Jump to content

சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதர் ஆனார் கமல்


Recommended Posts

சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதர் ஆனார் கமல்

 
 
 
சச்சின் அணி,தமிழ் தலைவாஸ்,கபடி,தூதர்,கமல்
 

சென்னை: புரோ கபடி லீக்கில் சச்சின் அணியான தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

 

கோட்டை தாண்டி புகழை சூடுங்கள்:


புரோ கபடி தொடரில் பங்கேற்கும் சச்சின் அணியான ‛தமிழ் தலைவாஸ்' அணியின் விளம்பர தூதராக நடிகர் கமலஹாசன் அறிவிக்கப்பட்டார். '' முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்'' எனத் தெரிவித்துள்ள நடிகர் கமல், கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 

தமிழ் தலைவாஸ்:


ஐ.பி.எல்., பாணியில் கடந்த 2014ல் துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கில், டில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இத்தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைக்க ஐந்தாவது சீசனில் தமிழகம், அரியானா, குஜராத் மற்றும் உ.பி., என கூடுதலாக 4 அணிகள் சேர்க்கப்பட்டன. இதில் பங்கேற்கும் தமிழகத்தின் சென்னை கபடி அணியின் பங்குகளை வாங்கி சக உரிமையாளர் ஆனார் சச்சின். இந்த அணிக்கு ‛தமிழ் தலைவாஸ்' என பெயர் சூட்டப்பட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1814982

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தை பொங்கல் கபடி டூ ப்ரோ கபடி... இது சேலம் வீரர் பிரபஞ்சன் டைம் டிராவல்!

 
 

ஐ.பி.எல் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்று வருவது ப்ரோ கபடிதான். கபடியைக் கண்டுபிடித்ததாக தமிழகம் எப்போதுமே பெருமை பட்டுக்கொள்ளும்.  ஆனால் ப்ரோ கபடியில் தமிழகத்துக்கு என ஒரு அணி இல்லை என்ற குறை இருந்தது. இதோ இந்த சீசனில் தமிழகம் சார்பில் 'தமிழ் தலைவாஸ்' ப்ரோ கபடியில் பங்கேற்கிறது. தொழிலதிபர் பிராசாத்துடன் இணைந்து தமிழக அணியை வாங்கியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்

கபடி வீரர் பிரபஞ்சன்

தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக அஜய் தாக்கூர் செயல்படுகிறார். இந்திய அணியில் சீனியர் பிளேயரான அஜய், கடந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஹீரோவாக மிளிர்ந்தார். கபடி அணியில் பொதுவாக 10 முதல் 12 வீரர்கள் இருப்பார்கள். ஆனால் களத்தில் விளையாட ஏழு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி. அந்த வகையில் இந்த வருடம் தமிழ் தலைவாஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான பிளேயராகத் திகழ்கிறார் ரெய்டர் பிரபஞ்சன். 

வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தலைவாஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியைச் சந்திக்கிறது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பிரபஞ்சன். அவரிடம் பேசினேன். சொந்த ஊர், பின்னணி, கபடி விளையாட வந்த கதை, ப்ரோ கபடிக்குள் நுழைந்தது எப்படி என பல விஷயங்களைப் பகிர்ந்தார்.

"என்னோட சொந்த ஊர் சங்ககிரி, சேலம் மாவட்டம்.  குடும்பத்தில் அப்பா, அம்மா இரண்டு பேருமே லோக்கல் கபடி பிளேயர்கள். அப்பா ஊர் ஊரா போய்  சின்ன சின்ன டோர்னமென்ட்ல விளையாடுவார். அவங்க தமிழ்நாடு அளவிலோ இந்திய அளவிலோ போறதுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. நான் கபடி விளையாட ஆரம்பிச்சதே அப்பாவை பார்த்துத்தான். சின்ன வயசுல அவரோட கபடி விளையாடுற இடத்துக்கு அடிக்கடி போயிட்டு இருப்பேன். எட்டாவது படிக்கிறப்பதான் கபடி விளையாட ஆசை வந்தது. தைப்பொங்கலுக்கு  ஊர்ல நடக்குற கபடி போட்டியில் கலந்துக்கிட்டேன். 

எனக்கு அந்த விளையாட்டு ரொம்ப பிடிச்சது. அதுக்கப்புறம் அப்பா நிறைய விஷயங்கள் சொல்லித்தந்தார். 12-வது முடிச்சதுக்குப்பிறகு நமக்கு  படிப்புலாம் பெரிய அளவில் வராதுன்னு தெரிஞ்சது.  இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) சேர்ந்து அங்கே விளையாடிக்கிட்டே இலவசமாக கல்லூரிப் படிப்பையும் முடிச்சேன். அப்போ நான் சீரியஸா கபடி விளையாட ஆரமிச்சேன். ஊர்ல நானும் கபடி பிளேயரா வளர்ந்தேன். அதே சமயம் மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் தகுதிபெற்று அங்க இருந்து இந்திய அணிக்கும் தேர்வானேன். கடந்த உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேம்ப்பில் நானும் இருந்தேன். ஆனா இதுவரைக்கு இந்திய அணிக்காக மேட்ச் ஆடலை.

ப்ரோ கபடி பிளேயர் பிரபஞ்சன்

நடுத்தர குடும்பம்தான் எங்களோடது. அப்பா குமரவேல் கபடி விளையாடிக்கிட்டே வருமானத்துக்காக அப்பப்போ ரியல் எஸ்டேட்டும் பார்த்துட்டு இருந்தார். அம்மா பெயர் உமாநாத். தம்பி சுபாஷ், பாப்பா யாழினினு ஐந்து பேர் கொண்ட குடும்பம். கபடிக்கு மட்டும் நான் வரலைனா இந்நேரம் ஊர்ல வெட்டியாதான் சுத்திட்டு இருந்திருப்பேன். இப்போ கஸ்டம்ஸ்ல வேலை பார்க்கிறேன். ப்ரோ கபடி வாய்ப்பு எங்க குடும்பத்தோட பொருளாதார நிலைமையை உயர்த்தி இருக்கு.

சேலம் தாலையூர் கபடி அணியில் சாமியப்பன்னு ஒரு பிளேயர் இருந்தார். அவர் இந்திய அணிக்காக விளையாடிருக்கிறார். ஊர்ல நடக்குற சின்ன டோர்னமென்ட்ல சாமியப்பன் அணிக்கு எதிரணியில் என்னோட அப்பா விளையாடியிருக்கிறார். சாமியப்பன் சார்தான் என்னை ஒரு கபடி பிளேயரா மாத்தினார். ஆரம்பகட்டங்களில் கை, கால்களில் நிறைய அடிபடும். ஆனா வீட்டுல எனக்கு நல்ல ஆதரவு தந்தாங்க. கபடி விளையாட போகாதன்னு சொல்ல மாட்டாங்க. ‛சீக்கிரமா காயத்தைக் குணப்படுத்திட்டு களத்துக்குப் போ’னு உற்சாகப்படுத்துவங்க. அவர்களின் ஆதரவுதான் எனக்கு பெரும் துணை. 

ப்ரோ கபடியை பொறுத்தவரைக்கு நான் மூணு சீசனில் விளையாடிருக்கேன். இரண்டாவது மற்றும் மூன்றாவது ப்ரோ கபடி சீசனில் யூ மும்பா அணிக்காக ஆடினேன். அப்போ களத்தில் இறங்க  பெரிய வாய்ப்புகள் இல்லை. இந்திய அணிக்கு ஆடாமல் ஜுனியராவே நேரடியாக தமிழக அணியில் இருந்து  ப்ரோகபடியில் வந்ததால் எனக்கும் பதற்றம் இருந்தது. அப்போ எனக்கு வயசு 21 -22 தான். கடந்த சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக ஆடினேன். அங்கே எட்டாவது பிளேயரா இருந்தேன். எல்லா மேட்சுலையும் ஏதாவதொரு தருணத்தில் களத்தில் இறக்கப்பட்டேன். அப்போதுதான் நம்பிக்கை கூடியது. போன வருஷம் நிறைய ரெய்டு பாயின்ட் எடுத்தேன். 

பிரபஞ்சன்

கடந்த ஒரு வருஷத்தில் என்னோட முன்னேற்றத்தைக் கவனிச்சு தமிழ் தலைவாஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்தாங்க. தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் சார் தான் இந்திய அணிக்கும் பயிற்சியாளர். இந்திய அணியின் கேம்ப்பில் அவர் என்னோட ஸ்டெப்ஸை மாத்தினார். முன்னாடி ரெய்டு போகும்போது யாரைப் பார்த்தாலும் தொடணும்னு நினைப்பேன். இதனாலே அங்கிட்டு இங்கிட்டு ஓடிட்டிருந்தேன். இப்போ ரெய்டுக்கு போனா எந்த பிளேயர குறிவைக்கணும், எப்படி அவரை வீழ்த்தணும்கிறதுல கவனம் செலுத்தணும்னு கத்துக்கிட்டேன். ஊர்ல எல்லோரும் நான் கபடி விளையாடுற ஸ்டைலே மாறிடுச்சுனு வாழ்த்துனாங்க. 

வீட்ல நார்மல் சாப்பாடுதான். அப்பா எனக்கு ஸ்பெஷலா பாக்கெட் மணி கொடுத்து முட்டை, சூப், பாதாம்லாம் வெளிய வாங்கி சாப்பிட சொல்வார். இப்போ நல்ல சாப்பாடு, தரமான பயிற்சி, பணம், புகழ் எல்லாம் கிடைக்குது. கடந்த சீசன்களில் விளையாடும்போது மொழி தெரியாம கஷ்டப்பட்டேன். இப்போ தமிழ்நாட்டுக்கு ஆடுறது பெருமையாக இருக்கு. நம்ம டீமுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் பயிற்சியாளரும் கூட. இம்முறை பிளேயிங் செவனில் தொடர்ந்து விளையாடுவேன்னு நம்பிக்கை இருக்கு. வீட்டுக்கும் ஊருக்கும் தமிழ்நாட்டுக்கும் நிச்சயம் பெருமை சேர்ப்பேன் "  - என தம்ஸ்  அப் காட்டுகிறார் பிரபஞ்சன்.

http://www.vikatan.com/news/sports/96883-tamil-thalaivas-team-player-prabanjan-interview.html

Link to comment
Share on other sites

புரோ கபடி தொடக்க விழாவில் சச்சின், மித்தாலி ராஜ் பங்கேற்பு

 
 

புரோ கபடி லீக் ஐந்தாவது சீஸன் ஹைதராபாத் நகரில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. முதன்முறையாக தமிழ்நாட்டிலிருந்து ஓர் அணி புரோ கபடி தொடரில் பங்கேற்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரெய்டர் பிரபஞ்சன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிஃபண்டர் அருண் உள்பட ஏழு தமிழ்நாட்டு வீரர்கள், தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.  சச்சின் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு நடிகர் கமல்ஹாசன் தூதராக உள்ளார். 

ப்ரோ கபடி லீக்

சமீபத்தில் சென்னையில் நடந்த ஜெர்ஸி அறிமுக விழாவில் பேசிய கமல், ‛இந்திய விளையாட்டுகளில் மூத்த அண்ணனாகத் திகழும் சச்சின் டெண்டுல்கர், கபடியைப் பிரபலப்படுத்த முன்வந்தது மகிழ்ச்சி. எங்கோ ஓர் ஐரோப்பியத் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு உலகெங்கும் பரவ முடியும் என்றால், நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் ஆடி வந்த விளையாட்டு, தேசிய எல்லைகளை மட்டுமல்ல, உலக எல்லைகளைக் கடந்து செல்லும் என நம்புகிறேன். அதனால், அணியின் உரிமையாளர் என்னை அணுகியபோது உடனே சம்மதித்துவிட்டேன். இதை ஒரு பெருமையாகவும் கடமையாகவும் கருதுகிறேன். ‘தமிழ் தலைவாஸ்’ வெற்றி பெற வேண்டும்’’ என்று அவர், வாழ்த்து தெரிவித்தார். 

