Jump to content

உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் – விவியன் பாலகிருஷ்ணன்!


Recommended Posts

உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் – விவியன் பாலகிருஷ்ணன்!

உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் - விவியன் பாலகிருஷ்ணன்!

 

தமிழர்களே நீங்கள் உலகத்திலுள்ள நாடுகளுக்கு உழைத்துக்கொடுத்தது போதும்: இனிமேலாவது உங்கள் அறிவையும், திறமையையும் உங்களுக்காகப் பயன்படுத்துங்கள் என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் செய்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்ததுடன் பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டதுடன் நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”உல­கத்­திற்­குச் சேவை­யாற்­றக் கிடைத்த பொக்­கி­சமா கத் தமி­ழர்­கள் இது­வரை உழைத்­துக் கொடுத்­த­து­போ­தும். உங்­கள் அறி­வும் திற­மை­யும் இனிமேலாவது உங்­களை மேம்­ப­டுத்­த­வும் யாழ்ப்­பா­ணத்தை மேம்­ப­டுத்­த­வும் பயன்­ப­டட்­டும்.

அதற்கு நீங்­கள் தகு­தி­யா­ன­வர்­கள், பொருத்­த­மான­வர்­கள். அதற்­காக நீங்­கள் நீண்ட காலம் காத்­தி­ருந்­தும் விட்­டீர்­கள். எனவே இனி­யா­வது உங்­கள் அறிவையும் திற­மை­யை­யும் உங்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­துங்­கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்புக் கணிசமானளவு இருந்ததாகவும் தெரிவித்த அவர் குறிப்பாக கல்வி, மருத்துவம், வீதிக் கட்டமைப்பு என்பவற்றின் வளர்ச்சிகளில் அவர்கள் பிதாமகர்களாகத் திகழ்ந்தார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சிங்கப்பூரின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இலங்கைத் தமிழருமான ராஜரத்தினத்தின் இல்லத்திற்கும் நேரில் சென்று அவர் வாழ்ந்த வீட்டினைப் பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=74061

Link to comment
Share on other sites

6 minutes ago, Athavan CH said:

”உல­கத்­திற்­குச் சேவை­யாற்­றக் கிடைத்த பொக்­கி­சமா கத் தமி­ழர்­கள் இது­வரை உழைத்­துக் கொடுத்­த­து­போ­தும். உங்­கள் அறி­வும் திற­மை­யும் இனிமேலாவது உங்­களை மேம்­ப­டுத்­த­வும் யாழ்ப்­பா­ணத்தை மேம்­ப­டுத்­த­வும் பயன்­ப­டட்­டும்.

அதற்கு நீங்­கள் தகு­தி­யா­ன­வர்­கள், பொருத்­த­மான­வர்­கள். அதற்­காக நீங்­கள் நீண்ட காலம் காத்­தி­ருந்­தும் விட்­டீர்­கள். எனவே இனி­யா­வது உங்­கள் அறிவையும் திற­மை­யை­யும் உங்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­துங்­கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சிங்கன் பக்குவமா நெருப்படி கொடுத்திருக்கிறார்!

புத்தியுள்ள மனிதர்களுக்கு இது விளங்கி, அதை அவர்கள் செயலிலும் காட்டினால் நல்லது நடக்கத்தானே வேணும்.

Link to comment
Share on other sites

இதனை நம்மட நெடுக்ஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார்

Link to comment
Share on other sites

34 minutes ago, Athavan CH said:
  • இதனை நம்மட நெடுக்ஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார்

நம்மட ஆட்கள் சொல்லி எவன் சார் கேட்கிறான்.? வெளிநாட்டவன் சொல்லனும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவியன் பாலகிருஷ்ணன், இலங்கைத் தீவில் உள்ள இரண்டு தேசிய இனங்களில் ஒன்று இன்னொன்றின் இருப்பை இல்லாதொழிப்பததற்கு முயலும் பிரச்சனையின் இன்னோர் பரிமாணத்தை மிகவும் தத்தரூபமான ரூபாபமான முறையில்  தான் அறியாமலே கூறியுள்ளார்.

