Jump to content

காணாமற்போனோர் செயலகம் வன்னியிலும் அமையவேண்டும் சபையில் நேற்று சம்பந்தன் கோரிக்கை


Recommended Posts

காணா­மற்­போ­னோர் செய­ல­கம் வன்­னி­யி­லும் அமை­ய­வேண்­டும்

சபை­யில் நேற்று சம்­பந்­தன் கோரிக்கை

 
காணா­மற்­போ­னோர் செய­ல­கம் வன்­னி­யி­லும் அமை­ய­வேண்­டும்
 

காணா­மல்­போ­ன­வர்­க­ளைக் கண்­ட­றி­வ­தற்­கான அலு­வ­ல­கம் கால­தா­ம­த­மா­க அமைக்­கப்­பட்­டா­லும் அதன் செயற்­பா­டு­களை அரசு துரி­ தப்­ப­டுத்­த­வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தன்.

அத்­து­டன், காணா­மல்­போ­ன­வர்­களை கண்­ட­றி­வ­தற்­கான தலை­மை­ய­கம் கொழும்­பில் அமைக்­கப்­பட்­டா­லும் வடக்­கி­லுள்­ள­வர்­கள் முறைப்­பா­டு­க­ளைச் செய்ய வன்­னி­யி­லும் ஓர் அலு­வ­ல­கம் அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என­வும் அவர் கோரிக்கை விடுத்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுப் புதன்­கி­ழமை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வால் முன்­வைக்­கப்­பட்ட காணா­மல்­போ­ன­வர்­கள் பற்­றிய அலு­வ­ல­கச் சட்­ட­வ­ரை­வின் இரண்­டாம் மதீப்­பீடு மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

காணா­மல்­போ­ன­வர்­க­ளைக் கண்­ட­வ­றி­வ­தற்­கான அலு­வ­ல­கம் அமைப்­ப­தா­கப் பன்­னாட்­டி­டம் வழங்­கிய வாக்­கு­றுதி இது­வரை நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. இதனை அரசு மேலும் கால­தா­ம­தப்­ப­டுத்­தாது உட­ன­டி­யாக செயற்­ப­டுத்­த­வேண்­டும்.

ஒரு­வர் காணா­மல் ஆக்­கப்­ப­டு­வது என்­பது பெரும் குற்­ற­மா­கும். அது­மட்­டு­மல்­லாது, அது கொலைக் குற்­றத்­துக்­குச் சமன். கொலைக் குற்­ற­வா­ளிக்கு உச்­ச­பட்ச தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்­டும். வடக்­கு-­கி­ழக்­கில் 20 ஆயி­ரத்­துக்கு அதி­க­மா­ன­வர்­கள் காணா­மல்­போ­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.

இரா­ணுவ அதி­கா­ரி­கள் 5 ஆயி­ரம் பேருக்கு அதி­க­மா­ன­வர்­கள் காணா­மல்­போ­யுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கின்­றது. காணா­மல்­போன பொது­மக்­கள் தொடர்­பில் விசா­ரணை செய்­வ­து­போன்று இரா­ணுவ அதி­கா­ரி­கள் குறித்­தும் விசா­ரணை செய்­ய­வேண்­டும்.

நாங்­கள் இந்த அலு­வ­ல­கத்தை நிறு­வு­வது தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் ஒத்­தி­வைப்­பு­வேளை விவா­தங்­க­ளில் பேசி­யுள்­ளோம். அத்­து­டன், அரச தலை­வர், தலைமை அமைச்­சர், அய­லு­றவு அமைச்­சர் என அர­சின் உயர்­மட்­டங்­க­ளில் நாங்­கள் பேசி பேசி ஏமாற்­ற­ம­டைந்­துள்­ளோம். இந்த விட­யத்­தில் பெரும் கால­தா­ம­தம் ஏற்­பட்­டுள்­ளது. எனவே, மென்­மே­லும் தாம­திக்­காது உட­ன­டி­யாக செயற்­ப­டுத்­த­வேண்­டும்.

அலு­வ­ல­கத்­தின் தலை­மை­ய­கம் கொழும்­பில் நிறு­வப்­ப­டும் என சட்­ட­மூ­லத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகா­ணத்­தி­லுள்­ள­வர்­கள் முறைப்­பா­டு­க­ளைச் செய்­வ­தற்கு இல­கு­வாக வன்­னி­யில் ஓர் அலு­வ­ல­கம் அமைக்­கப்­ப­ட­வேண்­டும்.

