Sign in to follow this  
Followers 0
நவீனன்

வயது பதிமூன்று

1 post in this topic

 
 

வயது பதிமூன்று

-வேதா கோபாலன்

பதிமூன்று வயது தாமினி கர்ப்பமா..? டாக்டர் ரேவதி அதிர்ந்து நிமிர்ந்தாள். தலை சுற்றியது போன்ற உணர்வில் அப்படியே ரிவால்விங்  நாற்காலியில் படிந்தாள். “தாமினி...’’ சட்டென்று தழுதழுத்த உணர்வு. இவளை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்பதற்குப் பல  காரணங்கள் இருந்தாலும் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி நான்தான் முந்தி என்று ஒரு காரணம் நின்றது.
17.jpg
இது இவளின் பேஷன்ட் இல்லை. “இந்த ரெண்டு வாரம் நீ ஓ.பி பார்த்துடுடீ ரேவ்ஸ்...” என்று கன்னத்தைப் பிடித்துக் கெஞ்சிவிட்டு  டார்ஜிலிங்குக்கு புருஷன் திலீபனுடன் நாலாவது தேனிலவுக்கு ஓடினாளே அந்த அல்பனாவின் வழக்கமான பேஷன்ட் இவள். ஆதர்ச தம்பதி  அல்பனாவும் திலீபனும். அன்யோன்யத்தைக் கெடுப்பானேன்.

இந்தப்பெண் அல்பனாவின் செல்லம். சின்னச் சின்ன இருமல் சளி ஜலதோஷத்துக்கெல்லாம் ஓடி வந்துவிடுவாள் இந்தக் குழந்தை. இந்த  கிளினிக்கில் தாமினி ரொம்பவும் பிரபலம். அல்பனாவின் வீட்டுக்குக் கூட இவள் அடிக்கடி போக வர அந்தக் குடும்பத்துக்கு நெருங்கி  நட்பாகிவிட்டாள். அழகிய பெண் என்பதால் நர்ஸ்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறாள்.

எல்லோருக்கும் ஒரு ‘ஹாய்’ போடுவாள். எல்லோரும் அவளுக்கு ஒரு ‘ஹலோ’ போடுவார்கள். புது மனிதர்களிடமும் சரளமாய்ப் பேசும்  இந்தக் குழந்தை. இப்போது என்ன செய்யலாம்? முதலில் அவளின் அம்மாவைக்கூப்பிட்டுப் பேச வேண்டும். உண்மையில் பீரியட்ஸ் தப்பு  கிறது என்ற புகாருடன்தான் போன வாரம் வந்திருக்கிறாள். பதிமூன்று வயதில் அப்படி ஒன்றும் சீராக..

வரிசை தப்பாமல் கியூவில் வந்துவிடாது அந்தப் பொல்லாத பீரியட்ஸ் சில குழந்தைகளுக்கு. ஹீமோக்ளோபின் போதவில்லை என்று  தோன்றியது. எப்போ வயசுக்கு வந்தாள்? எத்தனை காலம் சரியாய் அடுத்தடுத்து வந்தது? அவளின் வழக்கமான இடைவெளி என்ன?  என்றெல்லாம் விசாரித்து உடலில் சத்துக்குறைபாடுதான் போலும் என்ற முடிவுக்கு அனேகமாக வந்துவிட்டாள்.

எனினும் விநோதமாய் இருந்தது. ஒரு பதிமூன்று வயதுப்பெண் என்றால் என்ன உருவம் உங்களின் கண்முன் வரும்? அதைவிட இவள் அதீத  வளர்ச்சி. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில்தான் இதுபோன்ற வளர்ச்சியைப் பொதுவாகப் பார்க்கலாம். இது சற்று அபூர்வ ரகம். உடலில்  வழக்கமாகவே ஒரு நிரந்தர மினுமினுப்பு உண்டு.

நேற்று அவளுக்குக் காலையில் எழுந்தவுடன் குமட்டல் உணர்வு இருந்தது என்று சொல்லிக்கொண்டு அவளின் அம்மா அழைத்து  வந்தபோதுதான் முதல் சந்தேகம் எழுந்தது டாக்டர் ரேவதிக்கு. சே, சே அப்படியெல்லாம் இருக்காது. பாவம். குழந்தை அவள் என்றுதான்  நினைத்தாள். இருந்தும் நாடித்துடிப்பில் வித்யாசம் தெரிந்தது. 15 பீட்கள் அதிகம் இருந்தது.

