Jump to content

அனலைதீவைச் சேர்ந்த இருவர் நேற்றிரவு கைது


Recommended Posts

யாழ்ப்பாணம் நல்லூரில் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் கைது!

 
யாழ்ப்பாணம் நல்லூரில் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் கைது!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பின் வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் சம்மந்தப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் காரியாலயத்துக்குக் கொண்டு சென்று பொலிஸ் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் மாலையில் நல்லுர் கோவிலின் பின் வீதியில் இரு இளைஞர்கள் கைகலப்பில் ஈடுபட்டபோது வீதித் தடை ஏற்பட்டது. அதே நேரம் அவ்வழியால் வந்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாவலர்களில் ஒருவர் வீதித்தடையை விலக்குவதற்காக குறித்த இளைஞர்களுக்கு அருகில் சென்றுள்ளார். உடனே அவ்விளைஞர்களில் ஒருவர் குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கைத் துப்பாக்கியைப் பறித்து மற்ற இளைஞனை நோக்கிக் குறிபார்த்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த இளைஞனிடமிருந்து துப்பாக்கியைப் பறிப்பதற்கு முயன்றுள்ளார். இந்த இழுபறி தொடர்ந்த நிலையில் அவ்விடத்தில் சரமாரியான வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அவற்றின் காரணமாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மேற்கையில் சன்னம் பாய்ந்தது.

பின்னர் நீதிபதியின் மற்றுமொரு காவலரின் துப்பாக்கிப் பிரயோகத்தினையடுத்து குறித்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இவரைத் தேடும் நடவடிக்கைகள் பொலிஸாராலும் விசேட அதிரடிப்படையினராலும் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இரவு வேளையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Gunfire-in-Jaffna-Nallur

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோயோ உதைக்குதே.

இந்த நீதிபதி விசாரிக்கும் வித்தியா கொலை சந்தேகநபர்களும் புங்குடுதீவு தானே...
 

Link to comment
Share on other sites

அன­லை­தீ­வைச் சேர்ந்த இரு­வர் நேற்­றி­ரவு கைது

 
அன­லை­தீ­வைச் சேர்ந்த  இரு­வர் நேற்­றி­ரவு கைது
 

மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் அன­லை­தீ­வைச் சேர்ந்த இரு­வர் நேற்­றி­ரவு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கோப்­பா­யில் 2011ஆம் ஆண்டு வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தேக நபர் ஒரு­வரே, நீதி­பதி மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தி­லும் தொடர்­பு­பட்­டி­ருக்­கின்­றார் என்று பொலி­ஸா­ரின் முதல் கட்ட விசா­ர­ணை­க­ளில் தெரிய வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து அன­லை­தீ­வில் சிறப்­புப் பொலிஸ் பிரிவு கள­மி­றக்­கப்­பட்­டுத் தேடு­தல் நடத்­தப்­பட்­டது. சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

சாட்­சி­யம்
இதே­வேளை சம்­ப­வத்தை நேரில் கண்­ட­தா­கத் தெரி­வித்து ஒரு­வர் பொலி­ஸா­ருக்­குச் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார். அந்­தச் சாட்­சி­யத்­தில், துப்­பாக்­கி­தா­ரி­யின் இலக்கு பொலி­ஸாரோ, நீதி­ப­தியோ இல்லை என்­றும் வேறு ஒரு நபரே இலக்கு என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார். அந்த இலக்கு வைக்­கப்­பட்ட மற்­றைய நபர் யார் என்று தெரி­யாது என­வும், அவர் தப்­பிச் சென்­று­விட்­ட­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

 

http://uthayandaily.com/story/13193.html

Link to comment
Share on other sites

நல்லூர் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார் ?

IMG_8705.jpg

யாழ்.நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டு உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
நல்லூர் பின் வீதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று இருந்தது. அதில் யாழ்.மேல் நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர் ஒருவர்  உயிரிழந்ததுடன் , மற்றுமொரு மெய் பாதுகாவலர் காயமடைந்துள்ளார்.
 
துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார்.
 
குறித்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடாத்திய துப்பாக்கிதாரியை  நாம் அடையாளம் கண்டு உள்ளோம் , துப்பாக்கிதாரி புங்குடுதீவு நாலாம் வட்டாரத்தை சேர்ந்தவர்.  அவர் மீது கொலை வழக்கு ஒன்று நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அனலைதீவை சேர்ந்தவர்கள் கைது. 
 
அதேவேளை நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் அனலைதீவை சேர்ந்த இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 
நீதிபதியின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்தே சுட்டார். 
 
நீதிபதியின் வாகனத்திற்கு முன்னே வீதி ஒழுங்கு நடவடிக்கைளை முன்னெடுத்து நீதிபதியின் மெய் பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்தர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அதன் போது யாழ் – பருத்தித்துறை வீதியும், கோவில்  வீதியும் சந்திக்கும் சந்தியில் வீதியில் இறங்கி வீதி ஒழுங்குகளை மேற்கொண்டு உள்ளார்.
 
அதன் போது மதுபோதையில் அங்கிருந்த நபர் ஒருவருக்கும் , குறித்த பொலிஸ் உத்தியோகச்தருக்கும் இடையில் முரண்பாடு தோன்றி அவர்கள் இருவரும் முரண்பட்ட வேளையில் திடீரென பொலிஸ் உத்தியோகஸ்தரின் இடுப்பு பட்டியில் இருந்த கைத்துப்பாக்கியை மதுபோதையில் நின்ற நபர் எடுத்துள்ளார்.
 
அதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் , மதுபோதையில் நின்ற நபரிடம் இருந்து கைத்துப்பாக்கியை மீள பறிக்க முயன்ற போதே அந்நபர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்.
 
அதில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்தார். அதனை தொடர்ந்து அந்நபர் வீதியில் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். இவ்வாறாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நீதிபதியின் 17 வருட மெய்பாதுகாவலர்.
 
இதேவேளை நேற்றைய சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஹேமசந்திர (வயது 58) என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மெய்பாதுகாவலர் நீதிபதியின் மெய்பாதுகாவலராக கடந்த 17 வருடங்கள் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/33819

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.