Jump to content

தமிழ் சமூகத்திற்கு, புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வேண்டுகோள்..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முஸ்லிம்கள் 1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் இரு மணி நேர அவகாசத்தில் சகல வாழ்வாதாரங்களும் ,வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையும்,அதன் பின் 2003 பிரபா ரணில் புரிந்துணர்வு காலப்பகுதியிலே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்,அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் பத்திரிகையாளர் மாநாட்டிலே தாம் முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என்றும் உரிய நேரத்தில் முஸ்லிகளை மீண்டும் அவர்களின் தாயக மண்ணில் மீள்குடியேற அழைப்போம் என்றும் கூறியமையும் சர்வதேசம் அறிந்த உண்மையாகும். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் சமூகம் தேசிய தலைவன் என ஏற்றுக்கொண்ட பிரபாகனாலேயே உறுதியளிக்கப்பட்ட பின்னர் ஏன் இன்றைய தமிழ் சமூகத்தின் ஒரு சில அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் எதிர்க்கின்றனர்.

அதன் பின்னால் உள்ள உள் நோக்கம்தான் என்ன, யுத்த காலத்திலே இலங்கை அரசாங்கமும்,உதவி செய்வதாக கூறிக்கொண்டு வந்த நாடுகளும்,அந்நிய அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழ் முஸ்லிம் நல்லுறவில் திட்டமிட்டு ஏற்படுத்திய ஆறாத வழுக்கள் யாவரும் அறிந்த உண்மையாகும். தமிழ், முஸ்லிம்களுக்கிடையில் ஏற்பட்ட தாக்குதல்களுக்கும், யார் முதலில் தாக்குதல் செய்தார் என்ற விசாரனைகளும் இன்று தேவையற்றதாகும்,சகல கசப்பான அனுபவங்களும் மன்னிக்கப்பட்டு,நல்லுறவிற்கான புதிய அத்தியாயங்கள் இந்த இரு சமூகங்களுக்கும் உருவாக்கப்பட வேண்டும். தாயக மண்ணின் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட நிலையில் கடந்த இருபத்தாறு வருடங்களாக வடபுல முஸ்லிம் சமூகம் பல சொல்லொனா துயரங்களோடும்,அன்று அகதி என்றும் இன்று வந்தான் வரத்தான் என்றும் வடபுல மண்ணிற்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அன்று விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட சகல வடபுல முஸ்லிம் மக்களும்,அவர்தம் சந்ததியினரும் வடபுலத்திற்கே உரித்தானவர்கள்,வடபுல மண்ணில் எந்த நிபந்தனைகளும் அற்ற முறையில் மீள்குடியேற முழு உரிமையும் உடையவர்கள். இது எல்லா தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். 1990 அன்று வெளியேற்றப்பட்ட‌போது ஆயிரம் குடும்பமாக இருந்தவர்கள் இன்று மூவாயிரம் குடும்பங்களாக அதிகரித்திருப்பார்கள். வடபுல முஸ்லிம்கள் அன்று வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால் அவர்களது சாதாரண இயற்கை சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்றவாறு நிலப்பகிர்வு கிடை த்திருக்கும், எனவே இந்த உண்மை நிலை உணரப்பட்டு, மீள்குடியேற வருகின்ற முஸ்லிகள் வடபுல மண்ணில் வாழ வழி கொடுக்கப்பட வேண்டும். வடபுல மண்ணிற்கே உரித்தான மக்கள் மீள்குடியேற வரும்போது நில ஆக்கிரமிப்பு என்றும்,அந்நியர் என்றும் எதிர்ப்பதும் ஆர்ப்பாட்டங்கள் செய்வதும் சிறப்பான செயற்பாடுகள் அல்ல என்பதை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடகிழக்கு முஸ்லிகளை தமது கட்டுப்பாட்டு க்குள் வைத்துக் கொள்ள தமிழ் தரப்பினர் எதிர்பார்ப்பதானது தொடர்ந்தும் முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பை ஏற்க மறுக்கவும்,சமஸ்டி கோரிக்கை,காணி அதிகாரம்,பொலிஸ் அதிகாரம் என்பவற்றிற்கு எதிராக செயற்படவுமே இட்டுச் செல்லும். எனவே தமிழ் சமூகத்தினது டயஸ்போராக்களோடும்,இலங்கையில் இருக்கும் உரிய தமிழ் தரப்பினரோடும் நாம் விரிவான,மனம் திறந்த கலந்துரையாடல்களை தொடர தயாராக உள்ளோம். இரு சமூகத்தினதும் சிவில் சமூகப்பிரதிநிதி களோடு அரசியல் பிரதிநிதிகளும்,அதிகாரிகளும் மேற்கொள்ளக்கூடிய தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளே வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நடைமுறை சாத்தியமுடைய திட்டங்களை உருவாக்கவும்,தமிழ் முஸ்லிம் உறவில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் களைக்கப்படவும்,வடகிழக்கு‌ மண்ணுக்கும்,மக்களுக்கும் தேவையான உண்மையான் அதிகார பாகிர்வை பெற்றுக் கொள்ள அதற்காக இரு இனமும் ஒன்றாக குரல் கொடுக்க வழி வகுக்கும். இந்த நிலைப்பாட்டிலே நின்று நாம் சகல தமிழ் தரப்பினரையும் நம்பிக்கையுடன் கூடிய,மனம் திறந்த பேச்சு வார்த்தைக்கு நேசக்கரம் நீட்டுகின்றோம்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=149936 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஹிஸ்புல்லா சுஜ தம்பட்டம் அடித்த வீடியோ குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

தமிழனுக்கு என்றால் தக்காளி, உங்களுக்கு என்றால் ரத்தமா?

