Jump to content

சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்: போக்குவரத்து ஆணையராக நியமனம்


Recommended Posts

சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்: போக்குவரத்து ஆணையராக நியமனம்

சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபாவை போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

 
சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்: போக்குவரத்து ஆணையராக நியமனம்
 

பெங்களூர்:

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் டி.ஐ.ஜி. ரூபா சிறைத் துறையில் இருந்து அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

201707171357407513_sasi1._L_styvpf.gif

பெங்களூர் நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.

இது பெங்களூர் சிறை துறை வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/17135739/1096777/DIG-Roopa-shifted-to-road-safety-and-traffic-for-exposing.vpf

Link to comment
Share on other sites

டி.ஐ.ஜி ரூபா மாற்றம் எதிரொலி: பெங்களூரு சிறைக் கைதிகள் போராட்டம்!

கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறைத்துறையில் பெண் டி.ஐ.ஜி-யாகப் பதவி வகித்தவர் ரூபா. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் சசிகலா. அவருக்கு சிறைக்குள் பல நவீன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றது என்றும் இதற்காக டி.ஜி.பி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் உயரதிகாரிகளுக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தார் ரூபா. இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ரூபா


இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்ததாக, இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், பார்வையாளர்களைப் பார்க்க சசிகலாவுக்கு தனி அறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மேலும் அதிர்வலையை ஏற்படுத்தினார் டிஐஜி ரூபா.

இதையடுத்து, இன்று காலை அவர் திடீரென்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேபோல, ஏடிஜிபி சத்யநாராயணா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், ரூபா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ரூபாவை மீண்டும் சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக நியமிக்க வேண்டும் என்று கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/95822-dig-roopa-transfer-effect-prisoners-protest-in-bengaluru-jail.html

Link to comment
Share on other sites

கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் ஏன்?: முதல்வர் சித்தராமையா விளக்கம்

 

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்த விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்று அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்

 
கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் ஏன்?: முதல்வர் சித்தராமையா விளக்கம்
 
பெங்களூர்:
 
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின.
 
இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில் டி.ஐ.ஜி. ரூபா சிறைத் துறையில் இருந்து அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக அவரை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவு கர்நாடக மாநில பணியாளர் நலத்துறையால் இன்று பிறப்பிக்கப்பட்டது.
 
டிஐஜி ரூபா உடன் மேலும் 4 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பெங்களூர் சிறை துறை வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில், சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி சித்தராமையா, ”இது ஒரு நிர்வாக ரீதியான நடவடிக்கை. ஊடகத்திற்கு எல்லாவற்றையும் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்றார்.
 
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த ரூபா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/17152812/1096799/Karnataka-CM-Siddaramaiah-on-cop-DIG-Roopas-transfer.vpf

Link to comment
Share on other sites

ரூபாவை மாற்றிய காரணம் தெரியுமா? - சிறையில் நடந்த பகீர் பின்னணி

 

 roopa_16456.jpg

பெங்களூருச் சிறை டி.ஐ.ஜி. ரூபா, இடமாற்றப்பட்டதைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 'இந்த இடமாற்றம், நிர்வாக ரீதியான நடவடிக்கை' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூருச் சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில், சசிகலாவுக்குத் தனி சமையலறை என சிறை விதிமுறைகள் மீறி சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், அதற்காக இரண்டு கோடி ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும் சிறை டி.ஐ.ஜி ரூபா பகிரங்கமாக தெரிவித்தார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டது. 
இந்தச்சூழ்நிலையில், சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான தடயங்கள் அழிக்கப்பட்டதாக ரூபா தெரிவித்தார். ரூபாவின் அதிரடி, கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ரூபாவை இடமாற்ற கர்நாடக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக, நடந்த ஆலோசனையில் ஏ.டி.ஜி.பி, சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி. ரூபா, சிறைக்கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மாற்றப்பட்டனர். ஏ.டி.ஜி.பி. சத்யநாராயண ராவ், எங்கும் இடமாற்றப்படவில்லை. பெங்களூரு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கமிஷனராக ரூபா இடமாற்றப்பட்டார். 
இந்த இடமாற்றத்துக்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, இது, நிர்வாக ரீதியான நடவடிக்கை என்று ரூபா இடமாற்றத்துக்கு விளக்கமளித்துள்ளார். இந்தச்சூழ்நிலையில் ரூபா இடமாற்றத்தைக் கண்டித்து சிறைக்கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. தமிழகத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ரூபாவின் நேர்மைக்கு கிடைத்த பரிசே இந்த இடமாற்றம் என்று தெரிவித்தனர். 


