Jump to content

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எவரும் பூச்சாண்டி காட்ட முடியாது


Recommended Posts

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எவரும் பூச்சாண்டி காட்ட முடியாது

 

சைட்டம் நிறுவனத்தை அரசுடமையாக்கமாட்டோம்

நேர்காணல் : ரொபட் அன்­டனி

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்டும் என்­ப­தற்­காக 35 வரு­டங்­க­ளாக போரா­டி­ வ­ரு­கின்றேன். அன்று இருந்த நிலை­மையை விட இன்று ஒரு தீர்வுத் திட்­டத்தை காண்­ப­தற்­கான நிலைமை இல­கு­வா­ன­தாக மாறி­யுள்­ளது. அதனால் தற்­போ­தைய சூழலில் தீர்வுத் திட்­டங்­க­ளுக்கு எதி­ராக யாரும் இன்று இந்த நாட்டில் பூச்­சாண்டி விளை­யாட்டு காட்டிக்கொண்­டி­ருக்க முடி­யாது என்று இணை அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.  

அதி­கா­ரத்தை பகிர்­வ­தற்கு முன்­னிற்போம். அதே­போன்று பாதிக்­கப்­பட்ட மக்­களின் காணி­களை மீளப் பெற்றுக்கொடுக்க வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்வோம். அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கேசரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அமைச்சர் ராஜித சேனா­ரட்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு,

Q: நீங்கள் கடந்த 35 வரு­டங்­க­ளாக அதிகார பகிர்வு மற்றும் அர­சியல் தீர்­வுக்­காக குரல் கொடுத்து வரு­கி­றீர்கள். அந்த வகையில் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கடந்த இரண்­டரை வரு­ட­கால அனு­ப­வத்தைக் கொண்டு தீர்வு கிடைக்­குமா? இல்­லையா? என்­பதை எவ்­வாறு உணர்­கி­றீர்கள்?

A : 35 வரு­டங்­க­ளாக பேசு­வது மட்­டு­மன்றி நான் இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­காக என்­னா­லான பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருக்­கிறேன். இந்த அர­சாங்­கத்தின் கீழ் இந்த இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு நாங்கள் நட­வ­டிக்கை எடுப்போம். குறிப்­பாக சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த நாங்கள் நட­வ­டிக்கை எடுப்போம். அதற்­காக அதி­கா­ரத்தை பகிர்­வ­தற்கு முன்­னிற்போம்.

அதே­போன்று பாதிக்­கப்­பட்ட மக்­களின் காணி­களை மீளப்பெற்றுக்கொடுக்க வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்வோம். அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுப்போம். காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் ஒரு நடை­மு­றையை மேற்­கொண்டு அந்த மக்­க­ளுக்கு நிவா­ர­ணத்தைப் பெற்றுக் கொடுக்க அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும். இந்த வேலைத்­திட்­டங்­களை அர­சாங்கம் எதிர்­கா­லத்தில் நிச்­சயம் முன்­னெ­டுக்கும்.

Q: எனினும் இந்த விட­யத்தில் பல்­வேறு தடை­களை நாங்கள் காண்­கின்றோம். நீங்கள் கூறிய இந்த விட யங்­களை புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டா­கவே அர­சாங்கம் செய்ய முயற்­சிக்­கி­றது. ஆனால் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்­திரக் கட்­சி­யினர் புதிய அர­சி­ய­ல­மைப்பு வேண்டாம் என்றும் அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் போது­மா­னது என்றும் கூறி­யுள்­ளது. இது தொடர்பில்?

A : எனினும் அர­சி­­யல­மைப்பு உரு­வாக்க செயற்­பாட்டின் முக்­கிய விட­யங்கள் தொடர்பில் அனைத்து தரப்­பி­னரும் இணக்­கப்­பாட்­டிற்கு வந்­துள்­ளனர். விசே­ட­மாக அதி­காரப் பகிர்வு என்ற விட­ய­தா­னத்­திற்கு அனைத்து தரப்­பி­னரும் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர். எனவே இது மிக­ப­்பெ­ரிய ஒரு விட­ய­மல்ல. அர­சி­ய­ல­மைப்பு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுமா? இல்­லையா? என்­பதை உயர் நீதி­மன்­றமே தீர்­மா­னிக்கும். அத­னையும் பேச்­சு­வார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள எம்மால் முடியும்.

