Jump to content

விம்பிள்டன்: 8வது முறையாக பெடரர் சாம்பியன்


Recommended Posts

ரோஜர் பெடரர் 8-ஆவது விம்பிள்டன் வரலாறு படைக்க வாய்ப்பு

  • 4
ரோஜர் பெடரர் 8வது விம்பிள்டன் பெற்று வரலாறு படைக்க வாய்ப்புபடத்தின் காப்புரிமைJULIAN FINNEY/GETTY IMAGES

இன்று ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ள விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றிபெற்றால், விம்பிள்டன் வரலாற்றில் 8 முறை இந்த கோப்பை வென்ற முதல் ஆடவர் என்ற பெருமையைப் பெறுவார்.

மரின் சிலிக்கிற்கு எதிராக இன்று மோதும் ரோஜர் பெடரர் விளையாடும் 11வது விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில்,வெற்றிபெற்றால் 2000-ஆவது ஆண்டு பீட் சாம்ப்ராஸூம், 1889 ஆம் ஆண்டு வில்லியம்ஸ் ரென்ஷாவும் படைத்திருக்கும் சாதனையை முடியடித்து வரலாறு படைக்கலாம்.

ரோஜர் பெடரர் 8வது விம்பிள்டன் பெற்று வரலாறு படைக்க வாய்ப்புபடத்தின் காப்புரிமைGARETH FULLER - POOL/GETTY IMAGES

கடந்த ஆண்டு ரோஜர் பெடரருக்கு எதிரான காலிறுதிப் போட்டியில், 28 வயதான சிலிக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மூன்று முறை நெருங்கி வந்தது. ஆனால், இறுதியில், கடைசி மூன்று செட்களிலும் வெற்றி பெற்று ரோஜர் போட்டியில் வென்றார்.

2014 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை வென்றதோடு, விம்பிள்டன் சாதனையும் சேரும் என்று சிலிக் நம்பிக்கையுடன் இன்று களத்தில் இறங்கவுள்ளார்.

ரோஜர் பெடரர் 8வது விம்பிள்டன் பெற்று வரலாறு படைக்க வாய்ப்புபடத்தின் காப்புரிமைGLYN KIRK/AFP/GETTY IMAGES

“விம்பிள்டன் டென்னிஸில் வலாறு படைப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது” என்று ரோஜர் பெடரர் தெரிவித்திருக்கிறார்.

"இது மிகப் பெரிய விடயம். இந்தப் போட்டியை நாம் மிகவும் விரும்புகிறேன். டென்னிஸ் வீரராக என்னுடைய கனவுகள் அனைத்தும் நனவாகியுள்ளன. 8வது விம்பிள்டன் கோப்பையை வெல்வதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு நேரம் மிகவும் நெருங்கி வந்திருப்பது சிறந்த உணர்வை தருகிறது" என்று ரோஜர் பெடரர் தெரிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்திற்கு பிறகு, கலப்பு இரட்டையர் டென்னிஸ் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.

ரோஜர் பெடரர் 8வது விம்பிள்டன் பெற்று வரலாறு படைக்க வாய்ப்புபடத்தின் காப்புரிமைJULIAN FINNEY/GETTY IMAGES

இதில் ஜமியே மர்ரி மற்றும் சுவிட்சர்லாந்தின் மார்டீனா ஹிங்கிஸ் ஜோடி தற்போதைய சம்பியன்கள் ஹீத்தர் வாட்சன் மற்றும் பின்லாந்தை சேர்ந்த ஹென்ரி கோன்டினென் ஜோடியோடு மோதுகின்றது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்றதன் மூலம் தன்னுடைய 18-ஆவது கிராண்ட்ஸ்லாம் வெல்வதற்கு ரோஜர் பெடரர் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன் பின்னர் ஆறு மாதத்தில் 19வது கிராண்ட்ஸலாம் வெல்லும் வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார்.

http://www.bbc.com/tamil/sport-40623153?ocid=socialflow_facebook

 

விம்பிள்டன்: பெடரர் சாம்பியன்

விம்பிள்டன்: 8வது முறையாக பெடரர் சாம்பியன்

20:36
 
விம்பிள்டன், 8வது முறை, பெடரர், சாம்பியன்
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார்.


லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-5' சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 6வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரின் சிலிச் மோதினர்.ஒரு மணி நேரம், 41 நிமிடம் நீடித்த போட்டியில், அபாரமாக ஆடிய பெடரர் 6-4, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றார். தவிர இவர், விம்பிள்டனில் 5 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடைசியாக 2012ல் கோப்பை வென்றிருந்தார். 


இது, விம்பிள்டனில் பெடரர் வென்ற 8வது (2003-2007, 2009, 2012, 2017) பட்டம். இதன்மூலம், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் பட்டியலில் பிரிட்டனின் வில்லியம் ரென்ஷா (7 முறை, 1881-1886, 1889), அமெரிக்காவின் பீட் சாம்பிராஸ் (7 முறை, 1993-1995, 1997-2000) ஆகியோரை முந்தி முதலிடம் பிடித்தார். இதன்மூலம் பெடரர், தனது 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். தவிர, அதிக வயதில் (35) விம்பிள்டன் பட்டம் வென்ற வீரரானார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1813438

Link to comment
Share on other sites

சிலிச்சை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி பெடரர் சாதனை

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிலிச்சை வீழ்த்தி பெடரர் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்

 
சிலிச்சை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி பெடரர் சாதனை
 
 
லண்டன்:
 
இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
 
இப்போட்டியில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் 7-ம் நிலை வீரரான குரோஷியாவின் சிலிச்சும் மோதினர். இது பெடரர் பங்குபெறும் 11-வது விம்பிள்டன் இறுதி போட்டியாகும்.
201707162049568833_mensfinalwimbledon-fe
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். முதல் செட்டில் அடைந்த தோல்வியில் இருந்து சிலிச் மீள்வதற்குள் அதிரடியாக விளையாடிய பெடரர் அடுத்த இரண்டு செட்களையும் 6-1, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
 
இது பெடரர் வெல்லும் எட்டாவது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம் விம்பிள்டனை 8 முறை கைப்பற்றி ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அத்துடன் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/16204955/1096682/federer-wins-wimbledon-title-for-8th-time.vpf

Link to comment
Share on other sites

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் சாதிப்பேன் என நினைக்கவே இல்லை: மனம் திறக்கும் ரோஜர்

பெடரர்

விம்பிள்டன் கோப்பையை முத்தமிடும் ரோஜர் பெடரர்.
படம்: கெட்டி இமேஜஸ் விம்பிள்டன் கோப்பையை முத்தமிடும் ரோஜர் பெடரர்.
 
 

விம்பிள்டன் டென்னிஸில் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இந்த தொடரில் தான் ஒருபோதும் ஜாம்பவானாக மாறுவேன் என்று நினைத்ததில்லை என கூறியுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஒரு செட்டை கூட இழக்காமல் 6-3, 6-1, 6-4 என்ற கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 1976-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு செட்டை கூட இழக்காமல் கோப்பையை வெல்லும் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் இந்த சாதனையை சுவீடனின் ஜோர்ன் போர்க் நிகழ்த்தியிருந்தார். பெடரர் வெல்லும் 8-வது விம்பிள்டன் பட்டம் இதுவாகும்.

இதன் மூலம் விம்பிள்டனில் 7 முறை பட்டங்கள் வென்றிருந்த இங்கிலாந்தின் வில்லியம் ரென்ஷா, அமெரிக்காவின் பீட் சாம்பிராஸ் ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளார். 8-வது முறையாக மகுடம் சூடியதன் மூலம் விம்பிள்டன் ஜாம்பவானாக உருவெடுத்துள்ளார் பெடரர். ஒட்டுமொத்தமாக பெடரர் வென்றுள்ள 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். அவர் ஆஸ்திரேலிய ஓபனில் 5 முறையும், பிரெஞ்சு ஓபனில் ஒரு முறையும், அமெரிக்க ஓபனில் 5 முறையும் கோப்பையை வென்றுள்ளார். இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் அவர் முதலிடம் வகிக்கிறார்.

மேலும் அதிக வயதில் விம்பிள்டன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்னர் அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ் 32 வயதில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை 35 வயதில் பட்டம் வென்று தகர்த்துள்ளார் பெடரர். பட்டம் வென்ற பெடரர் கோப்பையுடன் ரூ.18 கோடி பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றார். விம்பிள்டனில் பட்டம் வென்றதன் மூலம் உலகத் தரவரிசை பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தையும் பிடித்துள்ளார் பெடரர்.

