Jump to content

சர்வதேசத்திற்கு காணொளி விற்பனை செய்யும் நோக்கில் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை// வித்தியா படுகொலை வழக்கின் செய்திகள்


Recommended Posts

1 hour ago, நவீனன் said:

சட்டத்தரணியும் கொழும்பு பல்கலைகழகத்தின் சட்ட பீடாதிபதியுமான வீ.ரி.தமிழ்மாறன் 25 ஆவது சாட்சியாக அரச தரப்பால் அழைக்கப்பட்டுள்ளார். அவரின் சாட்சியம் வழங்கல் தற்போது தீர்ப்பாயத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சட்டமேதையாக வலம் வரும் இவரும் ஒரு குற்றவாளியே!

இவரை அரச சாட்சியாளராக மாற்றி அவரை காப்பாற்றும் முயற்சி கடும் கண்டனத்துக்குரியது! 

அவர் செய்த தவறுக்காக தண்டனையை அனுபவிக்க வேண்டியவராவார்.

2 hours ago, நவீனன் said:

புங்குடுதீவில் வீதித் தடை ஏற்படுத்தி காரைநகர் கடற்படை முகாமில் வைத்து சந்தேகநபர்கள் பாதுகாக்கப்பட்டனர். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு சந்தேகபர்களைக் கொண்டு செல்ல முயன்றபோது புங்குடுதீவில் இருந்து பல பஸ்களில் மக்கள் வர முற்பட்டதால் அங்கும் சந்தேகநபர்களுக்கு பாதுகாப்பிருக்கவில்லை. அதனால் சந்தேகநபர்களை காரைநகர் கடற்படை முகாமில் வைத்து பாதுகாத்தோம் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

குற்றவாளிகளின் நெருங்கிய நண்பர்களான ----- ------  போலீஸ் -------  குற்றவாளிகளை காப்பாற்ற எடுத்த அதீத முயற்சி மக்களின் எழுச்சியால் முறியடிக்கப்பட்டது என்பதே உண்மையாகும்!

குற்றவாளியை கொழும்புக்கு அழைத்து செல்ல உதவிய அனைவரையும் தண்டிக்காதவரை இந்த வழக்கிற்கு முழுமையான நீதி கிடைக்காது.

Link to comment
Share on other sites

  • Replies 184
  • Created
  • Last Reply

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் தொடர்பில் மழுப்பலான பதில் வழங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவருக்கு தீர்ப்பாயம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தப் படுகொலை சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரியாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் குயின்ரஸ் ரோனால் பெரேராவிற்கு தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய "ட்ரயல் அட்பார்" தீர்ப்பாயம் முன்னிலையில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற விசாரணைகளின் போது சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவர் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

இதன் போது, முதல் எட்டு சந்தேகநபர்கள் குறித்தும் திருப்திகரமான சாட்சியங்கள் வழங்கிய அவர், 9வது சந்தேகநபரான சுவிஸ் குமார் தொடர்பில் மழுப்பலான முறையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

"9வது சந்தேகநபரைத் தான் கைது செய்யவில்லை எனவும், அவர் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும், அவரை மன்றில் முன்னிலைப்படுத்தவில்லை" எனவும் அவர் தீர்ப்பாயம் முன்னிலையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

எனினும், இதனை அவதானித்த தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் கடும் தொனியில் அவரை எச்சரித்தனர்.

"உமது பகுதியில் நடைபெற்ற இந்தப் பாரதூரமான சம்பவம் நடைபெற்றபோது நீரே பொறுப்பதிகாரி. 9வது சந்தேகநபரைக் கைது செய்யுமாறு கோரப்பட்ட போது நீர் கைது செய்யவில்லை.

வெள்ளவத்தைப் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது குற்றச் செயல் தொடர்பான பொலிஸ் அறிக்கை அவர்களால் கோரப்பட்டது. நீர் அது தொடர்பான விவரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளீர்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சந்தேகநபரை முற்படுத்த தவறியதாலேயே மக்கள் கொதிப்படைந்து யாழ்ப்பாண நீதிமன்றைத் தாக்கினர். நீதிமன்றைத் தாக்கியமைக்கும் உமது செயற்பாடே காரணம்.

9வது சந்தேகநபர் தொடர்பான விவரங்களை நீர் நீதிமன்ற விசாரணைகளில் மறைத்துள்ளீர்.

8 சந்தேக நபர்களைக் கைது செய்த நீர் மிகப் பாரதூரமான ஒரு கொலைக்குற்றம் நடந்த வேளையில் 5.19.2015 அன்று பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுமுறை பெற்று மகரகம நீதிமன்றத்துக்கு சென்றது பாரதூரமான பொறுப்பற்ற செயல்.

மகரகம நீதிமன்றத்துக்கு சென்ற வழக்கு இலக்கத்தை ஒப்படைக்க வேண்டும் என கடும் தொனியில் நீதிபதிகள் எச்சரித்தனர்.

http://www.tamilwin.com/community/01/150965?ref=home-feed

Link to comment
Share on other sites

தமிழ்மாறனின் சாட்சியத்தை ஏற்க மறுத்தது தீர்ப்பாயம்!

 
தமிழ்மாறனின் சாட்சியத்தை ஏற்க மறுத்தது தீர்ப்பாயம்!
 

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்குத் தொடர்பான சாட்சியப் பதிவுகள் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றன.

சட்டத்தரணியும் கொழும்பு பல்கலைகழகத்தின் சட்ட பீடாதிபதியுமான வீ.ரி.தமிழ்மாறன் சாட்சியம் வழங்கிவருகின்றார்.

உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் என்பவரும் மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தரும் எனது காரில் புங்குடுதீவு வந்தனர். அங்கு அவர்கள் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். சந்தேகநபர் ஒருவர் சரணயடையவுள்ளார் என்று அவர்கள் எனக்குத் தெரிவித்தனர். அதன்பின்னர் சுவிஸ்குமார் குடும்பத்துடன் (மனைவி, கைக்குழந்தை, தாய்) சரணடைந்தார். பொலிஸாரின் வாகனம் வரத் தாமதமடையும் என்பதால் எனது வாகனத்தில் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றோம். அங்கு ஒரு வாங்கில் அவர்களை உட்கார வைத்தனர். நான் வீடு சென்றுவிட்டேன்.

மறுநாளே சந்தேகநபரான சுவிஸ்குமார் விடுவிக்கப்பட்டது என்பது தெரிந்தது. சரணடைந்தவர் மீது குற்றச்சாட்டோ, முறைப்பாடோ இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார் என்று சீனியர் டி,ஐ.ஜி. அப்போது நடைபெற்ற மக்களுடனான கூட்டத்தில் தெரிவித்தார். கூட்டத்தில் மக்கள் சுற்றிவளைத்தால் சீனியர் டிஐஜி புங்குடுதீவு கடற்படையிடம் என்னை ஒப்படைத்தது. அங்கிருந்து காங்கேசன்துறை சென்று பின்னர கொழும்பு சென்றேன்- என்று அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஏனைய சந்தேகநபர்கள் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், இந்தச் சாட்சியத்தை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

எனினும் பின்னர் அரச தரப்பு சட்டத்தரணிகளின் வேண்டுகையின் அடிப்படையில் சாட்சியத்தைத் தொடர அனுமதித்தனர்.

http://uthayandaily.com/story/9421.html

Link to comment
Share on other sites

வித்தியா கொலை வழக்கு: ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியிடம் நீதிபதிகள் குழாம் கேள்வி

 

 

 
 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ் குமார் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவதில் தயக்கம் காண்பிக்கக் காரணம் என்னவென ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியிடம் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் கேள்வி எழுப்பியுள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கின் தொடர் விசாரணை மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று ஐந்தாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

Trial at Bar விசாரணை மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளனர்.

இன்றைய வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் ஆஜரான 14 ஆம் இலக்க சாட்சியாளர் மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை அடையாளம் காண்பித்தார்.

அதனைத் தொடர்ந்து வழக்கின் 19 ஆம் இலக்க சாட்சியாளரான ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் குயீன்ஸ் ரொனால்ட் பெரேரா சாட்சியமளித்துள்ளார்.

மாணவி வித்தியா காணாமற்போனமை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி இரவு 8.40 அளவில் அவரின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

மறுநாள் காலை, 119 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு புங்குடுதீவு – ஆலடி சந்தியில் பெண் பிள்ளையொன்றின் சடலம் காணப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, அந்தப் பகுதிக்கு சென்றதாக அவரது சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளவன் வீதியில் 10 அல்லது 15 அடி தூரத்தில் தரிசு நிலத்தில் சடலம் வலதுபுறமாக இருந்ததாகவும் அதனை அண்மித்த பகுதிகளில் செடிகள் உடைந்து காணப்பட்டதாகவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

சடலம் காணப்பட்ட இடத்திற்கு யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ஊர்காவற்துறை நீதவான், உள்ளிட்ட அதிகாரிகள் வருகைதந்ததன் பின்னர் சடலத்தின் மீது காணப்பட்ட துணிகள் முற்றாக அகற்றப்பட்டதாகவும் சாட்சியமளித்துள்ளார்.

சடலம் அன்னார்ந்து மேலாக, நிலத்தில் காணப்பட்டதாகவும் கால்கள் இரண்டும் 180 பாகை அளவிலே விரித்து இடதுகால் சீருடையின் இடுப்பு பட்டியால் மரத்தில் கட்டப்பட்டிருந்ததாகவும் அவரது சாட்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலது கால் மார்புக் கச்சையினால் அருகிலிருந்த மரத்தில் கடப்பட்டிருந்ததாகவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்ட தினத்தில் 10 ஆம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய ஒரேகுடும்பத்தைச் செர்ந்த சகோதரர்கள் மூவரையும் கைது செய்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக அவர் சாட்சியமளித்துள்ளார்.

அத்தோடு, ஜெயக்குமார் மற்றும் தவக்குமார் ஆகியோரது வீடுகளில் முழுமையாக சோதனை நடத்தப்பட்டு, சில சான்றுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதில் இரண்டாம் இலக்க சந்தேகநபரான ஜெயக்குமார் சம்பவ தினத்தன்று அணிந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் சேறு மற்றும் தோள் பகுதியில் சிவப்பு நிறத்திலான இரத்தக்கரை படிந்த மஞ்சள் மற்றும் கருப்பு நிற ரீ ஷர்ட் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துசாந்தன், பழனி சிங்க குகநாதன், கோகுலன் ஆகிய ஐவரையும் புங்குடுதீவில் கோயில் ஒன்றுக்கு போய்வரும் வழியில் 17 ஆம் திகதி கைது செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் குறிக்கட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டபோது புங்குடுதீவு மக்கள் தடிகள் மற்றும் பொல்லுகளுடன் காவலரணை சுற்றிவளைத்து சந்தேநபர்களை வெளியில் விடுமாறும் கொல்ல வேண்டும் எனவும் சத்தமிட்டதாக அவரது சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபர்களை குறிக்கட்டுவானில் வைத்திருப்பதும் தரை வழியூடாகக் கொண்டுசெல்வதும் ஆபத்து என உணர்ந்து, காரைநகர் கடற்படை அதிகாரிகளுக்கு அறிவித்து வோட்டர் ஜெட் ஒன்றை குறிக்கட்டுவான் இறங்குதுறைக்கு வரவழைத்ததாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

சந்தேகநபர்களை கடல் வழியாகக் கொண்டுசென்றபோது, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதை அறிந்து அவர்களை காரைநகர் கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்றதாகத் தெரிவித்த சாட்சியாளர், பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் வாகனத்திலும் ஊர்காவற்துறை பொலிஸ் வாகனத்திலும் யாழ். பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றதாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் வேறு எவரையும் தாம் கைது செய்யவில்லை எனவும் ஊர்க்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

வேறு வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க வேண்டியிருந்ததால் மே மாதம் 19 ஆம் திகதி மஹரகம சென்றதாகவும் உயர் பொலிஸ் அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய, வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் மறுநாள் ஊர்காவற்துறை திரும்பியதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சந்தேகநபர் ஒருவர் வௌ்ளவத்தை பகுதியில் வௌ்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹத்துருசிங்க தனக்கு அறிவித்ததாகவும் சாட்சியாளர் கூறியுள்ளார்

இந்த சந்தேகநபர் ஏற்கனவே தீவுப் பகுதியில் கைது செய்யப்பட்டு, யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார் விடுவித்த நிலையில், அவர் வௌ்ளவத்தையில் கைது செய்யப்பட்டதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

வௌ்ளவத்தையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் பெயர் சுவிஸ் குமார் என்பதை பின்னர் அறிந்துகொண்டதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் சாட்சியாளர் அடையாளம் காண்பித்துள்ளார்.

வௌ்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை  நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரை முன்னர் தெரியாத போதிலும், அவரை தற்போது தெரியும் எனவும் சாட்சியாளர் கூறியுள்ளார்.

இதன்போது ஒன்பதாம் இலக்க சந்தேகநபரான சுவிஸ் குமாரையும் அவர் அடையாளம் காண்பித்துள்ளார்.

சாட்சியாளர் நீதிமன்றத்தில் முன்வைத்த சாட்சியங்களை உன்னிப்பாக அவதானித்த நீதிபதிகள் குழாம், அவரிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கு அமைய B அறிக்கை அனுப்பிவைக்கப்படாமை தொடர்பில் இதன்போது நீதிபதிகள் குழாம் சாட்சியாளரிடம் கடும் தோணியில் கேள்வி எழுப்பியது.

ஒன்பதாம் இலக்க சந்தேகநபர் தொடர்பில் B அறிக்கை தயாரிக்க முடியாது எனவும் அவர் தொடர்பில் தெரியாது எனவும் கூறும் சாட்சியாளருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் தொடர்புள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பொறுப்பிலுள்ள பகுதியில் பாரிய குற்றச்செயல் இடம்பெற்று எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு பதற்றம் நீடித்துக் கொண்டிருக்கையில் மகரகம நீதிமன்றத்திற்கு சென்றதன் மூலம் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையை நடுத்தெருவில் விட முடியுமா எனவும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வினவியுள்ளது.

ஒன்பதாம் இலக்க சாட்சியாளர் தொடர்பிலான தகவல்களை வழங்குவதில் மாத்திரம் மழுப்புவதற்கு காரணம் என்னவெனவும் நீதிபதிகள் சாட்சியாளரிடம் வினவியுள்ளனர்.

