Jump to content

திருமணத்திற்கு பின் மினி ஸ்கர்ட் அணியக்கூடாதா?


Recommended Posts

திருமணத்திற்கு பின் மினி ஸ்கர்ட் அணியக்கூடாதா?

திருமணத்திற்கு பிறகு எனக்கு பிடித்த ஆடைகளை அணிவதில் பல பிரச்சனைகள்.எனக்கு இல்லை; என்னை சுற்றியுள்ள சமூகத்திற்கு.

ஹெலன் கரோலினாபடத்தின் காப்புரிமைHELEN CAROLIN

என் சேலை முந்தானையின் வண்ணம்..

என் குட்டைபாவாடையின் நீளம்..

என் சுடிதாரின் கை அல்லது ஸ்லீவ் இல்லாத மாதிரி..

என் சட்டையின் பாக்கெட்..

நான் உடுத்தும் உடைகளை வைத்து என்னை ஏன் எடைபோடுகிறீர்கள்?

எனக்கு பிடித்தவற்றை அணிவது உங்கள் கண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை? என அவர்களை கேட்கவேண்டும் போல இருக்கும்.. ஆனால் எப்போதும் போல மௌனம்தான் என் பதில்..

ஹெலன் கரோலினாபடத்தின் காப்புரிமைHELEN CAROLINA

நான் பாலூட்டும் தாயாக இருப்பதால், வீட்டில் இருக்கும்போது எளிதாக களையும் சட்டையை நான் அணிவது என் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் தகிக்கும் சூட்டின் இடையே சமையல் வேலை இருக்கும், வீட்டிற்கு யாரவது வருவார்கள், அவர்களை கவனிக்கவேண்டும், என் அலுவலக வேலையை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை உறுத்திக்கொண்டிருக்கும் மனதின் ஆழத்தில் கத்திக்கொண்டே இருக்கும் ஒரு மனுஷியின் குரல், தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் ...

வீட்டுதொலைபேசியின் சத்தத்திற்கு இடையில் என் கைக்குழந்தையின் கதறல் கேட்டவுடன் பால் கொடுக்க சட்டை-பாவாடைதான் எனக்கு வசதியாக உள்ளது.

இதை அவர்களுக்கு விளக்கிச் சொல்ல முடியவில்லை. சொன்னால் கேட்கவும் அவர்களுக்கு விருப்பம் இல்லை. காதுகளை இறுக்கமுடி அவர்களின் கட்டளைகளை ஏற்க மட்டுமே நான் பணிக்கப்பட்டுள்ளேன்..

இல்லாவிட்டால், நான் ஒரு அடங்காப்பிடாரி, வேலைக்கு போன பெண் என்பதால் அதிகம் பேசுகிறேன், வாயாடி என வசவுகளைக் கேட்கவேண்டியிருக்கும்..

ஹெலன் கரோலினாபடத்தின் காப்புரிமைHELEN CAROLINA

பாலியல் வன்முறைக்கும் உடைகளுக்கும் என்ன தொடர்பு?

என் நெருங்கிய உறவினர்கள், மிகவும் பழக்கம் இல்லாத உறவினர்கள் என பலர் என் உடைகளை பற்றி கேள்வி கணைகளை தொடுக்கும்போது, எனக்கு ஆதரவாக இருப்பது என் கணவர் பிரவீன் ஜோசப் மட்டுமே..

ஒன்பது ஆண்டுகள்.. பல ஐடி நிறுவனங்களில் வேலை செய்த நான் திருமணத்திற்கு பிறகு, எனது குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக வேலையை விட்டுவிட்டேன்..

திருமணத்திற்குப் பிறகு, என்னுடைய வேலை, என் குடும்பம் என பலவற்றில் இருந்து விலகி வந்துள்ளேன். என்னுடைய உடை தேர்வில் நான் மாற்றம் செய்துகொள்ளவேண்டும் என கட்டாயப்படுத்துவது நியாமா?

ஹெலன் கரோலினாபடத்தின் காப்புரிமைHELEN CAROLINA

சில சமயம் நான் வீடு திரும்பியவுடன், ஸ்லீவ் இல்லாத உடை மேலே அணிந்திருக்கும் ஷ்ரக் சட்டையை கழற்றினால், என் உறவினர் மோசமாக விமர்சனம் செய்வார்கள்.

எல்லாவற்றையும் விட, அவ்வப்போது ஊடகங்களில் பாலியல் வன்முறை பற்றி செய்தி வந்தால், உடனே என்னிடம் தந்தை என்னிடம் காண்பிப்பார்... ''பார்.. நீ தவறாக உடை அணிந்தால், இது போல பிரச்சனை வரும்,'' என்று அறிவுரை மழை ஆரம்பம் ஆகிவிடும்..

