Jump to content

சிசேரியன் மூலம் பிறக்க வைக்கும் சிசுவுக்கு ஜாதகம் எழுவது சரியானதா.?


Recommended Posts

சிசேரியன் மூலம் பிறக்க வைக்கும் சிசுவுக்கு ஜாதகம் எழுவது சரியானதா.?

 

 

குழந்­தை­யொன்றை அறுவைச் சிகிச்சை (Cesarean) மூலம் பெற­வேண்­டி­யுள்­ளது. அதற்கு ஒரு நல்ல நாள் நேரத்தை இந்த வாரத்தில் அல்­லது இந்த மாதத்தில் குறித்­து­க்கொ­டுங்கள் என்று சோதி­ட­ரிடம் கேட்டால், அவரும் இது சரி­யா­னதா, இயற்­கை­யோடு இயைந்­ததா என்­ப­தை­யெல்லாம் யோசிக்­காமல் அப்­போ­தைய காலக்­கட்­டத்தில் பல­மா­ன­தொரு லக்­கின அடித்­தளம், இராசி மற்றும் கேந்­திர திரி­கோ­ணங்­களில் முக்­கிய கிர­கங்­களின் சஞ்­சாரம் போன்­ற­வை­களை பஞ்­சாங்­கத்தின் மூலம் அவ­தா­னித்து முடிந்­த­வரை ஒரு நல்ல நாள், நேரத்தை குறித்து கொடுத்து விடு­கிறார். அதன்­படி பெற்­றோரும் அறுவை மூலம் பிள்­ளையைப் பிறக்க வைத்து விட்டு எதிர்­கா­லத்­துக்­கான ஒரு வீர­னையோ அன்றி வீராங்­க­னை­யையோ பெற்­றெ­டுத்து விட்­ட­தாகக் கூறி பெரு­மிதம் கொள்­கின்­றனர். 

horoscope.jpg

ஆனால் இது­வொரு சரி­யான பிறப்­பாக அமை­யாது. அதற்­கான வேளை வந்து வயிறு நொந்து தானா­கவே பிர­ச­விப்­ப­தற்கும் உரிய காலத்­திற்கு முன்னால் வலியே இல்­லாமல் அல்­லது வேதனை தெரி­யாமல் அறுவை மூலம் சிசுவை வெளியே கொணர்­வ­தற்கும் அதிக வித்­தி­யா­ச­முண்டு எனவும் இயற்­கையின் நிய­தியை மீறி மனி­தனால் செய்­யப்­படும் எந்த வெளிப்­பாட்­டுக்கும் ஜென­னத்­தோடு மர­ணத்­திற்கும் கூட எந்­த­வித  சாஸ்­திர சம்­பி­ர­தா­யமும் கிடை­யா­தெ­னவும் இந்­தி­யாவின் பிர­பல ஜோதிட மேதை­யான வழுத்தூர் கோபால சர்மா அங்­குள்ள பிர­பல சோதிட சஞ்­சி­கை­யான Astological Magazine இல் அண்­மையில் எழு­தி­யுள்ள ஆய்வுக் கட்­டு­ரை­யொன்றில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 

இது எதனை ஒத்­த­தாக இருக்­கி­ற­தென்றால், இயற்­கை­யாக ஒருவர் இறப்­ப­தற்கும் செயற்­கை­யாக தற்­கொலை செய்து கொண்டு தன்­னு­யிரை மாய்த்துக் கொள்­வ­தற்­கு­முள்ள வேறு­பா­டா­கவே இத­னையும் பார்க்க வேண்­டி­யுள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பி­டு­கின்றார். செயற்­கை­யாக தற்­கொலை மூலம் தன்­னைத்­தானே மாய்த்துக் கொள்­பவன், இயற்­கை­யாக அவன் எப்­போது இறக்க வேண்­டு­மென்ற கால நேரம் விதியால் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றதோ அன்றே அந்த உயிரின் அல்­லது ஆன்­மாவின் மறு­பி­றப்­புக்­கான காலம் அல்­லது வாழ்க்கை ஆரம்­பிப்­ப­தாக அதற்­கான சில உதா­ர­ணங்­க­ளையும் எடுத்­துக்­காட்டி அவர் அக்­கட்­டு­ரையில் தெளி­வாகக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். எனவே செயற்­கை­யாக நாம் தீர்­மா­னிக்­கிற ஒரு மனி­தனின் பிறப்­புக்கும் அதனை வைத்து செய்­யப்­ப­டு­கிற சாதகக் கணிப்­புக்கும் யாதொரு சம்­பந்­தமும் இல்­லை­யென்­பது அக்­கட்­டு­ரை­யா­ளரின் தீர்க்­க­மான கருத்­தாக இருக்­கி­றது. 

