Sign in to follow this  
Followers 0
நவீனன்

நெடுந்தீவுக் கடலில் நங்கூரமிடும் தளம் தேவை கடற்றொழிலாளா்கள் கோரிக்கை

1 post in this topic

நெடுந்­தீ­வுக் கட­லில் நங்­கூ­ர­மி­டு­ம் த­ளம் தேவை

கடற்­றொ­ழி­லா­ளா்­கள் கோரிக்கை

 
நெடுந்­தீ­வுக் கட­லில் நங்­கூ­ர­மி­டு­ம் த­ளம் தேவை
 

நெடுந்­தீவுப் பிர­தே­சத்­தில் மீன்­பி­டிக் கலங்­க­ளைப் பாது­காப்­பாக நங்­கூ­ர­மிட்டு தரித்து வைப்­ப­தற்­கும் பாது­காப்­பா­கக் கரை சேரு­வ­தற்­கும் நங்­க­கூ­ர­மி­டு­த­ளமோ அல்­லது எந்த வித­மான பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளும் பிர­தே­சத்­தில் இல்லை என அந்­தப் பகுதி கடற்­றொ­ழி­லா­ளா்­கள் விச­னம் தெரி­வித்­த­னா்.
இது தொடா்­பாக அவா்­கள் தெரி­வித்­தா­வது,

பல்­வேறு நிலை­க­ளி­லும் பின்­தங்­கிக் காணப்­ப­டும் எமது நெடுந்­தீ­வுப் பிர­தே­சத்­தில் பெரும்­பா­லா­னோர் கடற்­றொ­ழி­லையே நம்பி வாழ்ந்து வரு­கின்­றோம். ஆயி­ரத்து 200 கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளைக் கொண்ட எமது பிர­தே­சத்­தில் ஒரு­நாள் பட­கு­கள், சிறிய பட­கு­கள், தெப்­பங்­கள் என அறு­நூற்­றுக்­கும் மேற்­பட்ட மீன்­பி­டிக் கலங்­கள் காணப்­ப­டு­கின்­றன.

இந்த நிலை­யில் எமது மீன்­பி­டிக் கலங்­க­ளைப் பாது­காப்­பான முறை­யில் நங்­கூ­ர­மிட்­டுத் தரித்து வைப்­ப­தற்கான பாது­காப்பு ஏற்­பா­டு­கள் இல்லை. இத­னால் காற்று கடு­மை­யாக வீசும் நேரம் மற்­றும் கடற்­கொந்­த­ளிப்­பான நாள்­க­ளில் பட­கு­கள் அறு­பட்டு பாறை­க­ளு­டன் மோதுண்டு மிகுந்த சேதங்­க­ளுக்கு உள்­ளா­கின்­றன. பெரும் இழப்­புக்­களை எமது மீன­வர்­கள் எதிர்­கொள்ள நேரி­டு­கின்­றது.

இழப்­புக்­களை எதிர்­கொண்­ட­வர்­கள் இன்­ன­மும் அதி­லி­ருந்து மீள முடி­யா­மல் உள்­ள­னா். எமது மீன­வர் பாது­காப்­பற்ற இந்­தக் கட­லோ­ரம் தமது பட­கு­க­ளைப் பாது­காக்க முடி­யா­மல் திண்­டா­டு­வ­தும், அல்­ல­லு­று­வ­தும் கண்­கூ­டா­கும்.தினம்­தி­னம் தொழி­லுக்­குச் செல்ல முடி­யா­ம­லும் மிகுந்த சிர­மங்­களை எதிர் கொள்­கின்­ற­னர். இந்த நாள்­கள் இவர்­க­ளுக்கு வரு­மா­ன­மற்ற நாள்­க­ளா­கவே அமை­கின்­றன என்­ற­னா்.
இது தொடா்­பாக நெடுந்­தீவு கடற்­றொ­ழில் சங்­கத் தலை­வா் அருள்ஜீ­வன் தெரி­வித்­த­தா­வது,

இந்­த­வி­ட­யம் தொடர்­பாக நாம் பல வரு­ட­கா­ல­மாக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் முதல் அர­சி­யல் தலை­மை­கள் வரை பல்­வேறு தரப்­பி­ன­ரி­டம் வேண்­டு­கோள் விடுத்­தி­ருந்­தோம். இதற்­கான திட்­டங்­கள் முன்­மொ­ழி­ யப்­பட்­டுள்­ள­தாக பல வரு­டங்­க­ளா­கக் கூறப்­பட்டு வரு­கின்­றதே தவிர முறை­யான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

எமது பிரச்­சி­னைக்­கான தீர்வு காணப்­ப­ட­வில்லை. இது எமது நீண்­ட­கா­லப் பிரச்­சி­னை­யாக உள்­ளது. மீன­வக் குடும்­பங்­கள் அதி­க­மாக வாழும் நெடுந்­தீ­வின் வடக்­குக் கரை­யோ­ரப்­ப­கு­தி­யில் தமது மீன்­பி­டிக்­க­லங்­களை பாது­காப்­பான முறை­யில் நங்­கூ­ர­மிட்டு வைப்­ப­தற்­கான நங்­கூ­ரம் இடும் தள­மொன்றை அமைத்­துத் தரும்­படி எமது மீன­வர்­கள் கோரி நிற்­கின்­றார்­கள். இது எமது நீண்ட நாள் கோரிக்­கை­யா­கும். இதன் மூல­மாக நெடுந்­தீ­வுப் பிர­தேச மீன­வர்­க­ளது முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சி­னை­யொன்று தீர்க்­கப்­ப­டு­வ­து­டன் நெடுந்­தீவு பிர­தே­சத்­தின் கடற்­றொ­ழில் மேம்­பாடு அமை­வ­தற்­கும் மீன­வக் குடும்­பங்­க­ளது வாழ்க்­கைத்­தர மேம்­பாட்­டுக்­கும் இது வழி­கோ­லும்.

எனவே சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் எமது பிரச்­சினை தொடர்­பில் மேலான கவ­ன­மெ­டுத்து செயற்­பட வேண்­டு­மென பாதிப்­பு­றும் மீனவ சமூ­கத்­தி­ன­ரைப் பிர­தி­நி­தித்­து­ வப்­ப­டுத்­தும் அமைப்பு என்­கின்ற வகை­யில் நெடுந்­தீவு கடற்­றொ­ழி­லா­ளர் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் சமா­சத்­தி­ன­ரா­கிய நாம் எமது மக்­க­ளு­டன் இணைந்த வகை­யில் எம் கோரிக்­கையை முன்­வைக்­கின்­றோம் என்­றாா்.

http://uthayandaily.com/story/12001.html

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0