கடந்த 16 வருடங்களுக்கு முன்பு விம்பிள்டனில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அப்போதைய டென்னிஸ் உலகில் கொடி கட்டிப் பறந்த அமெரிக்காவின் பீட் சாம்பிரஸை 7-6, 5-7, 6-4 6-7,7-5 என வீழ்த்தி தன்னையும் ஒரு நட்சத்திர வீரராக இந்த உலகுக்கு அறிப்படுத்திக் கொண்டவர்தான் ரோஜர் பெடரர். எனினும் அந்த தொடரில் அவரால் கால் இறுதியை தாண்ட முடியவில்லை. அடுத்த ஆண்டில் முதல் சுற்றுடன் வெளியேறிய போதும் அவர் மனம் தளரவில்லை. 2003-ம் ஆண்டு அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் விம்பிள்டன் கோப்பையை கைகளில் ஏந்தினார். இன்று பீட் சாம்பிரஸின் சாதனையை முறியடித்துள்ளதுடன் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று 35 வயதிலும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கி உள்ளார்.

விம்பிள்டனில் படைத்த சாதனை பற்றி ரோஜர் பெடரர் கூறும்போது, பீட் சாம்பிரஸின் சாதனையை விம்பிள்டனில் முறியடிப்பேன் என நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்தேன். தற்போது வாய்ப்பு கிடைத்ததால் பட்டம் வென்றுள்ளேன். 8 வெற்றிகள் என்பது எப்போதும் அடையக்கூடிய இலக்கு அல்ல. அதை நிகழ்த்த வேண்டுமானால் நீங்கள் அதிக அளவிலான திறமையை கொண்டிருக்க வேண்டும் மற்றும் 3 வயதில் இருந்தே பெற்றோர், பயிற்சியாளரால் விளையாட்டை நோக்கி தள்ளப்பட வேண்டும். ஆனால் நான் அப்படி போன்ற குழந்தையாக இருந்தது இல்லை.

இந்த ஆண்டு எப்படி சென்று கொண்டிருக்கிறது, எவ்வளவு நன்றாக உணர்கிறேன், கடினமான சூழ்நிலைகளை எப்படி நிர்வகிக்கிறேன், எனது ஒவ்வொரு நாளின் ஆட்டத்தின் நிலை என அனைத்தையும் நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. மீண்டும் சிறந்த நிலையை ஒருநாள் அடைவேன் என எனக்கு தெரியும். ஆனால் இந்த நிலையை எட்டுவேன் என்று நினைக்கவில்லை. இந்த ஆண்டில் இரு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வெல்வேன் என நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். அப்போது எல்லோரும் சிரித்தார்கள். நான் கூறியதை மக்கள் நம்பவில்லை. அடுத்து என்ன நடைபெறும் என்பது யாருக்குமே தெரியாது. மீண்டும் நான் இங்கு விளையாடுவேன். விம்பிள்டனில் இது எனது கடைசி தொடராக இருக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-டென்னிஸ்-போட்டிகளில்-சாதிப்பேன்-என-நினைக்கவே-இல்லை-மனம்-திறக்கும்-ரோஜர்-பெடரர்/article9773836.ece?homepage=true

Link to comment
Share on other sites

ரோஜர் ஃபெடரரை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது? #RogerFederer19 #Wimbledon

 
 

‘டென்னிஸின் கடவுள் உங்கள் முன்வந்து, ரோஜர் ஃபெடரரின் ஒரு பலவீனத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் எதைச் சொல்வீர்கள்?’ - விம்பிள்டன் அரையிறுதி முடிந்ததும், செக் குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச்சிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தார் ஒரு நிருபர். ‘உங்கள் கேள்வியே தவறு. ஃபெடரர்தான், டென்னிஸின் கடவுள்’ - என்றார் பெர்டிச். அப்படியா?... 19 கிராண்ட் ஸ்லாம். அதில் 8 விம்பிள்டன். இந்த சீசனில் மட்டும் இரண்டு கிராண்ட் ஸ்லாம். அதுவும் 35 வயதில். சந்தேகமே இல்லை. Federer is GOAT. Greatest of All Time. டென்னிஸில் மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த 10 விளையாட்டு வீரர்களில் ஃபெடரர் முக்கியமானவர். Roger Federer the greatest-ever athlete across all sports. மறுப்பதற்கில்லை. 

