Jump to content

உலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்த அடிகளார்!


Recommended Posts

Vipulandar2

அகிலம் போற்றும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்து 27ஆம் திகதியுடன் 125வருடங்களாகின்றன.
அவர் மட்டக்களப்பின் தென்கோடியிலுள்ள காரைதீவு எனும் நெய்தலும் மருதமும் ஒருங்கே அமையப்பெற்ற பழந்தமிழ்க் கிராமத்தில் பிறந்தார்.

சாமித்தம்பி கண்ணம்மை தம்பதியினர் தவமிருந்து 1892-03-27 இல் அடிகளாரைப் பெற்றெடுத்தனர். அப்பகுதியில்தான் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயமும் உள்ளது. காரைதீவின் காத்தல் தெய்வமாம் பத்தினித்தெய்வம் கண்ணகியைக் குலதெய்வமாகவும் அவ்வம்மையின் நாமத்தைத் தாங்கியவருமாகிய கண்ணம்மையின் வயிற்றில் முதலாவது உதித்தவர் அடிகளார்.

இன்றும் கண்ணகை அம்மனாலயத்தைப் பரிபாலித்து வருகின்ற விஜயராஜன் குடியார் என்று சொல்லப்படுகின்ற வம்வத்தைச் சேர்ந்தவர். அவர் அக்காலத்தின் விதானையாக (பொலியானை - அக்கால பொலிஸ் தலைமைக்காரர்) இருந்தார்.
அடிகளார் இயற்பெயரான தம்பிப்பிள்ளை என்ற நாமத்தோடு பிறந்தார். அவர் நோய்வாய்ப்படவே கதிர்காமத்திற்குக் கொண்டு சென்று விரதம் அனுஷ்ட்டித்து நோய் குணமாகவே முருகப் பெருமானின் பெயரான 'மயில்வாகனன்' எனும் பெயரை அவருக்குப் பெற்றோர் சூட்டினர்.அதனால் அவரது பிறப்புப் பதிவில் தாமதமாயிற்று. ஆதுனுர்லு; அவரது பிறப்பத்தாட்சிப்பத்திரம் மே மாதத்தில்தான் பதிவுவைக்கப்பட்டது. அதற்காக அவர் மேயில் பிறக்கவில்லையென்பதை கவனத்திற்கொள்க.

மட்டக்களப்பு மாநிலத்தில் வாராது வந்துதித்து உலகின் எட்டுத்திசைகளிலும் தமிழ் மொழியின் எழிலைப்பரப்பியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். முத்தமிழ் வித்தகரான அந்த முனிவரின் தமிழ்ப்பணிகள் பற்றி பலகோணங்களிலும் எழுதமுடியும்.

1898 இல் ஆறுவயதில் பள்ளியில் சேர்ந்தார். 1902-இல் மெதடிஸ்ட் பள்ளியிலும் பின்பு மட்டக்களப்புக் கல்லூரியிலும் பிறகு ஆர்ச் மிக்கேல் கல்லூரியிலும் பயின்றார்.
1916-இல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்விலும் வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது மதுரைத் தமிழ் சங்கப் பண்டிதர் என்னும் பெருமையையும் பெற்றார்இ 1919ல் தனது சொந்த முயற்சியில் கற்றுஇ இலண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பி.எஸ்.சி. தேர்விலும் சித்தியடைந்தார்.
1924ல் சென்னை சென்ற மயில்வாகனனார் இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து 'பிரபோதசைதன்யர்' என்னும் பிரமச்சரிய நாமம் பெற்றார். அதே ஆண்டு சித்திரைப் பெளர்ணமியில் துறவறம் மேற்கொண்டு 'சுவாமி விபுலானந்தர்' என்னும் பெயர் பெற்றார்.

1925ல் இலங்கை திரும்பிய அடிகளார் கல்லடி உப்போடையில் சிவானந்த வித்தியாலயமும் காரைதீவில் சாரதா மகளிர் கல்லூரியும் மற்றும் ஆதரவற்றோர் மாணவர் மாணவியர் இல்லங்களும் நிறுவி அளப்பரிய கல்வித் தொண்டு செய்தார்.
பின்பு யாழ்ப்பாணம் வைதீஸ்வர வித்தியாலயத்தையும் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் இராமகிருஷ்ண 'சங்கத்தோடு இணைத்ததோடு நில்லாது மலையகத்திலும் பாடசாலைகள் அமைத்து சகலருக்கும் சிறந்த கல்வித் தொண்டாற்றினார்.

