Jump to content

ஒற்றையாட்சி, சமஸ்டி சொற்கள் இல்லாமல் அதிக கூடிய உறுதியான அதிகார பகிர்வு – கிளிநொச்சியில் சம்மந்தன்:-


Recommended Posts

ஒற்றையாட்சி, சமஸ்டி சொற்கள் இல்லாமல் அதிக கூடிய உறுதியான அதிகார பகிர்வு – கிளிநொச்சியில் சம்மந்தன்:-

sambathan.jpg
ஒற்றையாட்சி எனும் சொல்லோ அல்லது சமஸ்டி எனும் சொல்லோ இல்லாமல் அதி கூடிய உறுதியான மத்திய அரசினால் மீளப்பெறப்பட முடியாத அதிகார பகிர்வு புதிய அரசியல் சாசனத்தின் மூலம் கொண்டுவரப்படுமானால் அதனை நாங்கள் பரிசீலிப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார் கடந்த 12 ஆம் திகதி கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரின் முழுமையான உரை வருமாறு

இன்றைய நிலைமை ஒரு மிகவும் சிக்கலான நிலைமை இந்த நிலையில் கருத்துக்கள் கூறுவது இலகுவான விடயமல்ல. அரசியல் தீர்வு சம்மந்தமான முயற்சிகளை குழப்புவதற்கு பல தரப்புகள் மிகவும் தீவிரமாக செயற்படுகின்றன. பெரும்பான்மை இனத்தின் மத்தியிலும் தீவர போக்குடையவர்கள் இந்த முயற்சியை குழப்புவதற்கு மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள். மகிந்த ராஜபக்ஸ அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் அவருடன் சேர்ந்து செயற்படுகின்ற வேறு சில கட்சிகளை சேர்ந்தவர்களும், தீவிரமாக புதிய அரசியல் தீர்வு விடயத்தை குழப்ப தீவிரமாக செயற்படுகின்றார்கள். பெரும்பான்மையின மக்களை குழப்பி ஒரு தீரவு ஏற்படுவதை தடுக்க இவர்கள் முற்படுகின்றார்கள்.

அதேசமயம் மக்களால் இ;ந்த கருமங்களை கையாள்வதற்கு தெரிவு செய்யப்படாதவர்கள் இன்றைக்கு இடம்பெறுகின்ற முயற்சிகளை பல விதமான குறைகள் குற்றங்களை கூறி மக்களின் மனங்களில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதை நாங்கள் அவதானிக்கிறோம். நாங்கள் பகிரங்கமாக கூறி நிற்கின்றோம் ஒரு இரகசிய தீர்வு சம்மந்தமாக தற்போது ஆக்கபூர்வமான உறுதியான முயற்சி நடைபெறுகிறது ஒரு நிதானமான நல்ல சூழல் காணப்படுகிறது. நியாயமான நல்ல சூழல் என்று நான் கூறுவதற்கு காரணம் என்னவென்றால் இந்த அரசாங்கம் ரணில் விக்கிரசிங்க தலைமையில் உருவாக்கியது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைதிரிபால சிறிசேனவினுடைய சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது ஆனபடியால் இன்று ஆட்சி செய்கின்ற அரசாங்கம் இந்த இரண்டு கட்சிகளை சார்ந்த ஒரு அரசாங்கம். அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாது விட்டாலும் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன்,ஜனத்தா விமுக்தி பெரமுனவின் ஆதரவுடன், ஏனைய இஸ்லாமிய தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறக் கூடிய நிலைமை இருக்கிறது.

இந்த நிலைமை சமீப காலத்தில் இருக்கவில்லை சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது புதிய அரசியலமைப்பை உருவாக்கி அரசியல் சாசனத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு புதிய அரசியல் சாசனத்தை பெருமளவில் நியாயமான அதிகார பகிர்வை உருவாக்கி ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அவர் முயற்சித்தார். ஆனால் துரதிஸ்டவசமாக அவரால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியவில்லை. ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை இல்லை எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டால் மக்களால் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு நியாயமான அரசியல் தீர்வை உருவாக்கினால் அதற்கு நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மையின சிங்கள மக்கள் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள அனைவரும் தங்களுடைய ஆதரவை வழங்கினால் மேற்படி கட்சிகள் ஆதரவை வழங்கினால் ஒரு நியாயமான அரசியல் தீர்வை உருவாக்கலாம். இந்த கட்சிகள் மக்கள் மத்தியில் முறையான வகையில் பிரச்சாரம் செய்தால் அந்த அரசியல் தீர்வுக்கு மக்களின் ஆங்கீகாரத்தை பெறலாம்.

ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாக இருந்தால் தற்போதைய அரசியல் சாசனத்தின் பிரகாரம் அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும். அதன் பிறகு மக்களின் அங்கீகாரத்தை பெறவேண்டும் அவ்விதமாக பெற்றால்தான் அது ஒரு புதிய அரசியல் சாசனமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

புதிய அரசியல் சாசனம் அமைக்கப்பட்ட பிறகு பாராளுமன்ற ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்படும். நாட்டுக்கு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதற்கு மிகவும் கட்டுக்கோப்பான முயற்சி அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. அந்தப் பணியை தமிழ் மக்கள்சார்பாக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாங்கள் இருவர் செய்து வருகின்றோம்.