மெல்ல மெல்ல அந்தப் பெண்ணிடம் கேள்விகள் கேட்டு ஒவ்வொரு அறிகுறியையும் உறுதி செய்து கொண்டாள். நிச்சயம் அதுவேதான்.  பிறகுதான் மனசுக்குக் கசப்பான அந்த டெஸ்ட்டை இந்தக் குழந்தையிடம் பிரயோகித்தே ஆக வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள்.  உள்ளத்தில் ஏகப்பட்ட போராட்டம்.

அந்தப் பெண்ணின் தாயிடம் அனுமதி கேட்காமல் கர்ப்பத்தை உறுதி செய்யும் டெஸ்ட் செய்வது தவறு. எனினும் செய்தே ஆகவேண்டும்  என்று மனசின் மூலை ஒன்றில் இவளுக்கு கமாண்ட் கிடைத்துக்கொண்டே இருந்தது. சம்திங் ராங் என்று உள்ளம் கிடந்து அடித்துக்  கொண்டது. சின்னதாய் ஒரு ரிஸ்க் எடுத்தாள். தப்புதான், தப்பேதான். ஒவ்வொரு டாக்டர்கள் என்னென்னவோ தவறுகளும் தப்புகளும்  தெரிந்தும் தெரியாமலும் செய்கிறார்கள்.

இந்தப் பெண்ணின் தாயாரை டென்ஷன் என்ற குளத்தில் கழுத்தைப் பிடித்துத் தள்ள வேண்டாம் என்ற ஒரே காரணத்தால் அந்த முடிவுக்கு  வந்தாள். அவளிடம் சொல்லாமல் செய்ய வேண்டியதுதான். டெஸ்ட்டை ரகசியமாய் நிகழ்த்த வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஐயோ...  ரிசல்ட் பாசிட்டிவ் என்றல்லவா வந்துவிட்டது? வேறு வழியேயில்லாமல் அந்த அம்மாவிடம் சொல்லிவிட வேண்டியதுதான்.

அல்பனா வரட்டும் என்று காத்திருக்கலாமா? போன் அடித்தது, திங்க் அஃப் த ஏஞ்சல் அல்பனாஞ் “ஒரு வார்த்தைன்னா ஒரு வார்த்தை  பேசாதேடீ டாக்டர் ரேவ்ஸ், நானும் திலீப்பும் இன்னும் ஒரு வாரம் இங்கே இருந்துட்டுதான் வருவோம்.. இவன் என்னை அதீதமா லவ்ஸ்...  அது வரைக்கும் டியூட்டி...” அவள் பேசி முடிக்கும் வரைகூடப் பொறுமை காக்க முடியாதபடி வில்லத்தனமாக அந்த சிக்னல் கட் ஆகித்  தொலைந்தது.

இவள் என்னத்தைச் சொல்ல? ரேவதிக்கு பெரிதாய் பிரச்னை இல்லை. கணவர் மணிபாலன் புரிதல் அதிகம் கொண்டவர். இன்னும் ஒருவாரம்  அல்பனாவின் டியூட்டியை இவள் சேர்த்துப் பார்ப்பது பற்றி ஏதும் முனகும் ரகமில்லை. கணவரின் பெயரில் உள்ள மணி, குழந்தைகளின்  குணத்தில் இருந்தன. ஆமாம், இரண்டும் மணிமணியாய் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும்தான்.

மற்றபடி இயல்பாய் முடிய வேண்டிய லீவ் வேகன்ஸி இப்போது முள் தொப்பியாய் அழுத்தியது. அவள் இருந்தால் அவள் பாடு என்று  விட்டுவிடலாம். இப்போது இவளின் தூக்கம் அல்லவா தொலைகிறது... எங்கேயோ ஏமாந்திருக்கிறது இந்தப்பெண். விதம் விதமாய்ஞ் ரகம்  ரகமாய்... டிசைன் டிசைனாய்க் கேட்டுப் பார்த்தாள். தனக்கு அப்படி ஏதும் நிகழவே இல்லை என்று அந்தப் பெண் கற்பூரம் அடிக்காத  குறையாய் சத்தியம் செய்தது.

