Jump to content

சர்வதேசத்திற்கு காணொளி விற்பனை செய்யும் நோக்கில் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை// வித்தியா படுகொலை வழக்கின் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

ஏன் வடக்கில் அவ்வளவு வாலுகள் இருக்கும் போது கிழக்கில் இருந்து இவர் எதற்கு?
இதற்கு மேல் இந்த திரியில் தேவையில்லாமல் எழுதி இந்தத் திரியை திசை திருப்ப விரும்பவில்லை

அவரை வால் என்கிறீங்க

அப்ப கிழக்கில் அவரை முதலில் தூசு தட்ட சொல்லுங்கோ 

Link to comment
Share on other sites

  • Replies 184
  • Created
  • Last Reply
வித்தியா விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் கைது
 

image_77e3312262.jpgயாழ். மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபரைத் தப்பியோட உதவி புரிந்ததாகக் கூறப்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்

Tamilmirror.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்யா கொலை தொடர்பில், சுவிஸ் குமாரை தப்ப வைத்த DIG லலித் ஜயதிலக இன்று கைதானார். 

http://www.dailymirror.lk/article/Vidyaa-s-killing-SDIG-arrested-132887.html

Link to comment
Share on other sites

வித்தியா கொலை வழக்கில் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க கைது

Jul 15, 2017 | 12:45by கி.தவசீலன் in செய்திகள்

SDIG_Lalith_Jayasinghe

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

வித்தியா படுகொலை முக்கிய சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் என்பவரை தப்பிக்க விட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே, மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.

முன்னதாக, இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக லலித் ஜெயசிங்கவுக்கு,  தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் குற்றச்சாட்டுப் பத்திரம் கடந்த 12ஆம் நாள் வழங்கப்பட்டது.

குற்றப்பத்திரத்துக்கு ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், தேசிய காவல்துறை ஆணைக்குழு, மூத்த பிரதி காவல்துறை மா அதிபரான, லலித் ஜெயசிங்க கோரப்பட்டிருந்தார்.

http://www.puthinappalakai.net/2017/07/15/news/24590

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:
வித்தியா விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் கைது
 

image_77e3312262.jpgயாழ். மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபரைத் தப்பியோட உதவி புரிந்ததாகக் கூறப்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்

Tamilmirror.lk

அடுத்து ஊர்காவல்துறை பொலீஸ் பொறுப்பதிகாரி கைதாவார்.

இத்துடன் வழக்கின் திசை மாறும்.

குற்றச்சாட்டப்பட்டவர்களில் ஒருசிலர், அப்பாவிகளோ, கொடுமை இழைப்தவர்களோ, தம்மீது போலீசார், சுவிஸ்குமாரை தப்பவைக்க, வேண்டுமென்றே குற்றம் சுமத்திவிட்டனர் என்று வாதாட போகின்றனர்.

அரச தரப்பின் பலவீனம் அங்கிருந்து ஆரம்பமாகப் போகிறது.

இளஞ்செழியன் இல்லை, யாராகினும், உறுதியான சான்றுகள் இல்லாமல் உணர்வு ரீதியாக தீர்ப்பு வழங்க முடியாது. அப்படி வழங்கினால் மேல் முறையீட்டில் தீர்ப்பு தலை கீழாகும். 

இதைத் தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் ஆரம்பத்திலிருந்து...

ஒரு பெண்ணாக ரதியக்கா குமுறினாலும், நிழலியும் சாதாரணமாக லாஜிக் இல்லாமல் வாதம் செய்கிறாரே என்ற ஆதங்கம் வந்தது.

வழக்கில், உணர்வுகள் இல்லை... பாயிண்டுகள் தான் முக்கியம் மன்னா... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

அடுத்து ஊர்காவல்துறை பொலீஸ் பொறுப்பதிகாரி கைதாவார்.

இத்துடன் வழக்கின் திசை மாறும்.

குற்றச்சாட்டப்பட்டவர்களில் ஒருசிலர், அப்பாவிகளோ, கொடுமை இழைப்தவர்களோ, தம்மீது போலீசார், சுவிஸ்குமாரை தப்பவைக்க, வேண்டுமென்றே குற்றம் சுமத்திவிட்டனர் என்று வாதாட போகின்றனர்.

அரச தரப்பின் பலவீனம் அங்கிருந்து ஆரம்பமாகப் போகிறது. பணம் வாங்கியது உறுதியாகும் போது, முக்கியமான சான்றுகள் அழிக்கப்பட்டு விட்டன என்ற கருத்தும் மேலோங்கும்.

இளஞ்செழியன் இல்லை, யாராகினும், உறுதியான சான்றுகள் இல்லாமல் உணர்வு ரீதியாக தீர்ப்பு வழங்க முடியாது. அப்படி வழங்கினால் மேல் முறையீட்டில் தீர்ப்பு தலை கீழாகும். 

இதைத் தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் ஆரம்பத்திலிருந்து...

ஒரு பெண்ணாக ரதியக்கா குமுறினாலும், நிழலியும் சாதாரணமாக லாஜிக் இல்லாமல் வாதம் செய்கிறாரே என்ற ஆதங்கம் வந்தது.

வழக்கில், உணர்வுகள் இல்லை... பாயிண்டுகள் தான் முக்கியம் மன்னா... :unsure:

 

DIG ஜயதிலக்க இன்று ஊர்காவல்த்துறை நீதவான் முன் தோன்றி, ஜூலை 25 வரை விளக்க மறியலில் வைக்கப் பட்டார்.

http://www.dailymirror.lk/article/SDIG-Jayasinghe-remanded-over-Vidya-case-132890.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நவீனன் said:

 

வித்தியாவின் ஆவி....

இந்த மாதிரி கருமங்களை செய்பவர்களுக்கு..... இதுதான் முன்னெச்சரிக்கை.

Link to comment
Share on other sites

11 hours ago, Nathamuni said:

வித்தியாவின் ஆவி....

இந்த மாதிரி கருமங்களை செய்பவர்களுக்கு..... இதுதான் முன்னெச்சரிக்கை.

முள்ளிவாயிக்காலில் எந்த விதமான கருமங்களை செய்ததால் யாருடைய ஆவி எமது மக்களை பலி கொண்டது?

Link to comment
Share on other sites

வித்தியா படுகொலை வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு

 


வித்தியா படுகொலை வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு
 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மாணவி வித்தியா கூட்டு வண்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான இந்த வழக்கு விசாரணை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ட்ரயல் அட்பார் முறையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிறேம்சங்கர் ஆகியோருடன் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் 6 நாட்கள் தொடர் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைகளின் போது கொலை சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி சுவிஸ் குமார் என்ற ஒன்பதாம் இலக்க சந்தேகநபர் என்பதை பதில் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.

அத்தோடு இந்த சந்தேகநபர் யாழ். பொலிஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு பின்னர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதற்கமைய இந்த சந்தேகநபர் யாழ். பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் வட மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரும் தற்போதைய மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான லலித் ஜயசிங்க நேற்று முன்தினம் (15) குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஊர்காவற்றுறை பதில் நீதவானின் உத்தரவிற்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பாதுகாப்பு கருதி அவரை யாழ். சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி மாணவி சிவலோகநாதன் வித்தியா காணாமற்போயிருந்தார்.

வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் மறுநாள் மீட்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது ஒன்பது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

http://newsfirst.lk/tamil/2017/07/வித்தியா-படுகொலை-வழக்கு-3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ்,சுவிள்குமாரை தப்பிக்க விட்டதற்காக கொஞ்சப் பேர் இனி மேல் கைதாகுவார்களே தவிர,ஏற்கனவே கைதானவர்களில் கள்ளுக் கடைக்காரார் அப்பூருவராக மாறிய படியால், ஒரு,சிலரை தவிர்த்து மற்ற்வர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்/கொடுக்க வேண்டும்...அப்படி இல்லாமல் தப்பித்து வந்தால் வெட்டோனும்.

நீங்கள் இங்கே இருந்து கொண்டு அவர்கள் தப்பிப்பதற்கு ஜடியா குடுக்கிறீர்கள் போல இருக்குtw_angry:

Link to comment
Share on other sites

On ‎7‎/‎15‎/‎2017 at 0:31 PM, Nathamuni said:

 

ஒரு பெண்ணாக ரதியக்கா குமுறினாலும், நிழலியும் சாதாரணமாக லாஜிக் இல்லாமல் வாதம் செய்கிறாரே என்ற ஆதங்கம் வந்தது.

 

நாதம், பொத்தாம் பொதுவாக சொல்லாமல் எந்த இடத்தில் எந்த கருத்தில் நான் லொஜிக் இல்லாமல் எழுதியுள்ளேன் என்று குறிப்பிடவும்.
மற்றது, வித்தியா கொலை வழக்கு விசாரணையில் தெரிய வரும் விடயங்களை பார்த்து குமுறுவதற்கு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; சாதாரண அளவுக்கு மனித நேயம் உள்ள ஒரு  மனுசப் பிறப்பாக இருந்தாலே போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நாதம், பொத்தாம் பொதுவாக சொல்லாமல் எந்த இடத்தில் எந்த கருத்தில் நான் லொஜிக் இல்லாமல் எழுதியுள்ளேன் என்று குறிப்பிடவும்.
மற்றது, வித்தியா கொலை வழக்கு விசாரணையில் தெரிய வரும் விடயங்களை பார்த்து குமுறுவதற்கு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; சாதாரண அளவுக்கு மனித நேயம் உள்ள ஒரு  மனுசப் பிறப்பாக இருந்தாலே போதும்

'பத்திரிக்கை கருத்துக்கள்', 'பொதுசன அபிப்பிராயம்' என உங்கள் வாதத்துக்காக நீங்கள் எடுத்து வைத்த கருத்துக்கள்... உங்களைப் போன்ற 'லாஜீக்கே' அடிப்படையாக வேலைக்கு பயன்படுத்தும், அறிவுஜீவுகளிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.

பொதுவாக மக்கள் அபிப்பிராயத்தையே, ஊடகங்கள் பிரதிபலிக்கும். ஆனால் சட்டம், நீதி அவ்வாறு பார்ப்பதில்லை. பார்க்க முடியாது.

உங்களுக்கு தெரியும்:  நான் வழக்குகளை ஆர்வமாக, லாஜிக்குடன் தான் பார்ப்பேன். எனது எழுத்துகள் அனைத்துமே இந்த பக்கம் தொடர்பானதாய் இருந்திருப்பதை கவனித்திருப்பீர்கள்.

இந்த வழக்கின் ஆரம்பத்தில் சுவிஸ்குமார் விவகாரத்தில்.... பணத்தை வாங்கிக் கொண்டு அவரைத் தப்ப வைத்தால்.... யாரையாவது அப்பாவிகளை மாட்டவைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் வரும் என்பதை ஏற்றுக் கொண்டீர்களாயின்.... எனது பார்வையின் நியாயம் புரியும்.