புதிய அரசியல் சாசனத்தில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வு இரண்டாவது ஜனாதிபதி நிர்வாக ஆட்சி முறை மூன்றாவது தற்;போதைய தேர்தல் முறை தற்போதைய விகிதாசார முறை மற்றும் விருப்பு வாக்கு முறை இதனை மாற்றியமைப்பதா இல்லையா மாற்றியமைப்பதாக இருந்தால் எவ்விதமாக மாற்றி அமைப்பது என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். மற்றும் புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் முயற்சி தொடர்பில் நாங்கள் அதிகம் பத்திரிகைகளுக்கு கூறுவதில்லை அவ்வாறு கூறினால் சம்மந்தன் இப்படிச் சொல்கிறார் என சொன்னவுடன் தெற்கு பகுதியிலிருந்து பத்து பேர் அதற்கு பதில் சொல்ல வந்துவிடுவார்கள் அது பெரும்பான்மை இனத்தின் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் ஆனப்படியால் எமது மக்கள் ஓரளவுக்கு நிலைமைகளை அறியாமல் இருக்கும் சூழல் இருந்தாலும் கூட நாங்கள் மௌனிகளாக இருக்க வேண்டிய ஒரு கட்டாய சூழல் இருக்கதான் செய்கிறது. ஏன்னென்றால் பல கருமங்கள் பல தடவைகள் குழப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன் பல மதங்களின் தலைவர்களை சந்திக்க விரும்புவதாக கேட்டு அவர்களுடன் ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு தலைமைத் தாங்கியவர் ஒரு பௌத்த குரு அவர் மகரகம பகுதியில் உள்ள ஒரு விகாரையில் குருவாக உள்ளார். கூட்டம் நிறைவுற்றதும் அந்த தேரர் சொன்னார் உங்களுடை நான் தனியாக பேச விரும்புகிறேன் என்னுடைய விகாரைக்கு வருவீர்களா என்று அதற்கமைவாக இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவரை சந்திக்க சென்றேன்.அப்போது அவர் சொன்னார் பண்டா செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக நாங்கள் போராடிய போது 1957 ஆம் ஆண்டு அவரது இல்லத்திற்கு முன் அந்த ஒப்பந்ததை நான் எரித்தேன். இப்போது நாங்கள் 2017 இல் நிற்கின்றோம். இப்போது நான் நினைக்கிறன் அன்று அதனை எரித்தது மூலமாக நான் எவ்வளவு பெரிய தவறை செய்திருகிறேன் என்று.

ஆரம்பத்தில் நாங்கள் குழம்ப கூடாது ஒரு கட்டத்தில் எல்லாம் வெளிவரும் ஒரு தீர்வு நியாயமாக வருமாக இருந்தால் அதனை நாங்கள் எங்கள் மக்களுக்கு முன்னால் கொண்டு வருவோம் அதன்போது இவ்விதமான கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலம் ஏற்பாடு மக்களுடன் கலந்துரையாடுவோம் , மக்களுக்கு விளக்குவோம் மக்களின் கருத்துக்கள் கேட்டு மக்களின் கருத்துக்களை அறிந்துதான் நாங்கள் ஒரு முடிவெடுப்போம் எங்களுடை மக்களின் அனுமதி இல்லாம் எந்தவொரு தீர்வையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் அது எங்களுடைய கடமை. இதுவரை நடந்த பேச்சு வார்த்தையின் படி மிகவும் கூடியளவில் அதிகாரங்கள் பகிர்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காணி சட்டம் ஒழுங்கு. பொலீஸ் கல்வி சுகாதாரம் விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், எல்லாவிதமான கைத்தொழில், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு, சமூக பொருளாதார விடயங்கள்,எமது மக்களின் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், மக்கள் தங்களால் தெரிவு செய்ய கூடிய பிரதிநிதிகளால் தங்களின் கருமங்களை கையாளக கூடிய வகையில் அதிகாரங்கள் பகிர்தளிக்கப்படும்.

இதேவேளை வழங்கப்படுகின்ற அதிகாரங்கள் உறுதியானதாக இருக்க வேண்டும், மீளப்பெறப்படாத வகையில் இருக்க வேண்டும், அந்த அதிகாரங்களுக்கு எவ்விதமான தடைகளும் இல்லாது இருக்க வேண்டும் எவ்விதமாக குறுக்கு வழியில் அதிகாரங்களை உடைக்க முடியாத அளவில் இருக்கவேண்டும் அந்த அதிகாரங்கள் சம்மந்தமாக மத்திய அரசு அதனை பயன்படுத்தமுடியாத அளவுக்கு இருக்க வேண்டும் அவ்விதமாக இருந்தால்தான் அது உறுதியாக இருக்கும். ஒரு சமஸ்டி ஆட்சி முறையின் அடிப்படையில் சமஸ்டி முறையை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அது நிச்சமாக நடைபெறும். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த நாட்டில் சமஸ்டி எனும் சொல் ஒரு பயங்கரவாத சொல்லாக கருதப்படுகிறது. சமஸ்டி என்றால் அது பிரிவினைக்குச் செல்லும் எனும் கருத்து இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள் சமஸ்டியை ஏற்க மறுத்தனாங்கள். தற்போது ஒற்றையாட்சி எனும் சொல்லும் இல்லாமல் சமஸ்டி எனும் சொல்லும் இல்லாமல் அவ்விதமான வார்த்தைகளை பயன்படுத்தாமல் அதிகாரங்கள் கூடியளவுக்கு பகிர்தளிக்கபடுமாக இருந்தால் அந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீள பெறப்பட முடியாத ஒரு நிலைமையை உருவாக்கி அந்த அதிகாரஙக்ளை மத்திய அரசாங்கம் தான் பயன்படுத்தமுடியாத நிலைமையை உருவாக்கி எமது மக்களின் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் எமது மக்கள் சுதந்திரமாக அந்த அதிகாரங்களை பயன்படுத்தலாமா? என்பதை நாங்கள் அலசி விசாரணை செய்து அது சம்மந்தமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றோம்.