நிர்பயா, ஸ்வாதி கொலை தொடங்கி சென்னை சிறுமி ஹாசினி போன்றவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு காரணம் அவர்களின் உடை அல்ல..

கொலையாளிகளின் வன்மம்தான் காரணம்...

ஹெலன் கரோலினாபடத்தின் காப்புரிமைHELEN CAROLINA

'என் துப்பட்டாவிற்குள் ஒளிய பார்க்கும் சமூகம்''

திருமணத்திற்கு முன்பு நான் ஜீன்ஸ், சுடிதார், குர்தா போன்றவற்றை விரும்பி அணிவேன்.. அப்போது கூட என்னுடைய சில உறவினர் '' எப்போதும் துப்பட்டா அணிந்துகொள்'' என்று கருத்து சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன்...

ஒரு குழந்தை பிறந்தது முதல், பெண் குழந்தைக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் வெட்கம் என்பது ஊட்டிவளரக்கப்படுகிறது என்று எண்ணுகிறேன்..

உண்மையில் சமூகம்தான் படிப்படியாக திருந்தவேண்டும்...

என் துப்பட்டாவிற்குள் ஏன் சமூகத்தின் மோசமான கண்கள் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறன?

நான் சுதந்திரமாக எங்கும் சென்றுவர என் ஆடை எனக்கு துணையாக இருக்கவேண்டும்.. என்னை ஒருவர் கவனிப்பில் இருக்க உடை ஒரு தடையாக இருந்தால்?

 

ஹெலன் கரோலினாபடத்தின் காப்புரிமைHELEN CAROLINA

புடவை பெண்கள் குடும்பப் பாங்கானவர்களா?

திருமணம், வளைகாப்பு, கோவில் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு நான் கட்டாயம் புடவைதான் அணியவேண்டும்.

அதிலும் திருமண நிகழ்வுகளுக்கு பட்டுப்புடவை மட்டுமே அணியவேண்டும்.. சில பட்டுப்புடவைகள் கனமாகதாக இருக்கும்..

என் குழந்தை, கைப்பையை தூக்கிக்கொள்ள என் கணவர் அல்லது தந்தை என்னுடன் வரவேண்டும் என்ற நிலை இருக்கும்...

புடவை அதிலும் பட்டுப்புடவைதான் ஏன் அணியவேண்டும் என்று காரணம் கேட்டால்.. ட்ரடிஷனலாக தெரியவேண்டுமாம்..நாம் மற்றவர்கள் கண்களில் பவ்யமாக தெரியவேண்டும் என்பதற்காக நம்மை சிரமப்படுத்திக்கொள்வதில் என்ன இருக்கிறது?

ஹெலன் கரோலினாபடத்தின் காப்புரிமைHELEN CAROLINA

சேலை கட்டிய பெண்கள் குடும்பப் பாங்கானவர்கள் என்றும் நவீன ஆடைகளை அணிந்தவர்கள் மோசமானவர்கள் என்றும் ஒரு பிம்பத்தை இந்தச் சமூகம் கட்டியமைக்கிறது....

என்னுடைய ஒவ்வொரு போராட்டத்திலும் எனக்கு உதவியவர் பிரவீன்....என் உடையைப் பற்றி அவர் ஒருநாளும் விமர்சனம் செய்ததில்லை.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகான போராட்டத்தின் விளைவு… நான் அணியும் உடை பற்றி உறவினர்கள் பேசுவதை நிறுத்திவிட்டனர்..

என்னைப் போல பல பெண்களுக்கு திருமணத்திற்கு பின் எல்லாமே மாறிவிடுகிறது. கல்யாணத்திற்கு பிறகு மினி ஸ்கிர்ட் அணியக்கூடாதா?

ஒருவர் தனக்கு பிடித்த வகையில் உடை அணிவதில் மற்றொருவர் தலையிடுவது அநாகரீகம்.

நான் சென்னையில் ஒரு பொட்டிக் (boutique) தொடங்கியுள்ளேன். பெண்களால், பெண்களுக்கு நடத்தப்படும் ஒரு இணைய நிறுவனம் இது..

என்னுடைய வாடிக்கையாளருக்கு உடைகளைப் பரிந்துரைப்பேன்.. அவர்கள் அணியும் விதத்தைப் பரிந்துரைக்கமாட்டேன்!

