Jump to content

குழப்பங்களுக்கு காரணம் யார்?


Recommended Posts

குழப்பங்களுக்கு காரணம் யார்?

01-82015bf462b1b5b9784de17715c375a40906dcf8.jpg

 

கடந்த பெப்­ர­வரி மாதம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த போது, கூறிய விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் இலக்குகளை அடைவதற்கு ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும், தமிழர் தரப்பில் பிளவு காணப்படுகிறது. எனவே ஒற்றுமை முக்கியமானது” என்று திரும்பத் திரும்பக் கூறியிருந்தார்.

வடக்கு மாகாண  முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­படக் கூடிய பிள­வுகள், இரா.சம்­பந்­தனின் எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்கும் கூட ஆபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும். அத்­த­கை­ய­தொரு நிலையில் மஹிந்த ராஜபக் ஷ எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மாறும் நிலையும் ஏற்­ப­டலாம். அது, கொழும்பின் தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கும், அதனைத் தாங்கிப் பிடித்துக் கொண்­டி­ருக்கும் நாடு­க­ளுக்கும் பேரி­டி­யாக அமையும் 

 

வடக்கு மாகா­ண­ச­பையில் அண்­மையில் குழப்­பங்கள் ஏற்­பட்ட போது, அதனைத் தீர்த்து வைப்­பதில் இந்­தியா, அமெ­ரிக்கா, மற்றும் மேற்­கு­லக தூது­வர்­களும் ஆர்வம் காட்­டி­ய­தாக தக­வல்கள் வெளி­யா­கின. இந்த விவ­கா­ரத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­யிட வேண்டும் என்று அவர்கள் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. 

அதற்குக் காரணம், இந்தக் குழப்­பங்கள் இலங்­கையின் தேசிய அர­சி­ய­லிலும் பிராந்­திய அர­சி­ய­லிலும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தக் கூடும் என்ற அச்சம் அவர்­க­ளிடம் காணப்­பட்­டது. மேற்­கு­லக மற்றும் இந்­திய ஆசீர்­வா­தத்­துடன் கொழும்பில் நிகழ்த்­தப்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் அனு­கூ­லங்­களை இந்தக் குழப்பம், கெடுத்து விடக் கூடும் என்றும் அவர்கள் கரு­தினர். 

அதனால் தான், இரா.சம்­பந்தன் தலை­யிட்டு இந்தக் குழப்­பங்­களை தீர்க்க வேண்டும் என்று அவர்­களால் வலி­யு­றுத்­தப்­பட்­ட­தா­கவும், நம்­பப்­ப­டு­கி­றது. இந்த நிலையில், வடக்கு மாகா­ண­ச­பையில் அண்­மையில் ஏற்­பட்ட அர­சியல் குழப்­பங்­க­ளுக்கு இந்­தி­யாவே பின்­னணிக் காரணம் என்று சிலர் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தனர் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது. 

தொலைக்­காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்­கேற்­றி­ருந்த அர­ச­றி­வியல் துறை விரி­வு­ரை­யாளர் ஒருவர், இந்­தி­யாவின் தேவைக்­கேற்­பவே, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை வெளி­யேற்­று­வ­தற்கு தமிழரசுக் கட்­சி­யினர் முயற்­சிப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

இது­போன்ற குற்­றச்­சாட்டு பல­ராலும் கூறப்­ப­டு­கி­றது. இந்­தியா மீது மாத்­தி­ர­மன்றி, வெளி­நா­டுகள் என்று பொது­வா­கவும் சிலரால் குற்­றச்­சாட்­டுகள் கூறப்­ப­டு­கின்­றன. நீண்­ட­கா­ல­மா­கவே இலங்கை விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் தலை­யீ­டுகள் இருந்து வந்­தி­ருக்­கின்­றன. பிராந்­திய வல்­ல­ர­சான இந்­தியா எப்­போ­துமே இலங்­கையை தமது கைப்­பொம்­மை­யாகப் பயன்­ப­டுத்திக் கொள்­ளவே முயற்­சித்து வந்­துள்­ளது. 

எனவே வடக்கு மாகாண முத­ல­மைச்­சரை பத­வியில் இருந்து அகற்றும் விவ­கா­ரத்தில் இந்­தியா தொடர்­பு­பட்­டி­ருக்­காது என்று யாராலும் உறு­தி­யாகக் கூற முடி­யாது. அதற்­கான வாய்ப்­பு­களை நிரா­க­ரிக்­கவும் முடி­யாது.

அதே­வேளை, இந்­தியா அல்­லது வெளி­நா­டுகள் என்று கூறப்­படும் மேற்­கு­லகம் மீது இத்­த­கைய குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­ப­தற்கு முன்னர், அதற்குப் போதிய சான்­று­க­ளையும் முன்­வைப்­பது அவ­சியம். எழுந்­த­மா­ன­மாக குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­பது அபத்­த­மா­னது. அதை­விட ஆபத்­தா­னதும் கூட.