அத்­து­டன், சட்­டம் எப்­போது எந்த திக­தி­யி­லி­ருந்து அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வது குறித்து எது­வும் சட்­டத்­தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. இந்­தச் சட்­டத்­துக்­குத் தேவை­யான அதி­கா­ரம் உள்­ளது.

அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்­கள் அனு­ப­வம் உள்­ள­வர்­க­ளாக இருக்­க­வேண்­டும். நீதி­மன்­றத்­தின் அழைப்­பா­ணை­யைப் பெற்று எந்­த­வொரு நிலைக்­கும் சென்று ஆள்­களை கண்­ட­றி­ய­வேண்­டும். புதைக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டும் இடங்­களை அகழ்­வ­தற்­கான அதி­கா­ரங்­க­ளும் வழங்­கப்­ப­ட­வேண்­டும்.

இதன் ஊடா­கப் பாதிக்­கப்­பட்ட மக்­கள் தீர்­வைப் பெற்­றுக் கொடுக்­க­வேண்­டும் என்­பதே எமது நோக்­கம். என்­றா­லும், நாங்­கள் அர­சுக்கு எந்த அழுத்­தங்­க­ளும் பிர­யோ­கிப்­ப­தில்­லை­யென எமது மக்­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர். நாங்­கள் எம்­மால் முடி­யு­மா­ன­வரை அர­சுக்கு அழுத்­தம் பிர­யோ­கித்­துள்­ளோம்.

என்­றா­லும், அர­சுக்கு கூட்டு எதிர்க்­கட்­சி­யால் முன்­னெ­டுக்­கும் பொய்ப் பிர­சா­ரங்­கள் பாதிப்­பா­கத் தடை­யாக அமைந்­துள்­ளன. தேசிய பாது­கப்­புக்கு அச்­சு­றுத்­தல் என்­றும், நாட்டை பாது­காத்த இரா­ணு­வச் சிப்­பாய்­க­ளைச் சட்­டத்­துக்­கு­முன் நிறுத்­து­வ­தா­க­வும் போன்ற பிர­சா­ரங்­க­ளைப் பொது எதி­ரணி முன்­னெ­டுக்­கின்­றது.

காணா­மல்­போ­ன­வர்­கள் அலு­வ­ல­கம் நிறு­வப்­ப­டு­வ­தால் அவ்­வாறு தேசிய பாது­காப்­புக்கு எந்த அச்­சு­றுத்­த­லும் இல்லை என்­பதை நாங்­கள் தெளி­வா­கக் குறிப்­பிட விரும்­பு­கின்­றோம். குறித்த அலு­வ­ல­கத்­தின் ஊடாக உயி­ரோடு இருக்­கின்­ற­வர்­கள் கண்­ட­றி­யப்­பட்டு விடு­விக்­கப்­ப­டல், இல்­லை­யென்­றால் மர­ண­ம­டைந்­த­வர்­க­ளுக்கு மர­ணச் சான்­றி­தழை வழங்­கல், அதன் ஊடாக அவர்­கள் தமது நிவா­ர­ணங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­வார்­கள்.

எனி­னும், துர­திர்ஷ்ட வச­மாக தேர்­தல்­க­ளில் தோல்­வி­ய­டைந்­த­வர்­கள் பொய்ப் பிர­சா­ரங்­க­ளில் ஈடு­பட்­டு­வ­ரு­வ­து­டன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக பொய்­யான தக­வல்­க­ளைக் குறிப்­பி­டு­கின்­ற­னர். அவ்­வாறே வட­மா­கா­ணத்­தி­லுள்ள சில நகைச்­சு­வை­யா­ளர்­க­ளும் ஒற்­று­மை­யாக வாழ்­வதை விரும்­பாது தொடர்ந்­தும் முறு­கல்­களை ஏற்­ப­டுத்­தவே முற்­ப­டு­கின்­ற­னர்.