ஒற்றையாட்சி எனும் சொல் இருக்க கூடாது ஒற்றையாட்சி எனும் சொல்லை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள கூடாது சமஸ்டி எனும் சொல் இல்லாவிட்டாலும் கூட சமஸ்டி அடிப்படையிலான நிலைப்பாடு கருத்து அரசியல்சாசனத்தில் இருக்குமாக இருந்தால் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொள்ளலாமா இல்லை என்பதை சிந்திக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும்.

இந்தியா பல மாநிலங்களை கொண்ட ஒரு நாடு அங்கு எல்லாவற்றிலும் அதிகார பகிர்வு ஒரே விதமாக இருக்கிறது. அங்கே சமஸ்டி எனும் சொல் பாவிக்கப்படவில்லை. ஒற்றையாட்சி எனும் சொல்லும் பாவிக்கப்படவில்லை இவ்வாறே உலகில் பல நாடுகளில் ஒற்றையாட்சி எனும் சொல்லும் சமஸ்டி எனும் சொல்லும் அரசியல்சாசனத்தில் இல்லை ஆனால் அங்கெல்லாம் அதிகார பரவாக்கல் காணப்படுகிறது. எனவே எங்களும் அதிகார பகிர்வு தேவை இருக்கிறது அதிகாரம் மத்தியில் குவிந்து கிடப்பதால் கூடுதலாக பாதிக்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்கள்.மகிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் உள்ள ஜனாதிபதி முறைக்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க முடியாது அதுவொரு சர்வதிகார முறை. மிகவும் தவறான முறை ஒரு தனிக்குடும்பம் நாட்டை ஆட்சி செய்கின்ற முறை எனவே நாங்கள் அவ்வாறான ஒரு முறையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மற்ற விடயம் சமயம் சம்மந்தமான விடயம் 1972,1978 ஆண்டுகளில் இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி பலர் பலவிதமாக சிந்தித்திருக்கின்றார்கள். வணகத்திற்குரிய மல்கம் றஞ்சித் கர்த்தினால் அவர்களை கூட நான் சந்தித்திருக்கிறேன் அவர் கூறினார் பௌத்திற்கு முன்னுரிமை என்பதை உதாசீனம் செய்ய முடியாது, அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்ற மதங்களுக்கு எவ்வித பாதங்களும் ஏற்படாது நாட்டில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை அவர் கூறியிருக்கின்றார். எனவே நாம் எதிர்ப்பது பௌத்த பெரும்பான்மையை அல்ல பௌத்த கோட்பாடுகள் கொள்கையின் படி ஆட்சி நடந்தால் ஒரு முறைப்பாடு சொல்வதற்கு இடமிருக்காது ஆனால் பௌத்த பெரும்பான்மையின் பேரில் பௌத்த சமயத்தை சில பேர் தாங்கள் விரும்பிய பிரகாரம் தங்களுடை தேவைகளுக்காக பயன்படுத்துகின்ற நிலைமை காரணமாகதான் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது ஆனப்படியால் அதனை நாங்கள் பரிசீலக்க வேண்டிய விடயம்.

தமிழரசு கட்சி பதவிகளுக்காக விலைபோகின்றவர்கள் அல்ல அமரர் திருச்செல்வத்தை தவிர வேறு எவரும் அமைச்சர்களாக இருக்கவில்லை, அமிர்தலிங்கத்தின் காலம் முதல் எங்களுக்கு முக்கிய அமைச்சுப்பொறுப்பு தருவதாக பல அரச தலைவர்கள் உறுதியளித்தார்கள் ஆனால் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, எனவே இங்கு கூச்சல் இடுக்கின்ற தம்பிமார்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் தமிழரசுக் கட்சி பதவிகளுக்கு விலைபோகின்றவர்கள் அல்ல விலைபோக மாட்டோம், எங்கள் மக்களை நாம் கடைசி வரையிலும் கைவிடமாட்டோம் நாங்கள் தந்தை செல்வாவின் வழி வந்தவர்கள் தந்தை செல்வாவுக்கு துரோகம் செய்ய மாட்டோம். மீண்டும் ஒரு குழப்ப நிலைமைக்கு நாங்கள் காரணிகளாக இருக்க கூடாது.இறுதியில் அரசியல் சாசன வடிவம் வந்த பின்னர் அது ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தால் அதன் பின்னர் மக்களுடைய கருத்தை மாவட்டம் தோறும் சென்று பெற்று மக்களுடன் ஆலோசித்துதான் ஒரு முடிவை எடுப்போம்.என்றார்