ஏனென்றால் வடக்கு மாகா­ண­ச­பையின் உரு­வாக்கம் மற்றும் அதன் செயற்­பா­டு­களில் இந்­தி­யாவும் ஏனைய மேற்­கு­லக நாடு­களும் கணி­ச­மான பங்­க­ளிப்பை செய்து வந்­தி­ருக்­கின்­றன என்­பதை யாராலும் மறுக்க முடி­யாது. 1987ஆம் ஆண்டு கையெ­ழுத்­தி­டப்­பட்ட இந்­திய- இலங்கை அமைதி உடன்­பாட்டின் மூலம் தான் இலங்­கைக்கு மாகா­ண­சபை முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. 

2013ஆம் ஆண்டு வடக்கு மாகா­ண­ச­பைக்குத் தேர்தல் நடத்­தப்­பட்­டதும் கூட இந்­தி­யாவின் நெருக்­கு­தலின் பேரில் தான் என்­பதை மறந்து விட முடி­யாது. அதற்குப் பின்னர், மாகா­ண­ச­பைக்­கான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்து, வடக்கு மாகா­ண­ச­பையைச் செயற்­பட வைப்­பதில் இந்­தியா கணி­ச­மான பங்கை ஆற்­றி­யி­ருந்­தது.  

அவ்­வா­றான இந்­தி­யா­வுக்கு வடக்கு மாகா­ண­சபை விவ­கா­ரத்தில் ஒரு­போதும் ஈடு­பாடு இருந்­தி­ருக்­காது என்று யாரும் இல­கு­வாக நம்­பி­விடப் போவ­தில்லை. இருந்­தாலும் வடக்கு மாகா­ண­ச­பையின் செயற்­பா­டு­களில் இந்­தியா தலை­யீடு செய்­வ­தற்கு சாத்­தி­யங்கள் உள்­ளதா- அதற்­கான கார­ணங்கள் என்­ன­வாக இருக்கும் என்­பது ஆரா­யப்­பட வேண்­டிய விட­யங்­க­ளாகும். 

இந்­தி­யாவின் கடந்த கால சில செயற்­பா­டு­களால், எப்­போ­துமே வடக்கில் உள்ள தமிழ் மக்­களில் அநே­க­மா­னோ­ருக்கு இந்­தியா பற்­றிய ஒரு வேறு­பட்ட மனோ­நிலை இருப்­பது உண்மை. அதனை வெளிப்­ப­டை­யாகச் சொல்­வ­தானால், இந்­தியா பற்­றிய அச்சம் என்று கூடக் கூறலாம்.

இலங்­கையில் ஆயு­தப்­போ­ராட்டம் முளை­விட்ட போது இந்­தியா அதனைத் தமக்குச் சார்­பான நிலை­யாக மாற்றிக் கொள்­வ­தற்­காகத் தலை­யிட்­டது. ஆயு­தங்­க­ளையும் பயற்­சி­க­ளையும் கொடுத்து தமிழ்ப் போராளி அமைப்­பு­களை அர­வ­ணைத்­தது. அது, கொழும்பைத் தனது பிடிக்குள் வைத்­தி­ருப்­ப­தற்­காக இந்­தியா மேற்­கொண்ட நகர்வே தவிர, தமிழ் மக்­களின் மீது இந்­தி­யா­வுக்கு இருந்த அக்­கறை என்று எடுத்துக் கொள்ள முடி­யாது. 

எனினும், இந்­தி­யாவின் பிடியில் விடு­தலைப் புலிகள் இயக்கம் சிக்கிக் கொள்­ள­வில்லை. இலங்­கையில் நிலை­கொண்­டி­ருந்த இந்­தி­யப்­ப­டைகள் தோல்­வி­யுடன் திரும்பிச் செல்­வ­தற்கும் புலிகள் கார­ணி­யாக இருந்­தனர். ராஜீவ்­காந்தி கொலையும் இந்­தி­யா­வுக்கு கசப்­பான அனு­ப­வத்தைக் கொடுத்­தி­ருந்­தது.

அதனால், இந்­தியா ஒவ்­வொரு கட்­டத்­திலும் தலை­யீ­டு­களைச் செய்ய முனைந்­தது. விடு­தலைப் புலி­களின் உயர்­மட்டம் வரைக்கும் இந்­தி­யாவின் ஊடு­ருவல் இருந்­தது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி புலி­களின் தலைவர் பிர­பா­க­ரன் கொல்­லப்­படும் வரையில் இந்­தியா மறை­மு­க­மாகத் தலை­யிட்டுக் கொண்­டி­ருந்­தது.