ரூபாவை இடமாற்றியதற்கான காரணங்கள் குறித்து விசாரித்தோம். இதுகுறித்து பெங்களூரு சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ரூபா, நேர்மையான அதிகாரி. அவரது அதிரடி நடவடிக்கை சிறையில் உள்ள சில அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் விதிமுறைகள் மீறி வி.வி.ஐ.பி.களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே உளவுத்துறை மூலம் தகவல் உயரதிகாரிகளுக்குச் சென்றாலும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. சிறைத்துறை டி.ஐ.ஜியாக ரூபா, பொறுப்பேற்றதும் அவரது கவனத்துக்கு இந்தத் தகவல்கள் சென்றன. அவரும் அதை உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். வழக்கம்போல அதை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம். இதன்பிறகே சசிகலா சலுகைகள் குறித்தும் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் விவரத்தையும் அறிக்கையாக அனுப்பினார். அதன்பிறகே ஏ.டி.ஜி.பி சத்யநாரயணராவ்விற்கும் டி.ஐ.ஜி ரூபாவுக்கும் இடையே நேரிடையாக மோதல் ஏற்படத் தொடங்கியது. இருவரது மோதலால் பல உண்மைகள் வெளிவரத்தொடங்கின. 
 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இந்த மோதல் குறித்து உளவுத்துறை மூலம் முதல்வருக்குத் தகவல் சென்றது. மீடியாக்களுக்கும் தகவல் பரவின. சசிகலா விவகாரத்தை பா.ஜ.க. அரசியலாக்கியது. இதனால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி கர்நாடக அரசுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டது. சத்யநாராயண ராவ், ரூபா, கிருஷ்ணகுமார் என மூன்று பேர் இடமாற்றப்பட்டனர். 
 'இந்த முடிவு எதிர்பார்த்ததுதான்' என்று தன்னுடைய நெருக்கமானவர்களிடம் ரூபா போனில் தெரிவித்துள்ளார். மூன்று பேரும் இடமாற்றப்பட்டாலும் சசிகலா விவகாரம் முடியவில்லை. அதுதொடர்பான விசாரணை சிறையில் நடந்துவருகிறது. சிறைக் காவலர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்துவருகிறது. தடயங்களும் சேகரிக்கப்பட்டு வருவதால் அது, சிறைத்துறை அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையில் ரூபா, டி.ஐ.ஜியாக பொறுப்பேற்பதற்கு முன்பிலிருந்தே சசிகலாவுக்குத் தேவையான சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. இதனால் சசிகலா, சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையால் சசிகலாவுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. அவரது நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிப்படுகின்றன. குறிப்பாக சசிகலாவைச் சந்திக்க வந்தவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. 
சிறைத்துறை அதிகாரிகளின் செல்போன்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறைத்துறை அதிகாரிகளில் சிலர் வேறு செல்போன் நம்பர்களைப் பயன்படுத்திய தகவலும் கிடைத்துள்ளது. அந்த எண்கள் குறித்து ரகசிய விசாரணை நடந்துவருகிறது. விசாரணை குறித்த அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"என்றனர். 

சிறையில் நிலவிய போட்டி 

 பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பிளாக் பணிக்கு சிறைக் காவலர்களிடையே கடும் போட்டி நிலவியுள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்ட சிறைக்காவலர்கள், அதிகாரிகளிடம் விசாரணை அதிகாரிகள் விசாரித்துவரும் வேலையில், சசிகலாவிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும், ரூபா கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்றால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் கர்நாடக காவல்துறை தயாராக உள்ளதாம். 

 பா.ஜ.க. உற்சாகம் 

 சசிகலா விவகாரத்தை பெரிதுப்படுத்தி காங்கிரஸ் ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த கர்நாடக பா.ஜ.க.வினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரூபா இடமாற்றத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உள்துறையினரிடம் பா.ஜ.க. எடியூரப்பா முறையீடு செய்துள்ளார்.  

