Jump to content

நல்லிணக்க செயன்முறைகளின் போக்கு; சர்வதேச சமூகத்தின் விசனம் கலாநிதி ஜெஹான் பெரேரா


Recommended Posts

நல்லிணக்க செயன்முறைகளின் போக்கு; சர்வதேச சமூகத்தின் விசனம்

 

கலாநிதி  ஜெஹான் பெரேரா

 

ஐக்­கிய நாடுகள் விசேட அறிக்­கை­யாளர் பென் எமர்­சனின் அண்­மைய இலங்கை விஜ­யமும் அதன் இறு­தியில் கொழும்பில் செய்­தி­யா­ளர்கள் மா­நாட்டில் அவர் வெளி­யிட்ட கருத்­துக்­களும் நல்­லி­ணக்கச் செயன்­மு­றைகள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வைக்கு அளித்த உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­கின்ற விவ­கா­ரத்தில் இலங்கை அர­சாங்­கத்தின் போக்கு குறித்து சர்­வ­தேச சமூ­கத்தின் நிலைப்­பாடு கடு­மை­ய­டைந்து வரு­வதை வெளிக்­காட்­டி­யி­ருக்­கின்­றன. பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கை­க­ளின்­போது மனித உரி­மை­க­ளையும் அடிப்­படைச் சுதந்­தி­ரங்­க­ளையும் மேம்­ப­டுத்திப் பாது­காத்தல் தொடர்பான விசேட அறிக்­கை­யா­ளரே எமர்சன்.2015 அக்­டோபர் மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்தின் கீழ் அளித்த உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வ­தற்கு இலங்கை தவ­றினால் ஐ.நா. பாது­காப்புச் சபைக்குப் பாரப்­ப­டுத்­து­வது உட்­பட பல நட­வ­டிக்­கை­க­ளுக்கு முகங்­கொ­டுக்­க­வேண்­டி­வரும் என்று அவர் கூறி­யி­ருக்­கிறார். போர்க் குற்­றங்­களைச் செய்­த­வர்கள் நீதியின் முன் நிறுத்­தப்­ப­டு­வ­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்­ப­தற்­கான சான்­று­களைக் காணக்­கூ­டி­ய­தாக இல்லை என்று அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். அத்­துடன் அவரின் அபிப்­பி­ரா­யத்­தின்­படி  ஏற்­கனவே முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்கக் கூடிய  சில நல்­லி­ணக்கச் செயன்­மு­றை­களும் கூட நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. நாடுகள் ஐ.நா.வுக்கு உறு­தி­மொ­ழி­களை அளித்­து­விட்டு பிறகு அவற்றை நிறை­வேற்­றாமல் விட­லா­மென்றால் அது ஐ.நா. ஒழுங்கு முறையின் நம்­ப­கத்­தன்­மையைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­விடும்.

ஜெனிவாவில் மனித உரி­மைகள் பேர­வையில் 2015 அக்­டோ­பரில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் எடுத்த முடிவு ஒரு கொள்கை நகர்வின் வெளிப்­பா­டாகும்.அந்த நகர்வு சர்­வ­தேச சமூ­கத்­து­டனும் உள்­நாட்டில் தமிழ் அர­சியல் சமு­தா­யத்­து­டனும் கொண்­டி­ருந்த முரண்­நி­லையில் இருந்து அர­சாங்­கத்தை விடு­வித்­தது. ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான முன்­னைய அர­சாங்கம் மேற்­கு­லக நாடுகள் தலை­மை­யி­லான சர்­வ­தேச சமூ­கத்தை எதி­ரி­யாக நடத்­தத்­தொ­டங்­கி­ய­துடன் உள்­நாட்டுப் போரின் முடி­வுக்குப் பின்­னரும் கூட தமிழ் மக்­களைச் சந்­தே­கக்கண் கொண்டே நோக்­கி­யது.ஆனால் 2015 ஆட்சி மாற்­றத்தை அடுத்து சர்­வ­தேச சமூ­கத்­து­டனும் தமிழ் அர­சியல் சமு­தா­யத்­து­ட­னு­மான அர­சாங்­கத்தின் உற­வு­முறை உட­ன­டி­யா­கவே ஒரு ஆரோக்­கி­ய­மான நிலைக்குத் திரும்­பி­யது.ஐ.நா.வுக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் அளித்த உறு­தி­மொ­ழி­களைக் காப்­பாற்ற அர­சாங்கம் தவ­றி­யி­ருக்­கின்ற போதிலும் இடம்­பெற்­றி­ருக்­கின்ற கொள்கை நகர்வை கணக்­கி­லெ­டுக்கத் தவ­றக்­கூ­டாது.