 

அதிகம் பேரால் பார்க்கப்படும் இந்திய விளையாட்டு லீக் தொடர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் புரோ கபடி லீக் தொடரின், ஐந்தாவது சீஸன் நாளை கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அக்ஷய் குமார், சிரஞ்சீவி, ராம்சரண், ராணா டகுபதி, அல்லு அர்ஜுன், தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் என்.பிரஸாத், அல்லு அரவிந்த், கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், பாட்மின்டன் வீரர்கள் சாய் ப்ரணீத், கிடாம்பி ஸ்ரீகாந்த், குரு சாய்தத், பயிற்சியாளர் கோபிசந்த், ராமுராவ் மற்றும் சாமுண்டீஸ்வரி போன்ற பிரபலங்கள் பங்கேற்கின்றனர். தொடக்கவிழாவில் Nritarutya நடன நிகழ்ச்சி நடைபெறும்.

http://www.vikatan.com/news/sports/97048-pro-kabaddi-league-inauguration-will-be-held-in-hyderabad-tomorrow.html

Link to comment
Share on other sites

சேலம் பிரபஞ்சன் முத்திரை பதித்தும், தமிழ் தலைவாஸ் தோற்றது ஏன்? #MatchAnalysis #ProKabaddi

 

‘கபடிக்குச் சொந்தக்காரர்கள் நாங்கதான்’ எனத் தமிழர்கள் மார்தட்டுவதுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைத்த வரவேற்பு கபடி வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. தமிழ்நாடு சுதாரிப்பதற்கு முன்னதாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் சுதாரித்துக் கொண்டன. இந்திய அணியிலும் சரி, ப்ரோ கபடியிலும் சரி வட மாநில வீரர்கள் கலக்குகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழக ப்ரோ கபடியில் தமிழ்நாட்டுக்கு எனப் பிரத்யேக அணி இல்லை. இதனால் தமிழக வீரர்களுக்குப் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சீசனில் தமிழக ரசிகர்களின் ஆதரவுடன் தமிழ் தலைவாஸ் அணி விளையாடுகிறது.

கபடி

அதிகளவில் இளம் வீரர்களைக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக அஜய் தாகூர் இருக்கிறார். இவர் கடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஹீரோவாக ஜொலித்தவர். மூன்று மாதம் நடக்கும் ப்ரோ கபடித்தொடர் ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. சச்சின் டெண்டுல்கர், அக்ஷய் குமார் என நட்சத்திர பட்டாளம் தொடக்க விழாவில் பங்கேற்றது. சச்சின் டெண்டுல்கர் வாங்கிய அணி என்பதாலோ என்னவோ ஒரு போட்டியில் கூட விளையாடாத தமிழ் தலைவாஸ் அணிக்கு நேற்றைய தினம் ட்விட்டரில் ஆதரவு குவிந்தது. ப்ரோ கபடித் தொடரின் ஐந்தாவது சீசனின் தொடக்கப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதின. 

ராகுல் சவுதாரி, ராகேஷ் ஷர்மா என வலுவான வீரர்களும் அனுபவம் வாய்ந்த வீரர்களும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் இருந்தனர். தமிழக அணியில் அஜய் தாகூர், அமித் ஹூடா, டான்சியோன் லீ, பிரபஞ்சன், அருண் உள்ளிட்ட வீரர்கள் இருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே போட்டித் தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே தெலுங்கு டைட்டன்ஸ் அணி மேட்சில் ஆதிக்கம் செலுத்தியது.

தமிழ் தலைவாஸ்

முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி  தடுமாறியது. முதல் ஆட்டம் என்பதாலோ என்னவோ முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியிடம் ஆக்ரோஷமே இல்லை. ரெய்டிலும் சரி டேக்கிலிலும் சரி சீராகப் புள்ளிகளைக் கோட்டை விட்டது அஜய் தாகூர் அணி. முதல் பாதியில் 13வது நிமிடத்தில்தான் முதல் டேக்கில்  புள்ளியைப் பெற்றது தமிழ் தலைவாஸ். முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் எடுத்த ஒரே டேக்கில் புள்ளி இதுதான். அந்த டேக்கில் புள்ளிக்குச் சொந்தக்காரர் டி.பிரதாப். மார்போடு சேர்த்து இறுக்கப்பிடித்து டேக்கில் செய்வதில் வல்லவரான தமிழக வீரர் அருண் நேற்று முதல் பாதி முழுக்க சொதப்பலாக ஆடினார். அவர் முயற்சி செய்த நான்கு முறையும் தோற்றார். ஒட்டுமொத்தம்மாக முதல் பாதியில் 11 முறை டேக்கில் புள்ளிகளை எடுக்க முயற்சி செய்த தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி மட்டுமே பெற்றது. 

தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் அஜய் தாகூர் முதல் பாதியில் ஸ்டார் பெர்ஃபார்மெராகத் திகழ்ந்தார். 12 முறை ரெய்டுக்குச் சென்று அதில் எட்டுப் புள்ளிகளை எடுத்து வந்தார். ராகுல் செளத்ரி ரெய்டுக்கு வரும்போதெல்லாம் தமிழ் தலைவாஸ் அணியைச் சேர்ந்த அமித் ஹூடாவுக்கு குறி வைத்தார். மூன்று முறை அவர் அமித் ஹூடாவை களத்தில் இருந்து வெளியேற்றினார். முதல் பாதியில் ஒரு கட்டத்தில் இரண்டு அணிகளும் 8-8 என்ற நிலையில் இருந்தன. அப்போது ராகுல் செளத்ரி அடுத்தடுத்து இரண்டு எதிரணி வீரர்களையும் வெளியேற்ற தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆனது. அப்போது தடாலென முன்னிலை பெற்றது தெலுங்கு டைட்டன்ஸ். முதல் பாதியின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 11 - 18 என ஏழு புள்ளிகள் பின்தங்கியிருந்தது.

ப்ரோ கபடி

இடைவேளைக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் அணி சுறுசுறுப்பாக விளையாட ஆரம்பித்தது. நேரம் நேரம் செல்லச் செல்ல ஆட்டத்தில் ஆக்ரோஷமும் கூடியது. முதல் பாதியில் டேக்கிலில் சொதப்பிய அருண், இம்முறை அசத்தலாக நான்கு முறை வெற்றிகரமாக டேக்கில் புள்ளியை எடுத்தார். இரண்டாவது பாதியில் ஒருமுறை கூட அருண் சொதப்பவில்லை. ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் ரெய்டிலும் கலக்கியது தமிழ் தலைவாஸ். ஆனால் அது காலம் கடந்த முயற்சியாக மட்டுமே இருந்தது. கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால் தோல்விக்காண புள்ளி வித்தியாசத்தை குறைக்க முடிந்ததே தவிர தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் 32 - 27 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வென்றது. வெறும் ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் வரலாற்றைத் தோல்வியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ். புள்ளிகள் வித்தியாசம் ஏழுக்குள் இருந்த காரணத்தால் லீக் சுற்றுக்கான புள்ளிப்பட்டியலில் தமிழக அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது.

தெலுங்கு அணிக்கு மேட்ச் வின்னராகத் திகழ்ந்தார் ராகுல் சவுதாரி. அவர் புள்ளிகளைத் தொடர்ச்சியாக அள்ளினார். நேற்றைய போட்டியில் 19 ரெய்டுகளில் 10 புள்ளிகளை எடுத்தார் ராகுல். இதன் மூலம் ப்ரோ கபடியில் 25வது முறையாக சூப்பர் -10 சாதனையை செய்தார். ஹைதரபாத் அணிக்காக நூறு ரெய்டு புள்ளிகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார் ராகுல் செளத்ரி. நேற்றைய தினம் ராகுலுக்குப் பக்கபலமாக சலுன்கே விளையாடினார். தமிழக அணியில் பிரபஞ்சன் அபாரமாக ஆடினார். ஆனால் கேப்டன் அஜய் தாகூர் சுமாராகவே விளையாடினார். தாகூர் பிரபஞ்சன் இணையை சலுன்கே - ராகுல் இணை வென்றது. கேப்டன் அஜய் தாகூர் விட்டுப்பிடிக்காமல் ஆரம்பத்தில் இருந்தே இறுக்கிப் பிடிப்பது அவசியம். 

பிரபஞ்சன் அபாரம் :- 

பிரபஞ்சன்

தமிழ் தலைவாஸ் அணிக்காக ப்ரோ கபடியின் வரலாற்றில் முதல் புள்ளியை எடுத்தவர் என்ற சிறப்புமிக்க பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் பிரபஞ்சன். நேற்றைய தினம் முதல் பாதியில் ஏழு முறை ரெய்டுக்குச் சென்ற பிரபஞ்சன் மூன்று புள்ளிகளை எடுத்து வந்தார். அதே சமயம் இரண்டு முறை பிடிபட்டார்.  இரண்டாவது பாதியில் எட்டு ரெய்டுக்குச் சென்றவர் நான்கு புள்ளிகளை எடுத்தார். ஆனால்  ஒரு முறை மட்டுமே பிடிபட்டார் . ஒட்டுமொத்தமாக நேற்று ஏழு புள்ளிகளை அள்ளினார் பிரபஞ்சன். ராகுலுக்கு அடுத்தபடியாக நேற்று அதிக புள்ளிகளை எடுத்தவர் பிரபஞ்சனே.  இக்கட்டான சூழ்நிலைகளில் அபாரமாக ஆடினார். இந்திய அணிக்காக இன்னும் விளையாடாத பிரபஞ்சன், சர்வதேச பிளேயரைப் போல் விளையாடியது பலரையும் வியக்கவைத்தது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் பிளஸ் பிரபஞ்சனின் அட்டகாச பெர்பார்மென்ஸ்தான் . 

போட்டி முடிந்த பிறகு தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரனிடம் பேசினேன். 

Tamil Thalaivas coach Baskaran

முதல் பாதியில் ஆக்ரோஷமாக ஆடாததுதான் தோல்விக்குக் காரணமா? 
"எங்களது இலக்கு ராகுல் செளத்ரியை களத்தில் இருந்தே வெளியேற்றுவதாகவே இருந்தது. நாங்கள் ஆக்ரோஷமாக விளையாடவே இல்லை எனச் சொல்ல மாட்டேன். ராகுல் செளத்ரியை வெளியேற்றும் முயற்சியில் நாங்கள் இரண்டு புள்ளிகளை ஒரே நேரத்தில் இழந்தோம். அந்தத் தருணத்தில் அணியும் ஆல் அவுட் ஆனதால் மேட்ச் எதிரணிக்குச் சாதகமாகிவிட்டது

அஜய் தாகூருக்கு இன்றைய தினம் மோசமாக அமைந்துவிட்டதே ?
"மோசமாக அமைந்தது எனச்  சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை அஜய் தாகூருக்கு இது கற்றுக்கொள்ளும் காலகட்டம். அவர் முன்பு இருந்த அணியின் நிலைமை வேறு. இப்போதைய அணியின் நிலைமை வேறு. இளம் வீரர்களை இப்போது வழிநடத்துகிறார். அந்தக் கவனத்துடன் அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்" என்றார் கே.பாஸ்கரன். 

http://www.vikatan.com/news/sports/97239-telugu-titans-led-by-rahul-chaudhari-beat-tamil-thalivas.html

Link to comment
Share on other sites

பிக்பாஸ் அலையில் இந்த மேட்சை நீங்கள் மிஸ் செய்தீர்களா? #ProKabaddi #JPPvsDD

 
 

கம்பேக் மேட்ச்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு.  அதுவும் வலுவானவனிடம்தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டே இருந்த ஒருவன்  திருப்பி அடித்து வெற்றி கொண்ட கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. சினிமா, கிரிக்கெட் மட்டுமல்ல  கபடியிலும்  அப்படிப்பட்ட  கம்பேக் கதைகள் உண்டு. நேற்று நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தபாங் டெல்லி இடையிலான போட்டி கம்பேக் மேட்ச்களுக்கு ஒரு சிறிய உதாரணம். 