 சிரித்த முகத்துடன் ரூபா 

 இடமாற்ற உத்தரவு குறித்த தகவலைக் கேட்டதும் ரூபா முகத்தில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை என்று சொல்கின்றனர் அவரது அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள். எப்போதும் போல சிரித்த முகத்துடனே அவர் காணப்பட்டார். இடமாற்றத் தகவலைத் தனக்கு நெருக்கமானவர்களிடம் போனில் தெரிவித்தார் என்று சொல்கின்றனர் ரூபாவுக்கு வேண்டப்பட்டவர்கள். 

 சசிகலா தரப்பு அதிர்ச்சி 

 

 சசிகலா விவகாரத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஏ.டி.ஜி.பி. சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி ரூபா, கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் என இடமாறும் அதிகாரிகளின் பட்டியல் நீள்கிறது. இன்னும் சிலரை மாற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இடமாற்றப்பட்ட அதிகாரிகளுக்குப் பதில் புதிய ஐ.பி.எஸ். அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் காங்கிரஸ் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாம். அதிகாரிகள் இடமாறுதல் சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

http://www.vikatan.com/news/coverstory/95824-why-was-roopa-transferred-.html

Link to comment
Share on other sites

சசியை அம்பலப்படுத்திய ரூபா தூக்கியடிப்பு
குற்றச்சாட்டுக்கு ஆளான டி.ஜி.பி.,க்கு காத்திருப்போர் பட்டியல்
 
 
 

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததை கண்டுபிடித்த, கர்நாடக சிறைத் துறை, டி.ஐ.ஜி., ரூபா, இடமாற்றம் செய்யப்பட்டு, 'டம்மி' பதவிக்கு துாக்கியடிக்கப்பட்டார்.
புகாருக்கு ஆளான சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
 

சிறைக்கு வரலாம்


சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, அ.தி.மு.க., சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் விரும்பும் உணவை சாப்பிடுவதற்காக, சிறப்பு சமையல் அறை, சமையல் செய்ய கைதிகள், அவரை சந்திக்க வருபவர்களுக்கென, மேஜை, நாற்காலிகள் என, சிறைக்குள்ளேயே, 'சசிகலா அலுவலகம்' அமைத்து, வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதற்காக, சசிகலா தரப்பிலிருந்து, சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், இரண்டு கோடி ரூபாய் பெற்றதாகவும், சிறையில் நடந்த மேலும் சில முறைகேடுகள் பற்றியும், டி.ஐ.ஜி., ரூபா அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த விவகாரம், கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, டி.ஜி.பி.,யும், டி.ஐ.ஜி.,யும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டினர். நிலைமை கையை மீறி சென்றதால், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய்குமார் தலைமையில், உயர்மட்ட விசாரணை குழுவை, மாநில அரசு அமைத்தது.
விசாரணை அதிகாரிகள், எந்நேரத்திலும் விசாரணை நடத்த சிறைக்கு வரலாம் என கருதிய, சத்யநாராயண ராவ், சமீபத்தில், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்து, சில ஆவணங்களை திருத்தியதாக கூறப்பட்டது. இதையறிந்த, ரூபாவும் சிறைக்கு சென்று, சிறை அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் விளக்கம் கேட்டதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

