Jump to content

யாயும் ஞாயும் - கவிதைகள்


Recommended Posts

யாயும் ஞாயும் - கவிதைகள்

ஓவியங்கள்: ரமணன்

 

p3.jpg

40p11.jpg

பழைய முகப்படக்காரி

ன் பழைய புகைப்படத்தை
பீரோவுக்குள்ளிருந்து கண்டெடுத்தவள்
புதையுண்ட இளமை கிடைத்தவளாய்
உற்றுப் பார்க்கிறாள்.

இப்போதில்லாத நீண்ட தலைமுடியின்
இரட்டை ஜடைப் பின்னலை
விரலால் தடவிப்பார்க்கிறாள்.

தொலைத்ததற்காய் அப்பாவிடம் அடிவாங்கிக்கொடுத்த
அசையாதிருக்கும் வலதுகாது ஜிமிக்கியை
விரலால் சுண்டிவிட்டுச் சிரித்துக்கொள்கிறாள்.

கடன்வாங்கி அணிந்திருந்த
தோழியின் நீலநிறத் தாவணியில்
நட்பின் வாசத்தை நுகர்கிறாள்.

`ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற புகைப்படக்காரன்
தவறவிட்டப் புன்னகையை
நினைவூட்டிக்கொள்கிறாள்.

அழுக்கேறிய தாலிக்கயிறு உரசி உண்டான
கருத்தத் தழும்புகள் அறியா கழுத்தினில்
மெல்லியத் தங்கச்சங்கிலி மினுங்கக் காண்கிறாள்.
 
பழைய முகத்தின் கன்னங்களை வருடி
ஏதோ ஒன்று தட்டுப்பட
பெருமூச்சோடு நலம் விசாரிக்கிறாள்.
`என்னடி நல்லாருக்கியா?’


- ந.கன்னியக்குமார்


40p3.jpg

பறவைகளாலான உயிர்க்கூடு

நின் நேசப் பார்வையை எதிர்கொண்ட
ஐப்பசி அடைமழையின் குளிர்தினமொன்றில்தான்
என்னுள் சிலீர் சிறகடித்தது
அழகு பொருந்திய முதல் தேன்சிட்டு.
தீராத ப்ரியங்கள் என்றென்றைக்கும் என்னிடம்
நெடும்பயணமொன்றின் பின்னிரவில் காதல் குறிப்புணர்த்த 40p2.jpg
என் கரங்களைத் தழுவிய நின் ஸ்பரிசத்திலிருந்து
பறந்து வந்தன குதூகல மைனாக்கள்.
யதேச்சையாக நெஞ்சு படபடக்கப் பகிர்ந்துகொண்ட
நம் முதல் முத்தத்தை நினைவுறுத்திக்
கிரீச்சிடும் பனங்காடைக்கு
உன்னைப்போலவே குறும்பு அதிகம்.
வெவ்வேறு பொழுதுகளின் ஊடல் நிமிடங்களைக்
கரைசேர்த்தக் கரிச்சான்குஞ்சுகளிடம்
அன்பைத் தவிர புகார் எதுவுமில்லை.
கடந்த சித்திரையின் வன்கோடை தினமொன்றில்
எதிர்பார்த்திராத நின் பிரிவின் அம்பு தைத்த
மாடப்புறாவுக்கான ஆறுதல்மொழி பயனற்று
சலசலக்கும் கழிவுநீராகுமென நினைத்தேனில்லை.
அமைதியின் சமநிலை கலங்கும் வண்ணம்
கூக்குரல்களின் ஓலம் அதிகமெடுத்த ஒருநாளில்,
இதயக்கூண்டுடைத்துப் பதறிச் சிதறும் சிறுபறவைகள்
உன் நினைவுகளாக இருந்ததைப்போலவே
என் உயிராகவும் இருந்தது.