சாட்சியாளரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்டதையும் நீதிபதிகள் குழாம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

http://newsfirst.lk/tamil/2017/07/வித்தியா-கொலை-வழக்கு-ஊர்/

Link to comment
Share on other sites

சுவிஸ்குமார் அவரது மனைவி,பிள்ளை உட்பட ஐவரை எனது வாகனத்திலேயே யாழ்.பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றேன்

மறுநாள் அவர் தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது  வித்தியா வழக்கில் 25 ஆவது சாட்சியான தமிழ்மாறன் சாட்சியம்

(ரி.விரூஷன்)

புங்குடுதீவிற்கு என்னோடு வந்திருந்த தமிழ்ப்பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜன் உட்பட இரு பொலிஸ் அதிகாரிகளையும் சரணடைந்திருந்த சுவிஸ்குமார் அவரது மனைவி மற்றும் பிள்ளை

ஆகியோரை எனது வாகனத்திலேயே புங்குடுதீவில் இருந்து

சுவிஸ்குமார்....

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றிருந்தேன். பின்னர் சுவிஸ்குமார் பொலிஸாரிடம் இருந்து தப்பித்து கொழும்பு சென்றமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பில் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரைக் கேட்டபோது சுவிஸ்குமாருக்கு எதிராக சாட்சிகள், முறைப்பாடுகள் இல்லாதிருந்தால் அவரை விடுதலை செய்திருக்கலாம் என கூறினார்.

இவ்வாறு பூங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டுப்பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் 25 ஆவது சாட்சியான சிரேஷ்ட சட்டப்பீட விரிவுரையாளர் தம்பிராஜா தமிழ்மாறன் யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ்மொழி பேசும் மேல்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

குறித்த மாணவியின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் தொடர் விசாரணையாக இடம்பெற்று வருகின்றது.

நேற்றைய தினம் தொடர் வழக்கு விசாரணையின் ஐந்தாவது நாளாக சாட்சிப் பதிவிற்காக மன்று கூடியிருந்தபோது இவ் வழக்கில் 25ஆவது சாட்சியின் சாட்சிப் பதிவுகள் ஆரம்பமாகியிருந்தன. இவரது சாட்சியத்தை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்துடனும் ஏனைய அரச சட்டவாதிகள் குழுவினருடனும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-05#page-1

Link to comment
Share on other sites

சுவிஸ்குமார் குடும்பத்துடன் பொலிசாரிடம் சரணடைந்தார் என சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் சாட்சியம்:

justice.jpg

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யபட்ட கால பகுதியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தவர் நீதாய விளக்கத்தின்  ( ரயலட் பார் ) முன்பாக சுமார் 7 மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார்.

 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் ஐந்தாம் நாள் சாட்சி பதிவுகள்,  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
 
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த்,  லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி  மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
 
எதிரிகள் சார்பில்  5 சட்டத்தரணிகள் முன்னிலை. 
 
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாந்த  மற்றும் சட்டத்தரணி சரங்க பாலசிங்க , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் 8ஆம் எதிரி சார்பிலும் மன்றினால் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
 
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
 
அதனை தொடர்ந்து இன்றைய தினம் ஐந்தாம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
 
மூக்கு கண்ணாடி விற்பனை கடை வைத்துள்ளேன். 
 

குறித்த வழக்கின் 14ஆவது சாட்சியமான கைத்தான்பிள்ளை ஜூட்ஸ் என்பவர் சாட்சியமளிக்கையில் , 

 
நான் குருநகர் பகுதியை சேர்ந்தனான். யாழ்.நகர் பகுதியில் மூக்கு கண்ணாடி விற்பனை நிலையம் வைத்து உள்ளேன். கண் பரிசோதனை தொடர்பில் 20 வருடத்திற்கு மேலான அனுபவம் எனக்கு உண்டு. அத்துடன் அது தொடர்பில் மூன்று வருட கற்கையையும் பூர்த்தி செய்துள்ளேன்.
 
என்னுடைய கடைக்கு வந்திருந்த குற்றத்தடுப்பு புலனாய்வு துறையினர் ஒரு மூக்கு கண்ணாடியினை கொடுத்து அது தொடர்பில் பரிசோதனை செய்யுமாறு கூறி இருந்தனர்.  அந்த கண்ணாடியினை பரிசோதித்த போது அது வலது கண் பக்க வில்லை சாதாரண வில்லையாகவும் , இடது கண் வில்லை பார்வை குறைபாடு உடையவர்களுக்கான வில்லையாகவும் காணப்பட்டது. என சாட்சியமளித்தார்.
 
அதன் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் அந்த கண்ணாடியினை அடையாளம் காட்ட முடியுமா என கேட்டார். அதற்கு ஆம் என பதிலளித்தார். அப்போது மன்றினால் சான்று பொருளான மூக்கு கண்ணாடி அவருக்கு காட்ட ப்பட்டது. அவர் அந்த கண்ணாடியினை தான் பரிசோதித்த போது இடது கண் வில்லை கீறு பட்டு கோடுகள் காணப்பட்டு இருந்தது. இந்த கண்ணாடியிலும் அப்படி கோடுகள் காணப்படுகின்றன என கூறி அந்த கண்ணாடியினை அடையாளம் காட்டினார்.
 
அதன் போது மன்று சாட்சியிடம் இந்த மூக்கு கண்ணாடியினை சாதரணமானவர்கள் அணிவார்களா ? என கேட்டது. அதற்கு சாட்சி சாதரணமானவர்கள் இதனை அணிய முடியாது ஏனெனில் இதன் இடது பக்க கண் வில்லை பார்வை குறைபாடு உடையவர்களுக்காக விசேடமாக செய்யப்பட்டது. அதனால் சாதரணமானவர்கள் அணிய முடியாது. என தெரிவித்தார். அதை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி மன்றினால் விடுவிக்கப்பட்டது.
 
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி. 
 
அடுத்ததாக குறித்த வழக்கின் 19 ஆவது சாட்சியமாக சம்பவம் நடைபெற்ற கால பகுதியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த குயிண்டஸ் குணால் பெரேரா சாட்சியம் அளிக்கையில் ,
 
நான் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி விடுமுறையை முடித்து மீண்டும் சேவையில் இணைந்து கொண்டேன். அன்றைய தினம் இரவு 8.40 மணியளவில் , பாடசாலை சென்ற மாணவி இதுவரை வீடு திரும்பவில்லை என மாணவியின் தாயான சிவலோகநாதன் சரஸ்வதி என்பவர் ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
 
அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு , உப போலிஸ் பரிசோதகர் அநோசியஸ் தலைமையிலான போலிஸ் குழு சென்றது. மறுநாள் 14 ஆம் திகதி காலை அவரச போலிஸ் இலக்கமான 119 இலக்கத்திற்கு தொலைபேசியில் புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அருகில் பெண் பிள்ளை ஒருவரின் சடலம் காணப்படுவதாக தகவல் வந்தது அந்த தகவல் எமது போலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
 
அதனை அடுத்து நான் , உப போலிஸ் பரிசோதகர் தலைமையிலான போலிஸ் குழுவுடன் சம்பவ இடத்திற்கு காலை 7.20 மணியளவில் புறப்பட்டோம். காலை 8 மணியளவில் சம்பவ இடத்தை சென்றடைந்தோம்.
 
எமது போலிஸ் நிலையத்தில் இருந்து ஆலடி சந்தி பகுதி 22 கிலோ மீற்றர் தூரம். ஆலடி சந்தியில் இருந்து சடலம் கிடந்த இடமானது சுமார் 200 மீற்றர் தூரமாகும். அப்பகுதிக்கு ஒரு மணல் பாதை ஊடாக பற்றைகள் உடைந்த வீடுகள் பனைமரங்கள் உள்ள பகுதி ஊடாக  சென்றோம். அந்த பாதையை வல்லவன் பாதை என்பார்கள்.
 
நாங்கள் அங்கே சென்ற போது எமது போலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் குறிகட்டுவான் போலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி , இறந்த மாணவியின் தாய் , சகோதரன் உட்பட ஊரவர்கள் அந்த பகுதியில் நின்றார்கள்.
 
சப்பாத்தை மீட்டோம். 
 
சடலம் கிடக்கும் இடத்திற்கு செல்வதற்கு முன்பாக சுமார் 10 – 15 அடி தூரத்தில் மாணவியின் சப்பாத்து ஒன்று காணப்பட்டது. அதனை தாண்டி சடலம் கிடக்கும் இடத்திற்கு சென்றோம். சடலத்தினை மாணவியின் தாயார் அடையாளம் காட்டினார். அதன் போது சடலம் வெள்ளை துணியினால் மூடப்பட்டு இருந்தது.  சடலம் கிடந்த இடத்தில் இருந்து 8 மீற்றர் தூரத்தில் மற்றைய சப்பாத்து கிடந்தது.
 
சடலம் கண்டேடுப்பதற்கு முதல் நாள் அப்பகுதியில் மழை பெய்தமையால் சடலம் காணப்பட்ட பகுதி உட்பட அந்த பகுதிகளில் வெள்ளம் தேங்கி நின்றன.
 
அதன் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி ஊர்காவற்துறை நீதவான் , தடயவியல் பிரிவு ,திடீர் மரண விசாரணை அதிகாரி ,ஆகியோருக்கு அறிவித்தேன்.
 
முகம் , உடல் வீங்கி இருந்தன. 
 
அவர்கள் வந்த பின்னர் சடலத்தின் மேல் இருந்த வெள்ளை துணியை அகற்றி சடலத்தை பார்வையிட்டேன். முகம் , உடல் என்பன வீங்கி காணப்பட்டன.
 
சடலத்தின் அருகில் , குடை , சைக்கிள் , பாடசாலை புத்தக பை என்பன காணப்பட்டன. அதன் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதன வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தோம்.
 
அதன் பிறகு தமிழ் மொழி பேசும் போலிஸ் உத்தியோகஸ்தர் கோபி என்பவரை இறந்த மாணவியின் தாயாரிடம் வாக்கு மூலத்தை பெறுமாறு பணித்தேன்.
 
மூவரை கைது செய்தேன். 
 
தாயின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் 14 ஆம் திகதி மாலை புங்குடுதீவை சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தேன்.
 
தான் போது அவர்களது வீட்டில் மேற்கொண்ட தேடுதல்களின் போது ஜெயக்குமார் என்பவரின் வீட்டில் இருந்து மஞ்சள் கறுப்பு நிற ரீ. சேர்ட் ஒன்றினை கண்டெடுத்தோம். அதில் தோள் பட்டை பகுதியில் இரத்த கறையை ஒத்த கறையும் , சேறும் காணப்பட்டது. அதனால் அதனை சந்தேகத்தில் சான்று பொருளாக மீட்டோம்.
 
அதேபோன்று தவக்குமார் என்பவரை கைது செய்யும் போது அவரது வீட்டில் இருந்து சேர்ட் ஒன்றினையும் மீட்டோம் அதிலும் கறைகள் காணப்பட்டன.  கைது செய்யபப்ட்ட மூன்று சந்தேக நபர்களையும் மறுநாள் 15 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினோம்.
 
இறுதி கிரியை. 
 
மாணவியின் இறுதி கிரியைகள் 15ஆம் திகதி நடைபெற்றது. அதனால் அப்பகுதி பாடசாலைகள் , கடைகள் எல்லாம் மூடப்பட்டு , மாணவர்கள்,  பொதுமக்கள் வீதிகளில் இரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் அசாதாரண சூழ் நிலை காணப்பட்டது.
 
ஐவரை கைது செய்தேன்.
 
இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட மேலும் ஐந்து சந்தேக நபர்கள் உள்ளனர் எனும் தகவல் எனக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் 17ஆம் திகதி மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐவரையும் கைது செய்தேன்.
 
காவலரண் சுற்றி வளைப்பு. 
 
கைது செய்யப்பட்டவர்களை குறிகட்டுவான் போலிஸ் காவலரணில் வைத்து அவர்களின் வாக்கு மூலங்கங்களை பதிவு செய்து கொண்டிருந்த வேளை ஊரவர்கள் ஒன்று கூடி தடிகள் பொல்லுகளுடன் காவலரணை சுற்றி வளைத்து சந்தேக நபர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறும் அவர்களை தாங்கள் கொல்ல வேண்டும் எனவும் கோரினார்கள்.
 
கடல் மார்க்கமாக சந்தேக நபர்களை கொண்டு சென்றோம்.
 
அதனால் நாம் காரைநகர் கடற்படை கட்டளையிடும் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு அதிவிரைவு படகு (வேட்டர் ஜெட் ) ஒன்றில் சந்தேக நபர்களை ஏற்றி கொண்டு ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்ற வேளை எனக்கு தகவல் கிடைத்தது, ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்தை முற்றுகையிட மக்கள் சென்று கொண்டிருப்பதாக அதனால் நாம் உடனடியாக சந்தேக நபர்களை காரைநகர் கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று , அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிசாரின் உதவியுடன் யாழ்ப்பாண போலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து சந்தேக நபர்களின் வாக்கு மூலத்தை பதிவு செய்தேன்.
 
அதன் பின்னர் மறுநாள் எனக்கு மகரவில் நீதிவான் நீதிமன்றில் சாட்சியம் அளிக்க செல்ல வேண்டி இருந்தமையால் நான் சென்று விட்டேன்.
 
சுவிஸ் குமார் தொடர்பில் தெரியாது. 
 
பின்னர் 20ஆம் திகதி எனது போலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப போலிஸ் பரிசோதகர் சொன்னார் இந்த வழக்கில் ஒன்பதாவது சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பான போலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்ற வேளை வெள்ளவத்தை போலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் எனவும் அவரின் பெயர் சுவிஸ் குமார் எனவும். அதன் போதே நான் ஒன்பதாவது சந்தேக நபர் பற்றி அறிந்து கொண்டேன். என சாட்சியமளித்தார்.
 
சான்று பொருட்களை அடையாளம் காட்டினார்.
 
அதன்போது , பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சடலத்தின் அருகில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான சைக்கிள் , சப்பாத்து , பாடசாலை புத்தக பை , கிழிந்த பாடசாலை சீருடை , தலைப்பட்டி (ரீபென் ) கைக்குட்டை , கழுத்துப்பட்டி (ரை) உள்ளிட்ட சான்று பொருட்களை அடையாளம் காட்ட முடியுமா ? என கேட்டதற்கு ஆம் என சாட்சி பதிலளித்து அவற்றினை அடையாளம் காட்டினார்.
 
அதேவேளை சந்தேக நபர்களை கைது செய்த வேளை அவர்கள் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ரீ. சேர்ட் மற்றும் சேர்ட் உள்ளிட்டவற்றை அடையாளம் காட்ட முடியுமா ? என கேட்டதற்கும் அதற்கும் ஆம் என சாட்சி பதிலளித்து அவற்றினையும் அடையாளம் காட்டினார்.
 
சந்தேகநபர்களையும் அடையாளம் காட்டினார். 
 
அதனை தொடர்ந்து நீங்கள் கைது செய்த எட்டு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்ட முடியுமா என கேட்டதற்கு ஆம் என பதிலளித்து , ஒன்று தொடக்கம் எட்டு வரையிலான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும்  ஜெயதரன் கோகிலன் ஆகிய எதிரிகளை அடையாளம் காட்டினார்.
 