மற்றும்படி தனிப்பட்ட வகையில் எடுக்க மாட்டீர்கள் என்றும் எனக்கு தெரியும்.

மேலும் இந்தப் பெண்ணுக்கு நடந்த கொடூரம் மனித நேயத்துக்கு அப்பால்... இன்னுமோர் பெண்ணால் ஜூரணிக்க முடியாது.

Link to comment
Share on other sites

24 minutes ago, Nathamuni said:

'பத்திரிக்கை கருத்துக்கள்', 'பொதுசன அபிப்பிராயம்' என உங்கள் வாதத்துக்காக நீங்கள் எடுத்து வைத்த கருத்துக்கள்... உங்களைப் போன்ற 'லாஜீக்கே' அடிப்படையாக வேலைக்கு பயன்படுத்தும், அறிவுஜீவுகளிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.

பொதுவாக மக்கள் அபிப்பிராயத்தையே, ஊடகங்கள் பிரதிபலிக்கும். ஆனால் சட்டம், நீதி அவ்வாறு பார்ப்பதில்லை. பார்க்க முடியாது.

 

நான் கூறிய கருத்துக்கள் கீழே உள்ளன. இதனடிப்படையில் நான் கூறியது ஊடகங்களின் அழுத்தத்தினால் தீர்ப்பு மாறாது என்பது.அத்துடன்  பொதுமக்களின் / ஊடகங்களின் அழுத்தங்கள் இல்லாமல் விட்டு இருந்தால் இந்த வழக்கு இந்தளவுக்கு  முறைக்கு கூட வந்து இருக்காது என்பது. இதில் எங்கே லொஜிக் மீறல்கள்?

On ‎7‎/‎13‎/‎2017 at 8:57 AM, நிழலி said:

Trails by Media ஊடாக இவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று வலியுறுத்தப்படுகின்றார்கள் என்று நீங்கள் சொல்வது இங்கு பொருந்தாது.


2015 இல் இடம்பெற்ற இக் கொடூர சம்பவம் மீதான வழக்கு மீடியாக்கள் மற்றும் பொதுமக்களின் கடும் அழுத்தத்தினால் மட்டுமே இந்தளவு தூரத்துக்கு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டு இருக்கு. இல்லையெனில் தென்னிலங்கையில் அடிக்கடி இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவங்கள் எப்படி கிடப்பில் போடப்பட்டு வருகின்றனவோ அதை போலவே இது கிடப்பில் போடப்பட்டோ இன்னும் இழுத்தடிக்கப்பட்டோ இருக்கும்.
யாழ்ப்பாண மற்று மீடியாக்கள் இது தொடர்பான செய்திகளில் பாலியல் வல்லுறவு பற்றிய வர்ணணைகள் தவிந்த வேறு எந்த மிகைப்படுத்தல்களையும் செய்யவில்லை. அத்துடன் இந்த திரியில் மீடியாக்களால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் வழக்கு இடம்பெறும் போது இடம்பெறும் விசாரணைகள், சாட்சியங்கள் மற்றும் நீதிபதிகளின் கருத்துகள் மட்டுமே. வெறும் கற்பனை தகவல்கள் அல்ல.

ஒரு வாசகர் தனக்கு தரப்படும் செய்திகளில் தகவல்களில் இருக்கும் நம்பகத்தன்மையை ஒட்டித்தான் கருத்தை பதிவர். இங்கு குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் பிரதான சந்தேக நபர்கள் இக் கொடூர சம்பவத்தில் எந்தளவுக்கு சம்பந்தப்பட்டு உள்ளனர் என நீதிமன்ற விசாரணைகளில், சாட்சியங்களின் தகவல்களில், சான்றுகளின் அடிப்படையில் தீர்மானிக்க முடிகின்றது. நீதிமன்றத்துக்கு வேண்டும் என்றால் எல்லாமே நூறு வீதம் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் வாசகர்களுக்கு அல்ல. அத்துடன் வாசகர்களின் எண்ணமோ அல்லது குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அபிப்பிரயாமோ நீதிமன்றத்தின் தீர்ப்பை தீர்மானிக்க போவதும் இல்லை.

 

29 minutes ago, Nathamuni said:

.

மற்றும்படி தனிப்பட்ட வகையில் எடுக்க மாட்டீர்கள் என்றும் எனக்கு தெரியும்.

 

ஒரு போதும் அப்படி எடுப்பது இல்லை.

31 minutes ago, Nathamuni said:

 

இந்த வழக்கின் ஆரம்பத்தில் சுவிஸ்குமார் விவகாரத்தில்.... பணத்தை வாங்கிக் கொண்டு அவரைத் தப்ப வைத்தால்.... யாரையாவது அப்பாவிகளை மாட்டவைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் வரும் என்பதை ஏற்றுக் கொண்டீர்களாயின்.... எனது பார்வையின் நியாயம் புரியும்.

 

 உள்ளூர் பொலிஸில் இருந்த செல்வாக்காலும் பணத்தாலும் தான் ஆள் கொழும்புக்கு தப்பி செல்ல முடிந்து இருக்கு. சுவிஸ் குமாரை தப்ப வைக்க மேல் மட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அப்படி மேல் மட்டத்தில் எடுக்கப்பட்டு இருந்தால் கொழும்பில் அடுத்த நாளே கைது செய்யப்பட்டு இருக்க மாட்டார். பிரதான சூத்திரதாரியாக வழக்கில் சேர்க்கப்பட்டும் இருக்க மாட்டார்.
என் பார்வையில், சுவிஸ் குமாரும் தப்ப மாட்டார். மற்ற பிரதான சந்தேக நபர்களும் கூட தப்ப மாட்டினம். முக்கியமாக பாலியல் வல்லுறவில் நேரடியாக ஈடுபட்டவர்கள், கொலையில் ஈடுபட்டவர்கள் தப்ப கடினம் என நம்புகின்றேன். அத்துடன் ட்ரையல் அட் பார் மூலம் வரும் தீர்ப்புகள் (3 மேல் நீதிமன்ற நீதிபதிகள்) உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் இலங்கையில் இது வரைக்கும் நிகழவில்லை என்றும் அறிந்தேன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் ஒரு இருட்டறை. அது ஏமாறலாம், ஏமாற்றப்படலாம் ஆனால் தர்மம் ஒருநாள் பழி  வாங்கியே தீரும். அந்த உறவை இழந்து தவிக்கும் உள்ளங்களுக்கு ஆறுதலையும், இறந்த ஆன்மாவுக்கு சாந்தியையும் இறைவா நீரே அருளும்.

Link to comment
Share on other sites

சுவிஸ்குமரை விடுவிப்பதில் முனைப்புடன் இருந்த எஸ்.ஜ.

 
சுவிஸ்குமரை விடுவிப்பதில் முனைப்புடன் இருந்த எஸ்.ஜ.
 

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான சுவிஸ்குமாரை யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவித்தபோதும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் மறுப்புத் தெரிவித்தார். சுவிஸ்குமாருக்கு எதிராக சாட்சிகள் இல்லை என்றும், அதனால் அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் ஒப்படைக்க முடியாது. விடுவிக்க வேண்டும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தெரிவித்தார்.

இவ்வாறு சம்பவம் நடைபெற்றபோது பதவியில் இருந்த யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சாட்சியம் வழங்கினார்.

புங்குதீவு மாணவி கொலை வழக்குத் தொடர்பான தீர்ப்பாயத்தில் இன்று சாட்சியப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன. அதில் சாட்சியமளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பவ தினத்தன்று சந்தேகநபரான சுவிஸ்குமாரை புங்குடுதீவில் கைது செய்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் என்னிடம் அழைத்து வந்தார். அவரை யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கூறினேன்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் சுவிஸ்குமார் என்பவருக்கு எதிராக சாட்சிகள் இல்லை என்றும், சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் பரிசோதகர் டிரான் சாட்சிகள் இல்லை என்று தெரிவித்தார் என்றும் அவரை யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் ஒப்படைக்க முடியாது என்றும் கூறினார்.

சாட்சிகள் இல்லாவிட்டாலும் சந்தேகத்தின்பேரில் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கூறினேன். அதற்கும் அவர் மறுப்புத் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டேன். அவர் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜனைத் தன்னிடம் அனுப்புமாறு தெரிவித்தார்.

அவரிடமும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் மேற்கண்டவாறே தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வட மாகாண மூத்த பொலிஸ் மா அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டுள்ளார். வட மாகாண மூத்த பொலிஸ் மா அதிபர் சுவிஸ்குமாருக்கு காயங்கள் ஏதாவது இருக்கின்றதா என்று ஆராய்ந்து வைத்திய அறிக்கை வழங்க வேண்டுமானால் வழங்கி அவர் வெளியேற அனுமதிக்குமாறு யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கூறியுள்ளார் என்று சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

http://uthayandaily.com/story/12237.html

Link to comment
Share on other sites

வித்தியா கொலை வழக்கு: சுவிஸ் குமார் பொலிஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பில் சாட்சியம்

 


வித்தியா கொலை வழக்கு: சுவிஸ் குமார் பொலிஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பில் சாட்சியம்
 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார், யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பில் இன்று சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் Trial at Bar விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆரம்பமானது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளனர்.

வித்தியாவின் உறவினரான 38 ஆம் இலக்க சாட்சியாளரிடம் இன்று முற்பகல் சாட்சியம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தனியார் பஸ் நடத்துநரான இவர் வித்தியாவின் தாயாரின் வேண்டுகோளுக்கு அமைய, சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது பொலிஸாருடன் அங்கு சென்றதாக சாட்சியமளித்தார்.

வித்தியாவின் படுகொலையின் பின்னர் புங்குடுதீவு பகுதியில் வீடுகள் எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

சாட்சிப் பதிவு மற்றும் குறுக்கு விசாரணைகளின் பின்னர் 38 ஆம் இலக்க சந்தேகநபர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து வழக்கின் 21 ஆம் இலக்க சாட்சியாளரான ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரான பொல்கொட பொலிஸ் நிலையத்தின் தற்போதைய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

வித்தியாவின் சடலம் காணப்பட்ட விதம், இரண்டு சந்தர்ப்பங்களில் 8 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்ட விதம் தொடர்பில் அவர் விரிவாக சாட்சியமளித்திருந்தார்.

சடலம் மீட்கப்பட்ட தினத்தில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்

இதனிடையே, குறுக்கிட்ட சந்தேகநபர்கள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன, சாட்சி அவருடைய கையெழுத்தினால் பதியப்பட்ட வாக்குமூலத்தைப் பார்த்து சாட்சியமளிக்க ஆட்சேபனை தெரிவித்தார்.

இந்த ஆட்சேபனையை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

2015 ஆம் அண்டு மே மாதம் 17 ஆம் திகதி பிற்பகல் வேளையில் சசிதரன், சந்திரதாசன், துஷாந்தன், குகநாதன், கோகிலன் ஆகிய ஐவரும் கோவிலுக்கு சென்றுவரும் வழியில் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக சாட்சியாளரான உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கூறினார்.

