Recommended Posts

திட்டம்

 

‘‘என்னது... பில்லு கட்ட பணமில்லையா? அப்போ ஒருநாள் ஓட்டல்ல வேலை செய்... என்ன வேலை தெரியும் உனக்கு?’’‘‘நல்லா பரோட்டா போடுவேன் சார். ஊர்ல நான் பரோட்டா மாஸ்டர்...’’ என்றான் கணேசன்.‘‘அப்போ உள்ளே போய் பரோட்டா போடு...’’ என்றார் முதலாளி.
கணேசன் உள்ளே போய் பரோட்டா போட ஆரம்பித்தான். ஒரு மணி நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்தது.
24.jpg
‘‘என்ன சார்... உங்க கடை பரோட்டா இன்னைக்கு வழக்கத்தைவிட சூப்பரா இருக்கு. ரொம்ப ஸாஃப்ட், செம டேஸ்ட்...’’ என்று வரிசையாக கஸ்டமர்கள் பாராட்டினார்கள். அங்கிருந்த மேனேஜர், ‘‘சார்... பரோட்டா போட்டுட்டு இருந்த மணி ஒரு வாரமா வர்றது இல்லை... இவனையே நம்ம கடையில வேலைக்கு வச்சுக்கலாமே!’’ என்றார். ‘ஒரு வாரம் முன்னால இதே ஓட்டல்ல வேலை கேட்டேன். இல்லைனு சொல்லிட்டீங்க. அதான் மாஸ்டர் வராத நேரமா பார்த்து வந்தேன்.

சாப்பிட்டுட்டு காசு இல்லாத மாதிரி நாடகம் ஆடி, என் திறமையை நிரூபிச்சு பரோட்டா மாஸ்டராவும் ஆகிட்டேன். என் திட்டம் பலிச்சுருச்சு!’ என மனதில் நினைத்தபடி சந்தோஷமாய் வேலை செய்ய ஆரம்பித்தான் புது பரோட்டா மாஸ்டர் கணேசன்.       

http://kungumam.co.in

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
suvy    3,201

இது திட்டமல்ல சதித்திட்டம்..... தக்கன பிழைத்துக் கொள்ளும்....!  tw_blush: 

Share this post


Link to post
Share on other sites

"வேலை கேட்டேன். இல்லைனு சொல்லிட்டீங்க. அதான் மாஸ்டர் வராத நேரமா பார்த்து வந்தேன்."

தேவைகள் ஏற்படுபோதுமானது வேகமாய் வேலைசெய்கிறது 

Edited by நிலாமதி

Share this post


Link to post
Share on other sites

நமது திற்மைகளையும் சில இடத்தில் நிருபிக்க வேண்டும்   அப்போதுதான் ஜெயிக்க முடியும் :104_point_left:

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை   பழக்கம்
   ‘‘என்னங்க ஆச்சு உங்களுக்கு? ஒரு மாசமா கவனிக்கிறேன்... உங்க பெரியப்பா இறப்புக்கு போயிட்டு வந்ததில் இருந்து ஆளே மாறிட்டீங்க? வழக்கமா வர்ற கோபம், சிடுசிடுப்பு, எரிச்சல் எதுவுமே இல்ல. யாரையும் கிட்டக்க சேர்க்காதவர், எல்லார்கிட்டயும் அன்பா பழகுறீங்க..?’’ - கணவன் பாண்டியனிடம் சரசு கேட்டாள்.

   ‘‘எங்க பெரியப்பாவோட இறப்புதான்டி என்னை மாத்திடுச்சு. அவர் யார்கிட்டயும் ஒட்ட மாட்டார். உறவுகளை வெறுத்தார். நண்பர்களை சேர்க்க மாட்டார். அவர் இறந்தப்போ மனுஷங்களே வரலை. கிட்டத்தட்ட ஒரு அனாதைப் பிணமாத்தான் போனார். அதைப் பார்த்ததும்தான் இப்படி மாறிட்டேன்!’’‘‘அப்படியா, ரொம்ப சந்தோஷங்க!’’ சரசு மகிழ்ந்து போனாள்.

