திருக்கிறது.
தமிழரசுக்கட்சியை பற்றி தெரிந்தவர்களுக்கு
இது ஆச்சரியமான விடயமில்லை.
ஆனால் இனி இந்தக்கூட்டுக்கு
சாணக்கியர்கள் சொல்லப்போகும்
அரசியல் பதில்களையும்
கடந்து போகணுமே என்பது தமிழினத்தின் விதி..
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 65
 
கமல் - ரஐனி = அரசியல் பிரவேசம்
 
 
கமலின் அவசர அரசியல் பிரவேசத்தை பார்த்தவர்களுக்கு
அவரது அவசர பிரவேசம் உறைத்ததோ இல்லையோ
இது ரஐனியின் வருகையை தடுக்கும் நடவடிக்கை என்பது மட்டும் புரிந்திருக்கும்.
 
இதைப்புரிந்து கொள்ள பெரிதாக ஒன்றும் தேவையில்லை
அமெரிக்க ரசிய அரசியலை புரிந்தாலே போதும்.
 
எங்காவது அமெரிக்கா
அவசரமாக முன்னேறுகிறது காலடி வைக்கிறது என்றால்
அது இன்னொருவரை தடுப்பதற்காகவே இருக்கும்.
அதே போல் ரசியாவும்.
 
இனி ரஐனியின் அரசியல் பிரவேசம்?????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி விசுகு இப்படி ........!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 66
 
எல்லாவற்றிற்கும் ஒருவிலை இருக்கு???
 
 
கனடிய பிரதமரின் பெருந்தன்மை கண்டு
இந்தக்கிழமை ஒரே அவரது புகழ்பாடுதல் தான் நடக்கிறது.
ஆனால் போரை செய்கின்ற அமெரிக்காவின் வாலில் தொங்கியபடி தான் கனடா இன்றும் உள்ளது.
போரை நிறுத்தும் அளவுக்கு கனடா வலுவான வல்லரசு தான்.
ஆனாலும் பிரதமர் கண்ணீர்வடித்தபடி
இந்தப்போரில் என் கை சுத்தம் என்பது போல் கை கழுவுகிறார் என்று தான் தோன்றுகிறது.
 
கனடாவில் 25 ஆயிரம் பேரை குடியேற்றுவதென்பது
கனடாவுக்கே தேவையானது. அது வேற விடயம்.
 
முள்ளிவாய்க்கால் நடந்து கொண்டிருந்தபோது
லட்சக்கணக்கான தமிழர்கள் கனடாவின் வீதியெங்கும் திரண்டு அழுத போது வராத பாசம்
இன்றும் கதறக்கதற ஒரு சில ஈழத்தமிழர்களை
அவர்களது விருப்பத்துக்கு மாறாக
சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின்
ஆபத்தான பிரதேசம் என்ற கோரிக்கைகளையும் மீறி கனடா நாடு கடத்தியே வருகிறது.
 
இவற்றை பார்க்கும் போது
கனடிய பிரதமரின் எண்ணைய் மற்றும் பணபலம் கொண்ட அரபிய மக்கள் மீதான
பாசஅழுகை மற்றும் மீட்பு நடவடிக்கை என்பது
எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதையே மீண்டும் மீண்டும் எடுத்து இயம்புகிறது..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.2.2018 at 1:23 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 64
 
யாழ் மாநகரசபைக்கு
ஈபிடிபியுடன் கூட்டமைப்பு சமரசத்துக்கு வந்திருக்கிறது.
தமிழரசுக்கட்சியை பற்றி தெரிந்தவர்களுக்கு
இது ஆச்சரியமான விடயமில்லை.
ஆனால் இனி இந்தக்கூட்டுக்கு
சாணக்கியர்கள் சொல்லப்போகும்
அரசியல் பதில்களையும்
கடந்து போகணுமே என்பது தமிழினத்தின் விதி..
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், திருமணம் மற்றும் உட்புறம்
 
எல்லாரும் சந்தோசமாய் இருக்கினம். எல்லாம் சுபமே முடியும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 67
 
  பூனைக்கு விளையாட்டாம் - எலிக்கு.....???
 
 
சிரியாவுக்கு விமானம் போனதாம். அதில் தமிழ் விமானியாம்.
அவர் வீர புருசராம் என போய்க்கொண்டிருக்கிறது
எம்மவர் பொழுது போக்கு.
 
