Jump to content

கெத்தாக மீசை முறுக்கி இருக்கிறாரா ஆதி? - ‛மீசைய முறுக்கு’ விமர்சனம்


Recommended Posts

கெத்தாக மீசை முறுக்கி இருக்கிறாரா ஆதி? - ‛மீசைய முறுக்கு’ விமர்சனம்

 
 

இசையமைப்பாளரிலிருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் ‘ஹிப் ஹாப்’ ஆதி தன் பயோகிராஃபியையே ‘மீசைய முறுக்கு’  என்று படமாக்கியிருக்கிறார். வாழ்க்கை அனுபவங்களோடு, கொஞ்சம் கற்பனையையும் கலந்துகட்டி ஆதி முறுக்கும் மீசை கூர்மையாக இருக்கிறதா?

மீசைய முறுக்கு , மீசை

 

மிடில் கிளாஸ் வீட்டுப் பையன் ஆதிக்கு ஒரு தம்பி, அம்மா, அப்பா என அழகான குடும்பம்.  கூச்சமும், பயந்த சுபாவமுமாய் திரியும் ஆதிக்கு இசை உயிர். அப்பாவின் நச்சரிப்புக்காகப் படித்தாலும், இசையில் சாதிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஓடுகிறார். இடையே ஹீரோயினுடன் காதலும், காதலால் பிரச்னையும் வருகிறது. கல்லூரி நண்பர்களுடனான ஜாலி மொமண்ட்ஸூம், சீனியர் மாணவர்களுடன் மோதலும், பாசமும் என இருக்கும் ஆதி தன் இலக்கில், காதலில் ஜெயித்தாரா இல்லையா... என்பதே 'மீசைய முறுக்கு' சொல்லும் கதை. 

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என ஹிப் ஹாப் ஆதி பங்களித்திருக்கும் அனைத்து ஏரியாவும் சொல்வது ஒன்றுதான், 'ஜெயித்தாலும் தோற்றாலும் மீசைய முறுக்கு!' 

அடித்தவர்களைத் திருப்பி அடிக்க தம்பியைக் கூட்டி வருவது, நாயகியைக் கவர எடுக்கும் முயற்சிகள், டான்ஸ், பாட்டு... என ஹீரோ ஆதி கவர்கிறார். ஆதியின் தந்தையாக நடித்திருக்கும் விவேக், வழக்கமான காமெடி ஏரியாவில் மட்டுமே ஸ்கோர் செய்யாமல், வசனம், சென்டிமென்ட் காட்சிகளிலும் லைக்ஸ் அள்ளுகிறார். நாயகி ஆத்மிகா வழக்கான தமிழ்சினிமா ஹீரோயினாகவே வந்துசெல்கிறார். 

'நீங்கெல்லாம் சொந்தக்காரங்க கால்ல நிற்கிறீங்க. நான் சொந்தக் கால்ல நிற்கிறேன்' என ஆதி பேசும் வசனம், 'கனவுக்காக சிலர் வாழ்க்கையைத் தொலைச்சிடுவாங்க. வாழ்க்கைக்காக சிலர் கனவைத் தொலைச்சிடுவாங்க. நான் என் கனவை விட்டுட்டு, வாழ்க்கையில ஜெயிச்சிருக்கேன்' என விவேக் பேசும் வசனம்... இப்படிப் படம் முழுக்க அர்த்தமுள்ள வசனங்களை அடுக்கியிருக்கிறார் ஆதி. கூல் ப்ரோ!

ஆதி

நடிகர், பாடகர், இசையமைப்பாளராக ஜெயித்திருக்கும் ஆதி, இயக்குநராகக் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார். திடீர் திருப்பங்கள், எதிர்பாராத ட்விஸ்ட் என்றெல்லாம் இல்லாமல், ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது திரைக்கதை. அதில் காதல், நட்பு, குடும்ப சென்டிமென்ட், காமெடி... எனக் காட்சிகள் தாறுமாறாய்ப் பயணிப்பது பெரிய மைனஸ். 

சின்ன வயசுல இருந்தே ஆதி காதலிப்பதெல்லாம் ஓகே. அதற்காக சிறுவயது காதலை முதிர்ச்சியான காதலாக காட்டியிருப்பது மைனஸ். சொல்லப்போனால் படத்தில் கதை என சொல்லும்படி எதுவும் இல்லாமல், கொஞ்சம் சோர்வுக்குள்ளாக்குகிறது.  