2015 ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்தில் அர­சாங்­கத்­தினால் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டதைப் போன்று கடந்த கால நிகழ்­வுகள் தொடர்­பி­லான விவ­கா­ரங்­களைக் கையா­ளு­வ­தற்­கான நட­வ­டிக்­கையில் துரிதம் காட்­டப்­ப­டு­வ­தாக இல்லை.இந்த மந்­த­நி­லையே அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்­கையை வைத்­த­வர்­க­ளுக்கு ஏமாற்­றத்தைத் தந்த பிர­தான கார­ணி­யாகும். பாது­காப்புப் பிரி­விற்குள் இருக்­கின்ற "பிற்­போக்குப் பிர­கி­ரு­தி­களும் அர­சாங்­கத்­திற்குள் இருக்­கின்ற அவர்­களின் நேச­சக்­தி­களும்" போருக்குப் பின்­ன­ரான கால­கட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யி­ருக்­கின்ற நல்­லி­ணக்கச் செயன்­மு­றை­களை மலி­னப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன என்றும் 30/1 ஜெனிவா தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் காணப்­ப­டக்­கூ­டி­ய­தாக இருக்­கின்ற அள­வுக்கு மிஞ்­சிய தாம­தத்­துக்கு இச்­சக்­தி­களே காரணம் என்றும் பென் எமர்சன் கூறி­யி­ருக்­கிறார். 2016 ஆகஸ்டில் நிறை­வேற்­றப்­பட்ட சட்­டத்தின் பிர­காரம் காணாமல் போனோர் விவ­கார அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் தவ­று­வ­தற்­கான காரணம் பாது­காப்புப் பிரி­வி­ட­மி­ருந்து வரு­கின்ற எதிர்ப்­பே­யாகும் என்று கூறப்­ப­டு­கின்­றது. உண்மை ஆணைக்­குழு உட்­பட அர­சாங்­கத்தின் உத்­தேச நல்­லி­ணக்கப் பொறி­மு­றைகள் எல்லாம் போர்க்­குற்ற விசா­ர­ணை­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டிய சான்­று­களை வழங்­கி­வி­டு­மென்ற அச்­சத்தின் அடிப்­ப­டை­யி­லேயே அமைப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டாமல் தடுக்­கப்­ப­டு­கின்­றன.

 

