• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

கூட்டமைப்பு தலைமையின் புதிய நகர்வு எதற்காக?

Recommended Posts

கூட்டமைப்பு தலைமையின் புதிய நகர்வு எதற்காக?

 

புதிய அர­சியல் யாப்பா...? அல்­லது யாப்பில் திருத்­தமா...? என்ற பட்­டி­மன்­றத்­திற்கு புத்த பிக்­கு­களின் எதிர்ப்­பா­னது தேர்தல் என்னும் சிறிய விளம்­பர இடை­வே­ளையை வழங்­கி­யுள்­ளது. 2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் நிகழ்ந்த ஆட்சி மாற்­றத்தின் போது புதிய அர­சியல் யாப்பின் மூலம் நாட்டில் நிலு­வையில் உள்ள சகல பிரச்­ச­ினை­க­ளுக்கும் தீர்வு காணப்­படும் என்று வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

அதன்­படி ஜனா­தி­ப­திக்கு உள்ள நிறை­வேற்று அதி­கா­ரங்­களை நீக்­குதல், தேர்தல் முறை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­துதல் மற்றும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நீடித்து நிலைத்­தி­ருக்க கூடிய தீர்வை வழங்­குதல் என்னும் மூன்று அடிப்­ப­டை­களைக் கொண்டு ஒரு புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வது என்று அர­சாங்­கத்தால் அறி­விக்­கப்­பட்­டது. ஜே.ஆரினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட 1978 ஆம் ஆண்டின் அர­சியல் யாப்­பா­னது பல திருத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால் அதனை மேலும் திருத்­து­வதை விடுத்து ஒரு புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வதே சிறந்­தது என்று அர­சாங்கம் முடி­வெ­டுத்­தி­ருந்­தது. இதனை நூறு நாள் வேலைத்­திட்­டத்­திலும் அர­சாங்கம் இணைத்­தி­ருந்­தது. 

ஜனா­தி­பதித் தேர்­தலைத் தொடர்ந்து 100 நாட்­க­ளுக்குள் பாரா­ளு­மன்ற தேர்­தலை நடத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்த போதிலும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தேர்­த­லுக்கு தயா­ராக இல்­லா­ததால் ஆகஸ்ட் மாதம் வரை தேர்தல் பிற்­போ­டப்­பட்­டது.

இந்த 100 நாள் வேலைத்­திட்­டத்தில் 19 ஆவது திருத்­தத்தின் ஊடாக பாரா­ளு­மன்­றத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையின் மூலம் நிறை­வேற்றிக் கொள்ளக் கூடிய வகையில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டன. அதே­நே­ரத்தில் இரு­பதாம் திருத்­தத்தின் மூலம் தேர்தல் சீர்­தி­ருத்­தமும் நிறை­வேற்­றப்­பட்டு புதிய முறையில் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ள­ப­்­பட்­டன. இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கும் இடையில் இந்த விட­யத்தில் உடன்­பாடு ஏற்­ப­டா­ததன் கார­ண­மா­கவே அது கைவி­டப்­பட்டு விகி­தா­சார முறையில் பாரா­ளு­மன்றத் தேர்­தல் ஆகஸ்ட் மாதம் நடை­பெற்­றது. இந்த கால நீடிப்­புக்கு ஜெனீவா விவ­கா­ரமும் கார­ண­மாக அமைந்­த­தாக ஆய்­வா­ளர்கள் கருத்து வெளியிட்டு இருந்­த­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. 

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு தயா­ரான போதே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் அந்த கட்­சியின் பேச்­சா­ளரும் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் அர­சாங்­கத்­துடன் நெருக்­க­மான உறவை பேண  ஆரம்­பித்­தது. அன்­றி­லி­ருந்து இன்று வரை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தொடர்ந்தும் அர­சாங்­கத்­துடன் இணக்க அர­சி­ய­லையே மேற்­கொண்டு வரு­கி­றது.

இதற்கு கூட்­ட­மைப்பின் சாயம் கொடுப்­ப­தற்­கா­கவே அங்­கத்­துவ கட்­சிகள் இரண்­டிற்கு சில பத­வி­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. இந்த நிலையில் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையின் செயற்­பா­டுகள் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்­தி­ருக்­க­வில்லை. மாறாக சர்­வ­தேச ரீதியில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு இருந்த அழுத்­தங்­களை குறைப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான உறவைப் பயன்­ப­டுத்திக் கொண்­டனர்.  2015 இல் ஐ.நா மனி­த­ உரிமைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30-–1 தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு இவ்­வாண்டு 34-–1 இன் மூலம் மேலும் இரண்டு ஆண்­டுகள் கால அவ­காசம் வழங்­கப்­பட்டு இருக்­கி­றது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்சி இதற்கு தனது ஆத­ர­வையும் வழங்கி இதனை வர­வேற்றும் இருந்­தது. தற்­போது கூட ஐ.நா.வின் மனித உரி­மைகள் மற்றும் பயங்­க­ர­வாதம் தொடர்­பி­லான விசேட பிர­தி­நிதி பென் எமர்ஷன் இலங்­கைக்கு வருகை தந்து நிலை­மை­களை அவ­தா­னித்து இருக்­கின்றார்.