http://globaltamilnews.net/archives/32981

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் கேட்டார். ,சமஸ்டி கேட்டார்.பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு என்றார்.சமஸ்டி என்ற சொல்லையே அரசியல் சாசனத்தில் இடம்பெற அனுமதிக்காதவர்கள் .எப்படி அதனை நடைமுறைப்படுத்த அனுமதிப்பார்கள்? சம்பந்தன் தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றுகிறார்.அவருக்கு அவருடைய எதிக்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்து வரக்கூடாது. ஏனைய தமித்தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களும் தங்கள் பதவிகளைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக ஒரு இனத்தின் அடிப்படைக் கோரிக்கையை குழிதோண்டிப் புதைக்கிறார்கள்.பௌத்தத்துக்கு முன்னுரை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்றவாரம்தான் அமைச்சர் ரவி கருணநாயக்கா ஒற்றையாட்சியின் கீழ்த்தான் தீர்வே என்று முழக்கமிட, சம்மந்தர் அப்படியில்லை என்கிறார். இங்கே யார் கூறுவது உண்மை. 

Link to comment
Share on other sites

7 minutes ago, ragunathan said:

சென்றவாரம்தான் அமைச்சர் ரவி கருணநாயக்கா ஒற்றையாட்சியின் கீழ்த்தான் தீர்வே என்று முழக்கமிட, சம்மந்தர் அப்படியில்லை என்கிறார். இங்கே யார் கூறுவது உண்மை. 

ரவி , 

சம்பந்த்ன் என்றவர் ஒரு பித்தலாட்டகாரர்

Link to comment
Share on other sites

8 hours ago, புலவர் said:

தமிழீழம் கேட்டார். ,சமஸ்டி கேட்டார்.பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு என்றார்.சமஸ்டி என்ற சொல்லையே அரசியல் சாசனத்தில் இடம்பெற அனுமதிக்காதவர்கள் .எப்படி அதனை நடைமுறைப்படுத்த அனுமதிப்பார்கள்? சம்பந்தன் தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றுகிறார்.அவருக்கு அவருடைய எதிக்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்து வரக்கூடாது. ஏனைய தமித்தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களும் தங்கள் பதவிகளைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக ஒரு இனத்தின் அடிப்படைக் கோரிக்கையை குழிதோண்டிப் புதைக்கிறார்கள்.பௌத்தத்துக்கு முன்னுரை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்.

சம்பந்தருக்கு எதிராக உங்கள் கருத்துக்களை முன்வைத்து தேர்தலில் நின்றீர்களா? அல்லது அப்படி நின்றவர்களை மக்கள் தேர்ந்து எடுத்தார்களா?

4 hours ago, ragunathan said:

சென்றவாரம்தான் அமைச்சர் ரவி கருணநாயக்கா ஒற்றையாட்சியின் கீழ்த்தான் தீர்வே என்று முழக்கமிட, சம்மந்தர் அப்படியில்லை என்கிறார். இங்கே யார் கூறுவது உண்மை. 

அரசியல்வாதிகள் பேசுவதில் இருந்தா உண்மையை தேடுவது?

அவர்கள் செய்வதில் இருந்து தேடுங்கள் - கண்டுகொள்வீர்கள்.

Link to comment
Share on other sites

அடுத்த தேர்தல் நெருங்குவதால் மக்களை ஏமாற்ற சம்பந்தனின் புதிய திட்டமிட்ட பித்தலாட்டம் தொடங்கியுள்ளது!

 

Link to comment
Share on other sites

சமஷ்டிக்கு பதிலாக கூடிய அதிகார பகிர்வு கிட்டினால் பரிசீலிப்போம்!

 

தந்தை செல்வாவுக்கு துரோகம் செய்ய மாட்டோம் என்கிறார் சம்பந்தன்
நமது நிருபர்

"ஒற்றையாட்சி எனும் சொல்லோ அல்லது சமஷ்டி எனும் சொல்லோ இல்லாமல் அதி கூடிய உறுதியான மத் திய அரசினால் மீளப்பெறப்பட முடி யாத அதிகார பகிர்வு புதிய அரசியல் சாசனத்தின் மூலம் கொண்டுவரப் படுமானால் அதனை நாங்கள் பரிசீ லிப்போம்" என தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள் ளார்  

கடந்த 12 ஆம் திகதி கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவரின் முழுமையான உரை வருமாறு இன்றைய நிலைமை ஒரு மிகவும் சிக்கலான நிலைமை. இந்த நிலையில் கருத்துக்கள் கூறுவது இலகுவான விடயமல்ல. அரசியல் தீர்வு சம்பந்தமான முயற்சிகளை குழப்புவதற்கு பல தரப்புகள் மிகவும் தீவிரமாக செயற்படுகின்றன. பெரும்பான்மை இனத்தின் மத்தியிலும் தீவிர போக்குடையவர்கள் இந்த முயற்சியை குழப்புவதற்கு மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள். மஹிந்த ராஜபக் ஷவுடைய அணியைச் சேர்ந்தவர்கள் அவருடன் சேர்ந்து செயற்படுகின்ற வேறு சில கட்சிகளை சேர்ந்தவர்களும், தீவிரமாக புதிய அரசியல் தீர்வு விடயத்தை குழப்ப தீவிரமாக செயற்படுகின்றார்கள். பெரும்பான்மையின மக்களை குழப்பி ஒரு தீர்வு ஏற்படுவதை தடுக்க இவர்கள் முற்படுகின்றார்கள். 

