Sign in to follow this  
Followers 0
தனி ஒருவன்

எதிர் பார்ப்பு  

3 posts in this topic

                                                                                                               


அன்றைய காலைப்பொழுது அவளுக்கு அதிகாலை நான்கு மணிக்கே விடிந்து விட்டது இடியப்பம் அவிக்க நேரம் ஆகிவிட்டதே என அடுப்படியை வெளியாக்கி கொண்டிருக்கும் போது அதில் இருந்த விறகு கட்டைக்குள் பாம்பைக்கண்டவள் கொஞ்சம் அதிர்ந்து போனாள் . என்ன பாம்பு என பார்ப்போம் என விளக்கு எடுத்து வருவதற்குள் அந்த பாம்பு மாயமாய் மறைந்து விட்டது . அவள் மனதிற்குள் எப்பதான் நான் ஒரு வீடு ஒன்றைக்கட்டி நிரந்தரமாக குடி இருக்கிறதெண்டு தெரியலையே முருகா என மனதிற்குள் புறு புறுத்துக்கொண்டு பாம்பை தேடினாள் அவள் .  அவளின் அந்த ஓலைக்குடிசைக்குள்….. வெளியில் வந்து தேடிப்பார்த்த போது அது போன தடம் தெரியவே  மனதுக்கு நிம்மதியாக இருந்தாலும்  அப்படியே நிமிர்ந்து பார்த்தாள் அந்த கோவில் கோபுரத்தை  ஆண்டவா இன்றைய நாள் எல்லோருக்கும் நல்ல தா அமைய வேண்டும்   வேண்டிக்கொண்டு  தன் வேலையை ஆரம்பித்தாள் கோகிலா . 


கோகிலா  தான்  தன் குடும்பத்தை சுமக்கும் சுமை தாங்கி காரணம் யுத்தத்தால் இவளும் தன்  கணவனை இழந்தவள் ஒரு பெண் குழந்தை அவள் அம்மா என மூவரும் ஒரு ஓலை குடிசையில் வாழ்ந்து வந்தார்கள் கிழக்கில் மட்டக்கள்ப்பில் அதுவும் படுவான்கரையில் . கிழக்கில் சூரியன் உதிர்த்து வருவதால் கிழக்கை எழுவான்கரயெனவ்வும் ,மேற்கை படுவான்கரயெனவும்  அழைப்பார்கள் ,அந்த வகையில் படுவான்கரையென்பது  பச்சை பசேல் என காட்சியளிக்கும் ஓரு பிரதேசம் இங்கே கிராமங்களே அதிகம் அதில் அவளது ஊரும் கிராமம் அதன் பெயர் ……………………………………  இங்கே கல் வீடுகளை காண்பதென்பது  அரிதிலும் அரிது . எல்லாம் கட்டுப்பாடு அதுவும் அந்த பகுதி விடுதலைப்புலிகள் இருந்ததால் பொருட்கள்கொண்டு செல்ல தடை  அதனால் ஓலை குடில்களே அதிகம் . அந்த கிராமத்தில் (பல வருடங்களுக்கு முன்) 


இடியப்பம் அவிச்சு கடைகளுக்கும் கிராம மக்களுக்கும்  விற்கிறதே இவளது தொழில்  காரணம் அவள் கணவன் காடுகளுக்குள் சென்று கம்புகளை வெட்டி வந்து அதை வேறு ஊர்களுக்கு கொண்டு சென்றுதான் விற்க வேண்டும்  அப்படி கம்புகளை விற்க சென்ற நேரத்திலே காணாமல் போனார் அவர் . காணாமல் போனதும் அவள் தேடாத இடங்கள் இல்லை நேராத சாமி இல்லை  ஆனால் அவரோ அவளுக்கு இன்னமும் கிடைக்கவில்லையென்பது அவள் தெரிந்து அனுபவிக்கும் மரணவலி  இதை அனுபவிப்பவருகளுக்கே புரியும் இருக்கா இல்லையா  என்ற நினைப்பு  அவளும் தேடி சலித்து விட்ட நேரத்தில் குடும்பத்துடன்  இறந்து விடுவமா என மனதுக்குள் தோன்ற கோகிலா நல்ல மன தைரியம் உள்ளவள் என்பதால் இந்த உலகத்தில் பிறந்தவர்களெல்லாம் பிரச்சினைகளுக்கு சாவதென்றால் இந்த உலகில் ஒருத்தரும் இருக்க மாட்டார்களே என நினைத்து வாழ பழகி கொள்கிறாள் .அந்த கிராமத்தில் .