இதன்­மூலம் அவர் குறிப்­பி­டு­வது யாதெனில் விதி­வந்து அதா­வது வேளை வந்து அது அது சம்­ப­விக்கும் வரை அதனை  தன் போக்கில் விட்­டு­விட வேண்­டு­மென்­பதே. இன்­னொ­ரு­வனின் விதியைத் தீர்­மா­னிக்க நமக்கு எந்­த­வி­தத்­திலும் உரி­மை­யில்லை. இறப்பும் பிறப்பும் அந்த இறைவன் கைகளில் எப்­போது நிகழ்­கி­றதோ அப்­போது கண்­டு­கொள்ள வேண்­டி­யது தான் என்­பதே அவர் கூறும் முடி­வாக இருக்­கி­றது. ஒரு குழந்­தை­யா­னது எப்­போது எந்­நாளில், எத்­தனை மணி, நிமிட, விநா­டி­களில் பிறக்க வேண்­டு­மென்­பது யாருக்கும் தெரி­யாது. வைத்­தி­யர்கள் குறிப்­பிட்டுச்  சொல்­வ­தெல்லாம் வெறும் உத்­தேசம் தான். அது­போல ஒருவர் எப்­போது இறக்­கப்­போ­கிறார் என்­பதும் தெரி­யாது. 

தற்­கொலை செய்து கொள்­வோ­ருக்குக் கூட அவ­ரது சாவு பற்றி அவ­ருக்கே நிச்­ச­ய­மி­ராது. தற்­செ­ய­லாக அவர் காப்­பாற்­றப்­பட்டு விட்டால் அவரால்  அவ­ரது இறப்­பைக்­கூட சரி­வரச் செய்ய முடி­யாத கையா­லா­காத்­தனம் வெளிப்­பட்டு விடும். 

இயற்­கையைக் கைய­கப்­ப­டுத்­தி­விட்­ட­தாகக் கூறி மனி­தர்கள் தம்­மிஷ்­டப்­ப­டியே காடு­களை அழித்தும், பூமியைக் குடைந்தும் மலை­களை தகர்த்தும் நீர் நிலை­களை மூடி கட்­டி­டங்கள் அமைத்தும் வன­வி­லங்­கு­களை அழித்தும் இடம்­பெ­யர வைத்தும் இயற்­கையின் சம­நி­லையைச் சீர்­கு­லைக்க முனை­கின்ற போது, பொறுத்­தது போது­மென்று பொங்­கி­யெ­ழுந்து அது நிகழ்த்தும் அனர்த்­தங்­களைக் கண்­ணாரக் கண்டும் அவற்றில் சிக்கி அவஸ்தைப் பட்டும் நமக்குப் புத்தி வரா­தது நமது துர­திர்ஷ்­டமே!

பிறப்பு என்­பது அவ­ரவர் பூர்­வ­ஜென்ம வினை­க­ளுக்­கான சம்­பா­வனை. அதனை ஒவ்­வொரு கால கட்­டங்­க­ளிலும் இன்­ப­மா­கவும் துன்­ப­மா­கவும் அனு­ப­வித்தே தீர­வேண்­டு­மென்­பது விதி­யாகும். அதனை நாம் நல்­ல­நேரம், கிர­க­நிலை பார்த்து பூமியில் பிறக்க வைப்­பதன் மூலம் நம்மால் மாற்­றி­ய­மைத்து விட முடி­யாது. அது இறை­வனின் சித்­தத்தை மீறு­வ­தற்குச் சம­மாகும். 