தமிழ் மக்­க­ளுக்­கான அந்­தஸ்­தைப் பெற்­றுக்­கொ­டுத்து அவர்­க­ளுக்கு சுயாட்­சி­யைப் பெற்­றுக்­கொ­டுப்­பதே எமது நோக்­கம். அர­சி­யல் ரீதி­யாக இலா­ப­ம­டை­யும் சிலர் அதனை சீர்­கு­லைக்க முனை­கின்­ற­னர்’’ என்­றார்.

http://uthayandaily.com/story/7650.html

Link to comment
Share on other sites

காணாமல்போனோர் அலு­வ­லகம் வடக்கில் அமை­க்கப்பட வேண்டும்

sampanthannnnn-d765e0e618efcb792b5a0dbaae5a7abcb777d95b.jpg

 

(ஆர்.ராம், எம்,எம், மின்ஹாஜ்)

காணா­ம­லாக்­கப்­பட்டோ அலு­வ­லகம் பற்­றிய சட்டம் தாம­த­மின்றி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று சபையில் வலி­யு­றுத்­திய எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் வட மாகா­ணத்தின் வன்னி பகு­தியில் அந்த அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­ம­னத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற காணா­மற்­போன ஆட்கள் பற்­றிய அலு­வ­லகம்(தாபித்­தலும், நிர்­வ­கித்­தலும், பணி­களை நிறை­வேற்­று­தலும்) திருத்­தச்­சட்­ட­மூ­லத்தின் இரண்­டா­வது மதிப்­பீட்டு விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்­பான அலு­வ­ல­கத்­தினை தாபிக்கும் சட்­டத்­தினை தற்­போது வரையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதனை இட்டு நாம் கவலை அடை­கின்றோம்.

ஒருவர் காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தா­னது குற்றம் என்­ப­தற்கு அப்பால் அது கொலைக் குற்­ற­மாகும். ஒருவர் கொலை செய்­யப்­ப­டும்­போது தெளி­வாக கொலை செய்­யப்­பட்டார் என்­பதை அறிந்து கொள்­ள­மு­டியும். அதன் பிர­காரம் அதற்கு கார­ண­மா­ன­வரை சட்­ட­ரீ­தி­யாக தண்­டிக்­கலாம்.

ஆனால் ஒருவர் காண­ம­லாக்­கப்­படும் போது அதற்கு கார­ண­மா­ன­வரை அறிந்து கொள்­வதில் சிக்­கல்கள் காணப்­ப­டு­கின்­றன. அவ்­வாறு காண­ம­லாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்­களை அறி­வ­தற்­கா­கவே இந்த சட்டம் அமுல்­ப­டுத்த வேண்டும் என்று கோரு­கின்றோம்.

வடக்கு கிழக்கில் பல ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் காண­ம­லாக்­கப்­பட்­டார்கள் என்ற கருத்து காணப்­ப­டு­கின்­றது. 20ஆயிரம் பேர் காண­ம­லாக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆணைக்­கு­ழுவின் முன்னால் சாட்­சியம் அளித்­துள்­ளனர். இரா­ணுவ தரப்பில் 5ஆயிரம் காணா­மல்­போ­னார்கள் என்றும் சாட்­சியம் அளித்­துள்­ளனர்.

காணமல் போன­வர்கள் தொடர்பில் விசா­ரணை செய்­யப்­ப­ட­வேண்டும். சிவி­லி­யன்­க­ளாக இருக்­கலாம், இரா­ணு­வத்­தி­ன­ராக இருக்­கலாம் காணமல் போன­வர்கள் தொடர்­பாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு அவர்கள் குறித்த உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும்.

காண­மல்­போ­ன­வர்கள் தொடர்­பாக ஐ.நா தீர்­மா­னத்­தினை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­ன­தாக இந்­த­ச­பையில் பல தட­வை­களில் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் உண்­மைகள் கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும் என்று நாம் சுட்­டிக்­காட்­டினோம். அரச தலை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினோம். சர்­வ­தேச தரப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி வலி­யு­றுத்­தல்­களைச் செய்தோம். ஆனால் தற்­போது வரையில் எதுவும் நடை­பெ­ற­வில்லை. தாமதம் காணப்­ப­டு­கின்­றது.

உற­வுகள் காணா­ம­லாக்­கப்­பட்­ட­மை­யா­னது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களின் வாழ்க்­கையில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யு­யள்­ளது. ஆகவே இந்த விடயம் மென்­மேலும் தாம­தப்­ப­டுத்­தப்­படக் கூடாது.

இதன் அலு­வ­லகம் கொழும்பில் அமை­யப்­போ­கின்­றது. இந்த அலு­வ­லகம் வட­மா­கா­ணத்தில் அமைய வேண்டும். விசே­ட­மாக வன்னி பிர­தே­சத்­திற்கு வவு­னி­யாவில், கிளி­நொச்­சியில் இந்த அலு­வ­லகம் காணப்­ப­ட­வேண்டும் என்று கோரு­கின்றோம்.

