Jump to content

ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை தொடக்கம்: சிறையில் வண்ண உடைகளில் வலம் வரும் சசிகலா - அடுத்தடுத்து வீடியோ வெளியானதால் பரபரப்பு; சலுகைகள் பறிப்பு


Recommended Posts

ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை தொடக்கம்: சிறையில் வண்ண உடைகளில் வலம் வரும் சசிகலா - அடுத்தடுத்து வீடியோ வெளியானதால் பரபரப்பு; சலுகைகள் பறிப்பு

 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கையில் பையுடன் வண்ண உடையில் வலம் வரும் சசிகலா.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கையில் பையுடன் வண்ண உடையில் வலம் வரும் சசிகலா.
 
 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை முறைகேடு தொடர் பாக ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், சசிகலா வண்ண உடைகளில் வலம் வருவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு, சிறப்பு சலுகை காட்டியதாக புகார் எழுந்துள்ளது. சிறை விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு, ந‌வீன வசதிகள் கொண்ட சமையலறை, படுக்கை அறை, உதவியாளர்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜியாக சமீபத்தில் பொறுப்பேற்ற ரூபா டி. மவுட்கில் 2 அறிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

இதையடுத்து, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் உயர்மட்ட விசா ரணைக் குழுவை முதல்வர் சித்தரா மையா அமைத்தார். மேலும் டிஜிபி சத்தியநாராயண ராவ், டிஐஜி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் ரூபாவுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதேபோல டிஜிபி சத்தியநாராயண ராவ், கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் உள்ளிட்டோருக்கு ஆதரவாகவும் ஒரு சில கைதிகள் போராட்டத்தில் குதித்துள்ளதால் சிறையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஷாப்பிங் போனாரா சசிகலா?

இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலா பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் 5 அறைகளின் புகைப் படங்கள் நேற்று முன்தினம் இரவு தனியார் தொலைக்காட்சி சேனல் களில் வெளியானது. தனித்தனி யாக இருந்த அந்த அறைகளில் சமைக்க பயன்படுத்தப்படும் குக்கர், சில பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள், துணிப் பைகள் உள்ளிட் டவை மிகவும் அலங்கோலமான நிலையில் இருந்தன.

இதையடுத்து, வெளியான வீடியோ காட்சியில், சிறையின் தாழ்வாரத்தில் சசிகலா வண்ண உடையில் நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றன. சிறையில் சசிகலா சீருடை அணியாமல், வீட்டில் இருப்பது போல நைட்டி அணிந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற் கடுத்து வெளியான வீடியோவில், சாம்பல் நிற‌ சுடிதார் அணிந்த சசிகலா மகளிர் காவலருடன் பேசிக்கொண்டு சிறையின் முக்கிய நுழைவாயிலுக்கு செல்கிறார். அப்போது அவரது கையில் ஷாப்பிங் மாலில் வழங்கப்படும் பை உள்ளது. அங்கு வர தயங்கும் சிகப்பு நிற சேலை அணிந்த இளவரசிக்கு தைரியம் கொடுத்து சசிகலா அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.

இதேபோல அடுத்த வீடியோ வில், சுடிதார் அணிந்த சசிகலா, தோள் பையை போட்டுக்கொண்டு சிறை நுழைவாயிலில் நடந்து செல்கிறார். அவரை சக கைதி களும், போலீஸாரும் வேடிக்கை பார்க்கின்றனர். அப்போது கோப மடைந்த சசிகலா, அவர்களிடம் ஏதோ பேசியவாறு சிறை தாழ்வாரத் துக்குள் செல்கிறார். இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும்போது, சசிகலா அதிகாரிகளின் துணை யோடு ஷாப்பிங் போனாரா? அல்லது தன்னை சந்திக்க வந்தவர் களை பார்க்க வெளியே சென்றாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இந்நிலையில், அடுத்தடுத்து வீடியோ வெளியானதை தொடர்ந்து சசிகலாவுக்கு வழங்கப்பட்டிருந்த சில சலுகைகள் பறிக்கப்பட்டன.