தூக்கியடிப்பு



சத்யநாராயணாவின் ஆலோசனைப்படி, சசிகலா தொடர்பான தகவல்களை ரூபாவுக்கு அளித்த, 32 கைதிகள், நள்ளிரவில், கர்நாடகாவின் பல்வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர். விசாரணை அதிகாரிகள், நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்வதாக இருந்த நிலையில், பிரச்னைக்கு மூல கர்த்தாவான, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், - டி.ஐ.ஜி., ரூபா, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது, நடவடிக்கை பாய்ந்தது.
சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். இதில், சத்ய நாராயணா, இன்னும் இரு வாரங்களில் ஓய்வு பெற உள்ளார். சிறையில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்திய, சிறைத் துறை, டி.ஐ.ஜி., ரூபா, போக்குவரத்து, சாலை பாதுகாப்பு துறை, டி.ஐ.ஜி., மற்றும் கமிஷனர் பதவிக்கு துாக்கியடிக்கப்பட்டார். இதனால், சிறையில் உள்ள கைதிகள், ரூபா இடமாற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூபா இடமாற்றம் செய்தியறிந்த, அவரது கணவரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான, மவுனிஸ் முத்கோல், பெங்களூரு சேஷாத்ரி சாலையில் உள்ள, கர்நாடக சிறைத் துறை தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்று, டி.ஜி.பி., மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை பாதுகாப்பாக வைக்கும்படியும், கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும்படியும், அங்கிருந்த ரூபாவிடம் கூறிவிட்டுச் சென்றார்.
ரூபாவை இடமாற்றம் செய்ததற்கு, கர்நாடக எதிர்க்கட்சிகள், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., அரசை கடுமையாக கண்டித்துள்ளன. முதல்வர் அலுவலகம் சப்பைக்கட்டுபோலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக, கர்நாடக முதல்வர் அலுவலகம், விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: குற்றம் சாட்டிய ரூபாவும், குற்றம் சாட்டப்பட்ட, சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயணாவும், சேவை விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை பின்பற்றாமல், மீடியாக்களிடம் அறிக்கை குறித்து விவாதித்தனர். விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், அவர்களின் இந்த நடவடிக்கை, விதிமுறைகளை மீறிய செயலாக கருதப்படுகிறது.

 


இதற்காக, விளக்கம் கேட்டு, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விசாரணை நல்ல முறையில் நடக்கும் வகையில், டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். டி.ஐ.ஜி., ரூபா, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முறைகேட்டை கண்டுபிடித்த ரூபாவை, ஏன் இடமாற்றம் செய்ய வேண்டும்? காங்., அரசின் செயல்பாடு சரியில்லை. நேர்மையான அதிகாரிக்கு அவமானம் நேர்ந்துள்ளது.
- எடியூரப்பா மூத்த தலைவர், பா.ஜ.,

சிறையில் நடந்த முறைகேடுகளை மறக்கடிக்கும் வகையில், அதிகாரிகளை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது. நேர்மையாக விசாரணை நடக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது. ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விசாரணை நடத்தினால், சக அதிகாரிகளின் முறைகேட்டை கண்டுபிடிக்க மாட்டார். எனவே, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- குமாரசாமிமூத்த தலைவர், ம.ஜ.த.,
 

சசிகலாவுக்கு 5 அறைகள்:


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த, ஐந்து புகைப்படங்கள், கன்னட, 'டிவி' சேனல்களில் நேற்று வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டது. அதில், சிறையின் ஒரு பகுதியில் உள்ள ஐந்து அறைகளும் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கைதிகள், யாரும் பார்க்காதபடி, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சசிகலாவை அடைத்துள்ள அறை மட்டும், துணி போட்டு மூடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. துவைக்கப்பட்ட துணிகள், வராண்டா ஜன்னல் மீது காய வைக்கப்பட்டுள்ளன. படுக்கைகள், துணிகள், ஸ்டீல் பாத்திரங்கள் வைக்கும் வகையில், சிறப்பு ஷெல்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த படங்கள் வெளியானதால், விதிமுறைகளை மீறி, சசிகலாவுக்கு வழங்கிய சிறப்பு சலுகைகள், அம்பலமாகியுள்ளன. இதனால், சசிகலாவுக்கு மட்டுமின்றி, கர்நாடக அரசுக்கும், நெருக்கடி ஏற்படலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1814223

Link to comment
Share on other sites

17 ஆண்டுகளில் 31 பணியிட மாற்றம்: டிஐஜி ரூபாவின் நேர்மைக்கு கிடைத்த பரிசு

ரூபா டி.மவுட்கில்
ரூபா டி.மவுட்கில்
 
 

பெங்களூரு சிறையில் முறை கேடுகளை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா டி. மவுட்கில் 17 ஆண்டுகளில் 31 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்தவர் ரூபா, இளம் வயதில் இருந்தே துணிச்சலானவர். பள்ளி, கல்லூரி நாட்களில் தேசிய மாணவர் படை, சாரணர் படை உள்ளிட்டவற்றில் பங்கேற்று தேசிய அளவில் பதக்கங்களை பெற்றவர். பள்ளிப் பருவத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அணிவகுப்பில் பங்கேற்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிடம் சிறப்பு விருது பெற்றவர்.