இந்த சட்டம் எப்­போது அமு­லுக்கு வரும் என்று கூறப்­ப­ட­வில்லை. இதற்­கான அமைச்சர் இன்­னமும் இனங்­கா­ணப்­ப­ட­வில்லை. ஆகவே அந்த விட­யங்­களில் உட­ன­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என நான் கோரு­கின்றேன்.

காணா­ம­லாக்­கப்­பட்ட அலு­வ­ல­கத்­திற்கு நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்கள் அது தொடர்­பான அனு­ப­வத்­தினை கொண்­டி­ருக்க வேண்டும். இந்த அலு­வ­ல­கத்­திற்கு வருகை தரு­ப­வர்­க­ளுக்கு வேண்­டிய உள ஆலோ­ச­னைகள், இழப்­பீ­டுகள், வழங்­கு­வ­தற்­கு­ரிய மன­நிலை உடை­ய­வர்­க­ளாக இருக்­க­வேண்­டும.

முறைப்­பாட்­டா­ளர்­களின் கூற்­றுக்கு அமை­வாக வேண்­டிய இடங்­களில் சென்று விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளப்­ப­டு­ப­வர்­க­ளா­கவும் ஒரு­வேளை அவர்கள் புதைக்­கப்­பட்டு விட்­டார்கள் என்றால் அங்கு சென்று கூட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளக் கூடி­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும்.

எமது மக்­களில் ஒரு பகு­தி­யினர் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் விடயம் குறித்து நாம் அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வில்லை என்று ஒரு பகு­தி­யினர் குறிப்­பி­டு­கின்­றனர். உண்­மை­யி­லேயே நாம் பல்­வேறு வலி­யு­றுத்­தல்­களை செய்தும் அது தெடர்­பாக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­மைக்கு இரண்டு காரணம் காணப்­ப­டலாம்.

தேசிய பாது­காப்பு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்­தப்­படும் என்­பது ஒன்­றாகும். மற்­றை­யது விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக போரா­டிய இரா­ணு­வத்­தினர் சட்டத்திற்கு முன்னாள் நிறுத்தப்படுவார்கள் என்ற பிரசாரம் கூட்டு எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டு வருகின்றமையும் ஆகும்.

அவ்வாறான கருத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை. உண்மையிலேயே காணமலாக்கப்பட்ட உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதே இந்த அலுவலகத்தினை உருவாக்குவதற்கான பிரதான நோக்கமானதாகும்.

அதற்காகவே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் காலதாமதமின்றி காமணலாக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகத்தினை உடனடியாக தாபிக்க வேண்டும். அந்த அலுவலகத்தின் அங்கம் நிச்சயமாக வடமாகாணத்தில் தாபிக்கப்படவேண்டும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-22#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

அத்­து­டன், காணா­மல்­போ­ன­வர்­களை கண்­ட­றி­வ­தற்­கான தலை­மை­ய­கம் கொழும்­பில் அமைக்­கப்­பட்­டா­லும் வடக்­கி­லுள்­ள­வர்­கள் முறைப்­பா­டு­க­ளைச் செய்ய வன்­னி­யி­லும் ஓர் அலு­வ­ல­கம் அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என­வும் அவர் கோரிக்கை விடுத்­தார்.

வடக்கை விட தெற்கில்தான் அதிகம் காணமல் போனோர் உள்ளனர் எனவே சட்டப்படி அங்குதான் அமைக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி கொஞ்சம் சத்தம் வரும்  தமிழ் மக்களுக்கு சார்ப்பாக என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தனி ஒருவன் said:

இனி கொஞ்சம் சத்தம் வரும்  தமிழ் மக்களுக்கு சார்ப்பாக என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் 

எப்ப தேர்தல் வருகிதாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

எப்ப தேர்தல் வருகிதாம்?

கிழக்கில் மாகாண சபை வரும் மார்கழி   அங்க என்ன கிழக்கில் கூட லுங்கி கிழிய வைக்க மக்கள் வெயிட்டிங்  எல்லாம் கொடுத்து அனாதவராக இருக்கும் நிலை கண்டு 

வடக்கில் எப்போது என்று தெரியவில்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.