அதேசமயம் மக்களால் இ;ந்த கருமங்களை கையாள்வதற்கு தெரிவு செய்யப்படாதவர்கள் இன்றைக்கு இடம்பெறுகின்ற முயற்சிகளை பல விதமான குறைகள் குற்றங்களை கூறி மக்களின் மனங்களில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதை நாங்கள் அவதானிக்கிறோம். நாங்கள் பகிரங்கமாக கூறி நிற்கின்றோம் ஒரு இரகசிய தீர்வு சம்பந்தமாக தற்போது ஆக்கபூர்வமான உறுதியான முயற்சி நடைபெறுகிறது . ஒரு நிதானமான நல்ல சூழல் காணப்படுகிறது. நியாயமான நல்ல சூழல் என்று நான் கூறுவதற்கு காரணம் என்னவென்றால் இந்த அரசாங்கம் ரணில் விக்கிரசிங்க தலைமையில் உருவாக்கியது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவினுடைய சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது . ஆனபடியால் இன்று ஆட்சி செய்கின்ற அரசாங்கம் இந்த இரண்டு கட்சிகளை சார்ந்த ஒரு அரசாங்கம். அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாது விட்டாலும் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன்,ஜனதா விமுக்தி பெரமுனவின் ஆதரவுடன், ஏனைய இஸ்லாமிய தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறக் கூடிய நிலைமை இருக்கிறது.

இந்த நிலைமை சமீப காலத்தில் இருக்கவில்லை . சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது , புதிய அரசியலமைப்பை உருவாக்கி அரசியல் சாசனத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு புதிய அரசியல் சாசனத்தில் பெருமளவில் நியாயமான அதிகார பகிர்வை உருவாக்கி ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அவர் முயற்சித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியவில்லை. ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டால், மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நியாயமான அரசியல் தீர்வை உருவாக்கி, அதற்கு நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மையின சிங்கள மக்கள் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள அனைவரும் தங்களுடைய ஆதரவை வழங்கினால், மேற்படி கட்சிகளும் ஆதரவை வழங்கினால் ஒரு நியாயமான அரசியல் தீர்வை உருவாக்கலாம். இந்தக் கட்சிகள் மக்கள் மத்தியில் முறையான வகையில் பிரச்சாரம் செய்தால் அந்த அரசியல் தீர்வுக்கு மக்களின் அங்கீகாரத்தை பெறலாம்.

ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாக இருந்தால் தற்போதைய அரசியல் சாசனத்தின் பிரகாரம் அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும். அதன் பிறகு மக்களின் அங்கீகாரத்தை பெறவேண்டும் அவ்விதமாக பெற்றால்தான் அது ஒரு புதிய அரசியல் சாசனமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

புதிய அரசியல் சாசனம் அமைக்கப்பட்ட பிறகு பாராளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்படும். நாட்டுக்கு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதற்கு மிகவும் கட்டுக்கோப்பான முயற்சி அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்தப் பணியை தமிழ் மக்கள்சார்பாக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாங்கள் இருவர் செய்து வருகின்றோம்.

புதிய அரசியல் சாசனத்தில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வு, இரண்டாவது ஜனாதிபதி நிர்வாக ஆட்சி முறை, மூன்றாவது தற்போதைய தேர்தல் முறை தற்போதைய விகிதாசார முறை மற்றும் விருப்பு வாக்கு முறை என்பன இதனை மாற்றியமைப்பதா இல்லையா, மாற்றியமைப்பதாக இருந்தால் எவ்விதமாக மாற்றி அமைப்பது என்பன தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். மற்றும் புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் முயற்சி தொடர்பில் நாங்கள் அதிகம் பத்திரிகைகளுக்கு கூறுவதில்லை. அவ்வாறு கூறினால் சம்பந்தன் இப்படிச் சொல்கிறார் என சொன்னவுடன் தெற்கு பகுதியிலிருந்து பத்து பேர் அதற்கு பதில் சொல்ல வந்துவிடுவார்கள். அது பெரும்பான்மை இனத்தின் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் ஆனபடியால் எமது மக்கள் ஓரளவுக்கு நிலைமைகளை அறியாமல் இருக்கும் சூழல் இருந்தாலும் கூட நாங்கள் மௌனிகளாக இருக்க வேண்டிய ஒரு கட்டாய சூழல் இருக்கத்தான் செய்கிறது. ஏன்னென்றால் பல கருமங்கள் பல தடவைகள் குழப்பப்பட்டிருக்கின்றன.

