• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

கலப்பு முறையில் நவம்பரில் தேர்தல் : பிரதமர் ரணில் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்

Recommended Posts

கலப்பு முறையில் நவம்பரில் தேர்தல் : பிரதமர் ரணில் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்

55a2674dc1779537984c957424e1038c-a379fb6f57248f64585d141cde0ae98b1e23ad11.jpg

 

(ஆர்.ராம்)

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தலை கலப்பு முறையில் எதிர்­வரும் நவம்பர் மாதம்

இறு­தி­வா­ரத்தில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை 60 சதவீதம் தொகு­தி­வாரி பிர­தி­நிதித்­துவ முறையையும் 40சத­வீதம் விகி­தா­சார பிர­தி­நிதித்­துவ

முறையையும் கொண்ட கலப்­பு­மு­றை­யில் நடத்­து­வ­தற்கு அர­சியல் கட்­சி­க­ளி­டையே இணக் கம் ஏற்­பட்­டுள்­ளது.

கலப்பு முறை­மையில் நடத்­தப்­படும் இத்­தேர்­தலில் பெண்­க­ளுக்கு 25 சத­வீதம் இட ஒதுக்­கீடு வழங்­கு­வ­தற்கும் ஏக­ம­ன­தான அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்­டுள்­ள­து.

உள்ளூராட்சி தேர்தல் குறித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அர­சியல் கட்­சிப்­பி­ர­தி­நி­தி­க­ளுக்­கி­டை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது.  

இக்­க­லந்­து­ரை­யா­டலில், ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹசீம், பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி சார்பில் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா, அமைச்சர் பைஸர் முஸ்­தபா, நிதி மற்றும் ஊட­கத்­துறை இரா­ஜங்க அமைச்சர் லசந்த அழ­கி­ய­வண்ண, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சார்பில் அதன் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் அதன் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் எம்.பி, தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ­க­ணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யூர்தீன், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்­ளஸ்­தே­வா­னந்தா எம்.பி தேர்­தல்கள் ஆணைக்­கு­ழவின் தலைவர் மகிந்த தேசப்­பி­ரிய, சட்ட மா அதிபர் ஜயந்த சந்­தி­ர­சிறி ஜய­சூ­ரிய ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர். இதன்­போதே மேற்­கண்­ட­வாறு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

இச்­சந்­திப்பு குறித்து பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரி­விக்­க­கையில்,

பிர­தமர் தலை­மையில் இன்று (நேற்று) நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் மிகவும் முக்­கி­ய­மான இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் டிசம்பர் மாதம் கா.பொ.த சாதா­ரண தர பரீட்சை ஆரம்­ப­மா­வ­தற்கு முன்­ன­தாக உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­லையில் குறிப்­பாக உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் பெண்­க­ளுக்கு நூற்­றுக்கு இரு­பத்­தைந்து சத­வீத ஒதுக்­கீட்டை வழங்­கு­வ­தற்கு கட்­சி­க­ளி­டையே இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. தேர்தல் முறைமை குறித்து கொள்­கை­ய­ள­வி­லான இணக்­க­ப்பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் அடுத்த சில தினங்­களில் நாம் மீண்டும் கூடி­யா­ராய்ந்து இறுதி முடி­வொன்றை எடுக்­க­வுள்ளோம் என்றார்.

இச்­சந்­திப்பு குறித்து கருத்து வௌியிட்ட தமிழ் முற்­போக்கு முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ­க­ணேசன்,

கடந்த தேர்­தல்கள் நடை­பெற்ற ஒட்­டு­மொத்த விகி­தா­சார முறைமை கைவி­டப்­பட்டு தேர்­தல்கள் புதிய வட்­டார, விகி­தா­சார கலப்பு முறையில் நடை­பெறும். இது தொடர்பில் கடந்த மகிந்த ஆட்­சியில் 2012ஆம் வருடம் நிறை­வேற்­றப்­பட்ட உள்­ளூ­ராட்சி தேர்தல் சட்­டத்தில் வட்­டார, விகி­தா­சார தெரி­வுகள் தொடர்­பாக இருந்த 70க்கு 30 என்ற கணக்கு, எமது புதிய திருத்த சட்­டத்தில் 60க்கு 40 ஆக மாற்­றப்­படும்.

அதேபோல் இரட்டை அங்­கத்­தவர் வட்­டா­ரத்தில், ஒரே கட்­சியில் இரண்டு வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட முடி­யாது என்றும், இரண்டாம் அங்­கத்­த­வ­ராக வெற்றி பெறு­கின்­றவர், தோல்­வி­ய­டைந்த கட்­சி­களில் அதிக வாக்­கு­களை பெற்­ற­வ­ராக இருத்தல் வேண்டும் என்ற மோச­டித்­த­ன­மான பழைய விதி மாற்­றப்­பட்டு, ஒரே கட்­சியே இரண்டு வேட்­பா­ளர்­களை போட்­டி­யிட செய்ய முடியும் என்ற திருத்தம், புதிய திருத்த சட்­டத்தில் வரும்.

அத்­துடன் இரட்டை அங்­கத்­தவர் வட்­டா­ரத்தில் ஒவ்­வொரு வாக்­கா­ளரும், இரண்டு வாக்­கு­களை அளிக்க முடியும். இவை சிறு­பான்மை கட்­சிகள் சார்­பாக நாம் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்த போராட்­டத்தின் மூலம் கிடைத்த வெற்­றி­க­ளாகும் என்றார்.

அதே­நேரம் இச்­சந்­திப்பு குறித்து கருத்து வௌியிட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன்,

உள்­ளூராட்சி தேர்தல் குறித்­தொரு கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. ஏற்­க­னவே 60சத­வீதம் தொகு­தி­வாரி பிர­தி­நி­தித்­துவ முறை­மையும், 40சத­வீதம் விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறை­மையும் கொண்டமைந்த கலப்பு முறைமையில் தேர்தலை நடத்துவதற்குரிய இணக்கபாடுகள் கட்சிகளிடையே எட்டப்பட்டுள்ள நிலையில் அம்முறையில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் மொத்த ஒதுக்கீட்டில் 25சதவீதம் பெண்களுக்கு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூராட்சி மன்றங்களுக்காக சட்ட வரைபில் சில தொழில்நுட்ப குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்து இறுதியான முடிவொன்றை எட்டுவதற்காக மீண்டும் எதிர்வரும் புதன்கிழமை கட்சிப்பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-17#page-1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this