Sign in to follow this  
Followers 0
நவீனன்

மலர்ந்தது புது உறவு: கழகங்கள் இடையே இனி கலகமில்லை

1 post in this topic

மலர்ந்தது புது உறவு: கழகங்கள் இடையே இனி கலகமில்லை

 

 

சட்டசபையில், தி.மு.க.,வினருடன் அமைச்சர்கள் நெருக்கம் காட்டுவதும், சிரித்து உறவாடுவதும், இரு கட்சி தொண்டர்களிடமும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., இருந்த வரை, சட்டசபையில், அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும், எலியும் பூனையுமாக இருப்பர். சட்டசபையில், ஜெ., இருக்கும் போது, தி.மு.க.,வினரை பார்த்து, ஆளும் கட்சியினர் புன்னகை புரிய மாட்டார்கள்.
 

 

கடுமையாக விமர்சிப்பர்


தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பேச துவங்கினாலே, அமைச்சர்கள் அனைவரும் உஷாராகி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், உடனுக்குடன் பதில் அளிப்பர். தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை, கடுமையாக விமர்சிப்பர்.அதை சபைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி, தி.மு.க.,வினர் கோரினால், ஏற்க மறுப்பர்; அதை ஆட்சேபித்து, அவர்கள் வெளிநடப்பு செய்வர். தி.மு.க.,வினர் பேச்சிலும் சூடு பறக்கும்; அரசின் செயல்பாடுகளை, கடுமையாக விமர்சிப்பர்.

'தி.மு.க.,வினரை பார்த்து சிரிக்கிறார்; அவர்கள், இவரை பாராட்டுகின்றனர்' எனக்கூறி, பன்னீர்செல்வத்தை, முதல்வர் பதவியில் இருந்து நீக்கினார் சசிகலா. புதிய முதல்வராக பழனிசாமியை கொண்டு வந்தார். தற்போது, நிலைமை, அவரது கையை விட்டு சென்று விட்டது.

ஜெ., இல்லாத சட்டசபையில், தி.மு.க.,வினர் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்கள் பதில் கூற தடுமாறுவர். விவாதம் சூடுபறக்கும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால், சட்டசபை துவங்கிய ஓரிரு நாள் மட்டும், விவாதம் சூடுபறப்பது போல இருந்தது. அதன்பின், நிலைமை தலைகீழாகி விட்டது.
 

 

அனல் பறக்கும்


அமைச்சர்களுடன், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டி உறவாடத் துவங்கினர். இரு தரப்பினரும், சபையில் சிரித்து பேசுவதும், கிண்டல் செய்வதும் வழக்கமானது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்து, கோரிக்கை கடிதம், அமைச்சர்களுக்கு செல்வதும், அவர்கள் உடனே செய்து தருவதாக, சைகையில் கூறுவதும் தொடர்ந்தது.

இதன் காரணமாக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விவாதத்தில் சூடு குறைந்தது. தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் பேச்சில் மட்டுமே, அனல் பறந்தது.

காவல் துறை மானிய கோரிக்கையில், துரைமுருகன் பேச்சில் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்புடன், அனைவரும் ஆவலாக, அவரது பேச்சை கவனித்தனர். ஆனால், அவரது பேச்சு, சாதாரணமாக அமைந்தது.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன், 'கருணாநிதி பட்டுக் கூட்டுறவு சங்கம்' எனக் கூறியதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி, 'எப்படி கருணாநிதி பெயரை உச்சரிக்கலாம்' என, எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, ஓ.எஸ்.மணியன், 'அவர் எங்கள் ஊர்க்காரர்' என, ஊர் பாசம் காட்ட, தி.மு.க.,வினர் திகைத்தனர்.

அமைச்சர்கள் பதிலுரை யின் போது, கருணாநிதியை விமர்சிப்பதையும், தி.மு.க., அரசு மீது, கடுமையான குற்றங்கள் சுமத்துவதையும் தவிர்த்தனர். சட்டசபையில் ஒரு நாள், துரைமுருகன் எழுந்து, அமைச்சர் உதயகுமாரை, 'லாபி'க்கு வரும்படி கூற, அமைச்சர் ஓடிச் சென்றதை காண முடிந்தது.

அமைச்சர்கள், இப்படி தி.மு.க.,வினருடன் நெருங்கி உறவாடுவதும், கோரிக்கைகளை ஏற்பதும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 

 

அதிர்ச்சி


அதேபோல், அரசுக்கு எதிரான புகார்களை அடுக்கி, அமைச்சர்களை நிலைகுலையச் செய்வர் என, ஆவலுடன் எதிர்பார்த்த, தி.மு.க., தொண்டர்களும், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இரு தரப்பினரும் அதிக நட்பு பாராட்டுவது, சபாநாயகருக்கு வேலையை எளிதாக்கி உள்ளது.
அவரும் தன் பங்கிற்கு, இரு தரப்பினரையும் அரவணைத்து செல்வதால், சட்டசபை கூட்டம்
ஜாலியாக செல்கிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1812831

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0