அந்தப் பரிமாணம் இலங்கைத் தீவி உள்ள வளங்களை மற்றும் இயற்கையாகவோ செயறகையாகவோ பெறப்பட்ட செல்வங்களையும் மற்றும் சௌபாக்கியங்களையும், அளவில் பெரிய இனம் முழுவதும் தன்னைக்கே உரித்து துடையது என்றும், அளவில் சிறிய இனம் தனது  பூர்வீகக அடிப்படியில் உரிமை கூறும் போது, அளவில் பெரிய இனம் அளவில் சிறிய இனத்தின் இருப்பையே  இல்லாதொழிப்பததற்கான முயறசியில் மிகவும் வெளிப்படையான முன்னேற்றங்களை கண்டுள்ளது.

சுருக்கமாக சொல்வதானால் தமிழரது உழைப்பை யார் அனுபவிக்கும் உரிமை உள்ளவர்கள் என்பதை சிங்களம் தானே தீர்மானிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அதற்காக பூர்வக மற்றும் வரலாற்று அடிப்படியில் உள்ள சகல சவால்களையும், ஓர் இனத்தின் இருப்பை கூட, அழிப்பதற்கு முயல்கிறது.

இதனால் தன இந்தப் பிரச்னை ஓர் தேச அரசு என்ற அமைப்புக்குள்ளே   தீர்க்கப்பட முடியாது.

அப்படி முடியுமாயின், அந்த ஓர் தேச அரசு என்பது தற்போதைய உலக வழக்கிலுள்ள ஓர் தேச அரசு என்ற அமைப்பின் அடிப்படையான பண்பான ஒரேயொரு  மக்களின் இறைமை, நிலப்புல ஒருமைப்பாடு மற்றும் ஒரேயொரு பாதுகாப்பு அதிகார மையம் என்பதில் இருந்து மிகவும் விதிவிலக்காவே இருக்கும். 

இதை விவியன் பாலகிருஷ்ணன் ஹிந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளிடம் தனக்கே உரிய ராஜதந்திர மொழியில் சாதாரண உரையாடல்களில் அவ்வப்போது கூறுவாரானால், இலங்கைத் தீவில் உள்ள பூர்விக தமழரிற்கு சிங்கப்பூர் ஆற்றும் மிகப் சிறிய உதவி ஆகும்.   

இலங்கை பூர்வீக தமிழரிடம் வளங்கள் தற்போதும் இல்லாமல் இல்லை. உதாரணமாக, புலம் பெயர் தமிழரிடம் நிறையவே கடினமான மற்றும் மென்மையான வளங்கள் (உயர் தொழில்நுட்பம், அதை பிரயோகிக்கும்  மற்றும்  மெருகூட்டும் திறமை) ) மற்றும் செல்வங்கள்  உள்ளன. ஆனல் இவற்றை இலங்கையில் உள்ள தமிழரின் முன்னேற்றம், வளர்ச்சி, அபிவிருத்திக்காக தமது சுய விருபின் அடிப்படையில், நிறுவன முறைப்படுத்தி பாவிக்க முடியாது.

 

 

        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Athavan CH said:

உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் – விவியன் பாலகிருஷ்ணன்!

தமிழர்களே நீங்கள் உலகத்திலுள்ள நாடுகளுக்கு உழைத்துக்கொடுத்தது போதும்: இனிமேலாவது உங்கள் அறிவையும், திறமையையும் உங்களுக்காகப் பயன்படுத்துங்கள் என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின்  கைகள்  வெட்டப்படுவதை   கட்டப்பட்டுள்ளதை

சர்வதேச  அளவில் நீங்கள் சொல்லலாமே

அதை நீங்கள் செய்வதே எமக்கு நீங்கள் ஆற்றும் மிகச்சிறிய  உதவியாக இருக்கும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Athavan CH said:

இதனை நம்மட நெடுக்ஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார்

 

Quote

 

nedukkalapoovan

  • நெடுக்ஸ்
  •  
  • nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
  •  4,536
  • 27,816 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

தமிழர்களிடம் உள்ள திறமை தமிழர்களுக்கு உபயோகம் ஆவதில்லை. அதுதான் அவலம். காரணம்.. போட்டி.. பொறாமை.. ஒன்றை மற்றது முன்னேற உதவாதுகள். 