   அடுத்த ஞாயிற்றுக்கிழமை. டூ வீலரில் போகும்போது ஆட்டோ இடித்து லேசான காயங்களுடன் வீடு வந்து சேர்ந்தான் பாண்டியன். அன்று சாயங்காலம் வரிசையாக ஏழெட்டுப்பேர் அவனை வந்து பார்த்து அன்போடு விசாரித்துவிட்டுப் போனார்கள். 

   ‘‘அடடா, ஒரே மாசத்துல உங்களுக்குனு இவ்வளவு மனுஷங்க சேர்ந்திருக்காங்களே... உண்மையிலயே இது நல்ல மாற்றம்ங்க!’’ என்றாள்.
   ‘‘அடிப் போடி... இப்ப என்னை வந்து பார்த்த எல்லோரும் யாருனு நினைச்சுக்கிட்டு இருக்கே? வந்தவங்க எல்லார்கிட்டயும் கைமாத்தா பணம் வாங்கியிருக்கேன்டி!’’ - பாண்டியன் பரிதாபமாகச் சொன்னான். குழம்பிப் போனாள் சரசு!
   kungumam.co
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை  பொண்டாட்டிதாசன்
    
   ‘ஏய், ரமா! பேங்க்ல நம்ம ஜாயின்ட் அக்கவுன்ட்ல இருந்து என்னைக் கேக்காம பத்தாயிரம் பணம் எடுத்திருக்கே... என்ன நீயும் சம்பாதிக்கிறேங்கற திமிரா?’’ - கோபம் கொப்பளிக்கக் கேட்டான் மாதவன்.‘‘ஆமா, எடுத்தேன். அதுக்கு எதுக்கு கேக்கணும்? தாலியைக் கட்டிட்டா நான் உங்க அடிமையா? ஈக்வல்-ஈக்வல் பார்ட்னர்!’’ - வெடுக்கென்று பதிலளித்தாள் ரமா.

   அவன் பேச, இவள் பேச, வாக்குவாதம் வளர்ந்துகொண்டே போனது.எல்லாவறையும் பார்த்துக்கொண்டிருந்த ரமாவின் மாமியார் செல்லம்மாள், ‘‘என்ன நீ! புருஷன்னு கொஞ்சம்கூட மரியாதையில்லாம சரிக்கு சரியா வாயாடிட்டு இருக்கே?’’ என்றாள் அதட்டலாக!
   இருவரையும் முறைத்துவிட்டு வேகமாய் உள்ளே போனாள் ரமா.

   அன்றிரவு படுக்கையறையில்.‘‘ரமா, நீ கோபமா இருப்பேனு புரியுது. ஆனா, காலைல நான் அப்படி சத்தம் போட்டதெல்லாம் வெறும் நாடகம்!’’ என்றான் மாதவன்.‘‘நாடகமா?’’‘‘ஆமா ரமா. என் தங்கச்சி வாசுகிய அவ புருஷன் கண்டபடி டார்ச்சர் பண்றான். அவ நரக வாழ்க்கை வாழறா. நாம அன்னியோன்யமா வாழறதைப் பார்த்தா, ‘நம்ம பொண்ணு அங்கே கஷ்டப்படுது.

   இங்கே மருமக சந்தோஷமாயிருக்கா. மகன் பொண்டாட்டி தாசனாயிருக்கான்’னு எங்கம்மா ஆதங்கப்படுவாங்கல்ல! அதான் நாடகமாடினேன். சாரி டார்லிங்!’’‘‘உங்க மனசைப் புரிஞ்சிக்காம நானும் உங்களைக் கன்னாபின்னானு பேசிட்டேன். நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க!’’
   படுக்கையறை விளக்கு அணைந்தது.
   kungumam.co
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை யாரோ
    
    
   அந்தப் பெண்... அழகான பெண்... உள்ளே வந்தமர்ந்தாள். ‘‘சொல்லும்மா. என்ன ப்ராப்ளம்?’’ டாக்டர் கேட்டார். ‘‘நான் எங்கே  போனாலும்... எங்கே வந்தாலும்... எங்கே நின்னாலும்... யாரோ பின்தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கு டாக்டர். யாரோ என் பின்னாடி  இருக்காங்க!’’ - அனிச்சையாகத் திரும்பிப் பார்த்துக்கொண்டாள்.