Pro Kabaddi


புரோ கபடியை பொறுத்தவரை  ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி எப்போதுமே வலுவான அணிகளில் ஒன்று.  ஐபிஎல்லில் ஆடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஜெராக்ஸ் தான் தபாங் டெல்லி. அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லாம் கடந்த சீசன்களில் விளையாடவில்லை. கடைசி  இரண்டு இடத்தில் வந்துவிடக்கூடாது  என்பதை நோக்கமாக கொண்டு விளையாடும்  அணியாகத்தான் இருந்தது. டெல்லியோடு மேட்ச்சா? ஐந்து புள்ளிகள் நிச்சயம்ப்பா என்ற மனநிலையில் தான் கடந்த சீசன்களில்  எதிர் அணிகளும் விளையாடின.

இதுவரை 57 போட்டிகளில் ஆடியுள்ள தபாங் டெல்லி அணி ஜெயித்தது வெறும் 15ல் தான். அதுவும் மூன்றாவது சீசனில் 14 போட்டிகளில் ஆடி வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் வென்றது. இதோ இந்த சீசனில் 12 அணிகள் கோப்பையைக் கைப்பற்ற போட்டி போடுகின்றன. ஜெயிப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு முதல் போட்டியே தபாங் டெல்லி அணியுடன்தான். "ஒன்சைடு மேட்ச்சா   இருக்குமேப்பா ",  "சுவாரஸ்யமே இருக்காதே" என  கமென்ட்டுகளில் ... மீம்களில்... கலாய்த்து தள்ளினார்கள் நெட்டிசன்கள். தபாங் அணியும்  கடைசியாக ஜெய்ப்பூர் அணியுடன் மோதிய ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெறவே இல்லை.  ஜெயிப்பூர் அணியில் உடும்புப்பிடி நாயகன் மன்ஜீத் சில்லர் இருந்தார். அவர் தான் அந்த அணியின் கேப்டனும் கூட. அவரைத் தவிர  ஜஸ்விர் சிங், செல்வமணி உள்ளிட்ட திறமையான வீரர்களும் இருந்தனர். தபாங் டெல்லி அணியில் பிரபலமான இந்திய வீரர்கள் யாரும் இல்லை.  ஈரான் வீரர் மீரஜ் ஷேயிக்தான் அந்த அணிக்கு கேப்டன்.

pro kabaddi

ஹைதரபாத் கச்சிபோலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு எட்டு மணிக்கு மேட்ச் தொடங்கியது. ஆரம்பத்திலியே போட்டுத் தாக்கியது ஜெய்ப்பூர்.  0 - 2 என முதல்  இரண்டு நிமிடங்களில் பின்தங்கினாலும் அதன்பின்னர் சுதாரித்து  ஒரு சாம்பியன் அணி எப்படி  ஆடுமோ அப்படியொரு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுதியது ஜெய்ப்பூர்.  மன்ஜீத் சில்லர் ரெய்டுக்கு வரும்போதெல்லாம்  ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள். செல்வமணி ஜெய்ப்பூருக்கு புள்ளிகள் சேர்த்தார். 0-2 என நிலையில் இருந்து  தடாலென  7 - 4 என்றானது ஸ்கோர். அந்த பதற்றத்தில் மேலும் தவறுகளை செய்தனர் டெல்லி வீரர்கள்.  எதிரணியின் பதற்றத்தைச் சாதகமாக்கிக் கொண்ட ஜெய்ப்பூரைச் சேர்ந்த  ஜஸ்விர் சிங் அக்ரசிவ் மனப்பான்மையோடு  ரெய்டுக்குச் சென்று தபாங் டெல்லி அணியை துடைத்துப் போட்டார். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆல் அவுட் ஆனது டெல்லி. 


14 - 4  என ஜெயிப்பூர் எளிதாக முன்னிலை பெற்றது. அப்போது Do or die எனச் சொல்லப்படும் கட்டாயம் புள்ளிகள் வென்றே ஆக வேண்டிய ரெய்டில் மாற்றுவீரராக களமிறங்கிய ஈரான் வீரர் அபோல்ஃபாசில் மக்சொட்லு அற்புதமாக ஒரு புள்ளியை எடுத்தார்.  எதிரணியின் வலுவான  ரெய்டரான ஜஸ்விர் சிங்கை  வெளியேற்றும் பணியையும்  அபோல்ஃபாசில்  முடித்தார். முதல் பாதி முடிவில் ஸ்கோர் 16 - 10 என்ற நிலையில் இருந்தது. ஆறு புள்ளிகள் முன்னிலையோடு ஜெய்ப்பூர் இரண்டாவது பாதிக்கு ரெடியானது. ஐந்து நிமிட ஓய்வுக்கு  பிறகு அம்பியில் இருந்து அந்நியனாக மாறியது டெல்லி அணி. ரெய்டிலும் சரி, டேக்கிலிலும் சரி ஜெய்ப்பூரை பிழிந்து எடுத்தது. 

கபடி

இரண்டாவது பாதி தொடங்கியதுமே ஜெய்ப்பூரை ஆல் அவுட் செய்தனர் டெல்லி வீரர்கள். இதனால் இரண்டு புள்ளிகள் கூடுதலாக கிடைத்தது. 14 - 7 என்ற ஸ்கோர் பின்னர் 16 - 13 என்றானது. அதன் பின்னர் 18 - 17 என்றானது. அப்போது டூ ஆர் டை  ரெய்டுக்குச் சென்ற ஜஸ்விர் சிங் அவுட் ஆனார். ஸ்கோர் சமநிலைக்கு வந்தது. 18 - 18 என புள்ளிகள் இருந்தபோது ஜெயிப்பூர் அணி பதற்றத்தில் பிடியை முற்றிலுமாக தளர்த்தியது. மன்ஜீத் சில்லரையும், ஜஸ்விரையும் குறிவைத்து வீழ்த்தியது தபாங் டெல்லி.

இரண்டாவது பாதியில் ஈரான் கேப்டன் மீராஜ் ஷேயிக் சிறப்பாக ஆடினார்.  நெகிழ்வுத் தன்மை மிக்க தனது உடலை பயன்படுத்தி ரெய்டில் பல புள்ளிகளைக் குவித்தார் மீரஜ். ஜெயிப்பூர் மீண்டும் ஆல்அவுட் ஆனது. அப்போது ஸ்கோர் 21 - 27. இப்போது  தபாங் அணி ஆறு புள்ளிகள் முன்நிலையில் இருந்தது. அதன்பின்னர் ஜெய்ப்பூர் அணி சுதாரிக்கத் தொடங்கினாலும் அது காலம் கடந்த முயற்சியாக மட்டுமே இருந்தது. ஆட்ட நேர இறுதியில் 30 - 26 என்ற கணக்கில் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது தபாங் டெல்லி.  எதிரணியில் வலுவானவனை முதலில் வீழ்த்து, எளிதில் வெற்றி வசப்படும் எனும் யுக்தியைத்தான் பயன்படுத்தியது டெல்லி அணி. 

IMG_0211_11071.JPG

 

முதல் போட்டியிலேயே டெல்லி அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தது ஜெய்ப்பூர் ரசிக  கூடாரம். இந்த சீசனில் தன்னம்பிக்கையுடன்  தொடர்ந்து ஆடுவோம். சாம்பியன் ஆக வேண்டும் என எங்களுக்கும் ஆசை இருக்கிறது என போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் சொன்னார் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பென்டிகிரி. டெல்லி அணி இந்த சீசனில் இன்னும் எந்தெந்த அணிகளுக்கு எல்லாம் சஸ்பென்ஸ் வைக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

http://www.vikatan.com/news/sports/97338-did-you-miss-the-pro-kabaddi-league-match.html

Link to comment
Share on other sites

கடைசி 5 நிமிடங்களில் தலைகீழாக மாறிய மேட்ச்... தெலுங்கு டைட்டன்சை பாட்னா வென்றது எப்படி? #MatchReview #ProKabaddi 

 

ஜெய் மகிழ்மதி என ஆரவரத்துடன் களமிறங்கிய தெலுங்கு டைட்டன்ஸ்  அணியை கடைசி நிமிடங்களில் ஜெயித்திருக்கிறது பாட்னா பைரேட்ஸ் அணி. புரோ கபடி சீசன்-5 சுற்றில் நேற்று  ஹைதரபாத் கச்சிபோலி ஸ்டேடியத்தில் இரவு 9 மணி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.

Pro kabaddi


பாட்னா எப்போதுமே பலமான அணியாகவே  இருந்து வந்துள்ளது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியை முதல் போட்டியிலேயே ஜெயித்திருந்தது தெலுங்கு டைட்டன்ஸ் அணி. அந்த வெற்றியை முழுதாக கொண்டாடுவதற்கு முன்னதாக, மறுநாளே இரண்டாவது போட்டியில் ஆடியது தெலுங்கு டைட்டன்ஸ். சொந்த மண்ணில் நடக்கும் மேட்ச் என்பதால் தெலுங்கு அணிக்கு  ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு குவிந்தது. மேட்ச் முடியும் வரை ஜெய் மகிஷ்மதி கோஷம் போட்டனர் மண்ணின் மைந்தர்கள். 

மேட்ச் தொடங்கியவுடனேயே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது பாட்னா. ஆனால் டைட்டன்ஸ் அணி சோர்ந்துவிடாமல் போராடியது. இதனால் இரண்டு அணிகளுக்கும் புள்ளிகள்  சம அளவில் கிடைத்துக் கொண்டே இருந்தன. 7 -7 என மேட்ச் இருக்கும்போது பாட்னா அணியைச் சேர்ந்த மோனோ காயத்  டூ ஆர் டை ரெய்டுக்குச் சென்றார்.  அவரை வளைத்துப் பிடித்தது  டைட்டன்ஸ். இதையடுத்து தெலுங்கு டைட்டன்ஸ் அணி சார்பில் விகாஸ் ரெய்டுக்குச் சென்றார். அவர்  இரண்டு பேரை வெளியேற்றினார். அப்போது ஆல் அவுட் செய்து ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லத்  தவறியது தெலுங்கு அணி. குறிப்பாக  ராகேஷ் குமார் டேக்கிலில் கோட்டை விட்டார். 

12 - 10 என ஸ்கோர் இருந்தபோது தெலுங்கு டைட்டன்ஸ் அணியின்  கேப்டன் ராகுல் சவுதரி சூப்பர் டேக்கில் செய்யப்பட்டார். இதையடுத்து இரண்டு புள்ளிகள் பாட்னா அணிக்கு கிடைத்தன. அதன் பின்னர் பாட்னா வீரர் பர்தீப் நர்வால் ரெய்டுக்கு வந்தபோது கிடுக்கிப்பிடிப் போட்டு  வெளியேற்றினார் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த விஷால் பரத்வாஜ். இப்போது மீண்டும் பாட்னா அணியை ஆல் அவுட் செய்யும் அற்புதமான வாய்ப்பு தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்குக் கிடைத்தது. நம்பிக்கையோடு  ரெய்டு சென்றார் ராகுல் சவுதரி. ஆனால்  இரண்டாவது முறையாக சூப்பர் டேக்கிலில் மாட்டினார். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல் பாதி முடிவில் 14 -15  என இருந்தது ஸ்கோர். ஒரு புள்ளி பின்தங்கியிருந்தது  டைட்டன்ஸ். 

Pro Kabaddi

இரண்டாவது பாதி தொடங்கியவுடன் அடுத்த நிமிடத்திலேயே மீண்டும் பாட்னாவை ஆல் அவுட் செய்யும் வாய்ப்பு தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்குக் கிடைத்தது. மீண்டும்  ரெய்டுக்குச் சென்றார் ராகுல்; மீண்டும்  சூப்பர் டேக்கிலில் சிக்கினார். ஆனால் இந்த முறை பாட்னா அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படவில்லை. காயம் ஏற்படுத்தும் நோக்கில்  ராகுலை பிடித்ததால் தெலுங்கு அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது.  இதையடுத்து, சில நொடிகளில் பாட்னா அணி ஆல் அவுட் ஆனது.  ஸ்கோர் 19 -16 என்றானது. இந்த  முன்னிலையை பயன்படுத்தி மேட்சை கட்டுப்பட்டுக்குள் வைக்க முயற்சி செய்தது தெலுங்கு அணி. நேரம் போனாலும் பராவயில்லை பாட்னா அணி புள்ளிகள்  பெற்றுவிடக் கூடாது என்ற மனநிலையுடன்  ஆடியது. எனினும், பாட்னா அணி கடுமையாக போராடியது. 