நாம் அல்லல் பட்ட
போரால் பாதிக்கப்பட்ட
கொடுக்கமுடியாத விலையையும் தியாகத்தையும்
செய்த இனமா? சந்தேகமாக இருக்கிறது.
 
அப்படி இருந்திருந்தால் அல்லல் படும் ஒரு மக்கள் கூட்டத்தின் இல்லல்களில்
இவ்வாறு
கேலிகளும் கிண்டல்களும் நகைச்சுவை விருந்துகளையும் வைக்கமுடியுமா?
 
நாம் உதவக்கூட வேண்டாம்
இவ்வாறு நகைப்புக்களையாவது தவிர்க்கலாமே????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 68

இலங்கை இசுலாமியத்தமிழர்கள் மீதான தாக்குதல்கள் பற்றி...

இலங்கை இசுலாமீய தமிழர்கள் 
தம்மை 
தமது ரத்தங்களை 
தமது உறவை இனம் கண்டிருந்தால்...
இன்று தமிழருக்கென்று ஒரு நாடிருந்திருக்கும்.

இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
சிங்களம் சொல்கிறது
யார் உனக்கு தேவையென்று
யார் உனக்கு பகைவன் என்று.

இதுவே உனக்கும்  எனக்கும் கடைசி சந்தர்ப்பம்1f625.png?