மாற்றார் தலைமையின் கீழ் அடிமையா அடிமாடாக உழைக்கத் தெரிந்த தமிழனுக்கு.. சொந்தத் தலைமைகளை ஏற்றுக் கொண்டு.. சொந்த மண் மக்களுக்காக உழைக்கத் தெரியாது. அதுதான் அவனின் ஆற்றலும் அறிவும் அவனுக்கு உபயோகம் ஆவதில்லை. காட்டிக்கொடுத்தே அதனை கெடுத்துக்குவான். :rolleyes:

என்னதான் தமிழருக்கு அவரின் தவறுகளை உணர்த்தினாலும்.. தமிழர்கள் தமிழர்களுக்காக உழைப்பது என்பது கடினமான ஒன்று அவர்களுக்கு. இந்த நிலை மாறனும் என்பதே எங்கள் விருப்பம். தமிழர்கள் ஒட்டுமொத்தமாகச் சிந்திக்கனும்.. நாம் தமிழர் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு.. தமிழர் நிலங்களில் தமது ஆட்சி அதிகாரங்களை நிறுவி.. அவற்றை.. உய்விக்க பாடுபடனும்.  :rolleyes:

 

நாங்க சொல்வதையே இவர் சொல்வது போன்று தோன்றினாலும்.. பெரும்பான்மையாக.. மலே பேசும் மலேசியாவில் இருந்து ஒரு குட்டி சுதந்திர தேசமாக எழுந்து நிற்கும் சிங்கப்பூரால் தான் சிங்கப்பூராக நிற்க முடிகிறது. இதையே தான் தமிழர்கள் நாங்கள் எங்கள் நிலப்பரப்பில் எங்கள் ஆட்சி அதிகாரங்களோடு எங்களை சுதந்திரமாகவும்.. எமது ஆற்றலை அறிவைப் பயன்படுத்தி முன்னேறவும் விடுங்கள் என்று கேட்கிறோம். இதற்கு சிங்கப்பூர் சார்பில் இவர் பகிரங்க ஆதரவை யாழ் மண்ணில் வைத்துத் தெரிவித்துச் சென்றிருந்தாலோ.. அல்லது.. சிங்கள ஆதிக்க விருவாக்கத்தை கடிந்து சென்றிருந்தாலோ வரவேற்றிருக்கலாம். ஆனால்.. சிங்கள ஆதிக்கத்துக்குள் தமிழரைப் பார்த்து.. உலகுக்காக உழைச்சது போதும்.. உங்களுக்காக உழையுங்க.. என்று.. இவர் கேட்பது இவரின் சுயமுரண்பாட்டுக்குரிய கருத்தாகவே தோன்றுகிறது. ஒருவேளை யாழை வாசிட்டு பேசி இருப்பாரோ.. கலந்தடிச்சு ஒரு தெளிவில்லாமல். 

ஆனாலும்.. எங்கட ஆக்களுக்கு மணிகட்டின.. மாடு சொன்னால் தானே புரியும்.. அல்லது புத்தியில் நுழைய மனசு இடம்கொடுக்கும்.. என்ற அடிப்படையில்..... இப்பவாவது சில அடிப்படைகளைப் புரிய வேண்டிய தேவை உள்ளதை இவரின் பேச்சு எம்மவருக்கு உணர்த்திச் சென்றிருந்தால் நல்லம். ஆனால்.. இவரின் பேச்சு முழுமையாக சரியான திசையில் தமிழர்களை வழிநடத்தத் தவறிவிட்டுள்ளது. பல உள்ளீடுகள் மறைபொருளாக்கப்பட்டுள்ளன. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Athavan CH said:

உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் – விவியன் பாலகிருஷ்ணன்!

ஐயா! எங்களுக்கு பக்கத்திலை பெரியதொரு வில்லங்கம்(கிந்தியா) குறுக்காலை நிக்கும் வரைக்கும் சொந்தமண்ணிலை எதுவுமே சரிவர நடக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

ஐயா! எங்களுக்கு பக்கத்திலை பெரியதொரு வில்லங்கம்(கிந்தியா) குறுக்காலை நிக்கும் வரைக்கும் சொந்தமண்ணிலை எதுவுமே சரிவர நடக்காது. 

உண்மைதான்.அதுக்காக நெடுக சும்மாவும் இருக்க முடியாது அபிவிருத்தி விடையத்தில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.