முஸ்லீம் மக்கள் தமக்கு தேவையான காணிகளை அரசுடன் பேசி சட்டபூர்வமாக எடுப்பதில் ஆட்சேபனை இல்லை.

றிசாட், ஹிஸ்புல்லா, அதாவுல்லா போன்ற அரசியல் வாதிகளின் அடாவடித்தனத்தினால், காடழித்து காணி பிடிப்பது தவறு இல்லையா?

கிழக்கின் முதலமைச்சர் பதவி, தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் கிடைத்து உள்ளது. 

அதனை வைத்தே, தமிழர்களுக்கு ஆப்பு அடிக்கும் வேலை, அந்த தமிழர்களை சுமண தேரர் என்னும் பொது எதிரியின் உதவிக்கு போக வைத்த அயோக்கிய தனம் குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள்?

முதலில் உங்கள் அரசியல்வாதிகளுக்கு நல்லுபதேசம் சொல்லுங்கள்.

முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பை ஏற்க மறுக்கவும்,சமஸ்டி கோரிக்கை,காணி அதிகாரம்,பொலிஸ் அதிகாரம் என்பவற்றிற்கு எதிராக செயற்படவுமே இட்டுச் செல்லும் என்ற பயமுறுத்தல் மூலம் தமிழன் தலையில் இனியும் மிளகாய் அரைக்க முடியாது. 

நீங்கள் சிங்களவர்களுடனாவது சேர்த்து வாழுங்கள். உங்கள் அம்பாறையுடன்.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

நீங்கள் சொல்லி போட்டீங்கள், சம்பந்தன் ஜயாவும் எத்தனை நாள் தான்  முஸ்லிமிடம் மன்னிப்பு கேட்பார்.

ஒரு நாள் நாம் முல்லை தீவில் பேரணி போனதற்கே இவ்வளவு களோபரம் என்றால் நாங்கள் தெளிவாக இருந்திருந்தால் எவ்வளவு இவங்களை தடுத்து இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை கனடாவிலை ஒரு முசுலீமுக்கு கூசா தூக்கிறதுக்கு பலபேர் னிக்கினம் ...அவை பேப்பர்காரரும் ,போட்டோகாரரும்...இவையும் எழுதிக் கொடுத்திருப்பினம்...எல்லொருடைய நோக்கமும் எம்.பி ஆகிடோனும்.....நாட்டு மக்களைப் பற்றி கவலையே கிடையாது...மருத்துவக் குழு ஒன்ற்றின் செய்தி பார்த்திருப்பியள்...

Link to comment
Share on other sites

முஸ்லிம்கள் முதலில் 1983 இல் கொழும்பில் தமிழர்களிடம் கைப்பற்றிய சொத்துக்களை மீள அளிக்கட்டும். அத்துடன் வடக்கு கிழக்கில் தமிழரிடம் அபகரித்த காணிகளை மீள அளிக்கட்டும். அத்துடன் பிடித்த கள்ளக்காணிகளை கைவிடட்டும். அதன் பின்னர் முஸ்லிம்களுக்கு நியாயமான பிரச்சினைகள் இருந்தால் அவற்றை தீர்த்துக்கொள்ளலாம்.
 
Link to comment
Share on other sites

முஸ்லீம்கள் தமிழர்களை புதுவழியில் ஏமாற்றலாம் என்று மீண்டும் கிளம்பியிருக்கிறார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Dash said:

நீங்கள் சொல்லி போட்டீங்கள், சம்பந்தன் ஜயாவும் எத்தனை நாள் தான்  முஸ்லிமிடம் மன்னிப்பு கேட்பார்.

அவருக்கும் தொப்பியை போட்டு தங்களோட வைச்சு கொள்ளட்டும். காடுகளை விடட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அவருக்கும் தொப்பியை போட்டு தங்களோட வைச்சு கொள்ளட்டும். காடுகளை விடட்டும்.

ஏற்கனவே அவர்களை  கிழக்கு மாகாண  முதலமைச்சராக்கியபோது போட்டாச்சே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை தேர்தலில் மகிந்த போனமுறை செய்த அடாவடி அரசியல் இருக்காது. கூட்டமைப்பு கவனமா நடந்தா முதல்வர் பதவி நம்பக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வடகிழக்கு முஸ்லிகளை தமது கட்டுப்பாட்டு க்குள் வைத்துக் கொள்ள தமிழ் தரப்பினர் எதிர்பார்ப்பதானது"

"தமிழ் முஸ்லிம் உறவில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் களைக்கப்படவும்"

முஸ்லிம்கள் தமிழ் தேசிய இனத்திற்குள் ஓர் சமூகமே.

மேற்குறிப்பிட வாசகங்கள் மூலம் நீங்கள் (முஸ்லிம்கள்) மென்மையாக உட்புகுத்த முயற்சிக்கும் கருதுகோள்  எது?  

இது ஓர் சிறிய உதாரணமே.

 நீங்கள் வேறு ஓர் தேசம் (அரபி வழிவந்த) தேசம்  எனும் மாயையில் இருந்து  எப்போது விழித்தெழுந்து வெளி வரப்போகிறீர்கள்?  

அரபு தேசங்கள் கூட நீங்கள் அரபி வழிவந்த தேசம் எனும்போது, நகைத்து புறக்கணிக்காமல்,  உங்களை புழுவிலும் கேவலமாகவே நோக்குகிறார்கள்.

ஈழத்தமிழ் தேசத்தின் நலன்களில் இருந்து உன்கருளுடைய அடிப்படை நலன்கள், மத வேறுபாடு நலன்களை தவிர, எவ்வாறு வேறுபடுகிறது.