வா சகோ
வந்து சேர்
நாம் ஒன்றானால்.....???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படிமப்புரவு (Image Credit): சாத்திரி அவர்களின் "அவலங்கள்" என்ற வலைப்பூவிலிருந்து.    
    • Published By: RAJEEBAN   18 MAY, 2024 | 05:45 PM ஆயுதமோதலின் இறுதிநாட்களில் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற படுகொலைகளிற்கு நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கம் டெபனயர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிதருணங்களில்  கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களையும் இடம்பெற்ற பரந்துபட்ட மனித உரிமை மீறல்களையும் நாங்கள் இன்று நினைவுகூருகின்றோம் என என டிஜிட்டல் கலாச்சாரம் ஊடகம் விளையாட்டு நிழல் அமைச்சர் தங்கம் டெபனெயர் தெரிவித்துள்ளார். இன்று எனது சிந்தனைகள் தாங்கள் எதிர்கொண்ட அநீதிகள் காரணமாக தொடர்ந்தும் வேதனையுடன் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் அவர்களின் அன்புக்குரியவர்கள் குறித்து காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் என்பது எப்படி  இழந்தவர்களை நினைகூரும் நாளோ அதேபோன்று குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் நாள் என டிஜிட்டல் கலாச்சாரம் ஊடகம் விளையாட்டு நிழல் அமைச்சர் தங்கம் டெபனெயர் தெரிவித்துள்ளார். மோதல் முடிவிற்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கு 15 வருடங்கள் கிடைத்தன எனினும் அர்த்தபூர்வமான விசாரணையை அது  முன்னெடுக்காமல் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் மக்களிற்கு நீதியை வழங்குவது குறித்த உத்தரவாதங்களை நிறைவேற்ற தவறிவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் தமிழ் மக்களிற்கு ஆதரவை வழங்கவேண்டும் இலங்கை அரசாங்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.  யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவது தொடர்பான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது ஆராய்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/183895
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மே 2024, 04:07 GMT முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் சுவை மட்டுமின்றி சத்துகளும் நிரம்பியுள்ளது. மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு அதிகம். எனவே மாம்பழத்தை உண்ணும்போது, அது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்றும் பலர் கருதுகின்றனர். உண்மையிலேயே மாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா இதுகுறித்து மருத்துவர்களிடம் பேசினோம்... பட மூலாதாரம்,GETTY IMAGES மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் மாம்பழத்தில் பேரூட்டச் சத்துகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் நிறைய உள்ளன. கார்போஹைட்ரேட், புரதங்கள், அமினோ அமிலங்கள், லிப்பிடுகள் மற்றும் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது. மேலும், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துகளும் உள்ளன. 100 கிராம் மாம்பழம் சாப்பிடுவதால் 60-90 கலோரி ஆற்றல் கிடைக்கும். இது தவிர, மாம்பழத்தில் 75-85 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மாம்பழத்தில் கொழுப்பு இல்லை. நூறு கிராம் மாம்பழத்தில் இருக்கும் சத்துக்களின் பட்டியல்: தண்ணீர்: 83 கிராம் கலோரி : 60 கலோரிகள் (ஆற்றல்) மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) : 14.98 கிராம் புரதம்: 0.82 கிராம் நார்ச்சத்து : 1.6 கிராம் சர்க்கரை: 13.66 கிராம் கால்சியம்: 11 மி.கி இரும்பு: 0.16 மி.கி வைட்டமின் சி: 36.4 மி.கி   மாம்பழம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆமதாபாத்தை சேர்ந்த நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் மனோஜ் விதாலானி பிபிசியிடம் பேசுகையில், ``சர்க்கரை நோய் இருந்தால் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்பது முற்றிலும் கட்டுக்கதை. மாம்பழத்தில் உள்ள சர்க்கரைகள் பிரக்டோஸ் (Fructose) அதாவது எளிய பழச் சர்க்கரை வடிவில் உள்ளன. பழங்களில் உள்ள இயற்கையான `பிரக்டோஸ்’ உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. இருப்பினும், அவற்றை அதிகளவில் சாப்பிடக் கூடாது," என்று அவர் விளக்கினார். மாம்பழத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் (antioxidant) உள்ளன. பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவும். நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மாம்பழங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில், சர்க்கரை