Roger Federer

டென்னிஸ் எலைட் பிரிவினருக்கான கேம். தரமான ராக்கெட்டின் குறைந்தபட்ச விலையே 10,000 ரூபாயைத் தாண்டும். சோத்துக்குச் செத்தவன் அந்த ராக்கெட்டைத் தொட முடியாது; டென்னிஸைத் தன் ஃப்ரொபஷனாக தேர்ந்தெடுக்க முடியாது. நேஷனல் சாம்பியனாகி, ரயில்வேயில் அல்லது ராணுவத்தில் வேலைக்குச் சேர விரும்பும் எந்த ஒரு விளையாட்டு வீரனும் டென்னிஸ் பக்கம் தலைவைத்துப் படுக்க முடியாது. டென்னிஸ் இந்தியர்களுக்கு அந்நியமான விளையாட்டு. ஆனால், ரோஜர் ஃபெடரர் அந்நியர் அல்ல. இந்தியர்களில் அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற லியாண்டர் பயஸை விட, மகேஷ் பூபதியை விட, சானியா மிர்ஸாவை விட, ஃபெடரருக்கு இங்கு ரசிகர்கள் அதிகம். இந்தியாவில் மட்டுமல்ல, ஸ்விட்சர்லாந்தில் மட்டுமல்ல, உலகெங்கும். இதற்கு முன் வேறு எந்த டென்னிஸ் வீரருக்கும் இப்படியொரு ரசிகர் வட்டம் இருந்ததில்லை. இனி இருக்குமா? சந்தேகமே.

அதுசரி, ஃபெடரர் ஆட்டத்தில் மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்? விளையாட்டைப் பார்த்து ரசித்தல் என்பது வாழ்வின் சுகமான விசித்திரங்களில் ஒன்று. ஏனெனில், விளையாட்டு என்பது முழுக்க முழுக்க உடல் திறனின் வெளிப்பாடு. அது அழகை வெளிப்படுத்த வேண்டும் என்ற மையக் கோட்பாடுடைய கலை அல்ல. நிர்பந்தம் இல்லாவிடினும் விளையாட்டிற்கு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.  நாம் அதை ரசித்துக்கொண்டேதான் இருக்கிறோம். சச்சினின் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், கோலியின் கவர் ட்ரைவ், மெஸ்சியின் டிரிபிளிங், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஹெட்டர் கோல், முகமது அலியின் Phantom punch என, ரிசல்ட்டுக்கு அப்பாற்பட்டு சிலவற்றை, சிலரை ரசித்துக்கொண்டே இருக்கிறோம். அதுவும் திரும்பத் திரும்ப...

Roger Federer

விளையாட்டில் மட்டுமே மில்லி மீட்டர், இஞ்ச், மைக்ரோ செகண்ட் என சின்னச்சின்ன விஷயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன; அது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான விளையாட்டுகளின் முடிவுகள் இஞ்ச், மைக்ரோ செகண்ட்களில் தீர்மானிக்கப்படுபவை. அந்த இக்கட்டில், அந்த நெருக்கடியில், அந்த தவிப்பில் அழகையும் நளினத்தையும் வெளிப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத விஷயம். அந்த சமயத்தில்தான் விதிவிலக்காக, தன்னிசையாக, அழகைக் கசியும் விளையாட்டு வீரர்களின் ஆட்டம் நம்மை பன்மடங்கு ஈர்க்கிறது. உதாரணத்துக்கு ஒரு ரோஜர் ஃபெடரரைப் போல. அல்ல. ஒரே ரோஜர் ஃபெடரரைப் போல.