உயர்மட்ட விசாரணைக் குழுவின் தலைவர் வினய் குமார் நேற்று முறைப்படி விசாரணையை தொடங்கினார். முதல்கட்டமாக கர்நாடக உள்துறை செயலர் சுபாஷ் சந்திராவை சந்தித்து ஆலோசித்த வினய் குமார், டிஐஜி ரூபா அளித்த 2 அறிக்கைகள், டிஜிபி சத்தியநாராயண ராவ் அளித்த 16 பக்க அறிக்கையை சேகரித்தார்.

இதையடுத்து கர்நாடக சிறைத்துறை டிஜிபி, டிஐஜி அலுவலகங்களில் ஆய்வு செய்த வினய் குமார், அங்கிருந்த முக்கிய ஆணங்களையும் வீடியோ பதிவுகளையும் ஆய்வு செய்தார். அங்கிருந்து பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற அவர், அங்கு தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் அறையில் சோதனை நடத்தினார். மேலும் தற்போதைய கண்காணிப்பாளர் அனிதாவிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் ஊடகங்களில் வெளியான சசிகலாவின் வீடியோ ஆதாரங்களைக் கைப்பற்றினார். இந்த வீடியோ காட்சிகளை எடுத்தது யார்? எப்போது எடுக்கப்பட்டது? என விசாரித்தார். அப்போது சசிகலா இருப்பது போன்ற வீடியோ, சிசிடிவி கேமராவில் இருந்து எடுக்கப்படவில்லை என்றும், செல்போனில் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.

முதல்கட்டமாக முக்கிய வீடியோ ஆதாரங்களை கைப்பற்றிய ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார், ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.

சொகுசு அறையில் தூங்கிய தெல்கி

tholki_3187620a.jpg

சிறையில் துப்பாக்கி வடிவ 6 கிலோ கேக் வெட்டும் சீனிவாஸ் | சிறையில் சொகுசு அறையில் படுத்திருக்கும் அப்துல் கரீம் தெல்கி.

சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா டி. மவுட்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் திடீர் ஆய்வு நடத்தி உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் முத்திரை தாள் மோசடி வழக்கில் இதே சிறையில் அடைக் கப்பட்டுள்ள தெல்கியும் சொகுசு வாழ்க்கை அனுபவித்து வருவது உட்பட சிறையில் நடைபெறும் பல்வேறு முறைகேடு தொடர்பாக வும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தெல்கி சொகுசு அறையில் படுத்து தூங்குவது போன்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இது போல, இதே சிறையில் அடைக்கப் பட்டுள்ள பிரபல ரவுடி சீனிவாஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு துப்பாக்கி வடிவத்தில் 6 கிலோ எடைகொண்ட கேக் வெட்டுவது போன்ற வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது. இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/ஐஏஎஸ்-அதிகாரி-தலைமையில்-விசாரணை-தொடக்கம்-சிறையில்-வண்ண-உடைகளில்-வலம்-வரும்-சசிகலா-அடுத்தடுத்து-வீடியோ-வெளியானதால்-பரபரப்பு-சலுகைகள்-பறிப்பு/article9776180.ece?homepage=true

Link to comment
Share on other sites

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 117 நாட்களில் 82 பேரை சந்தித்த சசிகலா - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்

 

 
நரஸிம்ம மூர்த்தி
நரஸிம்ம மூர்த்தி
 
 

சிறை விதிமுறைகளை மீறி 117 நாட்களில் 82பார்வையாளர்களை சசிகலா சந்தித்த விவகாரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாபல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு இருப்பது வீடியோ ஆதாரம் மூலமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூருவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, சிறையில் சசிகலாவை சந்தித்த நபர்களின் பட்டியலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டார்.

