Jump to content

பாடசாலைக் காணி அபகரிப்பை மூடி மறைக்கமுற்பட்டால் மாவட்டச் செயலகம் தீக்கிரையாக்கப்படும் : சுமணரத்ன தேரர்


Recommended Posts

பாடசாலைக் காணி அபகரிப்பை மூடி மறைக்கமுற்பட்டால் மாவட்டச் செயலகம் தீக்கிரையாக்கப்படும் : சுமணரத்ன தேரர்

 

 

நீங்கள் நியாயம் வழங்கும் போது உங்களை வெளியேற்றுவார்கள் என பயப்படவேண்டாம். உங்கள் சேவையை செய்யுங்கள் அதேவேளை அரசாங்க அதிபரை வெளியேற்றி இந்த பிரச்சினையை மூடி மறைக்க முற்படுவடுவர்களாயின் அன்று இந்த மாவட்டச் செயலகம் தீக்கிரையாக்கப்படும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரிடம் சுட்டிக் காட்டினார்.

sumanarathna.jpg

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின்  காணி மற்றம் மக்களின் குடியிருப்பு காணிகளை சகோதர இனத்தவர்களால் அத்துமீறி அபகரித்த விடயம் தொடர்பாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மாணவர்கள், நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந் நிலையில் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சகிதம் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி சாள்ஸை சந்தித்தனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான  காணி மற்றம் மக்களின் குடியிருப்பு காணிகளை  சகோதர இனத்தவர்களால் அத்துமீறி அபகரித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை அப் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளை அழைத்து அதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஆகியோரிடம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி சாள்ஸ் உறுதியளித்துள்ளார்.

 

இது தொடர்பாக் சுமணரத்ன தேரர் அரசாங்க அதிபரிடம் பாடசாலையின் மைதானத்தின் நடுவிலே அமைக்கப்பட்டுள்ள கொட்டகை களற்றப்படவேண்டும் இதனை நாங்கள் பலத்தகாரமாக களற்ற முடியாது அரசாங்க அதிபரே நீங்கள் இதனை உங்கள் கண்ணால் காண்பது நல்லது எனக்கு தெரிந்த காலம் தொடக்கம் இந்த  மக்கள் மட்டக்களப்பு நகருக்கு வந்து இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு நியாயம் கிடைக்கவில்லை ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து அநீதி ஏற்பட்டிருக்கின்றது குட்டக்கட்ட குனிந்து இயலாத கட்டத்திலே என்னிடம் வந்து இதனை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நான் இன ,மதவாதியோ அல்ல ஆனால் இந்த பாடசாலை மைதானத்தில் நடுவில் அத்துமீறி  அமைக்கப்பட்ட கொட்டகைக்கு முற்றிலும் நான் எதிர்ப்பு அது சிங்களவரே தமிழரே, முஸ்லீமோ யாராக இருந்தாலும் அது தவறு எனவே இதனை அரசாங்க அதிபர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரமுடியும்.  

எனவே 28  ஆம் திகதி வரும்போது அந்த மைதானத்தின் நடுவே இருந்த கொட்டகை அகற்றப்படவேண்டும் இல்லாவிடில் 29 ஆம் திகதி நான் அதனை களற்றுவேன். இந்த நாட்டின் நீதிமன்றத்தின் சட்டத்திற்கு பொறுப்புடன் கூறுகின்றேன். வீட்டை உடைத்த அத்துமீறி சென்றது என கைது செய்யவேண்டாம். இதனை செய்வது ஒரு இனத்திற்கான அநீதியாகும். என்னால் களற்ற முடியும் இது உண்மை எனவே இனவாத முரண்பாடுகள் சண்டைகள் ஏற்படுவதற்கு முன்னர் நீங்கள் அப்பாவி மக்களுக்கு உத்தியோகத்தர் ரீதியில் செயற்படவேண்டும் நீங்கள் அநீயாயங்கள் வரும்போது அதற்கு நடவடிக்கைகள் எடுக்கின்றீர்கள் இதனை இறுதி தீர்மானம் எடுக்கப்படுவதில்லை அரசாங்க அதிபர் நீங்கள் கட்டளை பிறப்பீக்கின்றீர்கள் ஆனால் வாழைச்சேனை பிரதேச செயலாளரே அவருக்கு தேவையான முடிவை அவர் எடுப்பார்.

 இந்த நிலையில் நீங்கள் நியாயம் வழங்கப்படும் போது உங்களை வெளியேற்ற இருக்கின்றார்கள் என பயப்படவேண்டாம் உங்கள் சேவையை செய்யுங்கள் அதேவேளை அரசாங்க அதிபரை வெளியேற்றி இந்த பிரச்சினையை மூடி மறைக்க முற்படுவடுவர்களாயின் அன்று இந்த மாவட்டச் செயலகம் தீக்கிரையாக்கப்படும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அரசாங்க அதிபரிடம் சுட்டிக் காட்டினார்.

அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் இப்பிரச்சனை தொடர்பாக பெறுமையாக இருக்குமாறும் அரசாங்க அதிபருக்கு காணி அதிகாரம் அதனை தலையிடக்கூட  அதிகாரம் இல்லை  காணிகளை அத்தமீறி இருப்போருக்க எதிராக பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். இருந்தபோதும் அதற்குரிய அதிகாரிகளை கூப்பிட்டு பரிசீலித்து  மாகாணசபை மாகாண காணி அதிகாரி இதன் சட்டத்தரணிகள் இருக்கின்றனர்; எனவே சட்டரீதியாக தீர்க்கப்படவேண்டும் இதற்க எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை உரிய அதிகாரிகளை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து தெற்கான தீர்வை பெற்ற தருவதாக அவர் உறுதி மொழியளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர் .

http://www.virakesari.lk/article/22090

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காக நான் பிக்கருக்கு ஒரு சல்யூட் அடிக்கிறன்  ஒரு தமிழ் அரசியல் வாதி இதற்கு பேச்சு கொடுக்குறானா இல்லை ஆனால் வாழைச்சேனையில்  ஒரு எதனோல் சாலை வருகிறது என்றால் அதற்கு சண்டை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்துறானுகள் அடேய் திருந்துங்கடா டீயும் வண்ணூம் வாங்கித்தாரன்  அபிவிருத்தியில் மட்டுமே கைவைக்க துணிந்தவர்கள் தான் என்கட ரசியல் வாதிகள்  எதனோல் சாலை அமைவதால் பலருக்கு தொழில் கிடைக்கும்   என்றும் தெரிந்தும் ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டம்  அல்லவா 

யோகேஸ்வரன் எம்பி நிங்கள் பிடுக்குற ஆணீகள் எல்லாம தேவையானதா அல்லது தேவை இல்லாததா  சொல்லுங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தனி ஒருவன் said:

யோகேஸ்வரன் எம்பி நிங்கள் பிடுக்குற ஆணீகள் எல்லாம தேவையானதா அல்லது தேவை இல்லாததா  சொல்லுங்க

முனி சாரி தனி 
யோகேஸ்வரன் ஆணியாவது புடுங்குகிறாரா ...? பரவயில்லையே ....
இதைத்தான் நாங்கள் அப்போதே சொன்னோமே ஒரு பைசா பிரயோசனமற்ற வெத்து வேட்டுகள் என்று 
என்ன செய்வது ...வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் 

Link to comment
Share on other sites

அடுத்த தேர்தலுக்கு அடித்தளம் போடப்படுகிறதா....? கிழக்கு மாகாணத்தில் சுமணரத்தன தேரர்  சயேட்சையாக நின்றாலும் வெற்றிகொள்ளும் சந்தர்ப்பம் கூடிவருகிறது. இனித் தமிழ் எம்பீக்கள் அணிலேற விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Paanch said:

அடுத்த தேர்தலுக்கு அடித்தளம் போடப்படுகிறதா....? கிழக்கு மாகாணத்தில் சுமணரத்தன தேரர்  சயேட்சையாக நின்றாலும் வெற்றிகொள்ளும் சந்தர்ப்பம் கூடிவருகிறது. இனித் தமிழ் எம்பீக்கள் அணிலேற விடுவார்கள்.

பரவாயில்லை அவருக்காவது தமிழர்கள் பிரச்சினை தெரிந்திருக்கிறது  என்னை பொறுத்த வரைக்கும்  இனி கிடைப்பதே லாபம் 

அவருக்கு ஒரு ஓட்டாவது போடுவன்  ஒரு தமிழண்ட பிரச்சினைக்கு குரல் கொடுக்கிறானே தெரிந்தே நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க ஆள் இல்லாத போது  ஒரு குரலாவது எழுப்புகிறார் இவரை சிங்கள் ஊடகங்கள் பெரிதாக காட்டும் போது அவர்களுக்கும் முஸ்லீம் கள் வில்பத்தில் செய்த காரியம் தற்போது கிழக்கில் நடக்கிறது என அறிந்து கொள்வார்கள் .

17 hours ago, அக்னியஷ்த்ரா said:

முனி சாரி தனி 
யோகேஸ்வரன் ஆணியாவது புடுங்குகிறாரா ...? பரவயில்லையே ....
இதைத்தான் நாங்கள் அப்போதே சொன்னோமே ஒரு பைசா பிரயோசனமற்ற வெத்து வேட்டுகள் என்று 
என்ன செய்வது ...வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் 

பார்ப்போம் வேடிக்கை மட்டுமே பார்ப்போம் வேறு என்ன செய்ய முடியும் நாங்கள் முஸ்லீம் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் தமிழர்களின் இருப்புக்களில் கைவைக்க வேண்டாம்  என்றே கூறுகிறோம்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.