Jump to content

ஏ.ஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதிக் கொள்ளும் ரசிகர்கள்


Recommended Posts

ஏ.ஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதிக் கொள்ளும் ரசிகர்கள்

 
ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதி கொள்ளும் தமிழ், இந்தி பயன்பாட்டாளர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

லண்டன் வெம்ப்ளியில் உள்ள அரங்கம் ஒன்றில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற் ஏ.ஆர் ரஹ்மானின் ''நேற்று, இன்று, நாளை'' என்ற இசை கச்சேரி, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி பேசும் ட்விட்டர் பயன்பாட்டாளர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

வெம்ப்ளியில் உள்ள தி எஸ் எஸ் இ அரங்கத்தில் ஜூலை 8 ஆம் தேதி மாலை ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரி நடைபெறும் என்றும், அதில் பாடகர்கள் பென்னி தயால், ஜாவேத் அலி, நீத்தி மோகன், ஹரிச்சரன், ஜோனிட்டா காந்தி மற்றும் ரஞ்சித் பரோட் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இச்சூழலில், சமூக ஊடகமான ட்விட்டரில் ஆர் ஸ்மித் என்ற பயன்பாட்டாளர், 'வெம்ப்ளியில் நடைபெற்ற கச்சேரி மிகவும் மோசம். தொடர் கிராஃபிக்குகளால் பெரும் தலைவலி' என்று பதிவிட்டிருந்தார்.

ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதி கொள்ளும் தமிழ், இந்தி பயன்பாட்டாளர்கள்படத்தின் காப்புரிமை@ARCHANA_SSAWANT

அதனை தொடர்ந்து, அர்ச்சனா சாவந்த் என்ற பயன்பாட்டாளர், 'வெம்ப்ளியில் நடைபெற்ற கச்சேரியால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இந்த ஏமாற்றத்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தேன். மாமனிதரிடமிருந்து இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை' என்று பதிவிட்டிருந்தார்.

ரஹ்மான் பாலிவுட் ஹிட் பாடல்களை பாட தவறிவிட்டார் என்றும், வெறும் லேசர் லைட்கள் தமிழ் பாடல்களை மட்டுமே கச்சேரியில் கேட்டேன் என்றும் பல பயன்பாட்டாளர்கள் ட்விட்டரில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது மட்டுமின்றி கச்சேரிக்காக செலுத்தப்பட்ட தொகையை திருப்பியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதி கொள்ளும் தமிழ், இந்தி பயன்பாட்டாளர்கள்படத்தின் காப்புரிமை@GAUTAMVAIDYA

நிர்மல் பஜாரியா என்ற பயன்பாட்டாளர், ''கச்சேரியில் பாடப்பட்ட பாடல்களில் 99% தமிழ் பாடல்கள். பாலிவுட் ரசிகர்கள் ஏமாற்றப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளார்கள்'' என்று தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அதேசமயம் கச்சேரிக்கு கெளரவ பாடகராக வரவழைக்கப்பட்ட பாடகர் ஜாவேத் அலி ஏன் நிறைய பாடல்களை பாடவில்லை என்ற கேள்வியையும் பல ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் எழுப்பியுள்ளனர்.

ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதி கொள்ளும் தமிழ், இந்தி பயன்பாட்டாளர்கள்படத்தின் காப்புரிமை@NBAJARIA

இந்நிலையில், ஏ.ஆர் ரஹ்மானின் கச்சேரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு தமிழ் மொழி பேசும் ட்விட்டர் பயன்பாட்டாளர்களும், பிரபலங்களும் தங்களுடைய பதிலடி ட்வீட்களை பதிந்து வருகின்றனர்.

''ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று வரலாறு படைத்த போது அவர் ஒரு இந்தியர். ஆனால், ஏழு அல்லது எட்டு தமிழ் பாடல்கள் பாடல்கள் பாடினால் நீங்கள் கோபப்படுகிறீர்கள். இது நியாயாமா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி.

ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதி கொள்ளும் தமிழ், இந்தி பயன்பாட்டாளர்கள்படத்தின் காப்புரிமை@CHINMAYI

மேலும், இந்த கச்சேரியில் 65 சதவீதம் இந்தி பாடல்கள் இருந்தது என்றும், இசைக்கு மொழி எல்லையில்லை என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 'மொழித்திணிப்பில் வலி எப்படி இருக்கும் என்று வட இந்தியனுங்களுக்கு புரிய வைத்த தமிழன் ஏ.ஆர் ரகுமானுக்கு வாழ்த்துக்கள்' என்று ராஜன் நெல்லை என்ற ட்விட்டர் பயன்பாட்டாளர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதி கொள்ளும் தமிழ், இந்தி பயன்பாட்டாளர்கள்படத்தின் காப்புரிமை@NELLAIRAJAN

'தமிழில் பாடல்கள் பாடியதால் இந்திக்காரர்கள் பணத்தை திருப்பி கேட்கிறார்கள். அப்படி என்றால் 1947 லிருந்து இந்தி மொழி பேசும் மாநிலங்களுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் வழங்கி வந்த மானியங்களை திருப்பித்தர வேண்டும்' என்று கிரண் பண்டுலா என்பவர் ரஹ்மானுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை நையாண்டி செய்துள்ளார்.

ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் தொடர்பான மீம்களும் தற்போது வைரலாக பரப்பப்பட்டு வருகின்றன.

http://www.bbc.com/tamil/global-40604676

Link to comment
Share on other sites

நேற்று இன்று நாளை என்ற பெயரில் தமிழர்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் தமிழ் பாடல்கள் பாடாமல் இலத்தீன் பாடல்களா பாடப்படும்? அறிவு கெட்ட வட இந்தியர்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

நேற்று இன்று நாளை என்ற பெயரில் தமிழர்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் தமிழ் பாடல்கள் பாடாமல் இலத்தீன் பாடல்களா பாடப்படும்? அறிவு கெட்ட வட இந்தியர்கள்

தமிழரில்  திறமையானோரை

தமிழராக அன்றி

இந்தியராக பார்க்கும் மனோபாவம் இது

 

ஏ.ஆர் ரகுமானையும்  அது விழுங்கிவிட்டதாக நினைத்து வந்தவர்களுக்கு......?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாங்கள் ஒன்றை கவனிக்க தவறி விட்டோம் இங்கிருக்கும் வட இந்தியர்கள் ஐந்து தலமுறை தாண்டியவர்கள் ஆனலும் அவர்கள் தங்கள் மொழிகளை கலாச்சாரங்கள் என்பவற்றை விட்டு விடவில்லை என்பதையே இங்கு காட்டுகிறது. ஆனால் நாம் இரண்டாவது தலைமுறையுடன் எமது கலாச்சரம் மொழி என்பவற்றை வெகு விரைவாக துலைப்பதுக்கு வெகு ஆவலாக உள்ளம்.

நான் வந்த புதிதில் ஒரு தமிழ் செல்வந்தர்  படாபபோகமாய் தனது மகளுக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் செய்தார் நாங்களும் அவரின் பப்பா ஏற்தலில் அடிமாடுகளாய் வாழைமரம் கட்டுவதில் இருந்து எல்லாம் விடாமல் செய்தம் கடைசியில் தான் அவரின் மகள் நன்றி சொல்லும்போது ஆங்கிலத்தில் பினாத்தினா அவரிடம் கேட்டேன் ஏன் ஆங்கிலம் என்று வினாவியபோது மகள் வீட்டிலும் ஆங்கிலம்தான் என்றார் பெருமையாக நானும் படித்த குடும்பம் என்று விட்டு வந்து விட்டன். சமீபத்தில் கவன்சில் பராமரிப்பு முதியோர்கள் வண்டியில் அவரை கண்டபோது அதிர்ச்சி ஆகி போனன் நீண்ட வருடங்கள் பிரிவு பலதும் கதைத்தார் கடைசியில் அவர் சொன்னார் "நான் விட்ட பிழையை நீயும் விடாதை பிள்ளைகளை கலையோடு மட்டுமல்ல கலாச்சாரம் மொழி ஆகியவை உடன் வளர்வி ராசா "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியர்களுக்கு நிகழ்ச்சி முடிவதற்கு 5 நிமிடத்திற்கு முன்னர் தான் ரோசம் வந்தது. அதுவும் கார் பார்கில் நெரிசல் ஆகிவிடும் என்று ஓடியிருப்பார்கள்.