அர­சாங்­கத்தின் அச்சம்

ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு இரு வரு­டங்கள் கடந்­து­விட்­டன. அத்­துடன் அத் தீர்­மா­னத்தின் ஏற்­பா­டு­களை நடை­முறைப் படுத்­து­வ­தற்குப் பேர­வை­யினால் வழங்­கப்­பட்ட இரு வரு­ட­கால அவ­கா­சத்­திலும் கூட நான்கு மாதங்கள் கடந்­து­விட்­டன.இத்­த­கை­ய­தொரு நிலை­யிலே தீர்­மா­னத்தின் முக்­கிய இலக்­கு­களை அடை­வ­தற்­கான செயற்­பா­டு­களில் முன்­னேற்றம் என்­பது மந்­த­க­தியில் இருப்­பது மாத்­தி­ர­மல்ல, உண்­மையில் நிறுத்­தப்­பட்­டு­விட்­டன போன்றே தோன்­று­கி­றது. இலங்­கையின் நிலை­மா­று­கால நீதிக் கடப்­பா­டு­களை நிறை­வேற்­று­வ­தற்கு இது­வ­ரையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களில் எந்­த­வொன்­றுமே உண்­மை­யான முன்­னேற்­றத்தை உறு­திப்­ப­டுத்தப் போது­மா­ன­வை­யல்ல என்­ப­துடன் போர்க்­குற்­றங்­களைச் செய்­தி­ருக்­கக்­கூ­டிய இலங்கை ஆயு­தப்­ப­டை­களின் உறுப்­பி­னர்கள் நீதியின் முன் நிறுத்­தப்­ப­டு­வார்கள் என்­ப­தற்­கான சான்­று­க­ளையும் காணக்­கூ­டி­ய­தாக இல்லை" என்று பென் எமர்சன் விசனம் தெரி­வித்­தி­ருக்­கிறார்.தற்­போது நடை­மு­றையில் இருக்­கின்ற பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்­துக்குப் பதி­லாக புதி­ய­தொரு சட்­டத்தைக் கொண்­டு­வ­ரு­வது குறித்து ஆராய்­வ­தா­கவும் அதை பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்­துக்­காகச் சமர்ப்­பிப்­ப­தற்கு முன்­ன­தாக தேவை­யான மாற்­றங்­களைச் செய்­வ­தா­கவும் இலங்கை உறு­தி­ய­ளித்­த­தையும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஐ.நா. விசேட அறிக்­கை­யா­ள­ரினால் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்ற உத்­தேச நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்ற பிரச்­சி­னைக்குக் காரணம் எதி­ர­ணி­யினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற அர­சியல் பிர­சா­ரங்­களின் விளை­வாக ஏற்­பட்­டி­ருக்­கின்ற சூழ்­நி­லை­யே­யாகும். அர­சாங்கம் சர்­வ­தேச நெருக்­கு­தல்­க­ளுக்கு அடி­ப­ணி­கி­றது என்றும் அவ்­வாறு செய்­வது விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ராகக் காணப்­பட்ட இரா­ணுவ வெற்­றியின் ஊடாகப் பெறப்­பட்ட பலா­ப­லன்­களை ஆபத்­துக்­குள்­ளாக்கி பாது­காப்புப் படை­களை அதை­ரி­யப்­ப­டுத்தி அதன் மூல­மாக நாட்டின் ஐக்­கி­யத்தைப் பல­வீ­னப்­ப­டுத்தி விடு­மென்றும் எதி­ரணி கூறிக்­கொண்­டி­ருக்­கி­றது. இதற்கு எதி­ராகத் துணிந்து செயற்­ப­டு­வதில் அர­சாங்­கத்­துக்கு இருக்­கின்ற தயக்­கமே நல்­லி­ணக்கச் செயன்­மு­றைகள் முட்­டுக்­க­ட்­டை­நிலை அடைந்­தி­ருப்­ப­தற்­கான அடிப்­படைக் கார­ண­மாகும். உத்­தேச நல்­லி­ணக்கப் பொறி­மு­றைகள் எதிர்­கா­லத்தில் போர்க் குற்ற விசா­ர­ணை­களில் பயன்­ப­டுத்தக் கூடி­ய­தாக கடந்த காலச் சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்­களைத் திரட்­டு­வ­தற்கு வச­தி­யாக அமைந்­து­வி­டு­மென்று பாது­காப்புப் படை­க­ளினால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் அச்சம் உட்­பட இத்­த­கைய பல கார­ணங்­க­ளி­னா­லேயே 2015 அக்­டோ­பரில் ஜெனீ­வாவில் அளித்த வாக்­கு­று­தி­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் பின்­வாங்­கு­கி­றது.