இரண்டாவது பாதியில்  முதல் பதினைந்து நிமிடங்கள் மேட்ச் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இரு அணிகளும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருந்தன. 25 - 24  எனக் காட்டிய ஸ்கோர் கார்டு இரு அணிகளின் ரசிகர்களையும் பதற்றத்தில் வைத்திருந்தது. அப்போது பர்தீப் நர்வால்  ரெய்டுக்குச் சென்றார்.  அந்த ரெய்டில் மேட்ச் மாறியது. கேப்டன் பர்தீப்பை வெளியேற்றினால் மேட்ச் தங்களுக்கு சாதகமாக மாறிவிடும் என்பதை உணர்ந்த தெலுங்கு டைட்டன்ஸ், அவரை மடிக்கிப் பிடித்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. ஆனால் பர்தீப் ஒரே ரெய்டில்  மூன்று புள்ளிகளை அள்ளினார். ஸ்கோர் 25 - 27 என்றானது. ஒரே மேட்சில் பத்து புள்ளிகளை எடுத்ததன் மூலம்  சூப்பர் -10 சாதனையை நிகழ்த்தினார் பர்தீப் நர்வால்.  மூன்று வீரர்களை இழந்தது  டைட்டன்ஸ். எதிரணியை ஆல் அவுட் ஆக்கியதில் அடுத்தபடியாக மூன்று புள்ளிகள் வந்தன. இப்போது ஸ்கோர் 26 -31.  ஆல்அவுட் ஆகி மீண்டும் களத்துக்குள் வந்தபோது ஆக்ரோஷமாக ஆடியது டைட்டன்ஸ். ஆனால் எந்தபலனும் கிடைக்கவில்லை. ஆட்ட  நேர முடிவில் 29 - 35 என்ற கணக்கில் தோற்றது  டைட்டன்ஸ். ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  இந்த சீசனில் வெற்றிக் கணக்கைத் தொடங்கியது பாட்னா பைரேட்ஸ். 

http://www.vikatan.com/news/tamilnadu/97367-patna-pirates-beat-telugu-titans.html

Link to comment
Share on other sites

நகம் கடிக்க வைத்த த்ரில் மேட்ச்... யு மும்பா யூ டர்ன் போட்டு வென்றது எப்படி? #ProKabaddi #MatchReview

 
 

இந்த சீசனில் தனது முதல் போட்டியில் புனே அணியிடம் தோற்றிருந்தது மும்பை அணி. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை  நேற்று சந்தித்தது யு மும்பா. ஹரியானாவுக்கு இதுதான் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா அணியைப் பொறுத்தவரையில் சுரேந்தர், மோஹித் சில்லர் என இரண்டு  முக்கியமான வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து இதற்கு முன்னர் பல சீசன்களில் விளையாடியிருக்கிறார்கள்.  இவர்கள் இருவருக்குமே எதிரணி கேப்டன் அனுப்குமாரோடு பல போட்டிகளில் ஆடிய பரிச்சயம் உண்டு. மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்களுக்கு எல்லாமே கேப்டன் அனுப் குமார்தான். 

Pro kabaddi

ஹைதராபாத் கச்சிபோலி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த Pro Kabaddi League மேட்ச்சில் முதல் ரெய்டு சென்றவர் அனுப்குமார். மேட்ச் ஐதராபாத்தில் நடந்தாலும் அனுப் குமாருக்கு ஆதரவுக் குரல்  மட்டும் ரெய்டுக்கு ரெய்டு அதிகரித்துக் கொண்டே இருந்தது.  அவர் ஒரு புள்ளியை எடுத்து வந்தார்.  பதிலுக்கு ஹரியானாவும் ரெய்டில்  இரண்டு  புள்ளிகளைப் பெற்றது. மும்பை அணி வீரர் காசிலிங் அடாகே அட்டகாசமாக  இரண்டு புள்ளியை எடுத்தார். களத்துக்குள் ஆழமாகச்  சென்று போனஸ் புள்ளிகளை அள்ளி வருவதில் கெட்டிக்காரர் அவர். இந்த முறை போனஸ் லைனில் கெத்தாக காலை வைத்தது மட்டுமின்றி, எதிரணி வீரர் விகாஸையும்  அவுட் ஆக்கியிருந்தார்.

ஸ்கோர் 5-4 என இருந்த போது  ஹரியானா ஒரு புள்ளி பின்தங்கியிருந்தது. அப்போது Do or Die ரெய்டில் ஹரியானாவுக்குப் புள்ளிகள் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். வசீர் சிங் ரெய்டுக்குச் சென்றார்.  வலது முனையில் நின்றுகொண்டிருந்த சுரிந்தர் சிங் ஓடிவந்து வசீரின் வலது தொடையில் உடும்புப்பிடி போட்டார். மற்ற வீரர்களும் துரிதமாகச் செயல்பட வசீர் அவுட். அடுத்த Do or Die ரெய்டில் சுரேந்தர் மும்பையின் எல்லைக்குள் நுழைந்தார். அவர் புத்திசாலித்தனமாக  இரண்டு புள்ளிகளை எடுத்து வந்தார். அதில் யூ மும்பாவின் துடிப்பான பீல்டர் சுரீந்தர் காலியானார். இப்போது ஹரியானாவின் கை ஓங்கியது. 8-9 என்றானது ஸ்கோர். 

Pro kabaddi

ஒரு புள்ளி பின்தங்கியிருந்த நிலையில் பதற்றத்தில் தவறுகள் செய்ய ஆரம்பித்தது யு மும்பா. வரிசையாக  புள்ளிகளை இழக்கத் தொடங்கியது எனினும் கேப்டன் அனுப் மட்டும்  கூலாக விளையாடினார். ரெய்டில் தவளை போலத் தாவி கோட்டைத் தொட்டு புள்ளிகளைப் பெற்றார். மீண்டும் ஒரு Do or Die ரெய்டு ஹரியானாவுக்கு. இம்முறை வசீர் சிங் புள்ளிகள் வேட்டைக்குச் சென்றார். மும்பையின் எல்லையில் அனுப்குமாரும், ஜோகிந்தர் சிங்கும்  புள்ளிகள் வேண்டுமே என்ற பசியோடு காத்திருந்தார்கள். இருவரும் ஆளுக்கொரு முனையில் நின்றுகொண்டிருந்தார்கள். கபடி... கபடி... எனப் பாடிக்கொண்டே வந்த வசீர் ஜோகீந்தர்தான் சற்றே பலவீனமானவர் என்பதை உணர்ந்து  அவர் இருக்கும் பகுதியில் நன்றாக இறங்கினார். இரைக்காகக் காத்திருந்த கொக்குப் போல ஜோகீந்தர் ஒரு அற்புதமான டேக்கில் செய்தார்.

போனஸ் லைனுக்குள் வசீர் வலது காலை வைக்க, ஜோகீந்தர் தனது இடது கையால்  வசீரீன் வலது காலின் கணுக்கால் பகுதியை இறுகப்பற்றினார். வசீர் தப்பிக்க முயலவே தனது வலது கையால் வசீரின் இடதுகாலின் கனுக்காலையும் பிடித்து ஒருசேர இரண்டு கால்களையும் இழுத்தார். ஆனால் வசீர் லேசுபட்ட ஆள் இல்லை அல்லவா!  அவர் நீச்சல் தெரியாதவன் தண்ணீரில் மூழ்கினால் தப்பிக்க எப்படித் துடிப்பானோ அப்படித் துள்ளினார். அதற்குள் அனுப்குமார் வந்து ஆளை அமுக்கினார். துள்ளி அடங்கிய வசீர் சிங் அவுட். சூப்பர் டேக்கிலில் இரண்டு புள்ளிகள்  மும்பைக்குக் கிடைத்தது என அதன்  ரசிகர்கள் உற்சாகமடைவதற்குள்  அம்பயர்,  ஹரியானா  அணிக்கு ஒரு புள்ளிகள் என அறிவித்தார். காரணம் என்னவெனில் வசீர் போனஸ் லைனுக்குள் வந்தபோதே ஜோகிந்தர் கோர்ட்டின் எல்லைக்கு வெளியே ஒருமுறை தனது காலை வைத்துவிட்டார்.  அருமையான டேக்கில் வீணானது. புள்ளியும் போனது. இப்போது அணியில் இருந்தே ஒரே ஆள்  அனுப் மட்டுமே. 

Pro kabaddi

அனுப் சூப்பர் ரெய்டில் புள்ளிகள் எடுக்கப் பார்த்தார். ஆனால் அங்கே பிடிபட்டு வீழ்ந்தார். மும்பை ஆல் ஆவுட் ஆனது. முதல் பாதியில் கடைசி நேர தவறுகளால் 11 - 15 எனப் பின்தங்கியது  யு மும்பா. முதல் பாதியில் வெறும் இரண்டு டேக்கில் புள்ளிகள் மட்டுமே  எடுத்திருந்தது மும்பை அணி. குறிப்பாக டிஃபென்டர் சுரேஷ் குமார் பலவீனமான ஆளாகத் தெரிந்தார். அவரைக் குறிவைத்து புள்ளிகளை அள்ளியது ஹரியானா. இரண்டாவது பாதி தொடங்கியதும் அனுப் குமார் சில நிமிடங்களில் அவுட் ஆனார். மளமளவென புள்ளிகளைப் பெற்றது ஹரியானா. அனுப் குமார்


12 -19 என ஸ்கோர் இருந்தபோது ஹரியானா எளிதில் வென்றுவிடும் என்றே பலரும் கருதினார்கள். மும்பையின் ஸ்டார் பிளேயர்கள் வெளிய இருந்த நிலையில் மும்பையின் எல்லைக்குள் மூன்று பேர் மட்டுமே இருந்தனர். வசீர் சிங் ரெய்டுக்குச் சென்றார். இம்முறை அவரை ஓடி வந்து  அட்டகாசமாக டேஷ்  அடித்து வெளியேற்றினார் சுரேஷ் குமார். முதல் பாதியில் சொதப்பிய சுரேஷா இப்படி ஆடுவது என ஆச்சர்யமாக இருந்தது. சூப்பர் டேக்கில் காரணமாக மும்பை அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்தன. மும்பையின் ரெய்டர் காசிலிங் இப்போது ஹரியானா எல்லையில் வேட்டையாடச் சென்றார். அவர்  இரண்டு பேரை வெளியேற்றினார். அதன்பின்னர் அனுப்குமார் ரெய்டுக்குச் சென்றார். அவரும் தன் பங்குக்கு இரண்டு பேரை வெளியேற்றினார்.

அனுப்குமாரின் 'வாவ்' ரெய்டால் ஹரியானா ஆல் ஆவுட் ஆனது. தொடு புள்ளிகளோடு ஆல் அவுட் செய்ததற்கான புள்ளிகளும் இப்போது மும்பை அணிக்குக் கிடைத்தது. இப்போது ஸ்கோர் 22 - 20 என்றானது. இரண்டே நிமிடங்களில் மேட்ச்  மாறியது. அரங்கில் சுவாரஸ்யம் கூடியது. ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்தார்கள். உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தார்கள். 25 -22  என மேட்ச்  Close ஆக சென்றது. அப்போது வசீர் சிங் ஒரு ரெய்டு புள்ளியைப் பெற்றுத்தந்தார்.  25 - 23, 25 - 24 , 26 - 24, 27 - 24, 28 - 24, 28 -25 என ஸ்கோர் கார்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறவைத்தது. ஆட்டம் முடிய  இரண்டரை நிமிடங்கள் இருந்தன. இப்போது அனுப் குமார் ரெய்டுக்குச் சென்றார். அவர் வேண்டுமென்றே காலத்தைக் கடத்தி வெற்று ரெய்டு செய்தார். புள்ளிகள் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஹரியானா தீபக் குமாரை ரெய்டுக்கு அனுப்பியது. அவர் அவுட். ஸ்கோர் 29 -25.  இப்போது மும்பை வீரர் காசிலிங் ரெய்டில் பிடிபட்டார். ஸ்கோர் 29 - 26 என்றானது. இன்னும் ஒரு நிமிடம் மிச்சமிருந்த நிலையில் வசீர் சிங் ரெய்டுக்குச் சென்றார். அவர் போனஸ் புள்ளியைப் பெற்றது மட்டுமின்றி இன்னொரு ரெய்டு புள்ளியையும் பெற்றார். ஸ்கோர் 29 - 28. 