   ‘‘இது ஒருவித இல்யூஷனோட ஆரம்பக் கட்டம். சரி பண்ணிடலாம். மருந்தெல்லாம் வேண்டாம்’’ என்றவர், சிறிது நேரம் கவுன்சலிங்  கொடுத்துவிட்டு, ‘‘அடுத்த வாரம் வாம்மா!’’ என்றார். அவள் வெளியில் சென்றாள். அடுத்த நோயாளியாக இன்னொருத்தி உள்ளே வந்தாள்.   ‘‘டாக்டர்...’’ ‘‘சொல்லும்மா’’ ‘‘நான் எங்கே போனாலும், எங்கே வந்தாலும், எங்கே நின்னாலும்...’’ ‘‘என்னம்மா அதே மாதிரி பேசுறே...’’
   அவள் அதை காதில் வாங்கவே இல்லை. ‘‘யாரோ எனக்கு முன்னாடி போற மாதிரி இருக்கு டாக்டர்... யாரோ முன்னாடி...’’ - டாக்டருக்குப்  பின்னே ஒரு உருவத்தை பயத்தோடு சுட்டிக் காட்டினாள் அவள்.

   டோக்கன் தரும் பெண் செல்போனை எடுத்தாள். ‘‘சொன்னபடி பண்ணிட்டே இல்ல? பெண்டாட்டியைக் கூட கவனிக்காம எப்ப பார்த்தாலும்  கிளினிக்லயே கிடக்கற என் புருஷனை இப்படித்தான் குழப்பி விடணும். அடுத்த வாரம் வேற ரெண்டு பொண்ணுங்களை வேற ப்ளானோட  அனுப்பறேன். செத்தான் சேகரு!’’
   kungumam.co.
  • By நவீனன்
   அதிர்ஷ்டம்
    
   ‘‘புது காராம் புது கார். சனியன். இது வந்த நேரமே சரியில்லை. வாங்கி ஒரு வாரம்தான் ஆச்சு. இதை வாங்கின நேரம், உங்க தம்பி  இறந்துட்டார். நீங்க சீட்டு கட்டின பத்து லட்ச ரூபாய் பணத்தோட அந்தக் கம்பெனிக்காரன் ஓடிட்டான். முதல்ல இதை வித்துத்  தொலையுங்க!” - மனைவியின் பிடுங்கல் தாங்காமல் காரை அடி மாட்டு விலைக்கு விற்றுவிட்டு வந்தான் கணேசன்.

   ஒரு வாரம் போயிருக்கும். ஞாயிற்றுக்கிழமை திடீரென காலிங்பெல் அடிக்க, கதவைத் திறந்தான். காரை வாங்கிய மணிசர்மா நின்றிருந்தார்.  ‘காரைத் திருப்பிக் கொடுக்க வர்றாரா? இவர் வீட்டில் என்ன நடந்ததோ’ - மனதில் கிலி கண்டு நின்றான் கணேசன்.   ‘‘என்ன சார் அசந்து போய் நிற்கறீங்க? ரொம்ப அதிர்ஷ்டமான கார் சார் இது. இதை வாங்கிய மூணே நாள்ல என் மகனுக்கு திடீர்னு  பிரமோஷன் கிடைச்சது. எனக்கு வேற ஷேர் மார்க்கெட்ல எக்கச்சக்க லாபம். ஆனா, உங்க காரை ரொம்ப அடிமாட்டு விலைக்கு  வாங்கிட்டேன். எங்க வீட்டுக்கு வந்த மஹாலக்ஷ்மி! அதனால அதுக்குரிய நியாயமான விலையை வாங்கிக்கங்க!’’ என்று ஒரு கவரை  நீட்டினார் அவர். கணேசனும் அவன் மனைவியும் அசந்து போய் நின்றார்கள்!       
   kungumam.co.
  • By நவீனன்
   ஏமாற்றம்
    