“பவிஷ்ய புராணம்” என்­றொரு இதி­காசம் சுமார் ஆறா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முன்னால் வேத­வி­யாசர் என்ற மாமு­னி­வரால் எழு­தப்­பட்­டது. இந்­தி­யாவில் எந்த ஆட்சி எவ்­வ­ளவு காலம் நிகழும் என்­பது பற்றி அச்­சு­வ­டி­களில் அப்­போதே எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது. வட திசை நாடு­க­ளி­லி­ருந்து மொக­லா­யர்கள் படை­யெ­டுத்து வந்து இந்­தி­யாவை ஆளப்­போ­வ­தையும் அதன் பின்னர் ஆங்­கி­லே­யர்கள் வியா­பார நோக்கில் வந்து படிப்­ப­டி­யாக முழு நாட்­டையும் கைப்­பற்றி மக்­களை பல வகை­யாலும் வருத்தி வரி­வ­சூ­லித்து பல்­லாண்­டு காலம் ஆட்சி நடத்­தப்­போ­வ­தையும் பற்றி ஏற்­க­னவே அந் நூற் சுவ­டி­களில் தீர்க்க தரி­சனம் கூறப்­பட்­டுள்­ளது. 

“ஸ்வேத துவீ­பத்­தி­லி­ருந்து (ஐரோப்பா) கோ (பசு) மாமிசம் சாப்­பிடும் மிலேச்­சர்கள் (ஆங்­கி­லே­யர்கள்) வந்து, சாஸ்­தி­ரத்தில் கூறப்­பட்­டுள்ள உண்­மை­களை மறைத்து மக்­களை வேறு பாதையில் இழுத்துச் செல்ல பார­தத்தை ஆட்சி செய்­வார்கள். அவர்­க­ளுக்கு ஒரு ராணி (விக­டா­வதி நாம்  நே) விக்­டோ­ரியா மக­ரா­ணி­யென்று பெயர் எட்­டுப்பேர் கொண்ட சபையைப் போட்டு ராஜ்ய பரி­பா­லனம் செய்­வார்கள். (பிரிட்­டிஷார் எண்மர் கொண்ட Vysroy Executive Council அமைத்து ஆட்சி செய்­தது வர­லாறு) இவ்­விதம் முழு­வதும் சுலோ­கங்­க­ளா­கவே சொல்­லப்­படும் அப்­பு­ரா­ணத்தில் ஓரி­டத்தில் தற்­கொலை செய்து கொள்­கின்­ற­வ­னுக்கு உட­ன­டி­யான தீர்ப்பு கிடை­யா­தெ­னவும் இயற்­கை­யி­லேயே என்று அவன் இறக்க விதிக்­கப்­பட்­டி­ருந்­ததோ, அன்றே அவ­னது பாவ புண்­ணி­யங்­களின் பிர­தி­ப­ல­னாக மறு­பி­றப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வா­னென்றும் கூறும் சுலோ­க­மொன்­று­முண்டு. 

அப்­பு­ரா­ணத்தில் கூறப்­பட்­டுள்ள சம்­ப­வங்கள் பின்­னாளில் நூற்­றுக்கு நூறு­வீதம் நடந்­தே­றி­யுள்­ளதை அவ­தா­னிக்கும் போது அதனை புரா­ணப்­பு­ளுகு என்றும் தள்­ளி­விட முடி­யாது. மகா­பா­ர­த­மென்ற மகா­கா­வி­யத்தை நமக்கு அருளிச் சென்­ற­வரும் இதே­வி­யாசர் தான். அப்­ப­டி­யானால் அதில் வரும் கிருஷ்­ண­ப­ர­மாத்­மாவின் அவ­தா­ரத்தைக் கூறும் மகா­பா­க­வ­தமும் பக­வத்­கீ­தையும் கூட பொய்­யாகி விடு­மல்­லவா?

ஆனாலும் ஒரு விடயம்; தாயின் வயிற்­றி­லி­ருந்து சேயை அகற்­றா­விடில் இரு­வ­ரி­னதும் உயி­ருக்கே ஆபத்து ஏற்­ப­ட­லா­மென்ற ஓர் இக்­கட்­டான நிலையில் அறுவை சிகிச்சை மூலம் சிசு வெளிக்­கொ­ண­ரப்­ப­டு­வது வேறு விடயம். அதற்கும், நாள், நட்­சத்­திரம், நேரம் பார்த்து சிசே­ரியன் மூலம் சிசு வெளிக்­கொ­ண­ரப்­ப­டு­வ­தற்கும்  வித்­தி­யா­ச­முண்டு. சிசே­ரியன் சிசு­வுக்கு சாதகம் எழு­து­வது மாத்­தி­ரமே சாஸ்­திர விரோ­த­மா­ன­தாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது. 