சந்தேகநபர்களில் சிலர் வேஷ்டியும் மேல் அங்கி இல்லாமலும் இருந்ததாகத் தெரிவித்த அவர், சிலர் அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாகவும் சாட்சியமளித்தார்.

இந்த சந்தேகநபர்களை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குயின்டஸ் பெரேரா கைது செய்ததாகவும் அவரது சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து சந்தேகநபர்களில் ஒருவரது உறவினர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோத்தராகக் கடமையாற்றுவதால், அவர்கள் குறிகட்டுவான் காவலரணுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சந்தேகநபர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கோபி என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

இந்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கையில், வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை சந்திக்குமாறு கூறப்பட்டதாகவும் சாட்சியாளர் தெரிவித்தார்.

பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்தவேளை, யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் பெரேரா, யாழ். பொலிஸ் நிலைய உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கஜன், வீரசேகர என்ற பொலிஸ் அதிகாரியும் சிவில் உடையில் ஒருவரும் அங்கு இருந்ததாக சாட்சியாளர் கூறியுள்ளார்.

சிவில் உடையில் இருந்தவர் தமிழ் மாறன் என்பதை பின்னர் அறிந்துகொண்டதாகவும் அவரது சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டிருந்த ஐந்து சந்தேகபர்களில் ஒருவரது உறவினரான மகாலிங்கம் சசிகுமார் என்பவர் இந்த குற்றச்செயலுடன் தொடர்புபட்டுள்ளதாக லலித் ஜயசிங்க கூறியதாகவும் சாட்சியாளர் மன்றில் அறிவித்தார்.

இவர் வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதால், உடனடியாக அவரது பெயர் மற்றும் கடவுச்சீட்டு இலக்கத்தை சர்வதேச விமான நிலையத்திலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியதாகவும் சாட்சியாளர் தெரிவித்தார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் இந்த அறிவுறுத்தலை வழங்கியதால், சந்தேகநபரின் வாக்குமூலம் ஏற்கனவே பெறப்பட்டிருக்கும் என கருதி கையடக்க தொலைபேசியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததாகவும் சாட்சியாளர் கூறியுள்ளார்.

18 ஆம் திகதி வரை 8 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டிருந்ததாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கூறும் வரை மகாலிங்கம் சசிகுமார் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை எனவும் சாட்சியாளர் தெரிவித்தார்.

மகாலிங்கம் சசிகுமார் எனும் சந்தேகநபர் மே மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அன்று மாலை விடுவிக்கப்பட்டதை அறிந்துகொண்டதாகவும் சாட்சியாளர் கூறினார்.

இந்த சந்தேகநபர் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும் சாட்சியாளர் கூறினார்.

சசிகுமார் என்ற குறித்த சந்தேகநபர் வெள்ளவத்தை பொலிஸாரினால் எவரது பணிப்பின்பேரில் கைது செய்யப்பட்டார் என்பது தனக்கு தெரியாது எனவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியான சிந்தக்க பண்டாரவினால் சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதாகவும் அவரது சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமோ அல்லது ஊர்காவற்துறை பொலிஸாரோ மகாலிங்கம் சசிகுமார் எனும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்தவில்லை எனவும் சாட்சியாளர் கூறினார்.

இரண்டு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களையும் சாட்சியாளர் இன்று நீதிமன்றத்தில் அடையாளம் காண்பித்தார்

http://newsfirst.lk/tamil/2017/07/வித்தியா-கொலை-வழக்கு-சுவ/

Link to comment
Share on other sites

சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவிய உப பொலிஸ் பரிசோதகர் சு. ஸ்ரீகஜன் தலைமறைவு

14502936_129619564168048_2243422455713346020_n.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாணவி கொலைவழக்கில் பிரதான சூத்திரதாரியாக குற்றம் சாட்டப்படும் சுவிஸ் குமார் என்பவர் தப்பி செல்ல உதவிய உப பொலிஸ் பரிசோதகர் சு. ஸ்ரீகஜன் தலைமறைவாக உள்ளதாக குற்றதடுப்பு புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்துறை நீதிமன்றில் தெரிவித்து உள்ளனர்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் , குறித்த உப பொலிஸ் பரிசோதகர் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்க குடிவரவு , குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவு இட வேண்டும் என குற்றபுலனாய்வு துறையினர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை விண்ணப்பம் செய்தனர்.

அதன் போது குற்ற புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரி ஐ.பி நிஷாந்த சில்வா , மன்றில் தெரிவிக்கையில் மாணவி கொலை வழக்கின் பிரதான சூத்திர தாரி தப்பி செல்வதற்கு உடந்தையாக இருந்த குற்ற சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் சு. ஸ்ரீகஜன் என்பவரை கைது செய்வதற்கு முயற்சித்த போது அவரை கைது செய்ய முடியவில்லை. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.  அவர் நாட்டை விட்டு தப்பி செல்வதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளமையால் , அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்க வேண்டும் என மன்றில் கோரினார்.

குற்றபுலனாய்வு பிரிவின் கோரிக்கையை பரிசீலித்த மன்று ஸ்ரீகஜனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாது என குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு மன்று உத்தரவு பிறப்பித்தது.

மாணவி கொலை வழக்கில் ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர்  2015  ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில் 19ஆம் திகதி வெள்ளவத்தை பகுதியில் வைத்து வெள்ளவத்தை பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் தப்பி செல்வதற்கு உடந்தையாக அக்கால பகுதியில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இருந்த லலித் ஜெயசிங்க இருந்தார் என்றும் அவருடன் அக்கால பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் சு. ஸ்ரீகஜன் என்பவரும் உடந்தையாக செயற்பட்டார் என குற்ற சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அந்நிலையில் , கடந்த சனிக்கிழமை அக்கால பகுதியில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இருந்த லலித் ஜெயசிங்க குற்ற தடுப்பு புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு இடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் , உப பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து இருந்த போது குறித்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமறைவாகியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/archives/33326

Link to comment
Share on other sites

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு எதிரியின் உறவினர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை

 
jaff-court.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் எதிரிகளில் ஒருவரின் உறவினர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார் என மாணவி கொலை வழக்கின் 21ஆவது சாட்சியமான உப பொலிஸ் பரிசோதகர் இரான் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முன்பாக சாட்சியமளித்துள்ளார்.
 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணையின் இரண்டாம் கட்ட சாட்சி பதிவுகள் இன்றைய தினம் செவ்வாய்கிழமை ஆரம்பமானது.
 
 யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
 
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த்,  லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி  மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
 
எதிரிகள் சார்பில்  5 சட்டத்தரணிகள் முன்னிலை. 
 
1ம் ,2ம் , 3ம் , மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாம்   மற்றும் சட்டத்தரணி லியகே  , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் 8ஆம் எதிரி சார்பிலும் மன்றினால் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
 
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
 
அதனை தொடர்ந்து இன்றைய தினம் ஏழாம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
 
குற்றபகிர்வு பத்திரத்தில் திருத்தத்திற்கு அனுமதி. 
 

குறித்த வழக்கில் மேலும் இரு சாட்சியங்களையும் மூன்று சான்று பொருட்களையும் குற்றபகிர்வு பத்திரத்தில் இணைப்பதற்கு மன்றின் அனுமதியினை பிரதி சொலிஸ்டர் ஜெனரல் கோரி இருந்தார்.

 
அதற்கு எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவத்தன ஆட்சேபனை தெரிவித்து மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை மன்று ஏக மனதாக நிராகரித்து , குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்தப்படும் வரையில் குற்ற பகிர்வு பத்திரத்தில் , தேவைக்கேற்ப திருத்தங்கள் செய்வதற்கு சட்டமா அதிபருக்கு உரித்துண்டு, அதன் பிரகாராம் புதிதாக அணைக்கப்பட இருக்கும் சாட்சியங்கள் இரண்டும் நிபுணத்துவ சாட்சியங்கள் அதனால் அவற்றை புதிதாக சேர்த்துக்கொள்ள மன்று அனுமதி வழங்கியது.
 
அதன் பிரகாரம் `புதிதாக 52ஆவது சாட்சியாக இரசாயன பகுப்பாய்வு திணைக்கள சிரேஸ்ட அதிகாரியும் , 53 சாட்சியாக ஜின்டெக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானியும் நிபுணத்துவ சாட்சியங்களாக இணைத்துக்கொள்ளப்பட்டு உள்ளனர். அதேவேளை சான்று பொருட்களாக பற்றுசீட்டுக்கள் , இரசாயன பகுப்பாய்வு அறிக்கை , மரபணு பரிசோதனை அறிக்கை ஆகியவை புதிதாக இணைக்கப்பட்டு உள்ளது.
 
நள்ளிரவே பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை ஒப்படைத்தனர். 
 
அதனை தொடர்ந்து வழக்கின் 38 ஆவது சாட்சியமான சண்முகலிங்கம் கார்த்தி சாட்சியமளிக்கையில் ,
 
நான் புங்குடுதீவினை சேர்ந்தனான். படுகொலை செய்யப்பட்ட மாணவி எனது அப்பாவின் மச்சானின் மகள். நான் பேருந்து நடத்துனராக கடமையாற்றுகிறேன்.
 
கடந்த 2015 மே மாதம் 13ஆம் திகதி நான் வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற போது வித்தியாவை காணவில்லை என அறிந்து கொண்டேன். அதனை அடுத்து வித்தியா வீட்டுக்கு சென்ற போது வித்தியாவின் அம்மம்மா மாத்திரம் வீட்டில் இருந்து அழுது கொண்டு இருந்தார். வித்தியாவின் தாயும் , அண்ணனும் முறைப்பாடு செய்வதற்கு போலிஸ் நிலையம் சென்று இருந்ததாக அறிந்தேன். நான் கொஞ்ச நேரம் வித்தியா வீட்டில் நின்று விட்டு எனது வீட்டுக்கு திரும்பி விட்டேன்.
 
மறுநாள் 14 ஆம் திகதி வித்தியாவின் சடலம் கிடக்கின்றது. என அறிந்து சடலம் கிடந்த இடத்திற்கு சென்றேன். அங்கே வித்தியாவின் அம்மா அழுது கொண்டு இருந்தார். அண்ணன் மயக்கமாகி வீழ்ந்து இருந்தார்.
 
அவ்வேளை சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அவ்வேளை வித்தியாவின் அம்மா என்னையே சடலத்தை பொறுப்பேற்று வைத்திய சாலைக்கு போய் வருமாறு கூறினார். அதனை தொடர்ந்து நானும் சடலத்துடன் வைத்திய சாலைக்கு வந்தேன்.
 
பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை மீண்டும் எம்மிடம் ஒப்படைக்கும் போது நள்ளிரவு 1 மணி இருக்கும். அதன் பின்னர் சடலத்தை புங்குடுதீவுக்கு எடுத்து வந்தோம். மறுநாள் 15ஆம் திகதி இறுதி கிரியைகள் செய்து சடலத்தை நல்லடக்கம் செய்யும் வரையில் நான் அங்கே நின்று இருந்தேன். என சாட்சியம் அளித்தார்.
 
எதிரிகளின் வீடுகளுக்கு தீ வைத்தது யார் ?
 
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவத்த குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார். அதன் போது ,
 
கேள்வி :-  மாணவியின் இறப்புக்கு பின்னர் புங்குடுதீவில் கலவரம் இடம்பெற்றதா ?
 
பதில் :-   இல்லை.  இறுதி கிரியைகள் நடைபெற்று அவர் படித்த பாடசாலைக்கு சடலம் அஞ்சலி நிகழ்வுக்காக கொண்டு வந்த வேளையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
 
கேள்வி :- இறுதி கிரியை நடைபெற்றதற்கு முதல் நாள் 14ஆம் திகதி போராட்டங்கள் நடைபெற்றனவா ?
 
பதில் :- அது தொடர்பில் எனக்கு தெரியாது. அன்றைய தினம் நான் சடலத்துடன் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு வந்திருந்தேன். மீண்டும் புங்குடுதீவு செல்லும் போது நள்ளிரவு 1 மணிக்கு மேல் என்பதனால் அன்றைய தினம் நடைபெற்றமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.
 
கேள்வி :- இறுதி சடங்கு முடிவடைந்த பின்னர் வன்முறைகள் நடைபெற்றனவா ?
 

பத்தி :- இல்லை.

கேள்வி :- எதிரிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதா ?
பதில் :- தெரியாது.
 
கேள்வி :- நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள எதிரிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது தெரியாதா ?
பதில் :- இல்லை தெரியாது. நான் என் வேலையை தவிர வேறு வேலைகளை பார்ப்பதில்லை.
 
கேள்வி :- தீ வைக்கபப்ட்டத்தை கண்டதே இல்லையா ?
பதில் :- இல்லை.பின்னர் கேள்விப்பட்டு இருந்தேன்.
 
கேள்வி :- பாதையால் செல்லும் போது எரிந்த வீடு ஒன்றினையும் கண்டதே இல்லையா ?
பதில் :- இல்லை.
 
இதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவத்த , எதிரிகளின் வீடுகளுக்கு தீ வைத்த கும்பலுக்கு நீரே தலைமை தாங்கி சென்றீர் என நான் எதிரிகள் தரப்பில் கூறுகிறேன் என தெரிவித்தார். தான் அதனை முற்றாக மறுக்கிறேன். என சாட்சியமளித்தவர் தெரிவித்தார்.
 
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி குறுக்கு விசாரணை செய்யும் போது ,
 
மாணவியின் அண்ணா மயங்கி வீழ்ந்து இருந்தார் என சாட்சியம் அளித்து இருந்தீர். அவ்வாறு மயங்கி வீழ்ந்து இருந்தவரை ஆசுவாச படுத்தி அருகில் இருந்தவர்கள் தொடர்பில் குறிப்பிட முடியுமா ? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு சாட்சியமளித்தவர்.  ” ஆம் , சந்திரஹாசன் என்பவர் (5ஆம் எதிரி ) மயங்கி வீழ்ந்து இருந்த வித்தியாவின் அண்ணாவை தனது மடியில் சாய்த்து வைத்து இருந்தார் ” என பதிலளித்தார்.
 
அதனை தொடர்ந்து குறுக்கு விசாரணைகள் முடிவடைந்து குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.
 
மூவரை முதலில் கைது செய்தோம். 
 
அதையடுத்து குறித்த வழக்கின் 21ஆவது சாட்சியான உப பொலிஸ் பரிசோதகர் மரகல இரான் சாட்சியமளிக்கையில் ,
 
நான் தற்போது கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகிறேன். சம்பவம் நடைபெற்ற கால பகுதியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தேன்.அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்தேன்.
 
அந்நிலையில் 2015 மே மாதம் 14ஆம் திகதி காலை நான் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த போது , தகவல் கிடைத்தது புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அருகில் மக்கள் கூட்டமாக இருப்பதாக அதனை அடுந்த அந்த பகுதிக்கு நான் எனது பொலிஸ் குழுவுடன் அந்த இடத்திற்கு சென்று இருந்தேன்.
 
ஆலடி சந்தியில் இருந்து சிறிது தூரம் உள்ளே சென்றால் , பற்றைகாடுகளுக்கு மத்தியில் பாழடைந்த கட்டடங்கள் உள்ள பகுதியில் மக்கள் கூட்டமாக இருந்தது. அந்த பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் காணப்பட்டது. நான் நின்ற இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரத்தில் சடலம் காணப்பட்டது என தெரிவித்து சடலம் காணப்பட்ட நிலையை மன்றில் விபரித்து கூறினார்.
 
அவ்வேளை எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்த, குறித்த பொலிஸ் சாட்சி , தகவல் புத்தகத்தை பார்த்து சாட்சியம் அளிக்காமல் தனது வாக்கு மூலத்தை பார்த்து சாட்சியம் அளிக்கின்றார். அதனை அனுமதிக்க கூடாது என மன்றில் கோரினார்.
 
அதனை அடுத்து மன்று , சாட்சியத்திடம் , வாக்கு மூலத்தை பார்த்து சாட்சியம் அளிக்காமல் , தகவல் புத்தகத்தை பார்த்து சாட்சியம் அளிக்குமாறு அறிவுறுத்தியது.
 
அதனை தொடர்ந்து சாட்சியம் அளிப்பவர் , தொடர்ந்து தனது சாட்சியத்தை அளித்தார். அதன் போது,
 
நாம் அன்றைய தினம் சடலத்தினை `பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி விட்டு , எமது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குயிண்டஸ் குணால் பெரேரா (அப்போதைய ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
 
அதன் பிரகாரம் அன்றைய தினம் (14ஆம் திகதி) இரவு 10 மணியளவில்  பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரையும் அவர்களது வீட்டுகளுக்கு அருகில் வைத்து கைது செய்தோம்.
 
மறுநாள் (15ஆம் திகதி ) மாணவியின் இறுதி சடங்கு இடம்பெற்றது. அன்றைய தினம் காலை முதல் இறுதி சடங்கு முடிவடைந்து சடலம் நல்லடக்கம் செய்யப்படும் வரையில் , நான் மாணவி கல்வி கற்ற பாடசாலைக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்தேன்.
 
அதன் பின்னர் 17ஆம் திகதி மாலை எமது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குயிண்டஸ் குணால் பெரேரா எம்மை புங்குடுதீவில் உள்ள நாதன் கடைக்கு முன்பாக வருமாறு அழைத்து இருந்தார். அதனை அடுத்து நாம் அந்த இடத்திற்கு சென்று இருந்தோம்.
 
அந்த கடையில் இருந்து சுமார் 400 மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள இடத்திற்கு வர சொன்னார். நாம் அங்கு சென்ற போது மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐந்து சந்தேக நபர்களையும் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்தோம். அவர்களை கைது செய்த போது அவர்களில் ஒரு சிலர் ஆலயத்திற்கு செல்வதற்கு தயாரான நிலையில் வேட்டியுடன் மேலங்கி இல்லாமல் நின்று இருந்தார்கள். அவர்கள் ஐவரையும் ஒரே இடத்தில் வைத்தே கைது செய்தோம்.
 
உறவினர் ஒருவர் போலீஸில் கடமையாற்றுகிறார். 
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எமது பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லவில்லை ஏனெனில் சந்தேக நபர்களில் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதனால் நாம் அவர்களை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லாது குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு  விசாரணைக்காக கொண்டு சென்றோம்.
 
நாம் அவர்களை குறிகட்டுவான் போலிஸ் காவலரணுக்கு கொண்டு சென்று வாக்கு மூலங்களை பெற முயற்சிக்கும் போது , ஊரவர்கள் ஒன்று திரண்டு ,சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி காவலரணை தாக்கினார்கள்.
 
அதனால் எமது பொறுப்பதிகாரி மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு அதனை கொண்டு சென்று கடற்படையின் உதவியுடன் சந்தேக நபர்களை கடல் வழியாக நீருந்து விசை படகு (வோட்டர் ஜெட்) மூலம் காரைநகர் கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிசாரின் உதவியுடன் சந்தேக நபர்களை யாழ்ப்பான தலைமை போலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தோம்.
 
அன்றைய தினம் இரவு சந்தேக நபர்கள் வாக்கு மூலம் அளிக்கும் நிலைமையில் இல்லாத காரணத்தால் அவர்கள் ஓய்வெடுக்க விட்டு விட்டு நாம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு திரும்பிவிட்டோம்.
 
பின்னர் மறுநாள் 18ஆம் திகதி அதிகாலை மீண்டும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் சென்று சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களை கோபி எனும் தமிழ் போலிஸ் உத்தியோகஸ்தரின் உதவியுடன் பெற்றுக்கொண்டு இருந்த வேளை , வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க என்னை தனது அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு அழைத்தார்.
 
சிவில் உடையில் தமிழ்மாறன் 
 
அதனை அடுத்து நான் அவரது அலுவலகத்திற்கு சென்றேன். அவ்வேளை அங்கு யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபர் பெரேரா , யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசேகர , யாழ்ப்பாண போலிஸ் நிலையத்தில் அப்போது கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் மற்றும் ஒருவர் சிவில் உடையில் இருந்தார். அப்போது சிவில் உடையில் இருந்தவர் யார் என்று தெரியாது பின்னர் அவர் சட்டத்துறை  பீடாதிபதி தமிழ்மாறன் என அறிந்து கொண்டேன்.
 
அப்போது வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் என்னிடம் மாணவி கொலை வழக்கில் 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் பற்றியும் என்னிடம் விசாரித்தார். பின்னர் , இந்த வழக்குடன் தொடர்புடைய நபர் ஒருவர் உள்ளார் எனவும் அவர் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முற்படலாம் அதானல் சர்வதேச விமான நிலைய போலீசாருக்கு தகவல் வழங்கி அவர் வெளிநாடு தப்பி செல்லவதனை தடுக்குமாறு சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரது கடவுசீட்டு இலக்கத்தை கூறி அந்த தகவல்களை சர்வதேச விமான நிலைய போலீசாருக்கு தகவல் வழங்குமாறு கூறினார். நான் அதனை எமது போலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கூறினேன்.
 
சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி. 
 