இவ்­வாறு ஒவ்­வொரு கட்­டத்­திலும், இந்­தியா தலை­யீ­டு­களைச் செய்து, பல சம­யங்­களில் தமிழ் மக்­க­ளுக்கு வேண்­டாத விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­ய­தா­னது இந்­தியா மீதான இந்த அச்­சத்­துக்கு காரணம். எதை­யெ­டுத்­தாலும் றோ என்று கூறு­வது, யார் மீது சந்­தேகம் வந்­தாலும் றோவின் ஆள் என்று விழிப்­பது வடக்கில் உள்ள பல­ருக்கும் ஒரு நோயா­கவே மாறி விட்­டது. 

 இது சிஐ­ஏக்கும் பொருத்தக் கூடி­யது தான், இவ்­வா­றான பட்­டப்­பெ­யர்­க­ளுடன் வடக்கு கிழக்கில் பலர் உலா­வு­கின்­றனர். அவர்கள் உண்­மை­யி­லேயே அப்­ப­டிப்­பட்­ட­வர்­களா- என்­பது யாருக்கும் தெரி­யாது. பெரும்­பாலும் றோ அல்­லது சிஐஏ தமக்­கான புல­னாய்­வா­ளர்­க­ளாக இப்­படி அறி­யப்­பட்­ட­வர்­களை வைத்­தி­ருக்க விரும்­பாது என்று மட்டும் துணிந்து கூறலாம். எப்­போதும் புல­னாய்வு அமைப்­புகள் தமது முக­வர்­களை அடை­யாளம் காட்­டு­வதோ அவர்கள் அடை­யாளம் காட்­டப்­ப­டு­வ­தையோ விரும்­பாது. 

உள்­நாட்டுப் புல­னாய்­வா­ளர்­களை எல்லாம் சிஐடி என்று பொது­வாகச் சொல்லும் பழக்கம் நம்­மி­டையே இருப்­பது போலத் தான், வெளி­நாட்டுத் தொடர்பு இருக்­கலாம் என்று சந்­தே­கிப்­ப­வர்­க­ளையும், றோ அல்­லது சிஐஏ என்று விழிக்கும் பழக்கம் வடக்கில் இருக்­கி­றது.

இத்­த­கைய மனோ­பா­வத்தில் இருந்து தான் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில் இந்­தியா மற்றும் மேற்­கு­லகம் பற்­றிய சந்­தே­கங்கள் எழுந்­தி­ருக்கக் கூடும். வடக்கில் தமிழ்த் தேசி­ய­வா­தத்­துக்கு முத­ல­மைச்சர் தலைமை தாங்க முற்­ப­டு­வதை இந்­தியா ஏற்றுக் கொள்­ள­வில்லை என்றும் அதனால் தான் அவரை முத­ல­மைச்சர் பத­வியில் இருந்து நீக்க இந்­தியா முற்­ப­டு­வ­தா­கவும், ஒரு வாதம் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. 

இலங்­கையில் தமிழ்த் தேசி­ய­வாதம் பலம் பெறு­வ­தையோ, தனி­நாட்டுக் கோரிக்கை வலுப்­பெ­று­வ­தையோ இந்­தியா ஒரு­போதும் விரும்­பாது என்­பது உண்­மையே. அதனை தனது நாட்­டுக்­கான அச்­சு­றுத்­த­லா­கவும் இந்­தியா பார்க்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. அதை­விட. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தற்­போ­தைய தலை­மைத்­துவம் இந்­தி­யாவின் கருத்­துக்­க­ளுக்குச் செவி­சாய்க்­கத்­தக்க ஒன்­றாக இருக்­கி­றது என்­பதும் உண்­மையே. 

ஆனால், முத­ல­மைச்சர் விக­னேஸ்­வ­ர­னையும் அத்­த­கைய ஒரு­வ­ராக மாற்­று­வ­தற்கு இந்­தியா முனைந்­தி­ருக்­குமே தவிர, அவரை இந்தக் களத்தில் இருந்து அகற்­று­வதை புத்­தி­சா­லித்­த­ன­மான நகர்­வாக கரு­தாது. விடு­தலைப் புலிகள் இயக்கம் பலம்­பெற்ற போது, அதன் தலை­மையை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்­கவே இந்­தியா விரும்­பி­யது, அது முடி­யாமல் போன கட்­டத்தில் தான், அதனை அழிப்­ப­தற்கு இந்­தியா கங்­கணம் கட்­டி­யது. 

