Jump to content

கனடாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் மாயம் : கண்ணீருடன் உறவினர்கள்..!


Recommended Posts

கனடாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் மாயம் : கண்ணீருடன் உறவினர்கள்..!

 
59661b7c04597-IBCTAMIL.jpg
 
 
59661b7c82587-IBCTAMIL.jpg
 
59661b7ae23f1-IBCTAMIL.jpg

கடந்த ஞாற்றுக்கிழமை கனடாவின் ப்ரைரிஸ் (Prairies) நதியில் தவறி வீழ்ந்து தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

20 வயதான அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் மொன்றியல் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸரால் நேற்று மாலை வரை இளைஞனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று 4 மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை இன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியலுக்கு மேற்கே Pierrefonds என்னும் இடத்தில் உள்ள ஆற்றிற்கு அருகே நின்று இவ் இளைஞன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது கால் தவறி ஆற்றிற்குள் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்ற உடன் சென்ற தோழி முயற்சி செய்தபோதும் அது பயனளிக்கவில்லை.

அனோஷன் நாகேஸ்வரா காணாமல் போயுள்ள நிலையில் அவரது உறவினர்கள் சோகத்துடன் அவரது வருகைக்காக ஆற்றங்கரையில் காத்திருக்கும் நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tamil-Youth-missing-in-Canada-Prairies-river

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

மொன்றியலுக்கு மேற்கே Pierrefonds என்னும் இடத்தில் உள்ள ஆற்றிற்கு அருகே நின்று இவ் இளைஞன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது கால் தவறி ஆற்றிற்குள் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்ற உடன் சென்ற தோழி முயற்சி செய்தபோதும் அது பயனளிக்கவில்லை.

எங்க போய் முடியுமோ???tw_cry:

Link to comment
Share on other sites

இந்த முறை வழக்கத்துக்கும் மாறான அதீத மழை வீழ்ச்சியால் ஏற்பட்ட அதிக நீரோட்டத்தால் ஆற்றில் குளிப்பவர்கள் அடிக்கடி காணாமல் போவதும் மரணமடைவதும் நிகழ்கின்றது. ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று பேர் இப்படி சாகின்றனர். போன வாரமும் பிரபலமான வசாகா கடற்கரையில் (ஏரி) சிறு படகு (inflatable boat)கவிழ்ந்து இருவர் இறந்து விட்டனர்
காணாமல் போன இவ்விழைஞன் எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் வரவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் மாயம்: சோகத்தில் உறவினர்கள்

By
 nadunadapu
 -
July 12, 2017
0
74
625.0.560.350.160.300.053.800.668.160.90

கனடாவில் உள்ள Prairies நதியில் விழுந்து தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

அவரைத் தேடும் பணியில் Montreal பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனோஷன் நாகேஸ்வரா என்ற 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இளைஞனை கண்டுபிடிக்க முடியவில்லை என நேற்று மாலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று 4 மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை இன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மொன்றியாலுக்கு மேற்கே Pierrefonds என்னும் இடத்தில் உள்ள ஆற்றிற்கு அருகே நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்த போது கால் தவறி ஆற்றிற்குள் வீழ்ந்தார். எனினும் அவரை காப்பாற்ற உடன் சென்ற தோழியால் முடியவில்லை.

சமீபத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் அதிகமாக இருந்த ஆற்றில் சுழியும், நீரோட்டமும் அதிகமாக இருந்ததால் அனோஷன் நீரினால் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனோஷன் நாகேஸ்வராவுக்கு ஏற்பட்ட நிலை கண்டு அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90aa.jpg625.0.560.350.160.300.053.800.668.160.90aaa.jpg625.0.560.350.160.300.053.800.668.160.90s.jpg

http://nadunadapu.com/?p=130222

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலும் அக்கரைப்பற்று கடலில் இரு சகோதரர்கள் மூழ்கி பலி அண்ணனை காப்பாற்ற தம்பி  போனதால் இருவரும் உயிர் இழப்பு   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு அமைதியாக ஓடினாலும் அருகில் செல்வது ஆபத்து.
ஆற்றின் படத்தை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கையில்லை.

Link to comment
Share on other sites

இந்த இளைஞன் இறந்து விட்டதாக கனடா மிர்ரர் தகவல் வெளியிட்டுள்ளது

 

---------------------------

கனடாவில் காணாமல்போன தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு ;

கடந்த ஞாற்றுக்கிழமை கனடாவின் ப்ரைரிஸ் (Prairies) நதியில் தவறி வீழ்ந்து தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

காணாமப்போன இளைஞனைக் கண்டுபிடிப்பதற்கு 3 நாட்களாக மீட்ப்புப்படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் காணாமல் போன இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

20 வயதான அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மொன்றியலுக்கு மேற்கே Pierrefonds என்னும் இடத்தில் உள்ள ஆற்றிற்கு அருகே நின்று இவ் இளைஞன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது கால் தவறி ஆற்றிற்குள் வீழ்ந்துள்ளார்.

அவரை காப்பாற்ற உடன் சென்ற தோழி முயற்சி செய்தபோதும் அது பயனளிக்கவில்லை. எனினும் அவருக்கு நீச்சல் தெரியாதென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

http://www.canadamirror.com/canada/04/131333

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Body of man, 20, found in Rivière des Prairies in Pierrefonds

Passerby spotted body in river off Lalande Blvd. at Edward St. around 3 p.m. Wednesday

CBC News Posted: Jul 12, 2017 5:13 PM ET Last Updated: Jul 13, 2017 10:05 AM ET

A boat from the Montreal fire department arrived Monday morning to search for Anoshan Nagaswara, who slipped and fell into Rivière des Prairies Sunday at around 6 p.m.

A boat from the Montreal fire department arrived Monday morning to search for Anoshan Nagaswara, who slipped and fell into Rivière des Prairies Sunday at around 6 p.m. (Derek Marinos/CBC)

The body of a 20-year-old man who fell into the Rivière des Prairies while posing for a photo has been found near the shoreline in Pierrefonds. 

Anoshan Nagaswara slipped and tumbled into the fast-moving river on Sunday while on a date in a small park on Riviera Street Sunday evening.

Witnesses said Nagaswara, who was unable to swim, was last seen about 50 metres from the point where he fell in. 

His body was spotted by a passerby on Wednesday afternoon Lalande Boulevard at Edward Street, Montreal police confirmed.

Family missing Pierrefonds man

Family members gathered Monday morning near the spot where Anoshan Nagaswara fell into the Rivière des Prairies. (Derek Marinos/CBC)

Firefighters pulled the man's body from the water a short time later, confirming its identity.

Relatives told CBC News earlier this week they'd learned from police that Nagaswara fell into the water while posing for a photo. The woman he was with ran along the riverbank, trying to follow him.

http://www.cbc.ca/news/canada/montreal/rivière-des-prairies-pierrefonds-body-found-1.4202107

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.