ஈழத்தமிழ் தேசத்தின் நலன்களில் இருந்து உன்கருளுடைய அடிப்படை நலன்கள் எவ்வாறு வேறுபடுகிறது, மத வேறுபாடு நலன்களை தவிர .  
 
 ஈழத்தமிழ் தேசம் ஒரு போதும் மத அடிப்படையிலான தேசிய அடையாளத்தை ஏற்காது.

மேலும் ஈழத்தமிழ் தேசம்  மதப்பன்முகப்பட்டது மட்டுமன்றி, நிலத்துக்கு அந்நியமான மதங்களை ஏற்று (Eelam tamil nation accepted  religions, that are not native or indigenious to its land, in their own form for what they are.  Eelam tamil nation's acceptance of foreign religions was/is not due to toleration.) தன்னில் ஒருங்கிணைந்து ஒன்றிய தனது தேசத்தில் விரவியதானதாகவே உணர்கிறது.

நீங்கள் (முஸ்லிம்கள்) என் அதில் இருந்து வேறுபட்டு உணர்கிறீர்கள்?

ஏன்  வரலாற்றை திரிக்கிறீர்கள்?  

அகதியாக வந்த உங்களை, அன்றய ஈழத்தமிழ் தேசம் ஆதரவு தந்து தன தேசத்தில் படிப்படியாக விரவி ஒன்றவும் உங்களை (முஸ்லிம்கள்) தானாக தன்னில் தன்னாக ஏற்று கொண்டது.

அதற்கான நீங்கள்  (முஸ்லிம்கள்) செய்யத கைம்மாறு?

அத்தேசத்தின் ஆன்மாவையே துண்டாக்க வரலாற்றை திரித்து, வேறு தேசிய அடையாளங்களுக்கான மாயையான தோற்றுவாய்களைத் தேடுகிறீர்கள்.

அதன் ஓர் பாகமாகவே, அத்தேசம் இழந்த தந்து உரிமைக்காக போராடும் போது அதை கருவறுக்க எல்லா வழிகளிலும் சிங்கள தேசத்திதிற்கு, துரோகமிழைத்து  கூட, உடந்தையாக இருந்தீர்கள்.

இதற்கு மேலும் ஈழத்தமிழ் தேசம் உங்களை, நீங்கள் அத்தேசத்துக்கு உரியவர்கள் என்பதை மறுக்காமல் இருந்தும் கூட, எவ்வாறு நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

4 hours ago, Kadancha said:

நீங்கள் வேறு ஓர் தேசம் (அரபி வழிவந்த) தேசம்  எனும் மாயையில் இருந்து  எப்போது விழித்தெழுந்து வெளி வரப்போகிறீர்கள்?  

இது மாயை என்று   நீங்கள் எந்த ஆதாரத்தை   வைத்து   சொல்கிறீர்கள்?    அரபு  மக்கள் கிறீஸ்துவுக்கு முற்பட்ட  காலத்தில் இருந்தே   கடலோடி  வணிகர்களாக  வாழ்ந்து வந்து இருக்கிறார்கள்.   சேர  நாட்டுடன் ( இன்றைய கேரளா )  கடல் வழி வணிகத்தில் பல  நூற்றாண்டுகளாக அரபிகள் இணைந்து வந்திருக்கிறார்கள். இலங்கையுடன்  நீண்ட காலமாக அவர்கள் வணிகத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். கேரளா ( சேர நாட்டு )  தொடர்பால் அவர்களுக்கு தமிழ் மொழியாகி இன்று அரபித்தமிழ் என்ற மொழி அவர்களுடையதாக உள்ளது. எப்படி  மலையாளம் தமிழில்  இருந்து பிரிந்ததோ அபப்டியே அரபித்தமிழும் ஒரு மொழியாக பிரிந்து இருக்கிறது.  அவர்கள் தமது வரலாறு என்று ஏற்று கொள்வது தான் அவர்களின்  வரலாறு.  அவர்கள் மீண்டும்  மீண்டும் மறுக்க நீங்கள் திணிப்பது  அவர்களின் வரலாறு அல்ல. அப்படி திணிக்க விரும்பினால் முதலில் உங்கள் வரலாற்றை  பிக்குகளை எழுத சொல்லி ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று பாருங்கள்.

4 hours ago, Kadancha said:

அரபு தேசங்கள் கூட நீங்கள் அரபி வழிவந்த தேசம் எனும்போது, நகைத்து புறக்கணிக்காமல்,  உங்களை புழுவிலும் கேவலமாகவே நோக்குகிறார்கள்.

அப்படியா?  எப்படி இலங்கை முஸ்லிம்களுக்கு பெருமளவில் அரபி அரசுகளிடம் இருந்து நன்கொடைகள் வருகின்றன?  முக்கியமாக பள்ளிவாசல்களுக்கும் அரபி பாடசாலைகளுக்கும் எப்படி பண ஆதரவு வருகிறது?

4 hours ago, Kadancha said:

 ஈழத்தமிழ் தேசம் ஒரு போதும் மத அடிப்படையிலான தேசிய அடையாளத்தை ஏற்காது.

மேலும் ஈழத்தமிழ் தேசம்  மதப்பன்முகப்பட்டது மட்டுமன்றி, நிலத்துக்கு அந்நியமான மதங்களை ஏற்று (Eelam tamil nation accepted  religions, that are not native or indigenious to its land, in their own form for what they are.  Eelam tamil nation's acceptance of foreign religions was/is not due to toleration.) தன்னில் ஒருங்கிணைந்து ஒன்றிய தனது தேசத்தில் விரவியதானதாகவே உணர்கிறது.