சமீபத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன் பல மதங்களின் தலைவர்களை சந்திக்க விரும்புவதாக கேட்டு அவர்களுடன் ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் ஒரு பௌத்த குரு. அவர் மகரகம பகுதியில் உள்ள ஒரு விகாரையில் குருவாக உள்ளார். கூட்டம் நிறைவுற்றதும் அந்த தேரர் சொன்னார் உங்களுடன் நான் தனியாக பேச விரும்புகிறேன், என்னுடைய விகாரைக்கு வருவீர்களா என்று. அதற்கமைவாக இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவரை சந்திக்க சென்றேன்.அப்போது அவர் சொன்னார் " பண்டா செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக நாங்கள் போராடிய போது, 1957 ஆம் ஆண்டு அவரது இல்லத்திற்கு முன் அந்த ஒப்பந்தத்தை நான் எரித்தேன். இப்போது நாங்கள் 2017 இல் நிற்கின்றோம். இப்போது நான் நினைக்கிறேன் அன்று அதனை எரித்தது மூலமாக நான் எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறேன் என்று.”

ஆரம்பத்தில் நாங்கள் குழம்பக் கூடாது ஒரு கட்டத்தில் எல்லாம் வெளிவரும். ஒரு தீர்வு நியாயமாக வருமாக இருந்தால் அதனை நாங்கள் எங்கள் மக்களுக்கு முன்னால் கொண்டு வருவோம். அதன்போது இவ்விதமான கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலம் ஏற்பாடு செய்து மக்களுடன் கலந்துரையாடுவோம் , மக்களுக்கு விளக்குவோம் மக்களின் கருத்துக்களைக் கேட்டு, மக்களின் கருத்துக்களை அறிந்துதான் நாங்கள் ஒரு முடிவெடுப்போம் எங்களுடை மக்களின் அனுமதி இல்லாமல் எந்தவொரு தீர்வையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம், அது எங்களுடைய கடமை. இதுவரை நடந்த பேச்சு வார்த்தையின் படி மிகவும் கூடியளவில் அதிகாரங்கள் பகிர்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காணி, சட்டம் ஒழுங்கு, பொலிஸ் கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், எல்லாவிதமான கைத்தொழில், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு, சமூக பொருளாதார விடயங்கள்,எமது மக்களின் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், மக்கள் தங்களால் தெரிவு செய்ய கூடிய பிரதிநிதிகளால் தங்களின் கருமங்களை கையாளக கூடிய வகையில் அதிகாரங்கள் பகிர்தளிக்கப்படும்.

இதேவேளை வழங்கப்படுகின்ற அதிகாரங்கள் உறுதியானதாக இருக்க வேண்டும், மீளப்பெறப்படாத வகையில் இருக்க வேண்டும், அந்த அதிகாரங்களுக்கு எவ்விதமான தடைகளும் இல்லாது இருக்க வேண்டும் எவ்விதமாக குறுக்கு வழியில் அதிகாரங்களை உடைக்க முடியாத அளவில் இருக்கவேண்டும். அந்த அதிகாரங்கள் சம்பந்தமாக மத்திய அரசு அதனை பயன்படுத்தமுடியாத அளவுக்கு இருக்க வேண்டும். அவ்விதமாக இருந்தால்தான் அது உறுதியாக இருக்கும். ஒரு சமஷ்டி ஆட்சி முறையின் அடிப்படையில் சமஷ்டி முறையை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அது நிச்சமாக நடைபெறும். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த நாட்டில் சமஷ்டி எனும் சொல் ஒரு பயங்கரவாத சொல்லாக கருதப்படுகிறது. சமஷ்டி என்றால் அது பிரிவினைக்குச் செல்லும் எனும் கருத்து இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள் சமஷ்டியை ஏற்க மறுத்தவர்கள். தற்போது ஒற்றையாட்சி எனும் சொல்லும் இல்லாமல் சமஷ்டி எனும் சொல்லும் இல்லாமல் அவ்விதமான வார்த்தைகளை பயன்படுத்தாமல் அதிகாரங்கள் கூடியளவுக்கு பகிர்தளிக்கப்படுமாக இருந்தால், அந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீள பெறப்பட முடியாத ஒரு நிலைமையை உருவாக்கி, அந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தான் பயன்படுத்தமுடியாத நிலைமையை உருவாக்கி எமது மக்களின் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் எமது மக்கள் சுதந்திரமாக அந்த அதிகாரங்களை பயன்படுத்தலாமா என்பதை நாங்கள் அலசி விசாரணை செய்து அது சம்பந்தமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றோம்.

ஒற்றையாட்சி எனும் சொல் இருக்கக் கூடாது, ஒற்றையாட்சி எனும் சொல்லை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள கூடாது, சமஷ்டி எனும் சொல் இல்லாவிட்டாலும் கூட சமஷ்டி அடிப்படையிலான நிலைப்பாடு கருத்து அரசியல்சாசனத்தில் இருக்குமாக இருந்தால் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொள்ளலாமா இல்லையா என்பதை சிந்திக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும்.

