Jump to content

சசிகலா ரெவியூ! ரிலீஸ்?


Recommended Posts

மிஸ்டர் கழுகு: சசிகலா ரெவியூ! ரிலீஸ்?

‘‘தமிழகத்தில் தொழில் மற்றும் உற்பத்தி வளர்ச்சியே இல்லை என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரக் கையேடு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.

‘‘ஆமாம்! ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் என்று பலரும் சூடாக அறிக்கை விட்டிருக்கிறார்களே!’’

‘‘தொழில் வளர்ச்சி மட்டுமில்லை... எதுவுமே தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஆதங்கம். மத்திய அரசோடு போராட வேண்டியிருக்கும் நீட் தேர்வு போன்ற விவகாரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். சாதாரணமாக நடக்க வேண்டிய விஷயங்கள்கூட நடப்பதில்லை. எய்ம்ஸ் இடத் தேர்வு, ஸ்மார்ட் சிட்டிக்கான நடைமுறைகள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் எனப் பல விஷயங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்’’ என்று சொல்லி பெருமூச்சு விட்ட கழுகார், ‘‘கோட்டையை  வலம்வந்தபோது, அதிகாரிகள் மட்டத்தில் உலவிய தகவல்களைச் சொல்கிறேன், கேளும்!” என்றபடி சில செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

p42d.jpg

‘‘ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் மாதத்தில் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு கோட்டையில் நடைபெறுவது வழக்கம். அரசு நலத் திட்டங்களின் அமலாக்கம், செயல்பாடுகள், குற்றச்செயல்கள் தடுப்பு, குற்றங்களைக் கண்டுபிடித்தல் போன்றவை அந்த மாநாட்டில் மாவட்ட வாரியாக ஆய்வுசெய்யப்படும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் செயல்பாடுகளை முதலமைச்சரே நேரில் ஆய்வுசெய்வார். அதனால், முதலமைச்சர் தலைமையில் மாநாடு என்றாலே கலெக்டர்களையும், போலீஸ் எஸ்.பி-க்களையும் டென்ஷன் தொற்றிக்கொள்ளும். கடைசியாக, 2013-ம் ஆண்டு டிசம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடந்தது. அதன் பிறகு, ஓ.பன்னீசெல்வம், ஜெயலலிதா, மீண்டும்  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு முறை முதல்வர்கள் மாறிவிட்டனர். ஆனால், இந்த மாநாடு கூட்டப்படவில்லை.’’

‘‘கூட்டலாமா, வேண்டாமா என்று ஜோசியம் பார்க்கிறார்கள் போல!”

‘‘முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த மனுக்கள் தீர்க்கப்பட்ட விவரம், சமூக நலத்திட்டங்கள், பட்ஜெட் அறிவிப்புகள், விதி 110-ன் கீழ் அறிவித்த திட்டங்கள், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் போன்றவை இந்த மாநாட்டில் முதல்வர் தலைமையில் மறுஆய்வு செய்யப்படும். ஒவ்வொரு கலெக்டரும் தங்கள் மாவட்டத்தின் நிலவரங்களை முதல்வரிடம் நேரடியாக எடுத்துச் சொல்வார்கள். முதல்வரும் விளக்கம் கேட்பார். பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லி, தேவைப்படும் உத்தரவுகளை முதல்வர் பிறப்பிப்பார். அதுபோலவே, போலீஸ் அதிகாரிகளும் தங்கள் மாவட்டங்களின் குற்ற நிலவரம், தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் முன்னிலையில் எடுத்துச் சொல்வார்கள். இந்த மாநாடு நடக்கிறது என்றாலே, அரசுத் திட்டங்களை விரைந்து முடிக்க கலெக்டர்கள் ஆர்வம் காட்டுவார்கள்; நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு காவல் துறை அதிகாரிகள் மெனக்கெடுவார்கள். இப்போது அந்த வேகம் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு எந்திரம் முடங்கிக் கிடப்பது போல் உள்ளது.’’

p42c.jpg‘‘உண்மைதான்.”