இலங்கை (ஹெல) தேசம் மொழி , இன மற்றும் மத அடிப்படியிலான தேசிய அடையாளத்தை ஒரு போதும் ஏற்காது. 

4 hours ago, Kadancha said:

ஏன்  வரலாற்றை திரிக்கிறீர்கள்?  

நீங்கள் தான் அவர்கள் வராற்றை திரிக்கிறீர்கள்.

4 hours ago, Kadancha said:

அகதியாக வந்த உங்களை, அன்றய ஈழத்தமிழ் தேசம் ஆதரவு தந்து தன தேசத்தில் படிப்படியாக விரவி ஒன்றவும் உங்களை (முஸ்லிம்கள்) தானாக தன்னில் தன்னாக ஏற்று கொண்டது.

அவர்கள் அகதியாக வரவில்லை. நீங்கள் தான் உலகம் முழுவதும் அகதியாக  அடைக்கலம் தேடுகிறீர்கள்.  நீங்கள் தான் அவர்கள் வராற்றை திரிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு லண்டனில் இயங்கும் இந்தக் கும்பலின் ஒரு குறூப் தீவிர மதவாதப் பிரச்சாரங்களில் முன்னெடுப்பதாகக் கூறி அண்மையில்.. அது இயங்கி வந்த.. இடம் மூடப்பட்டதாக சொல்லக் கேள்வி. அந்த இடம்  செயற்பாடுகள் இன்றி..காலியாத்தான் கிடக்கிறது.  இதுக்குள்ள.. வேண்டுக்கோள் வேற. :rolleyes:tw_blush:

சொறீலங்காவில் அவிக்கிற அவியள்.. மேற்கு நாடுகளில் அவியாது. :rolleyes:

Link to comment
Share on other sites

முஸ்லிம்கள் அரபிகளாக இருந்து இருந்தால் அஸ்ரப்புக்கு பிறகு தான் தாங்கள் தமிழர்கள் அல்ல முஸ்லிம்கள் என்று சொல்ல வேண்டி வந்தது. ஏன் தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் தமிழர்கள் என்றே கூறுகிறார்கள்??

Link to comment
Share on other sites

9 minutes ago, nunavilan said:

முஸ்லிம்கள் அரபிகளாக இருந்து இருந்தால் அஸ்ரப்புக்கு பிறகு தான் தாங்கள் தமிழர்கள் அல்ல முஸ்லிம்கள் என்று சொல்ல வேண்டி வந்தது.

இலங்கை முஸ்லிம்கள் தங்கள் அரபிகள் என்று நீண்ட காலமாகவே பதிந்து வந்திருக்கிறார்கள். அவர்களில் மிகவும் கற்றறிந்தவர்கள் வரலாற்று ஆய்வுகளையும் செய்து இருக்கிறார்கள். ஆனால் தமிழ் தலைவரான செல்வநாயகமே தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தமிழராக ஒன்றிணைக்க முனைந்தார். இதற்க்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆரம்பம் முதலே எதிர்ப்பு இருந்தது.

ஏன் தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் தமிழர்கள் என்றே கூறுகிறார்கள்??

தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் முஸ்லிம்களாக மதம் மாறிய தமிழர் நிறையவே இருக்கிறார்கள். முஸ்லிம் அரசர்கள் தமிழ் நாட்டை ஆண்ட காலம் இருந்தது. விரும்பியும் கட்டாயப்படுத்தப்பட்டும் முஸ்லிம்களாக மாறிய தமிழரின் வாரிசுகள் தம்மை அரபிகள் என்று அடையாளப்படுத்துவதில்லை. அவர்கள் தமிழர்களே. மேலும் சாதி முறையால் பாதிக்கபட்ட இந்துக்கள் இன்றும் கிறீஸ்தவ, பவுத்த மற்றும் இசுலாமிய மதங்களுக்கு மாறுகிறார்கள். இவ்வாறு மாறும் முஸ்லிம்கள் தமிழர்களே - அரபிகள் அல்ல.

இலங்கையில் இப்படி முஸ்லிம்களாக மதம் மாறும் தமிழர்கள் குறைவு. திருமண காரணங்களுக்காக மதம் மாறுபவர்களை தவிர தமிழர்கள் முஸ்லிம்களாக மதம் மாறுவது மிகவும் குறைவு. வரலாற்றில் தமிழ் மக்களை ஆண்ட முஸ்லிம் அரசர்களும் இலங்கையில் வரலாற்று பதிவில் அறியுப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலைத்தேயத்திற்கு(வத்திக்கான் உட்பட) முஸ்லீம்களின் போக்கு அறவே பிடிக்காது. அரசியல் நிலையை வைத்து நல்லவர்கள் போல் நடித்து கழுத்தறுக்க வேண்டிய இடத்தில் அறுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இருந்தாலும் தங்களை நல்லவர்களாக காட்ட இலங்கை போன்ற பஞ்சப்பரதேசி நாடுகளில் முஸ்லீம்களுக்காக குரல் கொடுப்பார்கள்.
அதுக்கு எங்கடையளும்  அந்தமாதிரி தூக்கி குடுக்குங்கள்......tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jude,

1 hour ago, Jude said:

இது மாயை என்று   நீங்கள் எந்த ஆதாரத்தை   வைத்து   சொல்கிறீர்கள்?    அரபு  மக்கள் கிறீஸ்துவுக்கு முற்பட்ட  காலத்தில் இருந்தே   கடலோடி  வணிகர்களாக  வாழ்ந்து வந்து இருக்கிறார்கள்.   சேர  நாட்டுடன் ( இன்றைய கேரளா )  கடல் வழி வணிகத்தில் பல  நூற்றாண்டுகளாக அரபிகள் இணைந்து வந்திருக்கிறார்கள். இலங்கையுடன்  நீண்ட காலமாக அவர்கள் வணிகத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். கேரளா ( சேர நாட்டு )  தொடர்பால் அவர்களுக்கு தமிழ் மொழியாகி இன்று அரபித்தமிழ் என்ற மொழி அவர்களுடையதாக உள்ளது. எப்படி  மலையாளம் தமிழில்  இருந்து பிரிந்ததோ அபப்டியே அரபித்தமிழும் ஒரு மொழியாக பிரிந்து இருக்கிறது.  அவர்கள் தமது வரலாறு என்று ஏற்று கொள்வது தான் அவர்களின்  வரலாறு.  அவர்கள் மீண்டும்  மீண்டும் மறுக்க நீங்கள் திணிப்பது  அவர்களின் வரலாறு அல்ல. அப்படி திணிக்க விரும்பினால் முதலில் உங்கள் வரலாற்றை  பிக்குகளை எழுத சொல்லி ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று பாருங்கள்.

அப்படியா?  எப்படி இலங்கை முஸ்லிம்களுக்கு பெருமளவில் அரபி அரசுகளிடம் இருந்து நன்கொடைகள் வருகின்றன?  முக்கியமாக பள்ளிவாசல்களுக்கும் அரபி பாடசாலைகளுக்கும் எப்படி பண ஆதரவு வருகிறது?

இலங்கை (ஹெல) தேசம் மொழி , இன மற்றும் மத அடிப்படியிலான தேசிய அடையாளத்தை ஒரு போதும் ஏற்காது. 

நீங்கள் தான் அவர்கள் வராற்றை திரிக்கிறீர்கள்.

அவர்கள் அகதியாக வரவில்லை. நீங்கள் தான் உலகம் முழுவதும் அகதியாக  அடைக்கலம் தேடுகிறீர்கள்.  நீங்கள் தான் அவர்கள் வராற்றை திரிக்கிறீர்கள்.

இதில் இருந்தே உங்கலின் அவர்கள் பற்றிய அறிவின் மற்றும் இலங்கைத் தீவின் வரலாறு பரவை தன்மை புரிகிறது.

நீங்கள் எழுதியவையே உங்களின் வாதங்களை நிராகரிப்பதட்கு போதும்.

இது மாயை என்று   நீங்கள் எந்த ஆதாரத்தை   வைத்து   சொல்கிறீர்கள்?

நான் சாதி வெறியன் அல்ல. ஆனால் வரலாற்றை பற்றி கதைக்கும் பொது முஸ்லிம்களின் வரலாறு சாதியோடு, முக்கியமாக அன்றய தாழ்த்தப்பட்ட அல்லது கீழ் சதியோடு தொடர்புபட்டது. எனவே அதை இங்கு  (வருத்ததுடன்)   குறிப்பிட்டே  ஆகவேண்டும்.

நீங்கள் சொல்வதில் இருந்து கேரளா மற்றும் தமிழ் நாடு முஸ்லிம்கள் அரபி வழிவந்த தேசம்!! கேரளா மற்றும் தமிழ் நாடு முஸ்லிம்கள் தங்கள் கேரளா தேசம் என்பதில் மிகவும் தெளிவாகவும் உறுதியாவும் உள்ளார்கள். அதாவது  கேரளா, தமிழ் தேசத்தின் ஓர் பகுதியினர் (சாதி காரணமாக) மத மாற்றத்திட்கு உட்பட்டு  முஸ்லிம்கள் ஆகினர். அந்த மாற்றத்தில் அவர்களின் சிற்சில தமிழ் பண்பாடுகள் பழக்கவழங்கள் திரிவடைந்தது மற்றும் மாற்றத்திட்கு உட்பட்டது. ஆனால் அவர்கள் தமது தாயை (கேரளா, தமிழ் தேசம்) அன்றய தமது கீழ்த்தர நிலை காரணமாக உதறி கைவிடவோ, மாற்றவோ அதற்கும் மேலே சென்று ஒப்பீட்டளவில் உயர்வாக நோக்கப்படும் இன்னோர் பெண்ணை (அதாவது இனத்தை) தமது தயாகவோ வரிந்து கட்டி அதட்கான பௌதிக ஏதுவாய்களை செயற்கையக உருவாக்கவோ அவர்களை தாங்கள் அதேசத்தவர்கள்  (கேரளா, தமிழ் தேசம்)  என்ற உணர்வு தடுத்தி நிற்கிறது.

தனி மனித உதரணமாக, எனது நேரடி வழி மிகவும் தொன்மையான பாட்டியை,  அன்றய சமுதாயம் ஏதோ ஓர் காரணத்திற்காக வேசி என்று நோக்கியதத்திற்காக அந்தப் பாட்டி எனது பாட்டியார் இல்லாமல் ஆகி விடுவாரா? அல்லது அந்தப் பாடியின் நடத்தை காரணமாக அவர் ஓர் சில அரபு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் நான் அரபி இனத்தவன் ஆகி விடுவேனா? நிச்சயமாக நான் அந்தப் பாட்டியை எனது வழி  சந்ததியில் இருந்து நீக்கி விட (disown) முயறசிக்கமாட்டேன். அந்தப் பாட்டியை எனது சந்ததியில் இருந்து  நீக்கி விட (disown) வேறோர், ஒப்பிடாலாவில் உயர் வாக பார்க்கப்படும் இனத்தவள் என்று தொடமளிப்பதகான பௌதிக எதுவாய்களை தோற்றுவிக்க முயற்சிகமாட்டேன்.    