அதனை தொடர்ந்து ஒன்பதாவது எதிரியை அடையாளம் காட்ட முடியுமா ? என கேட்டதற்கு நான் அவரை கைது செய்யவில்லை நான் நீதிமன்றில் முற்படுத்தவும் இல்லை. சிரேஸ்ட போலிஸ் அத்தியட்சகர் ஒன்பதாவது சந்தேக நபரை கைது செய்வதற்கு வீ  அறிக்கையை வெள்ளவத்தை பொலிசாருக்கு தொலைநகலில் (பாக்ஸ்) அனுப்புமாறு கோரிய போதும் அவர் தொடர்பிலான தகவல்கள் இல்லை என அந்த அறிக்கையை அனுப்பவும் இல்லை என தெரிவித்தார்.
 
சாட்சிக்கு மன்று கடும் எச்சரிக்கை. 
 
அதனை அடுத்து மன்று குறித்த போலிஸ் அதிகாரிக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து. மன்று இந்த சாட்சியாளர் சாட்சியம் அளிக்கும் முறையை இதுவரை அவதானித்துக்கொண்டு இருந்தது ,  பிரதி சொலிஸ்டர் ஜெனரலின் பிரதான விசாரணையை குழப்ப கூடாது எனும் நோக்குடனேயே அமைதியாக மன்று இந்த சாட்சியத்தை அவதானித்தது.
 
இந்த சாட்சியாளர் ஆரம்பத்தில் இருந்து ஒன்பதாவது சந்தேக நபர் தொடர்பில் கேட்டால் தெரியாது , நான் கைது செய்யவில்லை , நான் நீதிமன்றில் முற்படுத்தவில்லை.என பதிலளித்து வருகின்றார். ஒன்பதாவது சந்தேக நபர் தொடர்பில் கேட்டால் அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை , மறைக்கவும் முயல்கின்றார்.  உமக்கும் ஒன்பதாவது சாட்சியத்திற்கும் இடையில் ஏதேனும் பிரச்சனையா என மன்று சாட்சியிடம் கேட்டது. அதற்கு இல்லை என சாட்சியாளர் பதிலளித்தார்.
 
உமது பொலிஸ் நிலையத்திற்கு கீழ் உள்ள பகுதியில் ஒரு பெரிய சம்பவம் நடந்துள்ளது. அதனால் அந்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை கூட ஏற்பட்டு உள்ளது. அந்த சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த போலிஸ் அதிகாரி எட்டு சந்தே நபர்களை கைது செய்துள்ளீர் . ஆனால் ஒன்பதாவது சந்தேக நபர் பற்றி எந்த தகவலும் இல்லை.
 
எட்டு சந்தேக நபர்களை கைது செய்து பிரச்சனை இங்கே நடந்து கொண்டு இருக்கும் வேளை மகரவில் நீதிவான் நீதிமன்றில் சாட்சியம் அளிக்க என சென்று உள்ளீர். என மன்று குறித்த சாட்சியத்திற்கு எச்சரித்த பின்னர்  அங்கு என்று சென்று சாட்சியம் அளித்தீரா ? என கேட்டது. அதற்கு இல்லை என பதிலளித்த சாட்சியம்.  தான் அங்கே சாட்சி சொல்ல சென்று கொண்டிருந்த வேளை எனது உயர் அதிகாரி உடனே திரும்பி வருமாறு பணித்தார். அதனால் சாட்சியமளிக்க செல்லவில்லை என கூறினார்.
 
அதற்கு மன்று உமது உயர் அதிகாரிக்கு இருக்கும் அக்கறை உமக்கு இருக்கவில்லை. உமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சனை நடந்து கொண்டு இருக்கும் போது அதனை கட்டுபடுத்துவதற்கு பொறுப்பாக இருக்க வேண்டிய நீர் பொறுப்பற்று நடந்துள்ளீர் .
 
உமது பொறுப்பற்ற செயலால் தான் ஆத்திரமுற்றவர்கள் ஒன்று கூடி யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டட தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டார்கள். ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தாமல் சந்தேக நபர்கள் யாழ்ப்பான நீதிமன்றில் முற்படுத்த முயல்கின்றார்கள் எனும் வதந்தி பரவி தான் நீதிமன்று முன்னாள் கூடியவர்கள் நீதிமன்ற கட்டட தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டார்கள்.  என கடுமையாக மன்று குறித்த சாட்சியத்தை எச்சரித்தது.
 
அதனை தொடர்ந்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து இடமாற்றம் கிடைத்தது எப்போது என மன்று வினாவியது. அதற்கு சாட்சியம் 22. 05. 2015 ஆம் ஆண்டு (மாணவி கொலை செய்யப்பட்டு ஒரு கிழமைக்குள்) இடமாற்றம் கிடைத்தாக தெரிவித்தார்.
 
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை மதிய போசன இடைவேளைக்காக மன்று ஒத்திவைக்கப்பட்டது.
 
3 நாட்களே விசாரணை நடத்தினேன். 
 
குறித்த போலிஸ் பொறுப்பதிகாரியை எதிரிகள் தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணை செய்யும் போது ,
 
குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் , 2016. 12. 10 அன்று கொடுத்த வாக்கு மூலத்தில் 4ஆம் மற்றும் 7ஆம் எதிரிகள் தொடர்பில் எதுவும் ஆதாரங்கள் கொடுக்கவில்லை தானே என சட்டத்தரணி கேட்ட போது ஆம் என பதிலளித்தார். எதற்காக 4ஆம் மற்றும் 7ஆம் எதிரிகளை கைது செய்தீர்கள் ? என சட்டத்தரணி கேட்ட போது , வித்தியா கொலையுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது. என தனக்கு கிடைத்த புலனாய்வு தகவல் ஊடாகவே கைது செய்தேன் என பதிலளித்தார்.
 
மாணவி கொலை தொடர்பில் எவ்வளவு காலம் விசாரணைகளை மேற்கொண்டீர்கள் ? என சட்டத்தரணி கேட்டதற்கு 2 அல்லது 3 நாட்களே விசாரணைகளை மேற்கொண்டேன் என பதிலளித்தார்.
 
குறித்த இரு எதிரிகள் தரப்பிலும் நான் சொல்கிறேன் அவர்கள் இருவரும் சம்பவ தினம் மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் கொழும்பில் நின்றார்கள் என்று கூறுகிறேன் என சட்டத்தரணி கூறினார்.
 
அதனை தொடர்ந்து பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மீள் விசாரணை செய்யும் போது . உங்களால் கைது செய்யப்பட்ட 4ஆம் , 5ஆம் , 6ஆம் , 7ஆம் மற்றும் 8ஆம் எதிரிகள் மீது சித்திரவதை புரிந்ததாக எங்கேனும் உமக்கு எதிராக முறைப்பாடு உள்ளாதா ? எதிரிகள் மீது  மனித உரிமை மீறல் மேற்கொண்டீர் என உச்ச நீதிமன்றில் உமக்கு எதிராக வழக்கு உள்ளாதா ? என கேட்டதற்கு இல்லை என சாட்சி பதிலளித்தார்.
 
அதன் பிறகு 3 நாட்களே இந்த விசாரணையை செய்தீர் என சாட்சியம் அளித்துள்ளீர் ஏன் அதற்கு பிறகு விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என கேட்டதற்கு,  இந்த வழக்கின் விசாரணைகளை குற்ற தடுப்பு புலனாய்வு துறையினரிடம் பாரம் கொடுக்குமாறு போலிஸ் மா அதிபர் பணித்திருந்தார். அதனால் விசாரணை அறிக்கைகளை பாரம் கொடுத்த பின்னர் அது தொடர்பில் விசாரணைகள் செய்யவில்லை என பதிலளித்தார்.
 
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உப பொலிஸ் பொறுப்பதிகாரி ஸ்ரீகஜன் , ஒன்பதாவது சந்தேக நபர் இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தேவையானவரா என உம்மிடம் வினாவினாரா ? என கேட்டதற்கு , ஸ்ரீகஜன் என்பவர் எந்த சந்தர்ப்பத்திலும்  என்னிடம் சுவிஸ் குமார் என்பவர் பற்றி கதைக்கவே இல்லை என பதிலளித்தார். 
 
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியத்தின் சாட்சி முடிவுறுத்தப்பட்டு சாட்சி மன்றினால் விடுவிக்கப்பட்டார். 
 
7 மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார். 
 
குறித்த சாட்சியானது சுமார் 7 மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார்.  காலை 10 மணியளவில் சாட்சியம் அளிக்க தொடங்கி பின்னர் மதியம் 1.15 மணி முதல் 2 மணிவரை மதிய போசன இடைவேளைக்காக விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர், மீண்டும் 2 மணியளவில் குறித்த சாட்சியத்திடம் எதிரி தரப்பு சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவுகள் மாலை 5.30 மணியளவிலையே முடிவுறுத்தப்பட்டது. 
 
புங்குடுதீவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை கவலையாக இருந்தது. V.T. தமிழ்மாறன்  சாட்சி
 
அதனை தொடர்ந்து வழக்கின் 25ஆவது சாட்சியமான சட்டத்தரணியும் , சிரேஸ்ட சட்டவிரிவுரையாளருமான V.T. தமிழ்மாறன் சாட்சியம் அளித்தார். 
 
அதன் போது , நான் புங்குடுதீவை சேர்ந்தனான் 1974 ஆம் க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றி யாழ்.மாவட்டத்தில் முதல் நிலை மாணவனாக சித்தி அடைந்தேன். 1976ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைகழகத்தில் சட்டத்துறையில் கல்வி கற்று பட்ட பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் சட்ட கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக 1981ஆம் ஆண்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டேன். சட்டத்தரணியாக சிவில் வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகியும் உள்ளேன். 
 
புங்குடுதீவில் நடைபெற்ற சம்பவம் தொடர்பிலும் அதன் பின்னர் புங்குடுதீவு பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பிலும் கவலையடைந்து அப்போதைய வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த லலித் ஏ ஜெயசிங்காவுடன் தொடர்பு கொண்டு கதைத்தேன். 15ஆம் திகதி சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடனும் சம்பவம் தொடர்பில் கதைத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினேன். 
 
இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை. 
 
மாணவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள என்னால் முடியவில்லை அக் கால பகுதியில் கொழும்பு பல்கலைகழகத்தில் சட்ட பீட மாணவர்களுக்கு பரீட்சை காலமாக இருந்தமையால் எனக்கு வேலை சுமை இருந்தமையால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. 
 
பின்னர் 17ஆம் திகதி இரவு நான் யாழ்ப்பாணம் வந்து இருந்தேன். 18ஆம் திகதி நான் அப்போதைய  வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்து , புங்குடுதீவில் அப்போது நிலவிய நிலைமைகள் தொடர்பிலும் , புங்குடுதீவில் இனிவரும் காலத்தில் இவ்வாறான குற்ற செயல்களை தடுக்க அப்பகுதியில் பொலிஸ் காவலரண் அல்லது உப பொலிஸ் நிலையம் ஒன்றினை அமைக்க வேண்டும் எனவும் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் நல்லுறவை வளர்க்க வேண்டும் எனவும் கூறினேன். 
 
பிரதான சூத்திரதாரி. 
 
அத்துடன் , இந்த வழக்கு தொடர்பில் ஒரு நபர் இருப்பதாகவும் , அவரே இந்த குற்ற செயலுக்கு பிரதான சூத்திர தாரி என சிலர் எனக்கு தெரிவித்ததாக கூறி அவரை ஏன் கைது செய்யவில்லை என வினாவினேன். அதற்கு அவர் கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர் விபரங்களை எனக்கு கூறினார். அதில் எனக்கு வழங்கப்பட்ட தகவலில் பிரதான சூத்திர தாரி என குறிப்பிடப்பட்ட நபரின் பெயர் இல்லை. அதனை அவரிடம் கூறினேன். 
 
பின்னர் புங்குடுதீவில் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் சந்திப்பு ஒன்றினை நடாத்துவது தொடர்பில் புங்குடுதீவு மக்களுடன் பேசுவதற்காக புங்குடுதீவு சென்றேன். அப்போது என் கூட யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் என்பவரையும் இன்னுமொரு பொலிஸ் உத்தியோகச்தரையும் சிவில் உடையில் அழைத்து செல்லுமாறு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் கூறியதை அடுத்து அவர்களையும் என்னுடன் அழைத்து சென்றேன். 
 
18 ஆம் திகதி என்னுடன் சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவருடன் புங்குடுதீவு மக்கள் சிலரை சந்தித்தேன். அதன் போது ஒரு தகவல் கிடைத்தது, சம்பவம் தொடர்பில் இரு மாணவர்களுக்கு தகவல் தெரியும் என, அதனால் நாங்கள் குறித்த இரு மாணவர்களையும் நேரில் சந்தித்து கதைத்தால் ஏதேனும் தகவல் கிடைக்கும் எனும் எண்ணத்துடன் அவர்களை சந்திக்க பாடசாலைக்கு சென்றோம். 
 
அங்கு அதிபரை சந்தித்து குறித்த இரு மாணவர்கள் தொடர்பில் , கேட்ட போது அவர்கள் பாடசாலை வரவில்லை என கூறினார். நான் உள்ளே அதிபரை சந்தித்து கதைத்துக்கொண்டு இருந்தவேளை என்னுடன் வந்த ஸ்ரீகஜன் என்பவர் வெளியில் நின்று யாருடனோ தொலை பேசியில் கதைத்துக்கொண்டு இருந்தார். 
 
சுவிஸ் குமார் சரணடைந்தார். 
 
நான் அருகில் சென்றதும் இந்த வழக்குடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி சரணடைய தயாராக இருக்கின்றார். அவரின் மனைவி , கைக்குழந்தை , மற்றும் அவரின் தயார் ஆகியோருக்கு பாதுக்காப்பு வழங்கினால் அவர்கள் சரணடைய தயாராக இருக்கின்றார். என என்னிடம் கூறினார். 
 
நான் உடனே பொலிஸ் வாகனத்தை அழைத்து போலீசாரிடம் ஒப்படைப்போம். என கூறினேன். அதற்கு அவர் பொலிஸ் வரும் வரையில் அவர்களை நாங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பது புத்திசாலித்தனம் இல்லை. அதனால் அவர்களை எமது வாகனத்தில் ஏற்றி செல்வோம் என கூறினார். 
 
நானும் அதற்கு சம்மதித்து பொலீசாருக்கு உதவும் நோக்குடன் சரணடைந்தவர்களை எனது உத்தியோகபூர்வ வாகனத்தில் ஏற்றி சென்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இறக்கி விட்டேன். 
 
எனது வாகனத்தால் இறங்கிய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் சரணடைந்த சந்தேக நபரையும் அவரின் மனைவி , குழந்தை மற்றும் அவரின் தாயாரையும் பொலிஸ் நிலையம் உள்ளே அழைத்து சென்று உள்ளே இருந்த வாங்கு ஒன்றில் அமர வைத்தனர். அது வரையில் நான் அந்த இடத்திலே நின்றேன். பின்னர் நான் சென்று விட்டேன். 
 