அதற்கு சிறையின் அப்போதைய தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் அளித்த பதிலில், ‘சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட 16.2.2017 முதல் 12.6.2017 வரை 117 நாட்களில் 32 முறை பார்வை யாளர்களை சந்தித்துள்ளார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, டிடிவி தினகரன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தமிழக எம்எல்ஏக்கள் உட்பட 82 பேர் சசிகலாவைச் சந்தித்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

காற்றில் பறந்த விதிகள்

இது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கூறு கையில், 'சிறை விதிகளின்படி தண்டனைக் கைதி 15 நாட் களுக்கு ஒரு முறைதான் பார்வை யாளர்களை சந்திக்க முடியும். அதன்படி பார்த்தால் சசிகலா 117 நாட்களில் 8 முறை மட்டுமே பார்வையாளர்களை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் சசிகலா 32 முறை பார்வையாளர்களை சந்தித்திருக்கிறார். 30-க்கும் குறை வானபார்வையாளர்களை சந்தித் திருக்க வேண்டிய அவர் 82 பேரை பார்த்திருக்கிறார்.

நேரம் முடிந்த பிறகும்...

அதிலும் குறிப்பாக இளவரசி யின் மகன் விவேக்கை 8 முறையும், உறவினரும் வழக்கறிஞருமான அசோகனை 7 முறையும், டிடிவி தினகரனை 5 முறையும் சந்தித் துள்ளார். அதிலும் அலுவலக நேரம் தாண்டி, இரவு 7.30 மணிக்கு மூர்த்தி ராவ் என்பவரை சந்தித்து பேசியுள்ளார். இது அப்பட்டமான விதிமீறல். சிறை விதிகளை காற்றில் பறக்கவிட்ட சசிகலா மீதும், அதிகாரிகள் மீதும் கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://tamil.thehindu.com/india/பெங்களூரு-பரப்பன-அக்ரஹாரா-சிறையில்-117-நாட்களில்-82-பேரை-சந்தித்த-சசிகலா-தகவல்-அறியும்-உரிமை-சட்டத்தில்-அம்பலம்/article9776596.ece?homepage=true

Link to comment
Share on other sites

சசிகலாவை பொறுமையாக காத்திருந்து பொறி வைத்து பிடித்த மத்திய அரசு

பதிவு: ஜூலை 19, 2017 10:50

 
 

பெங்களூரு சிறையில் சசிகலா சிறப்பு சலுகைகள் பெற ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தது மத்திய அரசுக்கு ஏப்ரல் மாதமே தெரியும் என புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 
 
 
 
சசிகலாவை பொறுமையாக காத்திருந்து பொறி வைத்து பிடித்த மத்திய அரசு
 
சென்னை:

முறைகேடாக சொத்து குவித்து 4 ஆண்டு தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெயிலுக்குள் போய் 5 மாதம் முடிந்துள்ள நிலையில் அவர் லஞ்சம் கொடுத்து ஏராளமான சலுகைகளை அனுபவித்து வந்தது அம்பலமாகி உள்ளது. 5 அறைகள் கொண்ட தனி இடம், டி.வி., சொகுசு மெத்தை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அனுபவித்து வந்ததை டி.ஐ.ஜி. ரூபா ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்.

சசிகலா தரப்பில் சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டதாகவும் டி.ஐ.ஜி. ரூபா தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பணப் பரிமாற்றம் கடந்த ஏப்ரல் மாதமே மத்திய அரசுக்கு தெரிந்து விட்டது.

அதன் பிறகுதான் சசிகலா தரப்பில் இருந்து சிறை துறை அதிகாரிகளுக்கு லட்சம் லட்சமாக பணம் கொடுப்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த ஏற்பாடுகள் நடந்தன. அதன்படிதான் தற்போது இந்த விவகாரத்தில் சசிகலா சிக்கியுள்ளார்.