இந்தியா பல மாநிலங்களை கொண்ட ஒரு நாடு அங்கு எல்லாவற்றிலும் அதிகார பகிர்வு ஒரே விதமாக இருக்கிறது. அங்கே சமஷ்டி எனும் சொல் பாவிக்கப்படவில்லை. ஒற்றையாட்சி எனும் சொல்லும் பாவிக்கப்படவில்லை இவ்வாறே உலகில் பல நாடுகளில் ஒற்றையாட்சி எனும் சொல்லும் சமஷ்டி எனும் சொல்லும் அரசியல்சாசனத்தில் இல்லை. ஆனால் அங்கெல்லாம் அதிகார பரவாக்கல் காணப்படுகிறது. எனவே எங்களுக்கும் அதிகார பகிர்வு தேவை இருக்கிறது அதிகாரம் மத்தியில் குவிந்து கிடப்பதால் கூடுதலாக பாதிக்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்கள்.மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக் காலத்தில் உள்ள ஜனாதிபதி முறைக்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க முடியாது அதுவொரு சர்வாதிகார முறை. மிகவும் தவறான முறை, ஒரு தனிக்குடும்பம் நாட்டை ஆட்சி செய்கின்ற முறை எனவே நாங்கள் அவ்வாறான ஒரு முறையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மற்ற விடயம் சமயம் சம்பந்தமான விடயம் 1972,1978 ஆண்டுகளில் இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி பலர் பலவிதமாக சிந்தித்திருக்கின்றார்கள். வணக்கத்திற்குரிய மல்கம் றஞ்சித் கர்த்தினால் அவர்களை கூட நான் சந்தித்திருக்கிறேன் அவர் கூறினார் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பதை உதாசீனம் செய்ய முடியாது, அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்ற மதங்களுக்கு எவ்வித பாதங்களும் ஏற்படாது நாட்டில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ற கருத்தை அவர் கூறியிருக்கின்றார். எனவே நாம் எதிர்ப்பது பௌத்த பெரும்பான்மையை அல்ல, பௌத்த கோட்பாடுகள் கொள்கையின் படி ஆட்சி நடந்தால் ஒரு முறைப்பாடு சொல்வதற்கு இடமிருக்காது. ஆனால் பௌத்த பெரும்பான்மையின் பேரில் பௌத்த சமயத்தை சில பேர் தாங்கள் விரும்பிய பிரகாரம் தங்களுடை தேவைகளுக்காக பயன்படுத்துகின்ற நிலைமை காரணமாகத்தான் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது . ஆனபடியால் அது நாங்கள் பரிசீலிக்க வேண்டிய விடயம்.

தமிழரசுக் கட்சி பதவிகளுக்காக விலைபோகின்றவர்கள் அல்ல அமரர் திருச்செல்வத்தை தவிர வேறு எவரும் அமைச்சர்களாக இருக்கவில்லை, அமிர்தலிங்கத்தின் காலம் முதல் எங்களுக்கு முக்கிய அமைச்சுப்பொறுப்பு தருவதாக பல அரச தலைவர்கள் உறுதியளித்தார்கள். ஆனால் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, எனவே இங்கு கூச்சல் இடுகின்ற தம்பிமார்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் தமிழரசுக் கட்சி பதவிகளுக்கு விலைபோகின்றவர்கள் அல்ல விலைபோக மாட்டோம், எங்கள் மக்களை நாம் கடைசி வரையிலும் கைவிடமாட்டோம். நாங்கள் தந்தை செல்வாவின் வழி வந்தவர்கள் தந்தை செல்வாவுக்கு துரோகம் செய்ய மாட்டோம். மீண்டும் ஒரு குழப்ப நிலைமைக்கு நாங்கள் காரணிகளாக இருக்க கூடாது.இறுதியில் அரசியல் சாசன வடிவம் வந்த பின்னர் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் அதன் பின்னர் மக்களுடைய கருத்தை மாவட்டம் தோறும் சென்று பெற்று மக்களுடன் ஆலோசித்துத்தான் ஒரு முடிவை எடுப்போம்.என்றார்

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-07-16#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நவீனன் said:

மீண்டும் ஒரு குழப்ப நிலைமைக்கு நாங்கள் காரணிகளாக இருக்க கூடாது

இவ்வளவு காலமும் தமிழர்களே குழப்ப நிலைக்கு காரணம்?

நீங்கள் பயப்படதேவையில்லை ....சிங்களவர்களே குழப்புவார்கள் நீங்கள் அதில் குளிர்காயலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சமஷ்டிக்கு பதிலாக கூடிய அதிகார பகிர்வு கிட்டினால் பரிசீலிப்போம்!"

இந்த நிலைப்பாடு சரி என்றே தோன்றுகிறது.

இதற்கும் (தமீழீழத்தை கைவிட்ட நிலையில்), விடுதலைப் புலிகளின் - இறைமையும் சுதந்திரமும் உடைய தமிழீழம் - ஆனால் சிங்கள அரசு இறைமையும் சுதந்திரமும் உடைய தமிழீத்திற்கு நிகரான தீர்வு திட்டத்தை முன்வைக்குமாயின் அதனை கருத்திலெடுத்துப் பரிசீலிப்போம் என்பதற்கும் - இராணுவப் பலமுடைத்த  நிலையில் விடுதலைப் புலிகள், பலமற்ற நிலையில் கூட்டமைப்பு சர்வதேச சமூக ஆதரவை வேண்டி நித்திற்கும் கூட்டமைப்பு என்ற வேறுபாட்டை தவிர, என்ன வேறுபாடு உண்டு?