இரு தொகுதி  ஆசனங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல இசை நிகழ்ச்சி.

இரண்டுதரம் பிற்போடப்பட்டும் வெற்றிகரமாக நடைபெற்றது.

Link to comment
Share on other sites

ரஹ்மானிடம் இந்திப் பாடல்களைக் கேட்டு வட இந்தியர்கள் அடம்பிடிப்பதே நம் வெற்றிதானே!

ஆர்.டி.பர்மன், லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் போன்ற இந்தி இசையமைப்பாளர்கள், ஒருசில தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளனர். பாடல்களுக்கு மட்டுமே அவர்கள் இசையமைப்பார்கள். பின்னணி இசைக்கு வேறு ஒருவரைத் தேடிச் செல்ல வேண்டும். `உயிரே உனக்காக' படத்துக்கு லக்ஷ்மிகாந்த்-பியாரிலாலும் `பூமழை பொழியுது' படத்துக்கு ஆர்.டி.பர்மனும் இசையமைத்திருந்தனர். இந்தி இசையமைப்பாளர்கள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலத்தில், தமிழகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்திப் பாடல்களை மறையச் செய்த பெருமை இளையராஜாவுக்கு உண்டு என்றால், வட இந்தியர்களேயே தமிழ்ப் பாடல்களைக் கேட்கவைத்த பெருமை ரஹ்மானுக்கு உண்டு. 

இளையராஜா, `ஹேராம்' போன்று தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு இசையமைத்தவர். மற்றபடி, இந்திப் படங்களுக்கு இளையராஜா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ஆனால், ரஹ்மானின் கதையே வேறு. 1992-ம் ஆண்டு ரஹ்மானின் இசையில் வெளியான `ரோஜா' படப் பாடலின் இனிமையில் இந்தியாவே மயங்கியது. அதேபோல், `ரோஜா' படத்தின் பின்னணி இசையிலும் மிரட்டியிருப்பார் ரஹ்மான். `காதலன்' படத்தில் வரும் `முக்காலா முக்காப்லா...' பாடல் உள்பட பல தமிழ்ப் பாடல்கள் வட இந்தியாவிலும் ஹிட்டானது.

பாடல்

ராம்கோபால் வர்மாதான், `ரங்கீலா' படத்தின் மூலம் ரஹ்மானை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர். இந்தியில் நதீம் ஷ்ரவன், அனுமாலிக், ஜெயிந்த் லலித் போன்ற டாப் க்ளாஸ் இசையமைப்பாளர்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலம் அது.  ரஹ்மான், அவர்களைவிட ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசப்பட, பாலிவுட் பிரமித்தது. தமிழனின் இசைக்கு பாலிவுட் தலையாட்டத் தொடங்கியது. ரஹ்மானின் இசைக்காக பாலிவுட் இயக்குநர்கள் தவம்கிடந்தனர்.  

