Sign in to follow this  
Followers 0
நவீனன்

லலித் ஜெயசிங்க அனுராதபுரம் சிறையில்

1 post in this topic

லலித் ஜெயசிங்க அனுராதபுரம் சிறையில்

 

 
 
புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க அனுராதபுரம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதற்கமைய நேற்று மாலையளவில் அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஹால் தனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல உதவியதாக குற்றம்சுமத்தப்பட்ட லலித் ஜெயசிங்கவை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் அதிகாலை ஊர்காவற்துறை மேலதிக நீதவான் முன் ஆஜர்படுத்த, லலித் ஜெயசிங்கவை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது சந்தேகநபர் சிறு காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர இந்தத் தகவலை வௌியிட்டுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=93436

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0