Sign in to follow this  
Followers 0
நவீனன்

கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல்

8 posts in this topic

கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல்

மத்தி மீனில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இன்று மத்தி மீனை வைத்து கேரளா ஸ்டைலில் வறுவல் செய்வது எப்படி என்ற பபர்க்கலாம்.

 
 
 
 
கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல்
 
தேவையான பொருட்கள் :

மத்தி மீன் (sardine) - அரை கிலோ
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2  தேக்கரண்டி
சோம்பு - 1  தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 20  பல்
எலுமிச்சை சாறு - 2  தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

201707071158173209_kerala-style-fish-fry

செய்முறை :

* மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

* மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, தயிர், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் கழுவிய மீனை சேர்த்து நன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும். 3 - 4 மணி நேரம் வைக்கலாம்.

* அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா பிசறிய மீனை மெதுவாக அடுக்கி வைத்து, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும்.

* அதனை கொஞ்ச நேரம் கழித்து, மீன் உடைந்து விடாமல் மெதுவாக புரட்டிவிடவும். எண்ணெய் போதவில்லை என்றால் ஊற்றவும். அடுத்த பக்கமும் வெந்ததும், மீனை  உடையாமல் புரட்டவும். இரு பக்கமும் மீன் மொறு மொறு என வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து கறிவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும்.

* இந்த வறுத்த மத்தி மீனை எந்த குழம்பு சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம்.

http://www.maalaimalar.com

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

வெள்ளியும் அதுவுமா விதி... கடந்துபோக முடியவில்லை.....!

மச்சம் கண்டதும் வெட்கம் கெட்டு 

அலையும் மனமே எங்ஙனம் 

புகுவாய் மோட்சம்.....!  tw_blush:

இது அநியாயம் சாரே.....!  tw_blush:

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, suvy said:

வெள்ளியும் அதுவுமா விதி... கடந்துபோக முடியவில்லை.....!

மச்சம் கண்டதும் வெட்கம் கெட்டு 

அலையும் மனமே எங்ஙனம் 

புகுவாய் மோட்சம்.....!  tw_blush:

இது அநியாயம் சாரே.....!  tw_blush:

வெள்ளிகிழமைக்கு ஏற்ற தயிர் சாதம்..tw_blush:

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, suvy said:

வெள்ளியும் அதுவுமா விதி... கடந்துபோக முடியவில்லை.....!

மச்சம் கண்டதும் வெட்கம் கெட்டு 

அலையும் மனமே எங்ஙனம் 

புகுவாய் மோட்சம்.....!  tw_blush:

இது அநியாயம் சாரே.....!  tw_blush:

ஏன்  வெள்ளி வியாழன் பார்க்கவேண்டும்?

இத்தகைய நடைமுறைகளுடன் என்னக்கு உடன்பாடிலை.

எங்கோ வாசித்த ஞாபகம் உண்டு, அதாவது வெள்ளி என்பது மிகவும் குரூரமான நாள் ஆனா காரணத்தினால்தான் வெள்ளியில் மாமிச அல்லது மச்ச உணவைத் தவிர்க்க வேண்டும் என்று.

உண்மையா?  

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, suvy said:

வெள்ளியும் அதுவுமா விதி... கடந்துபோக முடியவில்லை.....!

மச்சம் கண்டதும் வெட்கம் கெட்டு 

அலையும் மனமே எங்ஙனம் 

புகுவாய் மோட்சம்.....!  tw_blush:

இது அநியாயம் சாரே.....!  tw_blush:

மனம் கொண்டதே மார்க்கம் வெள்ளியிலும் சாப்பிடலாம் மனம் சுத்தமாக இருந்தால் சரி மற்றது அந்த காலத்தில் மச்சம் ஏன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு போக கூடாது என்றால் மச்சம் சாப்பிட்டு செல்வதால் அந்த கவர்ச்சி மணம் மற்றவருக்கு வீச அந்த மணத்தின் பால் அவர் ஈர்க்கப்ப்ட்டு அவரது  சிந்தனை மனநிலையையும் அந்த இடத்தில் மாறுமாம் அதனால் சொல்வார்கள் கோவில்லுக்கு மச்சம் சாப்பிட்டு விட்டு போக கூடாது என

Share this post


Link to post
Share on other sites

வியாழன் வெள்ளி மட்டுமல்ல சனி ஞ>யிறு  திங்கள் செவ்வாய் புதனிலும் நான் சாப்பிடுவதில்லை , அதுதான் பிரச்சனை.....!  tw_blush: 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

வியாழன், வெள்ளி மட்டுமல்ல, சனி, ஞாயிறு,திங்கள், செவ்வாய், புதனிலும் நான் சாப்பிடுவதில்லை , அதுதான் பிரச்சனை.....!  tw_blush: 

வாரத்தின் ஏழு நாளும் பட்டினியென ஒதுங்கி(?) வாழ்ந்தால், உடல் கரைந்துவிடாதா..?  vil-roulelangue.gif

Why this self imposed isolation sir...? microndes2.gif 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ராசவன்னியன் said:

வாரத்தின் ஏழு நாளும் பட்டினியென ஒதுங்கி(?) வாழ்ந்தால், உடல் கரைந்துவிடாதா..?  vil-roulelangue.gif

Why this self imposed isolation sir...? microndes2.gif 

நான் ஒன்றும் பிறவிச் சைவமல்ல வன்னியன். பிரான்ஸ் வந்தும் நிறைய சாப்பிட்டானான், எதோ இப்ப கனகாலமாய் விட்டிட்டன். வீட்டில எல்லோரும் சாப்பிடுவினம். நான் சமைத்தும் கொடுக்கிறதுதான்.....!

யாரோ சொன்னார்கள் மச்சம் விட்டால் பின்னால ஒளிவட்டம்  தெரியுமென்று. ஆனால் இப்பதான் முன்னால அரைவட்டம் தெரியத் தொடங்கியிருக்கு....! விரும்பினால் நீங்களும் ட்ரை பண்ணிப் பார்க்கலாம்....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0