அதன் பின்னர் நான் மீண்டும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு வந்து அங்கு தடுத்து வைக்கபப்ட்டு இருந்த ஐந்து சந்தேக நபர்களிடமும் வாக்கு மூலத்தினை பெற்று , அவர்களை யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் , அவர்களை அப்போதைய ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முற்படுத்தினோம். அங்கு நீதிவானிடம் ஐந்து சந்தேக நபர்களையும் 48 மணி நேர போலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரினோம். அதற்கு நீதிவான் அனுமதியளித்து இருந்தார்.
 
ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும்  மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் தொடர்பில் எமக்கு எந்த தகவலும் தெரியாது 18 ஆம் திகதி யாழ்ப்பாண போலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து முறைப்பாடு பதிவு செய்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பின்னர் மறுநாள் 19 ஆம் திகதி  வெள்ளவத்தையில் வைத்து , மீள கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் அறிந்து கொண்டேன். என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 
  சடலத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். 
 
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணை செய்யும் போது ,
 
கேள்வி :- சடலத்திற்கு அருகில் துவிச்ச்கர வண்டி எதனையும் கண்டீரா ?
பதில் :- ஆம். பெண்கள் துவிச்சக்கர வண்டி ஒன்றினை கண்டேன்.
 
கேள்வி :- சடலத்திற்கும் துவிச்சக்கர வண்டிக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருந்தது ?
பதில் :- நான் சடலத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதற்கு முதல் நான் இவ்வாறு ஒரு கொடூர கொலையை கண்டதில்லை. அதனால் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தமையால் சடலத்திற்கும் சைக்கிளுக்கும் இடையிலான தூரம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
 
குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழக்கில் சான்றாக அணைக்க முடியாது.
 
அதனை தொடர்ந்து , எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்த , என்னுடைய கட்சி கார்கள் பொலிசாருக்கு முதல் அளித்த வாக்கு மூலத்திற்கும் பின்னர் குற்ற புலனாய்வு துறையினருக்கு அளித்த வாக்கு மூலத்திற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. போலீசாருக்கு முதல் அளித்த வாக்கு மூலம் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம். அது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கவோ முரண்பாட்டை முன் வைக்கவோ எனக்கு தனியுரிமை உண்டு என மன்றில் விண்ணப்பம் செய்தார்.
 
அதற்கு மறுமொழி அளித்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல் , இது சட்ட முரணான விண்ணப்பம். என தெரிவித்து அந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு மன்றில் கோரினார்.
 
அதனை அடுத்து மன்று , எதிரிகளால் போலீசாருக்கு வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழக்கில் சான்றாக அணைக்க முடியாது. என சட்டம் சொல்கின்றது. அவ்வாறு கொடுக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் தொடர்பில் கேள்வி எழுப்ப முடியாது. என்பதனால் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை மன்று ஏக மனதாக மன்று நிராகரித்தது.
 
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்த மீண்டும் தனது குறுக்கு விசாரணைகளை முன்னேடுத்தார்.
 
கேள்வி :- சந்தேக நபர்களிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏதேனும் சான்று பொருட்களை கைப்பற்றி நீர்களா ?
பதில் :- வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொல்லப்பட்ட மாணவியின் மூக்கு கண்ணாடியினை மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அதை மீட்க முடியவில்லை.
 
கேள்வி :- ஏன் ?
பதில் :- அன்றைய தினம் (18ஆம் திகதி ) யுத்த வெற்றி நாள் அதனால் மக்கள் கூடுவார்கள் அன்று சந்தேக நபர்களை புங்குடுதீவுக்கு அழைத்து செல்வது. நல்லதில்லை என மேல் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அதனால் அன்று அழைத்து செல்லவில்லை மறுநாள் நாம் விசாரித்ததில் புங்குடுதீவில் யுத்த வெற்றி நாளுக்காக எவரும் கூடவில்லை என அறிந்து கொண்டோம்.
 
வீடுகளுக்கு தீ வைப்பு. சான்று பொருட்களை மீட்க முடியவில்லை. 
 
அதன் பின்னர் மூக்கு கண்ணாடி உள்ளிட்ட சான்று பொருட்களை மீட்க முயற்சித்த வேளை சந்தேக நபர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு அந்த பகுதிகளில் அசாதரண சூழ் நிலை காணப்பட்டமையால் , நாம் சந்தேக நபர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் முகமாக அந்த பகுதிக்கு செல்லவில்லை.
 
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , எதிரிகளை அடித்து துன்புறுத்தி சித்திரவதை புரிந்தே அவர்களின் வாக்கு மூலங்களை பெற்று உள்ளீர்கள் என நான் எதிரிகள் சார்பில் சொல்கிறேன் என தெரிவித்தார். அதனை தான் முற்றாக மறுப்பதாக சாட்சியமளித்தவர் தெரிவித்தார்.
 
எதிரிகளின் உடலில் காயங்கள் இல்லை. 
 
அதனை அடுத்து எதிரிகள் தரப்பு சாட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி குறுக்கு விசாரணை செய்யும் போது,
 
கேள்வி :- எதிரிகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திநீர்கள் தானே ?

பதில் :- ஆம்.

கேள்வி :- அதில் எதிரிகளின் உடலில் கீறல் காயங்களோ , வேறு காயங்களோ இருந்தாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததா ?

பதில் :- இல்லை. அவ்வாறு எந்த காயங்களும் சந்தேக நபர்களின் உடலில் இல்லை.
 
எதிரிகளை சித்திரவதை புரியவில்லை. 
 
அதனை அடுத்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி சின்னையா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணை செய்யும் போது ,
 
4 ஆம் மற்றும் 7ஆம் எதிரிகளை தலைகீழாக கட்டி தூக்கி பொல்லால் அடித்து துன்புறுத்தி வாக்கு மூலம் பெற்றீர் என கூறுகிறேன். என தெரிவித்தார், அதற்கு சாட்சியளிப்பவர்  இல்லை. அதனை நான் முற்றாக மறுக்கிறேன் என பதிலளித்தார். 9ஆவது சந்தேக நபர் தொடர்பில் உம்மிடம் எந்த சாட்சி ஆதாரமும் இல்லை என கூறுகிறேன். ஆம் என்னிடம் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என சாட்சியமளித்தார் பதிலளித்தார்.
 
09ஆவது சந்தேக நபர் தொடர்பில் எந்த சாட்சி ஆதாரமும் இல்லாதமையால் தான் அவர் யாழ்ப்பாண பொலிசாரால்  விடுவிக்கப்பட்டார் என கூறுகிறேன். அது தொடர்பில் எனக்கு தெரியாது என சாட்சியமளித்தவர் பதிலளித்தார்.
 
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.
 
ஆறு மணித்தியாலம் சாட்சியம். 
 
இதேவேளை குறித்த பொலிஸ் சாட்சியம் மன்றில் இன்றைய தினம் சுமார் 6 மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாட்சியம்.
 
ஓய்வு பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் வீரசேகர சாட்சியம் அளிக்கையில் ,
 
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி காலை 8.45 மணியளவில் என்னை யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு வருமாறும் அங்கு வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
 
அதன் பிரகாரம் நான் அங்கு சென்றேன். அங்கு பிரதி பொலிஸ் மா அதிபரும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனும் இன்னும் சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அங்கு இருந்தார்கள்.
 
காலை 9 மணியளவில் வடமாகாண சிரேஸ்ட பிரதி போலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க அங்கு வந்தார். அவர் வந்து சில நிமிடங்களில் தமிழ் மாறனும் அங்கு வந்தார்.
 
பின்னர் தமிழ்மாறன் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் சட்ட ஒழுங்குகள் குறித்து பேசினார். புங்குடுதீவு சம்பவம் தொடர்பிலும் பேசினார். அதன் போது இந்த சம்பவத்திற்கு சுவிஸ்குமார் என்பவர் பணம் வழங்கியதாகவும் அங்கு பேசப்பட்டது. அதனை அடுத்து சிரேஸ்ட பிரதி போலிஸ் மா அதிபர் , உப பொலிஸ் பரிசோதகர் இரானை அங்கு வருமாறு அழைத்தார்.
 
சுவிஸ் குமாரை பிடிக்க முடியும். 
 
அங்கு இரானிடம் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விபரங்களை கேட்டார். அதில் சுவிஸ்குமார் என்பவர் இல்லை. அந்த சந்தர்ப்பத்தில் தமிழ்மாறன் தன்னால் சுவிஸ் குமாரை பிடித்து தர முடியும் என கூறினார். அதற்கு இரு போலிஸ் அதிகாரிகளை தன்னுடன் அனுப்பி வைத்தால் அவரை பிடித்து வர முடியும் என கூறினார். அதனை அடுத்து தமிழ் மாறனின் வெள்ளை நிற கப் ரக வாகனத்தில் உப போலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனும் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தரும் சென்று இருந்தனர்.
 
சுவிஸ் குமார் கைது.
 
அவர்கள் சென்று இரு மணி நேரத்திற்கு பின்னர் என்னை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட ஸ்ரீகஜன் சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒருவரை கைது செய்து இருக்கின்றோம். அவரை கொண்டு வருவதற்கு வாகன ஒழுங்கினை செய்து தருமாறு கோரினார்.
 
அது தொடர்பில் நான் யாழ்ப்பாண பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தேன். என சாட்சியம் அளித்தார்.
 
அதன் போது மன்று ,
 
கேள்வி :- நீர் சிரேஸ்ட போலிஸ் அத்தியட்சகர் தானே ?
பதில் :- ஆம்.
 
கேள்வி :- சாதரனமானவர்களுக்கே தெரியும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தான் அறிவிக்க வேண்டும் என அவ்வாறு இருக்கையில் நீர் ஏன் ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்திற்கு அறிவிக்காமல் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தீர் ?
பதில் :- சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்துறை பொலிசாரினால் யாழ்ப்பாண போலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டமையால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தேன். என பதிலளித்தார்.
 
அதனை தொடர்ந்து சாட்சியமளிக்கையில் ,
 
சிறிது நேரத்தில் ஸ்ரீகஜன் என்னை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தமக்கு வாகனம் தேவையில்லை எனவும் தாம் வாகனத்தில் கைது செய்த நபருடன் வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் நான் சிறுது நேரத்தில் ஸ்ரீகஜனுடன் தொடர்பு கொண்டு வரும் வழியில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கின்றனவா ? என தொடர்பு கொண்டு கேட்டேன் இல்லை என கூறினார்.
 
பின்னர் பகல் 1 மணி அல்லது 2 மணி இருக்கும் சுவிஸ் குமார் என்பவரை ஸ்ரீகஜன் அழைத்து வந்து இருந்தார். நான் சுவிஸ்குமாரை யாழ்.போலிஸ் நிலையத்தில் முற்படுத்துமாறு கூறினேன்.
 
சுவிஸ் குமாருக்கு எதிராக சாட்சியம் இல்லை. 
 
அதற்கு ஸ்ரீகஜன் , சுவிஸ்குமார் என்பவருக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தனக்கு ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய உப போலிஸ் பரிசோதகர் இரான் கூறியதாகவும் , சுவிஸ் குமாருக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவரை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்த முடியாது. என என்னிடம் கூறினார்.
 