1999-ம் ஆண்டு `தால்' படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். 2002-ம் ஆண்டு கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான `லகான்' படத்துக்கும் ரஹ்மான்தான் இசை. தமிழில் இளையராஜாவின் படம் போட்டு `ராஜாவின் இசையில்' என விளம்பரப்படுத்துவதுபோல இந்திப் படங்களும் `ரஹ்மானின் இசையில்' என விளம்பரப்படுத்தியது. இந்தி சினிமா பாடல்களைத் தமிழர்கள் முனுமுனுத்த காலம் போய், தமிழ் இசையமைப்பாளரின் பாடலை வட இந்தியர்கள் முனுமுனுக்கத் தொடங்கினர். உச்சகட்டமாக `ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் இடம்பெற்ற `ஜெய் ஹோ' பாடல் இசைத் தமிழனை ஆஸ்கர் தமிழனாக மாற்றியது. 

இசைக்கு, மொழி கிடையாது. இந்தி தெரிந்துகொண்டுதான் தமிழர்கள்  `ஏக் துஜே கேலியே' முதல் `தில் தோ பாஹல் ஹே' வரை இந்திப் பாடல்களைக் கேட்டு ரசிக்கவில்லை. ரஹ்மான் இந்திப் படங்களுக்கு இசையமைக்கும் முன்னரே, அவரின் தமிழ்ப் பாடல்களை வட இந்தியர்கள் கேட்டு தலையாட்டிக்கொண்டுதான் திரிந்தனர். `ட்யூன்' என அழைக்கப்படும் மெட்டுதானே பாடல்களுக்கு மிக முக்கியம். வரிகளைவிட இசைதானே மயக்கும். இப்போதும்கூட இந்தி மொழி தெரியாத பல மாநில மக்களும் இந்திப் பாடல்களை விரும்பிக் கேட்கிறார்கள் என்றால், அதற்கு ட்யூன்தானே காரணம். `முத்து' படப் பாடல் ஜப்பானில் பாப்புலரானது இப்படித்தானே. மொழி தெரிந்தா ஜப்பானியர்கள் கேட்டார்கள்... ஆடினார்கள்? இசை ஆடத் தூண்டியது அவ்வளவுதானே!

வட இந்தியர்களை கெஞ்ச வைத்த ரஹ்மான்

இதையெல்லாம் புரிந்துகொள்ளாத சில வட இந்தியர்கள், லண்டனில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியை வைத்து சர்ச்சையைக் கிளப்பிவருகின்றனர். பிரிட்டன்வாழ் தமிழர்களுக்காக ஜூலை 8-ம் தேதி லண்டன் `வெம்ப்ளி' பகுதியில் உள்ள எஸ்.எஸ்.எஸ் அரீனாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான்.  நிகழ்ச்சியின் பெயர் `நேற்று இன்று நாளை' எனத் தெளிவாகத் தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானும் தன் ட்வீட்டில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். ரஹ்மானைப் பொறுத்தவரை, தன் இசை நிகழ்ச்சியில் சில இந்திப் பாடல்களையும் பாடுவது உண்டு. ஏனென்றால், அவரின் இசையில் வெளியாகி ஹிட்டான இந்திப் பாடல்களும் ஏராளம். அதனால், இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான வட இந்தியர்களும் டிக்கெட் வாங்கியிருந்தனர். 

நிகழ்ச்சிக்குச் சென்ற வட இந்தியர்கள், இந்திப் பாடல்களைப் பாடுமாறு கோஷமிட்டுள்ளனர். தமிழ் மக்கள் கூடியிருந்த நிகழ்வு அது. எனினும் ரஹ்மான் குழுவினர் நான்கு இந்திப் பாடல்களைப் பாடியிருக்கின்றனர். திருப்தியடையாத வட இந்தியர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் திட்டியபடி, அரங்கத்தைவிட்டு வெளியேறினர். `இசை நிகழ்ச்சியில் இந்தியில் ஒரு சதவிகிதப் பாடலைக்கூட ஏ.ஆர்.ரஹ்மான் பாடவில்லை. தவறாக விளம்பரப்படுத்தியதால் எஸ்.எஸ்.எஸ். அரீனா நிரம்பியது. தமிழில் பேசி ஏ.ஆர்.ரஹ்மான் எங்களை அவமதித்துவிட்டார்' எனவும் ட்வீட்டரில் வட இந்தியர்கள் கொதித்தனர். `நிகழ்ச்சிக்கான கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டும்' என்றும் `ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுமென்றே இந்திப் பாடல்களைப் புறக்கணித்தார்' என்றும் ரஹ்மானுக்கு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவருகின்றனர்.