1931ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் 1943ல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி புரிந்தார்.அதாகப்பட்டது அவர் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியராக துலங்கினார்.
அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாக அறிவியல் கலைஞராக ஆத்மீக ஞானியாக ஆற்றல்மிகு பேராசிரியராக இயற்றமிழ் வல்லுனராக இசைத்தமிழ் ஆராய்சியாளராக நாடகத்தமிழ் நல்லாசிரியராக நமது தாயக மண்ணிலே நற்பணிபுரிந்தார்.

தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் இனத்திற்காக இனத்தின் கல்வி மலர்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள்.
விபுலானந்த அடிகளார் மனிதாபிமானம் மிக்கவர் ஆதித் தமிழ்க் குடியின் அறவழியில் வந்தவர். பாதியில் முளைத்தெழுந்த சாதிக் கொடுமைதனைச் சாடித் தகர்த்தெறிந்த சாதனைத் தமிழன் அவர் அன்னார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட ஆதி திராவிடர் வாழ்ந்த திருவேட்களம் என்னும் சேரிக்குச் சென்று பாலர் படிக்கப் பள்ளிகள் அமைத்தார்.
முதியோர் கல்விக் கூடங்களும் ஏற்படுத்தினார். இதை அறிந்த உயர் சாதிப் பார்ப்பன்னர்கள் சுவாமி மீது ஆத்திரம் கொண்டனர். குடிப்பதற்குக் கூட நன்னீர் தர மறுத்தனர். இதனால் அடிகள் பலகாலம் உவர் நீரையே குடித்து வாழ்ந்தார்.

சைவத்தின் காவலர்கள் என்று எழுந்தவர்கள் சாதித்துவத்தின் காவலர்களாகத் திகழ்ந்தார்கள். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை விதைத்தார்கள். மனித குலத்தின் மடமைத்தனத்தின் உச்சநிலையான வருணப் பாகுபாடுகளை வளர்த்தார்கள்.
ஆனால் சுவாமி விபுலானந்த அடிகளோ மக்கள் எல்லோரையும் சமமாக மதித்தார். சாதிப் பிரிவுகளை நீக்க உழைத்தார். எல்லோரும் சமமானவர்களே என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்தார். கல்வி எல்லோருக்கும் பொதுவானது என்று நினைத்தார். தீண்டத்தகாதவர் என்று தீயவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்கு வழிசமைத்தார்.

அடிகளாரின் நீண்ட நாளைய இசை ஆராய்ச்சிப் பணி 1947ல் 'யாழ் நூல்' என உருப்பெற்றது. கரந்தைத் தமிழச் சங்கத்தின் ஆதரவில் திருக்கொள்ளும் புதூர் ஆலயத்தில் 20-06-1947 21-06-1947 ஆகிய இரு தினங்களிலும் யாழ் நூல் அரங்கேற்ற விழா நடந்தேறியது.

தமிழ்நாட்டு மக்களிடையே கல்விமறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தன்னிகரற்ற பணிகளை ஆற்றிய சுவாமி அவர்கள். ஈழத்திலும் ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு எழுத்தறிவித்த இறைவனானார். எவ்வித வேறுபாடுமின்றி எல்லா மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்காக யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் சுவாமி அவர்கள் ஆற்றிய பணிக்கு நிகராகப் பணிபுரிந்தோர் அவரதுகாலத்திற்கு முன்னர் என்றாலும் சரி அவருக்குப் பின்னர் இன்றுவரை என்றாலும் சரி யாருமே பிறந்ததுமில்லை உயர்ந்தவராய்த் திகழ்ந்ததுமில்லை பணியிலே சிறந்ததுமில்லை.

தமிழர்களுக்குக் கல்வியுட்டுவதிலே தளராத அவரது முயற்சியினால் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் எண்ணற்ற தமிழ் அறிஞர்கள் தோன்றினார்கள். பேராசிரியர்களாகஇ பண்டிதமணிகளாகஇ புலவர்மணிகளாக உருவாகினார்கள். வாழையடி வாழையாகத் தமிழ் வளர்ச்சியின் எருவாகினார்கள். அதனால் சுவாமியவர்கள் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மொழி வளர்ச்சியின் கருவாகினார்கள்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் ஆராய்ச்சித் துறைக்கான பாடத்திட்டத்தினைத் தயாரித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்களே. அதன்மூலம் சீரியவழியில் தமிழ் ஆராய்ச்சிக்கல்வி வளர்வதற்கும் தமிழ் ஆராய்ச்சிக் கலை தொடர்வதற்கும் தமிழ்மொழியின் நிலை உயர்வதற்கும் காலாக அமைந்தவர் சுவாமிகளே.

சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கத்தால் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கப் பேரவையின் தலைமைப்பொறுப்பை ஏற்று அறிவியல் தமிழை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அடிகளார் அவர்களே.

கணிதம் வரலாறு பொதிகவியல் தாவரவியல் விலங்கியல் இராசாயனவியல் உடல்நலவியல் புவியியல் விவசாயவியல் ஆகிய ஒன்பது துறைகளில் கலைச்சொற்களை ஆக்குதற்காக ஒன்பது அறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த ஒன்பது குழுக்களுக்கும் பொதுத் தலைவராகவும் இரசாயனவியல் குழுவின் தலைவராகவும் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார்.

அடிகளாரின் தலைமையிலான அந்த அறிஞர் குழுக்களின் அரும்பணியினால் பத்தாயிரம் தமிழ்க்கலைச் சொற்களைக் கொண்ட கலைச்சொல் அகராதி 1938 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகின் அறிவியல் மலர்ச்சிக்குத் தகுந்தவகையில் தமிழ் மொழியின் வளர்ச்சி அமைந்திட இந்த அகராதி பெரும் பக்காற்றிக் கொண்டிருக்கின்றது.

சுவாமி அவர்கள்இ இந்தியாவில் இராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்ட 'வேதாந்த கேசரி' என்றும் ஆங்கிலப் பத்திரிகைக்கும் 'இராமகிருஷ்ண விஜயம்' என்னும் தமிழ்ப் பத்திரிகைக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரால் அவ்விதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளும் ஆசிரியர் தலையங்கங்களும் சமய உண்மைகளை விளக்குவனவாக மட்டுமன்றித் தமிழ் மொழி தமிழ்ப்பண்பாடு என்பவற்றைப் பரப்புவனவாகவும் அமைந்திருந்தன.

தமிழ் இலக்கியம் பாரதிக்கு முன்னால் பாரதிக்குப்பின்னால் என்று இன்றைக்கு வரையறை செய்யப்படுகின்றது. அந்த அளவுக்குத் தமிழ் இலக்கியத்திலே தாக்கத்தை ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார். பாரதியாரைப்பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்துவிட்டன. இலட்சக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. பாரதியைத் தெரியாத தமிழர்கள் பட்டிகளில் தொட்டிகளில்கூட இல்லை என்கின்ற அளவுக்கு அவரது பாடல்கள் படித்தவர்களையும் பாமரர்களையும் எட்டியிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் சுவாமி விபுலானந்த அடிகளே.

பாரதியாரின் முற்போக்குக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சாதிவெறிவிடித்த பிராமணப் பண்டிதர்கள் பாரதியை அவமதித்தார்கள். அவரின் பாடல்களை வெறுத்தார்கள். அவற்றை இலக்கியமென்று ஏற்க மறுத்தார்கள். மக்களுக்குத் தெரியவராதபடி மறைத்தார்கள். பள்ளிகளிலும்இ கல்லூரிகளிலும் புறக்கணித்தார்கள்.

படித்தவர்கள்இ விவுலானந்தரின் அறிவை மதித்தவர்கள் அவருக்குப் பதவி அளித்தவர்கள் எல்லோருமே பாரதியைக் குழிதோண்டிப் புதைத்தார்கள். இத்தனை பேருக்கும் எதிராக பாரதியை மகாகவியாக படித்த மக்களிடையே உலவவிட்டவர் விபுலானந்த அடிகள் என்றால் அவரது அஞ்சா நெஞ்சத்தை என்னென்பது?

விபுலானந்தர் தோன்றாதிருந்திருந்தால் தமிழ் நாட்டில் கால் ஊன்றாதிருந்திருந்தால் மகாகவி பாரதியாரை உலகம் காணாதிருந்திருக்கும் பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும். சங்ககாலத்திற்கு முன்னர் தோன்றிய எண்ணற்ற இலக்கியங்களை ஆற்று நீரிலே எறிந்து அழித்ததைப்போல தீயிலே போட்டு எரித்ததைப்போல சாதிவெறிபிடித்த மேதாவிகள் பாரதியின் பாடல்களையும் அழித்திருப்பார்கள்.

சுவாமி விபுலானந்தர் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டு சென்றதால் பாரதியை யாராலும் அழிக்க முடியவில்லை. விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும்.