   தன் காதலி மல்லிகாவின் அப்பாவுக்கு தன் நண்பனை விட்டே போன் போடச் சொன்னான் சீனு. ‘‘உங்க பொண்ணு ஒரு பையனோட  கேவலமா ஊர் சுத்துறா!’’ என்று சொல்லச் சொன்னவன், இவர்கள் வெளியிடங்களில் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் வாட்ஸ்அப்பில்  அனுப்பிவிட்டான்.   ‘‘எந்த அப்பனுக்கும் கோவம் வரும். நிச்சயமா வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சிடுவார்!’’ - சீனு சொல்லிச் சிரித்தான். ‘‘டேய்,  மல்லிகாவைப் பிடிச்சுதானே காதலிச்சே? அப்புறம் ஏன்டா இப்படி கழட்டி விடறே?’’ - நண்பன் கேட்டான். ‘‘காதலிக்கப் பிடிச்சுதுடா.  கல்யாணம்னா அது பணக்காரப் பொண்ணா இருக்க வேண்டாமா? இந்த அயிரை மீனை ஆத்துலயே விட்டுருவோம். கண்டிப்பா ஒரு  விலாங்கு மீன் மாட்டும்!’’ என்றான் வில்லத்தனமாக.

   அன்று மாலை... சீனு தன் வீட்டுக்குள் நுழைய, மல்லிகாவும் அவள் பெற்றோரும் அங்கே சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதிர்ச்சியில்  உறைந்து நின்றான் சீனு. ‘‘டேய் சீனு, எனக்கு ரொம்பவும் வேண்டிய நண்பனுடைய பெண்ணைத்தான் நீ விரும்பி இருக்கே. நாங்க யாரோ  என்னமோனு பயந்துட்டோம். பரவாயில்லை. உன் விருப்பப்படியே மல்லிகாவை உனக்குக் கட்டி வைக்கிறோம். சம்மதம்தானே?’’ - அப்பா  கேட்டார். விக்கித்துப் போனவனின் தலை அவனை அறியாமல் ஆடியது!
    
   kungumam.co
  • By நவீனன்
   ஏ.டி.எம்
    
   இருட்டு நேரம். பைபாஸ் ேராட்டின் ஒதுக்குப்புறத்திலிருந்தது அந்த ஏ.டி.எம். வாசலில் வாட்ச்மேன் உடையில் நின்றிருந்த ஆதி, நண்பன்  மூர்த்தி அங்கு வந்ததும் உற்சாகமானான்.   ‘‘சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடு. யாராவது வந்தா ஏ.டி.எம் ரிப்பேர்னு திருப்பி அனுப்பிடறேன்!’’ என்று பரபரத்தான். உள்ளே நுழைந்த  மூர்த்தி கர்சீப்பை முகத்தில் கட்டிக் கொண்டான். ரகசிய கேமராவிற்கு முதுகைக் காட்டியபடி வேலையை ஆரம்பித்தான். அடுத்த ஒரு மணி  நேரத்தில் விஷயம் தெரிந்து விசாரணைக்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் மதியழகன் குழம்பினார். ‘காலையில இருந்து வேற யாருமே இங்கே  வரல. சாட்சி இல்ல. ரகசிய கேமராவில் முகம் பதியலை. எப்படி திருட்டைக் கண்டுபிடிக்கலாம்!’ என்று யோசனையுடன் சுற்றி வந்தவரின்  கண்ணில் பட்டது அது. எடுத்துப்பார்த்தவரின் முகம் பிரகாசமானது.

   சற்று நேரத்தில் மூர்த்தியின் வீட்டுக் கதவைத் தட்டினார் மதியழகன். முதலில் அதிர்ச்சியுடன் பார்த்தவன், பின்னர் குற்றத்தை  ஒப்புக்கொண்டான். ‘‘எப்படி சார் கண்டுபிடிச்சிங்க?’’ என்று அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவன் கேட்க, தன் பாக்கெட்டிலிருந்த சீட்டைக்  காட்டினார் மதியழகன். ‘‘சே... கர்சீப்பை எடுக்கும்போது கார் நம்பர் பதிஞ்ச டோல்கேட் ரசீது விழுந்ததை கவனிக்கலையே!’’ என்று  தலையைத் தொங்கப்போட்டான் மூர்த்தி.
   kungumam.co