 

இன்னும் முப்பது நொடிகள் மட்டுமே இருந்த நிலையில், மேட்சில் உச்சபட்சப்  பரபரப்பு தொற்றியது . அனுப் குமார் ரெய்டு சென்றார். அவர் புள்ளிகள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆடவே இல்லை. அதே சமயம் அவரை அவுட் ஆக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஹரியானாவுக்கு. அனுப் குமார் ரொம்பவே கூலாக கிரீஸுக்கு அருகிலேயே நின்று கொண்டு எதிரே இருந்த திரையில் நேரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். நொடிகள் குறைந்து கொண்டே வந்தன. ச்சே ..பாஞ்ச்...ச்சார்...தீன்..தோ ...ஏக்  - U MUMBA WON BY ONE POINT. அரங்கம் ரசிகர்களின் கூக்குரலால் ஆட்டம் கண்டது.  ஒரு நல்ல வீரருக்கு எப்போது தாக்க வேண்டும் என்பதை விட எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது தெரியும். எல்லோரும் நன்றாக ஆடுவார்கள். ஆனால், புத்திசாலிகள்தான் சாம்பியன்கள் ஆவார்கள். அனுப் குமார் புத்திசாலி; சாம்பியன்! 

http://www.vikatan.com/news/sports/97410-u-mumba-beat-haryana-steelers-in-pro-kabaddi-league.html

Link to comment
Share on other sites

'இருப்பா... பாயின்ட் வரட்டும்' என காத்திருந்து, புள்ளிகளை இழந்து... தோற்றதா டெல்லி ? #ProKabaddi

 
 

ப்ரோ கபடித் தொடரின்   (Pro Kabaddi) நேற்றைய போட்டியில் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியும் தபாங் டெல்லி அணியும் மோதின. டெல்லி தனது முதல் போட்டியில்  வெற்றி பெற்று நம்பிக்கையோடு இந்த மேட்சை எதிர்கொண்டது. குஜராத் அணிக்கு இந்த சீசனில் இதுதான் முதல் போட்டி. செம எனெர்ஜியுடன் களம் கண்டது. 

Pro kabaddi

குஜராத் அணியின் பிளேயிங்  செவனில் சுகேஷ் ஹெக்டே, இரான் வீரர் ஃபாசெல் அட்ரச்சலி, சச்சின்  உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். டெல்லி அணியில் மீரஜ்  ஷேய்க், நிலேஷ் ஷிண்டே, அபோஃபாசல் மக்சொட்லோ ஆகிய முக்கியமான வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். முதல் ரெய்டில் டெல்லி, குஜராத் இரண்டுமே  ரெய்டுகளில் புள்ளிகள் எடுக்காமல் திரும்பிவந்தன. டெல்லி அணி சார்பில்  இரண்டாவது ரெய்டுக்கு கேப்டன் மீராஜ் ஷேயிக் சென்றார். அவருக்குக் கால் லேசாக வழுக்கியது. துரிதமாக செயல்பட்டு அமுக்கிப் பிடித்து தூக்கிப் போட்டது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். மீரஜ் ஷேயிக் மட்டுமல்ல டெல்லி அணியே அந்த ரெய்டிலிருந்து மேட்சை கோட்டை விடத் தொடங்கியது. 

டெல்லி அணி ரெய்டுகளில் திணறியது. குஜராத் டெல்லி வீரர்கள் வரும்போதெல்லாம் கொசுவைப் பிடித்துத் தூக்கியெறிவது போல களத்துக்கு வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். இடையில் இரண்டு ரெய்டுகளில் டெல்லி அணியும் ரெய்டுக்கு வந்த  குஜராத் வீரர்களை மடக்கிப் பிடித்தது. அதைத்தவிர வேறொன்றையும் சாதிக்கவில்லை. அற்புதமாக  டேக்கில் செய்துகொண்டிருந்த டெல்லி வீரர் சுனில் அவுட் ஆனதும் அந்த அணி இன்னும் பின்னடைவைச் சந்தித்தது. எனினும் மேட்ச் விறுவிறுப்பாகவே இருந்தது. ஏனெனில் இரண்டு அணியிலும் வெற்று ரெய்டுகள் நிறைய செய்யப்பட்டன. இதனால் முதல் கால் மணி நேரத்தில் எந்த அணியும் மிகப்பெரிய முன்னிலை பெறவில்லை. 

ஸ்கோர்  8-5 என்ற நிலையில், குஜராத் வீரர் ராகேஷ் நர்வால் ரெய்டு சென்றார். டெல்லியின்  கோட்டையில்  நிலேஷ் ஷிண்டே, ஆனந்த் பாட்டில், பாஜிரோ ஹோடகே இருந்தனர். அப்போது  டூ ஆர் டை ரெய்டுக்கு வந்த குஜராத் வீரரை மடக்கிப்பிடிக்க முயற்சி செய்தபோது நிலேஷ் ஷிண்டே எல்லைக் கோட்டுக்கு வெளியே தெரியாமல் காலை வைத்துவிட்டார். இதைக் கவனித்த நடுவர்கள் அவரை உடனே வெளியேறச் சொன்னார்கள். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத நிலேஷ் அந்த ரெய்டு முடியும் வரை களத்தில் எதிரணி வீரருக்குப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார். 30 நொடிகள் முழு ரெய்டும் முடிந்த பிறகு அம்பயர் நிலேஷை அழைத்து எச்சரிக்கை செய்ததோடு ஒரு டெக்கினிக்கல் பாயின்ட்டையும் குஜராத் அணிக்குக் கொடுத்தனர். அதன் பிறகு மீதமிருந்த இரண்டு பேரையும் குஜராத் எளிதாக ஊதித்தள்ளியது. முதல் பாதியின் கடைசி இரண்டு நிமிடங்களில் குஜராத் அணியின் பக்கம் புள்ளிகள் குவிந்தன. ஸ்கோர் 15 - 5 என்றானது. பத்து புள்ளிகள் பின்தங்கிய நிலையில் மேட்ச் நழுவத் தொடங்கியது குறித்து ஆலோசிக்க இடைவேளையில் கூடியது டெல்லி குழு. 

Pro Kabaddi

முதல் பாதியில் மாஸ் பெர்ஃபார்மென்ஸ் காட்டியிருந்தது குஜராத். ரெய்டில் 5 புள்ளிகள், டேக்கிலில் 5 புள்ளிகள், ஆல் அவுட் செய்ததில் இரண்டு புள்ளிகள், எக்ஸ்ட்ரா வகையில் மூன்று புள்ளிகள் என அனைத்து பாக்ஸையும் டிக் செய்திருந்தது. டெல்லி அணி வெறும் ரெய்டு புள்ளிகளை மட்டுமே எடுத்தது. குஜராத் அணி ஆடிய விதத்தைப் பார்க்கும்போது இரண்டாவது பாதியில் அபாரமாக ஆடி 15 புள்ளிகளுக்கு மேலான வித்தியாசத்தில் முரட்டுத்தனமான வெற்றியைப் பெறும் எனத் தோன்றியது. இரண்டாவது பாதி தொடங்கியதும் குஜராத் இன்னும் நெருக்கியது. டெல்லி வீரர் அபோல்ஃபாசில் ரெய்டுக்கு வந்தபோது குஜராத் அணியைச் சேர்ந்த ஃபாசல் அட்ரச்செல்லி கணுக்காலை இழுத்துப் பிடித்து அடக்கினார். அது நேற்றைய தினத்தின் பெர்ஃபெக்ட் டேக்கில். 

நேரம் செல்லச் செல்ல டெல்லி அணியைப் பார்ப்பதற்கே பரிதாபமாகத் தெரிந்தது . குஜராத் அணியில் எல்லா வித்தையும் தெரிந்த ஆட்கள் இருந்தார்கள். ஒருவர் ஒற்றைக்கையால் கணுக்காலைப் பிடித்து இழுப்பார்; இன்னொருவர் இரண்டு கைகளாலும் ரெய்டுக்கு வரும் வீரரின் மூட்டைக் கட்டியணைத்து  அவுட் ஆக்குவார்; சிலர் பாய்வார்கள், சிலர் தோள்களையும், மார்புப்பகுதியையும் பிடித்து ஆளை அமுக்குவார்கள். இப்படிப் பலவித ஆட்களும் அங்கே  இருப்பதால் டெல்லி அணிக்கு ஆரம்பத்தில் மேட்ச்சில் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. அதற்குள் விறுவிறுவென புள்ளிகளைச் சேர்த்தது குஜராத். இரண்டாவது பாதியில் முதல் பத்து நிமிட முடிவில் ஸ்கோர் 21 - 8 என இருந்தது. அடுத்த மூன்று நிமிடங்களில் தபாங் டெல்லி மீண்டும் ஆல் அவுட் ஆகவே  26 - 9 என்றானது ஸ்கோர். 

குஜராத்துக்கு மிக எளிதான வெற்றி கிடைப்பது போன்ற சூழ்நிலை இருந்தது. அப்போது குஜராத் அணியின் ஆக்ரோஷமான ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அலட்சிய ஆட்டமாக மாறத் தொடங்கியது.  டெல்லி அணியில் மூத்த வீரர்கள் சொதப்பிக் கொண்டிருக்க இளங்கன்று ஸ்ரீராம், குஜராத்தின் வியூகங்களுக்குள் சென்று சுழன்று சுழன்று புள்ளிகளைச் சேர்த்தார். டெல்லி அணியின் ஸ்கோர் திடீரென விர்ரென எகிறியது. அடுத்த ஐந்து நிமிடத்தில் டெல்லி மட்டும்தான் புள்ளிகளை அள்ளிக்கொண்டிருந்தது. குஜராத் மிக்சர் சாப்பிட்டது.

 

இன்னும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் டெல்லி அணி புள்ளிகள் வித்தியாசத்தை சரசரவெனக் குறைத்தது. அப்போது ஸ்கோர் 26 - 19. ஆட்ட நேர முடிவில் 26 - 20 என்ற கணக்கில் வென்றது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். கடைசி ஏழரை நிமிடங்களில் ஒரு புள்ளிகூட குஜராத் அணியால் எடுக்க முடியவில்லை. அதே சமயம் டெல்லி அணி 11 புள்ளிகளைக் குவித்தது. What a Come Back ! . பாயின்ட்  வரட்டும்  பாயின்ட் வரட்டும்  எனக் காத்திருக்காமல் கடைசி ஏழு நிமிடங்களில் டெல்லி ஆடிய அசுரவேக ஆட்டத்தை முதல் பாதியிலும் காட்டியிருந்தால் மேட்ச் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருந்திருக்கும். 

http://www.vikatan.com/news/sports/97684-gujarat-fortunegiants-beat-dabang-delhi-kc-in-pro-kabaddi.html

Link to comment
Share on other sites

தெலுங்கு டைட்டன்ஸ் ஹாட்ரிக் தோல்வி... ஆனாலும், ராகுல் சவுதரிக்கு லைக்ஸ்! #ProKabaddi #TTvsUPY 

 

புரோ கபடி (Pro Kabaddi) ஐந்தாவது சீசனில் தனது முதல் போட்டியை தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆடியது உத்தரப் பிரதேச அணியான யு பி யோதா. முதல் போட்டியிலேயே தெலுங்கு அணியை வீழ்த்தி உற்சாகமாக தொடரில் என்ட்ரி கொடுத்திருக்கிறது யு பி யோதா. சொந்த மண்ணில் நான்காவது போட்டியில் ஆடும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்திருக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி வென்ற ஒரே  போட்டி தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான மேட்ச் மட்டும் தான். 
நேற்றைய தினம் எப்படித் தோற்றது ராகுல் சவுதரி தலைமையிலான  தெலுங்கு டைட்டன்ஸ்?