அதற்கு நான் அவரை சந்தேக நபராக ஆவது முற்படுத்துங்கள் என கூறினேன். அதற்கும் ஸ்ரீகஜன் அவ்வாறும் முற்படுத்த முடியாது என கூறினார்.
 
இது தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தேன். அவர் ஸ்ரீகஜனை தன்னுடைய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தார். அதனை அடுத்து அவரது அலுவலகத்திற்கு ஸ்ரீகஜன் சென்றார்.
 
சுவிஸ்குமாரை வைத்திய சாலையில் அனுமதிக்க உத்தரவு. 
 
சிறிது நேரத்தில் மீண்டும் என்னை சந்தித்த ஸ்ரீகஜன் , சாட்சியம் இல்லாத காரணத்தால் , சுவிஸ் குமாரை போலிஸ் நிலையத்தில் முற்படுத்த தேவையில்லை. எனவும் அவருக்கு ஜி.எஸ்.ரி. வழங்கி  , அவரை வைத்திய சாலையில் அனுமதிக்குமாறும் தனக்கு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததாக ஸ்ரீகஜன் என்னிடம் கூறினார்.
 
நான் உடனேயே பிரதி போலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு அது தொடர்பில் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததாக , அதாவது சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு காயங்கள் இருக்குமானால் விரிவான வாக்குமூலத்தை பெற்று ஜி.எஸ்.ரி.வழங்கி அனுப்புமாறு என்னிடம் பிரதி போலிஸ் ம அதிபர் ஜி.கே.பெரேரா தெரிவித்தார். அதனை தொடர்ந்து  நான் ஸ்ரீகஜனிடம் கூறினேன். பிரதி பொலிஸ் மா அதிபர் கூறியது போன்று செய்யுமாறு.
 
அதன் பின்னர் மறுநாள் 19ஆம் திகதி புங்குடுதீவு சர்வோதய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்று இருந்தேன் அங்கு  பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா வடமாகாண சிரேஸ்ட  பிரதிப்பொலிஸ்மா அதிபர் லலித்ஜயசிங்க மற்றும்  சட்டப்பீட பீடாதிபதி தமிழ்மாறன் ஆகியோர் வந்தார்கள்.
கூட்டத்தில் முதலில் ஆரம்ப உரையை தமிழ்மாறனும் அதன் பின்னர் சிரேஸ்ர பிரதிப்பொலிஸ்மா அதிபர் லலித்ஜயசிங்க சிங்களத்தில் உரையாற்றினார். அவரின் உரை .மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் வைத்தியர் ஒருவர் அதிபர் ஒருவர் பெண் ஒருவர் பின்னர் மீண்டும் தமிழ்மாறன் ஆகியோர் உரையாற்றினார்கள். தமிழ்மாறன் இறுதியாக உரையாற்றும்போது மக்கள் சத்தமிட்டார்கள்.

நாங்கள் பிடித்துக்கொடுத்த சுவிஸ்குமாரை விடுவித்துவிட்டீர்கள். பணம் வாங்கிக்கொண்டுதான் அவரை விடுவித்துவிட்டீர்கள் என

அப்போது , சந்தேக நபருக்கு எதிராக சாட்சியங்கள் எவையும் இல்லை. நீங்கள் அச் சாட்சியத்தை வழங்கினால் அவரை மீண்டும் கைது செய்வதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் லலித்ஜயசிங்க கூறினார்.

அரசியல்வாதியின் தம்பி சுவிஸ் குமாருக்கு எதிராக முறைப்பாடு. 

அதன் போது  அங்கிருந்த அரசியல்வாதியின் சகோதரர் ஒருவர் தான் சாட்சியம் வழங்குவதாக கூறினார். அவரது சாட்சியம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் பதிவு செய்ய கட்டளையிடப்பட்டது.அதன் பின்னர்   நானும் பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேராவும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் வெளியே வந்து வெள்ளவத்தைப் பொலிஸ்நிலையத்திற்கு தொடர்பு கொண்டோம்.

 

ஏனெனில் வெள்ளவத்தை பகுதியில் தான் சுவிஸ் குமார் நிற்பதாக கூட்டத்தில் இருந்தவர்கள் கத்தினார்கள். அதன் காரணமாக வெள்ளவத்தைப் பொலிஸாருக்கு தொடர்பு சுவிஸ் குமாரை கைது செய்ய உத்தரவு இட்டோம்.
 
அதன் பின்னர்  பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா என்னிடம்  கூறினார் ,  வெள்ளவத்தையில் இருந்து குறித்த நபரை இங்கே கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
 

நான் எனது பிரத்தியேக உதவியாளர் பிரதான பொலிஸ் பரிசோதகருடன் தொடர்பு கொண்டு மானிப்பாய் பொலிஸ்நிலையத்தின் வாகனத்தைக்கொண்டு யாழ்.பொலிஸ்நிலைய உப பொலிஸ் பரிசோதகருடன் ஆயுதங்களையும் கொண்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று விடயத்தைக்கூறி கைது செய்யப்பட்ட நபரை இங்கே கொண்டு வருமாறு கூறினேன்.

சிறிது நேரத்தில் எனக்கு என்னுடைய பிரத்தியேக உதவியாளாரான பிரதான பொலிஸ் பரிசோதகர் கூறினார் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தைச் சுற்றி பொது மக்கள் இருப்பதாக,  இதனை நான் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் லலித்ஜயசிங்கவிற்கு கூறினேன். அவர் உடனடியாக என்னை யாழ்.பொலிஸ் நிலையத்திற்குச் சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினார். நான் போகும்போது அப்பிரதேசத்தில் வீதிகள் மறிக்கப்பட்ட நிலையில் தடைகள் போடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நான் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்திருந்தேன்.

பொலிஸ் பரிசோதகருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை. 
 
சுவிஸ் குமாரை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு   பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு கூறினேன்.
 
ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. அதன் பின்னர் இது தொடர்பாக எழுத்து மூலமாக  பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு தெரியப்படுத்தினேன்.
 
அப்போதும் அவர் அதனை செய்யவில்லை. இதன்பின்னர் ஒழுக்க விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலமாக தெரிவித்தேன்.
 
21ஆம் திகதி சுவிஸ் குமார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
 
பின்னர் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 125 பிரிவின் கீழ் எனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் சிந்தக்க பண்டார உட்பட ஆறு உத்தியோகத்தர்களும் இதனை பொறுப்பெடுத்து மேற்கொள்ளுமாறு கட்டளை வழங்கினேன். அவர்களால் சுவிஸ்குமார் நீதிவான் முன்னிலையில் 21ஆம் முற்படுத்தப்பட்டார். என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
 
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் குறுக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.

https://globaltamilnews.net/archives/33323

Link to comment
Share on other sites

புங்குதீவு மாணவி கொலை – சிந்தக பண்டாரவும் சாட்சியம்!

புங்குதீவு மாணவி கொலை – சிந்தக பண்டாரவும் சாட்சியம்!
 

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சம்பவம் நடைபெற்றபோது பதவியில் இருந்த யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் மூத்த பொலிஸ் பரிசோதகர் சித்தக பண்டார சாட்சியாக இணைக்கப்பட்டார். அவர் இன்று தீர்ப்பாயத்தில் சாட்சியம் வழங்கினார்.

அதேவேளை நீதிபதி ஒருவரால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை அதே நீதிபதிக்கு முன்பாகச் சாட்சியாக நிறுத்தியமைக்கு தீர்ப்பாயம் பிரதி மன்றாடியார் அதிபதியிடம் கடுமையாக ஆட்சேபித்தது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சிந்தக பண்டார கடமையாற்றியபோது சந்தேகநபர்களைச் சித்திரவதைக்கு உட்படுத்தினார் என்ற குற்றத்துக்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

http://uthayandaily.com/story/12293.html

Link to comment
Share on other sites

வித்தியா கொலை வழக்கு: சுவிஸ் குமார் சம்பவ தினத்தில் கொழும்பில் தங்கவில்லையென விடுதி உரிமையாளர் சாட்சியம்

 


 
 

மாணவி வித்தியா படுகொலை வழக்கின் Trial at Bar தொடர் விசாரணையின் இரண்டாம் சுற்றின் இரண்டாவது நாளுக்கான விசாரணைகள யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது

இன்று பகல் 12.45 வரை நடைபெற்ற விசாரணைகளின்போது ஐந்து சாட்சியாளர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளனர்.

இந்த வழக்கின் 41 ஆவது சாட்சியாளரான, ஏற்கனவே பிரிதொரு வழக்கில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கொடிகாமம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சிந்தக்க என். பண்டார இன்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

சுவிஸ் குமார் மீள கைது செய்யப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அப்போதைய யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கு அமைய அவரை 2015 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் தான் ஆஜர்படுத்தியதாக சாட்சியாளர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சாட்சியாளர் நீமன்றத்திற்கு அணிந்து வந்திருந்த உடை தொடர்பில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிருப்தி தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சாட்சியாளரின் ஆடைகளைப் பார்க்கும்போது, அவர் சிறைச்சாலைக்குள் இருக்கின்றாரா அல்லது வௌியில் இருக்கின்றாரா என்ற சந்தேகம் எழுவதாக நீதிபதி கூறினார்.

நீதியின் முன் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தினார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள கெசினோ சூதாட்ட நிலையத்திற்கு கொலை சம்பவம் இடம்பெற்ற தினத்தில் நான்காம் இலக்க சந்தேகநபரான மகாலிங்கம் சசிதரன் வந்திருந்தமை சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக இன்று நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டது.

வழக்கின் 44 ஆம் இலக்க சாட்சியாளரான குறித்த கெசினோ சூதாட்ட நிலையத்தின் முகாமையாளர் அனுர பிரியந்த பஸ்நாயக்க இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய, நான்காம் இலக்க சந்தேகநபரையும் சாட்சியாளர் மன்றில் அடையாளம் காண்பித்தார்.

இதேவேளை, 45 ஆம் இலக்க சாட்சியாளரான, கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள உணவு விடுதியொன்றின் ஊழியரும் இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

சம்பவ தினத்தன்று மாலை 5 மணியளவில் நான்காம், ஏழாம் மற்றும் ஒன்பதாம் இலக்க சந்தேகநபர்கள் தமது உணவு விடுதிக்கு வந்திருந்ததாகவும் சாராயம் மென்பானம் மற்றும் உணவு வகைகளை அவர்கள் வாங்கியிருந்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

உணவு விடுதியிலுள்ள சிசிடிவியில் அவர்களின் காட்சிகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த சாட்சியாளர் அவர்களுக்கு தாமே உணவு மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றைப் பரிமாறியதாகவும் கூறினார்.