செய்வதறியாத நிலையில் தாமினி என்ற அந்தக் கவர்ச்சி கரமான சிறுமியின் அம்மாவைக் கூப்பிட்டு மெல்ல மெல்லச் சொல்ல  ஆரம்பித்தபோதுஞ் கோபப்படுவாள் என்றும் ஆத்திரப்படுவாள் என்றும் எதிர்பார்த்து மனோதத்துவ ரீதியாக ஒரு கவுன்சலிங்கின்  மென்மையுடன் மெல்ல மெல்லச் சொல்ல ஆரம்பித்தும்... அப்படி ஒரு ருத்ர தாண்டவத்தை... ஹிஸ்டரிகல் விளைவை  எதிர்பார்த்திருக்கவில்லை.

‘‘என்னடீ படிச்சுட்டு வந்திருக்கீங்க? கொளுத்திடுவேன் ஆஸ்பத்திரியைஞ் கொன்னுடுவேன்ஞ் கேஸ் போட்டுடுவேன்... போலி டாக்டரா நீயி?”  இவை வெறும் சுக்லாம்பரதரம்தான். அடுக்கிவிட்டாள் அடுக்கி. ரேவதி எத்தனையோ ரகமான பேஷன்ட்களையும் ரியாக்‌ஷன்களையும்  சந்தித்துக் கொட்டை போட்டவள்தான். எனினும் இந்த ருத்ரதாண்டவத்தை அவளுமே எதிர்பார்த்திருக்கவில்லை.

கடைசியாக அந்த வாக்கியத்தை அவள் சொல்ல வேண்டியிருந்தது. ‘‘மன்னிச்சுக்குங்க, என் கண்டுபிடிப்பு தப்பாயிருக்கலாம். நீங்க இவளின்  பீரியட்ஸ் பிரச்னைக்கும் வாந்தி மயக்கத்துக்கும் வேறு டாக்டரிடம் போங்க...” இது கொடுமை. அத்தனை ஃபீசையும் இவள்  பாக்கெட்டிலிருந்து திருப்பிக் கொடுக்கச் சொன்னார் சீஃப்.

சே. தேவையா? நாலு நாள் மன உளைச்சலுடன் மனம் ஒன்றாமல் தொழிலைத் தொடர்ந்தபோது ஐந்தாம் நாள் வந்தாள் அதே தாமினி தன்  அம்மாவுடன். இவளுக்கு நடுங்கியது. ஆனால், அந்தப் பெண்மணி ‘‘சனியன், இது எங்கயோ போய் வயித்தில் வாங்கி வந்திருக்கு.  இன்னொரு டாக்டரும் சொல்லிட்டாங்க. கட்டையால் அடிச்சுப் பார்த்தேன்.

தபாரு இந்தக் கையில் சூடு கூட வெச்சுட்டேன். சனியன் சொல்ல மாட்டேங்குது...” என்றாள். இப்படியெல்லாம் திட்டாதே என்று  சொல்லக்கூட பயமாய் இருந்தது. அந்தப் பெண் வேறு எதுவுமே பேசவில்லை. ‘‘டாக்டர் அல்பனா வேணும்...” என்பதையே திரும்பத்  திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால்ஞ் அல்பனா வந்தவுடன் “டாக்டர், என் அம்மாவின் டார்ச்சர் தாங்க முடியலை.

என்னை உங்க வீட்டுக்குக் கூட்டிப் போங்க டாக்டர்...” என்று அல்பனாவின் கையைப் பிடித்துக்கொண்டாள். ஆனாலும் அந்த அல்பனா  இந்தப் பெண்ணுக்குச் சற்று அதிக இடம் கொடுத்துவிட்டாளே என்று லேசான எரிச்சல் எழுந்தது. எனினும் தனக்கென்ன? தாயைப் பார்த்து,  “நான் இவங்க வீட்டுக்குப் போறேன்.

நீ வேணாம் போ. மேலும் நான்ஞ்” என்று அந்தப் பெண் ஏதோ சொல்லத் துவங்கியபோது அவளின் தாய் அவளை அடித்த அடிக்கு  இன்னொரு பெண்ணாய் இருந்தால் பிணமாகியிருக்கும். “நான் இவங்க வீட்டில்தான் இனி இருப்பேன். திலீபன் அங்கிளுடன்தான்  இருப்பேன்!” என்று அந்தப் பெண் வாக்கியத்தை முடித்தாள்.

www.kungumam.co

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0