Jump to content

முடிவுக்கு வந்தது வடக்கு விவகாரம்


Recommended Posts

முடிவுக்கு வந்தது வடக்கு விவகாரம்

 
முடிவுக்கு வந்தது வடக்கு விவகாரம்
  •  

பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த வடக்கு மாகாணசபை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான பிரேரணையை மீளப் பெறுவதாக, இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கௌரவ. நீதியரசர். சீ .வி . விக்னேஸ்வரன்
முதலமைச்சர்வடமாகாணம்

அன்புக்குரியவிக்னேஸ்,

தங்களது 19.06.2017 திகதியிடப்பட்டகடிதத்திற்குநன்றி

நீங்கள்கூறியுள்ளஅனைத்துவிடயங்களையும்கவனத்தில்கொண்டுள்ளேன்

மேலும்மூன்றுநிபந்தனைகளின்அடிப்படியில்இந்தவிடயம்முடிவிற்குகொண்டுவரப்படவேண்டும்எனதெரிவித்துஸ்ரீலஸ்ரீசோமசுந்தரதேசிகஞானசம்பந்தபரமாச்சார்யசுவாமிகள்மற்றும்பேரருட்திரு. வணபிதா. ஜஸ்டின்ஞானப்பிரகாசம்ஆகியோர்அனுப்பியுள்ளகடிதமும்கிடைத்துள்ளது.

சட்டபூர்வமானதும்சுதந்திரமானதுமானஎந்தவொருவிசாரணைக்கும்இடையூறுவிளைவிக்ககூடாதுஎன்பதனைகுறித்தஇரண்டுஅமைச்சர்களுக்கும்நான்தெரியப்படுத்துவேன்.

நான்தற்போதுதொலைபேசியில்கௌரவவடமாகாணஆளுநரைதொடர்புகொண்டுகுறித்தநம்பிக்கைஇல்லாப்பிரேரணைவாபஸ்பெறப்படும்எனதெரிவித்துள்ளஅதேவேளை, சம்பந்தப்பட்டநபர்களோடுதொடர்பிலுள்ளேன்.

எல்லாம்நலமாகவேஅமையட்டும்.

நாம்வெகுவிரைவில்சந்தித்ததுபலபிரச்சினைகள்தொடர்பில்மேலதிகமானகலந்துரையாடலில்ஈடுபடஎதிர்பார்க்கிறேன்.

உண்மையுள்ளஇ

இரா. சம்பந்தன்
தலைவர்தமிழ்தேசியகூட்டமைப்பு

http://uthayandaily.com/story/7358.html

Link to comment
Share on other sites

’மேலதிகமாக கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கின்றேன்’
 

சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்கக்கூடாது என்பதனை, குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன் என, எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தெசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தங்களது 19.06.2017 திகதியிடப்படட கடிதத்துக்கு நன்றி. நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.

மேலும், மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த விடயம் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்று தெரிவித்து, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் பேரருடன் திரு. வணபிதா. ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது.

சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்கக்கூடாது என்பதனை, குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன்.

நான், தற்போது தொலைபேசியில்,  வடமாகாண ஆளுநரை தொடர்புகொண்டு, குறித்த நம்பிக்கையில்லாப் பிரரேரணை வாபஸ் பெறப்படும் என்று தெரிவித:துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோ தொடர்பிலுள்ளேன்.

நாம் வெகுவிரைவில் சந்தித்து பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமாக கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மேலதிகமாக-கலந்துரையாடலில்-ஈடுபட-எதிர்பார்க்கின்றேன்/150-198941

Link to comment
Share on other sites

விடுமுறை நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன்

 

சாட்சிகள் சம்பந்தமாக தலையீடுகளில் ஈடுபடவோ, அவர்களைப் பயமுறுத்தவோ, சாட்சியங்களில் தலையீடு செய்யவோ அவர்கள் எத்தனிக்காதிருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள். இவ்வாறான உடன்படிக்ககைகளின் நிமித்தமாக விடுமுறை சார்ந்த நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.   