மறுநாள் 19ஆம் திகதி காலை புங்குடுதீவில் மக்களுக்கும் பொலீசாருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. மதியம் 12 மணி வரையில் சுமூகமான முறையில் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டு இருந்தது. 
 
மக்களை தூண்டி விட்டார்கள். 
 
அந்த நேரம் அங்கு வந்த சிலர் , பொலீசாரிடம் சரணடைந்த சுவிஸ் குமார் என்பவர் பொலீசில் இருந்து தப்பி சென்று , கொழும்பில் தங்கி உள்ளதகாவும் , கூறினார்கள் அதனை அடுத்து அங்குள்ள மக்களை சிலர் எனக்கு எதிராக தூண்டி விட்டார்கள். 
 
அந்த மக்கள் சொல்லும் வரையில் எனக்கு சுவிஸ் குமார் கொழும்பு போன விடயம் தெரியாது. அதேவேளை சுவிஸ் குமார் என்பவர் சரணடையும் வரையில் எனக்கு சுவிஸ் குமார் என்பவர் யார் என்றே தெரியாது. அன்றைய தினமே நான் அவரை கண்டேன். 
 
அதன் போது அந்த சந்திப்பில் என்னுடன் கலந்து கொண்டு இருந்த வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரிடம் சுவிஸ் குமார் எப்படி கொழும்பு போனார் என கேட்டேன். 
 
அதற்கு அவர் அந்த சந்திப்பிலையே எல்லோர் முன்னிலையிலும் சொன்னார் , சாட்சி ஆதாரங்கள் முறைப்பாடுகள் இல்லாவிடின் சுவிஸ் குமாரை பொலிசார் விடுவித்து இருக்கலாம் என தெரிவித்தார். 
 
ஆனால் அங்குள்ள சிலர் எனக்கு எதிராக மக்களை தூண்டி விட்டதனால் எம்மை மக்களை சுற்றி வளைத்து சுவிஸ் குமாரை கைது செய்தால் தான் விடுவோம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனால் பொலிசார் கடற்படையின் உதவியை நாடி எம்மை கடற்படையினர் பொது மக்கள் மத்தியில் இருந்து மீட்டு கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று எம்மை பின்னர் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தனர். என சாட்சியம் அளித்தார். 
 
தேடப்படும் குற்றவாளியை ஏன் உமது வாகனத்தில்  ஏற்றி நீர் ?
 
இதேவேளை நீதாய விளக்கத்தின் ( ரயலட் பார் ) தலைமை நீதிபதியான மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் , சாட்சியத்திடம் நீர் ஒரு சட்டத்தரணி ,உமக்கு தெரியதா போலிசாரால் தேடப்படும் குற்றவாளி ஒருவரை உமக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி செல்ல கூடாது என ? கேட்டதற்கு , தான் பொலிசார் கேட்டதற்கு இணங்க தான் ஏற்றி சென்றேன். ஒரு பொதுமகனா போலீசாரிடம் சரணடைந்த ஒருவரை பொலிசார் கேட்டதற்கு இணங்க பொலிஸ் நிலையம் அழைத்து சென்றேன். என பதிலளித்தார்.
 
அதனை தொடர்ந்து புங்குடுதீவு ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் தானே பிறகு எதற்கு நீங்கள் சந்தேக நபரை யாழ்ப்பாணம் கொண்டு சென்றீர்கள் ? என கேட்டதற்கு என்னுடன் வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் யாழ்ப்பான பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடமே அவர்கள் சரணடைந்ததால் , என்னுடன் வந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் யாழ்ப்பாணம் கொண்டு செல்வோம் என கூறியதால் யாழ்ப்பாணம் அழைத்து சென்றேன். என பதிலளித்தார்.
 
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சியம் மன்றினால் விடுவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் விசாரணைகள் நாளைய தினம் (புதன் கிழமை) காலை 09 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அது வரையில் 09 சந்தேக நபர்களையும் விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.
 
அதேவேளை , இன்றைய தினம் சாட்சி பதிவுக்காக அழைக்கப்பட்ட சிவில் சாட்சி ஒன்று மன்றினால் முற்றாக வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது. அத்துடன் இன்றைய தினம் சாட்சி பதிவுக்காக அழைக்கப்பட்டு சாட்சி பதிவுகள் மேற்கொள்ள முடியாத மூன்று பொலிஸ் சாட்சியங்களையும் நாளைய தினம் புதன் கிழமை சாட்சியம் அளிக்க வருமாறு மன்றினால் பணிக்கப்பட்டது.

http://globaltamilnews.net/archives/31814

Link to comment
Share on other sites

வித்தியா கொலை வழக்கு: தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியம்

 

 

 
 

மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரண்டு ரோமங்களை பகுப்பாய்விற்கு அனுப்பி வைப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று வினவப்பட்டுள்ளது.

மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கின் Trial at Bar விசாரணை இன்று ஆறாவது நாளாகவும் நடைபெற்றது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளனர்.

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் 22 ஆவது சாட்சியாளரான தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ரொஷான் சந்தனகுமார இன்று சாட்சியமளித்துள்ளார்.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் சடலம் ஒன்று இருப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, மற்றுமொரு அதிகாரியுடன் அங்கு சென்றதாக சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

அங்கு மலசலக்கூடமொன்றுக்கு அருகாமையில் சப்பாத்து கிடந்ததாகவும் பின்னால் பாழடைந்த வீடொன்று இருந்ததாகவும் அலரி மரங்களுக்கு இடையில் கருப்பு நிற பொலித்தீனால் மூடப்பட்ட மூன்று இடங்களை அவதானித்ததாகவும் அவரது சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை தான் புகைப்படமெடுத்ததாகத் தெரிவித்த சாட்சியாளர், சட்ட வைத்திய அதிகாரியின் வருகையை அடுத்து பொலித்தீன் நீக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

சடலத்தின் இடது நெற்றியில் சிறு காயம் இருந்ததாகவும் கண்ணில் சிறு புழுக்கள் காணப்பட்டதாகவும் அவரது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்புக்கு சற்று மேல் சந்தேகமான இரண்டு ரோமங்களை அவதானித்து அதனை புகைப்படம் எடுத்ததாகவும் பின்னர் பாதுகாப்பாக அவற்றை சேகரித்து பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சடலம் அங்கிருந்து அகற்றப்பட்டபோது பின்பக்க இடுப்புப் பகுதியில் சிறு கீறல் காயங்களை அவதானித்ததாகவும் சாட்சியாளர் கூறியுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து வேறு விஞ்ஞான ரீதியான தடயங்களை தம்மால் கண்டுப்பிடிக்க முடியவில்லை எனவும் தடயவியல் பொலிஸ் உத்தியோகத்தர் ரொஷான் சந்தனகுமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 13 சான்றுப் பொருட்கள் திறந்த நீதிமன்றத்தில் பிரித்துக் காண்பிக்கப்பட்டதுடன், அவற்றை சாட்சியாளர் அடையாளம் காண்பித்துள்ளார்.

பெண்கள் அணியும் உள்ளாடைகள் போன்ற சான்றுப்பொருட்கள் காண்பிக்கப்பட்டபோது இதைப்போன்றது என அவர் அடையாளம் காண்பித்துள்ளார்.

சீல் வைக்கப்பட்ட இரண்டு பொதிகளும் இன்று மன்றின் அனுமதியுடன் திறக்கப்பட்டதுடன், அவை பகுப்பாய்விற்காக ரோமங்கள் அனுப்பி வைக்கப்பட்ட உறைகள் என சாட்சியாளர் அடையாளம் காண்பித்துள்ளார்.

சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்த மூன்றாம், நான்காம், ஆறாம் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஹேந்திர, ரோமங்கள் எப்போது பகுப்பாய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டன என கேள்வி எழுப்பினார்.

2015 ஜூன் மாதம் முதலாம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு யாழ் தடயவியல் பிரிவினரால் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் ரோமங்கள் ஒப்படைக்கப்பட்டதாக இதன்போது சாட்சியாளர் பதிலளித்துள்ளார்.

வழக்கின் முக்கியமான ஒரு தடயத்தை 17 நாட்களின் பின்னர் அனுப்பி வைத்தமைக்கான காரணத்தையும் சட்டத்தரணி வினவியுள்ளார்.

அந்த தினத்திலேயே இந்த வழக்கிற்கான ஆரம்ப சான்றுப்பொருள் முற்படுத்தப்பட்டது எனவும் அதனை அனுப்பி வைப்பதில் தடைகள் எதுவும் இருக்கவில்லை எனவும் சாட்சியாளரான தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார்.

நுணுக்கமான கருவியைக் கொண்டு ஆய்வு செய்தபோது உடலில் இருந்தது விந்தணுவா, புழுவா, பழுதடைந்த இரத்தமா என சட்டத்தரணி சாட்சியாளரிடம் வினவியுள்ளார்.

புழுக்கள் அப்போது வளர ஆரம்பித்திருந்ததாக சாட்சியாளர் கூறியுள்ளார்.

சடலத்தின் வலது கை ஆட்காட்டி விரலை சோதனைக்குட்படுத்தியதன் பின்னர் விரல் பாதுகாப்பாக பொலித்தீனால் கட்டப்பட்டதாகவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

மாணவியின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட ரோமம் தொடர்பிலான ஜீன் டெக் நிறுவன அறிக்கையின் பிரதிகள் இன்று சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான அனைத்து சட்டத்தரணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

பின்னர் 05 ஆம் இலக்க சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரகுபதி குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்திருந்தார்.

ரோமங்கள் தவிர வேறு ஏதேனும் சான்றுப்பொருட்கள் காணப்பட்டதா என சட்டத்தரணி வினவியபோது,
விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கக்கூடிய வேறு எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என சாட்சியாளர் பதிலளித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான சான்றுகள் எதுவும் இல்லை என யாழ். பொலிஸ் நிலையத்தில் CID யினரிடம் வாக்குமூலம் அளித்தீர்களா என நான்காம், ஏழாம் மற்றும் ஒன்பதாம் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கேதீஸ்வரன் சாட்சியாளரிடம் வினவினார்.

தனது விசாரணை தொடர்பில் மாத்திரமே வாக்குமூலம் அளித்திருந்ததாக சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

சடலத்திலும் சடலம் காணப்பட்ட சூழலிலும் பரிசோதித்து பார்த்தபோது, வேறு சான்றுப் பொருட்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் 22 ஆம் இலக்க சாட்சியாளரான தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார்.

இதன்போது சான்றுப்பொருட்களை பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் சாட்சியாளரிடம் வினவினார்.

நீதிமன்றத்தில் கட்டளைகளைப் பெறும் தினம் வரையில் சான்றுப்பொருட்களை அனுப்பவில்லை என சாட்சியாளர் பதிலளித்துள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/07/வித்தியா-கொலை-வழக்கு-தடய/

Link to comment
Share on other sites

வித்தியாவின் மரணத்திற்கு காரணமான மூன்று காரணிகள்

 

 

சிவ­லோ­க­நாதன் வித்­தி­யா­வுக்கு கூட்­டுப்­பா­லியல் வல்­லு­றவின் போது தலை யில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட காயத்­தினால் ஏற்­பட்ட குரு­திப்­பெ­ருக்கு, கழுத்துப் பகு­தி­யா­னது கழுத்துப் பட்­டி­யினால் நெரிக்­கப்­பட்­டமை, உள்­ளா­டை­யினை வாயினுள் திணித்­த­மையால் சுவா­சப்­பாதை தடை செய்­யப்­பட்­டமை ஆகிய மூன்று பிர­தான  கார­ணங்­க­ளி­னா­லேயே அவ­ரது மரணம் சம்­ப­வித்­துள்­ளது.

 

இக்­கா­யங்கள் ஒவ்­வொன்றும் தனித்­த­னி­யாக மர­ணத்தை ஏற்­ப­டுத்த கூடி­ய­ன­வாக காணப்­பட்­டன என்­ப­துடன் வித்­தியா சம்­பவ தினத்­தன்று காலை 7.30 க்கும் 9.30 க்கும் இடைப்­பட்ட நேரத்­திற்­குள்­ளேயே  உயி­ரி­ழந்­துள்ளார்.

 இவ்­வாறு  புங்­கு­டு­தீவு மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தி­யாவின் கூட்­டுப்­பா­லியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கின்  23 ஆவது  சாட்­சி­யான சட்­ட­வைத்­திய விசேட நிபுணர் டாக்டர் உருத்­தி­ர­ப­சு­பதி மயூ­ரதன் ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் சாட்­சி­ம­ளித்தார்.  

வித்­தி­யாவின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மை­யி­லான அன்­ன­லிங்கம் பிரே­ம­சங்கர், மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகியோர் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் தொடர் விசா­ர­ணை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது.

 நேற்­றைய தினம் தொடர் வழக்கு விசா­ர­ணையின்  ஐந்­தா­வது நாளாக சாட்சிப் பதி­விற்­காக மன்று கூடி­யி­ருந்­த­போது இவ் வழக்கில் 23ஆவது சாட்­சியின் சாட்சிப் பதி­வுகள் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. இந்த சாட்­சி­யத்தை அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந்­து­டனும் ஏனைய அரச சட்­ட­வா­திகள் குழு­வி­ன­ரு­டனும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் நெறிப்படுத்தினார்.

 இதன்போதே சட்ட வைத்திய நிபுணர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தி­யாவின் கூட்­டுப்­பா­லியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கின்  23 ஆவது  சாட்­சி­யான சட்­ட­வைத்­திய விசேட நிபுணர் டாக்டர் உருத்­தி­ர­ப­சு­பதி மயூ­ரதன் ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் சாட்­சிய­ம­ளித்தார்.  

வித்­தி­யாவின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மை­யி­லான அன்­ன­லிங்கம் பிரே­ம்­சங்கர், மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகியோர் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் தொடர் விசா­ர­ணை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது.

 நேற்­றைய தினம் தொடர் வழக்கு விசா­ர­ணையின்  ஐந்­தா­வது நாளாக சாட்சிப் பதி­விற்­காக மன்று கூடி­யி­ருந்­த­போது இவ் வழக்கில் 23ஆவது சாட்­சியின் சாட்சிப் பதி­வுகள் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தன. இந்த சாட்­சி­யத்தை அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந்­து­டனும் ஏனைய அரச சட்­ட­வா­திகள் குழு­வி­ன­ரு­டனும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் நெறிப்படுத்தினார்.  இதன்போதே சட்ட வைத்திய நிபுணர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

 

சிவ­லோ­க­நாதன் வித்­தி­யா­வுக்கு கூட்­டுப்­பா­லியல் வல்­லு­றவின் போது தலையில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட காயத்­தினால் ஏற்­பட்ட குரு­திப்­பெ­ருக்கு, கழுத்துப் பகு­தி­யா­னது கழுத்துப் பட்­டி­யினால் நெரிக்­கப்­பட்­டமை, உள்­ளா­டை­யினை வாயினுள் திணித்­த­மையால் சுவா­சப்­பாதை தடை செய்­யப்­பட்­டமை ஆகிய மூன்று பிர­தான கார­ணங்­க­ளி­னா­லேயே அவ­ரது மரணம் சம்­ப­வித்­துள்­ளது.