உறிஞ்சப்படும் செயல்பாட்டை மெதுவாக்குகிறது. இது கார்போஹைட்ரேட் ஓட்டத்தைச் சீராக்கி, ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உடலுக்கு உதவுகிறது. ஒரு உணவுப் பொருள் ரத்த குளுக்கோஸ் அளவை, உடனடியாக எந்த அளவிற்கு உயர்த்துகிறது என்பதைக் குறிக்கும் அளவீட்டை `சர்க்கரை உயர்த்தல் குறியீடு’ (glycemic index) என்போம். மாம்பழங்களில் மிதமான (Moderate) கிளைசெமிக் குறியீடு உள்ளது. எனவே மாம்பழங்களை அளவோடு உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் மிகவும் மெதுவாக ஜீரணிக்கப்படும். இதன் விளைவாக, உடலில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காமல் படிப்படியாக அதிகரிக்கிறது.   `சர்க்கரை உயர்த்தல் குறியீடு’ (கிளைசெமிக் இன்டெக்ஸ்) என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவர் மனோஜின் கூற்றுப்படி, ``கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது ஒரு உணவுப் பொருள், உடலின் சர்க்கரை அளவில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவைக் குறிக்கிறது. தாக்கத்தின் அடிப்படையில் உணவுப் பொருட்களுக்கு எண்கள் ஒதுக்கப்படும். இந்தக் குறியீட்டில் 0 முதல் 100 வரையிலான அளவீட்டு எண்கள் உள்ளன. 0 என்றால் ஒரு உணவு உடலில் சர்க்கரை அளவை பாதிக்காது. 100 மதிப்பெண் என்றால் அந்த உணவு ரத்த சர்க்கரை அளவை அதிக அளவில் உயர்த்துகிறது என்று அர்த்தம். கிளைசெமிக் இன்டெக்ஸ் 55 அல்லது அதற்குக் குறைவான உணவுகளை உண்பது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் இந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. மாம்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவீடு 51. எனவே இந்தப் பழங்கள் சாப்பிடுவதற்குப் பாதுகாப்பானது. இது ரத்த சர்க்கரையை அதிகம் உயர்த்தாது. இருப்பினும், ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும், மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீடு நடுத்தர (Moderate) அளவில் உள்ளது. இந்தக் குறியீட்டின்படி, அன்னாசி, தர்பூசணி, உருளைக்கிழங்கு, ரொட்டி போன்ற உணவுகள் 70க்கு மேல் அளவீடு பெற்றுள்ளது. அதாவது அவற்றைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்கும்.   நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழம் சாப்பிடலாம்? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் 'மாம்பழம் - நீரிழிவு நோய்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். இந்த ஆய்வறிக்கைப்படி, ``நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவற்றை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளனர். மருத்துவர் மனோஜ் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்கின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களது அறிவுறுத்தலின்படி, ஒரே நேரத்தில் அதிக மாம்பழங்களைச் சாப்பிட வேண்டாம். மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஒரு நாளைக்கு ஒருவர் 100-150 கிராம் அளவு மாம்பழம் சாப்பிடலாம் அல்லது ஒரு நாளைக்கு மூன்று முறை 50 கிராம் மாம்பழம் சாப்பிடலாம். பொதுவாக ஒரு நபரின் ரத்த சர்க்கரை அளவு, உணவுக்குப் பிறகு உயர்கிறது. உணவு உட்கொண்ட பிறகு மாம்பழம் சாப்பிடுவது சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கும். எனவே உணவு சாப்பிட்ட உடனே மாம்பழம் சாப்பிட வேண்டாம். சிற்றுண்டிகள் சாப்பிடும் வேளையில், மாம்பழங்களை சிற்றுண்டியாக உண்ணலாம். மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீட்டை மேலும் குறைக்க நார்ச்சத்து நிறைந்த பிற உணவுகளுடன் மாம்பழங்களைச் சேர்த்துச் சாப்பிடுமாறு ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது மாம்பழத்தை, பீன்ஸ் மற்றும் தானியங்களுடன் சேர்த்து கலவையாக (salad) சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான வேகம் குறையும். மெதுவான செரிமானம் நமக்கு முழு உணவை உட்கொண்ட உணர்வை கொடுக்கும். மேலும், நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாது.   