இதில் கூட்டமைப்பு கிந்தியாவுடன் மிக கவனமாக இருக்கவேண்டும்.

இந்த நிலைபாடு கிந்தியாவின் திணிப்பை தம்மீதும் மற்றும் சர்வதேச சமுகம் மீதும் லாவகமாக தவிர்ப்பதே நோக்கமாக கொண்டதாக தெரிகிறது.  

இது ஓர் கொள்கை சார்ந்த உபாயம். மேலும் இது சிங்களத்தை தீர்வு என்பதற்க்கு மிகவும் தேர்வுகள் உள்ளது, ஆயினும் சிங்களத்திற்கு அர்த்தபூர்வமான தீர்விட்கு  கருத்தியல் அளவிற்கேனும் அறவே விருப்பம் இல்லை என்பதை கிந்தியாவை சுற்றி வளைத்து தவிர்ப்பதற்காண ஓர் யுக்தியாகவே தெரிகிறது.

இது மிகவும் ஆபத்தான ஆட்டம் ஆனால் ஆடவேண்டிய நிலையில் கூட்டமைப்பு. அதாவது இயலுமான அளவு வீட்டுக் கொடுப்புகளை செய்து சிங்களத்துடன்  ஒத்துழைத்து அத்துடன் அவ்வாறான தோற்றத்தை ஏட்படுத்துவதும் அதே நேரம் சிங்களம் ஓர் அர்த்த பூர்வமான தீர்வை  எழுத்து மூலம்  பகிரங்கமாக சமர்பிக்காமல் பார்த்துக்கொள்வதும்.

இதன் காரணமாகவே சம்பந்தன் எந்த தீர்வையிலானும் சர்வ சனா வாக்கெடு தேவை என்பதை வலியுறுத்தி வருகிறார்.

வேறு என்ன தெரிவு தமிழர் தரப்பிடம் இருக்கிறது? கூட்டமைப்பின் அணுகுமுறையைச் சாடுபவர்கள் இதனை முதல் கருத்தில் கொள்ள வேண்டும்.

சுமந்திரனின் அனுகுமுறையும்அவ்வாறான நீண்ட கால அடிப்படையில் உறவு கூடி சிங்களத்  தவளையை மிகவும் மெதுவாக அவிப்பததற்கு என்றே தென்படுகிறது.     

முக்கியா குறிப்பு: நான் சம்மந்தன், சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவாளோனோ அலாதி எதிர்ப்பாளனோ அல்ல. யார் குற்றியாகிலும் அரிசி ஆக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.   

  

 

Link to comment
Share on other sites

18 hours ago, போல் said:

அடுத்த தேர்தல் நெருங்குவதால் மக்களை ஏமாற்ற சம்பந்தனின் புதிய திட்டமிட்ட பித்தலாட்டம் தொடங்கியுள்ளது!

 

ஆனாலும் இந்த பித்தலாட்டகாரர்களை தானே எமது மக்கள் நம்புகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சம்பந்தனைச் சந்திக்கிறார் ஜனாதிபதி! - சர்வ கட்சிப் பேரவையை உருவாக்கத் திட்டம் 
[Sunday 2017-07-16 05:00]
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பௌத்த மாநாயக்க தேரர்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து  சர்வ கட்சிப் பேரவை ஒன்றை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றில் அரசியல் அமைப்பு பேரவையினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பு வரைவுத் திட்டத்திற்கு சர்வ கட்சிப் பேரவையின் ஊடாக அனுமதி பெற்றுக் கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். அரசியல் அமைப்பு யோசனைகள் தயாரிக்கப்பட்டதும் சர்வ கட்சிப் பேரவை கூட்டப்படும்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பௌத்த மாநாயக்க தேரர்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து சர்வ கட்சிப் பேரவை ஒன்றை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றில் அரசியல் அமைப்பு பேரவையினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பு வரைவுத் திட்டத்திற்கு சர்வ கட்சிப் பேரவையின் ஊடாக அனுமதி பெற்றுக் கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். அரசியல் அமைப்பு யோசனைகள் தயாரிக்கப்பட்டதும் சர்வ கட்சிப் பேரவை கூட்டப்படும்.   

நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளைப் போன்றே, நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யாத அரசியல் கட்சிகள் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு சர்வகட்சிப் பேரவையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. சர்வ கட்சிப் பேரவையில் அனுமதி பெற்றுக்கொள்ளும் புதிய அரசியல் அமைப்பு பரிந்துரைகள் மூன்று பீடங்களினதும் பீடாதிபதிகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களிடம் முன்வைக்கப்படவுள்ளது.

அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=186418&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

ஆனாலும் இந்த பித்தலாட்டகாரர்களை தானே எமது மக்கள் நம்புகிறார்கள்

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேணுமெண்டு எங்கடை ஆக்கள் சும்மாவே சொன்னவையள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.