அது­போ­லவே, விக்­னேஸ்­வரன் போன்ற பல­மான ஒரு தலைவர் எழுச்சி பெறும் போது அவரைத் தனது பக்கம் இழுப்­ப­தற்கே இந்­தியா முயன்­றி­ருக்கும். அவ்­வாறு இந்­தியா முயன்­ற­தா­கவோ, அதற்கு விக்­னேஸ்­வரன் இணங்­காமல் போன­தா­கவோ எந்த தக­வலும் இல்­லாத நிலையில், அவரை அகற்­று­வதில் இந்­தியா அக்­கறை செலுத்­து­வ­தாக முன்­வைக்­கப்­படும் வாதங்­களின் உண்­மைத்­தன்மை கேள்­விக்­குள்­ளா­கி­றது.

தற்­போ­தைய சூழலில் விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்சர் பத­வியில் இருந்து வெளி­யேற்­று­வதால் மாத்­திரம் அவரை தமிழ்த் தேசிய அர­சியல் அரங்கில் இருந்து அகற்றி விட முடியும் என்று இந்­தியா கணக்குப் போட்­டி­ருக்கும் என்று, எவ­ரேனும் இந்­தி­யாவை குறைத்து மதிப்­பிடக் கூடாது.

அத்­த­கைய நகர்வு விக்­னேஸ்­வ­ரனை இன்னும் பலப்­ப­டுத்தும் என்­பதை மாத்­தி­ர­மன்றி, அது தொட­ரான பல விளை­வு­க­ளுக்கும் கார­ண­மாக அமையும் என்­பதை இந்­தி­யாவோ அல்­லது வேறு எந்த நாடோ சுல­ப­மா­கவே கணிப்­பிட்­டி­ருக்கும். தற்­போ­தைய அர­சாங்கம் இந்­தி­யா­வுக்கும் மேற்­கு­ல­கிற்கும் சாத­க­மா­னது. அதனைப் பாது­காப்­பது அவர்­க­ளுக்கு முக்­கி­ய­மா­னது.  

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­படக் கூடிய பிள­வுகள், இரா.சம்­பந்­தனின் எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்கும், கூட ஆபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும். அத்­த­கை­ய­தொரு நிலையில் மஹிந்த ராஜபக் ஷள எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மாறும் நிலையும் ஏற்­ப­டலாம். அது,. கொழும்பின் தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கும், அதனைத் தாங்கிப் பிடித்துக் கொண்­டி­ருக்கும் நாடு­க­ளுக்கும் பேரி­டி­யாக அமையும். 

இதனை இந்­தி­யாவோ மேற்­கு­லக நாடு­களோ கணித்­தி­ருக்­காது என்று எவ­ரேனும் கரு­தினால் அது அப்­பா­வித்­த­ன­மா­னது. முத­ல­மைச்சர் பத­வியில் இருந்து விக்­னேஸ்­வ­ரனை வெளி­யேற்­று­வ­தென்­பது உள்­ளக அல்­லது வெளி­யக நிகழ்ச்சி நிர­லாக இருக்­கலாம். ஆனாலும் அது, இந்­தியா போன்ற நாடு­களின் விருப்­பத்தை பூர்த்தி செய்­வ­தற்­கான நகர்­வாக இருக்­குமா என்­பது சந்­தேகம். 

ஏனென்றால், இதனை விட வேறு வழி­களில் முத­ல­மைச்­சரை தனது கைக்குள் வைத்­தி­ருப்­ப­தையே இந்­தியா போன்ற நாடுகள் பாது­காப்­பா­ன­தாக கருதும். கடந்த பெப்­ர­வரி மாதம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த போது, கூறிய விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் இலக்குகளை அடைவதற்கு ஒற்றுமை மிகவும் அவசியம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேறும், தமிழர் தரப்பில் பிளவு காணப்படுகிறது. எனவே ஒற்றுமை முக்கியமானது” என்று திரும்பத் திரும்பக் கூறியிருந்தார். இந்தநிலையில், இந்தியா அல்லது மேற்குலகம் தொடர்பாக, நம்பகம் இல்லாத சான்றுகள் இல்லாத வெறும் அனுமானங்களின் அடிப்படையில் செயலாற்ற முனைந்தால், அதன் பாதகமான விளைவுகளையும் தமிழ் மக்களே எதிர்கொள்ள நேரிடும். 

இந்தியாவும், மேற்குலகமும், தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதில் முக்கியமான சக்திகள். இந்த இரண்டையும் புறமொதுக்கி விட்டு தீர்வு ஒன்றை நோக்கி நகர முடியாது. இந்தநிலையில் அற்ப அரசியல் நலன்களுக்காக உலக வல்லரசுகளை பகைத்துக் கொள்ளுகின்ற நிலைக்குத் தமிழர்களை தள்ளிச் செல்வது புத்திசாலித்தனமான நகர்வாக இருக்காது. 

-ஹரிகரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-25#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.