Pro Kabaddi UP Yoddha Vs Telugu Titans

ஆரம்பத்தில் இருந்தே  இரண்டு அணிகளும்  நீயா நானா மல்லுக்கட்டில் இறங்கின. இரண்டு அணியிலும் முதல் சில நிமிடங்களில்  ரெய்டு சென்றவர்கள் புள்ளிகளை அள்ளிக் கொண்டு வந்தார்கள். எந்த ஒரு கட்டத்திலும் இரண்டு அணியும் விட்டுக் கொடுக்கவே இல்லை. யு பி ஒரு புள்ளி கூடுதலாக முன்னிலை வகிக்கும் போதெல்லாம் தெலுங்கு டைட்டன்ஸ் அடுத்தடுத்த ரெய்டுகளில்  சமன் செய்து கொண்டிருந்தது. 

இதனால் மேட்ச் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்றது. யு பி யோதா அணித் தலைவர் நிதின் தொமரும் சரி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் கேப்டன்  ராகுல் சவுதரியும் சரி தங்கள் அணிக்காக புள்ளிகளை அள்ளி வீசினார்கள். இரண்டு அணி கேப்டன்களுக்கு இடையேயான ஆரோக்கியமான மோதலாக இருந்தது மேட்ச். குறிப்பாக ராகுல் சவுதரி விளையாடிய விதம் அருமை. தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக சூறாவளியாக சுழன்ற ராகுல் அடுத்தடுத்த போட்டிகளில் மங்கினார். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஆடிய களைப்புக்கு மத்தியில், ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு  சார்ஜ் ஏற்றிக் கொண்டு நேற்றைய ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பினார். ரெய்டுக்கு வரும் வீரர்களை அடக்குவதில்  சிறப்பாக செயல்படக் கூடிய யு பி யோதா அணியினர் ராகுல் சவுதரியிடம் தோல்வியைச் சந்தித்தார்கள்.

Pro Kabaddi UP Yoddha Vs Telugu Titans

ராகுல் சவுதரி  ரெய்டுக்குச்  செல்லும் காட்சிகளை பார்க்க நீங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். ராகுல் கிடுகிடுவென வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம், இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் ஓடிக் கொண்டிருப்பார். மேலோட்டமாக பார்த்தால் கபடி விளையாடத் தெரியாதவன் பாலபாடம் பயின்று ஆர்வக் கோளாறுடன் ஆடுவதாக தோன்றும். ஆனால் ராகுல் அப்படிப்பட்டவர் அல்ல. அவரது உடல் ஒரு பொசிஷனிலும், அவர் கால் ஒரு பொஷிஷனில், கண்கள் வேறொரு பொசிஷனிலும் கவனம் செலுத்தும். அவரைப் பிடிக்க ஃபீல்டர்கள் முயன்றால், அவர்களுக்கு தனது காலை கொடுப்பார். ஆனால் அவர்கள் கால்களை இறுகப் பற்றும் அந்த மைக்ரோ நொடிக்கு முன்னதாக வெடுக்கென தாவிவிடுவார். அந்த யுக்தியால் தான் அவர்  சிறந்த ரெய்டர் என பெயர் எடுத்திருக்கிறார். புரோ கபடித் தொடரின் வரலாற்றிலும் இதுவரை அதிக ரெய்டு புள்ளிகளை வைத்திருப்பதும் அவரே. 

Pro Kabaddi UP Yoddha Vs Telugu Titans

முதல் பாதியில் 1-1 , 2-2, 4-4 , 7-7, 8 -8 என சரிசமமாகவே ஸ்கோர் சென்றது. 20 நிமிட முடிவில் ஸ்கோர் 11 - 12 . தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஒரு புள்ளி யு பி யோதாவை விட பின்தங்கியிருந்தது. 

நேற்றைய தினம் ராகுல் சென்ற ரெய்டுகள் அற்புதமாக இருந்தன. யு பி யோதா வீரர்கள் விடா கொண்டனாக இருந்தாலும் இவர் தப்பித்துக் கொண்டே  இருந்தார். கிடுகிடுவென ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் ஓடும்போதும், யாரைத் தொட வேண்டும் என்பதில் ராகுல் தெளிவாக இருப்பார்.  ஒரு பக்கம் ஓடிக்கொண்டே பின்னால் இருக்கும் வீரரைத் தனது ஒரு காலால் தொடும் சாமர்த்தியம் அவருக்கு மிகப் பெரிய ப்ளஸ். இரண்டாவது பாதியில் ஒரு சாமர்த்தியமான அவுட் செய்தார் ராகுல். இதனாலேயே  ராகுல் சவுதரி  ரெய்டுக்குச் செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் ஆரவாரம் நூறு டெசிபலைத் தாண்டியது. மேட்சில் இன்னும் 14 நிமிடங்கள் மிச்சமிருந்த நிலையில் ஸ்கோர் 13 - 14 என இருந்தது. அப்போது யு பி யோதா அணியில் மாற்று வீரராக  களமிறங்கியிருந்த சுரேந்தர் சிங் ரெய்டுக்குச் சென்று மூன்று பேரை ஒரே நேரத்தில் காலி செய்தார். இது தான் மேட்ச்சின் திருப்புமுனை. 

Pro Kabaddi UP Yoddha Vs Telugu Titans

இரண்டு அணிகளுமே  ஒரு திருப்புமுனை ரெய்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது முந்திக்கொண்டது யு பி யோதா. அந்தப் புள்ளியில் இருந்து மேட்ச்  உத்தரப் பிரதேசம் பக்கம் திரும்பியது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியினர் வரிசையாக பதற்றத்தில் தவறு செய்ய ஆரம்பித்தார்கள். யு பி யோதா வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆடியது. கடைசி  பத்து நிமிடங்களில் வரும் வீரர்களை வரிசையாக அமுக்கி வெளியே தூக்கிப்போட்டார்கள். ஆட்ட நேர முடிவில் 31 - 18 என மெகா வெற்றியைப் பெற்றது யு பி யோதா. 13 புள்ளிகள் வித்தியாசத்தில் மோசமாகத் தோற்றது டைட்டன்ஸ்.

 

Rahul_15132.jpg

 

http://www.vikatan.com/news/sports/97689-up-yoddha-beat-telugu-titans-in-pro-kabaddi.html

Link to comment
Share on other sites

எட்டே நொடியில் ஹரியானா வெற்றியைத் தவறவிட்ட மேட்சை பார்த்தீர்களா? #ProKabaddi

 

பிக்பாஸ் ஒளிபரப்பாகும் அதேநேரத்தில்தான் புரோ கபடியும் (Pro Kabaddi) நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் புரோ கபடியில் ஹரியானா குஜராத் இடையிலான மேட்ச்சை எத்தனை பேர் பார்த்தீர்கள் எனத் தெரியவில்லை. செம மேட்ச். 

Pro Kabaddi

ஹைதரபாத் கச்சிபோலி உள்விளையாட்டு அரங்கத்தில் புரோ கபடி போட்டிகள் நடந்துவருகின்றன. புரோ கபடியின் ஐந்தாவது சீசனில் நேற்றைய தினம் இரவு எட்டு மணிக்கு நடந்த மேட்சில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதின. முதல் போட்டியில் ஹரியானா ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோற்றிருந்தது. குஜராத் அணி தனது முதல் போட்டியில் டெல்லியிடம் கடைசி நேர பதற்றத்திற்குப் பிறகு வென்றது.

குஜராத் அணி செம எனெர்ஜியுடன் களமிறங்கியது. ஹரியானா நம்பிக்கையோடு களம் கண்டது. குஜராத் அணி சார்பில் முதலில் ரெய்டுக்குச் சென்ற சுகேஷ் ஹெக்டேவும், ஹரியானா சார்பில் ரெய்டுக்குச் சென்ற வஜிர் சிங்கும் புள்ளிகள் எதுவும் எடுக்கவில்லை. குஜராத் அணிக்கு முதல் புள்ளியைப் பெற்றுத்தந்தவர் சச்சின். அவர் டூ ஆர் டை ரெய்டில் அசால்ட்டாக இரண்டு புள்ளிகளை எடுத்தார். 
முதல் ஒன்பது நிமிடங்களில் ஸ்கோர் 5 -4 என இருந்தது. ஹரியானா அணியைச் சேர்ந்த விகாஸ் ஒரு முறை ரெய்டுக்கு வந்தபோது கால் இடறவே தடுமாறினார். அதைப் பயன்படுத்தி அவரை அவுட்டாக்கி வெளியில் உட்கார  வைத்தது குஜராத் அணி. அதற்கு அடுத்த முக்கியமான ரெய்டு ஒன்றில் சச்சின் அனுப்பப்பட்டார். அந்த ரெய்டில் சச்சினை சூப்பர் டேக்கில் செய்தனர் ஹரியானா வீரர்கள். போனஸ் புள்ளிகள் கிடைத்தன. அடுத்ததாக கேப்டன் ஹெக்டேவும் அவுட் ஆனார்.  அப்போது ஸ்கோர் 7-7 என இருந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு மேட்ச் விறுவிறுப்பாகவே சென்றது. இரண்டு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. 

Pro Kabaddi

முதல் பாதியில் 11 - 8 என்ற ஸ்கோரில் முன்னிலையோடு இருந்த குஜராத் அணி, இடைவேளை முடிந்த பிறகு புள்ளிகளை இழந்தது. இதனால் மீண்டும் ஸ்கோர் சமநிலைக்கு வந்தது. இரண்டு அணிகளுமே டிஃபென்சில் வலுவாக இருந்தன. இதனால் ரெய்டுகளில் இரண்டு அணி வீரர்களும் புள்ளிகள் எடுக்க சிரமப்பட்டனர். 11 -11  என ஸ்கோர் சம நிலையில் இருந்தபோது ஹரியானா வீரர் விகாஸ் ரெய்டுக்குச் சென்றார். அவரை குஜராத் அணியைச் சேர்ந்த சுனில் குமார் காளையை அடக்குவது போல முயற்சி செய்தார். அனால் விகாசின் விவேகமான துள்ளலால் ஒரு புள்ளி ஹரியானாவுக்குக் கிடைத்தது. ஆட்டம் தொடங்கிய  நிமிடத்திலிருந்து முதல் முறையாக ஒரு புள்ளி முன்னிலை பெற்றது ஹரியானா  ஸ்டீலர்ஸ். 

அந்த முன்னிலையைப் பயன்படுத்தி ஹரியானா முன்னேறியிருக்க வேண்டும். ஆனால், ஹரியானா கேப்டனின் ஆர்வக் கோளாறு ரெய்டால் திட்டம் பாலானது. அவசரப்பட்டு ஒரு ரெய்டுக்குச் சென்ற சுரேந்தர் நாடாவை சூப்பர் டேக்கில் செய்தது குஜராத் அணி. இத்தனைக்கும் அது டூ ஆர் டை ரெய்டு கூட கிடையாது. எதிரணியில் மூன்று  பேர் மட்டுமே இருந்திருந்தனர். கேப்டன் சுகேஷ் கொஞ்சம் சுதாரித்திருந்தால் குஜராத்தை ஆல் அவுட் செய்யும் முயற்சியில் கூட இறங்கியிருக்கலாம். ஆனால், அவசர ரெய்டால் சூப்பர் டேக்கில் செய்யப்பட்டது மட்டுமன்றி, பலம் வாய்ந்த இரண்டு குஜராத் வீரர்களும் களத்தில் இறங்கினர்.

Pro Kabaddi

அவர்கள் சத்தமில்லாமல் ஹரியானா வீரர்களை வெளியேற்றினர். இரண்டே நிமிடங்களில் ஹரியானா ஆல் அவுட் ஆனது. 11 - 12 என இருந்த ஸ்கோர்  தடாலென 22 -13 என்றானது. அப்போது மேட்ச் முடிய எட்டரை நிமிடங்கள் மிச்சம் இருந்தன. இப்போது ஹரியானா வீரர்கள் அக்ரசிவ்வாக ஆட ஆரம்பித்தனர். ரெய்டுக்கு வந்த ராகேஷ் நர்வாலை அள்ளிக்கொண்டு போய் வெளியே போட்டுவிட்டு வந்தனர். விகாஸ் கன்டோலா சென்ற ஒரு ரெய்டு மேட்சின் திருப்புமுனையாக அமைந்தது. தங்களது எல்லைக்குள் நுழைந்த விகாசை மார்போடு இறுகப் பிடித்து தடுத்து நிறுத்த முயற்சி செய்தார் குஜாரத் அணியின் அபோஜர். அவரது முயற்சி வீணாகிவிடக்கூடாது என்பதற்காக கேப்டன் சுகேஷும் அவரைப் பிடிக்க முயற்சி செய்தார். இதற்கிடையில் மகேந்திர சிங் ராஜ்புட்டும் விகாசை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் துள்ளியவாரே கோட்டைத் தொட்டார் விகாஸ். மூன்று பேரும் அவுட். அடுத்த நிமிடத்திலேயே குஜராத்தும் ஆல் அவுட் ஆனது. இப்போது ஸ்கோர் 23 - 23.