இக்­கா­யங்கள் ஒவ்­வொன்றும் தனித்­த­னி­யாக மர­ணத்தை ஏற்­ப­டுத்த கூடி­ய­ன­வாக காணப்­பட்­டன என்­ப­துடன் வித்­தியா சம்­பவ தினத்­தன்று காலை 7.30 க்கும் 9.30 க்கும் இடைப்­பட்ட நேரத்­திற்­குள்­ளேயே உயி­ரி­ழந்­துள்ளார்.

இவ்­வாறு புங்­கு­டு­தீவு மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தி­யாவின் கூட்­டுப்­பா­லியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கின் 23 ஆவது சாட்­சி­யான சட்­ட­வைத்­திய விசேட நிபுணர் டாக்டர் உருத்­தி­ர­ப­சு­பதி மயூ­ரதன் ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் சாட்­சி­யம­ளித்தார். 

வித்­தி­யாவின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மை­யி­லான அன்­ன­லிங்கம் பிரே­ம்­சங்கர், மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகியோர் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் தொடர் விசா­ர­ணை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது.

நேற்­றைய தினம் தொடர் வழக்கு விசா­ர­ணையின் ஐந்­தா­வது நாளாக சாட்சிப் பதி­விற்­காக மன்று கூடி­யி­ருந்­த­போது இவ்வழக்கில் 23ஆவது சாட்­சியின் சாட்சிப் பதி­வுகள் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தன. இந்த சாட்­சி­யத்தை அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந்­து­டனும் ஏனைய அரச சட்­ட­வா­திகள் குழு­வி­ன­ரு­டனும் சட்­டமா அதிபர் திணைக்­கள பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் குமார்­ரட்ணம் நெறிப்­ப­டுத்­தினார்.

இதன்­படி பிரதி சொலி­சிட்டர் ஜென­ர­லு­டைய வினாக்­க­ளுக்கு சாட்சி அளித்த சாட்சிப் பதி­வுகள்  பின்­வ­ரு­மாறு;

 

 

கேள்வி : உங்­க­ளு­டைய பெயர் என்ன?

பதில் : உருத்­தி­ர­ப­சு­பதி மயூ­ரதன்.

 

கேள்வி : உங்­க­ளு­டைய தொழில் என்ன?

பதில் : சட்ட வைத்­திய விசேட நிபுணர். 

 

கேள்வி : எங்கே பணி­யாற்­று­கிறீர்?

பதில் : யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில்.

 

கேள்வி : இது­வரை எத்­தனை சட­லங்­களை பிரேத பரி­சோ­தனை செய்­துள்ளீர்?

பதில் : நான்­கா­யிரம் வரை.

 

கேள்வி : அவற்றில் எத்­தனை சம்­பந்­த­மாக நீதிமன்­றுக்கு சாட்­சி­ய­ம­ளித்­துள்ளீர்?

பதில் : 60 க்கும் மேற்­பட்ட சட­லங்­களின் பிரேத பரி­சோ­தனை சம்­பந்­த­மாக சாட்­சி­ய­ம­ளித்­துள்ளேன்.

 

கேள்வி : 2015.05.14 ஆம் திகதி பிரேத பரி­சோ­த­னை­யொன்றை மேற்­கொண்­டி­ருந்­தமை  தொடர்­பாக ஊர்­கா­வற்­றுறை நீதிமன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தீரா?

பதில் : ஆம். 

 

கேள்வி : என்ன வழக்கு சம்­பந்­த­மாக?

பதில் : வித்­தி­யாவின் வல்­லு­றவு கொலை தொடர்­பான பிரேத பரி­சோ­தனை அறிக்கை சம்­பந்­த­மாக.

 

கேள்வி : அந்த வழக்­கி­லக்கம் என்ன?

பதில் : B116/15

 

கேள்வி : அவர் இறந்­தது எப்­போது?

பதில் : அவ­ரது உடல் 14.05.2015 கண்­டெ­டுக்­கப்­பட்­டது. 

 

கேள்வி : அந்த பிரேத பரி­சோ­த­னையை மேற்­கொள்ள கட்­ட­ளை­யிட்­டது யார்?-

பதில் : ஊர்­கா­வற்­றுறை நீத­ிவான்­ நீ­தி­மன்ற நீதிவான் லெனின்­குமார். 

 

கேள்வி : சட­லத்தை யார் பிரேத பரி­சோ­த­னையின் போது அடை­யாளம் காட்­டி­யது? 

பதில் : குறித்த பெண்ணின் சித்­தி­யான  சறோ­ஜினி மற்றும் சகோ­த­ர­னான கார்த்தி.

 

கேள்வி : சடலம் காணப்­பட்ட ஸ்தலத்தில் அது எவ்­வாறு இருந்­தது?

பதில் : மல்­லாக்­காக முகம் மேலே பார்த்­த­வாறு இரண்டு கைகளும் பின்­புறம் மடித்து பிடரிப் பகு­தி­யில் ­வைத்து பச்சை நிற ரிபனால் பெரு­வி­ரல்கள் இரண்­டையும் சேர்த்து கட்­டப்­பட்­டி­ருந்­தது. வெள்ளை நிற பெனி­ய­னாலும் கூந்­தலின் ஒரு பகு­தி­யி­னாலும் கட்­டப்­பட்­டி­ருந்­தது. கால்கள் இரண்டும் 180 பாகைக்கு அதி­க­மாக விரிக்­கப்­பட்டு இரண்டு மரங்­களில் கட்­டப்­பட்­டி­ருந்­தன. வலது காலா­னது கறுப்பு நிற மார்புக் கச்­சையின் கிழிந்த ஒரு பகு­தி­யினால் அலரி மரத்­திலும் இடது காலா­னது இடுப்புப் பட்­டியால் அலரி மரத்­திலும் கட்­டப்­பட்­டி­ருந்­தன. இதனை எனது ஸ்தலக் குறிப்பில் குறிப்­பிட்­டுள்ளேன். (சாட்சி இதனை சைகை மூலம் செய்து காட்­டினார்). 

 

கேள்வி : ஸ்தலக் குறிப்பில் தலை பற்றி எவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது?

பதில் : வலப்­பு­ற­மாக திரும்பி இருந்­தது. பழு­த­டைதல் நிலை ஆரம்­ப­மா­வ­தற்­கான அறி­குறி தென்­பட்­டது. கண், மூக்கு வீங்­கி­யி­ருந்­தன. 

 

கேள்வி : காது தொடர்­பாக?

பதில் : இரத்தக் கசிவு இடப் பக்கக் காதில் ஏற்­பட்­டி­ருந்­தது. இங்கு இரத்தம் கலந்த திர­வ­மொன்று அதா­வது இறந்த உட­லி­லி­ருந்து வெளி­யேறும் திர­வமும் காணப்­பட்­டது. 

 

கேள்வி : மூக்குத் தொடர்­பாக?

பதில் : அதுவும் காதில் ஏற்­பட்­டி­ருந்­ததைப் போன்றே காணப்­பட்­டது. 

 

கேள்வி : வாய் தொடர்­பாக?

பதில் : பகுதி அளவில் திறந்து காணப்­பட்­டது. அதனுள் பெண்கள் அணியும் உள்­ளாடை திணிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

 

கேள்வி : வாயினுள் திணிக்­கப்­பட்­டி­ருந்த உள்­ளாடை தெளி­வாகத் தெரிந்­ததா?

பதில் : முத­லா­வது பார்­வையில் தெரி­ய­வில்லை. பின்னர் பாட­சாலை செல்லும் பெண்­ணொ­ருவர் அணியும் ஆடை­களை கணக்­கிட்­டுப்­பார்த்­த­போது உள்­ளாடை இருக்­க­வில்லை. இதன் பின்னர் அவ­தா­னித்­த­போது வாயினுள் உள்­ளாடை திணிக்­கப்­பட்­டி­ருந்­தமை அவ­தா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. வாயில் இருந்து வெளியேறும் உமிழ் நீரால் குறித்த உள்­ளாடை நனைந்து நாக்குப் போலவே முன்னர் தெரிந்­தது. 

 

கேள்வி : ஸ்தலக் குறிப்பில் உடலில் மற்­றைய பகுதி தொடர்­பாக ?

பதில் : மார்பு, உடல் காயங்கள் இல்லை. கட்­டப்­பட்­டி­ருந்த கட்­டுக்­களை நீக்கி உடலை பின்­புறம் திருப்பிப் பார்த்­த­போது பிட்டப் பகு­தியில் உராய்வுக் காயம் காணப்­பட்­டது. முதுகில் காயம் இல்லை. 

 

கேள்வி : கட்­டுக்­களை அவிழ்க்க உத­வி­யது யார்?

பதில் : சோக்கோ பிரிவுப் பொலிஸார். 

 

கேள்வி : ஸ்தலத்தில் வைத்து உடலில் இருந்து வேறு என்ன சான்­று­களை எடுத்­தீர்கள்?

பதில் : யோனிப் பகு­தி­யி­லி­ருந்து இரண்டு மாதி­ரி­க­ளையும் மார்புப் பகு­தி­யி­லி­ருந்து இரண்டு தலை முடி­க­ளையும் எடுத்தோம்.

 

கேள்வி : சட­லத்தின் கழுத்துப் பகு­தியை அவ­தா­னித்­தீரா?

பதில் : பாட­சாலை கழுத்துப் பட்­டி­யான பச்சை நிற­மான பட்­டியால் இறுக்­கப்­பட்­டி­ருந்­தது. இடப் பக்கக் கழுத்தின் மேற்­ப­கு­தியில் ஒரு நுனியும் மறு நுனி­யா­னது அலரி மரத்தில் கட்­டப்­பட்­டி­ருந்­தது. இவ்­வாறு கட்­டப்­பட்­டி­ருந்­த­மை­யா­னது நிலத்­தி­லி­ருந்து இரண்டு அடி உய­ரத்­தி­லாகும். 

http://www.virakesari.lk/article/21547

 

 

வித்தியாவின் மரணத்திற்கு காரணமான மூன்று காரணிகள் 2

 

 

vidiya.jpg

கேள்வி : பிரேத பரி­சோ­த­னை­யின்­போது உடலில் எத்­தனை காயங்கள் இருந்­தன?- 

பதில் : எட்டுக் காயங்கள். 

 

காயம் 1 :– தலையில் தோலுக்கும் எலும்­புக்கும் இடையில் குருதிப் பெருக்கு 16x 8 செ.மீ. வலப் பகு­தியில் காணப்­பட்­டது. மண்­டை­யோட்டு எலும்பு உள்ளே மூளையில் இரத்தக் கசிவும் மூளை வீங்­கியும் காணப்­பட்­டது. இக்­கா­யங்­க­ளா­னது மொட்­டை­யான விசை­யினால் உரு­வாக்­கப்­பட்­டது. தலை­யா­னது வன்­மை­யான ஒரு பிர­தே­சத்தில் அடிக்­கப்­ப­டும்­போது இது ஏற்­பட்­டி­ருக்கும். இக்­காயம் பொது­வாக உய­ர­மான பிர­தே­சத்­தி­லி­ருந்து கீழே விழு­வ­தன்­மூ­லமே ஏற்­படும். அவ்­வாறு விழும்­போது மண்­டை­யோட்டு எலும்­புகள் உடைந்து காணப்­படும். ஆனால் இங்கு மண்­டை­யோட்டு எலும்­புகள் உடை­ய­வில்லை. எனவே மீண்டும் மீண்டும் ஓரி­டத்தில் தாக்­கப்­பட்­டதால் ஏற்­பட்­டி­ருக்­கலாம். 

காயம் 2 :– தலையின் மேற்­ப­கு­தியில் உச்சிப் பகு­தியில் ஏழுக்கும் மேற்­பட்ட காயங்கள் காணப்­பட்­டன. இவையும் குருதிப் பெருக்கு காயங்­களே. 12X10 செ.மீ. மொட்­டை­யான விசையால் ஏற்­ப­டலாம், கூந்­தலை பல­மாக இழுக்­கும்­போதும் ஏற்­படும். 

காயம் 3 :– இது கண்டல் வகை­யான காயம். 3X3 செ.மீ. அளவில் வலது பக்க கன்னப் பகு­தியில் காணப்­பட்­டது. மொட்­டை­யான விசையால் இறுக்­க­மாக அழுத்தும் போது அல்­லது தாக்­கப்­ப­டும்­போது இத்­த­கைய காயம் ஏற்­ப­டலாம்.

காயம் 4 :– மேல் உதட்டில் உட்­பு­றத்தில் காயம். மொட்­டை­யான விசை­யினால் தாக்­கப்­பட்­ட­மை­யினால் அல்­லது இறுக்­க­மாக அழுத்­தப்­ப­டும்­போது ஏற்­படும். 

காயம் 5 :– உராய்வுக் காயம். கழுத்­தினைச் சுற்றி 35x1 செ.மீ. அளவு. இது கழுத்துப் பட்­டியால் அழுத்­தும்­போது ஏற்­படும் காயத்­திற்கு சம­னா­னது. தசைப் பகு­தியில் கண்டல் காணப்­பட்­டது. கழுத்து எலும்­புகள் முறி­வ­டை­ய­வில்லை. 

காயம் 6 :– கண்டல் வகைக் காயம். இது தோலை வெட்டி பார்த்­த­போது கண்­ட­றி­யப்­பட்­டது. வலது பக்க இடுப்பில் சற்று மேற்­பக்­கத்தில் 18x12 செ.மீ அள­வு­டை­யது. இது வன்­மை­யான பிர­தே­சத்தில் தாக்­கும்­போது அல்­லது மென்­மை­யான தலைப் பகு­தியில் குறித்த பெண்ணின் உடல் இருக்­கும்­போது மேலி­ருந்து விசை பிர­யோ­கிக்­கப்­ப­டும்­போது ஏற்­படும். ஆனால் பிர­யோ­கிக்­கப்­பட்ட விசை இடைத்­த­ரப்பு விசை ஆகும். 

காயம் 7 :– உராய்வுக் காயம் வெளிப்­பு­ற­மாகக் காணப்­பட்­டது. உடலில் இரண்டு பிட்­டங்­க­ளிலும் காணப்­பட்­டது. வலது பக்­கத்தில் 12x7 செ.மீ. இடது பக்கம் 7x5 செ.மீ. அள­வு­டை­யது. 

