நவீனன்

டெனீஸை பதவி நீக்க முதல்வர் என்னுடன் ஆலோசிக்கவில்லை

Recommended Posts

டெனீஸை பதவி நீக்க முதல்­வர் என்­னு­டன் ஆலோ­சிக்­க­வில்லை

கூறு­கின்­றார் சம்­பந்­தன்

 
டெனீஸை பதவி நீக்க முதல்­வர் என்­னு­டன் ஆலோ­சிக்­க­வில்லை
 

அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னைப் பதவி நீக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்­பில், ரெலோவோ அல்­லது வடக்கு மாகாண முத­ல­மைச்­சரோ என்­னு­டன் கலந்­தா­லோ­சிக்­க­வில்லை. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

ரெலோ அமைப்பு வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­குக் கடந்த 13ஆம் திகதி கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தது. தமது கட்சி சார்­பான, தங்­கள் அமைச்­ச­ர­வை­யில் உள்ள பா.டெனீஸ்­வ­ரனை நீக்­கு­மா­றும், புதி­ய­வ­ரது பெய­ரைத் தமது கட்சி பிரே­ரிக்­கும் என­வும் தெரி­வித்­தி­ருந்­தது. இதற்­குப் பதி­ல­ளித்த முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

வடக்கு மாகா­ணப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ர­னைப் பதவி நீக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முத­ல­மைச்­சர் முன்­னெ­டுத்­துள்ள நிலை­யில், கட்­சித் தலை­வர் என்ற ரீதி­யில் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதா என்று இரா.சம்­பந்­த­னி­டம் வின­வி­ய­போது,

இது தொடர்­பில், ரெலோ அமைப்போ அல்­லது வடக்கு மாகாண முத­ல­மைச்­சரோ தன்­னு­டன் கலந்­தா­லோ­சிக்­க­வில்லை என்­றும், தற்­போ­தைய நிலை­யில் இதற்கு என்­னால் பதில் கூற­மு­டி­யாது என­வும் இரா.சம்­பந்­தன் குறிப்­பிட்­டார்.

இதே­வேளை, வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­ட­னான சந்­திப்­புத் திகதி குறித்து இன்­ன­மும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை என­வும், இரா.சம்­பந்­தன் மேலும் தெரி­வித்­தார்.

http://uthayandaily.com/story/11970.html

Share this post


Link to post
Share on other sites
Paanch    1,087

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனுடன் கலந்­தா­லோ­சிக்­க­ முயன்றால் அவர் ஏதாவது ஒன்றைத் தூக்கிப் படிக்கத் தொடங்கிவிடுவார் என்பது ரெலோ அமைப்புக்கும், வடக்கு மாகாண முத­ல­மைச்­சருக்கும் நன்றாகவே தெரியும்.  

Bildergebnis für பத்திரிகை சம்பந்தன்

Share this post


Link to post
Share on other sites