சங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுகின்ற கங்கையில் விடுத்த ஓலை என்னும் அடிகளாரின் கவிதை மலரும் மற்றைய இனிமையான கவிதைகளும் எண்ணற்ற கட்டுரைகளும் இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக்கொண்டிருக்கின்றன.
விபுலானந்த அடிகளுடைய கல்லறையில் அவரே இயற்றிய இனிய கவிதை பொறிக்கப்பட்டுள்ளது மிகப் பொருத்தமாகும். 
இறைவனின் திருப்பாதங்களில் சூட்டப்படவேண்டிய மலர்கள் பற்றிப் பாடுகிறார் அடிகள்:

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் புவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் புவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
என்று 'ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று' என்ற தலைப்பில் அடிகளார் பாடிய பாடல்கள் அறிஞர் பெருமக்களால் விதந்து போற்றப்படுகின்றன.

அடிகள் மறைந்தாலும் அவர் முத்தமிழுக்கு ஆற்றிய பணிகள் என்றும் மறையாது.

விபுலமாமணிவி.ரி.சகாதேவராஜா

https://www.karaitivu.org/articles/essays/8941-உலகின்-முதற்-தமிழ்ப்பேராசிரியர்-சுவாமி-விபுலாநந்த-அடிகளார்

யாழ்நூல் இயற்றியபோது…

19chcss_edit2_vibu_3187633g.jpg

ஜூலை 19 விபுலாநந்த அடிகளார் நினைவுநாள்.

19chcss_edit2_Vibu_3187632g.jpg

Vibu_Letter__1_3187634g.jpg

இலங்கை தமிழ்ச் சான்றோர்களுள் விபுலாநந்தர் குறிப்பிடத்தக்கவர். அவர் இயற்றிய யாழ்நூல் தமிழிசையின் ஆதார நூல்களில் ஒன்று. அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபோது க.வெள்ளைவாரணன் அங்கு மாணவராகப் பயின்றவர். பின்னாளில் யாழ்நூலினை விபுலாநந்தர் எழுதத் தொடங்கியபோது, அதன் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்திருக்கிறார். அவருக்குப் பல மடல்களை, பல ஊர்களிலிலிருந்து விபுலாநந்தர் எழுதியுள்ளார்.

பேளூரிலிருந்து விபுலாநந்தர் வெள்ளைவாரணனுக்கு 24.11.42 நாளிட்டு எழுதிய மடலில் யாழ்நூல் உருவாக்கம் குறித்த பல விவரங்கள் உள்ளன. சங்கீத ரத்தினாகரம் என்ற நூலைப் படிக்க நினைத்தும் அப்போது நடைபெற்ற உலகப் போர் காரணமாக நூல்கள் பாதுகாப்புக்காக வேறிடம் சென்றுவிட்டதை அடிகளார் குறிப்பிட்டுள்ளார். உலகப் போரின்போது நூலகங்கள், அச்சுக்கூடங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளமையை இம்மடல் தெரிவிக்கின்றது. யாழ்நூல் படி எடுத்தல், கருவி நூல்களைத் திரட்டல், அச்சிடுதல், போன்ற பணிகளில் அடிகளார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளமையைப் பல மடல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்நூல் உருவாக்கப் பணி

யாழ்நூலை எழுதி முடிக்க விபுலாநந்தர் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்துள்ளார். மாயாவதி ஆசிரமப் பணியிலிருந்து விடுபடல் (1941), கொழும்புப் பல்கலைக்கழகப் பணியேற்றல் (1943 - 47), கடும் காய்ச்சலில் வீழ்ந்தமை, முடக்குவாதம் வந்தமை என்று பணியும், பிணியும் விபுலாநந்த அடிகளாரை அக்காலத்தில் வாட்டியுள்ளன. புதுக்கோட்டையில் வாழ்ந்த சிதம்பரம் செட்டியார் விபுலாநந்தருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து ஆதரித்தார். தம் ‘இராம நிலைய’ வளமனையின் முன்பகுதியை விபுலாநந்தர் ஆராய்ச்சிக்கு ஒதுக்கித் தந்தும், பல்வேறு பணியாளர்களை அமர்த்தியும், இசைநுட்ப வல்லுநர்களைப் பணிக்கு அமர்த்தியும் யாழ்நூல் உருவாக உதவியுள்ளார்.

விபுலாநந்தர் அமைதியாகத் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்ய இலங்கையில் றொசல்லா ஊரில் இருந்த தம் வளமனையை வழங்கியும் சிதம்பரம் செட்டியார் யாழ்நூல் ஆராய்ச்சிக்கு உதவியுள்ளார். சிதம்பரம் செட்டியாருக்குச் சுவாமிகள் வரைந்த மடலில் யாழ்நூலை அச்சிடுவதற்குரிய திட்டம் தரப்பட்டுள்ளது.

