Jump to content

கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி

Recommended Posts

கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்காபுரோவில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார்.

ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேற்று ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.

ரொரன்டோ போக்குவரத்துச் சபையின் (TTC) பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதில் கால் தவறி வீழ்ந்த நிலையில் பேருந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் மரணமடைந்துள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளையை அவரது சகோதரர் அடையாளம் காட்டியுள்ளார். தனது சகோதரியின் பிரம்பை வைத்தே அவரை அடையாளம் கண்டுள்ளார்.

அவர்கள் அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக வாழ்ந்து வருவதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

தினமும் அவர் அந்த பேருந்தின் ஊடாகவே பயணங்களை மேற்கொள்வதாகவும் நேற்றைய தினம் இந்த துயர சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ரொரன்டோ பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.tamilwin.com/canada/01/152475

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால் தவறி விழவில்லை.  இவர் இறங்கும் போது பேருந்து சாரதி அவசரப்பட்டு கதவுகளை மூட, இவரின் கைப்பை கதவுகளுக்கிடையில் மாட்டியுள்ளது.  அதை கவனிக்காத சாரதி பேருந்தை எடுக்க இவர் இளுபட்டு விழுந்து அதே பேருந்தினால் அடிபட்டதனாலேயே இறந்துள்ளார்.   பின்னால் வந்த வாகனம் இடிக்கவில்லை.  பேருந்து ஓட்டுனரின் கவனகுறைவால் நிகழ்ந்த அனியாய இழப்பு :(

http://m.torontosun.com/2017/07/18/senior-killed-by-ttc-bus-in-scarborough

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபம் தெரிவிப்பதை விட நம்மால் என்ன செய்ய முடியும்..:'( இனிமேலாவது அனைவரும் அவதானமாக நடப்பார்களா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sabesh said:

பொலிசாரின்  தீர்ப்பு என்ன ?? யார்  மீது குற்றம் சொல்கிறார்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனி ஒருவன் said:

பொலிசாரின்  தீர்ப்பு என்ன ?? யார்  மீது குற்றம் சொல்கிறார்கள் ?

விபத்து நடந்த அன்றே பேருந்தில் இருக்கும் video camera வை பார்த்து நடந்ததை கூறி விட்டார்கள்.  விசாரணை நடக்குமென நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sabesh said:

விபத்து நடந்த அன்றே பேருந்தில் இருக்கும் video camera வை பார்த்து நடந்ததை கூறி விட்டார்கள்.  விசாரணை நடக்குமென நம்புகிறேன்.

நன்றி பதிலுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, யாயினி said:

அனுதாபம் தெரிவிப்பதை விட நம்மால் என்ன செய்ய முடியும்..:'( இனிமேலாவது அனைவரும் அவதானமாக நடப்பார்களா..

உண்மைதான். உறவினர் என்பதால் சற்று அதிகமான ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sabesh said:

உண்மைதான். உறவினர் என்பதால் சற்று அதிகமான ஆதங்கம்.

ஓ ..உங்கள் உறவினரா.. :(
ஆழ்ந்த அனுதாபங்கனைத் தெரிவித்துக் கொள்கிறேன் சபேஸ் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் !!

1 hour ago, Sabesh said:

விபத்து நடந்த அன்றே பேருந்தில் இருக்கும் video camera வை பார்த்து நடந்ததை கூறி விட்டார்கள்.  விசாரணை நடக்குமென நம்புகிறேன்.

தகவலுக்கு  நன்றி

1 hour ago, Sabesh said:

உண்மைதான். உறவினர் என்பதால் சற்று அதிகமான ஆதங்கம்.

உங்களது துக்கத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம்

சாந்தி  பெறட்டும்..

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்.

இந்த நேரத்தில் அமெரிக்காவின் டிஸ்னி உலகத்தில் நடந்தவைகளை நினைத்துப் பார்க்கிறேன். இயலாதவர்கள் அவர்களது பேருந்தில் ஏறும்போது ஓட்டுனரே இறங்கி வந்து அதற்கான வசதிகளை செய்து கொடுப்பார். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பரிவு காட்டுதல் வேண்டும். வெறும் காசுக் கணக்குக்கு மட்டும் வேலை பார்த்தால் அநியாய சாவுகளை தவிர்ப்பது கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த..... அனுதாபங்கள்,  சபேஷ்.
காலையில்  கோவிலுக்கு, போய் விட்டு வரும் போது,
நடந்த விபத்து என்பதால்.... மனதை, மிகவும் வருத்துகின்றது.

