Sign in to follow this  
Followers 0
poet

நதி வட்டம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

2 posts in this topic

முன்புபோல யாழிணையத்தில் கவிதை மற்றும் பதிவுகளை பிரசுரிப்பதே கருத்துக்கள் விவாதங்களில் இருந்து கற்றுக்கொள்ளவே, அந்த நாட்கள் சுவடுகளுமின்றி மலையேறிவிட்டது சோகம் ? எல்லோரும்  மெல்ல மெல்ல விடுபட்டபடிக்கு. இது இன்னும் பிரசுரிக்கப் படாத கவிதை. 

.

என்னுள் காதலாய் நிறைகிறது. 
.
அக்கினி நட்சத்திர வெய்யிலை வீழ்த்திய தென்றல் மழை என்னை அன்புடன் தொட்டு உசுப்பிவிட்டது. சிலநாட்கள் சன்னலின் வெளியே அங்குமிங்குமாக ஊஞ்சல் ஆடி பார்த்த வேப்பமரம் ”டேய் கபோதி நான் பூப்படைந்துவிட்டேண்டா” என்றபடி சன்னல்வரை வந்து வெண் முத்துச் சாரமாடும் தன் பசிய கூந்தலை அசைத்துக் காட்டியது. எல்லாவற்றையும் மிஞ்சி இப்பகூட என்னை சுற்றிக் குயில்கள் பாடுகின்றன. 

.

எனது குட்டித்தோழியும் பத்திரிகையாளரும் தமிழ் சிங்கள மொழிபெயர்பாளருமான அனு சிவலிங்கம் நுகேகொடயில் சிங்கள மாணவர்களுக்காக சனிக்கிழமைத் தமிழ் வகுப்புகள் நடத்தி வருகிறார். பொறியியல் விரிவுரையாளராகப் பணிபுரியும் சிங்கள பெண் ஒருவர் தன்னிடம் தமிழ் கற்பது அனு சிவலிங்கத்தை ஆச்சரியப் படவைத்ததாம். அதுபற்றிக் கேட்டபோது அந்த மாணவி “ஜெயபாலனின் கவிதைகளை வாசிபதற்க்காகவும் மொழிபெய்ர்பதற்காவும்” என பதில் சொன்னாராம். அந்தப் பதில் என்னுடைய ஆர்பாட்டமற்ற இருப்புக்கும் எழுத்துக்கும் பொருள் சேர்த்தது.
.
.
தோழர்களின் அன்பும் தோழியரின் கருணையும் என் முறுக்கேறிய மீசை கருமையாகிற அளவுக்கு உயர்ந்தது. காதலும் வீரமும் அமைகிறபோது கவிதையாக நொதித்து தேன்சிந்தும் மனசு எனக்கு.
.
இரண்டு கவிதைகள் எழுதினேன். இன்னும் பிரசுரமாகாத ஒரு கவிதையை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.
.


நதி வட்டம்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
கடற்கொள்ளை அடித்த முகில்
காமத்தில் மலையேற
குறுஞ்சிப்பூ மடிமீது 
பெயல்நீராய் நெழிந்தேன் 
. 
யாருமற்ற மலைக்காட்டில்
தீயாக பூத்து
செம்பவளமாய் உதிரும்
பலாச மரங்களே வியக்க 
பகல் ஒளியில் சிலம்பமாடி 
வண்ணங்களாய் இறுமாந்தேன்.
. 
பசிய கிழை உடைத்துப்
பசியாறும் யானை மந்தை நாண
மீண்டும் கிழைகளாய் நிறைந்து
குருத்தெறிந்து சிரிக்கும் 
பச்சை மூங்கில்களின் கீழே
ஈழவரை நினைத்தபடி
மலைகளைக் கடந்துவந்தேன்.
. 
வழிநீள வழிநீள
பாய்ந்தும் விழுந்தும் 
தழுவிய தேவதையர்
மார்பால் உரைத்துவிட்ட 
கொச்சி மஞ்சள் கமழ
நெடுந்தூரம் வந்துவிட்டேன்.
.
காற்றில் இப்ப கரிக்கிறது உப்பு.
கமழ்கிறது தாழம்பூ
இனிக்குது கடற்பறவை
இசைக்கிற நாடோடிப் பாடல்
.
சந்தனமாய் தேய்கிற வாழ்வில்
எஞ்சிய வானவில் நாட்கள் 
போதை தருகிறது.
என்றாலும் 
கடல் புகுந்த ஆறு, முகிலாகி
மீண்டும் மலையேறும் 
நதி வட்டப் பெரு வாழ்வில் 
முதுமை எது? சாவு எது?
,
இன்னும் நீராட வாராத 
வனதேவதைக்காக
இறுதிவரை ஆறாய் இருப்பேன்.

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

Posted (edited)

 அன்னிய

 உணர்வு. 

Edited by poet

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0