ஃபெடரர் ஆட்டம் அழகு என்பதைக் காட்டிலும் அழகின் வடிவே அவரது ஆட்டம் என்பதே நிதர்சனம். அவரைத் தவிர அவருக்கு நிகரான தற்கால டென்னிஸ் வீரர்கள் எவரும் அந்த பிரம்மிப்பை ஏற்படுத்தவில்லை என்பதே அவரது சிறப்பு. ‘‘எந்த ஒரு படைப்பின் மையத்திலும் அது வாசகர்களிடம் என்ன உணர்வை அல்லது விளைவை ஏற்படுத்த வேண்டும் எனும் தெளிவு இருக்க வேண்டும்’’ - இது பிரபல அமெரிக்க எழுத்தாளர் எட்கர் அல்லென் பௌ (Edgar Allan Poe) முன்வைத்த "Unity of effect"  (விளைவின் ஒருமைத் தன்மை ) கோட்பாட்டின் சாராம்சம். ஃபெடரர் இந்தக் கோட்பாட்டைக் கருத்தில் கொண்டு விளையாடாவிட்டாலும் அவர் எங்கு, எப்போது, யாரை எதிர்த்து விளையாடினாலும், பார்ப்பவர்களுக்கு ஏற்படும் உணர்வு ஒன்றுதான். அது, ஃபெடரர் ஆட்டம் அழகு. மிக அழகு. மிக மிக அழகு.

‘‘ஃபெடரர்  ஆட்டம் ரொம்ப ப்ளீஸிங்கா இருக்கும். நடால் கஷ்டப்பட்டு விளையாடுற மாதிரி இருக்கும். ஃபெடரர் அப்படி இல்லை. அது ஒரு மாதிரி எஃபோர்ட்லெஸ்ஸா, ஸ்மூத்தா இருக்கும். ஜாலியா விளையாடுவாரு. அவர் ஆட்டம் க்யூட்டான பெயின்ட்டிங் போல இருக்கும்.  டி வில்லியர்ஸ் ஒரு மாதிரி விளையாடுவார். ஆனா, சச்சின் விளையாடுறது பிடிக்கும். ஏன்னா...அது ஒரு  மாதிரி கரெக்டா இருக்கும்; மெத்தாடிக்கலா இருக்கும். அது மாதிரி ஃபெடரர். அதனால எல்லாருக்கும் அவரைப் பிடிச்சிருக்கு’’ என்கிறார் ஃபெடரரின் தீவிர ரசிகர் பிரசன்னா. இதோ அவரது ரசனையின் உச்சம் தொடர்கிறது...

Roger Federer

‘‘ஃபெடரர் ஆடுற ஒரு சில ஷாட் எல்லாம்  நம்பவே முடியாத மாதிரி இருக்கும். அந்த ஷாட் ஆடி முடிச்ச பிறகுதான் யோசிப்போம், எப்படிரா....இந்த ஷாட் அடிச்சாப்ல... வேற யாராவது இருந்தா அப்டியே விட்டுட்டுப் போயிருப்பாங்க. ஓர் இடத்துல நிப்பாரு, ரிட்டர்ன் ஒன்னு வரும். அவ்வளவுதான் அதை விட்டுருவாருன்னு நினைப்போம். ஆனா ஓடிப்போயி எடுப்பாரு. எடுத்தது மட்டுமில்லாம, அவர் அனுப்புற ரிட்டர்ன் பாத்திங்கன்னா, அப்படியே பிரம்மிப்பா இருக்கும். 

இந்த விம்பிள்டன்லயே ரெண்டு உதாரணம் சொல்லலாம். செமி ஃபைனல்ல... பெர்டிச் ஒரு சர்வ் பண்ணிட்டு முன்னாடி ஓடி வருவார். ஃபெடரர் பேக்ஹேண்ட் ரிட்டர்ன் பண்ணுவார். Volley  அடிக்கிறதுக்காக பெர்டிச் முன்னாடி நெட்டுக்கு பக்கத்துல வந்துருவார். பக்கத்துலன்னா, ரொம்ப பக்கத்துல இல்லை, மிட் கோர்ட்ல இருந்து பெர்டிச் Volley பண்ணுவார். ரிட்டர்ன் வராதுன்னு நினைச்சு ஓர் இடத்தில் அடிப்பார் பெர்டிச். ஆனால், ஃபெடரர் ஓடிப் போய் அதை எடுப்பார். எடுத்தது மட்டுமில்லாம, கரெக்டா அதை பேஸ்லைன்ல பிட்ச்சாகி போற மாதிரி அடிப்பார். பெர்டிச்சால ஒன்னும் பண்ண முடியாது. வேடிக்கை பார்க்குறதைத் தவிர. ஃபெடரர் எப்படி ஓடுனார், எப்படி எடுத்தார், எப்படி ரிட்டர்ன் பண்ணார்... எல்லாமே ஆச்சர்யமா இருக்கும். ஒட்டுமொத்த அரங்கமும் கைதட்டும். 

