• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

யாழ். அரை மரதனில் தங்கம் வென்ற கிந்துஷன், சுடர்மதி

Recommended Posts

யாழ். அரை மரதனில் தங்கம் வென்ற கிந்துஷன், சுடர்மதி

 

 

இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாவின் ஓர் அம்­ச­மான அரை மரதன் போட்­டி­களின் வரி­சையில் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற முதலாம் சுற்றின் முதலாம் கட்ட அரை மரதன் ஓட்டப் போட்­டியில் ஆண்கள் பிரிவில் வவு­னியா தமிழ் வித்­தி­யா­லய மாணவன் சிவ­நாதன் கிந்­துஷன் முதலாம் இடத்தைப் பெற்றார்.

mini-marathan.jpg

பெண்கள் பிரிவில் முல்­லைத்­தீவு உடை­யார்­கட்டு மகா வித்­தி­யா­லய மாணவி சுப்­பி­ர­ம­ணியம் சுடர்­மதி வெற்­றி­பெற்றார்.

 

யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கின் நுழை­வா­யி­லுக்கு அருகில் நேற்­று­முன்­தினம் மாலை 4.30 மணிக்கு ஆரம்­ப­மான 21.5 கிலோ மீற்றர் தூரம்­கொண்ட அரை மரதன் ஓட்டப் போட்டி யாழ். நகர் ஊடாக காங்­கே­சன்­துறை வீதி, கொக்­குவில், கோண்­டாவில், இணுவில், மரு­த­னார்­மடு, சுன்­னாகம் வரை சென்று அதே­வ­ழி­யாக மீண்டும் துரை­யப்பா நுழை­வா­யி­லுக்கு முன்­பாக நிறை­வ­டைந்­தது.

 

ஆண்கள் பிரிவில் இப் போட்­டியை ஒரு மணித்­தி­யாலம் 14 நிமி­டங்கள், 52 வினாடி­களில் நிறைவு செய்த எஸ். கிந்­துஷன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

 

முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்டான் மகா வித்­தி­யா­லய மாணவன் பீ. ஜெனந்­தனன் (1 ம. 22 நி. 3 வினாடி) வெள்ளிப் பதக்­கத்­தையும், யாழ். கொக்­குவில் இந்துக் கல்­லூரி மாணவன் ஆர்.ரினுஜன் (1 ம. 24 நி. 5 வினாடி) வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்­றனர்.

 

பெண்கள் பிரிவில் எஸ். சுடர்­மதி அரை மரதன் ஓட்­டத்தை 1 மணித்­தி­யாலம் 37 நிமி­டங்கள், 2 வினாடிகளில் நிறைவு செய்து தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

 

கற்­சி­லை­மடு அர­சினர் தமிழ் கலவன் பாட­சாலை மாணவி எஸ். விதுஷா (1 ம. 44 நி. 7 வினாடி.) வெள்ளிப் பதக்­கத்­தையும் கிளி­நொச்சி மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தைச் சேர்ந்த ரீ. டென்­சிகா (1 ம. 44 நி. 7 வினாடி.) வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்­றனர்.

இரு­பா­லா­ரிலும் முதல் மூன்று இடங்­களைப் பெற்­ற­வர்­க­ளுக்கு கண்­கவர் நெஸ்­டோமோல்ட் கிண்­ணங்­க­ளுடன் முறையே 25,000 ரூபா, 15,000 ரூபா, 10,000 ரூபா பணப்­ப­ரி­சுகள் வழங்­கப்­பட்­டன.

இந்தப் போட்டித் தொடரில் வடக்கு மாகாண முதலமைச் சர் சி.வி.விக்கினேஸ் வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21960

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this