'பழச்சாறாகப் பருக வேண்டாம்' பட மூலாதாரம்,GETTY வழக்கமாக நாம் ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம்தான் சாப்பிடுவோம். ஆனால் பழச்சாறாக மாம்பழத்தை உட்கொள்ளும்போது, 2 அல்லது 3 பழங்கள் மற்றும் சர்க்கரையும் சேர்க்கப்படும். எனவே, ஜூஸ் வடிவில் உட்கொள்ளாமல், பழமாக துண்டுகளாக வெட்டி உண்ணுங்கள். பழத்துண்டுகளை சாப்பிடுவதால், அதிகமாகச் சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தைச் சாப்பிடும்போது கலோரி அளவு மற்றும் கிளைசெமிக் அளவை மனதில் கொள்ளுங்கள். இந்தியாவில் 1000 வகையான மாம்பழங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் மாம்பழம் மிக முக்கியமான பயிர் வகையாகப் பார்க்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியா 21.79 மில்லியன் மெட்ரிக் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் 1000 வகையான மாம்பழங்கள் விளைகின்றன. ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், பிகார், கர்நாடகா, குஜராத் மற்றும் தெலங்கானா ஆகியவை மாம்பழம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்கள் ஆகும். (குறிப்பு - இந்தக் கட்டுரை விழிப்புணர்வுக்காக மட்டுமே. சந்தேகம் இருந்தால் மருத்துவர்களை அணுகவும்.) https://www.bbc.com/tamil/articles/cy0l8nyek9no
    • மாட்டு இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று ஒரு குழு போராட்டம் நடத்துகின்றனர். பசு வதை செய்பவர்களை தலை கீழாக கட்டித் தொங்க விடுவோம் என்று அமித்ஷா அந்தப் பக்கம் முந்தாநாள் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கின்றார். வேள்வி அன்று கோயிலுக்கு போய் பார்த்தேன். சின்ன சின்ன கிடாய் ஆடுகளே ஒரு இலட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலே. இந்த நிலையில், கொத்துக் கடைக்காரர்களிடம் 'என்ன, கொத்தில இறைச்சியையே காணல்ல...' என்று முறைத்தால், அவர்களும் தான் என்ன செய்யிறது? அதிகமாக கண்ணில் படுவதை பிடித்து அடிக்கின்றார்கள் போல. ஒவ்வொரு ஒழுங்கையிலும் எவ்வளவு என்கிறீர்கள்.......கூட்டம் கூட்டமாக நிற்கின்றன........எங்களைப் பார்த்து முறைத்த படியே.
    • கட்டுரை தகவல் எழுதியவர், கோர்டன் கோரேரா பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனா மீது கவனம் செலுத்த வேண்டும் என்று மேற்குலகத்தைச் சேர்ந்த நாடுகள் நீண்ட காலமாகவே பேசி வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம், பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையக(GCHQ) உளவு முகமையின் தலைவர், “இது ஒரு சகாப்தத்தின் சவால்” என்று விவரித்துள்ளார். மேற்குலக நாடுகளில் சீனாவுக்கு ஆதரவாக உளவு பார்த்தல் மற்றும் ஹேக்கிங் செய்வதாக பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஹாங்காங் உளவு முகமைகளுக்கு உதவி வருவதாக பிரிட்டனில் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமையன்று சீன தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது பிரிட்டன் வெளியுறவுத்துறை. அதிகாரம் மற்றும் செல்வாக்கு விஷயத்தில் சீனா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையில் போட்டி நிலவி வரும் நிலையில், அது பொதுவெளிக்கு வந்துள்ளதற்கான அறிகுறியே இந்த கைதுகள். அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் சீனாவை பின்னுக்கு தள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. ஆனால், மூத்த அதிகாரிகள் மேற்கு நாடுகள் சீனாவின் சவாலை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், உளவுத்துறை சார்ந்து பின்தங்கிவிட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். இது மேற்கு நாடுகளில் சீன உளவு அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாகவும், இரு தரப்பிலும் தீவிரமான தவறுகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், இப்போது வரையிலும் அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த மேற்குநாடுகள் போராடின வருகின்றன. ஒரு புதிய சர்வதேச ஒழுங்கை உருவாக்க முயற்சித்துவரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உறுதியே மேற்கத்திய அதிகாரிகளை கவலை கொள்ள செய்துள்ளது. பிபிசியின் புதிய சீனா - மேற்கு நாடுகள் என்ற தொடருக்காக பிரிட்டனின் வெளிநாட்டு உளவு முகமையான எம்ஐ6 அமைப்பின் தலைவர் சர் ரிச்சர்ட் மூர் அளித்த அரிதான பேட்டி ஒன்றில், “ சீனா உலகின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் அமெரிக்காவின் இடத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறது” என்றார். என்னதான் சீனா குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், இப்போது வரையிலும் அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த மேற்கு நாடுகள் போராடி வருகின்றன. மேற்குலக நாடுகளின் கவனம் இதர பிரச்னைகளில் இருந்த வேளையில், உலகின் முக்கிய சக்தியாக சீனா உருவெடுத்தது என்று கூறுகிறார் எம்ஐ6 அமைப்பின் இரண்டாம் நிலை தலைவராக இருந்த நைகல் இன்க்ஸ்டர். இவர் 2006ஆம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து ஓய்வு பெற்றார். 