Roger Federer

அதேமாதிரி இந்த விம்பிள்டன்ல ஃபெடரர் ஆடுன இன்னொரு ஷாட் லவ்வி. ரயோனிச்சுக்கு எதிரான மேட்ச். ஃபெடரர் அடிச்ச ஷாட் ஒன்னு இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு. அப்டியே பந்து Air-ல Curve-ஆகி போச்சு பாருங்க... அய்ய்ய்ய்ய்ய்ய்யோ... சான்ஸே இல்லை. வர்ணனையாளர்களும் அதைத்தான் சொன்னாங்க. Unbelievable. இந்த வார்த்தையைச் சொன்னதும் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. SABR - Sneak attack by Roger. கேள்விப்பட்டதுண்டா? யூ- டியூப்ல தேடுங்க. சர்வ் செய்யும்போது எல்லோரும் பேஸ்லைனில் இருந்துதான் எடுப்பாங்க. ஆனா, ஃபெடரர் பேஸ்லைனில் இருந்து முன்னாடி பாஞ்சு வந்து எடுப்பார். எதிராளி சர்வ் பண்றதுக்காக, பந்தை வானத்தை நோக்கித் தூக்கிப் போடும்போதே பந்து எந்த இடத்தில் பிட்ச் ஆகும்னு கணிச்சு, அதுக்கேத்த மாதிரி முன்னாடி வருவார் ஃபெடரர். இதையெல்லாம் கிட்டத்தட்ட, Arrogant-னே சொல்லலாம். வேற யாரும் இப்படி எல்லாம் யோசிக்கக் கூட பார்த்திக்க மாட்டாங்க.. SABR - எல்லாம் சில டோர்னமென்ட் ஃபைனல்லயே முயற்சி பண்ணி இருக்காரு. இக்கட்டான நேரத்தில் இப்படி எல்லாம் ஆடுறதாலதான் அவரை மேஜிசியன்னு சொல்றாங்க. அப்புறம் இன்னொரு ஷாட்.. அப்படியே ஓடிப் போய் திரும்பி நின்னுகிட்டு, இரண்டு காலுக்கு இடையில் அடிப்பார். அது கரெக்டா இருக்கும். அதெல்லாம் பயங்கரம். Ace serve பத்தி சொல்லவே வேண்டாம். இப்படி பியூட்டிஃபுல்லா, ஸ்கில்ஃபுல்லா ஆடுனா யாருக்குத்தான் ஃபெடரரைப் பிடிக்காமப் போகும்’’- என கேள்வி எழுப்பினார். அதானே?

 

The curve on that shot... Uff https://t.co/Ky9HAQ6ZXm

— Mihir Vasavda (@mihirsv) July 12, 2017

மரின் சிலிச் - ஃபெடரர் மோதிய விம்பிள்டன் ஃபைனலை உன்னிப்பாக கவனித்தவர்களுக்குத் தெரியும், ஃபெடரர் ஆட்டம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று. இத்தனைக்கும் அது ஒன்சைட் மேட்ச். ஆனாலும், வி.வி.ஐ.பி பாக்ஸில் இருந்தவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஃபெடரரின் ஒவ்வொரு பாயின்ட்டையும், ஒவ்வொரு ஷாட்டையும், ஒவ்வொரு சர்வையும் ஆசை தீர ரசித்தனர். அந்த ரசனையில், அந்த கைதட்டலில் அவ்வளவு திருப்தி இருந்தது. மரின் சிலிச் பாயின்ட் எடுத்தபோதும் ரசிகர்கள் கைதட்டினர். அது பல்வாள் தேவன் பதவியேற்றபோது எழந்த கோஷம் போல இருந்தது. ஃபெடரர் பாயின்ட் எடுக்கும்போதும் கைதட்டினார்கள். அது பாகுபலி பதவியேற்கும்போது எழுந்த ஆரவாரம் போல இருந்தது. இந்த மேட்ச்தான் என்றில்லை, ஃபெடரர் விளையாடும் எந்த போட்டியானாலும் ஆரவாரம் இருக்கும். காரணம், அலட்டல் இல்லாத அவரது ஆட்டம். 

