Sign in to follow this  
Followers 0
தமிழரசு

பேரிச்சம் பழ கேக்

7 posts in this topic

தேவையான பொருட்கள்:
 
 
பேரிச்சம் பழங்கள் - 2 கப் விதை நீக்கி 45 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்
மைதா - 2 கப்
முட்டை - 3
சர்க்கரை - 1  1/2 கப்
ஆயில் - 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
பட்டை தூள் - 1 1/2 டீஸ்பூன்
 
1499414702-6509.jpg
 
செய்முறை:
 
முதலில் மைதாவையும் பேக்கிங் பவுடர் இரண்டையும் கட்டி இல்லாமல் சலித்து எடுத்து கொள்ளவும்.
 
மிக்ஸ்சியில் சர்க்கரையை அரைத்து பவுடர் ஆனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு அடித்து  கொள்ளவும். அத்துடன் ஆயில் ஊற்றி ஒரு ரவுண்ட் மிக்ஸ்சியை ஓட விட்டு கலவை ஒன்றானவுடன் அதில் ஊறவைத்திருக்கும் பேரிச்சம் பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைக்க வேண்டும்.
 
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் பேக்கிங் பவுடர், வெண்ணிலா எஸ்ஸன்ஸ், பட்டைதூள் போட்டு மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
 
கலந்த கலவையை கேக் தட்டில் ஊற்றி ஓவனில் பேக் செய்யவும். ஓவனில் பேக் செய்யும் முன் முதலில் ஓவனை வெறுமனே சூடு செய்து, பிறகு கேக் தட்டில் மாவை ஊற்றி ஓவனில் வைத்த உடன் 160 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் என்ற அளவில்  வைத்துவிடவும். இந்த கேக் தயாராக குறைந்தது 35 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். ஓவனை பொறுத்து நேரம் மாறுபடலாம்.
 
2 people like this

Share this post


Link to post
Share on other sites

நல்ல சுவையாய் இருக்கும் தமிழரசு.....!

தங்களுக்கு முட்டைகள் போட்டு விதம் விதமாய் அந்தமாதிரி கேக்குகள் செய்யும்பொழுது இந்தமாதிரியும் சிலவகை கேக்குகள் செய்து எனக்கும் ஈயப்படும்.....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Posted (edited)

1499414702-6509.jpg

பேரிச்சம் பழ கேக்கை, பார்க்க வாயூறுது, தமிழரசு.
ஆனால்.... அதுக்கு,  3  முட்டை போட்டு செய்ய வேண்டும் என்பதால்,
இன்று... வெள்ளிக்கிழமை  செய்யாமல், நாளை... சனிக்கிழமை செய்யலாம் என்று, ஒரு ஐடியா இருக்கு.  :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
On 2017-7-7 at 7:45 PM, தமிழ் சிறி said:

1499414702-6509.jpg

பேரிச்சம் பழ கேக்கை, பார்க்க வாயூறுது, தமிழரசு.
ஆனால்.... அதுக்கு,  3  முட்டை போட்டு செய்ய வேண்டும் என்பதால்,
இன்று... வெள்ளிக்கிழமை  செய்யாமல், நாளை... சனிக்கிழமை செய்யலாம் என்று, ஒரு ஐடியா இருக்கு.  :grin:

இன்று பேரிச்சம் பழ கேக் செய்தீர்களா ? எப்படி சுவையாக இருந்ததா ??

Share this post


Link to post
Share on other sites

பட்டர் போடுவினம் சரி.

இதென்னப்பா ஆயில் 1 1/2 கப்.

ஆயில் கேக்கோ?

Share this post


Link to post
Share on other sites
Quote

வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1 1/2 டீஸ்பூன்

இது எங்க கிடைக்கும்

Share this post


Link to post
Share on other sites
55 minutes ago, MEERA said:

இது எங்க கிடைக்கும்

:10_wink:எவ்வலவோ லண்டனில கிடைக்கும் போது  ஒண்டரைக்கரண்டி வெண்ணிலா கிடைக்காதா என்ன:10_wink:

வெனிலாவை சொல்கிறாரோ ?:rolleyes:

ஈச்சம்பழம் என்றாலே பாலைவனவாழ்க்கை நினைவுக்கு வந்து போகிறது :unsure:

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0