காயம் 8 :– வலது கால் பகு­தியில் காட்டு முள் ஒன்று குத்தி இருந்­தது. இம்­முள்­ளா­னது காயாத பச்சை முள்­ளாகும். காயத்­தினுள் இம்­முள்­ளா­னது காணப்­பட்­டது. 

 

மன்றின் கேள்வி : காயம் 6, 7 இவற்­றிற்கு இடை­யி­லான தூரம் எவ்­வ­ளவு?

பதில் : அண்­ண­ள­வாக 6 அங்­குலம். 

 

கேள்வி : கண் தொடர்­பாக எதனைக் குறிப்­பிட்­டுள்ளீர்? 

பதில் : கண்ணில் உள் மடலில் இரத்தக் கசிவு ஏற்­பட்­டி­ருந்­தது. இடது கண்ணில் வெளிப்­பு­றத்தில் ஒட்­டக்­கூ­டிய தன்­மை­யு­டைய திரவம் ஒன்று காணப்­பட்­டது. கண்ணின் உள் மடலில் ஏற்­பட்ட இரத்தக் கசி­வா­னது பொது­வாக மூச்சுத் திண­ற­லின்­போது ஏற்­படும் மர­ணங்­களில் இது நிகழும். 

 

கேள்வி : கூந்­தலின் நீளம் எவ்­வ­ளவு?

பதில் : ஒரு மீற்­ற­ருக்கு அண்­மை­யாக (88 செ.மீ)

 

கேள்வி : வாய் தொடர்­பாக?

பதில் : வாயினுள் பிங் கலர் உள்­ளாடை திணிக்­கப்­பட்­டி­ருந்­தது.

 

கேள்வி : பல் தொடர்­பாக ?

பதில் : அனைத்துப் பற்­களும் காணப்­பட்­டன.

 

கேள்வி : உடலில் ஆரம்ப தளர்ச்சி தொடர்­பாக ?

பதில் : உட­லா­னது அழு­கிப்­போகும் நிலைக்கு மாறி­யி­ருந்­தது. 

 

கேள்வி : இவ் அழுகும் நிலை­யா­னது மர­ணித்து எத்­தனை மணித்­தி­யா­லங்­களின் பின்னர் ஏற்­பட்­டி­ருக்கும்?

பதில் : 18 மணித்­தி­யா­லங்­களின் பின்

 

கேள்வி : அப்­ப­டி­யாயின் மரணம் எப்­போது இடம்­பெற்­றி­ருக்கும்?

பதில் : நான் பிரேத பரி­சோ­தனை செய்ய ஆரம்­பித்த நேரத்­தி­லி­ருந்து 18 – 32 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்பு.

 

மன்றின் கேள்வி – ஏன் விரை­வாக உட­லா­னது அழு­கிப்­போக தொடங்­கு­கி­றது?

பதில் : அது சூழலைப் பொறுத்தே கணிக்­கப்­படும். அந்த வகையில் வெப்­ப­ வ­லய பிர­தே­ச­மாக எமது நாடு இருப்­பதால் இவ்­வா­றான நிலை ஏற்­ப­டு­கி­றது.

 

கேள்வி : பெண் உறுப்­புத்­தொ­டர்­பாக ? 

பதில் : சில காயங்கள் காணப்­பட்­டன. அவை கன்னி மென்­சவ்வு பல இடங்­களில் கிழிந்தும் பல இடங்­களில் அழி­வ­டைந்தும் இல்­லா­மலும் போயி­ருந்­தது. யோனித்­து­வா­ரத்தின் உட்­ப­கு­தியில் கீழாக 2 செ.மீ. கிழிவுக் காயம் காணப்­பட்­டது. இது செங்­குத்­தாக காணப்­பட்­டது. இக்­கா­ய­மா­னது ஆண்­குறி உட்­செல்­லும்­போது சாதா­ர­ண­மாக ஏற்­படும் காயத்தை விட மோச­மா­னது. அதா­வது சாதா­ரண உட­லு­ற­வுக்கு அப்பால் ஓர் குறு­கிய நேரத்தில் பலரால் பல­முறை ஆண்­குறி உட்­செ­லுத்தப்பட்­ட­மை­யினால் ஏற்­பட்­டது. 

ஒரு ஆண் பெண்ணின் மீது இருந்து உடல் உறவில் ஈடு­ப­டும்­போது விசை­யா­னது கீழ்ப்­ப­கு­தியை நோக்­கித்தான் செல்லும். அந்த வகையில் இக்­கா­ய­மா­னது வன்­மை­யாக பலாத்­கா­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டதால் ஏற்­பட்­டது. ஏற்­க­னவே குறிப்­பி­டப்­பட்ட காயங்­க­ளான 6, 7 ஆகிய காயங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு யோனிப்­ப­கு­தியில் இக்­காயம் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மா­கிய கார­ணத்­திற்கு தொடர்­புகள் உண்டு. அதா­வது பலாத்­கார வன்­பு­ணர்­வின்­போது தலைப்­ப­குதி வன்­மை­யாக தொடர்ந்து மோதும்­போது ஏற்­ப­டக்­கூ­டி­யது. 

 

கேள்வி : உங்­க­ளது அனு­ப­வத்தின் படி மேற்­படி வித்­தி­யாவின் வயதை உடைய பெண்­க­ளுக்கு இவ்­வா­றான காயங்கள் ஏற்­ப­டுமா?

பதில் : பல பிள்­ளை­களை பெற்­ற­வர்­களை விட சாதா­ர­ண­மாக உள்­ள­வர்­க­ளுக்கு இப்­ப­டி­யான காயங்கள்  ஏற்­பட வாய்ப்­பில்லை. இது மிகவும் பாரதூ­ர­மான காயம். 

 

கேள்வி : நெஞ்சுப் பகுதி தொடர்­பாக?

பதில் : சுவா­சப்பை வீங்­கியும் அதனுள் குருதிக் கலங்கள் தேங்­கியும் சுவா­சப்பை விரி­வ­டைந்தும் காணப்­பட்­டது. இது ஒருவர் மூச்­செ­டுப்­ப­தற்கு கஷ்­டப்­பட்டு திணறல் ஏற்­பட்டு இதயம் செயல் இழக்­கும்­போது  ஏற்­படும். 

 

கேள்வி : வயிற்­றுப்­ப­குதி தொடர்­பாக?

பதில் : இரப்­பை­யினுள் 100 மி.லீ. அள­வு­டைய மஞ்சள் நிற­மான தேநீரை ஒத்த திரவம் காணப்­பட்­டது. அதில் மது­சாரம், நஞ்சு கலந்து காணப்­ப­ட­வில்லை. 

 

கேள்வி : தேநீர் ஜீர­ண­மாக எவ்­வ­ளவு நேரம் தேவை?

பதில் : பொது­வாக உணவு 4 – 6 மணி நேரத்தில் ஜீர­ண­மாகும். 

 

கேள்வி : அப்­ப­டி­யாயின் தேநீர் அருந்தி எவ்­வ­ளவு நேரத்தில் இறப்பு இடம்­பெற்­றது?-

பதில் : இரண்டு மணி நேரத்­திற்குள். 

 

கேள்வி : குறித்த பெண்ணின் மர­ணத்­திற்­கான காரணம் என்ன?

பதில் : இதற்கு மூன்று கார­ணங்கள் உண்டு. அதா­வது தலையில் ஏற்­பட்ட காயத்தால் குரு­திப்­பெ­ருக்­கா­னது ஏற்­பட்­டி­ருந்­தமை, கழுத்­துப்­ப­கு­தி­யா­னது பாட­சாலை கழுத்­துப்­பட்­டியால் இறுக்கி நெரிக்­கப்­பட்­டி­ருந்­தமை மற்றும் உள்­ளாடை வாயினுள் திணிக்­கப்­பட்ட நிலையில் அது தொண்டைப் பகு­தியில் அடைத்­தமை ஆகிய மூன்று கார­ணங்­க­ளா­லுமே இறப்பு இடம்­பெற்­றி­ருந்­தது. 

 

கேள்வி : பிரேத பரி­சோ­தனை அறிக்­கையில் உங்­க­ளது குறிப்பு என்­பதில் எதனைக் குறிப்­பிட்­டுள்ளீர் ?

பதில் : உடலில் அவரை பிடித்து அழுத்­திப்­பி­டித்த சான்­றுகள் உள்­ளன. கை, கால் கட்­டப்­பட்டும் கன்­னப்­ப­கு­தியில் காயம் ஏற்­பட்­டி­ருந்­தது. பின்­ப­கு­தியில் கண்­டல் ­கா­யங்கள் ஏற்­பட்­டி­ருந்­த­மையை சேர்த்­துப்­பார்க்­கின்­ற­போது  இதற்­கான சான்­றுகள் தெளி­வாக உள்­ளன. மேலும் யோனிப்­ப­கு­தியில் ஆண்­கு­றி­யா­னது செலுத்­தப்­பட்ட சான்­றுகள் தெளி­வாக உள்­ளன. 

உடலில் ஏற்­பட்­டி­ருந்த காயங்­களை தொகுத்துப் பார்க்­கின்­ற­போது கழுத்து, தலை, வாய் ஆகிய பகு­தி­களில் ஏற்­பட்­டி­ருந்த காயங்கள் தனித்­த­னி­யாக மர­ணத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய காயங்கள் ஆகும். 

 

கேள்வி : தலைப்­ப­கு­தியில் ஏற்­பட்ட காயம் உட­ன­டி­யாக மர­ணத்தை ஏற்­ப­டுத்­துமா?

பதில் : குறிப்­பிட்ட நேரத்தை கூற­மு­டி­யாது. அது மூளையில் ஏற்­பட்ட தாக்­கமும் இரத்­தப்­பெ­ருக்கின் அளவைப் பொறுத்­துமே கூற­மு­டியும். 

 

மன்றின் கேள்வி : தலையில் ஏற்­பட்ட காயத்­திற்கு உட­ன­டி­யாக சிகிச்சை வழங்­கப்­பட்டால் உயிரை காப்­பாற்­றி­யி­ருக்க முடி­யுமா?

பதில் : இது சாதா­ர­ண­மாக சத்­திர சிகிச்சை மேற்­கொண்டு அகற்­றிட முடி­யாது. மூளையின் பல பாகங்­க­ளுடன் தொடர்புபட்­டது. மருந்­து­க­ளையும் கொடுத்து முயற்­சித்துப் பார்க்­கலாம். ஆனால் நிச்­ச­ய­மில்லை.  

 

கேள்வி : வாய்க்குள் துணி அடை­வதால் மரணம் ஏற்­ப­டுமா?

பதில் : வாயில் இருந்து உமிழ் நீர் சுரக்­கும்­போது வாய்க்குள் திணிக்­கப்­பட்ட துணியை நனைப்­பதால் அத்துணி பார­ம­டைந்து தானாக தொண்­டைக்­குள்­சென்று சுவா­சத்தை அடைத்தால் மரணம் ஏற்­படும். குறித்த இப்­பெண்ணின் பிரேத பரி­சோ­த­னையின் போது அவ­ரது வாய்க்குள் திணிக்­கப்­பட்­டி­ருந்த உள்­ளாடை அவ­ரது தொண்­டை­வரை சென்று இறு­கி­யி­ருந்­தது. 

 

மன்றின் கேள்வி : வாய்க்குள் துணி அடைக்­கப்­பட்டும் கழுத்து இறுக்­கப்­ப­டு­வதும் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் எவ்­வ­ளவு நேரத்தில் மரணம் ஏற்­படும். 

பதில் : சில நிமி­டங்­களில். 

கேள்வி : குறித்த சட­லத்தின் வேறு பகு­தி­களில் விந்­த­ணுக்கள் ஏதேனும் எடுக்­கப்­பட்­டதா? 

பதில் : சடலம் கண்­டெ­டுக்­கப்­பட்ட அன்றும் அதற்கு முன்பும் மழை பெய்­தி­ருந்­ததால் உடலில் இருந்த விந்­த­ணுக்கள் மழை நீரில் கழுவி செல்­லப்­பட்­டி­ருக்­கலாம். 

கேள்வி : சட­லத்தில் மொய்த்த எறும்­பு­களால் விந்­த­ணுக்கள் அழிக்­கப்­பட்­டி­ருக்க முடி­யுமா?

பதில் : சட­லத்தில் எறும்­புகள் காணப்­பட்­டி­ருந்­தன. விந்­த­ணுக்­களில் இனிப்­புக்கள் அதி­க­மாக இருப்­பதால் அவற்றை எறும்புகள் கவர்ந்திருக்கலாம். 

கேள்வி : சடலம் கட்டிப்போடப்பட்டிருந்த இடத்தில் வல்லுறவு இடம்பெற்றிருந்ததற்கான சான்றுகள் ஏதேனும் காணப்பட்டதா?

பதில் : அது அவ்வாறு இடம்பெற்றிருக்க  சந்தர்ப்பம் இல்லை. ஏனெனில் மீண்டும் மீண்டும் வல்லுறவு இடம்பெறும்போது அவ்விடத்தில் இருந்த மரங்களில் இருந்து வீழ்ந்த இலைகுழைகளில் மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் ஸ்தலத்தில் அவதானித்தபோது யோனிமடலுக்கு கீழாக நான்கு அடிவரை அங்கு காணப்பட்ட இலைகுழைகளில் மாற்றங்கள் எதுவும் காணப்பட்டிருக்கவில்லை. அத்துடன் நான் கூறிய காயங்கள் அவ்வாறான ஒரு காய்ந்த இலைகுழைகள் நிறைந்த மெத்தைபோன்று மென்மையான இடத்தில் ஏற்பட்டிருக்காது. எனவே இதனை வைத்து அவ்விடத்தில் வல்லுறவு இடம்பெறவில்லை எனக் கூறமுடியும். 

இதேவேளை குறித்த பெண்ணின் வாயினுள் இருந்து எடுக்கப்பட்ட உள்ளாடையானது ஜீன்டெக் தனியார் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு மன்றுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதனை நேற்று சட்ட வைத்திய நிபுணர் அடையாளம் காட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து குறித்த உள்ளாடையானது சான்றுப்பொருள் வ.20 என அடையாளம் இடப்பட்டது. 

 

அதேபோன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றின் இவ்வழக்குத்தொடர்பாக காணப்படும் மூல வழக்கேட்டில் இருந்து பிரேத பரிசோதனை அறிக்கையை பிரித்தெடுத்து மேல் நீதிமன்ற ட்ரயல் அட்பார் நீதிமன்ற வழக்கேட்டில் சான்றுப்பொருள் வ.21 என இணைக்குமாறும் இதனை உறுதிப்படுத்தி அதனை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றுக்கு அனுப்புமாறும் மன்றானது ட்ரயல் அட்பார் நீதிமன்ற பதிவாளர்களுக்கு  உத்தரவிட்டது.

http://www.virakesari.lk/article/21546

Link to comment
Share on other sites

அடுத்த அமர்வு 18ஆம் திகதி

சட்ட மருத்­துவ அதி­கா­ரி­யின் சாட்­சி­யம் முடி­வு­றுத்­தப்­பட்­டது. அத­னை­ய­டுத்து, தீர்ப்­பா­யத்­தால் வழக்கு விசா­ரணை எதிர்­வ­ரும் 18ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. அது­வ­ரை­யில் ஒன்­பது எதி­ரி­க­ளை­யும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மா­றும் தீர்ப்­பா­யம் உத்­த­ர­விட்­டது.