இலங்கை முஸ்லிம்களின் நான் மேலே கூறிய உதாரணத்திடற்கும் மேலே சென்று  தமது சொந்த அடையாளத்தை அழித்து ஒப்பீட்டளவில் உயர்வாக பார்க்கப்படும் அரபுவின் வேசி மகன்களாக கூட இருபதற்கான முயதர்சியில் ஈடுபட்தூளார்கள்.

இலங்கை முஸ்லிம்களின் genetics makup இலங்கையில் உள்ள பூர்விக தமிழர்மற்றும்  சிங்களவர்களின் genetics makup உடனோ அல்லது அரபு genetics makup உடனோ எதுவித பொருத்தமும்  இல்லாதது. இலங்கை பூர்விக தமிழர்மற்றும்  சிங்களவர்களின் genetics makup நூற்றுக்கு நுறு வீதம் பொருந்துகிறது.

ஆயினும் இலங்கை முஸ்லிம்களின் genetics makup தமிழ் நாடு தமிழரின் genetics makup உடனும் நவீன சிங்களவரின் genetics makup உடனும் நன்கு பொருந்துகிறது.

ஏனெனில், நவீன சிங்களவரின் (அண்ணளவாக 50% தற்போதைய சிங்கள சனத்தொகை) வழிவந்த தோற்றமும் இலங்கை முஸ்லிம்களின் வழிவந்த தோற்றமும் தற்போதய தமிழ் நாடு தமிழர்களின் மற்றும் கேரளா மலையலாதவரும் வழியே.   

நவீன அல்லது பூர்விக்க சிங்களவரிடமோ மற்றும் முஸ்லிகளிடமோ சுவடளவில் கூட முறையே ஆரிய genetics  makup போ அல்லது அரபு   genetics  makup போ இல்லை. அப்படி இருப்பது ஓர் சில 100 குடும்பங்களின் குறுகிய வட்டத்தினுள் நின்றுவிடுகிறது.

இதை தற்போதைய சிங்கள தேசமும் நன்கு அறியும். சிங்கள தேசம் கூட முஸ்லிம்களை இலங்கைத்தீவு பூர்விக குடிகளாக ஏற்கவில்லை.  டி . ஸ் சேனநாயக்க கூட சிங்கள தமிழ் இனத்துவேசத்திலும், சிங்களவறையும் தமிழரையும் மட்டுமே இலங்கைத் தீவின் பூர்விக குடிகளாக பார்க்கிறார்.

"இலங்கை (ஹெல) தேசம் மொழி , இன மற்றும் மத அடிப்படியிலான தேசிய அடையாளத்தை ஒரு போதும் ஏற்காது." 

தற்போதைய ஈழத்தமிழ், சிங்கள தேசங்களின் தோற்றுவாய்களுக்கான வாதங்களுக்கு அப்பால், ஹெலவே மொழி, அத்தேசமும் மொழி வழியே தன்னை அடையாளப்படுத்தி அழைத்து. அதை நீங்கள் உங்களை அறிந்தோ அல்லது அறியாமலோ ஏற்றதற்கு நன்றி.

I will answer the rest later.

நேரம் போதாமையால் தற்போது நிறுத்தி வேறு நேரத்தில் தொடர்கிறேன்.

"பண்டாரநாயக்கா"
நாயக்க எல்லோரும் தெலுங்கர்கள் இவர்கள் சிங்களவரே கிடையாது.
கண்டியை இறுதியாக ஆண்டு பிரிடிஷ் படைகளுடன் போரிட்டு இறந்த 
கண்டி தமிழ் மன்னனும் ......தமிழ் நாட்டு அடியை கொண்டவனே தவிர 
தமிழன் இல்லை .... அவனது மூப்பட்ட்னர்களும் நாயக்கர்கள்தான். 

இலங்கையுடன் வணிக உறவு யாருக்கும் இருந்ததில்லை 
மாறி மாறி சோழ சேர பாண்டிய ராஜ்ஜியத்தில் யார் கைப்பறினார்களோ 
அவர்களே பண்டமாற்றை செய்து வந்தார்கள் 
அனுராதபுரதில் ... இலங்கை மத்தியில் மட்டுமே சோழ ராஜ்ஜியம் நிலைத்து நின்று இருக்கிறது 
தமிழ் நாட்டில் ராஜேந்திர சோழனின் வீழ்ச்சியின் பின்பும் நிலைத்து நின்ற ஒரே 
ஒரே சோழ ராஜ்ஜியம் இலங்கை மத்திய ராஜ்ஜியம்தான் இது எல்லாள மன்னன் வீழும்வரை வாழ்ந்து இருக்கிறது. 

இலங்கை முஸ்லிம்களுக்கும் அரபு நாடுகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது 
அப்பப்போ வந்து போன முகாலய  படையெடுப்புகளின் எச்சங்களாக மிஞ்சி 
தமிழ்நாடு கேரளா ஊடாக சமீபத்திய காலத்தில் வந்து சேர்ந்தவர்கள்தான் இலங்கை 
முஸ்லிம்கள்.

போர்த்துகீசிய போர்கள் அவர்களுடைய எந்த குறிப்பிலும் முஸ்லிம்கள் பற்றி 
ஒரு வரி கூட இல்லை (ஆனால் இருந்து இருக்கலாம் ). சிறிய குழுக்கள் ஆக  அவர்கள் தமிழ்நாடு 
ஊடக வந்தவர்கள்தான் 

டச்சு காலத்து குறிப்புகளில்தான் மூர்கள் (moors) பற்றியவை 
அறியப்படுகிறது ....... முஸ்லிம்களே தாம் மூர்கள் என்பதை 
சொல்லி வருகிறார்கள் .
மேலே அவர் ஏன் திரிகிறார் எனபது  புரியவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

இலங்கை முஸ்லிம்களின் நான் மேலே கூறிய உதாரணத்திடற்கும் மேலே சென்று  தமது சொந்த அடையாளத்தை அழித்து ஒப்பீட்டளவில் உயர்வாக பார்க்கப்படும் அரபுவின் வேசி மகன்களாக கூட இருபதற்கான முயதர்சியில் ஈடுபட்தூளார்கள்.