 
- தர்மராஜ் பெரியசாமி


40p4.jpg

குடமுழுக்கின் குதூகலம்

காலியான குடத்தை உனது கைகளால்
அள்ளி நிரப்பும்போதும்
நிரம்பிய குடத்தைக் கைகளால் அளைந்து தூக்கிச் செல்லும்போதும் 
உனது விரல்கள்பட்டு விலகிச்செல்லும்
நதியில் கலந்திருப்பது
ஒரு குடமுழுக்குக்குப் பின்பான குதூகலம்.

நீ பின்னிவிட்டதாய்
என் தங்கை சொன்ன அன்று முழுவதும்
அவளது முதுகில் நிகழ்ந்துகொண்டிருந்தது
இடைவிடாத ஒரு நாட்டியாஞ்சலி.

சூடியபடி நீ சுற்றிவருவதைப் பார்க்கும்
உனது விரல்கள் பட்ட வெற்றுக்காம்புகளில்
முகிழ்த்திருப்பது
ஒரு மோனலிசா புன்னகை.

`பொட்டு எங்கடி?’ என்ற
உன் அம்மாவின் கேள்விக்கு
சட்டென நடுவிரலை நெற்றிக்கு மத்தியில் வைத்துத் தொட்டுப்பார்க்கிறாய்
பொட்டென ஒரு கணம் மின்னிமறைகிறது
அழகு மருதாணி பிறையொன்று.

வெள்ளை மாவில்தான்
கோலம் போட்டுச் செல்கிறாய்
மிதிக்காமல் தாண்டிச் செல்வோரின் மனங்களில்
உதிர்கின்றன வண்ணத் தோகைகள்.


- கே.ஸ்டாலின்


40p5.jpg

சாலை அருந்தும் காபி

நீ காபி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருக்கிறாய்
உன் குரல் கேட்டவுடனே
கொதிக்கும் தண்ணீரில் தாவிக் குதிக்கின்றன
காபித்தூளும் சர்க்கரையும்
நான் முந்தி நீ முந்தி என.
உன் மேஜைக்கு வந்த காபி தம்ளரிலிருந்தபடி
கவிதை வரிகள் நிறைந்த உன் உதடுகளை
கண்களை எடுக்காது பார்த்துக்கொண்டேயிருக்கின்றன
நீ எடுப்பாய் உதடு குவிப்பாயென.
சூடு தணியட்டுமென நீ அமர்ந்திருக்கும்
அவகாசம் பொறுக்காது அழத்தொடங்கிய
காபியின் கண்ணீர்த்துளிகளால்
சூடு தணிகிறது கொஞ்சம் கொஞ்சமாய்.
உன் உதடுகளை வாசித்த காபி
அங்கே வசிக்கவேண்டுமெனத் தவமிருக்கிறது
மின்விசிறிக் காற்றால் அழுகையைத் துடைத்தபடி.
உன் பட்டுக்கைகளால் தொட்டெடுத்து
அருந்தத் துவங்குகிறாய்
உதடுகளில் பட்டும்படாமல்.
தவமிருந்த காபி நினைத்த வரம் கிட்டாது
அழத் தொடங்குகையில்
நினைக்காத மோட்சம் பெறுகிறது
ஒரு பேரதிர்ஷ்டமென.
காபி அருந்திவிட்டு உணவகத்திலிருந்து
வெளியேறி சாலையில் நடக்கிறாய்.
உணவகம் சர்க்கரையற்ற காபியாகி
கசக்கத் தொடங்குகிறது.
இனி இனிப்பான காபியை
அருந்தத் தொடங்கும் சாலை.


- சௌவி


 

74p1.jpg

ஓவியம்: சிவபாலன்

காதல் ஆசீர்வாதம்

திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசிக்க‌
மகிழுந்தில் போய்க்கொண்டிருந்தோம்.
அத்துவானக் காட்டில் திடீரென
மகிழுந்தின் சக்கரம் கடைசி மூச்சை விட்டது.

