Jump to content

மக்கள்தொகையில் சீனாவை வீழ்த்தப்போகும் இந்தியா! ஐநா கணிப்பு


Recommended Posts

மக்கள்தொகையில் சீனாவை வீழ்த்தப்போகும் இந்தியா! ஐநா கணிப்பு

 

'2024-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை, சீனாவின் மக்கள்தொகையைவிட அதிகமாக இருக்கும்' என்று  ஐநா தெரிவித்துள்ளது.

china india
 

உலக நாடுகளின் மக்கள்தொகை குறித்த அறிக்கை ஒன்றை ஐநா-வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான பிரிவு சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிக்கையில் பின்வரும் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. சீனாவின் மக்கள்தொகை 1.41 பில்லியன்; இந்தியாவின் மக்கள் தொகை 1.34 பில்லியன். இந்த இரண்டு நாடுகளும்தான் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள். உலகின் மொத்த மக்கள் தொகையில், 19 சதவிகிதம் சீனாவும், 18 சதவிகிதம் இந்தியாவும்  ஆட்கொண்டுள்ளது. சீனாவின் மக்கள்தொகையைப் பொறுத்தவரை
2050-ம் ஆண்டு வரை பெரிய மாற்றம் இருக்காது. நிலையான வளர்ச்சியைக்கொண்டிருக்கும். 2050-ம் ஆண்டுக்குப் பிறகு, அந்த நாட்டில் மக்கள்தொகை குறையத் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், தற்போது 1.34 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, இன்னும் ஏழு ஆண்டுகளில் 1.50 பில்லியன் ஆகுமாம். 2050-ல் இந்தியாவின் மக்கள்தொகை 1.66 பில்லியனாக இருக்குமாம். எனவே, ஐநா கணிப்பின்படி 2050 -ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவைவிட அதிகமாக இருக்கும்.

http://www.vikatan.com/news/world/93181-un-world-population-prospects-india-will-beat-china-soon.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.