இலங்கை முஸ்லிம்களின் genetics makup இலங்கையில் உள்ள பூர்விக தமிழர்மற்றும்  சிங்களவர்களின் genetics makup உடனோ அல்லது அரபு genetics makup உடனோ எதுவித பொருத்தமும்  இல்லாதது. இலங்கை பூர்விக தமிழர்மற்றும்  சிங்களவர்களின் genetics makup நூற்றுக்கு நுறு வீதம் பொருந்துகிறது.

ஆயினும் இலங்கை முஸ்லிம்களின் genetics makup தமிழ் நாடு தமிழரின் genetics makup உடனும் நவீன சிங்களவரின் genetics makup உடனும் நன்கு பொருந்துகிறது.

ஏனெனில், நவீன சிங்களவரின் (அண்ணளவாக 50% தற்போதைய சிங்கள சனத்தொகை) வழிவந்த தோற்றமும் இலங்கை முஸ்லிம்களின் வழிவந்த தோற்றமும் தற்போதய தமிழ் நாடு தமிழர்களின் மற்றும் கேரளா மலையலாதவரும் வழியே.   

நவீன அல்லது பூர்விக்க சிங்களவரிடமோ மற்றும் முஸ்லிகளிடமோ சுவடளவில் கூட முறையே ஆரிய genetics  makup போ அல்லது அரபு   genetics  makup போ இல்லை. அப்படி இருப்பது ஓர் சில 100 குடும்பங்களின் குறுகிய வட்டத்தினுள் நின்றுவிடுகிறது.

இதை தற்போதைய சிங்கள தேசமும் நன்கு அறியும். சிங்கள தேசம் கூட முஸ்லிம்களை இலங்கைத்தீவு பூர்விக குடிகளாக ஏற்கவில்லை.  டி . ஸ் சேனநாயக்க கூட சிங்கள தமிழ் இனத்துவேசத்திலும், சிங்களவறையும் தமிழரையும் மட்டுமே இலங்கைத் தீவின் பூர்விக குடிகளாக பார்க்கிறார்.

"இலங்கை (ஹெல) தேசம் மொழி , இன மற்றும் மத அடிப்படியிலான தேசிய அடையாளத்தை ஒரு போதும் ஏற்காது." 

தற்போதைய ஈழத்தமிழ், சிங்கள தேசங்களின் தோற்றுவாய்களுக்கான வாதங்களுக்கு அப்பால், ஹெலவே மொழி, அத்தேசமும் மொழி வழியே தன்னை அடையாளப்படுத்தி அழைத்து. அதை நீங்கள் உங்களை அறிந்தோ அல்லது அறியாமலோ ஏற்றதற்கு நன்றி.

I will answer the rest later.

நேரம் போதாமையால் தற்போது நிறுத்தி வேறு நேரத்தில் தொடர்கிறேன்.

இதுதான் உண்மை

அருமையான பதில்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின், பாகிஸ்தானியருக்கான சிறப்பு குடியுரிமைச் சட்டம் வந்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, பாகிஸ்தான் தனிநாட்டுக் கோரிக்கை வைத்தபோது, சுதந்திரம் கிடைக்கும் போது வரப்போகும் பெரும் கலவரத்தில் இருந்து தப்ப பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைக்கு ஓடிவந்தனர் பாகிஸ்தான் போயிருக்க வேண்டிய முஸ்லீம்கள்.

இவரகள் வம்சாவழி தான்... அசாத் அலி, கக்கீம், அஸ்ரப், அதாவுல்லா....

சரும நிறம் கறுப்பு இல்லை.

வியாபாரத்துக்காக வந்து போன அரபி வியாபாரிகள் உள்ளூர் பெண்களுடன் வைத்த தொடர்பால் இன்னுமோர் குழு உருவாகியது. இவர்களுடன் தமிழகத்தில் இருந்தும் இணைந்த பலர்.... பிரிட்டிஸ் காலத்தில்.

அவர்களுடன்... சாதிக் கொடுமைகள் காரணமாக மதம் மாறிய வேறு ஒரு குழு... 

இவர்கள் சரும நிறம் கறுப்புத்தான். இந்த கறுப்பர்களுக்கும், கறுப்பல்லாதவர்களுக்கமே ஆகாது. சாதாரண மக்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளிலும் கூட, அவர்களிடையேயான பலத்த போட்டியும் காண்கிறோம்.

மதம் மாறினாலும்... இந்த சாதிய பின்புலம் காரணமாக ஒரு வகையில் தாழ்த்தப்பட்டவர்கள் தான்.

பாகிஸ்தான் சிந்திக்காரர்கள் பணத்துடன் வந்ததால் கொழும்பு பெரும் வியாபாரங்கள் அவர்கள் கையில்...

இவர்களும், லோக்கல்களும்....சரியாக தமிழகத்தின் ஆரிய பிராமணர்களும் லோக்கல்களும் நிலைக்கு சமமானது.

இது தான் சரித்திரம். அரபு நாடுகளில்... ஈராக் சதாம் முதல்... பாகிஸ்தான் ஹியா வுல் ஹக்... சவூதீ இளவரசர்கள் என உதவிகள் பெறப்பட்டுள்ளன.

இன்று இவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் காரணமாக கண்காணீக்கப்படுகின்றன.