‘‘அதிகாரிகள் மட்டத்தில் பல வருத்தங்கள் உள்ளன. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒரு சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுகிறது என்கிறார்கள். ஜாதி அடிப்படையில் பதவிகள் கொடுக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். கலெக்டர் நியமனங்களில் பாரபட்சம் கொடிகட்டிப் பறக்கிறதாம். மூன்று ஆண்டுகளாக விழுப்புரம் கலெக்டராக இருந்த சம்பத், சேலத்துக்கு மாற்றப்பட்டார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக அவர் கலெக்டராக இருக்கிறார். தேனி, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கலெக்டராக பணிபுரிந்த பழனிச்சாமி இப்போது, திருப்பூர் மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றுகிறார். இவர், ஏழு ஆண்டுகளாக கலெக்டராக நீடிக்கிறார்.’’

‘‘பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் யாரையும் கலெக்டர் பதவியில் நீடிக்க விடுவதில்லையே?”

‘‘அந்த விதிகள், சிலர் விஷயத்தில் மட்டுமே பின்பற்றப்படுகின்றன, மற்றவர்களை இந்த விஷயத்தில் மறந்துவிட்டனர் என்கிறார்கள். கோவை கலெக்டர் ஹரிஹரன், தி.மு.க ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் ராமநாதபுரம் கலெக்டராக இருந்தார். பிறகு விருதுநகர், திண்டுக்கல் என்று அடுத்தடுத்து மாறி, இப்போது கோவையில் உள்ளார். இவர், ஒன்பது ஆண்டுகளாக கலெக்டராக இருக்கிறார். கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கலெக்டராக இருந்த டி.பி.ராஜேஷ், இப்போது கடலூர் கலெக்டர். தொடர்ச்சியாக இவரது கலெக்டர் சர்வீஸ் ஒன்பது ஆண்டுகள். தேனி கலெக்டர் வெங்கடாசலம், கரூர் கலெக்டர் கோவிந்தராஜ், ஈரோடு கலெக்டர் பிரபாகரன், மதுரை கலெக்டர் வீரராகவ ராவ், தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன், விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் என்று பல ஆண்டுகளாக கலெக்டராக இருப்பவர்கள் பற்றி பெரிய பட்டியலே கொடுக்கிறார்கள்.’’

‘‘அடடே...’’

‘‘லட்சுமி பிரியா, மரியம் பல்லவி பல்தேவ், ரோகினி, ஷில்பா பிரபாகர் சதீஷ், அருண் சுந்தர் தயாளன், கிரண் குராலா, ஆனந்த், கந்தசாமி ஆகிய 2006, 2008, 2009 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கலெக்டர் வாய்ப்பு இன்னும் தரப்படவே இல்லை. இன்னோசென்ட் திவ்யா, லலிதா, பிரவீன் நாயர், சுபோத்குமார், ஆர்.கண்ணன், ராஷ்மி சித்தார்த் ஷகடே ஆகிய 2010 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.’’

‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கலெக்டர் வாய்ப்பு நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டுமா?’’

‘‘ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று பணி ஒதுக்கப்படும் மாநிலங்களில், முதலில் அவர்களுக்கு உதவி கலெக்டர் (பயிற்சி) என்று பணி வழங்கப்படும். அதன் பின்னர், உதவி கலெக்டர் பணி ஒதுக்குவார்கள். ஆறு ஆண்டு சர்வீஸுக்குப் பிறகு, அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பொறுப்பு தரப்படும். அந்த நடைமுறை இப்போது பின்பற்றப்படாமல், தங்களுக்கு வளைந்து கொடுக்கும் அதிகாரிகள், அல்லது ஜாதி அடிப்படையில் போஸ்டிங் போடுவதாக அதிகாரிகள் மத்தியில் குமுறல் இருக்கிறது. இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கலெக்டர் வாய்ப்புத் தரப்படும்போது, அவர்களின் செயல்பாடுகள் துடிப்புடன் இருக்கும். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலைமை, கோட்டை வட்டார அதிகாரிகளைக் கொந்தளிக்க வைத்துள்ளது.”

p42b.jpg

‘‘உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?”

‘‘சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மே 3-ம் தேதி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரெவியூ பெட்டிஷன்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை ஜூலை முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுதான், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தது. இதே அமர்வுதான், மறுசீராய்வு மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த இரண்டு நீதிபதிகளில் ஒருவரான பினாகி சந்திர கோஷ் கடந்த மே 27-ம் தேதி ஓய்வுபெற்றுவிட்டார். அதனால், இந்த அமர்வுக்கு வேறொரு நீதிபதியை நியமிக்க வேண்டும். அவர் யார் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் இன்னும் முடிவு செய்யவில்லையாம். அது முடிவு செய்யப்பட்டதும், மறுசீராய்வு மனு விசாரணைக்கு வரும்.’’