2000களில் பெய்ஜிங் உலக அரங்கில் தன்னை உயர்த்துவதில் மும்முரமாக இருந்த வேளையில், மேற்கத்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் சிந்தனையும், உளவுத்துறைகளின் கவனமும், ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் இராணுவ தலையீடுகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா சைபர் உளவு மூலமாகவும், அல்லது நிறுவனங்களில் நேரடியாக ஆட்களை ஊடுருவ செய்வதன் மூலமாகவும் உளவு பார்ப்பதாக மேற்குலக உளவு அமைப்புகள் கூறுகின்றன. சமீபத்தில், மீண்டும் எழுச்சி பெற்றுள்ள ரஷ்யா மற்றும் இஸ்ரேல்-காஸா போர் உலகிற்கு கூடுதல் அவசர சவால்களாக தோன்றியுள்ளன என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், சீனா ஏற்படுத்தும் பாதுகாப்பு அபாயத்தை விட, அதன் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்தும் வாய்ப்பை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து அழுத்தம் உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் தங்கள் உளவுத்துறை தலைவர்கள் அடிக்கடி சீனாவை பற்றி குறிப்பிட வேண்டாம் என்று விரும்புகின்றனர். வணிக நிறுவனங்களும் கூட தங்கள் ரகசியங்கள் குறிவைக்கப்படுவதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. "பொருளாதாரம் மற்றும் வணிக நலன்களின் திசையில்தான் காற்று வீசும்" என்கிறார் நைகல் இன்க்ஸ்டர். ஏற்கனவே 2000 களில் தொழில்துறை சார்ந்த உளவுப்பணியில் சீன உளவுத்துறை ஈடுபட்டிருந்தது என்று கூறும் அவர், அப்போதும் மேற்கத்திய நிறுவனங்கள் அமைதியாகவே இருந்தன என்கிறார். "அதை எதிர்ப்பது அல்லது வெளிப்படுத்துவது சீனாவின் சந்தைகளில் தங்கள் நிலையை பாதிக்கும் என்ற அச்சத்தில் அவர்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்ப விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார். மேற்குலகின் பாணியில் இருந்து சீனா வேறு மாதிரியான பாணியில் உளவு பார்ப்பது மற்றொரு பெரிய சவாலாக உள்ளது. இது அதன் செயல்பாட்டை அடையாளம் காண்பதையும், எதிர்கொள்வதையும் கடினமாக்கியுள்ளது. முன்னாள் மேற்குலக உளவாளி ஒருவர், ஒருமுறை சீனா "தவறான வகையில்" உளவு பார்ப்பதாக சீனப் பிரதிநிதி ஒருவரிடம் கூறியதாகக் தெரிவித்தார். அதாவது, மேற்கத்திய நாடுகள் தங்கள் எதிரிகளைப் புரிந்துகொள்ள உதவும் வகையான உளவுத்தகவல்களை சேகரிப்பதில் கவனம் செலுத்த விரும்புகின்றன. ஆனால் சீன உளவாளிகளுக்கு அதில் வெவ்வேறு முன்னுரிமைகள் உள்ளன. எஃப்.பி.ஐ.-இன் எதிர்உளவு அதிகாரி ரோமன் ரோஜாவ்ஸ்கி கூறுகையில், "ஆட்சியின் நிலைத்தன்மையே அவர்களின் முதல் குறிக்கோள்" என்று விளக்கினார். அதற்கு பொருளாதார வளர்ச்சியை தருவது அவசியமாகும். எனவே சீனாவின் உளவாளிகள் மேற்கத்திய தொழில்நுட்பத்தைப் பெறுவதை ஒரு சிறந்த தேசிய பாதுகாப்புத் தேவையாகக் கருதுகின்றனர். பெய்ஜிங் உளவாளிகள் தாங்கள் சேகரித்த தகவல்களை சீன அரசு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாக மேற்கத்திய உளவாளிகள் கூறுகிறார்கள். ஆனால், மேற்குலக உளவுத்துறை முகமைகள் தங்கள் சொந்த உள்நாட்டு நிறுவனங்களுடன் அவற்றை பகிர்ந்து கொள்வதில்லை.   பட மூலாதாரம்,FBI படக்குறிப்பு,கடந்த அக்டோபரில் முதன்முதலாக கலிபோர்னியாவில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஃபைவ் ஐஸ் உளவுத்துறை-பகிர்வு கூட்டணியின் கூட்டம் வெளிப்படையாக நடந்தது. ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பின் (ASIO) தலைவரான மைக் பர்கெஸ், "எங்கள் 74 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை நாங்கள் இருந்ததை விட எங்களது நிறுவனம் தற்போது மிகவும் பிஸியாக உள்ளது" என்று என்னிடம் கூறினார். "நான் இதர நாடுகளை மிகவும் அரிதாகவே குறிப்பிட்டு அவர்கள் உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறேன். காரணம் உளவு என்று வரும்போது நாங்களும் அவர்களுக்கு அதையேதான் செய்கிறோம்” என்று கூறுகிறார் பர்கெஸ். "வணிக உளவு பார்ப்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம், அதனால்தான் சீனா இந்த விஷயத்தில் சிறப்பு கவனத்தை பெறுகிறது." மேற்கத்திய நட்பு நாடுகள் இந்த அச்சுறுத்தலைப் புரிந்துகொள்வதில் தாமதம் காட்டியுள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார். "இது நீண்ட காலமாக