Roger Federer

ஒரு விளையாட்டு வீரனுக்கு எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்று சொல்ல முடியாது. ஃபெடரரைத் தவிர. அவருக்கு ஆதரவு இல்லாவிடிலும் மரியாதை கண்டிப்பாக இருக்கும். எங்கேயும். எப்போதும். ஃபெடரர் தன் விளையாட்டுப் பயணத்தின் எந்த ஒரு காலகட்டத்திலும் தனிமையை உணர்ந்திருக்க மாட்டார். அவர் தோல்வியுற்று அழுதால் கூட அவருடன் சேர்ந்து அழும் ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக "ச்சோ ஸ்வீட்.. ஆவ்வ்வ்.." ரசிகைகள் ஏராளம்.

மனிதன், கடந்த வருடம் விம்பிள்டன் தொடரில் மிலோஸ் ராயோனிச்சிற்கு எதிரான அரை இறுதியில் ஒரு ஷாட் அடிக்கப் போய், கீழே விழுந்து விட்டார். ஃபெடரர் கீழே விழுந்த அந்த புகைப்படம் கூட ஏதோ இதயத்தை இரக்கத்தால் வருடும் ஓவியம் போல ரசிக்கப்பட்டது. இந்நேரத்தில் டென்னிஸ் எழுத்தாளர் பிரையன் ஃபிலிப்ஸ் ஃபெடரரைப் பற்றி எழுதிய ஒரு வரி ஞாபகத்திற்கு வருகிறது. ஃபெடரர் தோற்பதைப் பார்ப்பது,  ‘அழகு மரணத்திடம் தோற்பதைப் போல இருக்கிறது’... 

விளையாட்டில் டென்னிஸ் எலைட் கேம் எனில் கிராண்ட் ஸ்லாம்களில் விம்பிள்டன் உச்சம். டென்னிஸ் ராக்கெட்டை கையில் எடுத்த ஒவ்வொருவருக்கும் விம்பிள்டன் என்பது கனவு. ஏன், டென்னிஸ் ரசிகர்களுக்கும் கூட ஆல் இங்கிலாந்து க்ளப்பில் நடக்கும் விம்பிள்டனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை உண்டு. உலகின் பழமையான அந்த கிராண்ட் ஸ்லாம் தொடரில், அந்த புல்வெளியில் எட்டு கிராண்ட் ஸ்லாம் என்பது நிச்சயம் அசாத்திய சாதனை. முதன்முறையாக பீட் சாம்ப்ராஸ் என்னும் சாம்ராஜ்யத்தை சாய்த்து, 2003-ல் விம்பிள்டன் வென்ற ஃபெடரருக்கும், இன்று இருக்கும் ஃபெடரருக்கும் நிறைய வித்தியாசம். இன்று ஃபெடரர் நான்கு குழந்தைகளுக்குத் தகப்பன்.  2012-க்குப் பின் கிராண்ட் ஸ்லாம் வெல்லாமல் இருந்தாரே தவிர, தொடர்ச்சியாக அரையிறுதி வரை முன்னேறிக் கொண்டே இருப்பார். வயதானாலும் கன்சிஸ்டன்ஸி இருக்கும். இந்த ஆண்டு அவர் இரண்டு கிராண்ட் ஸ்லாம் வென்றதில் அவர் ரசிகர்கள் ஹேப்பி.

Roger Federer

 

ஆட்டம் மட்டுமல்லாது களம், களத்துக்கு வெளியிலும் நன்னடத்தை, புன்னகை மாறாத முகம், Soft Spoken என எல்லா பாக்ஸிலும் டபுள் புளூ டிக் அடிக்கிறார் ஃபெடரர். தேர்ந்தெடுத்து போட்டிகளில் பங்கேற்பது, அளவான பயிற்சி, ஃபிட்னெஸ் இருந்தால் இன்னும் நான்கைந்து கிராண்ட் ஸ்லாம் வெல்லலாம். ஒவ்வொருமுறையும் ஒரு சாம்பியன் உருவாகும்போது, அந்த விளையாட்டால் வீரனுக்குப் பெருமையா, அல்லது அந்த வீரனால் விளையாட்டுக்குப் பெருமையா என்ற கேள்வி எழும். அடித்துச் சொல்லலாம், ஃபெடரரால்தான் டென்னிஸுக்கு இவ்வளவு மார்க்கெட்.

http://www.vikatan.com/news/sports/95864-roger-federer-is-the-greatest-of-all-time.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.