இந்தச் சர்ச்சை குறித்து, ஏ.ஆர்.ரஹ்மான் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், ரஹ்மானின் ரசிகர்கள் ``தமிழ் இசை நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, இந்திப் பாடல்களைப் பாடச் சொல்வது எந்தவிதமான மனநிலை என்பது தெரியவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான்  `The Mozart of Madras'  என்றுதான் தன்னைக் குறிப்பிடுவார்.  `நேற்று இன்று நாளை' என்ற பெயரில்தான் நிகழ்ச்சி நடத்தினார். `நேற்று இன்று நாளை' என்பது ஸ்பானீஷ் மொழியா? உண்மையாகவே இசையை ரசிப்பவர்கள் மொழியைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். `ஆஸ்கர் மேடையிலேயே எல்லாப் புகழும் இறைவனுக்கே' எனத் தமிழில் பேசியவர் ரஹ்மான்'' என வட இந்தியர்களுக்குப் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இசைத் தமிழனிடம் இந்திப் பாடல்களைக் கேட்டு வட இந்தியர்கள் அடம்பிடிப்பதே நமக்குக் கிடைத்த வெற்றிதானே!

http://www.vikatan.com/news/tamilnadu/95544-rahman-performs-tamil-songs-in-london-to-uproar-in-hindi.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DEvDTCMU0AEsLDi.jpg

விழுந்து விழுந்து சிரித்தேன்....:grin:

Link to comment
Share on other sites

இந்த கிந்தியன் தொல்லை வரவர தாங்க முடியல..:D:  இவனுங்க தாத்தாவுக்கு தாத்தா எல்லாம் ஈரான்ல இருந்துதான் வந்தாங்களாம். :cool: அந்த பாட்டையும் கொஞ்சம் கேட்கிறது.. :love:

Link to comment
Share on other sites

லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஹ்மான் சகோதரி

 

 
AR_Rahman_and_Reihana

 

'நேற்று, இன்று, நாளை’ என்கிற இசை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8-ல் லண்டனில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாகவும், அதனால் சிலர் வெளியேறியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இசை நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சகைளுக்கு ரஹ்மான் சகோதரி ரெஹானா கூறியதாவது:

நீங்கள் நினைப்பது போன்று அங்கு எதுவும் நடைபெறவில்லை. ஆனால் ட்விட்டரில் தான் இதை சர்ச்சையாக்கி வருகின்றனர். அப்படி எதுவும் நடந்திருந்தால் நான் கண்டுபிடித்து இருப்பேன்.

ஏனென்றால் நான் ரசிகர்களை தொடர்ந்து கவனிப்பேன். எனக்கு தெரிந்து ஒரு குழு எழுந்து 'ஹம்ம ஹம்மா' பாடலுக்கு ஆட்டம் போட்டதை மட்டும் தான் பார்த்தேன். 

நிகழ்ச்சியை புறக்கணித்து அப்படி யாரும் வெளியேறிவிடவில்லை. இவர்கள் கூறுவது போல் அங்கு குழுமியிருந்த 10,000 பேரில் 10 பேர் மட்டும் வெளியேறினால் எங்களுக்கு எப்படித் தெரியும். அப்படியே அது நடந்ததா என்பதும் கேள்விக்குறிதான். அல்லது பொய் கூறுகிறார்களா என்றும் தெரியாது. 

அப்படியே அந்த 10 பேர் வெளியேறினாலும், அவர்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு கூட சென்றிருக்கலாம். உண்மையை கூற வேண்டுமென்றால், நிகழ்ச்சி விரைவில் முடிந்துவிட்டது, இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்றுதான் அங்கிருந்தவர்களின் மனநிலையாக இருந்தது. 

