Sign in to follow this  
நவீனன்

டெல்லி போராட்டத்தில் மீண்டும் தமிழக விவசாயிகள்

Recommended Posts

டெல்லி போராட்டத்தில் மீண்டும் தமிழக விவசாயிகள்

டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் தற்போது மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்க டெல்லி வந்தடைந்துள்ளனர்.

டெல்லியில் மீண்டும் போராட்டம்: தமிழக விவசாயிகள்

நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன் ரத்து, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்கள் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

எலிக்கறி உண்ணுதல், சாலையில் உருளுதல், சாட்டையடி போராட்டம் என பல்வேறு விதமாக போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு பஞ்சாப், ஹரியான போன்ற பிற மாநில விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவளித்தனர்.

பின்னர் ஏப்ரல் 23ம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்து அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டு விவசாயிகள் தமிழகம் திரும்பினர்.

 

அதன்பின் மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரி ஜுன் 9ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகில் தங்களின் போராட்டத்தை தொடங்கினர்.

இருப்பினும், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடாமல் தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்தததை தொடர்ந்து, விவசாயிகள் சென்னை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்

இந்நிலையில்தான் இன்று மீண்டும் போராடுவதற்காக அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கூட்டம் டெல்லி வந்தடைந்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/india-40622583

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this