ஆனால், ஐ.நா.விசேட அறிக்­கை­யா­ள­ரினால் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கும் நட­வ­டிக்­கைகள் மாத்­தி­ரம்தான் சர்­வ­தேச சமூ­கத்­தினால் வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றன என்­றில்லை. இலங்­கையில் இழப்­பீடு வழங்­கு­த­லுடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்­களை ஆராய்­வ­தற்­கென ஆணை வழங்­கப்­பட்­டி­ருக்கும் ஐ.நா. அமைப்­பான புலம்­பெ­யர்­வுக்­கான சர்­வ­தேச நிறு­வனம் இலங்கை மோதல்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான இழப்­பீ­டுகள் தொடர்­பி­லான அதன் பணிகள் குறித்து கருத்­த­ரங்­கொன்றைக் கடந்­த­வாரம் நடத்­தி­யது.அதில் அந்த நிறு­வ­னத்தின் பிர­தி­நி­திகள் விரி­வான இழப்­பீட்டுப் பொறி­மு­றை­யொன்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான எதிர்­காலத் திட்­டங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள். இழப்­பீட்­டுக்­கான அலு­வ­லகம் ஒன்றை நிறு­வு­வ­தென்­பதும் 2015 அக்­டோ­பரில் ஜெனிவாவில் அர­சாங்­கத்­தினால் அளிக்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­களில் ஒன்று.இழப்­பீட்டின் இலட்­சியம் போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை சாத்­தி­ய­மா­ன­ளவு விரை­வாக அவ­ர்­க­ளது முன்­னைய இயல்பு வாழ்க்கை நிலைக்குக் கொண்­டு­வ­ரு­வ­தே­யாகும்

 

மாற்று நட­வ­டிக்கை

அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருக்கும் நல்­லி­ணக்கச் செயன்­மு­றைகள் சக­ல­வற்­றிலும் சகல தரப்­பி­ன­ரையும் மிகவும் தழு­வி­ய­தாக -- விரி­வா­ன­தாக அமைந்­தி­ருப்­பது இழப்­பீடு வழங்­க­லே­யாகும் என்று புலம்­பெ­யர்­வுக்­கான சர்­வ­தேச நிறு­வ­னத்தின் நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டி­னார்கள். உண்மை ஆணைக்­குழு அல்­லது போர்க் குற்­றங்­களை விசா­ரணை செய்­வ­தற்­காக அமைக்­கப்­ப­டக்­கூ­டிய விசேட நீதி­மன்றம் முன்­பாக வந்து சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு பலர் விரும்­பாமல் இருக்­கக்­கூடும்.தங்­க­ளுக்கு எதி­ராகக் குற்­ற­மி­ழைத்­த­வர்­களை எதிர்­கொள்­வ­தற்கு அவர்கள் தயா­ரில்­லாமல் இருக்­கக்­கூடும் அல்­லது அஞ்­சக்­கூடும்.தங்­க­ளது கடந்த காலத்தை மீண்டும் நினை­வு­ப­டுத்­த­வேண்­டி­வரும் என்­ப­தற்­கா­கவும் அவர்கள் உண்மை ஆணைக்­குழு முன்­னி­லையில் வரு­வ­தற்கு தயங்­கக்­கூடும்.

ஆனால் இழப்­பீட்டைப் பொறுத்­த­வரை பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தங்­க­ளுக்குத் தவ­றி­ழைத்­த­வர்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­காது. பொது­மக்கள் முன்­னி­லை­யிலோ அல்­லது ஆணை­யா­ளர்கள் முன்­னி­லை­யிலோ அவர்கள் பேச­வேண்­டிய தேவை­யு­மி­ருக்­காது. பாதிக்­கப்­பட்­ட­வர்கள் ஏற்­கெ­னவே கிடைக்­கக்­கூ­டி­ய­தாக இருந்த சான்­று­களின் அடிப்­ப­டையில் இழப்­பீ­டு­களைப் பெறலாம். இழப்­பீ­டுகள் நிரு­வாக ரீதி­யான ஏற்­பா­டுகள் மூல­மாகத் தீர்­மா­னிக்­கப்­ப­டக்­கூ­டி­யவை என்­பது அதில் இருக்­கின்ற ஒரு அனு­கூ­ல­மாகும். பாதிக்­கப்­பட்­ட­வர்­களே சான்­று­களை வழங்­க­வேண்­டி­யி­ருக்­கின்ற சுமையைக் கொண்ட சட்டச் செயன்­மு­றை­யொன்றின் ஊடாக இழப்­பீட்டைத் தீர்­மா­னிக்க வேண்­டு­மென்­றில்லை. பல்­வேறு வழி­களில் இழப்­பீட்டை வழங்­க­லா­மென்­பது இன்­னொரு அனு­கூலம். இழந்த நிலங்­களை, உடை­மை­களை மீளப்­பெ­றுதல், வீடு­களை மீளப்­பெ­றுதல், வாழ்­வா­தா­ரத்தைப் பெறுதல், உள­வியல் ரீதி­யான ஆத­ரவு மற்றும் காணாமல் போனோர் தொடர்­பான தக­வல்­களைப் பெறுதல் என்­பன போன்ற பல்­வேறு வடி­வங்­களில் இழப்­பீ­டுகள் கிடைக்கப் பெறலாம்.