இந்த விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு நேற்று (19) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

என்னுடைய 17.06.2017ஆம் திகதி கடிதத்துக்கு உங்கள் பதில் கிடைத்தது. நன்றி. இன்றைய தினம் (19) காலை பேராயர் ஜஸ்டின் பேர்னார்ட் ஞானப்பிரகாசம் அவர்களாலும் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் அவர்களாலும் (கையெழுத்திடப்பட்டு) தரப்பட்ட குறிப்பும் கிடைக்கப்பெற்றேன்.   

உங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட சில விடயங்களுக்கு முதலில் விளக்கம் தருகின்றேன்.   
குறிப்பிட்ட அமைச்சர்கள் இருவருக்கும் எதிராக எந்தவிதத் தண்டனையும் அளிக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்து தமது சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளலாம், வாகனங்களைப் பாவிக்கலாம் இத்யாதி. சாட்சிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் முகமாகவே விசாரணைக்குழு விசாரணை நடத்தும் போது இரு அமைச்சர்களும் விடுமுறையில் இருக்க வேண்டும் எனப்பட்டது. அவர்களுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகளும் பெறப்பட்டுள்ளன.   

இரு அமைச்சர்கள் பற்றியும் உங்களால் உத்தரவாதம் கொடுக்க முடியாதிருப்பது பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், சுயாதீன சட்ட விசாரணையைத் தடைசெய்யும் விதமாக எந்த நடவடிக்கையிலும் அவர்கள் இறங்கக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுரை வழங்க நீங்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.   

சுயாதீனமான சட்ட விசாரணையை நிலைநாட்டுவதற்கும் அதன் பொருட்டு இரு அமைச்சர்களையும் அதற்காக உடன்படவைக்கவுமே ஒரு மாத காலம் விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற உபாயத்தைக் கையாண்டேன்.   

தாங்கள், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர். தாங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரு அமைச்சர்களும் சுயாதீன சட்ட விசாரணையைத் தடை செய்யும் விதமாக நடந்துகொள்ளக்கூடாதென்று நீங்கள் அவர்களுக்கு அறிவுரை நல்க முன்வந்துள்ளீர்கள்.   

மேலும், இரு அமைச்சர்களும் நீதிக்கு பங்கம் ஏற்படாத விதத்தில் விசாரணையை நடத்த எல்லா உதவிகளை வழங்க உள்ளீடல்களில் ஈடுபடாதிருக்கவும் வேண்டி, இரு சமயத்தலைவர்களும் கோரியுள்ளனர்.   

அத்துடன், நேற்றைய தினம் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ தர்மலிக்கம் சித்தார்த்தன், கௌரவ சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சகல தமிழ் மக்களின் நலன்சார்ந்து இரு கௌரவ அமைச்சர்களுடனும் பேச உடன்பட்டுள்ளார்கள். அவர்களுடன் பேசி சட்டத்தின் செல்திசையை மாற்றவோ, சாட்சிகள் சம்பந்தமாக தலையீடுகளில் ஈடுபடவோ, அவர்களைப் பயமுறுத்தவோ, சாட்சியங்களில் தலையீடு செய்யவோ அவர்கள் எத்தனிக்காதிருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள். இவ்வாறான உடன்படிக்கைகளின் நிமித்தமாக விடுமுறை சார்ந்த நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன்.   

நல்லை ஆதீனம், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கடிதம்

இதேவேளை, நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் பேரருள் திரு வணபிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும்,   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவரும் எம்.பியுமான மாவை சேனாதிராஜா, வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோருக்கு நேற்று (19) கடிதம் அனுப்பியிருந்தனர்.  