 

மீண்டும் ஸ்கோர் சமநிலையில் வந்ததால் ஆட்டத்தில் உச்சபட்ச பரபரப்புத் தொற்றியது. மைதானத்தில் உட்கார்ந்திருத்த ரசிகர்கள் எழுந்து நின்று கவனிக்க ஆரம்பித்தனர். 24 - 24 , 24 - 25 , 25 - 25 . 25 - 26 என ஸ்கோர்கார்டு மாறிக்கொண்டே இருந்தது 26 - 27 என ஸ்கோர் இருந்தபோது மேட்ச் முடிய வெறும் 40 நொடிகள் மட்டுமே இருந்தன. மகேந்திர சிங் ரெய்டுக்குள் வந்தார். அவர் ஒரு மேஜிக் புள்ளி எடுத்தார். மேட்ச் இப்போது சமநிலைக்கு வந்தது. 27 - 27 என்ற நிலையில் எட்டு நொடிகள் மீதம் இருந்தன. ஹரியானா வீரர் விகாஷ் புள்ளிகள் பெற முயற்சிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் 27 - 27 என ஸ்கோர் இருந்தது. மேட்ச் டிரா ஆனது. இரண்டு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

http://www.vikatan.com/news/sports/97812-gujarat-fortunegiants-vs-haryana-steelers-match-tie.html

Link to comment
Share on other sites

புரோ கபடி லீக்: தமிழ்தலைவாசுக்கு 2-வது தோல்வி

புரோ கபடி லீக்கில் பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி 31-32 என்ற புள்ளி கணக்கில் நூலிழை வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 
 
புரோ கபடி லீக்: தமிழ்தலைவாசுக்கு 2-வது தோல்வி
தமிழ் தலைவாஸ் வீரரை, பெங்களூரு புல்ஸ் வீரர் பாய்ந்து பிடிக்கிறார்
நாக்பூர்:

12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நாக்பூரில் நேற்றிரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாசும், பெங்களூரு புல்சும் (பி பிரிவு) மோதின.

விறுவிறுப்பான இந்த மோதலில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு புல்ஸ் அணி 10-வது நிமிடத்திலேயே தமிழ் தலைவாசை ஆல்-அவுட் செய்து புள்ளிகளை மளமளவென அள்ளியது. தலைவாஸ் வீரர்கள் பல தடவை ரைடுக்கு சென்று வெறுங்கையுடனே திரும்பினர். முதல் பாதியில் 8-23 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் மோசமான நிலையில் பரிதவித்தது.

இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணியினர் புதிய வியூகம் அமைத்து துடிப்புடன் செயல்பட்டனர். எதிரணியை ஆல்-அவுட் ஆக்கிய அவர்கள் சரிவில் இருந்து எழுச்சி பெற்றனர். 5 நிமிடங்கள் எஞ்சி இருந்த போது 22-30 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கிய தமிழ் தலைவாஸ் அணி மறுபடியும் ஒரு முறை பெங்களூருவை ஆல்-அவுட் செய்து வேகமாக நெருங்கியது.

கடைசி ஒரு நிமிடம் இருக்கையில் 30-31 என்ற கணக்கில் ஆட்டத்தை கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த சூழலில் பெங்களூரு வீரர் ரோகித் குமார் வெற்றிகரமாக ரைடு செய்து ஒரு புள்ளி எடுக்க, பதிலடியாக தமிழ் தலைவாஸ் வீரர் பிரபஞ்சனும் ஒரு புள்ளி எடுத்தார். அதற்குள் ஆட்ட நேர முடிவுக்கு வந்ததால் தமிழ்தலைவாஸ் அணி 31-32 என்ற புள்ளி கணக்கில் நூலிழை வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரோகித் குமார் 11 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணியில் கேப்டன் அஜய் தாகூர், பிரபஞ்சன் தலா 6 புள்ளிகளும் எடுத்தனர்.

தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சிடம் தோற்று இருந்த அறிமுக அணியான தமிழ் தலைவாசுக்கு இது 2-வது தோல்வியாகும். பெங்களூரு அணிக்கு 2-வது வெற்றியாகும்.

இதே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தபாங் டெல்லி-மும்பை (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்- உத்தரபிரதேச யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. 

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/05101213/1100585/Pro-Kabaddi-League-2nd-defeat-for-Tamil-Thalaivas.vpf

Link to comment
Share on other sites

பர்தீப் நர்வாலின் அணியிடம் சரணாகதி அடைந்த பெங்களூரு காளைகள் #ProKabaddi

 
 

நேற்றைய தினம் இரவு  9 மணி ஆட்டத்தில்,  பாட்னா பைரேட்ஸ் அணியும்  பெங்களூரு  புல்ஸ் அணியும்  நாக்பூர் மைதானத்தில் களம் இறங்கினார்கள். பாட்னா பைரேட்ஸ் அணியினர் செய்த தவறால், முதல் புள்ளியைப் பெங்களூரு  புல்ஸ் அணியினர் பெற்று மகிழ்ச்சியடைந்தனர்.

பெங்களூரு புல்ஸ்

சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியினர் யூ பி யோதா அணியினரிடம் படுமோசமாகத் தோற்றார்கள். அந்தத் தவறுகளை  இன்றைய ஆட்டத்தில் செய்யக்கூடாது என மிகக் கவனமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில், பாட்னா பைரேட்ஸ் அணியினர் மிகத் திறமையாக விளையாடி, பெங்களூரு புல்ஸ் அணியினரை  இரண்டு முறை ஆல் அவுட் செய்தனர். பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன் பர்தீப் நர்வால் ரெய்டில் சென்று, டேக்கிள் வியூகங்களைத் தவிடுபொடியாக்கிப்  புள்ளிகளை மேலும் மேலும் சேர்த்துக்கொண்டே இருந்தார்.

 

ஆட்டத்தின் முதல் பாதியில், பெங்களூரு புல்ஸ் அணியினர் 11 புள்ளிகள் பெற்று பின்தங்கி இருந்தார்கள். பாட்னா பைரேட்ஸ் அணியினர் 22 புள்ளிகள் எடுத்திருந்தனர். முதல் பாதியிலேயே  கேப்டன் பர்தீப் நர்வால் சூப்பர் டென் புள்ளிகளை எடுத்து அசத்தினார்.  இரண்டாம் பாதியில் பெங்களூரு புல்ஸ் அணியினரை பாட்னா பைரேட்ஸ் அணியினர்  மூன்றாவது முறையாக ஆல் அவுட் செய்தனர். ஆட்ட நேர முடிவில் 46 - 32 என்ற கணக்கில் எளிதாக பெங்களூரு அணியை வென்றது பாட்னா பைரேட்ஸ். 

http://www.vikatan.com/news/sports/98260-bangalore-bulls-lost-the-match-against-patna-pirates.html

Link to comment
Share on other sites

பெங்கால் அணியை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்

 

 
10chpmuKabadi%202

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள பெங்களூரு புல்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீரரின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் பெங்களூரு அணியின் கேப்டன் ரோஹித் குமார்.

புரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

நாக்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 10-வது நிமிடத்தில் இரு அணிகளும் தலா 5 புள்ளிகள் சேர்க்க ஆட்டம் 5-5 என சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் பெங்கால் அணியின் விநோத் குமார் ரைடு மூலம் 2 புள்ளிகள் சேர்க்க அந்த அணி 7-5 என்ற முன்னிலையை பெற்றது. இதையடுத்து கேப்டன் ரோஹித் குமார் அடுத்தடுத்த ரைடுகளில் புள்ளிகள் சேர்க்க பெங்களூரு அணி 9-8 என முன்னிலைக்கு வந்தது. தொடர்ந்து அசத்திய பெங்களூரு அணி முதல் பாதியில் 12-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

2-வது பாதியில் பெங்கால் அணி சீராக புள்ளிகள் சேர்த்து 16-16 என்ற சமநிலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான அஜெய் குமார் ஒரே ரைடில் 4 புள்ளிகளை அள்ளினார். இதைத் தொடர்ந்து பெங்களூரு 4 முதல் 5 புள்ளிகள் முன்னிலையை தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தியது.

4 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் பெங்களூரு அணி 28-22 என வலுவான நிலையில் இருந்தது. முடிவில் பெங்களூரு அணி 31-25 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அஜெய் குமார் ரைடில் 8 புள்ளிகளும், ஆஷிஸ் குமார் டேக்கிள் மூலம் 5 புள்ளிகளும் பெற்றனர்.பெங்களூரு அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. ஒரு ஆட்டத்தை டிரா செய்திருந்தது. அதேவேளையில் தொடர்ச்சியாக இரு வெற்றிகளை பெற்ற பெங்கால் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

 

இன்றைய ஆட்டம்

புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பால்தான் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 3-வது ஆட்டமாகும். இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ள தமிழ் தலைவாஸ் முதல் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. மேலும் பெங்களூரு அணியை இந்த சீசனில் 2-வது முறையாக எதிர்கொள்கிறது.

கடந்த ஆட்டத்தில் அந்த அணிக்கு எதிராக ஒரு புள்ளி வித்தியாசத்தில் (32-31) தோல்வியை சந்தித்திருந்தது. இந்த தோல்விக்கு தமிழ் தலைவாஸ் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும். - நன்றி ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்’

http://tamil.thehindu.com/sports/article19462554.ece

Link to comment
Share on other sites

புரோ கபடி லீக்: பெங்களூர் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றி!

 

புரோ கபடி லீக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது தமிழ் தலைவாஸ்.

தமிழ் தலைவாஸ்


புரோ கபடி லீக் இந்தாண்டு தமிழகத்துக்கு சற்று ஸ்பெஷலானது. சச்சினின் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்குகிறது என்றதுமே எதிர்பார்ப்புகள் எகிறியது. மொத்தம் இரண்டு பிரிவுகளாக இந்த சீசன் நடந்து வருகிறது. ஒரு பிரிவில் ஆறு அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் மல்லுக்கட்டுகின்றன.


தமிழ் தலைவாஸ் அணி குரூப் பி-யில் இடம் பெற்றுள்ளது. அந்த குரூப்பில் பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், தெலுகு டைட்டன்ஸ், பெங்கால் வாரியஸ், யு பி யோதா, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவைப் பொறுத்தவரை பெங்களூர் அணி முதல் இடத்தில் உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் மற்றும் பெங்களூரு அணியுடன் போராடி தோல்வியடைந்தது.

 


இந்நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மீண்டும் மோதின. கடந்த போட்டிகளில் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்தப் போட்டியில் நல்ல திட்டமிடலுடன் களமிறங்கியது தமிழ் தலைவாஸ் அணி. இதனால் ஆரம்பம் முதலே பெங்களூரு அணிக்கு தண்ணீ காட்டியது தமிழ் தலைவாஸ்.  இதையடுத்து, 29 - 24 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. 

http://www.vikatan.com/news/sports/98734-tamil-thalaivas-beats-bengaluru-bulls-in-pro-kabbadi.html

Link to comment
Share on other sites

புரோ கபடி 2017: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி

 

புரோ கபடி போட்டியின் 31-வது லீக் சுற்று ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியானது 29-19 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

புரோ கபடி 2017: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி
 
 
 
அகமதாபாத்:
 
புரோ கபடி போட்டியின் 31-வது லீக் சுற்று ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியானது 29-19 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
 
புரோ கபடி லீக் போட்டிகள் மூன்றாம் கட்டமாக அகமதாபாத்தில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (16-ம் தேதி) நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் குஜராத் அணி 29-19 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. குஜராத் அணியின் சச்சின் 11 புள்ளிகள் எடுத்தார்.
 