அன்­றைய தினத்­தில் இருந்து ஜூலை மாதம் 19ஆம் , 20ஆம் , 24ஆம் , 25 ஆம், மற்­றும் 26ஆம் , ஆகிய தினங்­க­ளி­லும் பின்­னர் ஓகஸ்ட் 2ஆம் , 3ஆம், மற்­றும் 4ஆம் திக­தி­க­ளில் வழக்கு விசா­ர­ணை­கள் நடை­பெ­றும் என தீர்ப்­பா­யம் அறி­வித்­தது.

http://uthayandaily.com/story/9657.html

Link to comment
Share on other sites

மாணவி கொலை வழக்குடன் தொடர்புடையவர் கட்டுநாயக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

gtn-sp.jpg

புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர், வெளிநாடு செல்ல முயன்ற வேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் எனும் தமிழ் உத்தியோகஸ்தரே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார். 

பொலிஸ் தலைமையகத்திடம் உரிய அனுமதிகளை பெறாது இந்தியாவுக்கு செல்ல முயன்று உள்ளார். அதேவேளை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதனாலையே திருப்பி அனுப்பட்டார் என பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரிடமே மாணவி கொலை வழக்கின்  பிரதான சூத்திரதாரி என குறிப்பிடப்படும் ஒன்பதாம் எதிரியான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் முதலில் (18 ஆம் திகதி மே மாதம் 2015ஆம் ஆண்டு) சரணடைந்ததாகவும் , 

அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தான் தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுவிஸ் குமாரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்ததாகவும் , 

சுவிஸ் குமாரையும் அவரது குடும்பத்தினரையும் , ஸ்ரீகஜன் எனும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் பொலிஸ் நிலையத்தினுள் அழைத்து சென்று அங்கிருந்த வாங்கில் அமர வைக்கும் வரை தான் அந்த இடத்தில் நின்றதாகவும் , 

அதன் பின்னர் மறுநாள் சுவிஸ் குமார் எவ்வாறு கொழும்பு சென்றார் என்பது  தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும், சட்டத்தரணியும் , சிரேஸ்ட சட்டவிரிவுரையாளருமான V.T. தமிழ்மாறன் கடந்த 05ஆம் திகதி நீதாய விளக்கத்தின்  ( ரயலட் பார் ) முன்பாக சாட்சியம் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்பவர்கள் மற்றும் நகை கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலர் கப்பம் பெறுவதாக குற்றசாட்டுக்கள் எழுந்த நிலையில் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த உப பொலிஸ் பரிசோதகர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

குறித்த இடமாற்றமானது வழமையாக இடம்பெறும் இடமாற்றம் தான் என பொலிஸ் தரப்பினர் கூறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

http://globaltamilnews.net/archives/32232

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎/‎07‎/‎2017 at 2:02 PM, Nathamuni said:

இங்கே பதிவு செய்யும் பலரும், நிழலி உட்பட தீர்ப்பு வழங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

தவறு என்பேன்.

நடந்த ஒரு குருரத்தினை, வைத்து நீதிமன்றில் நிறுத்தப் பட்டவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்ததின் விளைவினை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பார்த்தோம். செய்தவர்கள் தப்பிவிட, மாட்டியவர்கள் தண்டனை அனுபவிக்கும் குரூரம்.

இவர்கள் தான் இதை செய்தார்களா? அல்லது செய்தவர்கள் தப்பி விட்டார்களா என்பதை அறிய தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

இந்த விசாரணையின் நோக்கமே அதுதான்.

 

ஒரு போராட்டத்திற்கு உதவினார்கள் என கைது செய்யப்பட்டவர்களையும்,ஒரு பெண்ணை பாலியல் பலவந்தத்திற்கு உட்படுத்தியவர்களையும் ஒப்பிட்டு எழுதுவது நியாயமா?
சுவிஸ்குமார் உங்களுக்கு சொந்தமா?...ஆமியின்ட முகாம் பக்க்த்தில் என்ட படியால் அவன்ட தலையில தூக்கிப் போட போறீங்களா?...தமிழ் ஆண்கள் இப்படிப்பட்ட பாதகத்தினை செய்ய மாட்டார்கள் இல்லையா?
இங்கே நடப்பது இவர்களில் யார் அந்தப் பெண்ணை கொடூரமாய் வக்கிரம் புரிந்தது? எதனால் அந்தப் பெண் இறந்தார்?...பெண் இறப்பிற்கு காரணமான் காயங்களை ஏற்படுத்தியதிற்கு ஏற்ப ஆளாளுக்கு தண்டனை வேறுபடுமே தவிர.இவர்கள் ஒன்றும் அப்பாவிகள் இல்லை...இவர்களுக்கு  வக்காலத்து வாங்கி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

 

ஒரு போராட்டத்திற்கு உதவினார்கள் என கைது செய்யப்பட்டவர்களையும்,ஒரு பெண்ணை பாலியல் பலவந்தத்திற்கு உட்படுத்தியவர்களையும் ஒப்பிட்டு எழுதுவது நியாயமா?
சுவிஸ்குமார் உங்களுக்கு சொந்தமா?...ஆமியின்ட முகாம் பக்க்த்தில் என்ட படியால் அவன்ட தலையில தூக்கிப் போட போறீங்களா?...தமிழ் ஆண்கள் இப்படிப்பட்ட பாதகத்தினை செய்ய மாட்டார்கள் இல்லையா?
இங்கே நடப்பது இவர்களில் யார் அந்தப் பெண்ணை கொடூரமாய் வக்கிரம் புரிந்தது? எதனால் அந்தப் பெண் இறந்தார்?...பெண் இறப்பிற்கு காரணமான் காயங்களை ஏற்படுத்தியதிற்கு ஏற்ப ஆளாளுக்கு தண்டனை வேறுபடுமே தவிர.இவர்கள் ஒன்றும் அப்பாவிகள் இல்லை...இவர்களுக்கு  வக்காலத்து வாங்கி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

உங்கள் விதண்டாவாதத்துக்கு என்னிடம் பதில் இல்லை. :unsure:

நீதி மன்று குற்றவாளிகள் என்று சொல்லும் வரை அனைவரும் நிரபராதிகள். ஆயிரம் கொலை காரர்கள் தப்பலாம். ஒரு நிரபராதி தண்டிக்க படக் கூடாது என்பதை மறுக்க முடியுமா? இங்கே அடுத்தவர்களை மாட்டிவிட்டு, பணத்தினைக் கொடுத்து சுவிஸ் குமார் தப்பி ஓட முயன்றார் என்று தெரிகிறதே. 

உந்த கோத்தாரி பிடிச்ச பத்திரிகை புனை கதைகளையும் , இணையத் தளங்களில் வந்த ஒரு சதத்துக்கும் பெறுமதியில்லா செய்திகளையும், வைத்துக் கொண்டு  ஆளாளுக்கு தீர்ப்பு சொல்ல வெளிக்கிடுவது சரிதானா?

இப்ப நீதிமன்றில் உண்மைகள், முன்னே சொல்லப் படாத விடயங்கள் வருகின்றனவே? மூன்று எதிரிகள் கொலை நடந்த போது கொழும்பில் இருந்தார்கள் என்று நீதி மன்றில் சொல்லப் பட்டுள்ளது. இதை அரச தரப்பு எப்படி இல்லை என்று நிரூபிக்க போகிறது என பார்ப்போம்.

எனது தனிப்படட அபிப்பிராயம். இங்கே பல அப்பாவிகள் மாட்டி இருக்கின்றனர். பணம் கொடுத்து தப்பியவர்களில், மாட்டியவர் சுவிஸ்குமார். தப்பிய வேறு முதலைகள் யார் என்பதே எனது கேள்வி. விசயம் பெரிதாக முன்னரே  பணம் கொடுத்து பல முக்கிய சான்றுகள்,  அழிக்கப் பட்டதாக தெரிகிறது.

ஆகவே, தீர்ப்பு வரும் வரை, அவரவர்கள் நீதிமான்கள் ஆக தேவையில்லை என்கிறேன்.

உதில, நீங்க வேற ... சுவிஸ் குமார் சொந்தமா என்று.... கொமடி பன்னிக் கொண்டு... ஐயோ, ஐயோ. ( பதியும் போது, என்னதான் நினைக்கிறீர்களோ) tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎08‎/‎07‎/‎2017 at 7:03 PM, Nathamuni said:

உங்கள் விதண்டாவாதத்துக்கு என்னிடம் பதில் இல்லை. :unsure:

நீதி மன்று குற்றவாளிகள் என்று சொல்லும் வரை அனைவரும் நிரபராதிகள். ஆயிரம் கொலை காரர்கள் தப்பலாம். ஒரு நிரபராதி தண்டிக்க படக் கூடாது என்பதை மறுக்க முடியுமா? இங்கே அடுத்தவர்களை மாட்டிவிட்டு, பணத்தினைக் கொடுத்து சுவிஸ் குமார் தப்பி ஓட முயன்றார் என்று தெரிகிறதே. 

உந்த கோத்தாரி பிடிச்ச பத்திரிகை புனை கதைகளையும் , இணையத் தளங்களில் வந்த ஒரு சதத்துக்கும் பெறுமதியில்லா செய்திகளையும், வைத்துக் கொண்டு  ஆளாளுக்கு தீர்ப்பு சொல்ல வெளிக்கிடுவது சரிதானா?

இப்ப நீதிமன்றில் உண்மைகள், முன்னே சொல்லப் படாத விடயங்கள் வருகின்றனவே? மூன்று எதிரிகள் கொலை நடந்த போது கொழும்பில் இருந்தார்கள் என்று நீதி மன்றில் சொல்லப் பட்டுள்ளது. இதை அரச தரப்பு எப்படி இல்லை என்று நிரூபிக்க போகிறது என பார்ப்போம்.

எனது தனிப்படட அபிப்பிராயம். இங்கே பல அப்பாவிகள் மாட்டி இருக்கின்றனர். பணம் கொடுத்து தப்பியவர்களில், மாட்டியவர் சுவிஸ்குமார். தப்பிய வேறு முதலைகள் யார் என்பதே எனது கேள்வி. விசயம் பெரிதாக முன்னரே  பணம் கொடுத்து பல முக்கிய சான்றுகள்,  அழிக்கப் பட்டதாக தெரிகிறது.

ஆகவே, தீர்ப்பு வரும் வரை, அவரவர்கள் நீதிமான்கள் ஆக தேவையில்லை என்கிறேன்.

உதில, நீங்க வேற ... சுவிஸ் குமார் சொந்தமா என்று.... கொமடி பன்னிக் கொண்டு... ஐயோ, ஐயோ. ( பதியும் போது, என்னதான் நினைக்கிறீர்களோ) tw_angry:

அவர்கள் 3 பேரும் கொழும்பில் வேலை செய்தாலும் சம்பவம் நடந்த நேரம் ஊரில் தான் இருந்து உள்ளார்கள்...இவர்கள் நிச்சயமாக நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ இக் குற்றத்தில் சம்மந்தப்பட்டு உள்ளார்கள்....நீங்கள் சொன்ன மாதிரி வேற யாராவது பெரும்புள்ளிகள் சம்மந்தப்பட்டு இருந்தால் நிட்ச்யம் எப்பவோ வெளியே வந்திருக்கும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அவர்கள் 3 பேரும் கொழும்பில் வேலை செய்தாலும் சம்பவம் நடந்த நேரம் ஊரில் தான் இருந்து உள்ளார்கள்...இவர்கள் நிச்சயமாக நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ இக் குற்றத்தில் சம்மந்தப்பட்டு உள்ளார்கள்....நீங்கள் சொன்ன மாதிரி வேற யாராவது பெரும்புள்ளிகள் சம்மந்தப்பட்டு இருந்தால் நிட்ச்யம் எப்பவோ வெளியே வந்திருக்கும்.:cool:

அதை விசாரிச்சு சொல்லத்தான் அங்க மூண்டு சட்டம் படிச்ச ஜட்ஜ் ஐயா மாரை போட்டுக் கிடக்குது.

உங்க யாழில எங்கண்ட நீதிமான்கள் விசாரிக்க முன்னம் தீர்ப்பு எழுத்துவம் எண்டு அடம் பிடித்தால், அவையளை பிடிச்சு, ஓடுங்கோ எண்டு துரத்தி விடலாம். 

என்ன சொல்லுறியள் அக்கோய்?  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோகிலாம்பாள் கொலைவழக்கு , கமலம் கொலைவழக்கு மாதிரி......

இதையும் ஏதோ உண்மை தெரியாத மாதிரி இழுத்துக்கொண்டு போயினம்.


பலர் பஞ்சம் பிழைக்க இப்பிடியான கொலைகள் கட்டாயம் தேவை.:cool:

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

இதையும் ஏதோ உண்மை தெரியாத மாதிரி இழுத்துக்கொண்டு போயினம்.

இந்த வழக்கில் இளஞ்செழியனின் தாக்கம் அதிகம் இருக்குமென்று நம்பலாம். குற்றவாளிகளாக காணப்படுபவர்களுக்கு நிச்சயமாக அதிகப்பட்ச்ச தண்டனை வழங்கப்படும். 

எனது உள்மனமும் இவர்களை போட்டுத்தள்ளனும் என்று விரும்பினாலும் நாகரீகமடைந்த ஒரு சமுதாயத்தில் கண்டமேனிக்கு தண்டனைகள்  வழங்கப்படக் கூடாது என்பதற்காக வாயை மூடிக்கொண்டு இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

எனது உள்மனமும் இவர்களை போட்டுத்தள்ளனும் என்று விரும்பினாலும் நாகரீகமடைந்த ஒரு சமுதாயத்தில் கண்டமேனிக்கு தண்டனைகள்  வழங்கப்படக் கூடாது என்பதற்காக வாயை மூடிக்கொண்டு இருக்கின்றேன்.

கண்டமேனிக்கு குற்றங்கள் செய்பவர்களைத்தான் கண்டமேனிக்கு தண்டிக்கவேண்டும் என்கிறேன்.(அரபு நாடுகளைப்போல்)

ஒருவேளை சோற்றுக்காக திருடியவனை அல்ல...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

www.fairtrials.org என்பது ஒரு பிரித்தானியாவில் உள்ள தர்மத்தாபனம்.

உலகெங்கும் பணம் கொடுக்கப்பட்டு, பயமுறுத்தி அல்லது பயத்தால், வேறு ஒருவரின் குற்றத்தை சுமந்து, நீதி விசாரனையின் போது அமைதியாக இருந்து விட்டு, எல்லாம் முடித்து தீர்ப்பு எழுதிய பின் தலையில் அடித்து வேதனையுறும் பல அப்பாவிகளுக்காக போராடுகிறது.

