Sign in to follow this  
நவீனன்

'பிக் பாஸ்' விமர்சன சர்ச்சையால் தமிழக பா.ஜ.,வுக்கு நெருக்கடி

Recommended Posts

'பிக் பாஸ்' விமர்சன சர்ச்சையால்
தமிழக பா.ஜ.,வுக்கு நெருக்கடி
 
 
 

தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப் பாகும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் காய்த்ரி ரகுராம் தெரி வித்த கருத்தால், தமிழக பா.ஜ., நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

 

'பிக் பாஸ்',விமர்சன,சர்ச்சையால்,தமிழக,பா.ஜ.,வுக்கு,நெருக்கடி

ஐரோப்பிய நாடுகளில் துவங்கி, பாலிவுட்டில் கோலோச்சி, தமிழுக்கு வந்துள்ளது, 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. இதில், பிரபலங்களை, வீட்டுக்குள், 100 நாட்கள் பூட்டி வைத்து, உளவியல் ரீதியாக போட்டி நடத்தப்படுகிறது.

தமிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு, மிகவும் புதிய நிகழ்ச்சியான இதில், பா.ஜ., பிரமுகரும், நடிகை மற்றும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பங்கேற்றுள்ளார்.நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்றொருவரை, 'சேரியில் வசிப்பவர் போல் நடந்து கொள்கிறார்' என, அவர் குறிப்பிட்டார்.இந்த கருத்து, பெரும் சர்ச்சையை

ஏற்படுத்தியுள்ளது; இது, அவருக்கு தெரியாது. அவர், பா.ஜ.,வில், முக்கிய பொறுப்பில் உள்ளதால், அக்கட்சியின் எதிர்ப்பாளர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு, பா.ஜ.,வை விமர்சிக்க களம் இறங்கி உள்ளனர். இது, தமிழக பா.ஜ.,வை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கடந்த, 2007ல், லண்டனில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற, நடிகை ஷில்பா ஷெட்டியை, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர், 'நீ வாழும் சேரிக்கு, திரும்பி போ' என்றார். அது, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, ஷில்பாவை வெற்றி பெற வைத்தது.இங்கு அதுவே, தலைகீழாக நடந்துள்ளதால், பா.ஜ.,வை நோக்கி கோபக்கணைகள் திரும்பியுள்ளன.

அனைத்து சமுதாயங்களுக்கும் இணக்கமான கட்சி என பெயரெடுக்க, தலித் வீடுகளுக்கு தேடிச் சென்று, உணவு உண்ணும்படி, பா.ஜ., தலைவர்களுக்கு, மேலிடம் கட்டளையிட்டுள்ளது. அதன்படி, இங்கு, பொன்.ராதாகிருஷ்ணன்,தமிழிசை போன்றோர், பல இடங்களுக்கு செல்கின்றனர். சமீபத்தில், சென்னை யில் ஒரு தலித் குடியிருப்பை, தமிழிசை தேர்வு செய்தார். நகரத்து கட்சி என்ற பிம்பத்தை மாற்ற முயன்று வரும், தமிழக பா.ஜ.,விற்கு, காயத்ரி விமர்சனம், பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நாம்

 

பேசும் போது, 'லோக்கல்' என்ற வார்த்தையை, சாதாரணமாக பயன்படுத்து வோம். அதுபோல, அவர் அந்த வார்த்தையை பயன் படுத்தி இருப்பார் என, கருதுகிறேன். அவசரத்தில், வாய் தவறி கூட அப்படி கூறியிருக்கலாம். வசிக்கும் இடத்தை வைத்து, ஒருவரை எடை போட முடியாது.

அவர், குறிப்பிட்ட சமுதாயத்தை குறிக்கும் வகையில் பேசியிருந்தால், அது ஏற்புடைய தல்ல; கண்டிக்கத்தக்கது. பா.ஜ., அப்படிப்பட்ட கட்சியும் அல்ல. அவர், இதுபோன்ற நிகழ்ச்சி யில் பங்கேற்க போகிறார் என்பது, எனக்கு தெரியாது.இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1812900

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this