மரத்தின் நிழலில்
தரிசன நேரத்தைப்பெற
என்ன செய்யலாமென்று
ஆலோசித்துக்கொண்டிருந்த
எங்களைச் சட்டைசெய்யாமல்
கடவுள் முன்சக்கரத்தின் மூச்சை சீராக்கிக்கொண்டிருந்தார்.
கடவுள் நம் காதலை இதைவிட
வேறு எப்படி ஆசீர்வதிக்க முடியும்?

- ராம்ப்ரசாத்


செளமியாவாகிய நான்…

சௌமியா’ என்பது என் பெயர்40p21.jpg
எனினும் வீட்டில் ‘சௌமி’ என்றழைப்பர்.
பள்ளிக்கூடத்தில் சௌமியா விஸ்வநாதன்
எனப் பெயர் பதிவுசெய்யப்பட்டது.
கல்லூரியில் முதலாமாண்டு 
இறுதித் தேர்வின் போதிலிருந்தே
`சௌ’ என்றுதான் அழைத்தார்கள்.
வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து
`எஸ்.வி’ எனப் பெயரின் முதலெழுத்தானேன்.
`அழகி’ `அம்மு’ `செல்லம்’ என
அப்போதைய மனநிலையில்
பெயர் வைத்துக்கொள்ளும் கணவன்,
உயர்திணைக்கும் அஃறிணைக்கும்
இடைப்பட்ட ஒன்றாய்
`இந்தாரு’ என்று அழைக்கும்போது
நான் கங்காருக் குட்டியாகிறேன்
அவன் மடியில்.

- ஆண்டன் பெனி


இதுவும் ஒரு காதல் கதைதான்

நிலையத்திலிருந்து கிளம்ப
அரை மணி இருக்க
காலிப் பேருந்தின் கடைசி இருக்கையில்
ஜோடியொன்று ஒருவருக்கொருவர்
இதழ்களைக் கவ்வியிழுத்திருந்தனர்

அவள் கண்கள் மூடியிருக்க
வேவு பார்த்தபடி மருகி உருண்டுகொண்டோடும்
அவன் கண்களில் என் நிழல் விழ
பதறிப் பிரிந்தனர்

மார்கழியில் பிணைந்துதிரியும் நாய்களுக்கும்
தொந்தரவு தராது நடக்கும் எனக்கா
இந்தப் பழி பாவம்?

திரும்பிப் பார்க்காது உடனிறங்கி
கிளம்ப முக்கால் மணியிருக்கும்
பேருந்தில் மாறிக்கொள்ள யத்தனித்து
பின்வாசல் ஏறுகிறேன்

அதுவும் காலியாகக் கிடக்க
எனக்கு முன் ஏறிய அதே ஜோடி
முன்னிருக்கையில் சரிந்தமர்ந்து
அவசரகதி ஆயத்தமாகின்றனர்

கடவுள் இன்று என்னைக்
கல்லை எடுக்கவைக்காமல்
ஓய மாட்டார் போலும்.

- ஸ்டாலின் சரவணன்

http://www.vikatan.com

15fe

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார் நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்.................... அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை  கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................
    • தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை. இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது. முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள். வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.  
    • இப்படி ஒரு நல்லவர் இலங்கை அரசியலில் இருந்ததை அவர் மறைவுக்கு பின் யாழ்களம் படிந்து அறிகிறேன் அஞ்சலிகள்.
    • நன்றி  "பத்தினி தெய்வோ கண்ணகியை வணங்கி  உத்வேகம் கொள்ளும் இலங்கைத் தீவில்  யுத்தமென்ற ஒரு போர்வையை சாட்டாக்கி  கொத்துக் கொத்தாய் பாலியல் வல்லுறவு எத்தனை ?" "பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு  மண்டபம் அதிர சலங்கை உடைத்து  உண்மை நாட்டினாள் அன்று, இன்றோ   கண்ணீர் அபலையாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் ?"  
    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.