எப்­ப­டித்தான் கால நிலையை அவ­தா­னித்து பிறக்க வைத்­தாலும், தலை­யெ­ழுத்­துப்­படி எப்­போது பிறக்க வேண்­டு­மென்­பது விதியோ அந்தத் திக­திக்­குள்ள கிர­க­

நி­லைப்­ப­டிதான் வாழ்க்கை நடக்கும். எத்­த­கைய பல­மான கிரக சஞ்­சா­ரத்தை வைத்து பிறப்பை நிச்­ச­யித்­தாலும் கடை­சியில் இவ்­வி­தமே நடக்கும். பிறக்க வைக்கும் சுப­யோக  சுப தினத்திற்கும்  நடைமுறை வாழ்க்கைக்குமிடையே தொடர்பிராது. 

 எல்லாமே பொய் மாயம் என்று தோன்றும். ஒரு சிசுவினுடைய உண்மையான பிறப்புக்காலம் எப்போதென்று கண்டுபிடிப்பது சோதிடத்தில் தேர்ந்த ஞானமும் அனுபவமும் உள்ளவர்களுக்கே சாத்தியமானது. அதுவும் அக்குழந்தையானது பிறந்து, வளர்ந்து, வாழ்க்கை நடத்துகிறபோது அதன் இயல்புகளையும் நடவடிக்கைகளையும் சோதனை சாதனைகளையும் வரிசை கிரமமாக அவதானித்தே அவர்களால் கண்டுபிடிக்க முடியும். ஆனாலும் சோதிடம் என்பது பிறப்பின் கிரக நிலைகளை வைத்து வாழ்வின் போக்கை நிர்ணயிப்பதற்கே; எதிர்வு கூறுவதற்கே தவிர பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த பிறகு அவருக்குரிய வாழ்வே இதுதானென்று தீர்மானிப்பதற்கல்ல என்று சோதிட மேதை கோபால சர்மா தமது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   

http://www.virakesari.lk/article/21959

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிசேரியனோ, நோர்மலா, பிள்ளை பிறக்கும் நேரம் வந்தால் தான் பிறக்கும். இல்லாவிடில் ஏதாவது தடை வந்து தாமதமாக்கும். ஆஸ்பத்திரிக்கு வரும் டாக்குத்தர் கார் கூட பழுதாகியாவது லேட்டாவார், அல்லது ஒரு எமர்ஜன்சி கேஸ் என்று வேறு ஒரு விடயம் வந்து தாமதமாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

சிசேரியனோ, நோர்மலா, பிள்ளை பிறக்கும் நேரம் வந்தால் தான் பிறக்கும். இல்லாவிடில் ஏதாவது தடை வந்து தாமதமாக்கும். ஆஸ்பத்திரிக்கு வரும் டாக்குத்தர் கார் கூட பழுதாகியாவது லேட்டாவார், அல்லது ஒரு எமர்ஜன்சி கேஸ் என்று வேறு ஒரு விடயம் வந்து தாமதமாக்கும்.

நாதம்ஸ் எங்க இருக்கிறியள் நல்ல நாளீல் கூட பிள்ளையை வெட்டி எடுத்த சம்பாம் கேள்விப்படலையா நீங்கள் அதாவது ஒரு மாதம் இருக்கும் தருவாயில் கூட நல்ல நாள் என சிலரால் கணித்து சொல்லப்படும் நாட்களில்  இந்த சிசுக்களை வெட்டு மூலம்  எடுத்திருக்கிறார்கள் நிறையவே ஆனால்  அந்தக்குழந்தைகளும்  ஆரோக்கியமாக இருக்கிறது ஆனால் அந்த நாள் வேலை சிலநேரம்  பிழைத்தும் விடுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தனி ஒருவன் said:

நாதம்ஸ் எங்க இருக்கிறியள் நல்ல நாளீல் கூட பிள்ளையை வெட்டி எடுத்த சம்பாம் கேள்விப்படலையா நீங்கள் அதாவது ஒரு மாதம் இருக்கும் தருவாயில் கூட நல்ல நாள் என சிலரால் கணித்து சொல்லப்படும் நாட்களில்  இந்த சிசுக்களை வெட்டு மூலம்  எடுத்திருக்கிறார்கள் நிறையவே ஆனால்  அந்தக்குழந்தைகளும்  ஆரோக்கியமாக இருக்கிறது ஆனால் அந்த நாள் வேலை சிலநேரம்  பிழைத்தும் விடுகிறது 

அதைத்தான் சொல்கிறேன் முனிவர்.

அவை நல்ல நாள் என்று பார்த்தாலும், அதுதான் அந்த குழந்தை பிறக்கும் நேரம் என விதிக்கப் பட்ட நேரம்....

ஆட்டோவில், ஆம்புலன்ஸில், விமானங்களில் பிள்ளைகள் 'தமக்குரிய' நேரங்களில் பிறக்கின்றன.

கோழி முதல் வந்ததா, முட்டை முதல் வந்ததா என்பது போல, சாத்திரம் எல்லாம் பிறகு. தலை எழுத்தினை, நேரம் பார்த்து வெட்டி எடுத்து மாத்துவது, இறையயையே ஏமாத்துவது போன்றது முனிவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அதைத்தான் சொல்கிறேன் முனிவர்.

அவை நல்ல நாள் என்று பார்த்தாலும், அதுதான் அந்த குழந்தை பிறக்கும் நேரம் என விதிக்கப் பட்ட நேரம்....

ஆட்டோவில், ஆம்புலன்ஸில், விமானங்களில் பிள்ளைகள் 'தமக்குரிய' நேரங்களில் பிறக்கின்றன.

கோழி முதல் வந்ததா, முட்டை முதல் வந்ததா என்பது போல, சாத்திரம் எல்லாம் பிறகு. தலை எழுத்தினை, நேரம் பார்த்து வெட்டி எடுத்து மாத்துவது, இறையயையே ஏமாத்துவது போன்றது முனிவர்.

உன்மைதான் ஆனால் இன்று சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமையளிக்கிறார்கள் எல்லா வீட்டிலும் ஒன்று இரண்டு இல்லாவிட்டாலும் கல்யாணம் என்றால் குறிப்பு முதல் பொன் உருக்குதல் வரைக்கும் ஐயரை நாடாவிட்டால் கல்யாணம் ?? கேள்விக்குறிதான் அப்படி எதுவும்  சில மறை சம்பவங்கள் நடந்துவிட்டால் பெரியோர் சொல்வதை கேட்பதில்லை என்று சொல்லுவார்கள்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனி ஒருவன் said:

உன்மைதான் ஆனால் இன்று சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமையளிக்கிறார்கள் எல்லா வீட்டிலும் ஒன்று இரண்டு இல்லாவிட்டாலும் கல்யாணம் என்றால் குறிப்பு முதல் பொன் உருக்குதல் வரைக்கும் ஐயரை நாடாவிட்டால் கல்யாணம் ?? கேள்விக்குறிதான் அப்படி எதுவும்  சில மறை சம்பவங்கள் நடந்துவிட்டால் பெரியோர் சொல்வதை கேட்பதில்லை என்று சொல்லுவார்கள்  

 

இங்கே அய்யர் மார் அப்பாடக்கர்.

நீங்கள் போய் இருந்தோன்ன... அவர்களுக்கு விளங்கிவிடும்.... என்ன லெவெலுள்ள சாத்திரம் பார்ப்பீர்கள் எண்டு.

பழசுகள்... நூல் பிடித்துக் கொண்டு நின்றால்.... கிழமை நாளில் (நல்ல நாளில்) கலியாண நாள்.

நூல் பிடிக்காவிடில், கூடாத நாள் என்றாலும், சனி அல்லது ஞாயிறு.... பொது நாள்... அதெல்லாம் அமோகமா செய்யலாம் எண்டு சொல்லிவிடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இங்கே அய்யர் மார் அப்பாடக்கர்.