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   

மதத் தலைவர்களாகிய நாங்கள், அண்மைக்காலமாக வடமாகாணசபை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக எமது மக்களுடன் கலந்துரையாடியதன் விளைவாக இவ்விடயத்தை பொறுப்புள்ளவர்களுடன் கலந்துரையாடி ஓர் உகந்த தீர்வை மக்களின் நன்மை கருதி ஏற்படுத்த வேண்டிய அவசியத்தின் பிரகாரம் பின்வரும் ஆலோசனைகளை உங்கள் முன் வைக்கலாம் என கருதுகிறோம்.  

1. விசாரணையின் போது குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட இரு அமைச்சர்களும் மீண்டும் தமது அமைச்சர் பணிகளைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறோம். அத்துடன் அவர்கள் சம்மந்தமான குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைகளை இடையூறுகள் இன்றிச் செய்வதை அவ் அமைச்சர்கள் ஒத்துழைப்பதுடன் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சகல உறுப்பினர்களும் கட்சித் தலைமைகளும் விசாரணைகளை சரியான முறையில் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலமே நல்லாட்சியை வடமாகாணசபையில் கொண்டுவர முடியும்.  

2 வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக கொண்ட மாகாணசபையை திறம்பட இயங்கச் சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக்கொள்கிறோம்.  

3. ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை மீளபெற்று கொள்ளப்பட்டு அதனை உறுதிப்படுத்த வேண்டுகிறோம். தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளிக்காமல் சம்பந்தபட்ட தரப்பினர் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.    

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/விடுமுறை-நிபந்தனையை-வலியுறுத்தாமல்-விடுகின்றேன்/71-198960

 

‘வழிவிட ஆராய்கிறேன்’

வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என உத்தரவாதம் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில், மேற்படி இரு அமைச்சர்களும் தொடர்ந்து தங்களின் கடமைகளை செய்வதற்கான வழிவகைகளை செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.  

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக தீர்வினை காண்பதற்காக, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை இருவரும் இணைந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரை நேற்று திங்கட்கிழமை (19) காலை தனிதனியாக சந்தித்தனர்.  

இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,    

வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்  அதற்காக அவர்களுடன் பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், மற்றும் மத தலைவர்கள் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.  

அதனடிப்படையில் மேற்படி இரு அமைச்சர்களும் தொடர்ந்து தங்களின் கடமைகளை செய்வதற்கான வழிவகைகளை செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறேன்.

இதனடிப்படையில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் பல்வேறு தரப்பினருடனும் இணைந்த வகையில் தொடர்ந்து எடுத்து வருகின்றோம்.  

என்னை சந்தித்து பேசிய மத தலைவர்கள் பிரதானமாக தற்போதைய நிலையில் தமிழர்களுக்கிடையில் பிளவுகள் தேவையற்றவை என்பதுடன் பிளவுகள் நல்லதல்ல எனவும் கூறியிருக்கின்றார்கள்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வழிவிட-ஆராய்கிறேன்/71-198959

 

Link to comment
Share on other sites

16 hours ago, நவீனன் said:

முடிவுக்கு வந்தது வடக்கு விவகாரம்

 
முடிவுக்கு வந்தது வடக்கு விவகாரம்
  •  

பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த வடக்கு மாகாணசபை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான பிரேரணையை மீளப் பெறுவதாக, இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கௌரவ. நீதியரசர். சீ .வி . விக்னேஸ்வரன்
முதலமைச்சர்வடமாகாணம்

அன்புக்குரியவிக்னேஸ்,

தங்களது 19.06.2017 திகதியிடப்பட்டகடிதத்திற்குநன்றி

நீங்கள்கூறியுள்ளஅனைத்துவிடயங்களையும்கவனத்தில்கொண்டுள்ளேன்

மேலும்மூன்றுநிபந்தனைகளின்அடிப்படியில்இந்தவிடயம்முடிவிற்குகொண்டுவரப்படவேண்டும்எனதெரிவித்துஸ்ரீலஸ்ரீசோமசுந்தரதேசிகஞானசம்பந்தபரமாச்சார்யசுவாமிகள்மற்றும்பேரருட்திரு. வணபிதா. ஜஸ்டின்ஞானப்பிரகாசம்ஆகியோர்அனுப்பியுள்ளகடிதமும்கிடைத்துள்ளது.