(சென்னையை சேர்ந்த ஹெலன்கரோலினா பிபிசி தமிழின் பிரமிளா கிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இவை)

http://www.bbc.com/tamil/india-40312490

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க... சகிக்கக் கூடியதாக இருந்தால், "மினி ஸ்கர்ட்"  அணிவதில் தப்பில்லை. :grin:
ஆரும்... "காறித்  துப்பி"  விட்டுப் போனால், சங்கம் பொறுப்பு ஏற்காது. :D:

Link to comment
Share on other sites

 உங்கள் கணவர்தான் ஓ கே சொல்லிட்டாரு, பிறகென்ன.

ஆனால் ஒன்று எனக்கு விளங்கவில்லை.குடும்ப நலனுக்காக தொழிலையே தியாகம் செய்த நீங்கள் இவர்களின் கருத்துக்களில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒன்றைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லையே.கருத்துச் சுதந்திரம், எழுத்துச்சுதந்திரம் எல்லாம் உள்ளதுதான்.இருப்பினும் சமுதாயக்கட்டுக்கோப்பு எனவும் ஒன்று இருந்து வருகிறது .இதனையும் கருத்தில் கொள்வது எதிர்காலத்தை வளம் படுத்த உதவும்.மனைவியின் நடவடிக்கைகள் கணவனுக்குப் பிடிக்காவிடினும் சில விடயங்களில் அவன் தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டி த்தான்இருக்கிறது.இது காலத்தின் கோலம்,குடும்பத்தின் நிலைத்திருப்பிற்காக கணவன்மாரில் பலர் இன்றும் குறுடர்களாகத்தான் இருக்கிறார்கள்.

மாற்றம்தான் சகோதரி வாழ்க்கை.நேற்று மகள்,இன்று மனைவி,நாளை தாய்,மறுநாள் பாட்டி...நல்ல கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்காக நம்மை நாம் மாற்றிக்கொள்வதில் நன்மைகள்தான் அதிகம்.இது எல்லோராலும் முடியாது ஏனெனில் இதுவும் ஒருவகையில் தியாகம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிக்கலான கேள்வி ........
இலகுவான பதில்கள்.

"வேரை அறியாத மரங்கள்" தான் இங்கு பிரச்சனையே தவிர ... உடையோ உள்ளமோ இல்லை.
நல்லதோ கெட்டாதோ அதற்கு நானும் சொந்த காரன்தான் என்ற எண்ணம் வேண்டும்.

உங்களுடைய மகள் இப்படியான உடைகளை அணிய தொடங்கும்போதே .....
சிரமங்கள் மத்தியிலும் சில உடைகளை அணியவேண்டிய தேவை என்ன என்று புரியும்.

எனக்கு தனிப்பட இந்த உடை தலைமயிர் வளர்ப்பில்  இஷடம் இல்லை 
எங்கிருந்து வந்தோம் என்றும் தெரியாது .... எங்கு போக போகிறோம் என்றும் தெரியாது 
ஒரு 70-80 வருடம்  இங்கு தங்க போகிறோம் இதில் ஏன் தேவையற்ற அடையாளம் முரண்பாடு 
என்று நானே எனக்குள் பல தடவைகள் கேட்பது உண்டு.

மனித நாகரீகம் வளராது போயிருந்தால் ...? நாமும் இப்போ மிருங்களாக இருந்து இருப்போம் 
நாகரீக வளர்ச்சி என்பதில் ஒவ்வரு மனிதனுக்கும் பங்கு உண்டு .... அதில் எனக்கும் சில கடமைகள் 
உண்டு என்ற எண்ணமே எம் எல்லோரையும் மனிதர்களாக வைத்திருக்கிறது.

உங்கள் உடையில் தப்பு இல்லை அல்லது சிரமம் இருக்கிறபோதிலும் 
சமூகம் தவறாக பார்க்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். அதில் இருந்து உங்களை 
பாதுகாக்கும் நோக்கம் ஒன்றினாலேயே உங்கள் வீட்டில் மற்றவர்கள் முரண்படுகிறார்கள்.
முதலில் சமூகத்தை திருத்தவேண்டும் ..........
ஆண்களுக்கும் பெண்களுக்குமான உறவு உரையாடல் மேம்படுத்த படவேண்டும்.
பெண்களின் உணரவுகள் ஆண்களாலும் ...... ஆண்களின் உணர்வுகள் பெண்களாலும் உணரப்பட வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Related imageRelated imageRelated image

அங்கங்களை மறைக்கவே நாகரீக வளர்ச்சியின் தொடர்ச்சியாக 
ஆடை அணிய தொடங்கினோம் .......... 
இப்போ அங்கங்களை காட்டி கொண்டு ஆடையும் அணிகிறோம் என்றுகொண்டு .....
பார்ப்பவர்கள் மேல் குற்றம் சொல்லுவது அவ்வளவு நியமாக தெரியவில்லை. 