Q: 1987 ஆம் ஆண்டு 13 ஆவது திருத்தச் சட்டம் வந்­தது. அதிலும் முழு­மை­யான தீர்வை பெற முடி­ய­வில்லை. 2000 ஆம் ஆண்டு சந்­தி­ரிகா அம்­மையார் கொண்டு வந்த தீர்வுப் பொதி யையும் பெற முடி­ய­வில்லை. 2003 ஆம் ஆண்டு ஒஸ்லோ பிர­க­டனம் வந்­தது. எனினும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அவ்­வாறு உங்கள் அனு­ப­வத்தின் பிர­காரம் இந்த தீர்வைக் காணும் செயற் பாடு வெற்­றி­ய­ளிக்­குமா?

A :13 ஆவது திருத்தச் சட்­டத்தை நாங்கள் போராடி கொண்­டு­வந்­தோமே? அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தி­னோம்­தானே?

Q: எனினும் அதில் முழு­மை­யான வெற்­றியை இனப்­பி­ரச் சினை தீர்வு விட­யத்தில் பெற முடி­ய­வில்­லையே?

A : அது சரி. ஆனால் அன்று தீர்வுத் திட்­டங்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய தடை­யாக புலிகள் அமைப்பு காணப்­பட்­டது. இவ்­வாறு அக்­கா­லத்தில் அதி­காரப் பகிர்­வுக்கு சென்றால் புலிகள் கார­ண­மாக நாடு பிரிந்து விடும் என்ற அச்சம் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. தற்­போது பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டது. அன்று இருந்த நிலை­மையை விட இன்று ஒரு தீர்வுத் திட்­டத்தை காண்­பது இல­கு­வா­ன­தாக மாறி­யுள்­ளது. எனவே தீர்வுத் திட்­டங்­க­ளுக்கு எதி­ராக யாரும் இன்று இந்த நாட்டில் பூச்­சாண்டி விளை­யாட்டு காட்டிக் கொண்­டி­ருக்க முடி­யாது. நாங்கள் அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அதி­காரப் பகிர்வில் அமைந்த தீர்­வுத்­திட்­டத்­துக்கு செல்வோம்.

Q: சைட்டம் விவ­கா­ரத்தில் தற்­போது நெவில் பெர்­னாண்டோ வைத்­தி­ய­சா­லையை அர­சாங்கம் பெற்றுக் கொண்­டுள் ளது. இதன் தற்­போ­தைய நிலைமை என்ன?

A : சைட்டம் விவ­கா­ரத்தில் மருத்­துவ சபையால் நிய­மிக்­கப்­பட்ட குழு மூன்று பிர­தான குறை­பா­டு­களை கண்­ட­றிந்­தது. மக்கள் சுகா­தார கல்­வி­யின்மை, நீதி­மன்ற மருத்­துவக் கல்­வி­யின்மை, சிகிச்சைப் பயிற்­சி­யின்மை ஆகிய மூன்று விட­யங்­களே இதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தன. அதா­வது இந்த நெவில் பெர்­னாண்டோ வைத்­தி­ய­சாலை பூர­ணத்­துவம் மிக்­கது. அங்கு இடம்­பெறும் கற்­பித்­தலும் சரி­யா­னது. ஆனால் பிரச்­சினை என்­ன­வென்றால் அங்கு நோயா­ளர்கள் இல்லை. அந்த வகையில் மேற்­கு­றிப்­பிட்ட மூன்று பிரச்­சி­னை­களில் இரண்டு பிரச்­சி­னைகள் ஏற்­க­னவே தீர்க்­கப்­பட்டு விட்­டன. மக்கள் சுகா­தாரக் கல்வி, கடு­வலை மக்கள் சுகா­தாரக் கல்­வி­ய­கத்தில் கற்­பிக்­கப்­ப­டு­கி­றது. நீதி­மன்ற மருத்துவக் கல்வி அவி­சா­வ­ளையில் கற்­பிக்­கப்­ப­டு­கி­றது.