சசிகலா சிக்குவதற்கு கர்நாடக மாநில முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் என்பவர் கொடுத்த வாக்குமூலம்தான் காரணமாக அமைந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற தலைமை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இடைத்தரகர்கள் மூலம் அந்த லஞ்சத்தை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டி.டி.வி. தினகரனின் நண்பர்களில் ஒருவரான பெங்களூரைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவரையும் டெல்லி போலீசார் விசாரித்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாசுடன் அவர் பல தடவை பேசி இருப்பது தெரிந்தது.

இதையடுத்து டெல்லி போலீசார் பிரகாஷ் மீது சந்தேகப்பட்டனர். பிரகாஷ் மூலம்தான் ஹவாலா அடிப்படையில் ரூ.10 கோடி டெல்லிக்கு வந்திருக்கும் என்று நினைத்தனர். அதை உறுதிப்படுத்த பிரகாசை போலீசார் டெல்லிக்கு அழைத்து விசாரித்தனர்.

அப்போது பிரகாஷ் தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று உறுதிப்பட தெரிவித்தார். டெல்லி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்த போது அவர், தினகரனை தெரியும். ஆனால் அவரிடம் பெற்று ஹவாலா அடிப்படையில் டெல்லிக்கு எந்த பணத்தையும் அனுப்பவில்லை என்று கூறினார்.

அதே சமயத்தில் தினகரன் மூலம் பெங்களூர் சிறை துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதாக உளறி கொட்டினார். சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்கு ரூ.2 கோடி தினகரன் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதை கேட்டதும் டெல்லி போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் கொடுத்த இந்த வாக்குமூலத்தை டெல்லி போலீசார் 306-வது சட்டப்பிரிவின் கீழ் வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர்.

பெங்களூர் சிறையில் விதிகளை மீறி சலுகைகளை பெற ரூ.2 கோடி கைமாறியது பற்றி டெல்லி போலீசார் மத்திய உள்துறையிடம் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்தே சசிகலா தரப்பினரை பொறி வைத்து பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதமாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிக்கப்பட்டு வந்தது.

அப்போது சசிகலா தனக்கு தேவையான எல்லா வசதிகளையும் சிறைக்குள் செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் ஒவ்வொரு சலுகையும் பெற ஒவ்வொரு தடவையும் பணம் கொடுக்கப்படுவதும் தெரிய வந்தது. சிறை துறையில் பல்வேறு உயர் அதிகாரிகள் சசிகலா தரப்பிடம் இருந்து பணம் பெறுவதும் கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த வகையில் ரூ.2 கோடிக்கு மேல் கொடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு சந்தேகித்தது. இதைத் தொடர்ந்தே அதிரடி நடவடிக்கைகள் மூலம் சசிகலா பெற்று வரும் சலுகைகள் அம்பலப்படுத்தப்பட்டது.

இந்த வி‌ஷயத்தில் சசிகலாவை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள வீடியோ படங்கள் ஆதாரமாக மாறி உள்ளன. அந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ காட்சிகளை பதிவு செய்வதற்கு கைதிகளே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த கைதிகள்தான் தற்போது அதிரடியாக வேறு வேறு ஜெயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சசிகலாவுக்கு தெரியாமலேயே இவை நடந்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் டி.ஐ.ஜி. ரூபாவின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அவர் சிறை துறைக்கு வருவதற்கு முன்பு வேறொரு துறையில் இருந்தார்.

பெங்களூரில் அவரது வீட்டுக்கு அருகே மத்திய மந்திரி ஒருவர் வசித்து வருகிறார். அவரும் ரூபாவும் ஒருநாள் காலையில் நடை பயிற்சிக்கு சென்றபோது பேசிக்கொண்டே சென்றுள்ளனர்.

அப்போதுதான் சசிகலா பற்றிய தகவல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. சிறையில் சசிகலா விதிகளை மீறி சலுகைகளை அனுபவிப்பதை அவர்கள் விவாதித்தனர்.

இதையடுத்து டி.ஐ.ஜி. ரூபா சிறைத்துறைக்கு மாற்றப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/19105029/1097186/central-govt-know-the-matter-which-sasikala-gave-bribe.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.