எதார்த்தமாக நகரும் திரைக்கதையில், ஹிப் ஹாப் ஆதி மேடையில் பாடும்போது ஆடியன்ஸ் அழுவதெல்லாம் ஓவர் டோஸ். சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு, இன்டிபென்டண்ட்டாக இணையத்தில் வெளியிட்ட ஆல்பத்தை அப்படியே படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் ஆதி. படத்தோடு கனெக்ட் செய்திருந்தாலும், எல்லாப் பாடலும் ஒரே மாதிரி ஃபீல்தான். வெரைட்டியாக பாடல்கள் ஏதும் கொடுத்திருக்கலாமே ஆதி?. 

காமெடி சண்டைகளுக்கு ஸ்கோர் கொடுப்பது, பிரியாணி எபிசோட் ஆகியவை ரசிகர்களை ஈர்க்கின்றன. ஆத்மிகா ஆதியைக் காதலிப்பது வீட்டில் தெரிந்து பிரச்னை ஆக, கல்லூரிக்குச் சென்றாலும் கூடவே சுற்றுகிறார், ஆத்மிகாவின் அக்கா. அவரை மீறி, ஆதியும் - ஆத்மிகாவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் செம! சீனியர் சுதாகர் கேரக்டர் அருமை. ஆதியும் அவர் நண்பர்களும் சுதாகர் பெயரைச் சொல்லி கேண்டீனில் எக்ஸ்ட்ரா ஒரு வடையும், சில பல மரியாதைகளையும் பெற்றுக்கொள்ளும் சீன்களும் காமெடி சரவெடி!

மீசைய முறுக்கு

படத்தில் விவேக்கும், ஆதியும் மட்டுமே நமக்குத் தெரிந்த பரிச்சயமான முகம். இவர்களைத் தவிர்த்து அடிக்கடி இணையத்தில் கலக்கும் நடிகர்களை படத்தில் நடிக்கவைத்திருப்பது இன்னும் சிறப்பு. யுடியூப் ஸ்டார்களான ஷா ரா , விக்னேஷ், அன்பு, சுதாகர், கோபி என அடிக்கடி மொபைலில் பார்த்து சிரித்த இவர்களை வெள்ளித் திரையிலும் ரசிக்கலாம். இணையத்தில் மட்டுமே தலைகாட்டிய இவர்களை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு புதுவாசல் திறந்துவிட்டதற்கு ஆதிக்கு பாராட்டுகள். 

படம் முழுவதும் மியூசிக்கல் ஃபீல் கொடுத்திருக்கிறார் ஆதி. சின்னச் சின்ன இடங்களில் மார்டன் மியூசிக்கில் ஸ்கோர் செய்கிறார். ஒளிப்பதிவு செய்திருக்கும் செந்தில்குமார் மற்றும் கிருதி வாசன், படத்தொகுப்பு செய்திருக்கும் ஃபென்னி ஆலிவர் மூவரும் ‘உள்ளேன் ஐயா’ லெவலில் தங்கள் இருப்பை பதிவுசெய்கிறார்கள்.

இலக்கை விரட்டிப் பிடித்து 'வாடி புள்ள வாடி...' பாடலைப் பாடும்போது, அவர் கண்களில் வழியும் கண்ணீரில் உதாசீனமும், அவமானமும் கலந்திருப்பது படம் பார்க்கும் நமக்கும் ஃபீல் ஆகிறது. வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி இறங்கியது, அவமானப்பட்டது, உதாசீனப்படுத்தப்பட்டது... என தனக்கு நடந்த அனைத்தையும் பதிவு செய்யும் ஆதி, தன் பின்புலத்தை வைத்து கண்ணீர் வரவைக்காமல், 'ஜெயிக்கிறோமோ, தோற்குறோமோ... முயற்சியைக் கைவிட்டுடாதீங்க!' என ஒருவரி அட்வைஸில் எனர்ஜி ஏற்றுகிறார். இந்த எனர்ஜிக்காகவே 'மீசைய முறுக்கி' ஒரு முறை பார்க்கலாம்!

 

எல்லாம் ஓகே, ஆனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு டிரெய்லர் பார்த்த உணர்வே எழுவதால், ஒருவேளை 'மீசைய முறுக்கு 2'வில் மொத்தக் கதையும் சொல்ல இருக்கிறாரோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

http://www.vikatan.com/cinema/movie-review/96439-meesaya-murukku-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.