எத்தனையோ பெண்கள் வீட்டில் கிளி குருவி மீன் என்று அழகாக தெரியும் 
பறவைகள் விலங்குகள் மீன்களை வளர்கிறீர்கள். அந்த பறவைகளின் சுந்தந்திரம் 
பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா ? உங்களுக்கு அழகா தெரிந்த போது அதை உமதாக்கி கொண்டீர்கள்.

உலகிலேயே மிக அழகான மிருகம் பெண்கள்தான் 
நீங்கள் செய்யும் அதே தப்பை இன்னொரு ஆண் செய்ய முற்படுகையில் 
தப்பு என்கிறீர்கள். 
எந்த சமூக சட்ட்ங்களை நீங்கள் எதிர்கிறீர்களோ ....
அதுதான் உங்களை மறைமுகமாக பாதுகாக்கிறது என்பது 
உங்கள் மகள்மார்  பதின்பவயதை எட்டும் போது புரிவீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நாட்டில் மினி ஸ்கேட்டா?...இந்தப் பெண்ணுக்கு தான் பிரபல்யமாக ஆசை போல இருக்கு:mellow:
என்னைப் பொறுத்த வரை கவர்ச்சியாக உடுக்கலாம். ஆனால் அதில் ஆபாசம் இருக்க கூடாது...இங்கு பல வெள்ளையினப் பெண்கள் வலு
கட்டையா உடுப்பு போட்டு இருப்பார்கள்.ஆனால்,அதில் கொஞ்சம் கூட ஆபாசம் இருக்காது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்பதுகளில் ஆமியின் எல்லை பிடிப்பில் வீடு பறிபோய் தமிழ்நாடு சென்ற பெண்கள் அதிகம் உள்ள குடும்பம்  முன்று மாதங்களில் திரும்பி வந்து கோயில் காணியில் கொட்டில் போட்டு இருந்தனர் ஏன் திரும்பிய காரணம் அங்கு வெளியில் வெளிக்கிட முடியவில்லை எங்களை சட்டைக்காரிகள் என்று கூப்பிடுதுகள் (நைட்டியை ) இரவிலும் தொல்லை காம்பிலும் பிரச்சினை சிறிது காலத்தில் ஒப்பரேசன் லிபரேசன் அந்த குடும்ப பெண்கள் காணமல் போயினர் அவர்களின் உடுப்புக்கள் திக்கம் மதவுக்கு உள் கிடந்ததாம் நண்பன் சொன்னான்.

இன்று அதே தமிழ்நாட்டு பெண் மினி ஸ்கேட் கேட்கிறா !....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

எண்பதுகளில் ஆமியின் எல்லை பிடிப்பில் வீடு பறிபோய் தமிழ்நாடு சென்ற பெண்கள் அதிகம் உள்ள குடும்பம்  முன்று மாதங்களில் திரும்பி வந்து கோயில் காணியில் கொட்டில் போட்டு இருந்தனர் ஏன் திரும்பிய காரணம் அங்கு வெளியில் வெளிக்கிட முடியவில்லை எங்களை சட்டைக்காரிகள் என்று கூப்பிடுதுகள் (நைட்டியை ) இரவிலும் தொல்லை காம்பிலும் பிரச்சினை சிறிது காலத்தில் ஒப்பரேசன் லிபரேசன் அந்த குடும்ப பெண்கள் காணமல் போயினர் அவர்களின் உடுப்புக்கள் திக்கம் மதவுக்கு உள் கிடந்ததாம் நண்பன் சொன்னான்.

இன்று அதே தமிழ்நாட்டு பெண் மினி ஸ்கேட் கேட்கிறா !....................

வாழ்க்கை என்பது ஒரு வட்ட சாலை 
கலாச்சாரம் .... நாகரீகம் எல்லாமே 
முடிந்த இடத்தில தொடங்கும் ..... தொடங்கிய இடத்தில் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/20/2017 at 10:20 AM, தமிழ் சிறி said:

பார்க்க... சகிக்கக் கூடியதாக இருந்தால், "மினி ஸ்கர்ட்"  அணிவதில் தப்பில்லை. :grin:
ஆரும்... "காறித்  துப்பி"  விட்டுப் போனால், சங்கம் பொறுப்பு ஏற்காது. :D:

சட்டியை      மூடி வைத்திருந்தால் பூனை வராது  எனது கருத்து இல்லையென்றால்  சட்டியும் இராது மீனும் இராது tw_blush:

 நாகரீகம் உடையில் வரலாம் உள் வீட்டில் இருந்தால் நல்லது அது வெளியில்  வந்தால் விபரீதம் ஆகலாம்  :10_wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.