அவர், விரும்பிய கடவுள்..... அவரை,  தம்மிடம்   கூப்பிட்டு  விட்டார், என்றே.... நினைக்கின்றேன்.
அவரின்... பிரிவால், துயரத்தில் இருக்கும்..... உற்றார், உறவினர்களுக்கு....
ஆழ்ந்த... அனுதாபங்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விபத்துக்குள் முற்றிலும் தவிர்க்கப்படக் கூடியவை. கொஞ்சம் பொறுமையும்.. நிறைய அவதானிப்பும் அவதானமும்  அவசியம். மேலும் எம்மவர்களுக்குள்ள மொழி பிரச்சனையால்.. அவசரத்துக்கு கத்தவும் முடியாமல்.. தவிப்பதையும் காண முடிகிறது.

ஆழ்ந்த இரங்கல்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் சபேஷ் .... உங்களது துயரத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபம் தெரிவித்த உறவுகளுக்கு நன்றி.

14 hours ago, நந்தன் said:

ஓ சபேசும் படலைகட்டியா

இல்லை....வாழ்க்கை பயணத்தில் இணைந்த பக்க உறவினர்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பா.முதியவர்கள் இயலுமானவரை தனித்துப் பயணிப்பதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, இசைக்கலைஞன் said:

இந்த நேரத்தில் அமெரிக்காவின் டிஸ்னி உலகத்தில் நடந்தவைகளை நினைத்துப் பார்க்கிறேன். இயலாதவர்கள் அவர்களது பேருந்தில் ஏறும்போது ஓட்டுனரே இறங்கி வந்து அதற்கான வசதிகளை செய்து கொடுப்பார். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பரிவு காட்டுதல் வேண்டும். வெறும் காசுக் கணக்குக்கு மட்டும் வேலை பார்த்தால் அநியாய சாவுகளை தவிர்ப்பது கடினம்.

இலங்கையில் எனது வேலையில் பஸ் பயணம் தவிர்க்க முடியாத ஒன்று ஒரு சில சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் ஒழுங்கக பேச தெரியாது வெல்  அடிச்சா  உடனே எழும்பி வர வேண்டியது தானே எழும்பி வந்து எத்தின மணிக்கு நாங்கள் போய்ச்சேர்வதென பெரியவர்களுக்கு காட்டமாக ஏசுவார்கள் என்னத்தை சொல்வது நாளைக்கு கையை நீட்டினால் பஸ்ஸை நிறுத்த மாட்டான் அதனால் வேலைக்கு செல்ல நேரமாகிவிடும்  அதனால் எதுவும் பேசாத மொனிகளாக செல்ல வேண்டியதாக இருக்கிறது ரிப்போட் பண்ணீலாலும் அவர்களுக்குள் சமாளித்து விடுகிறார்கள் (  கூடுதலாக காத்தான்குடி டிப்போவுக்கு சொந்த மான பஸ்களில் பஸ் செலுத்தும் சாரதிகளை  கூறுவேன் சீசன் காட் எடுத்து செல்லும் பயணிகளை ஏற்றுவதில்லை அப்படி ஏற்றினாலும் முன்னுக்கு போ  என திட்டுவது போன்ற நிலமையும் உள்ளது  தினம்மும் பயணம் செய்பவர்கள்  காசு தீர்ந்து விடுவதாலும் சீசனுக்கு  போகும் பணத்தில் ஒரு 200,300 மிஞ்சுவதாலும் சீசன் எடுத்துக்கொள்கிறார்கள் ஆனால் சீசனை ஏற்றுவதால் இவர்களுக்கான  ராக்க்கெட் என்று சொல்லப்படுகின்ற  மொத்த மாக கிடைக்கும் பணத்தில் ப்கிடைக்கும் பங்கு குறைவாக கிடைக்கும் என்ற படியால் சீசனை ஏற்றுவதில்லை 

ஆழ்ந்த இரங்கள் அன்னாரது  ஆத்மா சாந்தியடை பிரார்த்திக்கின்றேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.. RIP.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.