போரினால் அநா­தை­க­ளானோர், பெண்கள் தலைமை தாங்­கு­கின்ற குடும்­பங்கள், சித்­தி­ர­வ­தை­க­ளுக்கும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கும் ஆளா­ன­வர்கள் என்று முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் இழப்­பீ­டுகள் வழங்­கப்­ப­டலாம். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இழப்­பீட்டை வழங்­கு­வ­துடன் ஒப்­பி­டும்­போது விசேட நீதி­மன்­றங்­களை அமைத்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான செலவு அதிகம் என்ற விட­யமும் கருத்­தி­லெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.சியராலியோனில் 24 பேரைக் குற்றவாளிகளாகக் காண்பதற்கு ஏழு வருடங்களாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு 20 கோடி அமெரிக்க டொலர் செலவாகியது. அங்கு உண்மை ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்ட 32 ஆயிரம் பேருக்கு ஒரு கோடியே 30 இலட்சம் டொலர் மாத்திரமே சியராலியோன் அரசாங்கம்  இழப்பீடாகக் கொடுத்தது. ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் பென் எமர்சன் தனது ஆணையின் கீழ் வரு­கின்ற பொறுப்­புக்­கூ­ற­லுடன் சம்­பந்­தப்­பட்ட பிரச்­சி­னை­க­ளையே வலி­யு­றுத்­தி­னா­ரென்ற போதிலும் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் செயன்­மு­றையை இழப்­பீடு வழங்­கலின் ஊடாக ஆரம்­பிப்­பது கூடு­த­லான அள­வுக்கு நடை­முறைச் சாத்­தி­ய­மா­னதும் பய­னு­று­தி­யு­டை­ய­து­மாகும். ஜெனிவா தீர்­மா­னத்தில் அர­சாங்கம் உறு­தி­ய­ளித்த உண்மை ஆணைக்­குழு மற்றும் இழப்­பீட்டு அலு­வ­லகம் போன்ற பொறி­மு­றைகள் தொடர்­பான வரை­வுகள் தயா­ரிக்­கப்­பட்­டு­விட்­டன என்று கூறப்­ப­டு­கி­றது.

ஆனால் பாரா­ளு­மன்­றத்­துக்கோ அல்­லது பொது­மக்­க­ளுக்கோ அவை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. ஏற்­பட்­டி­ருக்­கின்ற முடக்­க­நிலை அர­சாங்­கத்தின் நம்­பகத்­தன்­மையைப் பாதிக்­கின்­றது. ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் அர­சாங்­கத்தை நோக்கித் தெரி­வித்த அறி­வு­றுத்­தல்­களும் கண்­டிப்­பு­களும் உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்கம் விரைந்து செயற்­ப­ட­வேண்டும் என்று சர்­வ­தேச சமூகம் விரும்­பு­கி­றது என்­பதன் வெளிப்­பா­டே­யாகும். அர­சாங்கம் அதன் கடப்­பா­டு­களை நிறை­வேற்­றாமல் பின்னடிக்கிறது என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற விசனங்களைத் தணிப்பதற்கு இழப்பீட்டு அலுவலகத்தை துரிதமாக அமைப்பதன் மூலமாக வழிவகுக்கலாம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-22#page-6

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.