Trails by Media எவ்வளவு பயங்கரமானது என்பதை, பிரித்தானியாவில் கூட அண்மையில் பார்த்தோம்.

பொதுவாக வழக்கில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட பின், வழக்கு குறித்த பின்புலமோ, குற்றச்சாட்டப்பட்டவர் பின்புலம் குறித்தோ மீடியா செய்தி வெளியிட முடியாது.

ஆனால் ஒருவர் நீதிமன்றில் நிறுத்த முன்னரே, மீடியாகாரர் இன்னார் தான் கொலைஞர் என்று முடிவு கட்டி பொலிசார் மீது அழுத்தம் பிரயோகித்து விசாரணைப் போக்கை மாத்தி ஒருவரை கைது செர்ய வைப்பதே Trails by Media.

சோமசெற் பகுதியில் ஜோனா ஜேற் (32) என்பவர்அதே கட்டிடத்தில் வாடகைக்கு இருந்த டச்சுக்காரரால் கொல்லப்படுகிறார். முதலில் அவரில் சந்தேகமே வரவில்லை.

மாறாக கட்டிட ஓனர் மீது பத்திரிகைகள் குற்றத்தினை சுமத்தின. குற்றமில்லா நெஞ்சு குறுகுறுக்காததால் அவர், 'போங்கடா....' என்பது போல நடக்க.... 'ஆகா இவரே தான்....' என்று எழுத அவர் கைதானார். பின் நஸ்ட ஈட்டுடன் விடுதலையானார்.

பிரித்தானிய நிலை இதுவாயின் இலங்கை, இந்தியாவில்?

ஜட்ஜ் ஐயாவுக்கே காசு கொடுத்திருக்கு. நீ கம்மெண்டு இரு.... வழக்கு நிற்காது என்று பல அப்பாவிகள் கம்பிக்கு பின்னால்....

அதனால் தான்....  Trails by Media வை விடுங்கள். தீர்ப்பு வரட்டும் என்கிறேன்.

சொல்லும் எனக்கே கல்லெறி.

Link to comment
Share on other sites

26 minutes ago, Nathamuni said:

www.fairtrials.org என்பது ஒரு பிரித்தானியாவில் உள்ள தர்மத்தாபனம்.

உலகெங்கும் பணம் கொடுக்கப்பட்டு, பயமுறுத்தி அல்லது பயத்தால், வேறு ஒருவரின் குற்றத்தை சுமந்து, நீதி விசாரனையின் போது அமைதியாக இருந்து விட்டு, எல்லாம் முடித்து தீர்ப்பு எழுதிய பின் தலையில் அடித்து வேதனையுறும் பல அப்பாவிகளுக்காக போராடுகிறது.

Trails by Media எவ்வளவு பயங்கரமானது என்பதை, பிரித்தானியாவில் கூட அண்மையில் பார்த்தோம்.

பொதுவாக வழக்கில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட பின், வழக்கு குறித்த பின்புலமோ, குற்றச்சாட்டப்பட்டவர் பின்புலம் குறித்தோ மீடியா செய்தி வெளியிட முடியாது.

ஆனால் ஒருவர் நீதிமன்றில் நிறுத்த முன்னரே, மீடியாகாரர் இன்னார் தான் கொலைஞர் என்று முடிவு கட்டி பொலிசார் மீது அழுத்தம் பிரயோகித்து விசாரணைப் போக்கை மாத்தி ஒருவரை கைது செர்ய வைப்பதே Trails by Media.

சோமசெற் பகுதியில் ஜோனா ஜேற் (32) என்பவர்அதே கட்டிடத்தில் வாடகைக்கு இருந்த டச்சுக்காரரால் கொல்லப்படுகிறார். முதலில் அவரில் சந்தேகமே வரவில்லை.

மாறாக கட்டிட ஓனர் மீது பத்திரிகைகள் குற்றத்தினை சுமத்தின. குற்றமில்லா நெஞ்சு குறுகுறுக்காததால் அவர், 'போங்கடா....' என்பது போல நடக்க.... 'ஆகா இவரே தான்....' என்று எழுத அவர் கைதானார். பின் நஸ்ட ஈட்டுடன் விடுதலையானார்.

பிரித்தானிய நிலை இதுவாயின் இலங்கை, இந்தியாவில்?

ஜட்ஜ் ஐயாவுக்கே காசு கொடுத்திருக்கு. நீ கம்மெண்டு இரு.... வழக்கு நிற்காது என்று பல அப்பாவிகள் கம்பிக்கு பின்னால்....

அதனால் தான்....  Trails by Media வை விடுங்கள். தீர்ப்பு வரட்டும் என்கிறேன்.

சொல்லும் எனக்கே கல்லெறி.

Trails by Media ஊடாக இவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று வலியுறுத்தப்படுகின்றார்கள் என்று நீங்கள் சொல்வது இங்கு பொருந்தாது.


2015 இல் இடம்பெற்ற இக் கொடூர சம்பவம் மீதான வழக்கு மீடியாக்கள் மற்றும் பொதுமக்களின் கடும் அழுத்தத்தினால் மட்டுமே இந்தளவு தூரத்துக்கு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டு இருக்கு. இல்லையெனில் தென்னிலங்கையில் அடிக்கடி இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவங்கள் எப்படி கிடப்பில் போடப்பட்டு வருகின்றனவோ அதை போலவே இது கிடப்பில் போடப்பட்டோ இன்னும் இழுத்தடிக்கப்பட்டோ இருக்கும்.
யாழ்ப்பாண மற்று மீடியாக்கள் இது தொடர்பான செய்திகளில் பாலியல் வல்லுறவு பற்றிய வர்ணணைகள் தவிந்த வேறு எந்த மிகைப்படுத்தல்களையும் செய்யவில்லை. அத்துடன் இந்த திரியில் மீடியாக்களால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் வழக்கு இடம்பெறும் போது இடம்பெறும் விசாரணைகள், சாட்சியங்கள் மற்றும் நீதிபதிகளின் கருத்துகள் மட்டுமே. வெறும் கற்பனை தகவல்கள் அல்ல.

ஒரு வாசகர் தனக்கு தரப்படும் செய்திகளில் தகவல்களில் இருக்கும் நம்பகத்தன்மையை ஒட்டித்தான் கருத்தை பதிவர். இங்கு குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் பிரதான சந்தேக நபர்கள் இக் கொடூர சம்பவத்தில் எந்தளவுக்கு சம்பந்தப்பட்டு உள்ளனர் என நீதிமன்ற விசாரணைகளில், சாட்சியங்களின் தகவல்களில், சான்றுகளின் அடிப்படையில் தீர்மானிக்க முடிகின்றது. நீதிமன்றத்துக்கு வேண்டும் என்றால் எல்லாமே நூறு வீதம் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் வாசகர்களுக்கு அல்ல. அத்துடன் வாசகர்களின் எண்ணமோ அல்லது குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அபிப்பிரயாமோ நீதிமன்றத்தின் தீர்ப்பை தீர்மானிக்க போவதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கருத்து நிழலி...இதைத் தான் நானும் சொல்கிறேன்.

On ‎12‎/‎07‎/‎2017 at 1:03 AM, ஜீவன் சிவா said:

இந்த வழக்கில் இளஞ்செழியனின் தாக்கம் அதிகம் இருக்குமென்று நம்பலாம். குற்றவாளிகளாக காணப்படுபவர்களுக்கு நிச்சயமாக அதிகப்பட்ச்ச தண்டனை வழங்கப்படும். 

எனது உள்மனமும் இவர்களை போட்டுத்தள்ளனும் என்று விரும்பினாலும் நாகரீகமடைந்த ஒரு சமுதாயத்தில் கண்டமேனிக்கு தண்டனைகள்  வழங்கப்படக் கூடாது என்பதற்காக வாயை மூடிக்கொண்டு இருக்கின்றேன்.

எனக்கு என்ன ஆச்சரியமும்,கவலை என்டால் எவ்வளவு பெடியங்கள்,போராளிகள் இருக்கிறார்கள்.இருந்தும் இவர்களை வெட்ட ஒருத்தருமில்லை என்பது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிழலி said:

Trails by Media ஊடாக இவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று வலியுறுத்தப்படுகின்றார்கள் என்று நீங்கள் சொல்வது இங்கு பொருந்தாது.


2015 இல் இடம்பெற்ற இக் கொடூர சம்பவம் மீதான வழக்கு மீடியாக்கள் மற்றும் பொதுமக்களின் கடும் அழுத்தத்தினால் மட்டுமே இந்தளவு தூரத்துக்கு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டு இருக்கு. இல்லையெனில் தென்னிலங்கையில் அடிக்கடி இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவங்கள் எப்படி கிடப்பில் போடப்பட்டு வருகின்றனவோ அதை போலவே இது கிடப்பில் போடப்பட்டோ இன்னும் இழுத்தடிக்கப்பட்டோ இருக்கும்.
யாழ்ப்பாண மற்று மீடியாக்கள் இது தொடர்பான செய்திகளில் பாலியல் வல்லுறவு பற்றிய வர்ணணைகள் தவிந்த வேறு எந்த மிகைப்படுத்தல்களையும் செய்யவில்லை. அத்துடன் இந்த திரியில் மீடியாக்களால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் வழக்கு இடம்பெறும் போது இடம்பெறும் விசாரணைகள், சாட்சியங்கள் மற்றும் நீதிபதிகளின் கருத்துகள் மட்டுமே. வெறும் கற்பனை தகவல்கள் அல்ல.

ஒரு வாசகர் தனக்கு தரப்படும் செய்திகளில் தகவல்களில் இருக்கும் நம்பகத்தன்மையை ஒட்டித்தான் கருத்தை பதிவர். இங்கு குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் பிரதான சந்தேக நபர்கள் இக் கொடூர சம்பவத்தில் எந்தளவுக்கு சம்பந்தப்பட்டு உள்ளனர் என நீதிமன்ற விசாரணைகளில், சாட்சியங்களின் தகவல்களில், சான்றுகளின் அடிப்படையில் தீர்மானிக்க முடிகின்றது. நீதிமன்றத்துக்கு வேண்டும் என்றால் எல்லாமே நூறு வீதம் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் வாசகர்களுக்கு அல்ல. அத்துடன் வாசகர்களின் எண்ணமோ அல்லது குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அபிப்பிரயாமோ நீதிமன்றத்தின் தீர்ப்பை தீர்மானிக்க போவதும் இல்லை.

 

26 minutes ago, ரதி said:

சரியான கருத்து நிழலி...இதைத் தான் நானும் சொல்கிறேன்.

உங்களுக்கு வரும் அதே ஆத்திரம்எனச்கு குறையாமல் உள்ளது.

இங்கே... விசாரணை அதிகாரியின் நடவடிக்கை, அவரது சுவிஸ் குமாருடனான தொடர்பு முக்கியத்துவம் பெறும். பெறப்போகிறது.

பணம் கைமாறியுள்ளது. விசாரணை அதிகாரியின் நடவடிக்கை குறித்த சான்றுகள் கோரப்பட்டுள்ளது. 

உண்மையான குற்றவாளிகளுடன், தப்பி ஓட முற்பட்ட சுவிஸ்குமாருக்காக வேறு அப்பாவிகள் மேல் குற்றம் சாட்டப்படவில்லை என்று நீதிமன்று சொல்லும் வரை காத்திருக்க விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

சரியான கருத்து நிழலி...இதைத் தான் நானும் சொல்கிறேன்.

எனக்கு என்ன ஆச்சரியமும்,கவலை என்டால் எவ்வளவு பெடியங்கள்,போராளிகள் இருக்கிறார்கள்.இருந்தும் இவர்களை வெட்ட ஒருத்தருமில்லை என்பது தான்

உங்கட அண்ணரிட்ட சொல்லலாமே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

உங்கட அண்ணரிட்ட சொல்லலாமே???

அவரால் வெட்டமுடியாது.வேணுமென்றால் இன்னொன்றை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த   சம்பவம்

மற்றும்   வழக்கு  சார்ந்து

அதே ஊரவன் என்ற  அடிப்படையிலும்

பொது அமைப்புக்களில் (ஊர்  சார்ந்த  உட்பட)  இருப்பவன்  என்ற  ரீதியிலும்

பலருடனும் தொடர்பிலுள்ளவன்.

சம்பவத்தை   தொடர்ந்து  அங்கே  போராட்டம்  நடந்த போதும்

அதன்தொடர்ச்சியாக  வழக்குகள் இழுத்தடிப்புக்கு  ஆளான போதும்

வழக்கு  தொடர்பில்  அனுபவமுள்ளவர்களுடன்

சட்டம் தெரிந்தவர்கள்  உட்பட பேசியபடியே  தான் இருந்தோம்

இன்றும்  பேசியபடி  தான்  இருக்கின்றோம்

அந்த  நேரத்தில்அவர்களது ஆலோசனை  எவ்வாறு  இருந்தததோ

அந்தநிலைக்கு  இன்று  வழக்கு  வந்து  நிற்கிறது

அதிலும்  நீதிபதி இளஞ்செடியனிடம் வந்திருக்கிறது

எனவே  நீதி  கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு  வலுக்கிறது

ஆனாலும்  இதில்  சம்பந்தப்பட்டவர்கள்

அல்லது தப்ப  வைக்க   உதவியவர்களும் சாதாரணமானவர்களல்ல

அவர்களும்  இலங்கையில் சட்டத்துறை  மற்றும் காவல்த்துறையில் மேல்  நிலையிலுள்ளவர்கள்

எனவே எதுவும்  தடுமாறலாம்தடம் புரளலாம்

இதற்கு  இன்னுமொரு  காரணமுண்டு

பாதிக்கப்பட்டதும்

பாவத்தை  செய்தவர்களும் எல்லோருக்கும்  உறவினர்கள்

இதனாலேயே அநேகமான  வழக்குகள் வெளியில் வருவதேயில்லை

மக்கள்  தெளிவாக  உள்ளனர்

பாவம்  செய்தவர்

உதவியவர்கள்  எவராயிருப்பினும் தண்டிக்கப்படணும்

எனது  நிலைப்பாடும் அதுவே

வி.ரி.  தமிழ் மாறன் எனது  ஒன்று  விட்ட  சகோதரன்  என்றாலும்  கூட.

பார்க்கலாம்

நீதிக்காக

முக்கியமாக நெடுஞ்செழியனின் நேர்மையான  தீர்ப்புக்காக  காத்திருப்போம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, MEERA said:

உங்கட அண்ணரிட்ட சொல்லலாமே???

ஏன் வடக்கில் அவ்வளவு வாலுகள் இருக்கும் போது கிழக்கில் இருந்து இவர் எதற்கு?
இதற்கு மேல் இந்த திரியில் தேவையில்லாமல் எழுதி இந்தத் திரியை திசை திருப்ப விரும்பவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.