இது குஜராத் அணியின் 6-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி 33 புள்ளிகளுடன் ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
 
முன்னதாக நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் அரியானா அணியும் மோதின. இப்போட்டி 25-25 புள்ளிக் கணக்கில் டிராவில் முடிந்தது. தமிழ்நாடு அணி 10 புள்ளிகளுடன் பீ பிரிவில் ஆறாவது இடத்தில் உள்ளது.
201708170036534912_1_pkl3._L_styvpf.jpg
இன்று (17-ம் தேதி) நடைபெறும் லீக் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி அணிகளும், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகளும் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/17003648/1102732/pkl-2017-gujarat-beat-telugu-titans.vpf

Link to comment
Share on other sites

தெலுங்கு டைட்டன்ஸ் அணியை அசால்ட்டாக டீல் செய்த குஜராத் #proKabaddi

 
 

புரோ கபடி (Pro Kabaddi) ஐந்தாவது சீசனின் 31 வது போட்டி நேற்று இரவு ஒன்பது மணிக்கு அகமதாபாத் டிரான்ஸ்டடியா ஸ்டேடியத்தில் நடந்தது. ராகுல் சவுதரி தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் சுகேஷ் ஹெக்டே தலைமையிலான குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. குஜராத் அணிக்கு இது எட்டாவது போட்டியாகும். 

Pro Kabaddi Season 5: Gujarat Fortunegiants Vs Telugu Titans


தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் செவனில் ராகேஷ் குமார், நிலேஷ் சலுன்கே, விஷால் பரத்வாஜ், சொம்பிர், விகாஸ், ரோஹித் ரானா, ராகுல் சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். குஜராத் அணியில் ஃபாசெல் அட்ரச்செல்லி, அபோசர் மொகாஜர்மிகனி, சச்சின், பர்வேஷ் பைன்ஸ்வால், சுனில் குமார், ரோஹித் குலியா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

Pro kabaddi logo

தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்குப் புள்ளிக்கணக்கை தொடங்கி வைத்தவர் விகாஸ். அவர் ஃபாசல் அட்ரசெல்லி, ரோஹித் குலியா என இரண்டு முக்கியமான வீரர்களை வெளியில் அனுப்பினார். ஒட்டுமொத்த ஸ்டேடியமும் ஒரு நிமிடம் அமைதியானது. அதன் பிறகு குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிக்குப் புள்ளிக்கணக்கைத் தொடங்கி வைத்தார் இளம் வீரர் சச்சின். அவர் போனஸ் புள்ளிகளை எடுத்தார். மீண்டும் சுகேஷ் ஹெக்டே வந்து ஒரு போனஸ் புள்ளியை எடுத்தார். சச்சினும் சுகேஷும் அதன் பின்னர் மேட்சில் ஆதிக்கம் செலுத்தினார்கள். முதல் ஆறு நிமிட முடிவில் குஜராத் 5 –3  என முன்னிலையில் இருந்தது. ராகுல் சவுதரி நேற்றைய தினம் தொடக்க ரெய்டுகளில் புள்ளிகளை எடுக்கவில்லை. 

சச்சின் நேற்று துடிப்புடன் செயல்பட்டார். முதல் பாதியின் எட்டாவது நிமிடத்தில் ரெய்டுக்குச் சென்று எதிரணி கேப்டன் ராகுல் சவுதரியை அனாயசமாக வீழ்த்தினார். குஜராத்தின் உடும்புப்பிடி கொஞ்சம் கொஞ்சமாக இறுக ஆரம்பித்தது. சச்சின் ஒரே ரெய்டில் எதிரணியில் எஞ்சியிருந்த மூவரையும் வீழ்த்தினார். தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஆல் அவுட் ஆனது. 12-3 என  வலுவான முன்னிலையில் இருந்தது குஜராத். தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் ஒற்றுமையே இல்லாமல் இருந்தது. வீரர்களுக்கு இடையே சரியான புரிதல் இல்லை. ஏற்கெனவே இந்த சீசனில் ‘தெறி’த்தன பார்மில் இருக்கும் குஜராத் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை நசுக்கிப் பிழிந்தது. 

Pro Kabaddi Season 5: Gujarat Fortunegiants Vs Telugu Titans

தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் வெற்றிக்கான எந்த உத்வேகமும் தெரியவில்லை. முதல் பாதி முடிவில் 20 -7 என முன்னிலையில் இருந்தது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். இந்த 20 புள்ளிகளில் சச்சின் மட்டுமே ஒன்பது புள்ளிகளை எடுத்திருந்தார். முதல் பாதி முழுக்க ஒரே ஒரு டேக்கிள் புள்ளியைக் கூட தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் எடுக்க முடியவில்லை. அந்த அணி பரிதாபமான நிலையில் இருந்தது. குஜராத் போன்ற எதாவது அணியாக இருந்தால் இங்கே மேஜிக்கை எதிர்ப்பார்க்கலாம். ஆனால் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் தானே எதிரணி. அப்புறம் நிலைமை எப்படி இருக்கும்...!

இரண்டாவது பாதியின் முதல் ஒன்பது நிமிடங்கள் மேட்ச் ஆரோக்கியமாக இருந்தது. இந்த ஒன்பது நிமிடங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஐந்து புள்ளிகளையும் குஜராத் இரண்டு புள்ளிகளையும் எடுத்திருந்தன. ராகுல் சவுதரியை வெளியே உட்கார வைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியது குஜராத். ராகுல் ரெய்டுக்கு வந்தபோது கணுக்காலைப் பிடித்து டேக்கிள் செய்து ஆர்ப்பரித்தார் அபோசர். ஆட்டம் முடிய ஐந்து நிமிடம் இருக்கும் வேளையில் 25 – 16 என முன்னிலையில் இருந்தது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். 

Pro Kabaddi

 


ஆட்ட நேர இறுதியில் 29 – 19 என்ற கணக்கில் வென்றது குஜராத். முதல் பாதியை ஒப்பிடும்போது இரண்டாவது பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் ஓரளவு சிறப்பாக ஆடியது. இதனால் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் கவுரவத் தோல்வியுடன் தப்பித்தது. இல்லையெனில் மெகா தோல்வியைச் சந்தித்திருக்கும் ராகுல் அணி. ஒன்பதாவது போட்டியில் ஆடும் தைட்டன்ஸுக்கு இது ஏழாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணிக்கு வெற்றி நடையில் சிதறி விழுந்த மற்றொரு அணியாகிப் போனது தெலுங்கு டைட்டன்ஸ்.

http://www.vikatan.com/news/sports/99360-gujarat-fortune-giants-successfully-beat-telugu-titans.html

Link to comment
Share on other sites

வெற்றியை கோட்டைவிட்டது தமிழ் தலைவாஸ்: 29-30 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி அணியிடம் வீழ்ந்தது

 

 
18chpmuMeraj

தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக அசத்தலாக ரைடு மேற்கொண்ட டெல்லி அணியின் கேப்டன் மீரஜ்.

புரோ கபடி லீக் 5-வது சீசன் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி தபாங் அணி 30-29 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்க நிமிடங்களில் டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தியது. மீரஜ் ஷேஹ், ரவி தலால் புள்ளிகள் சேர்க்க முதல் 5 நிமிடத்தில் டெல்லி அணி 5-2 என முன்னிலைப் பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் புள்ளி டெல்லி வீரர் ரோகித் பாலியன் ரைடுடின் போது செய்த தவறால் கிடைத்தது.

இதன் பின்னர் அடுத்த ரைடில் பிரபஞ்சன் ஒரு புள்ளி சேர்த்தார். 6-வது நிமிடத்தில் டெல்லி கேப்டன் மீரஜை, சூப்பர் டேக்கிள் மூலம் தமிழ் தலைவாஸ் வீரர்கள் மடக்கினர். இதனால் 2 புள்ளிகள் கிடைத்தது. அடுத்த ரைடில் அஜய் தாக்குர் ஒரு புள்ளியும், தடுப்பாட்டம் மூலம் ஒரு புள்ளியும் சேர்க்க தமிழ் தலைவாஸ் அணி 6-5 என முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து மீரஜ், ரைடு மூலம் ஒரு புள்ளி சேர்க்க டெல்லி அணி 7-6 என முன்னிலைக்கு வந்தது. தமிழ் தலைவாஸ் தரப்பில் அஜய் தாக்குரும், டெல்லி அணி தரப்பில் மீரஜ், ரோகித் பாலியன் ஆகியோர் அடுத்தடுத்து புள்ளிகள் சேர்க்க 16-வது நிமிடத்தில் ஆட்டம் 9-9 என்ற சமநிலையை அடைந்தது.

பிரபஞ்சன் ரைடில் சிக்கிய நிலையில், டெல்லி வீரர் ஸ்ரீராம் தனது அசத்தல் ரைடில் 2 புள்ளிகள் சேர்க்க டெல்லி அணி 12-9 என்ற முன்னிலையை பெற்றது. அடுத்த ரைடில் அஜய் தாக்குர் ஒரு புள்ளி பெற்றார். இந்த சூழ்நிலையில் ரைடு சென்ற மீரஜை சூப்பர் டேக்கிள் முறையில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் மடக்க முதல் பாதி ஆட்டம் 12-12 என சமநிலையில் இருந்தது.

2-வது பாதியின் தொடக்கத்தில் டெல்லி வீரர் ஸ்ரீராமை, சூப்பர் டேக்கிள் முறையில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் மடக்கினர். இதைத் தொடர்ந்து அடுத்த ரைடில் அஜய் தாக்குர் ஒரு புள்ளி சேர்க்க தமிழ் தலைவாஸ் அணி 15-12 என முன்னிலைப் பெற்றது. 23-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய அபோஸல் அடுத்தடுத்த ரைடுகளில் புள்ளிகள் சேர்க்க டெல்லி அணி முன்னேற்றம் கண்டது. இதற்கிடையே அஜய் தாக்குர் 27-வது நிமிடத்தில் டாங் ஜியோன் லியை, சூப்பர் டேக்கிள் முறையில் டெல்லி வீரர்கள் மடக்கிப்பிடிக்க அந்த அணி 16-17 என நெருங்கியது. இந்த சூழ்நிலையில் ரைடு வந்த மீரஜை, தமிழ் தலைவாஸ் வீரர்கள் மடக்கினர். தொடர்ந்து அஜய் தாக்குர் ரைடில் ஒரு புள்ளி சேர்க்க 19-16 என தமிழ் தலைவாஸ் முன்னேறியது.

31-வது நிமிடத்தில் அபோஸல் ரைடு மூலம் 2 புள்ளிகள் சேர்க்க டெல்லி அணி 19-20 என மீண்டும் நெருங்கி வந்தது. ஆனால் அடுத்த ரைடில் அபோஸல் சிக்கினார். இதையடுத்து 33-வது நிமிடத்தில் டெல்லி அணி ஆல் அவுட் ஆக தமிழ் தலைவாஸ் 25-22 என முன்னிலைப் பெற்றது. 1 நிமிடம் 2 விநாடிகள் எஞ்சிய நிலையில் டெல்லி அணி 27-28 என நெருங்கி வந்தது.

இந்த சூழ்நிலையில் டெல்லி கேப்டன் மீரஜ், சூப்பர் ரைடில் 3 புள்ளிகள் சேர்க்க ஆட்டம் டெல்லி அணியின் பக்கம் சாய்ந்தது. முடிவில் டெல்லி அணி 30-29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 6 ஆட்டத்தில் விளையாடி உள்ள அந்த அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்த நிலையில் வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ளது. தமிழ் தலைவாஸ் 3-வது தோல்வியை சந்தித்தது.

டெல்லி அணி தரப்பில் மீரஜ், ரைடு மூலம் 9 புள்ளிகளும், விராஜ் விஷ்ணு, டேக்கிள் மூலம் 2 புள்ளிகளும் சேர்த்தனர். தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் அஜய் தாக்குர், ரைடு மூலம் 13 புள்ளிகளும், அமித் ஹூடா, டேக்கிள் மூலம் 4 புள்ளிகளும் சேர்த்தனர்.

 

 

http://tamil.thehindu.com/sports/article19515528.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.