நீங்கள் போய் இருந்தோன்ன... அவர்களுக்கு விளங்கிவிடும்.... என்ன லெவெலுள்ள சாத்திரம் பார்ப்பீர்கள் எண்டு.

பழசுகள்... நூல் பிடித்துக் கொண்டு நின்றால்.... கிழமை நாளில் (நல்ல நாளில்) கலியாண நாள்.

நூல் பிடிக்காவிடில், கூடாத நாள் என்றாலும், சனி அல்லது ஞாயிறு.... பொது நாள்... அதெல்லாம் அமோகமா செய்யலாம் எண்டு சொல்லிவிடுவினம்.

அவர்களின் தொழில் ரகசியம் அப்படி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மை போல தான் இருக்குது...நானும் சிசேரியன் மூலம் தான் பிறந்தேன்...இது வரைக்கும் ஒருத்தர் கூட என்ட‌ சாதகத்தை சரியாய் கணிக்கவில்லை...இல்லா விட்டால் என்னை வயித்தில் இருந்து வெட்டி எடுத்த நேரம் சாதகத்தில் பிழையாய் எழுதப்பட்டு இருக்குமோ:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வீட்டிலைதான் விடியப்பறம் பிறந்தனானெண்டு என்ரை மதர் அடிக்கடி சொல்லுவா.....நேரமும் சரியாத்தெரியாதாம்....கிழக்கிலை நிக்கிற வெள்ளியை வைச்சுத்தான் ஒரு குத்துமதிப்பிலை நேரம் குறிச்சு சாதகம் எழுதினதாம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

நான் வீட்டிலைதான் விடியப்பறம் பிறந்தனானெண்டு என்ரை மதர் அடிக்கடி சொல்லுவா.....நேரமும் சரியாத்தெரியாதாம்....கிழக்கிலை நிக்கிற வெள்ளியை வைச்சுத்தான் ஒரு குத்துமதிப்பிலை நேரம் குறிச்சு சாதகம் எழுதினதாம். tw_blush:

அந்த சாதகத்தை பற்றி  கொஞ்சம் தெளிவா சொல்லுங்களன்  அந்த பரிமளம் ஏன் கை விட்டவ  ?? இந்த சாதகத்தால ஏதும் பிரச்சினை வந்ததோ

Link to comment
Share on other sites

நானும்தான் ஒரு நண்பனின் ஆக்கினையால அவனுக்கு சாத்திரம் பாக்க சேர்ந்து போயிருந்தேன். இடம் வேண்டாமே 

அவனுக்கு சாத்திரியார் அவிக்க அவிக்க நானும் கடுப்பாகி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தன். சாத்திரியும் நான் தம் அடிக்க போனதாக நம்பீட்டார். அப்புறம் வந்த நண்பனின் புகழ்ச்சி தாங்க முடியாமல் நானும் சாத்திரம் பாக்க போனேன். 

எனக்கும் கனக்க உளறினவர். ஏதாவது மனதில் இருந்தால் கேளுமென்றார். நானும் ஒரு கேள்விதான் கேட்டன். கேள்வி // ஐயா ஏஜென்சிக்கு காசு கட்டினான் கனகாலமா வெய்டிங் வெளிநாடு போகலாமா என்பதுதான் அது. லாகுவாக கையப் பார்த்தவர் அதுக்கு கொடுப்பனவே இல்லை என்றார். இதுவரை நம்பின நண்பனுக்கு தூக்கி வாரிப்போட்டது.

"ueurgdsdsgbch யுக்புக் எச்க்சே உலகக் சுக " எண்டு அவன் திட்ட, சாத்திரியார் "ப்ட்கிஹ் ஜ்க்ப்செவ்ஹ்ஜ் ஹக்" எண்டு கத்த அந்த இடமே களபேரமாகினது. 

அப்புறம் என்ன நடையை கட்டினதுதான் + இரு நூறு ரூபா மிச்சம் 

இந்த முட்டாளுக்காக சாத்திர சம்பிரதாயம் தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் சரியான ஆளை தெரிவது கல்லில நார் உரிப்பது போன்றது. உரித்தாலும் கிடைக்காது.

கிடைத்தால் சந்தோசம் :grin:

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.