நடந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன், கூட்டாக நாங்கள் அதை தவறவிட்டு விட்டோம்," என்று அவர் ஒப்புக்கொள்கிறார். கடந்த அக்டோபரில் முதன்முதலாக கலிபோர்னியாவில் வெளிப்படையாக நடந்த அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஃபைவ் ஐஸ் என்று அழைக்கப்படும் உளவுத்துறை-பகிர்வு கூட்டணியின் பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்தில் நான் இருந்தேன். ஒரு அசாதாரண நிகழ்வாக, இந்த ஐந்து நாடுகளின் உளவுத்துறை தலைவர்களும் வெளிப்படையாக சீனா மேற்கொண்டு வரும் வணிக உளவு குறித்து எச்சரிக்கை விடுத்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த கூட்டம், சீனா குறித்த எச்சரிக்கைகளின் அளவை அதிகரிப்பதற்கான மிகவும் திட்டமிட்ட முயற்சியாகும். காரணம் இன்னமும் பல நிறுவனங்களும் அமைப்புகளும் இந்த எச்சரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்ற அச்சம் உள்ளது. இதற்காக சிலிக்கான் வேலி தேர்வு செய்யப்பட்டதும் கூட காரணத்துடன் முடிவு செய்யப்பட்டதே. டெக் நிறுவனங்கள் நிறைந்த அந்த பகுதியில் , சைபர் உளவு மூலமாகவும், நிறுவனங்களில் ஆட்களை ஊடுருவ செய்வதன் மூலமாகவும் தொழில்நுட்பத்தை திருடும் சீனாவின் செயல் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த செயல்களுக்கான சீனாவின் ஆதாரங்கள் வேறு அளவில் உள்ளன. ஒரு மேற்கத்திய உளவுத்துறை அதிகாரியின் தகவலின்படி, சீனாவில் உளவு மற்றும் பாதுகாப்புத் துறையின் கீழ் சுமார் 6,00,000 பேர் பணிபுரிவதாக மதிப்பிட்டுள்ளார். இது உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகம்.   மேற்கத்திய பாதுகாப்பு சேவைகள் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக விசாரிக்க முடியாது. பிரிட்டிஷ் உளவுத்துறை நிறுவனமான எம்ஐ6 கூற்றுப்படி, பிரிட்டனில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்டவர்கள், சீன உளவாளிகளால் லிங்க்டு-இன் போன்ற தொழில்முறை நெட்வொர்க்கிங் தளங்கள் வழியாக உறவுகளை வளர்ப்பதற்காக அணுகப்பட்டுள்ளனர். "அவர்கள் உண்மையில் வேறொரு நாட்டைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தின் எதிர்காலத்தையே அழிக்கக் கூடிய தகவல்களைக் அவர்களுக்கு பகிர்ந்துகொண்டிருப்பார்கள்" என்று எம்ஐ5 - இன் தலைவர் கென் மெக்கலம் கலிபோர்னியா கூட்டத்தில் என்னிடம் கூறினார். சீனா உள்நாட்டு கண்காணிப்பில் கவனம் செலுத்தும் அதே வேளையில், வெளிநாட்டில் அதன் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்தை மட்டுப்படுத்தவும் அதன் உளவாளிகளை பயன்படுத்துகிறது. சமீபத்தில், மேற்கத்திய அரசியலை குறிவைத்து இயங்கி வந்த சீன உளவாளிகள் பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவில் விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சீனாவின் "வெளிநாட்டு காவல் நிலையங்கள்" இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேற்கு நாடுகளில் உள்ள சீன அதிருப்தியாளர்களைப் கண்காணிப்பதற்காக, பெய்ஜிங்கின் உளவுத்துறை அதிகாரிகள் பொதுவாக உளவாளிகளை களத்தில் நேரடியாக பயன்படுத்துவதை விட, தனியார் புலனாய்வாளர்களை பணியமர்த்துவது அல்லது அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது போன்று தொலைதூரத்தில் இருந்தே செயல்படுகிறார்கள் என்று கூறுகின்றனர் பாதுகாப்பு அதிகாரிகள். உண்மையில், 2000களின் முற்பகுதியில் பிரிட்டன் அரசாங்க அமைப்புகளை இலக்காகக் கொண்ட முதல் இணைய நிகழ்வுகள் ரஷ்யாவிலிருந்து அல்ல, சீனாவிலிருந்து வந்தவை. அவை திபெத்திய மற்றும் உய்குர் குழுக்கள் போன்ற வெளிநாட்டு எதிர்ப்பாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டவை. அரசியல் தலையீடுகள் பற்றி கவலைப்படுவதில் தற்போது ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து, தேர்தல்களில் வேட்பாளர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்டறியத் தொடங்கியதாக ASIO அமைப்பு கூறுகிறது. "அவர்கள் இங்கு தங்கள் விருப்பங்களை புகுத்த முயற்சிக்கிறார்கள், அதை செய்வதற்கு திறன் படைத்தவர்களும் கூட. அவர்கள் அதை மறைமுகமான வழிகளில் செய்வதை நாங்கள் விரும்பவில்லை" என்று மைக் பர்கெஸ் பிபிசியிடம் கூறினார். இதை எதிர்கொள்ளும் வகையில், 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா புதிய சட்டங்களை இயற்றியது.   