தற்­போது சிகிச்சை முறை கல்­வி­யி­லேயே சிக்கல் காணப்­ப­டு­கின்­றது. அத­னால்தான் இந்த வைத்­தி­ய­சா­லையை அர­சாங்கம் சுவீ­க­ரித்துக் கொள்ள தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அத­ாவது அர­சாங்கத்தின் போதனா வைத்­தி­ய­சா­லை­யாக இது முன்­னெ­டுக்­கப்­படும். அர­சாங்­கம் இதனை பெற்றுக் கொண்ட பின்னர் நோயா­ளர்கள் வருவர். கொழும்பு கிழக்கு போதனா வைத்­தி­ய­சா­லை­யாக இதனை முன்­கொண்டு செல்வோம். அந்த வகையில் தற்­போது அந்த வைத்­தி­ய­சா­லையை அரசாங்கம் தன­தாக்கிக் கொண்­டுள்­ளது.

Q: நெவில் பெர்­னாண்டோ வைத்­தி­ய­சா­லையை சுவீ­க­ரித்துக் கொண்­டமை சைட்டம் பிரச்­சி­னைக்­கான தீர்வு அல்ல என்று கூறப்­ப­டு­கி­றதே?

A : அது அந்த வைத்­தி­ய­சா­லையை சுவீ­க­ரித்துக் கொண்­டதன் பின்னர் கூறும் கதை­யாகும். இது தீர்­வல்ல. இது தீர்வின் ஒரு பகு­தி­யாகும். ஒரு சிலர் கூறு­கின்ற அனைத்து விட­யங்­க­ளையும் நாம் செய்து கொண்­டி­ருக்க முடி­யாது. அவர்கள் இங்கு வந்து ஒரு பேச்­சு­வார்த்தை நடத்­து­வார்கள். பின்னர் வேறு கதையை பேசிக் கொண்­டி­ருப்­பார்கள்.

Q: அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் வைத்­தி­ய­சா­லையை சுவீ­க­ரிக்­கு­மாறு கூற­வில்லை என்று தெரி­வித்­துள்­ளனர். சைட்டம் நிறு­வ­னத்தை சுவீ­க­ரிக்­கு­மாறு கோரி­ன­ராமே?

A : அதனை அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் கோர வில்லை. அதனை மாண­வர்­களே கோரு­கின்­றனர். அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் ஒவ்­வொரு நேரத்­துக்கும் ஒவ்­வொரு விட­யத்தை கூறிக் கொண்­டி­ருக்கும். ஒரு நேரம் மக்கள் மயப்­ப­டுத்­து­மாறும் மற்­று­மொரு நேரம் வேறொரு விட­யத்தை செய்­யு­மாறும் கூறிக் கொண்­டி­ருக்கும். தரம் இருந்தால் போது­மா­னது.

Q: எனினும் அர­சாங்கம் நெவில் பெர்­னாண்டோ வைத்­தி­ய சா­லையை பத்து வரு­டங்­க­ளுக்கு குத்­த­கைக்கு எடுத்­த தாக கூறப்­ப­டு­கின்­றதே?

A : அவ்­வாறு கூறு­கின்­ற­வர்­களின் மன நிலை சரி­யில்லை. அவர்­களை அங்­கொ­டைக்கு அனுப்ப வேண்டும்.

Q: இது தொடர்பில் ஒரு அமைச்­ச­ரவைப் பத்­திரம் உள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றமை தொடர்பில் ?

A : அவ்­வாறு ஒரு அமைச்­ச­ரவைப் பத்­தி­ரமும் இல்லை. இருந்தால் என்­னிடம் காட்­டுங்கள். பத்து வரு­டங்­க­ளுக்குள் எவ்­வாறு ஒரு நிறு­வ­னத்தை சுவீ­க­ரிக்க முடியும். சுவீ­க­ரிக்கும் சட்­டத்தில் அவ்­வாறு இட­மில்லை.

Q: இந்த வைத்­தி­ய­சா­லைக்கு தொடர்ந்து நெவில் பெர் னாண்­டோதான் தலைமை வகிப்பார் என்று கூறப்­படுகி­றதே?

A : இவ்­வாறு யார் கூறு­வது?

Q: அமைச்­ச­ரவைப் பத்­திரம் உள்­ள தாமே?