மகள் எழும்படி நேரம் போயிட்டு இருக்கு நீ என்ன இன்னும் படுக்கிற இழுத்துப்போர்த்துக்கொண்டு  பள்ளிக்கு நேரமாகிறது என்ற மகளை எழுப்பினாலும் கோகிலா அம்மாவோ  அதிகாலையிலே  அந்த இரும்பு உலக்கையையும் கொட்டைப்பாக்கையும் வைத்து  இடிக்கும் உரலோசை  செவல மாட்டில கட்டியிருக்கும் மணிசத்தம் போலவும் , அவள் அவித்த இடியப்பதிற்கு சம்மபல் போலவும் அந்த  ஓலைகுடிசையை  ஓங்காரமாக மிளிரச் செய்தது . மகள் எழும்பி வர சாம்பலை அள்ளிகொடுத்து பல்லை தீட்டி குளிச்சிட்டு வா மகள் அம்மாவுக்கு இன்று நேரம் போயிட்டுது கடைக்காரர்கள் வந்தால் அம்மாவுக்கு ஏசுவார்கள் என அவள் செல்ல மகளை கிணற்றடிக்கு குளிக்க அனுப்பிவிட்டு வேலையை முடித்துவிட வேண்டும் என்று மளமளவென இடியப்ப தட்டுகளை நிரப்பி  அடுப்பில் வைத்தாள் அதுதான் கடைசிதட்டும் கூட கடைக்காரர்கள் வர வாளிகளுக்குள் இடியப்பத்தை கொடுத்து அனுப்பி விட்டு மகள் குளித்து வர சட்டைகள்  போட்டு பவுடர் போட்டு தலைகட்டி  அவளுக்கு காலைசாப்பாடும் கொடுத்து விட்டு  அவள் அம்மாவுடன் அவளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு  ஒரு பெரு மூச்சு விட்டு  நித்திரை மூடும்  கண்களுடன் அமர்ந்தாள் கோகிலா.


கோகிலா கடைக்காரர் கொடுத்த காசை கணக்கு பார்த்ததில் இன்று ஒரு ஐநூறு வங்கியில்   போட்டால் முப்பதாயிரம்   ஆயிடும் ஒரு அறையாவது கட்டலாம் என்று  மேசன் சொன்னாரு  என்று யோசிச்சு கொண்டிருந்தாள் .அவள் அந்த தொழிலில் நாள் தோறும் உண்ணும் அளவிலே வருமானம் கிடைத்தாலும் அதிலே மிஞ்சம் பிடித்து ஒரு மாதிரிரியாக சேர்த்திருந்தாள் அவள் .அப்படியே அண்ணாந்து ஓல குடிசையில் ஓலைகளின் கோலங்கள் வானத்தில் தெரிய  வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க முடியாத வீடு  ,இந்த விஷ ஜந்துக்கள் வேறு , மகள் வேற பெரிதாகி வருகிராள் அவள் வயதுக்கு வந்தாலும் ஒரு வீட்டை கட்டிட  வேண்டும் என்ற நினைப்பும்  அவள் மனதில் ஓடியது .

நேரம் செல்ல அவள் அம்மா வர  என்ன அம்மா பள்ளில விட்டுட்டியா என்றாள் ஓம் அவள் உள்ள போயிட்டாள் சரி நீ   இங்க இரு நான் வங்கிக்கு போயிட்டு வாரன் என அவள் தன்ர வேலைகளை முடித்து விட்டு ரவுண் பக்கம் இருக்கும் வங்கிக்கு சென்றாள்  போய்  அவள் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்து வீட்டு வந்தாள்  வந்து  அமர்ந்திருந்தாள் அப்போது அவள் மகள்  பாடசாலையில் இருந்து  இடையே    வருவதை கண்டாள் என்ன மகள் நேரத்துடன் வார நீ  இல்லை அம்மா எனக்கு சத்தி எடுத்தது லேசாக காய்ச்சலும் காய்கிறது டீச்சர் வீட்டுக்கு   அனுப்பி விட்டார் என்றாள் அவள் நெத்தியிலே கை வைத்துப்பார்க்க சூடாகத்தான் இருக்கிறது வா வந்து உள்ள இரு என்று அவளுக்கு ஒரு போர்வையை எடுத்து மூடி பாயில்  படுக்க வைத்தாள் இரண்டு நாட்கலாகியும் காய்ச்சல் விட வில்லை அவள் தொழில் வேற செய்ய வில்லை மகளை கவனிப்பதில் குறியாக இருந்தாள் , தொலழிலை விட்டு