இதேவேளை, வழக்கின் 46 ஆம் இலக்க சாட்சியாளரான கொழும்பு வௌ்ளவத்தை பகுதியிலுள்ள விடுதியொன்றின் பொறுப்பாளர் சாட்சியமளிக்கையில், 2015 ஆம் ஆண்டு மே மாதம் 08 ஆம் திகதி முதல் சுவிஸ் குமார் தனது விடுதியில் முற்பதிவு செய்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தில் சந்தேகநபர் விடுதியில் இருந்தமைக்கான பதிவுகள் இல்லை எனவும், 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் அவர் எங்கிருந்தார் என்பது தெரியாது எனவும் சாட்சியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி புங்குடுதீவிற்கு சென்ற பிரதிவாதிகள், இந்த கூட்டு வன்புணர்வைத் திட்டமிட்டிருந்ததாக அரச தரப்பு சட்டத்தரணிகளால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

நான்காம், ஏழாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் இலக்க பிரதிவாதிகள் மே மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தாங்கள் கொழும்பில் இருந்ததாக ஏற்கனவே விசாரணைகளின் போது குறிப்பிட்டிருந்தனர்.

இதேவேளை, வழக்கின் 51ஆம் இலக்க சாட்சியாளரான யாழ். தலைமையக பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி மஹிந்த பாலசூரிய இன்று சாட்சியமளித்தார்.

ஒன்பதாம் இலக்க பிரதிவாதியான சுவிஸ் குமார் கைது செய்யப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டமையாலேயே , யாழ். குடாநாட்டில் ஹர்த்தால், நீதிமன்றத்தின் மீதான தாக்குதல், ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபட்டதாக அவர் சாட்சியமளித்தார்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் கட்டுப்பாட்டில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீகஜன், சுவிஸ் குமாரை விசாரணைக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்த சாட்சியாளர், அவர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

மே மாதம் 20 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் 21 ஆம் திகதி அதிகாலை யாழ். பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டதாகவும் அவர் மகாலிங்கம் சசிகுமார் என்பதை அறிந்து கொண்டதாகவும் சாட்சியாளர் தெரிவித்தார்.

சுவிஸ் குமார் நாட்டில் இருந்து வௌியேறுவதைத் தடுக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் தன்னிடம் அறிவிக்குமாறு கூறியதாக
உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீகஜன் தொலைபேசியில் அறிவித்ததாகவும் சாட்சியாளர் கூறினார்.

நீதிமன்ற கட்டளையைப்பெற்று அந்த தகவலை வழங்குமாறு தாம் ஶ்ரீகஜனை பணித்த போதிலும், அது நடக்கவில்லை என சாட்சியாளர் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் யாழ். மேல் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என எண்ணி மக்கள் தாக்குதல் நடத்தியிருந்ததாகவும் இந்த சம்பவம் தொடர்பில் 131 பேரை கைது செய்ததாகவும் சாட்சியாளர் தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் சுவிஸ் குமாரை கண்டதாகத் தெரிவித்த சாட்சியாளர் இன்று அவரை நீதிமன்றத்தில் அடையாளம் காண்பித்தார்.

நீதிமன்றத்தில் இன்று 8 சாட்சியாளர்கள் முற்படுத்தப்பட்டதுடன், அவர்களில் ஐவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இவர்களில் 2 சாட்சியாளர்களை நெறிப்படுத்த வேண்டிய தேவையில்லை என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் ரட்ணம் மன்றுக்கு அறிவித்ததை அடுத்து, அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். ரியாலை எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்திற்கு சமூகமளித்து சாட்சியமளிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/07/வித்தியா-படுகொலை-வழக்கு-4/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/07/2017 at 8:50 PM, நிழலி said:

உள்ளூர் பொலிஸில் இருந்த செல்வாக்காலும் பணத்தாலும் தான் ஆள் கொழும்புக்கு தப்பி செல்ல முடிந்து இருக்கு. சுவிஸ் குமாரை தப்ப வைக்க மேல் மட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அப்படி மேல் மட்டத்தில் எடுக்கப்பட்டு இருந்தால் கொழும்பில் அடுத்த நாளே கைது செய்யப்பட்டு இருக்க மாட்டார். பிரதான சூத்திரதாரியாக வழக்கில் சேர்க்கப்பட்டும் இருக்க மாட்டார்.

இதற்கு  ஒரு  விளக்கம்  நிழலி

புங்குடுதீவு சர்வோதயத்தில் வைத்து விரி  தமிழ் மாறனும்அவரது குடும்பமும்  மக்களால்  சுற்றி  வளைக்கப்பட்டு

சுவிஸ் குமார்  கைது செய்யப்பட்டால்  மட்டுமே 

இவர்களை  விடுவிப்போம் என்று மிக  கடுமையாக போராடியதால் தான் 

அவர்    கொழும்பில்  கைது செய்யப்பட்டார்

எவ்வளவோ  அழுத்தங்களும்  பயப்படுத்தல்களும்  மிரட்டுதல்களும் விடுக்கப்பட்ட போதும்

மக்கள் தம்மால்  விரி  தமிழ் மாறனிடம்  ஒப்படைக்கப்பட்டவரை

கைது செய்யும்வரை அந்த இடத்தைவிட்டு அசையவே இல்லை

கடற்படையினர்  தமது வாகனங்களில் விரி  தமிழ்மாறன் குடும்பத்தினரை ஏற்றி  செல்லமுற்பட்டபோது

மக்கள் வாகனங்களின் சில்லுகளை  கட்டிப்பிடித்தபடி படுத்திருந்தனர்

எல்லாமுயற்சிகளும்  தோல்வியடைந்த நிலையிலேயே  சுவிஸ் குமார் கைது  செய்யப்பட்டார்

இல்லாது விட்டால்.......???

Link to comment
Share on other sites

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணையின் போது தண்டனை கைதி சிவில் உடையில் சாட்சியம் – சிறைச்சாலை அத்தியட்சகரை முன்னிலையாக உத்தரவு

 

elan.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தண்டனை கைதி ஒருவர் சிவில் உடையில் வழக்கில் சாட்சியம் அளித்தமை தொடர்பில் விளக்கம் கோருவதற்காக அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) அழைப்பாணை விடுத்துள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணையின் இரண்டாம் கட்ட சாட்சி பதிவுகள் நேற்றைய தினம் புதன்கிழமை  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.

அதன் போது குறித்த வழக்கில் சாட்சியம் அளிக்க மன்றுக்கு வந்திருந்த முன்னாள் கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி , சிந்தக்க நிஷாந்த பிரிய பண்டார ,  சிவில் உடையில் கழுத்துப்பட்டி அணிந்த நிலையில் வந்திருந்தார்.

குறித்த காவல் நிலைய சுன்னாகம் காவல் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய வேளை சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞனை 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி கைது செய்து காவல்துறை காவலில் வைத்து சித்திரவதை புரிந்து படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அதில் சித்திரவதை குற்ற சாட்டு தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

குறித்த வழக்கு விசாரணையில் சிந்தக்க நிஷாந்த பிரிய பண்டார குற்றவாளியாக கண்டு , பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனையும்,  25ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறின் 1ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், சுமணணது இரத்த உறவினருக்கு 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 1ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

அதேவேளை கிளிநொச்சி நீதிமன்றில்  சிந்தக்க நிஷாந்த பிரிய பண்டாரவுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. அந்த வழக்கில் அவர் விளக்கமறியல் கைதியாக தடுத்து வைக்கபப்ட்டு உள்ளார். குறித்த வழக்கில் பிணை கோரி யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு உள்ளது.

இந்நிலையில் குறித்த சிந்தக்க நிஷாந்த பிரிய பண்டார கைதிகளுக்கு வழங்கப்படும் உடை அணியாது , சாதாரண உடையணிந்து கழுத்துப்பட்டி அணிந்த நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து மன்றுக்கு சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் அழைத்து வரப்பட்டார்.

அது தொடர்பில் மூன்று மேல் நீதிபதிகளும் கடும் விசனம் அடைந்திருந்தனர். அது தொடர்பில் , மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவிக்கையில் , எமது நீதிமன்றினால் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒருவருக்கே , சிறைக் கைதிகளின் உடை அணியாது, சாதாரண உடையுடன் சாட்சி அளிக்க அழைத்து வருகின்றீர்கள் என்றால் , சில வேளைகளில் இவர் சிறையில் தான் தடுத்து வைத்து இருக்கின்றீர்களா ? எனும் சந்தேகம் கூட தோன்றுகின்றது. என தெரிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து மூன்று நீதிபதிகளும் ஏக மனதாக முடிவெடுத்து அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் யு.மு. பண்டார வை எதிர்வரும் 24ஆம் திகதி காலை 8.30 மணிக்கு மன்றில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவு இட்டு உள்ளனர்

http://globaltamilnews.net/archives/33477

Link to comment
Share on other sites

வித்தியா படுகொலை வழக்கில் முக்கிய சாட்சியப் பதிவு தற்போது தீர்ப்பாயம் முன்னிலையில்

 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சாட்சியம் தற்போது தீர்ப்பாயம் முன்னிலையில் வழங்கப்படுகின்றது.

இந்த வழக்கை விசாரணை செய்த குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தற்போது தீர்ப்பாயம் முன்னிலையில் சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கின்றார். இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக அவர் செயற்பட்டார்.

இந்த வழக்கில் 9 எதிரிகளுக்கும் எதிரான சாட்சியங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் எதிரிகளை வழமையாக முற்படுத்தும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக இன்றைய தினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டு முதன்முறையாக சிறப்பு அதிரடிப் படையினரும் நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

http://newuthayan.com/story/12494.html

Link to comment
Share on other sites

எனது லொட்ஜில் உள்ள அறையிலிருந்து சுவிஸ்குமாரை பொலிஸ் பொறுப்பதிகாரி வெளியே கொண்டு வந்தார்

 

 

(ரி.விரூஷன்) 

அவரது உடலிலும் தலையிலும் காயங்கள் இருந்தன; வித்தியா பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கில் லொட்ஜ் உரிமையாளர் சாட்சியம்
எனது லொட்­ஜுக்கு முன்னால் புங்­கு­டு­தீவு  ஆட்கள் சாப்­பாட்டு கடை நடத்­து­கி­றார் கள். இதன்­படி உங்­க­ளு­டைய லொட்ஜில் இருக்­கின்­ற­வர்­கள்தான் வித்­தி­யாவைக் கொலை செய்த சம்­ப­வத்தில் தொடர்­பு­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளு­டைய படம்  

இணை­யத்தில் போட்­டி­ருப்­ப­தாக 2015.05.18 திக­தி­யன்று யாழ்.மஹால் உரி­மை­யாளர் எனக்குக் கூறினார். இதனைத் தொடர்ந்து நான் எனது அக்­காவின் மக­னிடம் கூறி லப்­டொப்பில் அந்த இணையத் தளத்­திற்குச் சென்று பார்த்தேன். அதில் சுவிஸ்­கு­மாரைக் கட்­டிப்­போட்­டி­ருந்­தார்கள். அவர் பின்னால் ஆட்கள் நின்­றி­ருந்­தார்கள். இதன்­பின்னர் 19ஆம் திகதி காலையில் எனது லொட்­ஜுக்கு வந்த வெள்­ள­வத்தைப் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி

எனது விடு­தியில் அறை­யொன்றில் தங்­கி­யி­ருந்த சுவிஸ்­கு­மாரை வெளியே கொண்டு வந்தார். அப்­போது சுவிஸ்­கு­மா­ருக்கு உடல் எல்லாம் காய­மா­கவும் தலை­யிலும் காய­மொன்று இருந்­தது

என்று புங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தி­யாவின் கூட்­டுப்­பா­லியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கின் 46 ஆவது சாட்­சி­யான வெள்­ள­வத்தை ஏஞ்சல் லொட்ஜ் விடு­தியின் உரி­மை­யாளர் இரா­மையா கன­கேஸ்­வரன் ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் சாட்­சி­ம­ளித்­துள்ளார்.