படக்குறிப்பு,பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்டின் லீ ஜனவரி 2022 இல், பெய்ஜிங்கின் விருப்பங்களை முன்னெடுப்பதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்டின் லீ பல பிரிட்டிஷ் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதாகக் குற்றம் சாட்டி எம்ஐ5 ஒரு அசாதாரண எச்சரிக்கையை வெளியிட்டது. அவர் தற்போது எம்ஐ5க்கு எதிராக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் தான் பிரிட்டன் ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இது வெளிநாடுகளின் தலையீடு மற்றும் பிற செயல்பாடுகளைச் சமாளிக்க புதிய அதிகாரங்களை வழங்கியது. ஆனாலும் , இவை தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். சீனா மேற்குலகை உளவு பார்ப்பது போலவே, மேற்குலகமும் சீனாவை உளவு பார்க்கிறது. ஆனால் எம்ஐ6 மற்றும் சிஐஏ போன்ற மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளுக்கு சீனாவில் உளவுத்தகவலை சேகரிப்பது தனித்தன்மை வாய்ந்த சவாலாக உள்ளது. நாட்டிற்குள் கண்காணிப்பின் பரவலான தன்மை, டிஜிட்டல் கண்காணிப்பு உள்ளிட்டவை மனித நுண்ணறிவின் பாரம்பரிய மாதிரி - உளவாளிகளை நேருக்கு நேர் சந்திப்பதை - கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆக்குகிறது. சீனா ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சிஐஏ உளவாளிகளின் பெரிய வலையமைப்பு ஒன்றை துடைத்தெடுத்தது. மேலும் தகவல் தொடர்புகளை இடைமறித்து டிஜிட்டல் நுண்ணறிவை சேகரிக்கும் பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமைக்கு தொழில்நுட்ப ரீதியாக இது கடினமான இலக்காகும். ஏனெனில் சீனா மேற்கத்திய தொழில்நுட்பத்தை விட, அதன் சொந்த தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது. "சீனாவின் பொலிட்பீரோ எப்படி சிந்திக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று ஒரு மேற்கத்திய அதிகாரி ஒப்புக்கொண்டார். இது புரிதலுக்கு வழிவகுக்கும் மற்றும் இது கடுமையான அபாயங்களைக் கொண்டுள்ளது. பனிப்போரில், மாஸ்கோ எவ்வளவு பாதுகாப்பற்றதாக உணர்ந்தது என்பதை மேற்கு நாடுகள் புரிந்து கொள்ளத் தவறிய காலங்கள் இருந்தன. இதன் விளைவாக இரு தரப்பும் விரும்பாத ஒரு பேரழிவுப் போரை நெருங்கின. தைவான் மீதான கட்டுப்பாட்டை மீட்பதற்கான சீனாவின் விருப்பத்தின் மீது, இன்றும் இதேபோன்ற தவறான கணக்கீடுகளின் அபாயங்கள் உள்ளன. தென் சீனக் கடலிலும் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அதிக இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்பு சமீபத்திய மாதங்களில் சூட்டைக் குறைத்திருந்தாலும், நீண்ட காலப் பாதை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறது. "நாம் வாழும் மிகவும் ஆபத்தான, போட்டி நிறைந்த இந்த உலகில், எப்போதும் மோதலைப் பற்றி கவலைப்பட வேண்டும், அதைத் தவிர்ப்பதற்கான பாதையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று எம்ஐ6 இன் தலைவர் சர் ரிச்சர்ட் மூர் என்னிடம் கூறினார். "குறிப்பாக நீங்கள் எப்போதும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத அதிகாரம் கொண்டிருக்கும்போது, எனது சேவை அங்குதான் வருகிறது." எம்ஐ6-இன் பணியே, சாத்தியமான அபாயங்கள் வழியாக செல்ல தேவையான உளவுத்தகவல்களை வழங்குவது என்று அவர் கூறுகிறார். "வரையறையின்படி தவறான புரிதல்கள் எப்போதுமே ஆபத்தானவை - உங்களிடம் தகவல் தொடர்புக்கான வழிகள் திறந்திருப்பதும், நீங்கள் போட்டியிடும் நபர்களின் நோக்கங்களைப் பற்றிய நுண்ணறிவு இருப்பதும் எப்போதும் சிறந்தது" என்கிறார் அவர். இது தகவல் தொடர்புக்கான வழிகள் திறந்திருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எம்ஐ6 உளவு ஸ்தாபனம், சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. தற்போது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சில ராணுவத் தொடர்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன என்ற உண்மை பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அதிக இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்பு சமீபத்திய மாதங்களில் சூட்டைக் குறைத்திருந்தாலும், நீண்ட காலப் பாதை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறது. உளவு பார்ப்பது பற்றிய அனைத்து வெளிப்பாடுகளும் இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களிடையே அவநம்பிக்கையையும் அச்சத்தையும் தூண்டுகிறது. இது நெருக்கடி நிலையில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பயணிப்பதற்கான வழியைக் கண்டறிவது, இருதரப்பு உறவின் மோதல் போக்கிலிருந்து விலகுவதற்கு இன்றியமையாத ஒன்றாகும். https://www.bbc.com/tamil/articles/c03dllppx7wo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.