Jump to content

கடற்புறம் - வ.ஐ.ச.ஜெயபாலன் (1979)


Recommended Posts

A POEM WRITTEN IN கடற்புறம்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
1979ல் எனது யாழ்பாணம் பலகலைக்கழக நாட்களில் எழுதிய கவிதை. முதலில் பல்கலைகழக மாணவர் சங்க அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டது. பின்னர் பெருந்தோழர் டோமினிக் ஜீவா அவர்கள் தனது மல்லிகை சஞ்சிகையில் பிரசுரித்தார். அதன்பின் பலதடவை மீழ் பிரசுரம் செய்யப்பட்டது.

மலையகத்தைச் சேர்ந்த தோழி ஞானாம்பிகை ( gnana chitraranjan ) இலங்கை உயர்கல்வித் துறையில் பணியாற்றியபோது பாடபுத்தகத்தில் இக்கவிதை சேர்க்கபட்டதால் இலங்கை தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களிடையே பிரபலமானது.
.
இக்கவிதையை தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமனியன் ஆங்கிலத்தில் மொழி பெயர்திருக்கிறார் 
யாரிடமாவது பிரதி இருந்தால் அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

.
கடற்புறம்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
காலமகள் மணலெடுத்து 
கோலமிட்ட கடற்புறத்தில் 
ஏழை மகள் ஒருத்தி, 
முன்னே கடல் விரியும் 
முது கடலின் பின்னாடி 
விண்ணோ தொடரும் 
விண்ணுக்கும் அப்பாலே 
விழி தொடர நிற்கின்றாள் 
.
தாழை மரவேலி, 
தள்ளி ஒரு குடிசை; 
சிறு குடிசைக்குள்ளே 
தூங்கும் ஒருகுழந்தை 
.
ஆழக் கடலில் 
ஆடுகின்ற தோணியிலே 
தாழம்பூ வாசம் 
தரைக்காற்று சுமந்துவரும் 
.
காற்றுப் பெருங்காற்று 
காற்றோடு கும்மிருட்டு 
கும்மிருட்டே குலைநடுங்க 
கோஷமிட்ட கடற்பெருக்கு. 
.
கல்லு வைத்த கோவிலெல்லாம் 
கைகூப்பி வரம் இரந்த 
அந்த இரவு 
அதற்குள் மறக்காது 
.
திரைக்கடலை வென்று வந்தும் 
திரவியங்கள் கொண்டு வந்தும் 
இந்தச் சிறு குடிசை, 
இரண்டு பிடி சோறு, 
தோணி உடையான் 
தரும் பிச்சை என்கின்ற 
கோணல் நினைப்பு, 
பெருமூச்சு. 
.
தானாய் விடிவெள்ளி 
தோன்றுகின்ற சங்கதிகள் 
வானத்தில் மட்டும்தான் 
வாழ்வில் இருள் தொடரும்
.
1979

 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலோரவாழ்வின் சுவாசம் கலந்த வாழ்வும், அதில் முங்கி எடுத்த வர்ணனையும் அழகு....!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.