 குறித்த மாண­வியின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மை­யி­லான அன்­ன­லிங்கம் பிரே­ம­சங்கர், மாணிக்­க­வா­சவர் இளஞ்­செ­ழியன் ஆகியோர் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் தொடர் விசா­ர­ணை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது.

 நேற்­றைய தினம் தொடர் வழக்கு விசா­ர­ணையின் எட்­டா­வது நாளாக சாட்சிப் பதி­விற்­காக மன்று கூடி­யி­ருந்­த­போது இவ் வழக்கில் 46 ஆவது சாட்­சியின் சாட்சிப் பதி­வுகள் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. இந்த சாட்­சி­யத்தை அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந்­து­டனும் ஏனைய அரச சட்­ட­வா­திகள் குழு­வி­ன­ரு­டனும் சட்­டமா அதிபர் திணைக்­கள பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் குமார்­ரட்ணம் நெறிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

 இதன்­படி பிரதி சொலி­சிட்டர் ஜென­ர­லு­டைய வினாக்­க­ளுக்கு சாட்சி அளித்த சாட்சிப் பதி­வுகள் பின்­வ­ரு­மாறு,

கேள்வி: - உங்­க­ளு­டைய பெயர் என்ன?

பதில்:- இரா­மையா கன­கேஸ்­வரன்.

கேள்வி: - எங்கே குடி­யி­ருக்­கிறீர்?

பதில்:- வெ ள்ளவத்தை

கேள்வி: - நீங்கள் என்ன தொழில் செய்­கி­றீர்கள்?

பதில்:- லொட்ஜ். அதன் பெயர் ஏஞ்சல்.

கேள்வி: - எங்கே உள்­ளது?

பதில்:- வெள்­ள­வத்தை புகை­யி­ரத வீதி.

கேள்வி: - அங்கே எத்­தனை அறைகள் உண்டு?

பதில்:- 14 அறைகள். இரண்டு கட்­டில்­க­ளுடன் கூடிய அறையும் ஒரு கட்டில் உடைய அறை­களும் உண்டு.

கேள்வி: - அங்கு வரு­ப­வர்கள் தொடர்பில் பதி­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுமா?

பதில்:- ஆம். ஒரு­வ­ரானால் அவ­ரது பெயரும் ஒரு­வ­ருக்கு மேற்­பட்­ட­வர்கள் என்றால் அவர்­களின் பிர­தான நபரின் பெயரும் பதி­யப்­படும். தினமும் அங்கே இருப்­ப­வர்கள் தொடர்­பாக பொலிஸ் நிலை­யத்­திற்கு அறிக்கை அனுப்­புவோம்.

கேள்வி: - இந்த வழக்குத் தொடர்­பாக சி.ஐ.டியி­ன­ருக்கு வாக்­கு­மூலம் கொடுத்­தீரா?

பதில்:- ஆம்.

கேள்வி: - என்ன சம்­பந்­த­மாக?

பதில்:- வெள்­ள­வத்தைப் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி லொட்ஜை செக் பண்ணிக் கொண்­டி­ருக்­கிறார் என அங்கு வேலை செய்யும் பையன் எனக்குக் கோல் பண்ணி கூறினார். நான் மகனை பாட­சா­லையில் விட்டு விட்டு வந்தேன். அப்­போது கத­வுகள் பூட்­டப்­பட்­டி­ருந்­தன. பொலிஸார் உள்ளே இருந்­தார்கள்.

கேள்வி: - எப்­போது இது நடந்­தது?

பதில்:- 2015.05.19 காலை 7.30 மணிக்கு.

கேள்வி: - அதன் பின்னர் என்ன நடந்­தது?

பதில்:- பொறுப்­ப­தி­காரி யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து யாரா­வது வந்­தி­ருக்­கி­றார்­களா? எனக் கேட்டார். நான் புத்­த­கத்தைப் பார்த்தேன். அங்கு பாஸ்போட் இருந்­தது. அதனை எடுத்துக் கேட்டார். இது யாரு­டை­யது என்று . நான் வேலை­செய்யும் பைய­னிடம் கேட்டேன். இதற்­கு­ரி­ய­வர்கள் எந்த அறையில் இருக்­கி­றார்கள் என்று. அவன் ஐந்தாம் இலக்க அறையில் இருப்­ப­வர்கள் என கூறினான். அப்­போது சசி­கு­மாரை அறை­யி­லி­ருந்து பொலிஸார் வெளி­யிலே கொண்டு வந்­தார்கள். அவ­ருடன் மனை­வியும் குழந்­தையும் வந்­தார்கள். சசி­கு­மா­ருக்கு உடம்­பெல்லாம் காய­மாக இருந்­தது. தலை­யிலும் காய­மி­ருந்­தது. ஒரு வானில் வந்­த­தாக வேலை செய்யும் பையன் சொன்னான். அதற்­குப்­பின்னர் அவரை பொலிஸார் பொலிஸ் நிலை­யத்­திற்கு பொலிஸ் ஜிப்பில் கூட்டிக் கொண்டு போனார்கள். மனை­வியும் பிள்­ளையும் அங்­கேயே இருந்­தார்கள்.

நான் மதியம் அவர்­களைக் கூட்டிக் கொண்டு பொலிஸ் நிலை­யத்­திற்குப் போனேன். அவர்­க­ளுக்கு சிங்­களம் தெரி­யாது என்­பதால் நான் சென்றேன். அங்கு பொறுப்­ப­தி­காரி கூறினார். இவர்­களை அனுப்ப வேண்டாம். அறையில் வைத்­தி­ருங்கள் என்று. இதற்கு சசி­கு­மாரின் மனைவி கூறினார் கைக் குழந்­தை­யோடு இருக்­க­மு­டி­யாது. அம்மா வரு­கிறார் நான் போக­லாமா எனக் கேட்டார். பின்னர் ஐந்து மணி போல் சசி­கு­மாரின் அம்மா வந்தார். நான் பொறுப்­ப­தி­கா­ரிக்கு தொலை­பேசி மூலம் கூறினேன். அவர் இவர்­களை அழைத்து வரச் சொன்னார். அங்கு சசி­கு­மாரின் தாயா­ரிடம் வாக்­கு­மூலம் எடுத்­தார்கள். நான் அதனை மொழி பெயர்ப்புச் செய்தேன்.

கேள்வி: - இதற்கு முதல் எப்­போ­தா­வது சசி­குமார் அங்கு வந்­தாரா?

பதில்:- 2015.05.08 ஆம் திக­திக்கு முதல் வந்­தாரா தெரி­ய­வில்லை. ஏனெனில் நானும் எனது மச்­சானும் அங்கு மாறி மாறி இருப்போம்.

கேள்வி: - எத்­தனை நாட்கள் இருந்தார்.

பதில்:- நான்கு தொடக்கம் ஐந்து நாட்கள்.

கேள்வி: - அதற்குப் பின்னர் எப்­போது கண்டீர்?

பதில்:- 14 ஆம் திகதி ஊரில் செத்த வீடு ஒன்­றிற்கு போக வேண்டும் எனக் கூறினார்.

கேள்வி: - 8 ஆம் திகதி அவ­ருடன் எத்­தனை பேர் வந்­தார்கள்.

பதில்:- நான்கு ஐந்து பேர் வந்­தார்கள். அவர்கள் ஒன்­றா­கத்தான் இருந்­தார்கள்.

கேள்வி: - 14 ஆம் திகதி சசி­கு­மா­ருடன் யார் யாரைக் கண்டீர்?

பதில்:- எல்­லோ­ரையும் கண்டேன்.

கேள்வி: - அவர்கள் எதில் போய் வரு­வார்கள்?

பதில்:- கூடு­த­லாக ஆட்டோ. எனது லொட்ஜின் கேட்­ட­டியில் ஆட்டோ ஸ்டான்ட் இருக்கு.

கேள்வி: - 14 ஆம் திக­திக்கும் 19 ஆம் திக­திக்கும் இடையில் ஏதா­வது சம்­பவம் தொடர்பில் அறிந்­தீரா?

பதில்:- 18 ஆம் திகதி எனது லொட்­ஜிற்கு முன்னால் புங்­கு­டு­தீவு ஆட்கள் சாப்­பாட்டுக் கடை நடத்­து­கி­றார்கள். யாழ். மஹால் உரி­மை­யாளர் சொன்னார் உங்­க­ளு­டைய லொட்ஜில் இருக்கும் ஆட்கள் தான் பிள்­ளையைக் கொலை செய்த கேஸில் இருக்­கி­றார்கள். இணை­யத்­த­ளத்தில் இது தொடர்­பாக போட்­டி­ருக்­கி­றார்கள். அதனைப் பார்க்­கு­மாறு சொன்னார். நான் அக்­காவின் மக­னுக்குக் கூறி லப்டொப் எடுத்துப் பார்த்தேன். அதில் சுவிஸ்­கு­மாரை கட்­டிப்­போட்டு அவரைச் சுற்றி ஆட்கள் இருந்­தார்கள்.

கேள்வி: - அவர்­களை அடை­யாளம் காட்ட முடி­யுமா?

பதில்:- ஆம். எதிரிக் கூண்டில் 9 ஆம் 7 ஆம் 4 ஆம் 8 ஆம் ஆகியோரை சாட்சி அடையாளம் காட்டியதுடன் 5 ஆவது இலக்கத்திலிருக்கும் நபரை தனக்கு சற்றுத் தெ ளிவற்றதாக உள்ளதாகக் கூறினார்.

மன்றின் கேள்வி: - சசிகுமாரை 2015.05.08 திகதிக்கு முன்னர் உங்களுக்குத் தெரியுமா?

பதில்:- இல்லை.

மன்றின் கேள்வி: - அவர் உங்களது உறவுக்காரரா?

பதில்:- இல்லை.

இதனைத் தொடர்ந்து குறித்த சாட்சியை எதிரி தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து சாட்சி வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக மன்று அறிவித்தது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-20#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.