பல வைத்தியர்களிடம் காட்டியும் சோதிச்சு பார்த்தும் காய்ச்சல் விடுவதாக இல்லை  ஆனால் வைத்தியரை அணுக    800 ரூபா மருந்து க்கும்ேற காசு ஊசிக்கு வேற காசு என அவள் வைட்திருந்த காசு  மெது மெதுவாக கரையத்தொடங்கியது   கடசியில் 15000 ரூபா கையில் எஞ்சி நிற்க 
பின்னர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு  கொண்டு சென்று  சோதித்து பார்த்த போது அது டெங்கு காய்ச்சல் என்று சொல்லி  அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டார்கள் 10 நாட்கள் ஆஸ்பத்திரி  வாழ்க்கை அனுபவித்து மகளை சுகப்படுத்திக்கொண்டு    ஆட்டோவை பிடித்து ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறாள் வரும்போது அந்த கோவிலை கண்டவுடன் இவள் இறங்கி  நேர்த்தி வைத்திருப்பாள் போல வேண்டி வந்த கற்பூரத்தை கொழுத்திவிட்டு ஆண்டவனைப்பார்த்து நானும் உழைக்கிறன் ஒரு அறையைகூட கட்ட முடியலை  ஊரில் சும்மா இருந்து கொண்டு ராஜ கோபுரத்தில் வாழ்கிறாயே இறைவா  இவள் அம்மாவோ அவனை கும்பிடாத ஏழையைத்தானே அவர் சோதிக்கிற  என்று ஆட்டோவுக்குள் இருந்து கொண்டு புலம்பிக்கொண்டிருந்தாள்  கோகிலாவோ ஆண்டவா எனக்கும் வீடும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நோய் நொடி இல்லாத வாழ்வை கொடு எங்களுக்கு என்று கடவுளை வணங்கி விட்டு வீடு விரைகிறாள் 

இன்று  கிழக்குக்கு பல வீட்டு திட்டங்கள் வந்துள்ளது அது பொருத்து ஆகட்டும் பொருதமில்லாததாவவீடாகட்டும் இப்படியானவர்களுக்கு ஒரு வீடாவது கிடைக்க வேண்டும் என்பது எனது அவா அவர்களுக்காக இதில் பாகுபாடு இல்லாமல் வீடுகள் இல்லாதவர்களுக்கு அந்த வீடுகள் போய் சேர வேண்டும்    அரசியல் தலையீடுகள் இல்லாமலும்  கிடைக்க வேண்டும் என்பதும் எதிர் பார்ப்பு  

6 people like this

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சைத் தொட்டு விட்டது உங்களின் கதை அல்லது நிஜம்.நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும், நம்புவோம்.....!

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, suvy said:

நெஞ்சைத் தொட்டு விட்டது உங்களின் கதை அல்லது நிஜம்.நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும், நம்புவோம்.....!

அதே நம்பிக்கை தான் அண்ணை எனக்கும் இங்குள்ளவர்களுக்கு மாளிகையில் இருந்து பொருத்து வீடு வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு புரியாது  ஓலைகுடிசையில் வாழ்பவர்கள் நிலை  ஒரு நாள் வாழ்ந்து பார்க்க வேணும் (ஒரு இரவு)   அந்த குடிசையில் 

நன்றி உங்கள் கருத்துக்கு சில நிஜங்கள் இன்னும் அதே நிஜங்களாகவே இருக்கிறது மாற்றம் வேண்டி நிற்கிறம் ஆனால் மாற்ற த்தை விரும்பவில்லை ஏழைக்கு ஒரு    வீடு  அது எந்த வீடாக இருந்தாலும் சரி . கிடைப்பதை சந்தர்ப்பம் கிடைக்கும் போது பெற்றுக்கொள்ள வேண்டும் இங்கே நிலை அப்படி 

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0