இசை என்பது சர்வதேச மொழி. ஒரு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் கூட ரஹ்மான் இசையை ரசிக்க முடியும். ஒரு சில வெளிநாட்டவர்களும் குழுவாக வந்திருந்தனர். அவர்களுக்கு அங்கு நடப்பது தமிழ், ஹிந்தி பாடல்கள் என்று எந்த மொழியும் தெரியாது. ஆனாலும் இசையை ரசித்தனர்.

இந்த இசை நிகழ்ச்சியின் தலைப்பே மிகத் தெளிவாக உள்ளது. அப்படி என்றால் தமிழர்கள் கூட ஹிந்தி பாடல்கள் பாடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டியிருக்கலாம். இதுபோன்று சர்ச்சைகளை ஏன் உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா என்றும் தெரியாது. 

அங்கு வந்த யாரும் எதுவும் செய்யவில்லை. இதன்மூலம் ஏதோ புது சர்ச்சையை உருவாக்க நினைக்கிறார்கள். அங்கு நடைபெறாத ஒன்றை நடப்பதாக கற்பனை செய்து கூறுகிறார்கள்.

மொழியை கடந்து இருப்பவர்கள் தான் இசைக் கலைஞர்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதையும் இசையால் இணைக்க வேண்டும் என்று விரும்புகிறவர், இலக்கு வைத்திருப்பவர் தான் ரஹ்மான் என்று விளக்கமளித்தார்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/14/ar-reihana-clears-the-air-about-london-music-controversy-2737356.html

Link to comment
Share on other sites

'ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை': லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை பற்றி ரஹ்மான் 'பீலிங்'!

 

 
ARR

 

சென்னை: ரசிகர்கள் இல்லாமல் நான் என்றுமே இல்லை; அவர்களது ஆதரவுக்கு நன்றி என்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார் 

உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'நேற்று, இன்று, நாளை’ என்கிற பெயரில் உலகளாவிய இசை சுற்றுப்பயணம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். அதன் முதல் நிகழ்ச்சி ஜுலை 8-ல் லண்டனில் நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாகவும், அதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் சிலர், நிகழ்ச்சியியலிருந்து வெளியேறியதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவமானது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

அவரது சகோதரி ரைஹானா இதுகுறித்து உரிய விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

எனது ரசிகர்கள் இல்லாமல் நான் என்றுமே இல்லை; அவர்களது ஆதரவுக்கு எனது நன்றி.

எனது ரசிகர்களுக்கு என எப்பொழுதும் சிறப்பானவற்றையே வழங்க நேர்மையான முறையில் முயற்சிக்கிறேன்.

இவ்வாறு ரஹ்மான் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/16/ரசிகர்கள்-இல்லாமல்-நான்-இல்லை-லண்டன்-இசை-நிகழ்ச்சி-சர்ச்சை-பற்றி-ரஹ்மான்-பீலிங்-2738392.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை திட்டப்பணிகளுக்காக சக பொறியாளருடன்(இவர் உத்திரப் பிரதேசத்தை சார்ந்தவர்) செல்லும்போது, லண்டனில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி பற்றி பேச்சு வந்தது.. அவர் அக்கச்சேரியில் வட இந்தியர்களின் அராஜகம் பற்றி அறிந்திருந்து அதை தவறு என்று கூறினாலும், 'இந்தி'தான் இந்தியாவின் தேசிய மொழியென இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார்.. அவருக்கு இணையத்தில் கிடைக்கும் இந்திய அரசியல் சாசன மொழிக்கொள்கை பற்றி விளக்கி அவரை நம்ப வைப்பதற்குள் தாவு போச்சுது..!

