Jump to content

டிசெம்பர் வரை பொறுமையாக இருங்கள்


Recommended Posts

டிசெம்பர் வரை பொறுமையாக இருங்கள்

 
டிசெம்பர் வரை பொறுமையாக இருங்கள்
  •  

கூட்டு அரசிலிருந்து வெளியேறுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, கட்சிக்குள் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில், டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்குமாறும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஸ் பயணத்துக்கு முன்னதாக, அவசர அவசரமாக நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிருப்தி அமைச்சரான ஜோன் செனவிரத்தின, எதிர்வரும் டிசெம்பர் மாதத்துடன் அரசிலிருந்து தாம் வெளியேறப் போவதாகக் கூறியுள்ளார். அதிருப்தி அமைச்சர்கள் சிலரும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். வெளியேறுவதாக இருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக வெளியேற வேண்டும். நாம் கூட்டு அரசில் இருப்பதால்தான், சில விடயங்களை எதிர்க்கக் கூடியதாக உள்ளது. மக்கள் விரோத தீர்மானங்களை தோற்கடிக்க முடிகின்றது. எங்களில் ஒரு பகுதியினர் வெளியேறினாலும் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தை ஆதரிக்கும் வகையில், எஸ்.பி.திசநாயக்க, மகிந்த சமரசிங்க ஆகியோரும் தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.

மிகக் காரசாரமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இறுதியில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருங்கள். வரவு – செலவுத் திட்டக் கூட்டத் தொடருடன் முக்கிய முடிவு எடுப்போம் என்று கூறியுள்ளார்.

http://uthayandaily.com/story/11610.html

Link to comment
Share on other sites

டிசெம்­பர் வரை எம்­மால் பொறுத்­தி­ருக்க முடி­யாது

சு.க. அதி­ருப்­தி­யா­ளர் குழு மைத்­தி­ரி­யி­டம் தெரி­விப்பு

டிசெம்­பர் வரை எம்­மால் பொறுத்­தி­ருக்க முடி­யாது
  •  

டிசெம்­பர் மாதம் வரை­யில் பொறு­மை­யாக இருக்க முடி­யாது என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அதி­ருப்திக் குழு, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் தெரி­வித்­துள்­ளது.

கூட்டு அர­சி­லி­ருந்து வெளி­யே­று­மாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அதி­ருப்­திக் குழு­வைச் சேர்ந்த 18 உறுப்­பி­னர்­கள், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அழுத்­தம் கொடுத்­தி­ருந்­த­னர். எதிர்­வ­ரும் டிசெம்­பர் மாதம் வரை­யில் பொறு­மை­யாக இருக்­கு­மா­றும், வரவு – செல­வுத் திட்­டத் தொட­ரு­டன் முடிவு எடுக்­கப்­ப­டும் என்­றும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில் டிசெம்­பர் மாதம் வரை பொறு­மை­யாக இருக்க முடி­யாது என்று அதி­ருப்­திக் குழு அறி­வித்­துள்­ளது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­றா­மல் இருப்­ப­தாக இருந்­தால், தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­க­வேண்­டும். எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்­வ­தற்கு எமக்கு அனு­மதி வழங்­க­வேண்­டும். இந்த இரண்டு நிபந்­த­னை­க­ளை­யும் அரச தலை­வர் ஏற்க மறுத்­தால், தாம் வெளி­யே­று­வோம் என்று கூறி­யுள்­ள­னர்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­குள் எழுந்­துள்ள இந்த நெருக்­க­டி­க­ளைச் சமா­ளிக்­கும் நட­வ­டிக்­கை­யில் முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­காக குமா­ர­துங்க ஈடு­பட்­டுள்­ளார்.

http://uthayandaily.com/story/11802.html

Link to comment
Share on other sites

‘டிசெம்பர்வரை காத்திருக்கவும்’
 Comments - 0 Views - 10

image_8d571ac0f1.jpgகூட்டாட்சி அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்கு தங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், டிசெம்பர் வரையிலும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டுள்ளதாக, அறிய முடிகின்றது.   

இந்தச் சந்திப்பின்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழு, ஜனாதிபதியிடம் இரண்டு விடயங்களை முன்வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதில், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டும் என்பது, பிரதான நிபந்தனையாகும். அவ்வாறு இல்லாவிடின், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பக்கத்தில் தங்களை அமர்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்பது, இரண்டாவது விடயமாகும் என்றும் அறியமுடிகின்றது.   

இதேவேளை, இந்தக் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அடுத்த பேச்சுவார்த்தையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பங்குபற்றச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.   

எனினும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கான திகதி குறித்து எந்தவித உத்தியோகபூர்வத் தகவலும் வெளியாகவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷுக்கு விஜயம் செய்வதற்கு முன்னரே, இந்தக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/டிசெம்பர்வரை-காத்திருக்கவும்/175-200710

Link to comment
Share on other sites

ரனில் இவரைimage_8d571ac0f1.jpg   காய்வெட்டி வேறொரு குழுவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கவும் தயங்க மாட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.