கடந்த 2000-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரூபா, இந்திய காவல் பணியை விரும்பி ஏற்றார். கடந்த 2000-ம் ஆண்டு பீதர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ரூபா கனிமவள கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார். நேர்மை காரணமாக அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இவர், யாதகிரி, கதக், தும்கூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். ஹூப்ளியில் நடந்த கலவரத்தில் அப்போதைய‌ மத்திய‌ பிரதேச முதல்வர் உமாபாரதியை துணிச்சலாக கைது செய்த போது நாடு முழுவதும் கவனிக்கப்பட்டார்.

பெங்களூரு மாநகர காவல் இணை ஆணையராக பணியாற்றிய போது அரசியல் வாதிகளுக்கு தேவையில்லாமல் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றார். மேலும் அப்போதைய முதல்வர் எடியூரப்பா வாகன அணிவகுப்பில், உரிய அனுமதி இல்லாமல் இடம்பெற்ற வாகனங்களையும் திரும்பப் பெற்றார். அண்மையில் மைசூரு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா உடன் ட்விட்டரில் தைரியமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.

கடந்த மாத இறுதியில் கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டிஐஜியாக பொறுப்பேற்ற ரூபா, பத்தே நாட்களில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். இதனால் சிறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் சத்தியநாராயண ராவ் ரூபாவுக்கு 2 மெமோ கொடுத்த போதும், அஞ்சாமல் அவருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி ரூ. 2 கோடி லஞ்சப்புகாரை கிளப்பினார்.

எதிர்த்ததால் இட‌மாற்றம்

கர்நாடக அரசுக்கு சிக்கல் உருவானதால் முதல்வர் சித்தராமையா ரூபாவிடம் ஊடக ங்களுக்கு பேட்டிக்கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். அதை மீறி ரூபா, சசிகலாவுக்கு சிறப்பு வசதி வழங்கப்படுவதாக பேட்டியளித்தார். இதனால் கோபமடைந்த சித்தராமையா ரூபாவுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு ரூபா, 'இந்த விவகாரத்தில் என்னை குறி வைப்பது நியாயமல்ல. குற்றவாளிகளை தண்டியுங்கள்' என அஞ்சாமல் சொன்னார்.

ரூபா தொடர்ந்து சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சசிகலா, முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்டோரிடம் நேருக்கு நேர் மோதியதால் ரூபாவுக்கு அதிகார மட்டத்தில் மட்டுமல்லாமல், வெளியில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

ரூபாவுக்கு எதிரான அதிகார புள்ளிகள் அவருக்கு எதிராக வலுவாக காய் ந‌கர்த்தின. சிறைக்குள் இருக்கும் தாதாக்களை கொண்டு அங்கே கலகத்தை உருவாக்கி, சிறையை பதற்றமாக்கினர். அரசியல் வட்டாரமும், அதிகார மட்டமும், சட்ட விரோத கும்பலும் ஒரே நேரத்தில் கைக்கோர்த்ததால் ரூபா ஒரே மாதத்தில் வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பெண் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, மனிதா பிமானம் தொடர்பாக கன்னடத்தில் முன்னணி தினசரி இதழ்களில் ரூபா கட்டுரையும் எழுதி வருகிறார்.

காவல்துறையில் இவர் பணியில் சேர்ந்து 17 ஆண்டுகள் ஆகிறது. அரசியல்வாதிகள், பணக்காரர்கள், ரவுடிகள், அதிகாரிகள் என‌ எத்தனையோ எதிர்ப்புகளை பார்த்துவிட்டார். எதற்கும் அடிபணிந்து செல்லாத ரூபாவுக்கு அதிகார வர்க்கம் அளிக்கும் தண்டனை தான் அடிக்கடி இடமாற்றம். கடந்த 17 ஆண்டுகளில் 31 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இது தான் ரூபாவின் நேர்மைக்கு தரப்படும் மாபெரும் பரிசு என அவரது நெருங்கிய நண்பர்கள் வருத்தத்தோடு கூறுகிறார்கள்.

http://tamil.thehindu.com/india/17-ஆண்டுகளில்-31-பணியிட-மாற்றம்-டிஐஜி-ரூபாவின்-நேர்மைக்கு-கிடைத்த-பரிசு/article9773782.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.