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர­சாங்கம் மேற்­கொள்ளும் செயற்­பா­டு­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவே அவ­ரது கருத்­துக்­களும் அமைந்­தி­ருக்­கின்­றன. பூகோள பிராந்­திய நலன்­களை மையப்­ப­டுத்தி சர்­வ­தேச சமூகம் இலங்­கை­யு­ட­னான உறவைப் பலப்­ப­டுத்தி வரு­கின்­றது. இந்த நிலையில் தமிழ் மக்­களின் நலனை முன்­னி­றுத்­திய சர்­வ­தேச பார்வை என்­பது குறை­வ­டையத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. மாறி வந்த சர்­வ­தேச சூழலை கூட்­ட­மைப்பு சரி­யாக பயன்­ப­டுத்த தவ­றியும் இருக்­கின்றது.

தற்­போது சில மாகாண சபை­க­ளி­னது ஆட்­சி­க்காலம் நிறை­வுக்கு வரு­கி­றது. அத்­துடன் உள்­ளூ­ராட்சி சபை­களின் பத­விக்­கா­லமும் நிறை­வுக்கு வந்த நிலையில் அதன் தேர்­தலை நடத்­துவது அர­சாங்கம் இழு­த்த­டித்து வரு­கின்­றது.

கடந்த மஹிந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் உள்­ளூ­ராட்சி சபை­களின் எல்லை நிர்­ணயம் தொடர்­பான திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் அந்த வேலைகள் முழு­மை­ய­டை­ய­வில்லை என்­பதைக் காரணம் காட்டி உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை அர­சாங்கம் காலம் கடத்தி வரு­கின்­றது. மாகா­ண­சபைத் தேர்­தலா, உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலா முதலில் நடை­பெறும் என்ற கேள்­விகள் எழுந்­துள்ள நிலையில் அர­சாங்கம் தமக்கு எது சாத­க­மான நிலை­மையை ஏற்­ப­டுத்­துமோ அதனை முதலில் நடத்த வேண்டும் என பரி­சீ­லிக்­கி­றது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மையும் தேர்தல் நோக்­கிய தனது செயற்­பா­டு­களை நகர்த்த ஆரம்­பித்­துள்­ளது.

குறிப்­பாக கிழக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் நிறை­வுக்கு வரு­கி­றது. அது போல உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­களும் நடை­பெற இருக்­கின்­றன. இதனால் அதற்­கான தயார் படுத்­தல்கள் தீவிரம் பெறத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. கடந்த மாதம் வட­மா­காண சபை விவ­காரம் பல்­வேறு குழப்ப நிலை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­துடன், அந்த விவ­காரம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை மீதும், தமி­ழ­ரசுக் கட்சி மீதும் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

மாற்றுத் தலைமை பற்­றிய சிந்­த­னை­களும் வலுப்­பெற்று வந்­தி­ருந்­தன. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலை­மைத்­து­வத்தை விமர்­சனம் செய்து புதிய மாற்று தலைமை தேவை என்ற அடிப்­ப­டையில் தமது கருத்­துக்களை முன்­வைத்தும் வந்­தன. இந்த நிலையில் இழந்த செல்­வாக்கை மீள நிலை நிறுத்­து­வதன் மூலமே நடை­பெற இருக்கும் தேர்­தலை வெற்றி கொள்ள முடியும் என்­பதும், தமது தலை­மையை தக்க வைக்க முடியும் என்­பதும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையின் நிலைப்­பாடு.

இதனால் அதற்­கான செயற்­பா­டு­களில் அவர்கள் இறங்­கி­யுள்­ளார்கள் என்­ப­தையே அண்­மைய செயற்­பா­டுகள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன. ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து மக்­க­ளது தேவை­களை நிறை­வேற்றும் வகையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை செயற்­ப­டா­ததன் விளை­வாக தமிழ் மக்கள் தாமா­கவே தமது உரி­மைக்­காக வீதி­களில் இறங்கிப் போராடத் தொடங்­கி­யுள்­ளார்கள். காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி கோரியும், தமது நிலங்­களை விடு­விக்க கோரியும், வேலை­வாய்ப்புக் கோரி பட்­ட­தா­ரி­களும் மேற்­கொண்டு வரும் போராட்­டாங்கள் அரை ஆண்டை எட்­டு­கின்­றன.