‘‘அப்படியா?’’

‘‘நடராசன் இந்த விசாரணைக்காகவே, லண்டன் பயணத்தை ஒத்திப் போட்டுக்கொண்டு வருகிறார் என்கிறார்கள். சசிகலாவின் மறு சீராய்வு மனுவில் முடிவு தெரிந்துவிட்டால், அதைப்பொறுத்து அவருடைய லண்டன் பயணம் திட்டமிடப்படும்.”

‘‘நடராசனின் லண்டன் பயணம் எதற்காகவாம்?”

‘‘எல்லாம் உடல்நிலைக் கோளாறுதான். அவற்றைச் சரி செய்ய சிகிச்சைக்காக அவர் லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளார். கடந்த மாதமே நடந்திருக்க வேண்டிய பயணம் அது. ஆனால், ‘சசிகலாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துவிட்டுத்தான், மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவேன்’ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாராம் அவர்.”

‘‘விடுதலை பெறுவது அவ்வளவு எளிய விஷயமா?” என்றோம்.

சிரித்தபடி எழுந்த கழுகார், ‘‘ஏதாவது புரோக்கரிடம் ஏமாற வேண்டியதுதான்” என்றபடியே பறந்தார்.

படம்: சு.குமரேசன்


p42.jpg

பொறுப்பு டி.ஜி.பி ஏன்?

மிழகக் காவல்துறையின் டி.ஜி.பி-யாக இருந்த அசோக்குமார், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பின்னர், அரசு நினைத்திருந்தால்,    டி.ஜி.பி நிலையில் உள்ள அர்ச்சனா ராமசுந்தரம், கே.ராதாகிருஷ்ணன், கே.பி.மகேந்திரன், எஸ்.ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோரில் ஒருவரை கடந்த செப்டம்பர் மாதமே புதிய டி.ஜி.பி-யாக நியமித்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், பிரகாஷ்சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அந்த நியமனம் பெற்ற அதிகாரிக்கு மேலும் இரு ஆண்டுகள் பணிக்காலம் கிடைத்திருக்கும். அவ்வாறு செய்யாமல், ராஜேந்திரனை உளவுப் பிரிவின் தலைமை இயக்குநராக நியமித்து, சட்டம் - ஒழுங்குப் பிரிவு தலைமை இயக்குநர் பதவி, அவருக்குக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அவர், இந்த மாதம் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், அவருக்கு இன்னும் மூன்று மாதங்கள் பணிநீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்குப் பின்னால், தந்திரங்கள் இருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.

தற்போதுள்ள சூழ்நிலையில், மகேந்திரனுக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், அவருக்கு மட்டுமே 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணிக்காலம் உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் பணிகளுக்கான காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட அவரது பணிகளை, தேர்தல் ஆணையம் பாராட்டியது. ஆனால், அவர் தங்களின் விருப்பம் அறிந்து செயல்படமாட்டார் என்பதாலேயே, தமிழக அரசு தயங்குகிறது.

தற்போது கூடுதல் டி.ஜி.பி-யாக இருக்கும் அதிகாரிகளில் சிலருக்கு அடுத்த ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கி, அவர்களில் தங்களுக்கு வசதியான ஒருவரை புதிய டி.ஜி.பி-யாக நியமிக்க ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கு வசதியாகவே இந்தப் பதவி மேலும் மூன்று மாதங்கள் காலியாக வைக்கப்படுகிறது என்ற பேச்சு டி.ஜி.பி அலுவலகத்தில் உலவுகிறது.


p42a.jpg

சசி குடும்பத்தைப் புறக்கணித்த சிவக்குமார்!

சிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மருமகன் டாக்டர் சிவக்குமார். ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புவரை அவரின் பெர்சனல் டாக்டராக இருந்தவர். ஆனால், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும்’ எனக் கோரிக்கைகளும் வழக்கும் வந்தபிறகு, பீதியில் எங்கும் தலைகாட்டாமல் இருக்கிறார் அவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு 50-வது பிறந்த நாள். கோவளத்தில் ஒரு ரிசார்ட்ஸில் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார் சிவக்குமார். நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் தவிர யாரையும் அழைக்கவில்லை. முக்கியமாக சசிகலா குடும்பத்தில் யாருக்குமே அழைப்பு இல்லை.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.