சட்டபூர்வமானதும்சுதந்திரமானதுமானஎந்தவொருவிசாரணைக்கும்இடையூறுவிளைவிக்ககூடாதுஎன்பதனைகுறித்தஇரண்டுஅமைச்சர்களுக்கும்நான்தெரியப்படுத்துவேன்.

நான்தற்போதுதொலைபேசியில்கௌரவவடமாகாணஆளுநரைதொடர்புகொண்டுகுறித்தநம்பிக்கைஇல்லாப்பிரேரணைவாபஸ்பெறப்படும்எனதெரிவித்துள்ளஅதேவேளை, சம்பந்தப்பட்டநபர்களோடுதொடர்பிலுள்ளேன்.

எல்லாம்நலமாகவேஅமையட்டும்.

நாம்வெகுவிரைவில்சந்தித்ததுபலபிரச்சினைகள்தொடர்பில்மேலதிகமானகலந்துரையாடலில்ஈடுபடஎதிர்பார்க்கிறேன்.

உண்மையுள்ளஇ

இரா. சம்பந்தன்
தலைவர்தமிழ்தேசியகூட்டமைப்பு

http://uthayandaily.com/story/7358.html

முடிவுக்கு வந்தால் சரிதான்.மகிழ்ச்சியாக உள்ளது.எங்கே தானாக முடிவடைய வேண்டிய மாகாண சபையின் ஆயுள்காலத்தை,முடித்து வைத்து விடுவார்களோ என கவலைப்படத் தோன்றியது.விரைவில் மாகாணசபைத்தேர்தல் வராவிட்டால் சரிதான்.

Link to comment
Share on other sites

தமிழரசுக் கட்சியையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

தமிழரசுக் கட்சியையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!

முடிவுக்கு கொண்டு வந்து
சிங்கள் தேசியக் கட்சிகளான
ஐ.தே.க வும் சுதந்திர கட்சியும்
வெற்றி பெற வேண்டும்
என விரும்புகின்றீர்கள் போல

இல்லை, தமிழரசு கட்சி
தோற்று தமிழ் தேசிய மக்கள் முன்னனி
வெல்லும் என்று நப்பாசையா?

தமிழரசு கட்சி தோற்குமாயின் அங்கு
நிலை பெறப் போவது
சிங்கள் தேசியக் கட்சிகள்
மட்டும் தான்
அத்துடன் டக்கிளசுக்கும்
வெற்றி அதிகம் கிடைக்கும்
அரசியலில் உணர்ச்சி அரசியலும்
எதிர்ப்பு அரசியலும் மட்டுமே
செய்யும் த.தே.மு இற்கு
வாக்கு போட்டு இப்ப
இருக்கும் நிலையை கெடுத்துக்
கொள்ள சனம் விரும்பாது

அதுதான் அப்பு யதார்த்தமும்
போலி எதிர்ப்பு அரசியலும்

 

Link to comment
Share on other sites

7 hours ago, வைரவன் said:

முடிவுக்கு கொண்டு வந்து
சிங்கள் தேசியக் கட்சிகளான
ஐ.தே.க வும் சுதந்திர கட்சியும்
வெற்றி பெற வேண்டும்
என விரும்புகின்றீர்கள் போல

விதண்டாவாதம் தெளிவாக விளங்குகிறது!
இதற்கென்றே உள்ள சிலரின் கனவுகள் பலிக்காது.

கண்கெட்டபிறகு மனம் கெட்டபிறகு விளக்கெண்ணையும் பூதக்கண்ணாடியும் போட்டு பார்த்தல் மிஞ்சுவது உங்களைப் போன்றவர்களின் விதண்டாவாதம் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.