ஆர்­ப்பாட்­டத்தின் ஆரம்­பத்தில் அர­சிற்கு அழுத்தம் கொடுத்து இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டால் அது தென்­னி­லங்­கையில் இன­வா­திகள் குழப்பம் விளை­விக்க சாத­க­மாக அமைந்து விடும் என்று கூறி வந்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை அந்த போராட்­டங்­களை பெரி­ய­ளவில் கண்டு கொள்­ள­வில்லை.

ஐ.நா. மனி­த உ­ரிமைகள் பேர­வையின் அமர்வை நோக்­கியே மக்கள் போராட்­டங்­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும், மக்­க­ளது போராட்­டங்­களின் பின்னால் சில அர­சியல் சக்­திகள் உள்­ள­தா­கவும் தென்­னி­லங்­கையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை கூறியும் வந்­தி­ருந்­தது. மக்கள் எழுச்­சி­யுடன் நடை­பெற்ற எழுக தமிழ் பேரணி கூட குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் என்றும் தற்­போது அது தேவை­யற்ற பேரணி எனவும் கூட்­ட­மைப்பு தலைமை கூறி­வந்­தது. 

ஐ.நா. அமர்­வுகள் முடிந்தும் இந்தப் போராட்­டங்­களை மாதக்­க­ணக்கில் உறு­தி­யு­டனும், காத்­தி­ர­மா­கவும் மக்கள் தொடர்­வதால் அவ்­வப்­போது மக்கள் போராட்­ட­ங்­க­ளுக்கு சென்று பார்­வை­யிட வேண்­டிய நிலைமை தமிழ் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. அந்த மக்­க­ளுக்கு உறு­தி­யான வாக்­கு­று­தி­களை வழங்கி போராட்­டங்­களை நிறுத்­து­வ­தற்கோ அல்­லது அந்த மக்­களின் கோரிக்­கைகளை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து நிறை­வேற்றச் செய்­வ­தற்கோ கூட்­ட­மைப்பின் தலை­மையால் முடி­யாமல் போயி­ருந்­தது. இது தமிழ் மக்கள் மத்­தியில் தமது தலைமை தொடர்பில் கடும் எரிச்­ச­லையும் அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 

இந்த நிலையில் அமை­தி­யாக இருந்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மையும் தமி­ழ­ரசுக் கட்­சியும் தற்­போது விழித்து கொண்­ட­வர்­க­ளாக செயற்­படத் தொடங்­கி­யுள்­ளனர். அண்­மையில் கிளி­நொச்­சிக்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் 'காணாமல் போகச் செய்­யப்­பட்­ட­வர்கள் விட­யத்தில் அர­சாங்கம் பதில் சொல்­லியே தீர­வேண்டும் என்றும், இன்னும் பல விட­யங்­களில் நாம் தொடர்ந்தும் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சத்தில் சுயாட்சி அலகை பெற்றுக் கொள்­வதில் இருந்து நாம் பின்­னிற்க மாட்டோம்' என்றும் தெரி­வித்­துள்ள அதே­வேளை, அர­சாங்கம் சில கரு­மங்­களை செய்து வரு­கின்­றது. அவை தாம­த­மாக நடை­பெற்று வரு­வ­தா­கவும், காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்பில் கட­வு­ளிடம் வேண்­டுங்கள் எனவும் தெரி­வித்தும் உள்ளார்.

தமிழ் மக்­க­ளையும், அர­சாங்­கத்­தையும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு முயற்­சி­யா­கவே இந்தக் கூற்றை அவ­தா­னிக்க முடி­கி­றது.  குறிப்­பாக கடந்த பல மாதங்­க­ளாக பொருத்து வீட்டு விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.  கூட்டமைப்பு தற்போது பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதுவரை வழக்குத் தாக்கல் செய்யாதவர்கள் தற்போது ஏன் செய்தார்கள் என்பதும் சிந்திக்க வேண்டிய விடயமே.  

இந்த விட­யங்­களை கூட்­ட­மைப்பு செய்­கின்ற போதும் உண்­மையில் அது  மக்கள் நலன்­களை முன்­னிறுத்தி செய்யும் நட­வ­டிக்­கையா அல்­லது தேர்­த­லுக்­கான ஒரு நட­வ­டிக்­கையா என்ற சந்­தேகம் மக்­க­ளிடம் உள்­ளது. எனவே, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை மக்கள் மன­நி­லை­களை புரிந்து தனது நகர்­வு­களை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து தேர்தலுக்கான நடவடிக்கையாக தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களை மீண்டும் உணர்ச்சி அரசியலுக்குள் கொண்டு செல்வது என்பது ஆரோக்கியமானது அல்ல. மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படைந்து வருகின்றார்கள். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை புரிந்து தேர்தல் அரசியலை விடுத்து மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

– ருத்­திரன்- –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-8

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this