A : அவ்­வாறு அமைச்­ச­ரவை பத்­திரம் இருப்பின் அந்த பிர­தியை எனக்கு தாருங்கள். அதனை நான் சி.ஐ.டி.க்கு கொடுக்க வேண்டும். இது மூன்று தரப்பு உடன்­ப­டிக்கை. ஒரு சொத்தை சுவீ­க­ரிக்­கும்­போது அதி­லுள்ள பொறுப்­பையும் நாம் எடுக்க வேண்டும். ஆனால் இங்கு அவ்­வா­று­கூட நடை­பெ­ற­வில்லை. இந்த நிறு­வனம் கொண்­டி­ருக்­கின்ற கடனை நெவில் பெர்­னாண்டோ செலுத்­து­வ­தற்கு விருப்பம் தெரி­வித்தார். அத­னா­லேயே இது முத்­த­ரப்பு உடன்­ப­டிக்­கை­யாக உள்­ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வைத்­தி­ய­சாலை அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­யாக இயங்கும்.

Q: எனினும் இந்த உடன்­ப­டிக்­கையில் ஏன் அமைச்சின் செய­லாளர் கைச்­சாத்­தி­ட­வில்லை?

A : அமைச்சின் செய­லாளர் கைச்­சாத்­திட்டார். தேநீர் கடையைக் கூட நடத்­தா­த­வர்கள் அர­சியல் செய்ய வந்தால் இது தான் பிரச்­சினை.

Q: அப்­ப­டி­யாயின் யார் இந்த வைத்­தி­ய­சா­லையின் தலை­வ­ராக வருவார்?

A : நான் நிய­மிப்­ப­வரே தலை­வ­ராக வருவார்.

Q: நீங்கள் நிய­மிப்­பவர் நெவில் பெர்­னாண்­டோ­வாக இருக்க முடி­யாதா?

A : ஒரு­போதும் இல்லை. அர­சாங்க ஊழி­யர்­க­ளையே நான் நிய­மிப்பேன்.

Q: இதனை போதனா வைத்­தி­ய­சா­லை­யாக மாற்ற முடி­யாது என கூறப்­பட்­டி­ருந்­ததே?

A : அர­சாங்­கம்தான் இதனை போதனா வைத்­தி­யசா­லை­யாக மாற்றும். அதற்­கா­கவே தற்­போது சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இனி போதனா வைத்­தி­ய­சா­லை­யாக மாற்­றப்­படும்.

Q: சைட்டம் நிறு­வ­னத்தை ஏன் சுவீ­க­ரிக்க முடி­யாது?

A : சைட்டம் நிறு­வ­னத்தை ஏன் சுவீ­க­ரிக்க வேண்டும்? என்­ப­தற்கு பதில் சொல்­லுங்கள். ஒரு சில தரப்­பி­னர்கள் கூறு­கின்­றனர் என்­ப­தற்­காக அதனை சுவீ­க­ரிக்க முடி­யாது. திடீ­ரென நாளை வந்து மேலும் பல்­வேறு நிறு­வ­னங்­களை சுவீ­க­ரிக்கக் கூறு­வார்கள் போல் தெரி­கி­றது.

Q: நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை சுவீகரிக்க முடியுமாயின் ஏன் சைட்டம் நிறுவனத்தை சுவீகரிக்க முடியாது?

A : நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை ஒரு காரணத்திற்காக சுவீகரிக்கப்படுகிறது. மாறாக வேறு நிறுவனங்களை சுவீகரிப்பதற்கு காரணங்கள் இல்லை. மருத்துவ சபையை நியமித்த குழு முன்வைத்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதே எமது கடமை. தனியார் நிறுவனங்களை சுவீகரிப்பதற்காக எமது அரசாங்கம் வரவில்லை. மக்கள் மயப்படுத்தப்பட்டதை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் யுகமே உலகில் காணப்படுகின்றது.

Q: அண்மையில் உங்களை சந்திக்க வந்த மாணவர்களை ஏன் நீங்கள் சந்திக்கவில்லை?

A : அவர்கள் சந்திப்பதற்காகவா வந்தார்கள். காணொளிகளை பார்த்திருப்பீர்கள்தானே. அவற்றை பார்த்த பின்னரும் இதனை கேட்கலாமா? சந்திக்க வந்தவர்கள்தான் நுழைவாயிலை உடைப்பார்களா? என்ன நடந்தது என்பதனை காணொளியில் பார்த்திருப்பீர்கள்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-22#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.