இந்த தீவிரவாத நிலையே... சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இவர்களை பார்க்க வைத்துள்ளது. இது துரதிஸ்டவசமானது ஆயினும் அவர்களது அரசியல் வாதிகளால் ஏற்படுத்தப்பட்டது.

Link to comment
Share on other sites

13 hours ago, Kadancha said:

இலங்கை முஸ்லிம்களின் genetics makup இலங்கையில் உள்ள பூர்விக தமிழர்மற்றும்  சிங்களவர்களின் genetics makup உடனோ அல்லது அரபு genetics makup உடனோ எதுவித பொருத்தமும்  இல்லாதது. இலங்கை பூர்விக தமிழர்மற்றும்  சிங்களவர்களின் genetics makup நூற்றுக்கு நுறு வீதம் பொருந்துகிறது.

ஆயினும் இலங்கை முஸ்லிம்களின் genetics makup தமிழ் நாடு தமிழரின் genetics makup உடனும் நவீன சிங்களவரின் genetics makup உடனும் நன்கு பொருந்துகிறது.

ஏனெனில், நவீன சிங்களவரின் (அண்ணளவாக 50% தற்போதைய சிங்கள சனத்தொகை) வழிவந்த தோற்றமும் இலங்கை முஸ்லிம்களின் வழிவந்த தோற்றமும் தற்போதய தமிழ் நாடு தமிழர்களின் மற்றும் கேரளா மலையலாதவரும் வழியே.   

இந்த ஆய்வுக்கான இணையமுகவரியை தருவீர்களா? இதை பற்றி அறிய பயனுள்ளதாக அமையும். இந்த ஆய்வின் படி இலங்கை பூர்வீக தமிழருக்கும் தமிழ்நாட்டு தமிழர் மற்றும் மலையாளிகளுக்கும் மரபணு வழியில் தொடர்பு இல்லை. ஆனால் இலங்கையின் பூர்வீக தமிழரும் பூர்வீக சிங்களவரும் ஒரே மரபணுவை கொண்ட ஒரே மக்கள் - தனியான பூர்வீக குடிகள். இலங்கை  தமிழ்மக்கள் தமிழ்நாட்டை தமது தாய்வழி நாடு போல பார்ப்பது அர்த்தமற்றதாகிறது. முஸ்லிம்களுக்கு அப்பாற்பட்டு, இலங்கை தமிழரினதும் சிங்களவரினதும் வரலாற்றுடனும் பூர்வீகத்துடனும்  சம்பந்தப்பட்ட அறிவுக்கு இந்த ஆய்வு வளம் சேர்க்கிறது.

முஸ்லிம்களின் அரபி கலப்பு பற்றி குறிப்பிட்டு அவர்கள் தம்மை அரபிகள் என அழைப்பதை நீங்கள் நிராகரித்து இருக்கிறீர்கள். தமது பெற்றோர் வழியில் உயர்வானதாக கருதப்படும் வழியை மக்கள் தமதாக கருதுவது இயல்பானது. தாழ்வானதாக கருதப்படுவதை தமது இனமாக அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மற்றவர்களான நாம் எப்படி அவர்களை கட்டாயப்படுத்துவது? அது சரியானதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 10 நிமிட விடியோவை பார்த்தால் உண்மை புரியும்.
சாண்டில்யனின் புத்தகங்கள் இந்த ஆதாரங்களை கொண்டே எழுத பட்டவை 
200இல் சேர பேரரசு இமயம் வரை ஆண்டதும் ....
800களில் பாண்டிய ராஜ்ஜியம் கலிங்கம் வரை நீண்டதும் 
பின்பு விஜயராஜ்ஜியம் தமிழ்நாடு இலங்கை பூராக விரிந்தது 
இப்போதான் எமக்கு முதன் முதலில் வைஷ்ணவம் பரவுகிறது 
இப்போதிருக்கும் இந்துமதம் என்ற குப்பை விஜ ராஜ்ஜியத்தின் 
விரிசலால் வந்ததே.
சேர சோழ பாண்டிய போர்களும் மாறி மாறி வீழ்ந்த ராஜ்ஜியங்களும் 
நாம் படித்த அதே கால பகுதியுடன் இருக்கிறது.
முகாலய பேர் அரசு விரிவுற்ற போதுதான் இஸ்லாம் விஜய ராஜ்ஜியம் தாண்டி 
தென்னிந்திய எல்லைக்கு வருகிறது .......

இதில் வரும் இறுதி காலம் சரியாக இல்லை ..........
மேலே பஞ்சாப் ராஜ்ஜிமும் .... கீழே மராத்திய ராஜ்ஜியமும் (வீர சிவாஜி)
ஒரே காலத்தில் விரிவுற்றுதான் மொகலாய ராஜ்ஜியத்தை இந்தியாவில் 
இருந்து துடைத்து அழித்தார்கள் என்றுதான் நாம் படித்துள்ளோம் 
இந்த வீடியோவில் அது இல்லை .

ஒரு முக்கிய விடயம் திராவிடர்களான விஜய ராஜ்ஜியம் தவிர்த்து யாரும் 
தமிழ் நாடு வரவில்லை எனப்துதான் ....... விஜராஜ்ஜியம் விரிந்த கதை எல்லோருக்கும் 
தெரியும் தமிழனின் துரோகத்தால் காட்டி கொடுக்கப்பட்டே ஒரு பாண்டிய அரசன் 
வீழ்ந்தான் ......... பின்பு யார் விஜ ராஜ்ஜிய அரசன் ஒருவனை கூட்டிவந்தனோ 
அவனையும் போட்டு தள்ளிவிட்ட்டே விஜ பேர் அரசு தமிழக பூராக விரிந்தது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.