படித்த வட இந்தியர்களின் மன நிலையே இப்படியெனில், சாதாரண வட இந்தியர்களின் அறியாமை எந்த அளவில் இருக்குமென அறியமுடிகிறது..

இதில் இன்னொரு வேடிக்கையான அம்சம் என்னவெனில் இலங்கையில் வாழ்பவர்கள் 'அரக்கர் வழித்தோன்றல்'களென அவர்களின் பகுதி மக்கள் நினைத்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு மொழி பேதம் கிடையாது என்பதை உணர்ந்தவர்கள் கூப்பாடு போடமாட்டார்கள். ரஹ்மானின் இசைக்கச்சேரிக்குப் போகமுடியவில்லை எனினும் பார்வையாளர்களின் விகிதத்திற்கு ஏற்றவாறு பாடல்களைத் தந்திருக்கின்றார் என்று தெரிகின்றது.

கடந்த ஆண்டு ஜேசுதாஸின் இசைக்கச்சேரிக்குப் போனபோது மலையாளிகள் தமது மொழிப்பாடல்களைப் பாடச்சொல்லிக் கேட்டபோது ஜேசுதாஸ் பாடல்களை பார்வையாளர்களின் விகிதத்தில்தான் பாடப்போகின்றேன் என்று கறாராகச் சொல்லி தமிழில் அதிக பாடல்களோடு, மலையாள, ஹிந்திப் பாடல்களையும் பாடினார். தமிழர்கள் ஜேசுதாஸின் எல்லா மொழிப்பாடல்களையும் கேட்டிருந்ததால் பலமாகவே கைதட்டிப் பாராட்டினார்கள்.

இந்தப் பண்பாட்டு முதிர்ச்சியை ஒரு சிலர் காட்டுவதில்லை என்பதைத்தான் ஏ.ஆர். ரஹ்மானின் மீதான ஹிந்தியர்களின் வெளிநடப்பு காட்டியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ராசவன்னியன் said:

இன்று காலை திட்டப்பணிகளுக்காக சக பொறியாளருடன்(இவர் உத்திரப் பிரதேசத்தை சார்ந்தவர்) செல்லும்போது, லண்டனில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி பற்றி பேச்சு வந்தது.. அவர் அக்கச்சேரியில் வட இந்தியர்களின் அராஜகம் பற்றி அறிந்திருந்து அதை தவறு என்று கூறினாலும், 'இந்தி'தான் இந்தியாவின் தேசிய மொழியென இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார்.. அவருக்கு இணையத்தில் கிடைக்கும் இந்திய அரசியல் சாசன மொழிக்கொள்கை பற்றி விளக்கி அவரை நம்ப வைப்பதற்குள் தாவு போச்சுது..!

படித்த வட இந்தியர்களின் மன நிலையே இப்படியெனில், சாதாரண வட இந்தியர்களின் அறியாமை எந்த அளவில் இருக்குமென அறியமுடிகிறது..

இதில் இன்னொரு வேடிக்கையான அம்சம் என்னவெனில் இலங்கையில் வாழ்பவர்கள் 'அரக்கர் வழித்தோன்றல்'களென அவர்களின் பகுதி மக்கள் நினைத்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான்..!

ராமரின்  சீடர்கள் அப்படித்தான் நினைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/16/2017 at 6:00 PM, நந்தன் said:

ராமரின்  சீடர்கள் அப்படித்தான் நினைப்பார்கள்.

சீடர்கள் இன்னும் மரத்தில் இருந்து இறங்கவில்லை என்பதையே இந்த சம்பவம் சொல்லுது .

 

கிந்தி காரர் நிகழ்ச்சியிலும் பரிசை தமிழில் தான் அறிவிக்கிறார் மனுஷன் அது விளங்கி அவங்களும் அந்த பரிசை வாங்கிக்கொண்டு போயினம் பரிசு வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை பாவம் கிந்தி வாலாக்களினால் நமட்டு  சிரிப்பும் மட்டுமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.