றொசல்லா ஊரின் உட்சோக் எஸ்டேட்டிலிருந்து 9.5.45-ல் எழுதிய மடலில், ‘பிரிய நண்பர் திரு. பெ. ராம. ராம. சித அவர்களுக்கு ஆண்டவன் அருளை முன்னிட்டு எழுதுவது.

பேரன்புள்ள திரு. **அ. க. அவர்கள் கடிதத்தையும் படித்தேன். அக்கடிதத்தில் ஒரு குறிப்பு எழுதி, இதனுள் வைத்திருக்கிறேன். அவர்களுக்கு அனுப்பிவிடலாம். அச்சுச் சட்டத்தின்படியும், நானூறு பக்கம் புத்தகத்தை ஓராண்டில் வெளியிட்டால் அதிகாரிகள் வினாவுவதற்கு இடமுண்டு.

1944-ல் அச்சாகி முடிந்த முதல் ஐந்து இயல்களை(ப்) பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலை திரிபியல், பண்ணியல்களை இப்பொழுது வெளியிடலாம். படங்களை ஈற்றிற் சேர்ப்பது இப்பொழுது வெளிவரும் ஆங்கில ஆராய்ச்சி நூல்களின் மரபு பற்றி யாமும் ஈற்றிற் சேர்த்துக்கொள்ளுவோம். உள்ளுறையும் நூல் முற்றிலும் அச்சான பிறகு அச்சிடுதற்குரியது. இப்பொழுது நாம் அச்சிடவேண்டியது முகப்புத்தாள் மாத்திரமே (Title Page). இது திரு. அ. க. அவர்களுக்கு முன்னமே எழுதியிருக்கிறேன். வெளிக் கவருக்கு கையினால் செய்த தாள் தடிப்பானது. மதுரையிலும், விருதுநகரிலும் கிடைக்கும். வெண்சிவப்பு நிறத்தில் உபயோகிக்கலாம். முகப்பு(த்) தாளிலுள்ள விஷயத்தைச் சுருக்கி அச்சிடலாம்’ என்று யாழ்நூல் அச்சிடுவதற்குரிய அமைப்பை இந்த மடலில் அடிகளார் எழுதியுள்ளார். தட்டச்சிட்டு வந்துள்ள இந்த மடலில் குறிப்பிட்டவாறு யாழ்நூலின் முதல் பதிப்பு வெளிவந்துள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும்.

இன்னும் வெளிவராத விபுலாநந்தரின் பல மடல்களில் அவர்தம் விருப்பங்கள் பல தெரியவருகின்றன. அவரின் நாட்கடமைகள், பயணத் திட்டங்கள், உறவினர்கள், நண்பர்கள், அவர் ஆற்றிய பணிகள் பதிவாகியுள்ளன. அக்காலத்தில் அமைந்திருந்த சமூக அமைப்பு, கல்விமுறை, தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சித்திறம் யாவும் வெளிப்படுகின்றன.

அக்காலத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகள், சமூகத்தில் உயர்நிலையில் இருந்தவர்கள் ஆற்றிய பணிகள் யாவும் உலக்குக்குத் தெரியவருகின்றன. இலங்கையிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் சிதறிக் கிடக்கும் விபுலாநந்தரின் அரிய கையெழுத்துப் படிகளை முழுமையும் தேடிப் பதிப்பிக்க வேண்டியது தமிழ் ஆராய்ச்சியாளர்களின் தலைக்கடனாகும்.

- மு.இளங்கோவன், புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்த் துறை

துணைப் பேராசிரியர் தொடர்புக்கு : muelangovan@gmail.com

ஜூலை 19 விபுலாநந்த அடிகளார்

நினைவுநாள்.

http://tamil.thehindu.com/opinion/columns/யாழ்நூல்-இயற்றியபோது/article9776518.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது வீட்டுக்குள் சென்று எடுத்த படங்கள் ஜீவன் சிவாவிடம் உள்ளது  அவர் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்  ஊர் மாமுனி என்று சொல்லிகொள்வதில் பெருமையடைகிறேன் .

நன்றி ஆதவன்  

Link to comment
Share on other sites

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்

 

 

 

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் முன்னோட்டத்தினை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றோம். இந்த ஆவணப்படம் அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை ஏற்பாடு செய்துள்ள ஆண்டு விழாவில்( சூன்30, சூலை 1,2,3) வெளியிடப்பட உள்ளது. தங்களின் பாராட்டும், ஒத்துழைப்பும் எங்களை வழிநடத்தும்.

Know about Swami Vipulananda on his birthday Ner Ner Theneer 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.